ஜப்பான் சுனாமி - நண்பர்கள் கவனத்திற்கு!



ஜப்பானில் இன்று மதியம் 2:46 மணிக்கு (JST) ரிக்டர் அளவுகோலில் 8.9 அளவுடைய நிலநடுக்கம் ஏற்பட்டு, பல நகரங்கள் நிர்மூலமாகியுள்ளன. அதனினும் கொடுமையாக 900 கிமீ வேகத்தில் சுனாமி அலைகள் ஜப்பான் நாட்டை சூறையாடியுள்ளன. தற்போதைய நிலவரப்படி மின்சாரம், தொலைதொடர்பு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கியுள்ளன. கடந்த 150 ஆண்டுகளில் இது போன்ற ஒரு பாரிய பேரிடர் ஏற்பட்டதில்லை என கருதப்படுகின்றது. உலகே ஒன்றிணைந்து ஜப்பானை கட்டியெழுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

சில அவசர கால உதவிகளை பல்வேறு அரசுகளும், நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றன. இவற்றைப் பற்றிய தகவல்களை பலருக்கும் தெரியப்படுத்துவதன் மூலம் இடர்ப்பாடுகளில் சிக்கியிருப்பவர்களை, காணாமல் போயிருப்பவர்களைக் கண்டறிவதில் உதவுவோம்.

----------------------------------
ஜப்பானில் இருக்கும் இந்தியர்கள் பற்றிய தகவல்கள் அறிய, டோக்கியோவில் இருக்கும் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ளலாம். ஏறத்தாழ 25000 இந்தியர்கள் ஜப்பானில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :
00813 32622391
00813 32622392
00813 32622393
00813 32622394
00813 32622395
00813 32622396
00813 32622397

----------------------------------------------------------

தொடர்பில் இல்லாமல் போனவர்களுக்கான தொடர்புகளை உறுதிபடுத்துவதற்கான சேவையை கூகிள் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. Japan Person Finder என பெயரிடப்பட்டுள்ள அத்தளம் ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழியில் தகவல்களை அளிக்கின்றது. நீங்கள் அளிக்கும் தகவல்கள் உடனடியாக பதிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், தவறான தகவல்களை அளிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


----------------------------------------------------------

Japan Person Finder தளம் தவிர கூகிள் நிறுவனம் Crisis Management தளம் ஒன்றினையும் நிறுவியுள்ளது. அதன் மூலமும் பல தகவல்களை பெற முடியும்


----------------------------------------------

இப்பொழுது ஏற்பட்டுள்ள சுனாமி ஜப்பான் மட்டுமின்றி இன்னும் பல நாடுகளையும் தாக்கும் அபாயம் உள்ளது. அத்தகைய அபாயங்களை விளக்கும் தளம் ஒன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.


---------------

இக்கட்டான தருணத்தில் நேரிட்டிருக்கும் இப்பேரிடர் பற்றிய உண்மையான உறுதிபடுத்தப்பட்ட தகவல்களை பரவச் செய்து பாதிப்பில் இருந்து மக்களைக் காப்போம்.


நண்பர்கள் உங்கள் தளங்களில் இதை பகிர்ந்து கொள்ளலாம்!




முக்கியமான தகவல்கள் கிடைத்ததும் அவை பிற்சேர்க்கைகளாக எங்களின் மற்றொரு தளத்திலும்,  சேர்க்கப்படும். 

22 வாங்கிகட்டி கொண்டது:

suvanappiriyan said...

சிறந்த பயனுள்ள பதிவு. துன்பத்தில் வாழும் ஜப்பானிய சகோதரர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

உமர் | Umar said...

முக்கியமான தகவல்கள் கிடைத்ததும் அவை பிற்சேர்க்கைகளாக எங்கள் தளத்திலும், இங்கும் சேர்க்கப்படும்.

உமர் | Umar said...

இதுவரை வந்திருக்கும் தகவல்களின் படி 100 பேர் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு கப்பல் மூழ்கியுள்ளது. செண்டாய் நகரில் ஒரு சாலையில் மட்டும் 300 உடல்கள் மிதக்கின்றன. ஒரு ரயிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல் வந்துள்ளது

-----
பசிபிக் பெருங்கடல் முழுதுமே சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென் அமெரிக்கா, அமெரிக்காவின் சில பகுதிகள், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், ஹவாய் தீவுகள், ஆஸ்ட்ரேலியா, நியூசிலாந்து, பப்புவா நியு கினியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது வரை ஏற்பட்ட சுனாமிகளிலேயே இதுதான் பெரும் பாதிப்புகளை எற்படுத்தக்கூடியதாய் இருக்கும் என்று கருதப்படுகின்றது

அன்புடன் அருணா said...

மிக அவசியமான பகிர்வு.

N.Parthiban said...

I have shared it in my site too...Good work friend

http://www.parthichezhian.com/2011/03/blog-post_11.html

உமர் | Umar said...

பிற்சேர்க்கைகள்

fukushima daiichi nuclear power station ல் இருக்கும் cooling system வேலை செய்யவில்லை. பெரும் ஆபத்து ஏற்படக்கூடும். அப்பகுதியில் அவசர நிலை பிரகடன் செய்யப்பட்டுள்ளது

-----------------

பிரான்சில் இருக்கும் நண்பர்கள் தகவல் அறிய அழைக்க வேண்டிய எண்: 0207 008 ௦௦௦௦

-----------------

தைவானுக்கும், நியூசிலாந்துக்கும் விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

--------------------

பிலிப்பைன்சுக்கான சுனாமி எச்சரிக்கைத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

--------------------------

பூகம்பத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய பின்னதிர்வுகள் என்று கூறப்படும் After Shocks தொடர்ந்து மிகப்பெரும் அளவிலான தாக்கங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன


--------------------------

ஜப்பானில் தற்பொழுது பின்இரவு நேரமாக இருப்பதாலும், மின்சார இணைப்புகள் பழுதடைந்துள்ளதாலும் மீட்புப் பணிகள் தொய்வடைந்துள்ளன

-----------------------

செங்கோவி said...

மிகவும் பயனுள்ள பதிவு..நன்றி

உமர் | Umar said...

உலகின் பல்வேறு நாடுகளும் ஜப்பானுக்கு உதவ களமிறங்கி விட்டன

அணு உலைக்குத் தேவையான emergency coolant அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது. அணு உலையால் பாதிப்பு ஏற்படும் அபாயம் நீங்கியுள்ளது.

போலந்து, பிரான்ஸ், சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட பல நாடுகள் தீயணைப்பு படைகளையும், மீட்புப் படைகளையும், மருத்துவ குழுக்களையும், இன்னும் பல உதவிகளையும் அனுப்பத் தொடங்கிவிட்டன.

உமர் | Umar said...

அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலும் சுனாமி அலைகள் தாக்கியுள்ளன

cheena (சீனா) said...

பயனுள்ள அரிய தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி வால்

RAVI said...

மரணித்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

செல்வா said...

கண்டிப்பா அண்ணா என்னோட செல்வாகதைகள் ப்ளாக் ல இப்ப ஒரு போஸ்ட் போட போறேன் .. அதுல இதோட இணைப்பினை தருகிறேன்.. மேலும் நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன்

MANO நாஞ்சில் மனோ said...

ஜப்பானின் கோர நிகழ்வு மனதை கலங்க செய்கிறது...

ரஹீம் கஸ்ஸாலி said...

சரியான நேரத்தில் சரியான பதிவு

வால்பையன் said...

மிஸ்டர் ஆரோக்கியசாமி

நீங்க கிறிஸ்தவரா, உங்களுக்கும் சாதி இருக்கா?

உங்களூக்கே இது கேவலமா தெரியலையா?
ஒரே கடவுள் படைத்ததா சொல்றிங்க, பின் எதுக்கு சாதி?

வழக்கம் போல இந்த பின்னூட்டமும் வராது தானே!

இந்த பதிவில் போட்ட பின்னூட்டம், நான் பின்னூட்டம் போட்டா அந்த நல்லவரு ரிலீஸ் பண்றதில்ல, அதுனால இங்கேயும், இதை சொல்லி கொடுத்த டோண்டு அவர் வாழ்நாளில் ஒரு நாள் எக்ஸ்ட்ரா வாழ வாழ்த்துகிறேன்

yasir said...

பேரழிவால் வாடும் ஜப்பான் வாழ் மக்களுக்கு என் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.மிகவும் அவசரமான அவசியமான பதிவைத் தந்த வாலுக்கு நன்றி.

Prabu Krishna said...

பயனுள்ள பதிவு.

Unknown said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

அருள் said...

அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

(இது TIMES கணிப்பு அல்ல)

வால்பையன் said...

http://hayyram.blogspot.com/2011/04/blog-post_21.html

இந்த பதிவில் நான் இட்ட பின்னூட்டம், அங்கே எப்படியும் ரிலீஸ் ஆகாது, அதுனால இங்க!


பொந்துமத கடவுள்கள் எல்லாம் என்னாத்த புடுங்கிகிட்டு இருக்காங்க தல!
எவனாவது வந்து அந்த பெண்ணை காப்பாத்தலாம்ல!

உலகத்துலயே உங்க பொந்து மதம் தான் சிறந்தததுன்னு சொல்றிங்க, ஆனா பொந்துகுள்ள இருந்து ஒன்னும் வந்ததா தெரியலையே!

சிவகுமாரன் said...

நன்றி

சிவகுமாரன் said...

நன்றி

!

Blog Widget by LinkWithin