நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!

சமீபகாலமாக ஆன்லைன் தொழில், மல்டி லெவல் மார்கெட்டிங், என்று பல நூதன முறைகளில் ஏமாற்றும் வேலை நடந்து கொண்டிருக்கிறது! எத்தனை முறை அனுபவபட்டாலும் மக்களால் இந்த கவர்ச்சியை விட்டு வெளிவர முடியவில்லை! சென்ற மாதம் மதுரையில் நண்பர் ஸ்ரீயுடன் பேசி கொண்டிருக்கும் போது சொன்னார்! ஒரு லட்சம் கொடுத்தால் அடுத்த மாதம் 35 ஆயிரம் தருவார்களாம், அதற்கு அடுத்து 25 ஆயிரம், அடுத்து 20 ஆயிரம், கிட்டதட்ட ஒரு வருடத்தில் 3 மடங்கு நீங்கள் கொடுத்த பணம் ரிட்டர்ன்!

சிலர் அம்மாதிரி சம்பாதித்திருக்கிறார்கள் என்றான்! ஆரம்பத்தில் பணம் கொடுப்பார்கள் மொத்தமாக ஒரு பெரிய தொகையை லவட்டி கொண்டு ஓடுவார்கள் என்றேன்! முதலில் அந்த அளவு வருமானத்திற்கு சாத்தியமா என்று யோசிக்கனும்! அப்படி சாத்தியம் என்றால் அது கள்ளநோட்டாக தான் இருக்கும்! பேராசை பட்டு பணத்தை கொடுத்துட்டு ”எதோ ஒரு” கனவு கண்டா வெளியே சொல்லமுடியாதுன்னு சொல்வாங்கள்ள அந்த மாதிரி இருக்கக்கூடாது!

நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம்! நேர்மையான வழியிலேயே, பொறுமையாக பத்து வருடங்களில்! அதற்கு ஒவ்வொரு வருடமும் உங்களது முதலீடு இரட்டிபாக வேண்டும்! நீங்கள் எந்த துறையை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள் ஆனால் ஒவ்வொரு வருடமும் உங்கள் பணம் இரட்டிப்பு ஆகினால் பத்தே வருடங்களில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!
ஆனால் நீங்கள் தேர்வு செய்யும் துறையில் கவனமும், கொஞ்சம் அறிவும் இருத்தல் நலம்!


உங்களுடய முதலீடு பத்தாயிரம் ருபாய் மட்டுமே!

10,000 உங்கள் முதலீடு
20,000 முதல் வருடம்
40,000 இரண்டாம் வருடம்
80,000 மூன்றாம் வருடம்
1,60,000 நான்காம் வருடம்
3,20,000 ஐந்தாம் வருடம்
6,40,000 ஆறாம் வருடம்
12,80,000 ஏழாம் வருடம்
25,60,000 எட்டாம் வருடம்
51,20,000 ஒன்பதாம் வருடம்
1,02,40,000 பத்தாம் வருடம்

ஒரு கோடியே ரெண்டு லட்சத்து நாற்பதாயிரம் பத்தாம் வருட இறுதியில் உங்கள் கையில்!

பத்தாயிரத்துக்கு நல்ல பங்காக பத்து வாங்கினால் அடுத்த வருடம் இருபதாயிரத்துக்கு இருபது வாங்கலாம்! கமாடிடியில் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம்! பணம் இரட்டிப்பாக ஒரு வருட கால அவகாசம் இருப்பதால் பொறுமையாக நிதானமாக சரியான இடத்தில் வாங்கலாம்! இதை பகுதி நேரமாக ல்லது மாதத்திற்கு ஒரு நாள் மட்டுமே செய்வதால் உங்களுடய வழக்கமான பணிகளுக்கு இடையூறு வராது!உங்கள் இல்லங்களுக்கு அருகில் இருக்கும் ஷேர் புரோக்கிங் அலுவலகத்தையே நாடலாம்! அல்லது என்னையும்(9994500540) தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம்! நேர்மையான வழியில் சம்பாரித்தால் நாட்டிற்கும் நல்லது, வீட்டிற்கும் நல்லது!

112 வாங்கிகட்டி கொண்டது:

Anonymous said...

நீங்கள் எந்த துறையை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள் ஆனால் ஒவ்வொரு வருடமும் உங்கள் பணம் இரட்டிப்பு ஆகினால் பத்தே வருடங்களில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்! //
நல்ல யோசனை....

gulf-tamilan said...

good post !!!அப்படியே வெளிநாட்டிலிருப்பவர்களுக்கும் கொஞ்சம் நல்ல யோசனை கொடுங்க!!

Anonymous said...

இன்னும் விரிவான பதிவு எதிர்பார்க்கிறேன் ஸ்வாரஸ்யமாக,அவசியமாக இருக்கிறது

Anonymous said...

ஸ்வாரஸ்ஜமாஹ, அவஸ்ஜமாஹ இருக்கிறது.. //

என்ன கொடுமை ஆர்.கே.சதீஷ்குமார் சார்?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தொடர்ந்து 10 வருடங்கள் முதலீடு இரட்டிப்பு ஆகிக் கொண்டே இருக்குமா என்ன!

தங்கம் 12 வருடங்களுக்கு முன்பு 3,600 ரூபாய் சவரன். இப்போது நீங்கள் சொல்லியிருப்பது போலப் பார்த்தால் அது எங்கயோ (கணக்கு போடக்கூட முடியல!) போயிருக்க வேண்டும். பங்குச் சந்தையைக் கூட எடுத்துக் கொண்டு யோசிக்கலாம்.

நல்லா காமிக்கறாங்கப்பா ஆசையை :)

வால்பையன் said...

//தங்கம் 12 வருடங்களுக்கு முன்பு 3,600 ரூபாய் சவரன். இப்போது நீங்கள் சொல்லியிருப்பது போலப் பார்த்தால் அது எங்கயோ (கணக்கு போடக்கூட முடியல!) போயிருக்க வேண்டும். பங்குச் சந்தையைக் கூட எடுத்துக் கொண்டு யோசிக்கலாம்.//


வாங்கி அப்படியே வச்சிருக்கக்கூடாது!
விலை ஏறும் போது விற்று, மீண்டும் இறங்கும் போது வாங்க வேண்டும்! மதம் ஒரு ட்ரேட் செய்யலாம் அந்த மாதிரி!

பத்தாயிரம் என்பது பெரிய தொகையும் இல்லை என்பதால் உங்களுக்கு ரிஸ்கும் குறைவு!

வால்பையன் said...

//gulf-tamilan said...
good post !!!அப்படியே வெளிநாட்டிலிருப்பவர்களுக்கும் கொஞ்சம் நல்ல யோசனை கொடுங்க!!//


அனைவருக்கும் இந்த பார்முலா பொருந்தும்!

வால்பையன் said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
இன்னும் விரிவான பதிவு எதிர்பார்க்கிறேன் ஸ்வாரஸ்யமாக,அவசியமாக இருக்கிறது//


சனி, ஞாயிறு தொடர்பு கொள்ளுங்கள் பேசலாம்!

Ashok D said...

ஜ்யோவ் :)

Ashok D said...

//சனி, ஞாயிறு தொடர்பு கொள்ளுங்கள் பேசலாம்!//
வால் சனி ஞாயிறா??
Dr MBBS

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எப்ப ஏறும் எப்ப இறங்கும்னு எல்லாம் துல்லியமா சொல்ல முடியுமா வால்? இப்ப ஏறியிருக்குன்னு வித்தா மறுபடி இறங்காட்டி என்ன செய்வது? அப்ப அதைவிட அதிகப் பணம் கொடுத்து மறுபடியும் வாங்கணும்.

தங்கத்தை எடுத்துக் கொண்டால் கடந்த 10 வருடங்களில் தொடர்ச்சியாக ஏறியே வந்திருக்கிறது. இறங்குவது என்றால் short term மட்டும்தான் அதுவும் கம்மியாகத்தான். அதனால் லாபத்தில் விற்று மறுபடியும் இறங்கும்போது வாங்குவது எல்லாம் பேச்சிற்குத்தான் ஆகும் என்று தோன்றுகிறது.

வால்பையன் said...

//எப்ப ஏறும் எப்ப இறங்கும்னு எல்லாம் துல்லியமா சொல்ல முடியுமா வால்? இப்ப ஏறியிருக்குன்னு வித்தா மறுபடி இறங்காட்டி என்ன செய்வது? அப்ப அதைவிட அதிகப் பணம் கொடுத்து மறுபடியும் வாங்கணும்.//


இப்போ 2.30 மணிக்கு ஒரு டேட்டா வந்தது!
அது பேஸ் மெட்டல்ஸின் ஸ்டாக் நிலவரம்!
அலுமினியம் +36800 டன்
காப்பர் +775 டன்
நிக்கல் -228 டன்
லெட் +325 டன்
ஜின்க் +1650 டன்

ப்ளஸ் ஸ்டாக் விலை இறங்கும் என்றும், மைனஸ் ஸ்டாக் விலை ஏறும் என்றும் அனைவரும் அறிந்ததே! இம்மாதிரி சில டேட்டாக்கள் மூலம் விலை ஏற்ற இறக்கத்தை அறியலாம்!

ஜெய்லானி said...

உபயோகமான பதிவு.நன்றி.

வால்பையன் said...

//தங்கத்தை எடுத்துக் கொண்டால் கடந்த 10 வருடங்களில் தொடர்ச்சியாக ஏறியே வந்திருக்கிறது. இறங்குவது என்றால் short term மட்டும்தான் அதுவும் கம்மியாகத்தான். அதனால் லாபத்தில் விற்று மறுபடியும் இறங்கும்போது வாங்குவது எல்லாம் பேச்சிற்குத்தான் ஆகும் என்று தோன்றுகிறது.//

ஐந்து வருடமாக தங்கம், வெள்ளி வாங்க விற்க ஆலோசனை கொடுத்து கொண்டிருக்கிறேன்! இந்த சார்ட் மூலம் சில விசயங்களை தெரிந்து கொள்ளலாம்!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அறியலாம் என்பது தெரியும் வால். நான் கேட்டது துல்லியமாக.

சரி. கடந்த 10 வருடங்களான தங்கம் விலை ஏற்ற இறக்க புள்ளி விபரங்கள் உங்களிடம் இருக்கும். அதை ஒவ்வொரு முறை ஏறும் போது விற்று, இறங்கும்போது வாங்கி, இரண்டு முறையும் புரோக்கரேஜ் கொடுத்து ஏதாவது ஒரு வருடத்திலாவது இரட்டிப்பாக்க வாய்ப்பிருக்கிறதா என்று பாருங்கள். அப்போது நான் சொல்ல வருவது புரியும். (அல்லது புரோக்கரேஜே இல்லாமல்கூடக் கணக்குப் போட்டுப் பாருங்கள் - அப்போது கூட வரவே வராது!). ஒரு வருடத்திற்கே இப்படி என்றால் தொடர்ந்தாற்போல் பத்து வருடங்களா!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நீங்கள் கொடுத்த சார்ட்படி, குறைந்த பட்ச விலை 1022.10. அதிகபட்ச விலை 1212.15.ஐந்து மாத காலத்திற்கானது இது. துல்லியமாக ஒவ்வொரு முறையும் இறங்கும்போது வாங்கி ஏறும்போது விற்றாலும் 1022 டாலர் முதலீட்டிற்கு 190 டாலர்தான் லாபம் - வருடத்தில் 400 டாலர் ஆகலாம். அதாவது 40% (தவறே செய்யாமல் ஒவ்வொரு முறையும் சரியாக யூகித்தால் மட்டுமே இது சாத்தியம்). இரட்டிப்பாக எல்லாம் ஆகவே முடியாது.

வால்பையன் said...

//வால் சனி ஞாயிறா??
Dr MBBS//

அப்போ தான் எனக்கு மூளை வேலை செய்யும்!

வால்பையன் said...

//கடந்த 10 வருடங்களான தங்கம் விலை ஏற்ற இறக்க புள்ளி விபரங்கள் உங்களிடம் இருக்கும். அதை ஒவ்வொரு முறை ஏறும் போது விற்று, இறங்கும்போது வாங்கி, இரண்டு முறையும் புரோக்கரேஜ் கொடுத்து ஏதாவது ஒரு வருடத்திலாவது இரட்டிப்பாக்க வாய்ப்பிருக்கிறதா என்று பாருங்கள். அப்போது நான் சொல்ல வருவது புரியும். (அல்லது புரோக்கரேஜே இல்லாமல்கூடக் கணக்குப் போட்டுப் பாருங்கள் - அப்போது கூட வரவே வராது!). ஒரு வருடத்திற்கே இப்படி என்றால் தொடர்ந்தாற்போல் பத்து வருடங்களா!//


ஒரு மாதத்திற்கு 20 நாட்கள் ட்ரேடிங்க் நடக்கும் 12 மாதத்திற்கு 240 நாட்கள், தாராளமாக இரட்டிப்பாக்கலாம்! பத்தாயிரத்துக்கு புரோகிரேஜ் 100 ரூபாய் கூட வாராது!
சரியான திட்டமிடுதல் நிச்சயமாக இரட்டிப்பாக்கி தரும்! முயற்சித்து பாருங்களேன்! குளத்தில் இறங்கினால் தான் மீன் பிடிக்க முடியும்! கரையில் உட்கார்ந்து யோசித்தால் அல்ல!

வால்பையன் said...

//நீங்கள் கொடுத்த சார்ட்படி, குறைந்த பட்ச விலை 1022.10. அதிகபட்ச விலை 1212.15.ஐந்து மாத காலத்திற்கானது இது. துல்லியமாக ஒவ்வொரு முறையும் இறங்கும்போது வாங்கி ஏறும்போது விற்றாலும் 1022 டாலர் முதலீட்டிற்கு 190 டாலர்தான் லாபம் - வருடத்தில் 400 டாலர் ஆகலாம். அதாவது 40% (தவறே செய்யாமல் ஒவ்வொரு முறையும் சரியாக யூகித்தால் மட்டுமே இது சாத்தியம்). இரட்டிப்பாக எல்லாம் ஆகவே முடியாது.//

அது நாள் கணக்கு சார்ட்!
அதே போல் ஒரு மணி நேர சார்ட் பயன்படுத்தி நான் ஆலோசனைகள் வழங்குவேன்! மேலும் அதையே நீங்கள் கேண்டில் சார்ட்டில் பார்த்தால் ஒரு நாள் எத்தனை டாலர்கள் நகருகிறது என்பதை அறியலாம்!
சப்போர்ட் ரெசிஸ்ட் ட்ரெண்ட் மூலம் அன்றைய நாளின் நகரும் அளவை கிட்டதட்ட முன்கூட்டியே கணிக்கலாம்!

கமாடிடியில் 15% மார்ஜின் கொடுத்து 100% மதிப்பிலான பொருள்கள் வாங்கமுடியும்! அதில் இரட்டிப்பாக வாய்ப்பு உண்டு தானே!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கோபித்துக் கொள்ளாவிட்டால் நான் ஒன்று சொல்லவா?

சரி.. இப்படி வைத்துக் கொள்வோம். 10 ஆயிரம் கூட வேண்டாம். 20 ஆயிரம் நான் தருகிறேன். உங்கள் கணக்குப்படி அது 10 வருடங்களில் 2 கோடி ஆகியிருக்க வேண்டும். உங்கள் சம்பளமாக 1.5 கோடி எடுத்துக் கொண்டு எனக்கு மிச்சமிருக்கும் 50 லட்சம் மட்டும் கொடுத்தால் போதும். 10 வருடங்களில் 1.5 கோடி என்றால் மாதமொன்றுக்கு 1.5 லட்சம் சம்பளம் உங்களுக்கு. சரியா. பத்திரங்களில் கையெழுத்து போட்டுவிடலாமா :)

கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்பதால் இப்படி எழுதியிருக்கிறேன். ப்ளீஸ்!

சைவகொத்துப்பரோட்டா said...

ஆலோசனைக்கு நன்றி, நேரம் கிடைக்கும்போது
பங்குசந்தையில் முதலீடு பற்றி ஒரு பதிவு போடுங்களேன்.

Thamira said...

நியாயமான கருத்துகள். என்ன 10 ஆயிரத்துக்கு 1 கோடிங்கிறது கொஞ்சம் ஐடியல் கேஸ் மாதிரிதான் தெரிகிறது.

வால்பையன் said...

//கோபித்துக் கொள்ளாவிட்டால் நான் ஒன்று சொல்லவா?

சரி.. இப்படி வைத்துக் கொள்வோம். 10 ஆயிரம் கூட வேண்டாம். 20 ஆயிரம் நான் தருகிறேன். உங்கள் கணக்குப்படி அது 10 வருடங்களில் 2 கோடி ஆகியிருக்க வேண்டும். உங்கள் சம்பளமாக 1.5 கோடி எடுத்துக் கொண்டு எனக்கு மிச்சமிருக்கும் 50 லட்சம் மட்டும் கொடுத்தால் போதும். 10 வருடங்களில் 1.5 கோடி என்றால் மாதமொன்றுக்கு 1.5 லட்சம் சம்பளம் உங்களுக்கு. சரியா. பத்திரங்களில் கையெழுத்து போட்டுவிடலாமா :)//

என்னை நீங்கள் கோபபடுத்தினால் உங்களுக்கு 1 லட்சம் சும்மா தருகிறேன்! நான் ஆலோசனைகள் மட்டுமே வழங்குகிறேன் அதாவது ஐடியா மணி வேலை, அதுக்கு கூலி வாங்கி கொள்கிறேன்! ஒரு சில க்ழப்பங்களை தவிர்ப்பதற்காக நான் ட்ரேடிங்கில் இறங்குவதில்லை!

நீங்கள் உங்கல் அருகில் இருக்கும் எதாவது கமாடிடி அலவலகத்தில் ஒரு அக்கவுண்ட் தொடங்குகள் நான் ஆலோசனை வழங்குகிறேன்! ஒரு மாதம் சும்மா வேடிக்கை மட்டும் பாருங்க! நம்பிக்கை வந்தால் பணம் போடுங்கள்!

ரவி said...

அன்பு வால்பையா, எங்களை எல்லாம் வைத்து காமெடி கீமடி பண்ணல்லியே ?

வால்பையன் said...

//அன்பு வால்பையா, எங்களை எல்லாம் வைத்து காமெடி கீமடி பண்ணல்லியே ? //


நான் என்ன மந்திரத்தில் மாங்காய் வர வழைக்கிறேன் என்றா சொன்னேன்!

Anonymous said...

Your message had send wrong signal..

In Stock market there are upside and down side..It only got spare money to invest and not for who want to double the money..

In 3-5 years period best managed Mutual Fund able to give 35% return not more.. Pl check any website for 3-5 year return by mutual fund..

Risk is high (you can even loose your capital or day trading is more like gambling den )

Becareful.. Read*

Regards
VS Balajee

வரதராஜலு .பூ said...

//எத்தனை முறை அனுபவபட்டாலும் மக்களால் இந்த கவர்ச்சியை விட்டு வெளிவர முடியவில்லை! சென்ற மாதம் மதுரையில் நண்பர் ஸ்ரீயுடன் பேசி கொண்டிருக்கும் போது சொன்னார்! ஒரு லட்சம் கொடுத்தால் அடுத்த மாதம் 35 ஆயிரம் தருவார்களாம், அதற்கு அடுத்து 25 ஆயிரம், அடுத்து 20 ஆயிரம், கிட்டதட்ட ஒரு வருடத்தில் 3 மடங்கு நீங்கள் கொடுத்த பணம் ரிட்டர்ன்!//

பேராசைதான் இதற்கு காரணம். எப்படி அவர்களால் முடியும் என்று யாருமே யோசிப்பதேயில்லை

வால்பையன் said...

//Your message had send wrong signal..

In Stock market there are upside and down side..It only got spare money to invest and not for who want to double the money..

In 3-5 years period best managed Mutual Fund able to give 35% return not more.. Pl check any website for 3-5 year return by mutual fund..

Risk is high (you can even loose your capital or day trading is more like gambling den )

Becareful.. Read*
Regards
VS Balajee //


பத்தாயிரத்தை வைத்து கொண்டு உங்களால் மாதம் ஆயிரம் சம்பாரிக்க முடியும் தானே! அப்படியானால் வருடத்திற்கு 12 ஆயிரம் ஆகிறது, நான் பத்தாயிரம் சம்பாரித்தால் போதும் என்று தானே சொல்கிறேன்!
மார்க்கெட் ஏறினாலும், இறங்கினாலும் லாபம் பார்க்க முடியும் நண்பரே! இதில் முன்கூட்டியே விற்று பிறகு வாங்கும் முறை உண்டு!

ஜாபர் ஈரோடு said...

ஒன்னுமே பிரியல தலைவா....

வால்பையன் said...

//ஒன்னுமே பிரியல தலைவா.... /

நேத்து வந்திருந்தா விளக்கமா சொல்லியிருப்பேன்!

Rajan said...

//குளத்தில் இறங்கினால் தான் மீன் பிடிக்க முடியும்! கரையில் உட்கார்ந்து யோசித்தால் அல்ல!//

தூண்டில் போட்டா ?

க.பாலாசி said...

நான் உங்களிடமே 10 ஆயிரம் தர்லாம்னு இருக்கேன்...

Rajan said...

அதுக்கு பலான கதை எழுதி பணக்கார பிரண்டு புடிச்சா ! நோகாம சம்பாதிக்கலாம் ! ஜாக்கி ஜட்டி சரக்கு குட்டி எல்லாம் கெடைக்கும் .... என்ன ஒன்னு நாம பிச்ச எடுத்து சம்பாதிச்சத போயி எதுனா பிராடு சாமியார் கிட்ட உட்ரக் கூடாது

Rajan said...

//நான் உங்களிடமே 10 ஆயிரம் தர்லாம்னு இருக்கேன்...
//

ஸ்வாகா !

Anonymous said...

சொக்கலால் பீடி பற்றி ஏதாவது சுவாரஸ்யமா எழுதப்பா

அகல்விளக்கு said...

நல்ல ஐடியாவ இருக்கே...

Rajan said...

//சொக்கலால் பீடி பற்றி ஏதாவது சுவாரஸ்யமா எழுதப்பா//

தல நம்ம மவனுங்க வர ஆரமிச்சுட்டானுங்க

வால்பையன் said...

//தல நம்ம மவனுங்க வர ஆரமிச்சுட்டானுங்க //

வாங்க அனானி செல்வ குழந்தைகளே!

நிகழ்காலத்தில்... said...

வால். எத்தனை வருசமா இந்த ஆலோசனை வழங்குகிறீர்கள் ??

இப்போது உங்கள் கையில் எவ்வளவு தொகை சேர்ந்திருக்கிறது !!!

Rajan said...

//வால். எத்தனை வருசமா இந்த ஆலோசனை வழங்குகிறீர்கள் ??

இப்போது உங்கள் கையில் எவ்வளவு தொகை சேர்ந்திருக்கிறது !!!//

கிணற்று வாளியும் உடைந்த சொம்பும்தான் மிச்சம்

Rajan said...

//வாங்க அனானி செல்வ குழந்தைகளே!//


புரிஞ்சிருச்சு போல !

வால்பையன் said...

//வால். எத்தனை வருசமா இந்த ஆலோசனை வழங்குகிறீர்கள் ??

இப்போது உங்கள் கையில் எவ்வளவு தொகை சேர்ந்திருக்கிறது !!!//


ஐந்து வருடமாக இந்த தொழிலில் இருக்கிறேன்!
காசு சேர்த்து வைக்கும் பழக்கம் எனக்கு கைகூடவில்லை!

வால்பையன் said...

//நான் உங்களிடமே 10 ஆயிரம் தர்லாம்னு இருக்கேன்... //


பாலாஜி! கதிர் அண்ணனிடம் கொடுங்கள், நான் ஆலோசனை மட்டுமே!

ஜாபர் ஈரோடு said...

இன்னிக்கு சொல்லலுங்க.........

வால்பையன் said...

//இன்னிக்கு சொல்லலுங்க.........//


ஆபிஸ் வாங்க தல!

பிரேமா மகள் said...

என் கையில் கொஞ்சம் கூட காசு இல்லை. (காரணம் அவ்வளவு பற்றாகுறை). கழுத்தில் 12 பவுனில் ஒரு சங்கிலியும், காதில் 1 பவுன் தொடும் கையில் ஒன்றரை பவுன் பிரேசிலேட், முக்கால் பவுன் மோதிரம் இருக்கு. இதை வெச்சு நான் கோடிஸ்வரி ஆக முடியுமா? ஆலோசனை தரவும்.

ஹேமா said...

வாலு....உங்கட வால் நல்ல வடிவு.அநியாயத்துக்கு யாராச்சும் வெட்டப் போறாங்கள்.

Rajan said...

//என் கையில் கொஞ்சம் கூட காசு இல்லை. (காரணம் அவ்வளவு பற்றாகுறை). கழுத்தில் 12 பவுனில் ஒரு சங்கிலியும், காதில் 1 பவுன் தொடும் கையில் ஒன்றரை பவுன் பிரேசிலேட், முக்கால் பவுன் மோதிரம் இருக்கு. இதை வெச்சு நான் கோடிஸ்வரி ஆக முடியுமா? ஆலோசனை தரவும்.//

முடியுமாவா !

நீங்க மொதல்ல அட்ரஸ்ஸ சொல்லுங்க மேடம்

RAMYA said...

பதிவு நல்லா இருக்கு வால்.... ம்ம்ம்ம்.. யாராவது முயற்சி செய்து பார்க்கட்டும் :-)

வால்பையன் said...

//என் கையில் கொஞ்சம் கூட காசு இல்லை. (காரணம் அவ்வளவு பற்றாகுறை). கழுத்தில் 12 பவுனில் ஒரு சங்கிலியும், காதில் 1 பவுன் தொடும் கையில் ஒன்றரை பவுன் பிரேசிலேட், முக்கால் பவுன் மோதிரம் இருக்கு. இதை வெச்சு நான் கோடிஸ்வரி ஆக முடியுமா? ஆலோசனை தரவும். //


ஏற்கனவே நீங்கள் ”கேடி” என்பது ஊருக்கே தெரியும்! இதில் கோடி வேற வேணுமாக்கும்!

உங்க 12 பவுன் செயினை மட்டும் எனக்கு அன்பளிப்பாக அளித்தால் கோடீஸ்வரியாக ஆலோசனைகள் வழங்கப்படும்!

பிரேமா மகள் said...

என் கையில் கொஞ்சம் கூட காசு இல்லை. (காரணம் அவ்வளவு பற்றாகுறை). கழுத்தில் 12 பவுனில் ஒரு சங்கிலியும், காதில் 1 பவுன் தொடும் கையில் ஒன்றரை பவுன் பிரேசிலேட், முக்கால் பவுன் மோதிரம் இருக்கு. இதை வெச்சு நான் கோடிஸ்வரி ஆக முடியுமா? ஆலோசனை தரவும்.

Anonymous said...

விலை ஏறும் போது ஏறியிருக்குன்னு இறங்காட்டி இறங்கும்போது கம்மியாகத்தான் இறங்கும்னு சொல்ல முடியுமா ?

சார்ட்டில் பார்த்தால்,யோசிக்கலாம்.
விலை இறங்கும்போது இரட்டிப்பாக இறங்காட்டி என்ன செய்வது?

வால்பையன் said...

//விலை ஏறும் போது ஏறியிருக்குன்னு இறங்காட்டி இறங்கும்போது கம்மியாகத்தான் இறங்கும்னு சொல்ல முடியுமா ?

சார்ட்டில் பார்த்தால்,யோசிக்கலாம்.
விலை இறங்கும்போது இரட்டிப்பாக இறங்காட்டி என்ன செய்வது?//


சரியான இடத்தில் வாங்கி சரியான இடத்தில் விற்பதற்கு தான் நண்பரே வல்லுனர்களின் ஆலோசனை!

ஒரு நாளைக்கு ஒரு கிராமுக்கு 25 ருபாய் வரை நகர்வு இருக்கு, நமக்கு அதில் ஐந்து ருபாய் கிடைத்தாலும் போதும்! நூறு கிராமுக்கு 500 ருபாய் ஆச்சு!

VISA said...

//என் கையில் கொஞ்சம் கூட காசு இல்லை. (காரணம் அவ்வளவு பற்றாகுறை). கழுத்தில் 12 பவுனில் ஒரு சங்கிலியும், காதில் 1 பவுன் தொடும் கையில் ஒன்றரை பவுன் பிரேசிலேட், முக்கால் பவுன் மோதிரம் இருக்கு. இதை வெச்சு நான் கோடிஸ்வரி ஆக முடியுமா? ஆலோசனை தரவும்.

//

நிச்சயமாக ஆக முடியும் தோழி.
அந்த நகைகளை எல்லாம் கழட்டி பத்திரமாக என்னிடம் கொடுத்துவிட்டு
உங்கள் பெயரை பிரேமகோடீஸ்வரி என்று மாற்றிக்கொள்ளவும்.

"தாரிஸன் " said...

sir enaku nammloda blogspotai eppadi matra thalangalla link panrathunu theriyala sir!!
konjam help panreenhgala???

வால்பையன் said...

//
sir enaku nammloda blogspotai eppadi matra thalangalla link panrathunu theriyala sir!!
konjam help panreenhgala??? //

இதில் இணைக்கனும்!

புலவன் புலிகேசி said...

ரைட் தல..இந்த டீலிங் எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு...அலைபேசியில் அப்புறம் பேசுறேன்...

டிராகன் said...

மிஸ்டர் வால் ,
என்னுடைய முதல் பின்னூட்டம் ,மிக நல்ல பதிவு ,இதற்கு demate account வைத்திருக்க வேண்டும் என்று நண்பன் சொன்னான் ,

demate அக்கௌன்ட் பற்றி சொல்லவும் ,நம்மளுக்கு இதெல்லாம் தெரியாது தல ,இப்பதான் படிப்பு முடிச்சு கிராமத்தில் இருந்து computer தட்ட வந்திருக்ரன்

Paleo God said...

என்னாச்சு அருண்:))

நீங்க சொல்றது ஒரு டிசிப்ளின் அப்ரோச் அது பதறாம பண்ற காரியம்.

பத்தாயிரம் ருபாய் ஒவ்வொரு வருடமும் அனாவசியமாக எல்லோருமே (அதாவது குறைந்தது முப்பது ரூபாய்க்கு ஒரு நாளுக்கு) செலவு செய்வதுதான்.

மேலும் 100 % லாபம் ஒவ்வொரு வருடமும் கிடைக்க சில அடிப்படை விஷயங்கள் புரிய வேண்டும்.

குறைந்த பட்சம் மாதம் 1000 ருபாய் நல்ல மியுட்ச்சுவல் பண்டில் போட்டால் கூட 30 திலிருந்து 40 % கிடைக்கும். நிறைய பேருக்கு தெரிவதில்லை. நல்ல அறிவுரை. வாழ்த்துகள்.

தேவையானவர்களுக்கு உதவுங்கள். என்னுடைய சந்தேகங்களுக்கும் தொடர்பு கொள்கிறேன்.
நன்றி!

எம்.எம்.அப்துல்லா said...

இந்த இடுகையோட கட்டக்கடைசி வரி ரொம்பப் புடுச்சுருக்கு :)

Anonymous said...

If you stop drinking you can also become millionaire.

வால்பையன் said...

//If you stop drinking you can also become millionaire. //

ஏழைகளுக்கு ஒரு ருபாய் அரிசியும், இலவச தொலைகாட்சியும் கிடைக்காதே பரவாயில்லையா!?

Srikanth Meenakshi said...

நண்பரே,

பத்தாயிரம் பத்து வருடங்களில் ஒரு கோடி ஆவதென்பது ஆயிரம் மடங்கு உயர்வு.

மனித சரித்திரத்தில் யாதொருவரும் இதைச் செய்ததில்லை. இது இயலாத காரியம். ஒவ்வொரு முறையும் சரியான வாங்கல்/விற்றல் செய்ய வேண்டும் - பத்து வருடங்களுக்கு. அது சாத்தியமில்லை - statistically.

தயவு செய்து உங்கள் வாசகர்களை mislead செய்யாதீர்கள்.

ஒரு முக்கியமான கடைசி வார்த்தை -
இது முடியும் என்று சொல்லி உங்களிடம் ஆலோசனைக்கு வருமாறு கோருவது சட்டப்படி குற்றமாயிருக்க மிக அதிக வாய்ப்பிருக்கிறது. கவனம்.

வால்பையன் said...

//மனித சரித்திரத்தில் யாதொருவரும் இதைச் செய்ததில்லை. இது இயலாத காரியம். ஒவ்வொரு முறையும் சரியான வாங்கல்/விற்றல் செய்ய வேண்டும் - பத்து வருடங்களுக்கு. அது சாத்தியமில்லை - statistically.//


எதற்கும் ஒரு ஆரம்பம் வேண்டுமே!
சாத்தியமில்லை என்று நினைத்திருந்தால் எந்த முயற்சியையும் மனிதன் செய்திருக்க மாட்டானே! பத்தாயிரம் தானே! பெரிய தொகையும் இல்லையே! முயற்சித்து தான் பார்ப்போமே!

//ஒரு முக்கியமான கடைசி வார்த்தை -
இது முடியும் என்று சொல்லி உங்களிடம் ஆலோசனைக்கு வருமாறு கோருவது சட்டப்படி குற்றமாயிருக்க மிக அதிக வாய்ப்பிருக்கிறது. கவனம். //

எனது ஆலோசனை அவர்களுக்கு துறை சார்ந்த அறிவுரைகள் வழங்குவதே! மேலும் நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை! உங்களுக்கு அருகிலேயே செய்து கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறேன்! அது எப்படி குற்றமாகும்!

Selvakumar said...

ஜ்யோவ் சொன்னதை வழி மொழிகிறேன்.
அதி உன்னத நவீன மென்பொருள் அனைத்தையும் பயன்படுத்தி, கற்பனைக்கெட்டாத நிகழ்வுகளையும், சாத்தியக் கூறுகளையும் எண்களாக மாற்றி இதில் மூழ்கி திளைக்கும் விற்பன்னர்களால் கூட முடியாத காரியம் இது. இவ்வளவு ஏன்? சந்தையையே புரட்டிப் பார்க்கும் பண பலம கொண்ட ஆபெரேடர் முதலைகளால் கூட தொடர்ந்து பத்து வருடங்கள் பணத்தை இரட்டிப்பாக்க முடியாது. ஐந்து வருட பத்து வருட சார்ட்களை பார்க்காமல் பங்கு சந்தையின் ஆதாரப் போக்குகளை நிர்ணயிக்கும் மூல காரணிகளையும், உலக சந்தைகளின் பல்லாண்டு வரலாற்றையும் கூர்ந்து கவனித்தால் நீங்கள் சொல்வதற்கு முற்றிலும் மாறான விஷயங்களை அறியலாம். அது அத்தனையும் கிடைக்கும் இடம். Benjamin Graham எழுதிய The Intelligent Investor. படித்துப் பாருங்கள் sir.

Sanjai Gandhi said...

வால், இது மனசாட்சிபடி எழுதின பதிவா? உங்கள் இத்தனை ஆண்டு கம்மாடிட்டி பிசினசில் எவ்வளவு கோடீஸ்வரர்கள் உருவாகி இருக்கிறார்கள்? நீங்கள் எவ்வளவு சம்பாத்தித்தீர்கள். ஜோசியம் பார்ப்பவனிடம் கேட்கும் அதே கேள்விகள் இப்போ உங்களிடமும்..

Romeoboy said...

தலைவரே வியாவாரம் டல் அடிகிறதா என்ன ??

டவுசர் பாண்டி... said...

இருட்டு அறையில் நுழைந்த உடன் எதுவும் கண்ணுக்குத் தெரியாதுதான். ஆனால் நேரம் செல்லச் செல்ல மெலிதான வெளிச்சம் பரவியதை போல பொருட்கள் தட்டுப்பட ஆரம்பிக்கும்.

இதை மாதிரியான ஒன்றையே வால்பையன் சொல்கிறார். சாத்தியமே இல்லை என குப்புற கொட்டி கேலியையும், அவ நம்பிக்கையையும் உருவாக்குவதை விட, அதன் சாத்தியஙகளை யோசிக்கவும், விவாதிக்கவும் செய்யலாம்.

பொருளாதார விடுதலைக்காகவே ஒவ்வொருவரும் போராடிக் கொண்டிருக்கிறோம். இம் மாதிரியான சாத்தியங்களை ஒருவர் முன்வைக்கும் போது அது குறித்த அர்த்தமுள்ள விவாதங்கள் முன்வைக்கப் படுதல் அவசியம்.

சரியான ஆலோசகர்களின் துனை கொண்டு பதட்டமில்லாமல் பங்கு வர்த்தகம் செய்தால் இதுவும் சாத்தியமே!

வாழ்த்துகள்....வால் பையன்.

குறும்பன் said...

வால் ம்ம்ம்ம்ம் முயன்றால் எல்லோரும் (உங்க ஆலோசனைய கேக்கறவங்க) வாரண் பப்பெட் ஆயிராலாமுன்னு சொல்லறீங்க.

வால்பையன் said...

//வால், இது மனசாட்சிபடி எழுதின பதிவா? உங்கள் இத்தனை ஆண்டு கம்மாடிட்டி பிசினசில் எவ்வளவு கோடீஸ்வரர்கள் உருவாகி இருக்கிறார்கள்? நீங்கள் எவ்வளவு சம்பாத்தித்தீர்கள். ஜோசியம் பார்ப்பவனிடம் கேட்கும் அதே கேள்விகள் இப்போ உங்களிடமும்.. //


என்னுடய வாடிக்கையாளர்கள் அனைவரும் நகைகடை வைத்திருப்பவர்கள்! மேலும் அவர்கள் ஏற்கனவே கோடீஸ்வரர்கள் தான்! அவர்களுக்கு முழுநேர தொழிலே இது தான்!

வால்பையன் said...

//சாத்தியமே இல்லை என குப்புற கொட்டி கேலியையும், அவ நம்பிக்கையையும் உருவாக்குவதை விட, அதன் சாத்தியஙகளை யோசிக்கவும், விவாதிக்கவும் செய்யலாம்.//

மிக்க நன்றி நண்பரே!

supersubra said...

//நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம்! நேர்மையான வழியிலேயே, //


என்னை பொறுத்த வரை உழைப்பின்றி சம்பாதிக்கும் எந்த ஒரு முறையும் நேர்மையானது அல்ல
நிலையானதும் அல்ல

Thangaraj said...

இந்த பதிவு எழுத ஐடியா கொடுத்த என்னை மறந்துடிங்களே சார் பார்க்க முந்திய பதிவு கமெண்டில்

வால்பையன் said...

//இந்த பதிவு எழுத ஐடியா கொடுத்த என்னை மறந்துடிங்களே சார் பார்க்க முந்திய பதிவு கமெண்டில் //


ஆமா தல, நீங்க சொன்னபிறகு தான் எழுத தோணுச்சு!

nandagopal said...

iam also working in stock broking may i know abt u

Anonymous said...

Share markettil varudavarudam panam irattippu aaguma??? Val payya unakku sharemarkettin basic knowledge kooda illai, unnai nambi endha kammanatti emara pogirano,enathu AAzhntha anuthabhangal!

Rajan said...

//endha kammanatti emara pogirano,enathu AAzhntha anuthabhangal!//

ஹா ஹா ஹா .... தல சிவனைத்தான் சொல்றாரு கம்முனாட்டினு ! நமக்கும் படை திரள ஆரமிச்சுருச்சு ! ம்ம்ம் கிளப்புங்கள் !

Anonymous said...

hai valu,
nee munnadi theruvile modimasthan vithai katti kondirunthavan thane?Ippa netla aarambichitiya?

Easakimuthu said...

Please give u r mail id.

Anonymous said...

//iam also working in stock broking may i know abt u//

Enna Kelvi ithu ???

Raman Koojamanalan

Anonymous said...

00000

unmaivrumbi said...

உங்கள் கருத்து சாத்தியமே !

உண்மைவிரும்பி.
மும்பை

நாமக்கல் சிபி said...

பல்டி லெவல் மார்க்கெட்டிங், நூதன இரட்டிப்பு தொகை என்று பல்வேறு விதங்களில் ஏமாறாமல் வால் சொன்னபடி முதலீடு செய்யலாம்!

கோடீஸ்வரன் ஆகாட்டியும் பிச்சைக்காரன் ஆகாம இருக்கலாம்!

வால்பையன் said...

//Share markettil varudavarudam panam irattippu aaguma??? Val payya unakku sharemarkettin basic knowledge kooda illai, unnai nambi endha kammanatti emara pogirano,enathu AAzhntha anuthabhangal! //


பத்தாயிரத்தை ஒரு வருடத்தில் இரட்டிப்பாக்க முடியுமென்றால் அது நமது முதலீடு இரட்டிப்பாக்க முடியும் என்பதை சாத்திய படுத்துகிறது!
எந்த துறையாக இருந்தாலும்னு தான் சொல்லியிருக்கேன்!

உங்களது திருட்டு தொழிலில் கூட!
(திருடர்கள் அனானிகள் தானே, அட்ரஸோடவா வருவாங்க)

வால்பையன் said...

//hai valu,
nee munnadi theruvile modimasthan vithai katti kondirunthavan thane?Ippa netla aarambichitiya? //

தெருவில் பிச்சை எடுத்து கொண்டிருந்தேன் நண்பரே!, இப்போ நெட்டில் பிச்சை எடுக்கிறேன்!

வால்பையன் said...

//Please give u r mail id. //


arunero@gmai.com

வால்பையன் said...

//உங்கள் கருத்து சாத்தியமே !

உண்மைவிரும்பி.
மும்பை//

நன்றி நண்பரே!

sivashankar said...

வணக்கம் பாஸ் நல்ல ஆலோசனை " பொறுத்தார் பூமி ஆள்வார்" என்பது போல தங்களது கருது என்னை சிந்திக்க வைத்துள்ளது (அணைவரையும்தான்)

Anonymous said...

"Munbu theruvil pitchai eduthen.ippothu net-il pitchai edukkiren."Valu,inimel nee thaniya poga vendam. Idhe pola niraya aalosanai kodu. un pinnadi magathana Kootam varum!!

Anonymous said...

மைதா மாவு வாங்கி விற்றால் கூட பணம் ரெட்டிப்பாகுமா ?

ஆன்லைனில் மைதாமாவு வாங்குவது எப்படி?

விளக்கமாக கூறவும்

Rajan said...

//மைதா மாவு வாங்கி விற்றால் கூட பணம் ரெட்டிப்பாகுமா ?

ஆன்லைனில் மைதாமாவு வாங்குவது எப்படி?

விளக்கமாக கூறவும்//

நல்ல கேள்வி ! மொதல்ல உங்களுக்கு மைதா மாவு பிசைய தெரியுமா நண்பரே ! அது ஒரு கலை !

Anonymous said...

கமாடிட்டி டிரடிங் -ல டெலிவரி எடுக்க வேண்டி வராதாமே ? அப்புறம் எதுக்கு இதெல்லாம் கேட்கிறாய் தம்பி.

வியாபார விஷயமாய் சந்தேகம் கேட்கும் போது சேட்டை ......சேட்டை ... நோ

Rajan said...

//கமாடிட்டி டிரடிங் -ல டெலிவரி எடுக்க வேண்டி வராதாமே ? அப்புறம் எதுக்கு இதெல்லாம் கேட்கிறாய் தம்பி.

வியாபார விஷயமாய் சந்தேகம் கேட்கும் போது சேட்டை ......சேட்டை ... நோ
//

ஐயோ இவுரு அம்பானி மகன் ! வியாபாரத்துல சந்தேகம் கேக்க வந்துட்டாரு ! எட்டு ஊடு பிச்சஎடுத்து திங்கற நாய்க்கு லொள்ளப் பாரு !

Anonymous said...

//சந்தேகம் கேக்க வந்துட்டாரு ! எட்டு ஊடு பிச்சஎடுத்து திங்கற நாய்க்கு லொள்ளப் பாரு //
.

இதை வாங்கினா தான் எனக்கு வாங்கலைன்னா அது
உனக்கு
உனக்கு
உனக்கு
.
இது இப்படி இருக்கு -(ரெண்டு நாளைக்கு முன்னாள் ஒரு மகான் தண்ணில சொன்னது )

Rajan said...

//இதை வாங்கினா தான் எனக்கு வாங்கலைன்னா அது
உனக்கு
உனக்கு
உனக்கு
.
இது இப்படி இருக்கு -(ரெண்டு நாளைக்கு முன்னாள் ஒரு மகான் தண்ணில சொன்னது//

எகத்தாலத்தப் பாரு

Anonymous said...

Rajan Ramyamanalan,

Engae oru nursery rhyme sollu

Rajan said...

வா வா கறுப்பாடு கம்பளி கீதா சொல்லு

கீது மச்சி கீது மூணு மூட்டை கீது

ஒன்னு எங்க அண்ணாத்தைக்கி

ஒன்னு எங்க தங்காச்சிக்கி

ஒன்னு இந்த சோமாறி தோ கீறான் பாரு

Anonymous said...

கலக்கிட்ட தம்பி !!! கலக்கிட்ட

ஆனா கடைசி வரில கொண்டாந்து உன் முஞ்சிய ஏன் காட்டுற ? தற்பெருமை ரொம்ப அதிகமப்பா உனக்கு

Rajan said...

நான் தம்பி இல்ல உனக்கு அப்பா முறை வேணும் !

Rajan said...

மவனே அனானி எங்கப்பா போய்ட்ட நீ ! அம்மாவக் கூட்டிட்டு ஊட்டுக்கு சீக்கர மா வந்துடு

Anonymous said...

இதை வாங்கினா தான் எனக்கு வாங்கலைன்னா அது
உனக்கு
உனக்கு
உனக்கு
.
இது இப்படி இருக்கு -(ரெண்டு நாளைக்கு முன்னாள் ஒரு மகான் தண்ணில சொன்னது

இதை எத்தனை தடவை பேஸ்ட் பண்ண சொல்ற.

வாலு கடைய தொறந்து அதுல கயிதய உக்கத்திவச்சுட்டு என்ன பண்ற ? என் கேள்விக்கு பதில் சொல்லு

100 da 100

Anonymous said...

பின்னூட்ட எண்ணிக்கைய கூட்டுவதற்கு தான் இந்த கண்ணாமூச்சி ன்னு தெரியுது. சொந்த பேர்ல வங்க கண்ணுங்களா !!!!! உங்க சைட்லேயே இது தேவைதானா

சிநேகிதன் அக்பர் said...

நல்ல பகிர்வு
நன்றி பாஸ்.

மணிஜி said...

துவரம் பருப்பை வாங்கி ஸ்டாக் பண்ணி விக்கலாம். பூச்சி பிடிக்காம; இருப்பதற்கு பூச்சி மருத்து அடித்து வைத்துக் கொள்ளலாம்!!

manjoorraja said...

உங்கள் ஆலோசனை பயனுள்ளது. ஆனால் நீங்கள் சொல்வது போல ஒரு கோடீஸ்வரர் ஆகமுடியும் என தோன்றவில்லை. திட்டமிட்டு நிதானமாக செயல்பட்டால் ஓரளவு நல்ல வருமானத்தை எதிர்ப்பார்க்கமுடியும். அதுவும் subject to market risk. உங்கள் பணம் போனாலும் போகவும் வாய்ப்பு இருக்கு என்பதையும் மறுப்பதற்கில்லை.

மேவி... said...

அதே investment யில் ரிடர்ன்ஸ் யை இன்னும் அதிகப்படுத்த முடியாதா வால்ஸ் ????

Btc Guider said...

என்னிடம் ஒரு ஐடியா உள்ளது.நீங்கள் கொடிஸ்வரனாக வேண்டுமா தலைப்பில் (சும்மா ஜாலிக்குதான்)
http://tamilbazaar.blogspot.com/2009/08/blog-post_18.html

அடுத்தது இன்றைய பதிவு (இது உண்மை)
http://tamilbazaar.blogspot.com/2010/02/blog-post.html

நாமக்கல் சிபி said...

//வரம் பருப்பை வாங்கி ஸ்டாக் பண்ணி விக்கலாம். பூச்சி பிடிக்காம; இருப்பதற்கு பூச்சி மருத்து அடித்து வைத்துக் கொள்ளலாம்!!//

கொல்லலாம் னல்ல இருக்கணும்!~

பூச்சி மருத்து அடித்து வைத்துக் கொல்லலாம்

விக்னேஷ்வரி said...

கண்டதிலேயும் இன்வெஸ்ட் பண்ணக் கூடாதுன்னு சொன்னது சரி தான்.

நீங்க எந்தத் துறையில் இருக்கீங்க வால்...

அமைதி அப்பா said...

வட்டிக் கொடுத்து ஏமாந்து போவதைவிட இப்படி பங்கு சந்தை வணிகத்தில் ஈடுபடுவது நன்று.

எம்.ஞானசேகரன் said...

வால்பையன் அவர்களே! இப்படித்தான் பங்குச்சந்தை குறித்தான எல்லா புத்தகங்களையும் கரைத்துக் குடித்துவிட்டு 2008 ஜனவரியில் ஒரு இருபதாயிரத்தை முதலீடு செய்தேன். முதலீடு செய்த மூன்றாவது நாளே சந்தை அதள பாதாளத்திற்கு வீழ்ந்து பொனேன். பின்பும் கூட தளராது முயற்சி செய்தேன். இன்னும் எழுந்திருக்கவே முடியலை.

வால்பையன் said...

உங்கள் இழப்பிற்கு சந்தை பொறுப்பாகாது, டெக்னிக்கல் விசயங்கள் பல உள்ளன, நானே இப்பொழுது தான் கட்று கொண்டிருக்கிறேன்.!

!

Blog Widget by LinkWithin