பங்காளி ராஜனுக்குக் கண்ணாலமுங்கோ!

இதனால் சகல நண்பர்களுக்கும் சொல்ல வருவது என்னவென்றால்!...

கதாநாயகன்: ப்ரொபைல் போட்டோ மஞ்சள் நிறத்தில் இருப்பதால், மஞ்சள் மூஞ்சி ராஜன் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் எங்கள் தளத்தின் பங்காளி ராஜன்
.

கதாநாயகி: கனவுகளை கவிதைகளாக்கி, கனவுகளின் முகவரியில் கவிதை வழங்கும் ரேவதி

முன்கதைச் சுருக்கம்: ஜில்லுன்னு ஒரு காதல் அப்படின்னு சொல்லிக்கிட்டு இந்த ஜாக்கும் ஜில்லும் அடிச்ச கூத்து இருக்குதே, இங்க போயி பாத்துத் தெரிஞ்சிக்கிங்க
.

அடுத்தது?: டும் டும் டும் தான்.   

எங்கே?: காமாட்சி மீனாட்சி மஹால், சுவாமி நாயக்கன் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை. விக்கிமேப்பியாவுல மண்டபத்தை அழகாக் குறிச்சி
 வச்சிருக்காங்க. எப்படி வர்றதுன்னு தெரியணும்னா எக்மோரிலேர்ந்து வர்ற வழியும், சிம்ப்ஸனிலிருந்து வர்ற வழியும் கூகிளாண்டவர் சொல்லுறாரு.
எப்போ?: வர்ற வியாழன் (21/10/2010) காலை 7:30 மணிக்கு 

வரவேற்பு கிடையாதா?: ஏன் இல்லாம? வர்ற புதன் (20/10/2010) மாலை 7 மணிக்கு!

E-invite-1.JPG

இதனால் சகலமானவர்களுக்கு அறிவிப்பது என்னவென்றால், நம் பதிவுலக நண்பர்கள் ராஜனும், ரேவதியும் மணவாழ்வில் இணையும் விழாவிலும், வரவேற்பிலும், பதிவுலக நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.  

வால்பையன்: அவ்வளவுதானா?

கும்மி: வேற என்ன?

வால்பையன்: வாழ்த்து சொல்லலே.

கும்மி: சொல்லிட்டாப் போச்சு. 
கலைஞரும் பாராட்டு விழாக்களும் போல, 
ஜெயலலிதாவும் மிரட்டல் கடிதங்களும் போல,
கேப்டனும் புள்ளி விபரங்களும் போல
மணமக்கள் இணைந்து வாழ 
வாழ்த்துகிறோம்!

வால்பையன்: பதிவுலகும் நட்பும் போல,
கூகிளும் புதுமையும் போல, 
அறிவியலும் ஆராய்ச்சியும் போல 
மணமக்கள் சிறந்து வாழ
வாழ்த்துகிறோம்! 

நட்புடன் அழைப்பது,
வால்பையன் & கும்மி 

----
புதன் மதியத்திலிருந்தே நாங்கள் திருமண மண்டபத்தில்தான் இருப்போம். மாலையில், வரவேற்புக்கு முன்னர்,  ஒரு பதிவர் சந்திப்பை வைத்துக்கொள்வோமா?

----
தொடர்புக்கு: வால்பையன் - 99945 00540

60 வாங்கிகட்டி கொண்டது:

உமர் | Umar said...

பல மேடை கண்ட ராஜன், மணமேடை காண இருக்கின்றார். அனைவரும் வாருங்கள்; வாழ்த்துவோம்.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

தமிழ் அமுதன் said...

வாழ்த்துகள்.!

Ashok D said...

:) வாழ்த்துகள்

எண்ணங்கள் 13189034291840215795 said...

Interesting..:)

Hearty Congrats for the couple...& wish them a "HAPPY MARRIED LIFE "

விஜி said...

வாழ்த்துக்கள் ராஜன் & ரேவதி :)

Anonymous said...

bus fair autofair ellam kodutha blogger meeting vanthu கல்யாணத்துக்கு மட்டும் கிப்ட் கொடுக்கிறேன் சரியா அருண்

Chitra said...

வாழ்த்துக்கள்!

Anonymous said...

வாழ்த்துக்கள் பதிவர்களும் நண்பர்களுமான திருமண தம்பதிகளுக்கு

- யெஸ்.பாலபாரதி said...

எங்கள் வாழ்த்துக்களை சொல்லீடுங்க தல. :)))))

நளினா லாவண்யா said...

வாலு நானும் வரேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

தம்பதிக்கு வாழ்த்துகள் சொல்லிடுங்க தல

Mythees said...

வாழ்த்துகள்.!

கிருஷ்ண மூர்த்தி S said...

சேக்காளி ராஜனுக்கும் செல்வி ரேவதிக்கும் என்னுடைய வாழ்த்துக்களை அப்படியே பாஸ் பண்ணி விடுங்க வால்ஸ்!

சந்தர்ப்பம் அமையும் பொது நேரில் பார்த்து வாழ்த்திவிட்டு, நல்லாக் கும்மலாம்!

:-))))

தர்ஷன் said...

வாழ்த்துக்கள் ராஜன்

Unknown said...

வாழ்த்துகள்.!

எஸ்.கே said...

இனிய திருமண வாழ்த்துக்கள்!

கபீஷ் said...

வாழ்த்துகள் ராஜன் & ரேவதி

Unknown said...

பங்காளி ராஜனுக்கு தியாகி பென்சன்
கிடைக்குமா # டவுட்டு

சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்த்துக்கள் ராஜன் & ரேவதி.

KARTHIK said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள் :-))

Menaga Sathia said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!!

ஈரோடு கதிர் said...

மணமக்களுக்கும், பதிவர் சந்திப்பிற்கும் வாழ்த்துக்கள்

Anonymous said...

Hearty Congratulations Rajan and Revathi !!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

வாழ்த்துகள்.!

தமிழ் பொண்ணு said...

மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

தமிழ் பொண்ணு said...

ஆமா தல உங்கட்ட ஒன்னு கேக்கணும்.எனக்கே தெரியாம என் பேரு ரொம்ப அடி பட்டு இருக்கு போல.

செல்வா said...

அவருக்கு எனது வாழ்த்துக்கள் ..!!

கோவி.கண்ணன் said...

வாழ்த்துகள்.

பெட்ரோமாக்ஸ் கடையை மூடிடுவாரா ?

Radhakrishnan said...

ராஜன் அவர்களுக்கும், ரேவதி அவர்களுக்கும் இனிய வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றி தல.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்

நாடோடி said...

வாழ்த்துக்க‌ள்..

Unknown said...

நேரில் கலந்து கொண்டு வாழ்த்துகிறேன் தல ...

மங்குனி அமைச்சர் said...

வாழ்த்துக்கள் ராஜன் சார்

மங்குனி அமைச்சர் said...

ஊர்ல இருக்குரவனைஎல்லாம் நக்கல் பண்ணி கலாயிச்சுகிட்டு இருந்தெல்ல இனிமே உனக்கு இருக்கு ??? எங்க இப்ப சலம்பு பார்க்கலாம் .... ரெடி ஸ்டார்ட் மூசிக் (எதுக்கும் அவுங்க வீட்டுக்காரம்மா நம்பர் வாங்கி வைகப்பா போட்டு குடுத்திடுவோம் )

Indian said...

மணமக்களுக்கு வாழ்த்துகள்!!

ராஜ நடராஜன் said...

மனமுவந்த இனிய வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் வாலு /r

வாலின் பங்காளி ராஜனுக்கும் ரேவதிக்கும் நடக்கும் திருமணம் - சுற்றம் சூழ - நட்புகளின் மத்தியில் - நடைபெற நல்வாழ்த்துகள். மணமக்கள் எல்லா ந்லனும் பெற்று - நீண்ட ஆயுளுடனும் - நிறைந்த செல்வத்துடனும் வாழ பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

vasu balaji said...

ராஜனுக்கு வாழ்த்துகள்.

இனியா said...

best wishes to Rajan and Revathi

ப்ரியமுடன் வசந்த் said...

பதிவுலக ஜோடிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

Unknown said...

வாழ்த்துக்கள் ராஜன் & ரேவதி

நீச்சல்காரன் said...

ரெண்டு பேரும் பதிவர்களா! அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Unknown said...

mee the 44th...

valga valga....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ராஜனுக்கும், ரேவதிக்கும்..என்னுடைய வாழ்த்துக்கள்...

Unknown said...

மணமக்களுக்கு வாழ்த்துகள்!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மணமக்களுக்குத் திருமண வாழ்த்துக்கள்!

கருடன் said...

மணமக்களுக்குத் திருமண வாழ்த்துக்கள்!

வலைவாசி said...

வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்... (ஹி ஹி ஹி...)

கண்ணகி said...

வாழ்த்துக்கள்...

மோனி said...

என்னத்த சொல்றது..?
ரெண்டு மக்காவும் நல்லா இருக்கட்டும்..

(ரொம்பவும் முயற்சி பண்ணுனேன் வால்.
சூழ்நிலை வர முடியலை)

பங்காளிய ரொம்பவும் கேட்டதா சொல்லுங்க..

Thekkikattan|தெகா said...

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!

சிவக்குமரன் said...

ஹெர்பாலயாஸ் ராடி சேஃப் நிறுவனத்தின் திண்டிவனம்- விநியோகஸ்தருக்கு விற்பனை/சந்தைப் படுத்துதல் துறையில் ஆட்கள் தேவை.

http://www.herbalayasradisafe.com/


தகுதி:

ஏதேனும் ஒரு பட்ட படிப்பு.
இரு சக்கர வாகனம்(செல்லத்தக்க ஓட்டுனர் உரிமத்துடன்).
மொபைல் அல்லது கணிணி உதிரிப் பொருள்கள் சார்ந்த விற்பனை முன் அனுபவம்.

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை சேர்ந்திருத்தல் நலம்.

கிராமப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை.

விற்பனைத் துறையில் விருப்பமுள்ள பெண்களுக்கு முன்னுரிமை.


சம்பளம் தகுதியைப் பொறுத்து.(குறைந்தது ஐந்தாயிரத்திலிருந்து...... )


விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 31க்குள் தங்களது முழுவிவரக்குறிப்பினை shivanss@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

மெயில் அனுப்பும் போது subject:ல் Resume-Radisafe என்று மறக்காமல் குறிப்பிடவும்.

மறத்தமிழன் said...

வால்ஸ்,

வாழ்த்துகள்...

சந்திப்பொம் சென்னையில்...


அன்புடன்,
மறத்தமிழன்.

சுபத்ரா said...

Hearty Congrats to Revathi-Rajan

pichaikaaran said...

best wishes..
wish them a happy married life

ஜோதிஜி said...

இனிய வாழ்த்துக்கள்

தமிழ் பொண்ணு said...

தல புதுசா கடை போட்டு இருக்கேன்.நேரம் இருக்குறப படிச்சு எப்படி இருக்குனு சொல்லுங்க.

பத்மா said...

ராஜனுக்கும் ரேவதிக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள்

paul said...
This comment has been removed by the author.

!

Blog Widget by LinkWithin