தம்பிடா!............

எனக்கு ரெண்டு தம்பி, ரெண்டாவது தம்பி வயசு, பிலாலுக்கு. பிலாலும் என் தம்பியும் ஸ்கூலில் ஒரே செட்டு, எனக்கு பழக்கமாகி இருபது வருசம் இருக்கும்னு நினைக்கிறேன், அதே தான், நீங்க நினைக்கிற மாதிரியே அப்ப எனக்கு அஞ்சு வயசு தான்! :-)

பிலால் வீட்டுக்கு ஒரே பையன், அவுங்கப்பா ஏரியா கமலஹாசன், அவரை தெரியாதவர்கள் அங்கே யாருமில்லை, பிலாலுக்கு முதல் அடையாளம் அவுங்கப்பான்னு கூட சொல்லலாம், ஆனா பாருங்க, ஒரு கேஸில் விசாரிக்க கூட்டிகிட்டு போகும் போது, ஏண்டா பையனை பெத்தோம்னு வருத்துப்படுறேன்னு சொல்லிட்டார், நாங்க விடுவோமா! சிகரெட், பிரட்டுன்னு ஸ்டேஷனையே அமர்களப்படுத்திட்டோம்ல!

நான் சின்ன வயசுலயே வேலைக்கு போயிட்டேன்னு உங்களுக்கு தெரியும், இதில ஒற்றுமை என்னான்னா நான் ஒன்பதாவது முழுசாய் முடிச்சேன், பிலால் அதைக்கூட முடிக்கல! ஆனா நாங்க ரெண்டு பேரும் பேசுறதை பார்த்தா இவனுங்க ஃபாரின் ரிட்டனா இருப்பானுங்களோன்னு உங்களுக்கு சந்தேகம் வரும்! நிஜமா தாங்க நாங்க ரெண்டு பேருமே சரளமா ஆங்கிலம் பேசுவோம், ஆனா அது எங்க ரெண்டு பேருக்கு மட்டுமே புரியும்!, உங்களுக்கு அது வேற எதோ மொழியா கூட தெரியலாம், அது உங்க கஷ்டம்!

பொதுவா வீட்டில் என்ன நினைப்பாங்கன்னு பசங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை, பசங்க கெட்டு போறது அவுனுங்க ஃப்ரெண்ட்ஸால தான், அதில் நானோ பிலாலோ விதிவிலக்கல்ல, ஏன்னா நைட்டு மூணு மணிக்கு பிலாலை எழுப்பி சரக்கடிக்க கூட்டிகிட்டு போகும் மிக முக்கியமான ஒரே ஃப்ரெண்டு நான் தான், அன்னைக்கு மட்டுமல்ல, இதுவரைக்குமே நான் கூப்பிட்டு பிலால் வரமாட்டேன்னோ, நான் சொல்லி பிலால் மறுத்தோ நான் பார்த்ததில்ல, ரெண்டு தம்பியோட பிலால் எனக்கு ஒரு தம்பியா பிறந்திருக்கலாம்!, முரண்பாடா வாழ்கையை அனுவிக்கும் வாய்ப்பளிக்கும் வலையில் பிலால் வேற குடும்பத்தில் பிறந்துட்டான் போல!

பிலாலுக்கு சின்ன வயசிலிருந்தே ராயலா வாழத்தான் பிடிக்கும், ஒரே பையன்னு வீட்டில் செல்லம் கொடுத்ததா இருக்கலாம், நல்லா ட்ரெஸ் பண்ணுவான், நான் பிச்சைக்காரன் மாதிரி அவன் வீட்டுக்கு போகும் போதெல்லாம் அவனது சட்டை, பேண்ட் என்னை அலங்கரிக்கும், என்னை போலவே அவனுக்கும் நண்பர்கள் அதிகம், நாங்கள் எப்படி இருந்தாலும் நண்பனை நண்பனாகவே பார்ப்பதில் பிலால் மேல் எனக்கு பிரியம் ஏற்ப்பட பெரிய ஆச்சர்ய காரணம் ஒன்றுமில்லை, அப்துல்லா அண்ணன் சொல்லுவார், என் நம்பிக்கை என் நாலு சுவற்றிக்குள் தான்ணே, அதன் பொருட்டு நான் வெளியே விவாதித்ததில்லைன்னு!, நம்புங்க! பிலால் என்னுடம் மத ரீதியான விவாதத்திற்கு வந்ததேயில்லை, நான் எதாவது சொன்னால் அவனது பதில் ஒரு அழகிய புன்னகையாக தான் இருக்கும்!.

மத்திம வயதில் நாங்கள் கேங்ஸ்டாரா(வெட்டி ஆபிஸர்ன்னு அர்த்தம்) இருக்கும் போதும் பிலால் என் கூடவே இருந்தான், எந்த பிரச்சனைக்கும் முதலில் பேச்சுக்கு நான் தான் போவேன், அதில் உடன்பாடில்லா விட்டால் தான் வீச்சுக்கு வேலை, ஆச்சர்யமாக பிலாலும் பேச்சில் பிரச்சனையை முடிக்கும் என் போலவே இருந்தான், என்னை விட அவனுக்கு நல்ல அரசியல் செல்வாக்கு உண்டு என்பதில் பெருமை தான் எனக்கு! நாம நாசமாய் போனாலும் கூட இருக்கிறவன் நல்லா இருக்கட்டுமே என்ற நினைப்பு தான், ஆனாலும் நட்பு ரீதியில் பிரச்சனை வரும் பொழுது அத்தனை செல்வாக்குகளையும் தூக்கி போட்டு எனக்கு அருண் அண்ணன் தான் வேண்டுமென்று சொல்லும் பொழுது பிலால் நீ என் தம்பிடா என சொல்லத் தோன்றும்! வாய் திறந்து சொல்லாவிட்டாலும் அது அவனுக்கே தெரியும்!

வலையுலகில் மட்டுமல்ல, அதை தாண்டியும் எனது நண்பர்கள் அனைவருக்கும் பிலாலை தெரியும் எனும் பொழ்தே தெரிந்து கொள்ளலாம், பிலால் எந்த அளவு என் வாழ்க்கையில் கூடவே பயணிக்கிறான் என்று!, என் அன்பு தம்பிக்கு பிலாலுக்கு அக்டோபர் 30 பிறந்தநாள், அவனது பிறந்தாளுடன் அவனுடம் கழித்த எனது பழைய நினைவுகளை தோண்டி எடுக்கும் பொழுது கொஞ்சம் சிலிர்க்க தான் செய்கிறது. உங்களது வாழ்த்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

அவனுக்கு எத்தனை வயசுக்கு கேட்டிங்கன்னா, என்னை மாதிரியே அவனுக்கும் கோவம் வரும், அதனால நானே சொல்லிடுறேன், அவனுக்கு 19 வயது!

51 வாங்கிகட்டி கொண்டது:

ரோகிணிசிவா said...

happy bday Bilaal ,
long live your friendship,
heart felt wishes !

a said...

பிலாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

Unmaivirumpi said...

வாழ்துக்கள் பிலால், இப்போ 19 , உங்களோட அடுத்த 18 வது வயசு பிறந்தநாளுக்கு மறக்காம பார்ட்டி கொடுங்க , ஆமா எத்தனை வயசுக்கு அப்புறம் நீங்களும் வாலும் ரிவர்ஸ்லே வயசு எண்ண ஆரம்பிச்சீங்க??

K.MURALI said...

Happy Birthday Bilaal.

Count your life by smiles, not tears.
Count your age by friends, not years.

Dr.Rudhran said...

பிலாலுக்கு என் வாழ்த்துகள்

மேவி... said...

வாழ்த்துக்கள் பிலால் ...

வால் அண்ணே பிலாலை பத்தி அருமையா சொல்லிருக்கீங்க

Unknown said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிலால்.

உமர் | Umar said...

கொஞ்சம் இருய்யா. பழசைக் கிளறிட்டு வர்றேன்.

பரிசல்காரன் said...

ரசனையான நண்பன் அவர். ஒருமுறை திருப்பூர் காதர்பேட்டையில் அவரால் ஓர் உதவி தேவைப்பட்டது. அழைத்தேன். கொஞ்ச நேரத்தில் ஒருவர் வந்து ’பிலால் சொன்னாருங்க’ என்று அவர் கடையைத் திறந்து எனக்கு உதவினார்.உடைகள் எடுத்தபிறகு எனக்காக வந்தீங்களாஎன்று கேட்டேன். ‘ஆமாங்க.. பிலால் சொல்லீட்டாருங்களே’ என்றார் அந்த பாய்.

முக்கிய விஷயம்:

அன்று ரம்ஜான்!

அப்பறம்..

1. உனக்குப் பாராட்டு. நடை ரொம்ப நல்லா இருக்கு.

2. %#^%#^@#@$###^ - இதுவும் உனக்குத் தான்.

நேத்தே கூப்ட்டுச் சொல்றதுக்கென்ன?

Anonymous said...

நட்பும் உடன்பிறப்பின் பாசமும் மாறி மாறி பயணிக்க நீங்க கொடுத்து வச்சவர் தான் இப்படி ஒரு தோழமை கிடைக்க...மெய்ச்சிலிர்க்க செய்யும் இப்படி பட்ட உறவுகள்

உங்கள் இருவரின் அன்பும் நட்பும் இது போலவே என்றும் வாழ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தம்பி பிலாலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

ஞாஞளஙலாழன் said...

> நைட் மூன்று மணிக்கு எழுப்பி......

அடப் பாவி மக்கா..இப்படியா ஒரு பையனைக் கெடுக்கிறது?

பிறந்த நாள் வாழ்த்துகள். (உங்களுக்குச் சொன்னாலென்ன, உங்கள் தம்பிக்குச் சொன்னாலென்ன)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிலாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

சிவராம்குமார் said...

வாழ்த்துக்கள் பிலால்!

Unknown said...

பிலாலுக்கு வாழ்த்துக்கள் !!!

உமர் | Umar said...

அருமை அண்ணன்! அஞ்சா நெஞ்சன்! சிறை பல கண்ட செம்மல்! பெல்ட்டு பிலால் அவர்களுக்கு வாழ்த்துகள்.

தமிழ் அமுதன் said...

வாழ்த்துக்கள் பிலால்!

Unknown said...

பிலால் தம்பி "வால்"த்துக்கள்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பிலாலுக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்! உங்கள் நட்பிற்கும் வாழ்த்துகள்!

ஜில்தண்ணி said...

happy bday bilaal :)

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

புன்னகையை விடாதீங்க :)

RAVI said...
This comment has been removed by the author.
RAVI said...

தம்பிடாவை வாழ்த்துகிறேன்.

Sanjai Gandhi said...

பிலாலுக்கு வாழ்த்துகள்.

rajasundararajan said...

// ரெண்டு தம்பியோட பிலால் எனக்கு ஒரு தம்பியா பிறந்திருக்கலாம்!, முரண்பாடா வாழ்கையை அனுவிக்கும் வாய்ப்பளிக்கும் வலையில் பிலால் வேற குடும்பத்தில் பிறந்துட்டான் போல!//

இந்த வாக்கியங்களில் (எழுத்துப் பிழையோ ஏதோ ஒன்று இருக்கிறது, ஆனால்) சொல்லவந்த உணர்வின் நெகிழ்ச்சி தானே பொங்கி வழிகிறது.

சிறப்பாக வந்திருக்கும் இந்த எழுத்துக்கு பரிசல்காரனின் பின்னூட்டம் ஒரு சாப்பா (முத்திரை என்று சொல்ல வேண்டுமோ?). ஆனால், /எனக்காக வந்தீங்களா என்று கேட்டேன். ‘ஆமாங்க.. பிலால் சொல்லீட்டாருங்களே’ என்றார் அந்த பாய்./ இதில், நண்பர் பிலால் ஒரு தாதாவோ என்று எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது (சும்மாதான், நகைச்சுவைக்காக). வாழ்க பிலால்! அவருடனான உங்கள் நட்பு.

மங்குனி அமைச்சர் said...

வாழ்த்துக்கள் பிலால் , உன்போடோவ மட்டும் வளைச்சு வளைச்சு ஸ்டைல் ஸ்டைல் லா , விதவிதமா பப்ளிஸ் பண்ணுற , தம்பி போடோ ஒன்னு போட்டு கௌரவபடுத்தி இருக்கலாமுல்ல ????

Anonymous said...

happy bday bilal..

அன்பரசன் said...

//எனக்கு பழக்கமாகி இருபது வருசம் இருக்கும்னு நினைக்கிறேன், அதே தான், நீங்க நினைக்கிற மாதிரியே அப்ப எனக்கு அஞ்சு வயசு தான்! :-)//

எப்ப பாரு ஒரே தமாசு.

பிலாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

vasu balaji said...

நல்ல நண்பன் ஒரு பொக்கிஷம். வாழ்த்துகள் பிலாலுக்கு.நன்றி அறிமுகத்திற்கு.:)

எல் கே said...

பிலாலுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. பதிவு நல்ல நடையில் வந்திருக்கு அருண். உங்கள் நட்பு நீடூழி நிற்கட்டும்

பரிசல்காரன் said...

ராஜ சுந்தர்ராஜன் said

//சிறப்பாக வந்திருக்கும் இந்த எழுத்துக்கு பரிசல்காரனின் பின்னூட்டம் ஒரு சாப்பா (முத்திரை என்று சொல்ல வேண்டுமோ?).//.


ஐயா.. என்ன இது! உங்களால் என் பேர் எழுதப்பட்டிருப்பதுதான் முத்திரை குத்த வேண்டிய விஷயம்.

நன்றி!

இராகவன் நைஜிரியா said...

அன்புத் தம்பி பிலாலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

cheena (சீனா) said...

அன்பின் பிலாலுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - அருண் - நண்பர்கள் அமைவதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் . நல்வாழ்த்துகள் அருண் - நட்புடன் சீனா

மரா said...

மாஷா அல்லாஹ்.

Unknown said...

பிலாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

Anonymous said...

பிலாலுக்கு என் வாழ்த்துகள்

க.பாலாசி said...

நண்பர் பிலாலுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

vasu said...

பிலாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

இளைய கவி said...

மச்சி பிறந்த நாள் வாழ்த்துகள் டா

இளைய கவி said...

.

☼ வெயிலான் said...

பிலாலுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க அருண்!!!!

மறத்தமிழன் said...

பிலாலுக்கு,

அக்டோபர் 30 !!!!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

Kumky said...

B'day Wishes my Friend..

அலைகள் பாலா said...

வாழ்த்துக்கள்

அலைகள் பாலா said...

வாழ்த்துக்கள்

KARTHIK said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிலால் :-))

vinu said...

vaalthukkal

செல்வா said...

உங்க தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா ..!!

மோனி said...

அருண் அண்ணா - உங்க தம்பிக்கு இந்த சின்னப்பையனோட லேட் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிடுங்க..

(அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்
இப்போ இருக்குற ஹேர் கட்டிங் ஸ்டைல் - உங்களுக்கு சூப்பரா இருக்குங்கண்ணா)

தமிழ் பொண்ணு said...

belated wishes bilaal.

Unknown said...

Belated wishes to thampi!
i follow U for a long time...this ismy 1st comment.. :)

vinthaimanithan said...

ர்ர்ர்ர்ரொம்ப லேஏஏஏஏஏஏஏட்டா நானும் சொல்லிக்கிறேன்... வாழ்த்துக்கள்

!

Blog Widget by LinkWithin