நான் ஏன் நாத்திகனானேன்! - மறுஆய்வு

கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை முட்டாள்கள் என்றோ, வாழ தகுதியற்றவர்கள் என்றோ நான் எங்கேயும் எப்போதும் சொன்னதில்லை, நான் ஏற்கனவே பொதுபுத்தி பதிவில் சொன்னது போல் “உங்களை சுயமைதுனம் செய்யக்கூடாது” என சொல்ல எனக்கு எப்படி உரிமை இல்லையோ, அதே போல் கடவுள் நம்பிக்கை கொள்ளக்கூடாது என சொல்லவும் உரிமை இல்லை!

ஒரு செயலின் விளைவை பொறுத்தே அது சமூகத்திற்கு நன்மை அளிப்பதா அல்லது தீமை அளிப்பதா என தீர்மானிக்கப்படுகிறது, அந்தளவில் கடவுளை மறுப்பதோ அல்லது ஏற்றுக்கொள்ளுதலோ குற்றம் அல்ல, பொருள் சார்ந்த சமூகத்திலிருந்து அறிவு சார்ந்த சமூகத்திற்கு மாறிய நாகரீக காலம் முதல் நம்பிக்கை, அதன் செயல் மற்றும் விளைவு அனைத்தும் விவாதத்துக்குள்ளாக்கப்படுகிறது, அவையனைத்தும் எண்களின் முடிவைப்போல முடிவிலியாக தான் இழுத்து கொண்டிருக்கிறது என்பது உண்மை!

சிறிய உதாரணத்துடம் சொல்ல முயல்கிறேன் -

ஒரு அறை, முழுவதும் இருள் சூழ்ந்து இருக்கிறது, நம்பிக்கையாளன் அதன் உள்ளே உயரிய எதோ ஒன்று இருக்கிறது என்கிறான், அதனை கடவுளாகவும் உருவகப்படுத்திக் கொள்ளலாம், மறுப்பாளான்(இல்லை என்ற நம்பிக்கை, நம்பிக்கையே இல்லை என்று பொருள் தராது, ஆகையால் அவநம்பிக்கையாளன் என்ற சொல்லாடலை தவிர்க்கிறேன்), அவை வெறும் இருள் மட்டுமே அல்லது நீ நினைப்பது போல் அது ஒன்றும் உயரிய பொருள் அல்ல அதை தெளிவுறாமல் குருட்டு(இருட்டு) நம்பிக்கை கொள்ளாதே என்கிறான்! இவையே கடவுள் நம்பிக்கையாளனுக்கும், கடவுள் மறுப்பாளனுக்கும் உள்ள ஆரம்ப விவாதப்புள்ளி.

நம்பிக்கையாளர்களின் மிக சொற்பமே அதை ஆராய்ந்து தெளிவுற விரும்புகிறார்கள், அவ்வாறு ஆராய்ந்தவர்களும் கடவுளும் இல்லை, கண்றாவியும் இல்லை என புதியதோர் ஆன்மீகபாதையை காட்டி சென்று விடுகிறார்கள், பின்னால் வருபவர்கள் அதை வைத்து கல்லா கட்டுவது வேறு விசயம்! கடவுள் இல்லை என்று நம்பிக்கையாளனே தெளிவுற்றாலும் அவனால் தீர்க்கமாக வெளியே சொல்ல முடிவதில்லை, சமூகம் என்னும் விளக்கமாறு அதன் பயன்பாட்டை பூர்த்தியடைய செய்ய மேல் முனையில் குஞ்சத்தால் கட்டப்பட்டிருக்க வேண்டும். குழுமமாக செயல்படுத்தல், தனிமனித ஒழுக்கம், பிறப்பின் பயனை மெய்பித்துவிட்டு செல்லுதல் போன்ற சமூக காரணிகளை கட்டுக்குள் வைத்திருக்க கடவுள்/மதம் என்ற குஞ்சம் தேவைப்படுகிறது அல்லது பட்டது!

ஆனால் இங்கே நடப்பது என்ன? விள்க்கமாறு முழுவதும் குஞ்சம் கட்டப்பட்டிருக்கிறது, கடவுளின்/மதத்தை தேவை மறந்து என் கடவுள் பெருசு, என் மதம் சிறந்தது என்ற ஈகோ ஆரம்பித்து விட்டது, எல்லா முனைகளிம் குஞ்சம் கட்டபட்ட விளக்கமாறு இன்று தடித்த ஆயுதமாக காட்சியளிக்கிறது, என் மதம் அமைதியே உருவானது, அது அன்பை மட்டுமே போதிக்கிறது என்பவனை, இவன் அந்த மதத்தின் சிறப்பான பகுதிகளை மட்டும் பார்த்து பேசுகிறான் என நேர்மறையாக சிந்தித்தாலும் அவன் சொன்ன மதத்தின் செயல்பாடுகள் ஒருவேளை முதுகுபுறம் ஆயுதம் வைத்திருப்பானோ என எதிர்மறையாக சிந்திக்க் வைக்கிறது.மதம், சடங்குகள் அதன் பயன்கள் இப்படியான இத்யாதிகளை ஒதுக்கி வைத்து ஏன் கடவுள், எப்படி கடவுள் என சிந்திக்க தொடங்கினாலே போதுமானது, நான் ஏற்கனவே சொன்னது போல் இருட்டறைக்குள் ஆராய்ந்து தெளிவுற நம்பிக்கையாளர்களுக்கு தைரியமோ அல்லது ஆர்வமோ இல்லை. முதலில் தோல்வி பயம் இரண்டாவது இத்தனை பேர் சொல்றாங்க, அது எப்படி இல்லாம இருக்கும் என்ற பொதுபுத்தி!


கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், இருட்டறைக்குள் எதோ உள்ளது என்ற நம்பிக்கையை, அதன் மறுப்பாளன் விஞ்ஞானம், தத்துவ ஆராய்ச்சி, உளவியல் பகுப்பு என பல வழிகளில் வெளிச்சத்தை உருவாக்கி அறையில் இருளை போக்கி கொண்டிருக்கிறான், இதெல்லாம் எல்லாம் வல்ல இறைவனால் மட்டுமே முடியும் என சொல்லப்பட்ட பல செயல்கள் மனிதனால் உருவாக்கப்பட்டு விட்டது, கடந்த 500 வருடங்கள் அறிவு சார்ந்த சமூகம் அதன் வீச்சை முழுவதுமாக செயல்படுத்த தொடங்கிவிட்டது, ஆனாலும் பிற்போக்கு பழமைவாதிகளால் உண்மையை ஏற்று கொள்ள முடியவில்லை.

இந்த விவாதம் சண்டைக்காக அல்ல, நீங்கள் எனது எதிரியோ விரோதியோ அல்ல. கடவுளை நீங்களும் பார்த்ததில்லை, நானும் பார்த்ததில்லை. ஆனால் உங்களை விட ஆர்வமாக இருட்டறைக்குள் வெளிச்சம் கொடுக்கும் வேலையை கடவுள் மறுப்பாளனே செய்து கொண்டிருக்கிறான் என்பதை நீங்களே அறிவீர்கள், நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான், வாருங்கள் இருவரும் தேடுவோம், விவாததின் தெளிவில் அறிவு சுடர் ஏற்றி இருளை போக்குவோம்!
அங்கே நீங்கள் சொன்னது போல் உயரிய பொருள் இருந்தால் அப்போதிலிருந்து நானும் கடவுள் நம்பிக்கையாளன், அது வரை நான் கடவுள் மறுப்பாளனாகவே இருக்க விரும்புகிறேன்!

இருட்டுக்கு டார்ச் அடிக்கும் முயற்சியில்!..........................

114 வாங்கிகட்டி கொண்டது:

Mythees said...

இருட்டுக்கு டார்ச் அடிக்கும் முயற்சியில்...


ஹா ஹா ஹா ஹா

Mythees said...

நான்தான் மொதோ வெட்டா ...

dheva said...

//அங்கே நீங்கள் சொன்னது போல் உயரிய பொருள் இருந்தால் அப்போதிலிருந்து நானும் கடவுள் நம்பிக்கையாளன், அது வரை நான் கடவுள் மறுப்பாளனாகவே இருக்க விரும்புகிறேன்//

செம தல...@ இதுக்கு மேல தெளிவா ஒரு மனுசன் சொல்ல முடியாது. மூட நம்பிக்கையில் உளன்று கற்பனையாய் நம்புவதை காட்டிலும் வாருங்கள் தேடுவோம்....இருந்தால் இருக்கு...இல்லேன்னா இல்லே....

சூப்பர் வாலு....! எனக்கு புரியுது....இந்த கட்டுரை பார்த்துட்டு படிச்சு ஆழமா வெளங்காமா டென்சன் ஆகப் போறவங்க எத்தனை பேரோ தெரியல.....

தூள்!

Ashok D said...

GOD IS NOW HERE

Mythees said...

//D.R.Ashok said...
GOD IS NOW HERE//

எங்கே ...?

Ashok D said...

QUESTIONS WHY?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வாவ்....

ஹரிஸ் Harish said...

//நம்பிக்கையாளர்களின் மிக சொற்பமே அதை ஆராய்ந்து தெளிவுற விரும்புகிறார்கள்...//

கரெக்ட் பாஸ்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எதோ சொல்றீங்கன்னு தெரியுது. என்னன்னுதான் புரியல!!

dheva said...

GOD IS NOWHERE becuse GOD IS NOW HERE!

Mythees said...

//GOD IS NOWHERE becuse GOD IS NOW HERE!//

hahahaha...

தமிழ் அமுதன் said...

கோவிலுக்கு செல்வேன் ...! சபரிமலைக்கு செல்கிறேன்..!
மனசாட்சியுடன் உண்மையை சொல்ல வேண்டுமெனில் எங்குமே நான் இதுவரை இறைவனை உணர்ந்தது இல்லை...!

கோடிகணக்கான மக்களின் நம்பிக்கையையும் மதிக்க வேண்டி இருக்கிறது..!

இறைவன் இருப்பது உனக்குள்ளே..!
என சொல்லுதை ஏற்று கொள்ள மனம் சம்மதிக்கிறது..!

தேடல் நிற்கவில்லை..!


இளவயதில் முரட்டு நாத்திகராய் இருந்து முதுமையில் ஆத்திகராய்
மாறியவர்களையும் பார்த்து இருக்கிறேன்..!

சிறிது காலம் பொறுமை காக்கலாம் என்ற எண்ணத்திலேயே தேடல் தொடர்கிறது...!

மர்மயோகி said...

//என் மதம் சிறந்தது என்ற ஈகோ ஆரம்பித்து விட்டது, எல்லா முனைகளிம் குஞ்சம் கட்டபட்ட விளக்கமாறு இன்று தடித்த ஆயுதமாக காட்சியளிக்கிறது, என் மதம் அமைதியே உருவானது, அது அன்பை மட்டுமே போதிக்கிறது என்பவனை, இவன் அந்த மதத்தின் சிறப்பான பகுதிகளை மட்டும் பார்த்து பேசுகிறான் என நேர்மறையாக சிந்தித்தாலும் அவன் சொன்ன மதத்தின் செயல்பாடுகள் ஒருவேளை முதுகுபுறம் ஆயுதம் வைத்திருப்பானோ என எதிர்மறையாக சிந்திக்க் வைக்கிறது.//

இந்த குதர்கத்திற்கு என்ன பெயர்?

நாம் பிறந்ததற்கு அர்த்தம் இருக்கிறது என நினைப்பவன் இறை நம்பிக்கையாளன்
ஏதோ பிறந்தோம் ஏதோ வாழ்ந்தோம் என்று அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்பவன் இறை மறுப்பாளன்.

சிவராம்குமார் said...

\\GOD IS NOWHERE becuse GOD IS NOW HERE!//

இது அரை என் 305ல் கடவுள் படத்தில நம்ம சிம்பு தேவனோட கைவண்ணம்!

ஆனாலும் இங்கே கரகடா டச் கொடுத்ததற்கு நன்றி!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

/// இது அரை என் 305ல் கடவுள் படத்தில நம்ம சிம்பு தேவனோட கைவண்ணம்! ////

சிவா ,
இது விவேகானந்தர் சொன்னது ......,

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

அருண்
Excellent ........,

மோனி said...

நான் ஏன் மட்டையானேன்?????
மறு ஆய்வு - நாளை ...

suneel krishnan said...

அன்புள்ள அருண்
கடவுளின் தேவை இன்றைய சமூகத்திற்கு இருக்கிறதா ? ஆம் இருக்கிறது , எளிய மனிதன் தனக்கு புரியாத ,தன செயல்களுக்கு அப்பாற்பட்ட அனைத்து செயல்களுக்கும் ,விளைவுகளுக்கும் கடவுள் சாயம் பூசுகிறான் , அவனுக்கு கடவுள் அவனுக்கு அவனது அன்றாட வாழ்வில் ஒரு இளைப்பாரலை தருகிறான் , நமது சோகங்களை துக்கங்களை சொல்லி அழ ஒரு தோள் கடவுள் .நான் தீவிர இறை ஆதரவாளராக இருந்து பின்பு மறுப்பாளராக ஆகி இப்போது agnostic என்பதே எனக்கு பொருந்தும் , இதுவே சரியான பாதையாக எனக்கு படுகிறது ஏனெனில் நாத்திகனோ , ஆத்திகனோ முன் முடிவுகளை கொண்டுள்ளதால் பார்வை தெளிவு இல்லாமல் போகிறது , இந்த ரெண்டும்கெட்டான் பாதை திறந்த மனதுடன் இரண்டையும் அணுக முயல்கிறது .
நீங்கள் சொல்லுவது போல் , கடவுள் இருப்பை விட இப்போது முக்கிய பிரச்சனை தன் கடவுளை நிறுவுவது என்பது தான் .மதம் மனிதனை சிறை படுத்துகிறதோ என்று எண்ண தோன்றுகிறது.இப்போதைக்கு கடவுள் இருக்கட்டும் மதம் வேண்டாம் என்று தான் எண்ணம் வருகிறது .

மோனி said...

ஆகவே,
அதனால்,
அப்படியாக
பெரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும்
உரிய பதிவுலக அன்பர்களே, நண்பர்களே, இளைஞர்களே, இளநிகளே சாரி இளைஞிகளே உங்களுக்கெல்லாம் ஒரு செய்தியாக - ஒரு உண்மையாக - ஒரு மாபெரும் கருத்தான

கோழி கூவலுக்கும்
விடியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற ஒரு பயங்கரமான விஷயத்தை சொல்லிக் கொண்டு அப்பீட் ஆகிறேன்.

(நீ ஏண்டா மோனி இப்படி ஆயிட்டே???)

சரி சரி தல
நீ உதுற சங்க ஊதி வை
விடியுறப்போ விடியட்டும்..
:-)

மோனி said...

@ dr sunil krishnan

agnostic -
did you mean the doubter or non-believer??

THOPPITHOPPI said...

பயப்படுதல் அல்லது பயங்காட்டுதல்
********************************
தொடர்ச்சி எங்கே?

suneel krishnan said...

moni
doubter

தருமி said...

dr suneel krishnan

//இப்போதைக்கு கடவுள் இருக்கட்டும் மதம் வேண்டாம் என்று தான் எண்ணம் வருகிறது .//

mutually exclusive ...

எந்தக் கடவுள் வேணும்; எந்த மதம் வேண்டாம்?

suneel krishnan said...

தருமி அய்யா
கடவுள் எளிய மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் எந்த வடிவமாக இருந்தாலும் சரி.மதம் - எல்லாமே தான் , ஆனால் மதத்தின் வழியாக கடவுளின் அறிமுகம் என்பதால் அதை உதறுவதும் கடினம் தான் .கொஞ்சம் கொழப்பம் தான் !

எண்ணங்கள் 13189034291840215795 said...

நல்ல முறையில் எழுதப்பட்டுள்ளதுக்கு முதலில் பாராட்டுகள்..

நிறைய விவாதிக்கவேண்டியிருக்கு..

நேரமிருக்கும்போது வருகிறேன்..இப்போதைக்கு ,

1. //விள்க்கமாறு முழுவதும் குஞ்சம் கட்டப்பட்டிருக்கிறது, கடவுளின்/மதத்தை தேவை மறந்து என் கடவுள் பெருசு, என் மதம் சிறந்தது என்ற ஈகோ ஆரம்பித்து விட்டது, எல்லா முனைகளிம் குஞ்சம் கட்டபட்ட விளக்கமாறு இன்று தடித்த ஆயுதமாக காட்சியளிக்கிறது//

இது உங்கள் பார்வை மட்டுமே..

நான் கோவிலுக்கு செல்வது பைபிள் படிக்கவோ கிறுஸ்துமேலுள்ள பயத்தினாலோ அல்ல.. அங்கே செய்யப்படும் சேவையில் .001 % என்னையும் ஈடுபடுத்திக்கொள்ளும் முயற்சி மட்டுமே.. அது மட்டுமே மன அமைதி தருவதாய் இருக்கலாம்..

அடுத்து ஆலயம் ஒரு ஒழுங்கு சொல்லி தரும் இடம் குழந்தைகளுக்கு..


//குழுமமாக செயல்படுத்தல், தனிமனித ஒழுக்கம், பிறப்பின் பயனை மெய்பித்துவிட்டு செல்லுதல் போன்ற சமூக காரணிகளை கட்டுக்குள் வைத்திருக்க கடவுள்/மதம் என்ற குஞ்சம் தேவைப்படுகிறது //

இதுதான் நான் இன்னும் காண்பது .. பல இடங்களில்...

எண்ணங்கள் 13189034291840215795 said...

//கடந்த 500 வருடங்கள் அறிவு சார்ந்த சமூகம் அதன் வீச்சை முழுவதுமாக செயல்படுத்த தொடங்கிவிட்டது, ஆனாலும் பிற்போக்கு பழமைவாதிகளால் உண்மையை ஏற்று கொள்ள முடியவில்லை//

ஏற்க முடியவில்லை என்பதை விட , மனதுள் நாத்திகனாக இருப்பவரும் கூட ஒரு நல்ல மதவாதியாக மக்களை ஏன் நல்வழிப்படுத்த மதத்தை உப்யோகப்படுத்த கூடாது..?..

பைபிளோ, கீதையோ , குரானோ ஒரு திருக்குறள் போல் மதிக்கப்பட்டு அதுக்கு ஒரு குழுமம் அமைத்து நற்செயல்கள் செய்து மக்கள் நலம் வாழ ஏன் மதம்/கடவுள் என்ற கற்பனை உபயோகப்படுத்தப்படக்கூடாது?.. நல்ல பலன் கிடைக்கும் பட்சத்தில்..

" வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்."

ஏற்கனவே ஒரு அமைப்பு வெற்றி கரமாக நடந்து வரும்போது அதை ஏன் தடை செய்யணும் என்ற எண்ணம் இருக்கலாம் அல்லவா?..

நீங்க நினைப்பது போல் கடவுள் உண்டா என ஒவ்வொரு மனிதனின் மனதிலும் தோன்றாமல் இருக்குமா?.. நிச்சயமாக தோன்றும்..

இருப்பினும் விடை கண்டுபிடிக்க முடியா ஒன்று என்றும், மதம் என்ற குழுமத்தில் அவனுக்கு கிடைக்கும் நல்ல விஷயங்களை அவன் ஒதுக்க விரும்பாததாலும் இருக்கலாம்..

எல்லாருமே நாத்திகமாக மாறணும் என்றால் இது போலொறு மாற்று குழுமம் இதே மரியாதை , நன்மைகளோடு இருக்கும் பட்சத்தில் அனேகர் நாத்திகராக மாற விரும்பிடலாம்..

ஆத்திகனாய் இருப்பவர் சிலர் மனதுள் நாத்திகர் தான் .:)

பிழைப்புவாதம் என்று எடுத்துக்கொண்டாலும் , இதுவே நிதர்சனம்...

கிறுக்கன் said...

இறை நம்பிக்கை மனிதனை மனிதநேயம் அற்றதாக மாற்றுகிறது.
"கையேந்தி, கதறி, காலை பிடித்தும் விழாத பிச்சை, உள்ளே கையின்றி, காலின்றி, உயிரின்றி கிடக்கும்
உலோகத்தில் (உண்டியல்) விழுந்தது".

Riyas said...

வால் கடவுள் இருக்கா இல்லயா என்ற குழப்பத்தைவிட எந்த கடவுளை ஏற்றுக்கொள்வது.. என்ற குழப்பம்தான் உங்களிடம் அதிகம் கானப்படுவதாக இந்த கட்டுரை உணர்த்துகிறது.. எங்களிடம் தெளிவான ஆதாரம் இருக்கிறது அதையே நீங்கள் கட்டுக்கதை எங்கிறீர்கள்..அதன்பிறகு எப்படி எங்கள் மதத்தை உங்களுக்கு புரியவைப்து..

எண்ணங்கள் 13189034291840215795 said...

Atheist வேற Agnostic வேற..

விரிவாக அப்புரம்..

பொன்கார்த்திக் said...

@ மர்மயோகி
//நாம் பிறந்ததற்கு அர்த்தம் இருக்கிறது என நினைப்பவன் இறை நம்பிக்கையாளன்
ஏதோ பிறந்தோம் ஏதோ வாழ்ந்தோம் என்று அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்பவன் இறை மறுப்பாளன்.//

என்ன மர்மயோகி இப்படி சொல்லிடீங்க? அப்பா உங்க கணக்கு படி பார்த்த

நிந்தியா மாதிரி பிறந்ததற்கு அர்த்தம் இருக்குதுன்னு நினைக்குறார்?
நம்ம கமல்ஹாசன், பெரியார் எல்லாம் ஏதோ பிறந்தோம் ஏதோ வாழ்ந்தோம் அப்படின்னு வாழ்ந்தாங்களா? இல்ல இன்னும் வாழ்ந்துட்டு இருக்கங்களா?

பொன்கார்த்திக் said...

சகா மனிதனை ஒழுங்கு படுத்த, அவன் வாழ்க்கையை நெறிப்படுத்த நமக்கு மேல் ஒரு சக்தி அது தான் கடவுள் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது..

இதில் எங்கிருந்து சாதி, சமயம்.. நீயா நானா போன்ற கருத்துக்கள் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை..

ஆனால் நீங்க சொன்னது போல் கடவுள் பெயரில் சண்டை சச்சரவு இதெல்லாம் தேவையற்றது..

உங்களை வழிமொழிகிறேன் ..:)

எண்ணங்கள் 13189034291840215795 said...

இறை நம்பிக்கை மனிதனை மனிதநேயம் அற்றதாக மாற்றுகிறது.

-

ஏற்பில்லை.
-------


"கையேந்தி, கதறி, காலை பிடித்தும் விழாத பிச்சை, உள்ளே கையின்றி, காலின்றி, உயிரின்றி கிடக்கும்
உலோகத்தில் (உண்டியல்) விழுந்தது".

-----------

உண்டியல் பணம் உண்டியலுக்கா.?

கிறுக்கன் said...

@payanamum ennangalum- சரி அந்த பணம் எங்கே செல்கிறது என்று உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். அப்பணத்தை வைத்து மேலும் கோவிலை அழகு படுத்துவர். மிச்சத்தை சொல்ல வேண்டியது இல்லை. ஏப்பம் தான்.

கிறுக்கன் said...

கோவிலால் ஏற்ப்பட்ட இரண்டு முக்கிய பாதகங்கள் . பொது மக்களை பிச்சைக்காரர்களாக ஆக்கியது. இரண்டு வேலை செய்யாமல் ஒரே இடத்தில இருந்து கொண்டு கதைகள் அளந்து ஒரு குறிப்பிட்ட இனத்தவர் கல்லா கட்டுவது.

பொன்கார்த்திக் said...

@ பயணமும் எண்ணங்களும்
//உண்டியல் பணம் உண்டியலுக்கா.?//

உண்டியல் பணம் உண்டியலுக்கா இல்லையா என்பது தெரியாது? கேட்டல் நாங்களும் வரி செலுத்துகிறோம்.. எங்களிடமும் ஆடிட்டர் உள்ளார் கணக்குகள் சரியாக உள்ளது என்று பினாத்துவார்..

ஆனால் கோவிலுக்கு உள்ளும் வெளியும் உள்ள பிச்சைக்காரர்களை யார் அனுமதிக்கின்றனர்??

மக்களை சோம்பரிகலாக்கும் முயற்சிதானே? கேட்டால் தர்மம் தலைகாக்கும்?

பொன்கார்த்திக் said...

@ பயணமும் எண்ணங்களும்
கோவில் மடம் என்ற பெயரில் பலர் செய்த கூத்துகள் வெளிவந்தன? அப்போ என்ன பதில் சொல்ல முடிந்தது நம்மால்? நம்மை போன்ற மக்கள் தானே அவர்களையும் ஊக்குவித்தோம்? அது மட்டுமா ஊக்குவித்துகொண்டிருக்கிறோம்? கேட்டால் சிலர் நாங்கள் அப்படி அல்ல நாங்கள் நல்லவர்கள் என பிதட்ட்ருவர்? தப்பு செய்பவன் மட்டும் குற்றவாளி அல்ல நம்மைப்போல் அதற்கு துனைபோவரும் கூட..

ப.கந்தசாமி said...

மதத்தையும் ஆன்மீகவாதிகளையும் விட்டு விடுவோம். சாதாரண மனிதனாக விவாதிப்போம்.

முதலில் கடவுள் என்று யாரை அல்லது எதைக் குறிப்பிடுகிறோம்? இங்கிருந்து ஆரம்பித்தால் விவாதம் ஒரு குறிக்கோளை நோக்கிப் போகலாம் என்று நான் நினைக்கிறேன்.

பொன்கார்த்திக் said...

@Riyas
//எங்களிடம் தெளிவான ஆதாரம் இருக்கிறது//
தெளிவான ஆதாரம் அருமை? நீங்களே கூறுங்கள்? யார் கடவுள்? முருகன்,அல்லா,ஏசு இவர்களா? நானும் ஒரு ஆத்திகனே. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் எனக்கு இந்த பாகுபாடு கிடையாது.. ஒரே கடவுள்(நமக்கு அப்பர் பட்ட ஒரு சக்தி) ஒரே குலம் (மனிதன்).

ரஹீம் கஸ்ஸாலி said...

நான் ஒரு ஆத்திகன். ஆத்திகன் என்பதால் அனைத்தையும் ஏற்றுக்கொள்பவன் என்று அர்த்தமல்ல....மூடநம்பிக்கைகளை அடியோடு வெறுப்பவன். எல்லா மூடநம்பிக்கையும் மதம் சார்ந்துதான் ஆரம்பிக்கிறது. ஆனால் எது மதநம்பிக்கை, எது மூடநம்பிக்கை என்று விளங்கிக்கொண்டாலே பாதி தெளிவு கிடைத்துவிடும். நீங்கள் நாத்திக கண்ணாடி போட்டுக்கொண்டு இந்த உலகை பார்ப்பதால் உங்களுக்கு எல்லாமே மூடநம்பிக்கையாகவே தெரிகிறது, மதநம்பிக்கை உட்பட. எல்லா மதங்களும் மனிதனை புனிதானக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறது. ஆனால், ஆனால் இங்கே மதம் பிடித்த காரணத்தினால் மனிதனை மனிதனாக பார்ப்பதே அரிதாகிவிட்டது. அது கடவுளின் தவறல்ல....மனித தவறு. அதற்காக நீங்கள் ஏன் கடவுளை நிந்திக்கிறீர்கள். அவர்களின் நம்பிக்கையை விமர்சிப்பது தவறுதானே? நீங்கள் ஏன் கடவுளை மனிதர்களில் தேடுகிறீர்கள்? அப்படி தேடுவதால்தான் மனிதன் செய்யும் தவறுகளுக்கு கடவுள் பலிகடா ஆகிவிடுகிறார். உங்கள் நம்பிக்கைகளை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள். அடுத்தவர் மேல் திணிக்க நினைப்பதால்தான் விவாதங்களும் விதண்ட வாதங்களும் வளர்கிறது. சமீபத்தில் நடந்த ராஜன் திருமணம் கூட சடங்கு சம்பிரதாயங்களுடன் நடந்தது. அப்போது மணமகளின் பெற்றோர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மணமகன் உட்பட அனைவருமே உங்கள் கொள்கைகளை சற்று தளர்த்தி இருந்தீர்கள். மணமகளின் பெற்றோரை போலவே எல்லோருக்கும் உணர்வுகள் இருக்கும் என்பதை உணர்ந்து நடந்து கொண்டாலே பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.

பொன்கார்த்திக் said...

@DrPKandaswamyPhD

என்னை பொறுத்த வரை நமக்கு மேல் ஒரு சக்தி. பசியில் இருக்கும் குழந்தையை பொறுத்த வரை பால் குடுக்கும் தாய் தான் கடவுள்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

சமீபத்தில் நடந்த ராஜன் திருமணம் கூட சடங்கு சம்பிரதாயங்களுடன் நடந்தது.
-----------


இதை விவாதத்தில் தவிர்க்கலாம் என நினைக்கிறேன்.. திசை திரும்பும்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

@payanamum ennangalum- சரி அந்த பணம் எங்கே செல்கிறது என்று உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். அப்பணத்தை வைத்து மேலும் கோவிலை அழகு படுத்துவர். மிச்சத்தை சொல்ல வேண்டியது இல்லை. ஏப்பம் தான்.

-------

இது பொதுவாக நாம் சொல்வது..

ஆலயங்களில் ஒவ்வொரு வாரமும் வரும் காணிக்கை பற்றி முழு விபரமும் தெரியப்படுத்தப்படும் நிர்வாகிகளுக்கு .. விரும்பினால் பொதுமக்களுக்கும்..

அதற்காக தப்பே நடக்கவில்லை என சொல்லவில்லை.. எல்லாரும் மனிதர்களே.. எப்போதும் தவறலாம்...

ஆனால் நாம் பார்க்கவேண்டியது பெரும்பான்மையை மட்டுமே..

ஏப்பம் விடுவது எப்போதும் நடக்குதா?..

மக்கள் ஏமாற்றப்படுகிறார்களா?..

அப்போது விழிப்புணர்ச்சி கட்டாயம் கொண்டுவரணும்..

அது நாத்திகம் என்றாலும் எவ்வகையிலாவது நடைபெற்றே தீரும்...

இதுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை என்பது என் கருத்து..


கெட்ட நாத்திகன்/ஆத்திகன் மிக சிறந்த சாமியாராக நடித்து மக்களை ஏமாற்ற முடியும்..


அதே நேரம் ஒரு நல்ல நாத்திகன்/ஆத்திகன் மக்களுக்கு ஒரு சிறந்த மத தலைவனாக வழிகாட்டியாக இருக்க முடியும்...


ஒரு மத தலைவனாக இருப்பவர் ஆத்திகந்தான் என யாராலும் சொல்ல முடியாது..

பொன்கார்த்திக் said...

@ரஹீம் கஸாலி
//மனிதன் செய்யும் தவறுகளுக்கு கடவுள் பலிகடா ஆகிவிடுகிறார்//

இங்கு யாரும் மனிதன் செய்யும் தவறுகளுக்கு கடவுளை குறை கூறவில்லை..

கடவுளின் பெயரால் மனிதன் செய்யும் தவறுகளுக்கு ஒரு கூட்டம் துனைநிர்கின்றதே அதை தான் கூறுகிறோம்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

என்னை பொறுத்த வரை நமக்கு மேல் ஒரு சக்தி. பசியில் இருக்கும் குழந்தையை பொறுத்த வரை பால் குடுக்கும் தாய் தான் கடவுள்..

-----------

பால் கொடுக்காவிட்டால் ?

நடைமுறையில் பார்க்கிறோமே ...

கத்தி கதறியும் கூட கடவுள் கண்டுகொள்ளாததை...ஏன்?..

Riyas said...

@பொன் கார்த்திக்.
//நீங்களே கூறுங்கள்? யார் கடவுள்?//

இது என்ன கேள்வி.. நாங்கள் அல்லாஹ்வைதான் கடவுளாக நம்புகிறோம்.. குரானைத்தான் அதன் மூலாதாரமாக கொள்கிறோம்.. அதற்காக மற்ற மதங்களையும் அவர்கள் நம்பும் கடவுள்களையும் நான் விமர்சிக்கவில்லை.. அது அவர்களின் தனிப்பட்ட உரிமை.

ரஹீம் கஸ்ஸாலி said...

பயணமும் எண்ணங்களும் said...

சமீபத்தில் நடந்த ராஜன் திருமணம் கூட சடங்கு சம்பிரதாயங்களுடன் நடந்தது.
-----------


இதை விவாதத்தில் தவிர்க்கலாம் என நினைக்கிறேன்.. திசை திரும்பும்..
////
நான் திசைதிருப்புவதற்காக இதை கூறவில்லை. அதைப்போல விட்டுக்கொடுத்து போகலாமே என்ற அர்த்தத்தில்தான் சொன்னேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

பொன்கார்த்திக் said...

@பயணமும் எண்ணங்களும்
//என்னை பொறுத்த வரை நமக்கு மேல் ஒரு சக்தி. பசியில் இருக்கும் குழந்தையை பொறுத்த வரை பால் குடுக்கும் தாய் தான் கடவுள்..

-----------

பால் கொடுக்காவிட்டால் ?

நடைமுறையில் பார்க்கிறோமே ...

கத்தி கதறியும் கூட கடவுள் கண்டுகொள்ளாததை...ஏன்?..//

பசியில் இருக்கும் குழந்தையை பொறுத்த வரை பால் குடுக்கும் தாய் தான் கடவுள்..

கத்தி கதறும் குழந்தையை பொறுத்த வரை பசி பழக வழிவகுத்த ஒரு அறிய முடியாத ஒன்று தான் கடவுள்..

அனுபவ பூர்வமாக பார்த்தால் எல்லாம் நன்மைக்கே

ரஹீம் கஸ்ஸாலி said...

கடவுளின் பெயரால் மனிதன் செய்யும் தவறுகளுக்கு ஒரு கூட்டம் துனைநிர்கின்றதே அதை தான் கூறுகிறோம்..///
அதைத்தான் நானும் சொல்றேன். துணை நிற்கும் கூட்டத்தை விமர்சியுங்கள். யார் வேண்டாம் என்பது? அதை விடுத்து ஏன் கடவுளை விமர்சிக்கிறீர்கள்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

நான் திசைதிருப்புவதற்காக இதை கூறவில்லை. அதைப்போல விட்டுக்கொடுத்து போகலாமே என்ற அர்த்தத்தில்தான் சொன்னேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

----------

நீங்கள் திசை திருப்பவில்லை..

ஆனால் இது பொதுப்படையான விவாதம் என்பதால் தனி நபர் விமர்சனம் நல்லதொரு விவாதத்தை திசை திருப்பலாம்..

மன்னிப்பெல்லாம் வேண்டாமே..

பொன்கார்த்திக் said...

@ரியாஸ்
//Riyas said...

@பொன் கார்த்திக்.
//நீங்களே கூறுங்கள்? யார் கடவுள்?//

இது என்ன கேள்வி.. நாங்கள் அல்லாஹ்வைதான் கடவுளாக நம்புகிறோம்.. குரானைத்தான் அதன் மூலாதாரமாக கொள்கிறோம்.. அதற்காக மற்ற மதங்களையும் அவர்கள் நம்பும் கடவுள்களையும் நான் விமர்சிக்கவில்லை.. அது அவர்களின் தனிப்பட்ட உரிமை.//

என்று ஒரு கருத்தோ அல்லது பொருளோ பொது என்று வந்து விட்டதோ பிறகு விமர்சனம் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று..

உங்களை யாரும் அல்லாவை நம்ப வேண்டாம் என்று கூறவில்லை.. அதற்காக அல்லாவும் நீங்கள் நம்புவதாக சொன்ன குர்ரானும் பொதுவானதே அதை தான் விமர்சிக்கிறார்களே தவிர உங்கள் நம்பிக்கையை அல்ல..

எண்ணங்கள் 13189034291840215795 said...

பசியில் இருக்கும் குழந்தையை பொறுத்த வரை பால் குடுக்கும் தாய் தான் கடவுள்..

கத்தி கதறும் குழந்தையை பொறுத்த வரை பசி பழக வழிவகுத்த ஒரு அறிய முடியாத ஒன்று தான் கடவுள்..

அனுபவ பூர்வமாக பார்த்தால் எல்லாம் நன்மைக்கே

-------------------

நாம் நல்ல நிலைமையில் இருந்து கொண்டு எல்லாம் நன்மைக்கே என எளிதாக சொல்லலாம் நண்பரே...

ஆனால் அன்றாட கஞ்சிக்கே போராடும் மக்களுக்கும்., தீராத வலியோடு நோயோடு , அடிமைத்தனமாக வாழும் மக்களுக்கு.?

இதெல்லாம் வைத்து கடவுள் இல்லையோன்னு யாருக்குமே தோணும்...

சரி அது ஒரு புறமிருக்கட்டும்..

ஆனால் கடவுள் இருக்கிறார் என்று மதம் முலம் மனிதர்கள் உதவி செய்து வருகிறார்கள் தான்.. அது மறுக்க முடியாது...

மனித ரூபத்தில் கடவுள் உண்டுதான்....

ஆக கடவுள் செய்வார் என நம்பிக்கொண்டிருப்பதைவிட , கடவுளின் குணத்தை மனிதருக்குள் விதைக்க /கொண்டு வர மதம் உதவுகின்றதென்றால் இருந்துவிட்டு போகட்டுமே என்பதுதான் என் நிலைபாடு.

இத்தகைய உதவிகள் நாத்திக குழுமமாக இருந்துகொண்டு செய்தாலும் ஏற்புடையதே.. அப்படி எங்கெல்லாம் நடக்கின்றது என அறிய விருப்பம்...

ரஹீம் கஸ்ஸாலி said...

//எங்களிடம் தெளிவான ஆதாரம் இருக்கிறது//
தெளிவான ஆதாரம் அருமை? நீங்களே கூறுங்கள்? யார் கடவுள்? முருகன்,அல்லா,ஏசு இவர்களா? நானும் ஒரு ஆத்திகனே. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் எனக்கு இந்த பாகுபாடு கிடையாது.. ஒரே கடவுள்(நமக்கு அப்பர் பட்ட ஒரு சக்தி) ஒரே குலம் (மனிதன்).
////
அதைத்தானே சார் இஸ்லாமும் சொல்கிறது.

ராவணன் said...

தல, கடவுளை நீங்கள் பார்க்கவேண்டுமா?

சிங்கப்பூருக்கு வந்தால் நீங்கள் பார்க்கலாம்.

பொன்கார்த்திக் said...

//கடவுளின் குணத்தை மனிதருக்குள் விதைக்க /கொண்டு வர மதம் உதவுகின்றதென்றால் இருந்துவிட்டு போகட்டுமே என்பதுதான் என் நிலைபாடு.//

கடவுளின் குணம் எதற்கு சகா மனிதனுக்கு?

சரியாக யோசித்து பாருங்கள்?

மனிதன் மனிதனாக இருந்தாலே போதும். கஷ்டப்படும் பொது எந்த வித பாகுபாடும் இல்லாமல் தன்னால் முடிந்த உதவியை செய்வது.. அதுவும் முடிய வில்லை என்றல் மற்றவருக்கு தொந்தரவு இல்லாமல் இருந்தால் அதுவே போதுமே சகா. அதை விட்டுவிட்டு மதத்தின் பெயரை சொல்லி கொண்டு சண்டை போடுவது தான் இன்று மட்டும் அல்ல இதற்கு முன்னாலும் கூட மதத்தின் விளைவு..

எந்த கடவுளாவது நான் சொல்லுவதை கேள் நாளை என்னை போல் ஆகிவிடுவாய் உன்னையும் மக்கள் என்னை போல் கண்ணை மூடிக்கொண்டு கும்பிடுவார் என்று கூருகிறார?

பொன்கார்த்திக் said...

//ராவணன said...

தல, கடவுளை நீங்கள் பார்க்கவேண்டுமா?

சிங்கப்பூருக்கு வந்தால் நீங்கள் பார்க்கலாம்.//

சகா சிங்கப்பூர் வந்த கடவுள் மட்டும் தான் கண்பிபீன்களா இல்ல வேற எதாவது சேர்த்து... (ஊர் சுத்தி கட்ட சொன்னம்பா)..

பொன்கார்த்திக் said...

@ரஹீம் கஸாலி

அதைத்தானே சார் இஸ்லாமும் சொல்கிறது.//

அப்ப கடவுள் அல்லா தான் சொல்லறதுக்கு உங்க கிட்ட ஆதாரம் இருக்குனு சொல்றீங்களா?

Riyas said...

@பொன் கார்ததிக்.
//அதற்காக அல்லாவும் நீங்கள் நம்புவதாக சொன்ன குர்ரானும் பொதுவானதே அதை தான் விமர்சிக்கிறார்களே தவிர உங்கள் நம்பிக்கையை அல்ல..//

தாராளமாக விமர்சிக்கலாம்.. அதற்கும் ஒரு நாகரீக அலகு உண்டு கேள்வி கேடகிறேன் என்ற பெரில் மிக அநாகரீகமாக பதிவிடுவது சரியா நீங்களே சொல்லுங்கள் நண்பரே..? அவர்களிடம் கேட்டால் இது உங்கள் பார்வைக்குத்தான் அநாகரீகம் எங்களுக்கு இதுதான் நாகரகம் என்கிறார்கள்..

பொன்கார்த்திக் said...

@ரியாஸ்
//அவர்களிடம் கேட்டால் இது உங்கள் பார்வைக்குத்தான் அநாகரீகம் எங்களுக்கு இதுதான் நாகரகம் என்கிறார்கள்..//

நண்பரே நாகரீகம் அநாகரீகம் என்பது பார்க்கும் பார்வையில் தான் உள்ளது..

இந்தியாவை பொறுத்த வரை நீச்சல் உடை தெருவில் அணிவது அநாகரீகம். ஆனால் சில நாடுகளில் அது நாகரீகம். அது போல் தான்

Riyas said...

@ பொன் கார்த்திக்.

//நண்பரே நாகரீகம் அநாகரீகம் என்பது பார்க்கும் பார்வையில் தான் உள்ளது..//

அவர்கள் சொன்னதைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள்.. உங்கள் விளக்கததிற்கு நன்றி நண்பரே..

suneel krishnan said...

நம்பிக்கை நமக்குள் இருக்கும் வரை எந்த பிரச்சனையும் எங்கும் இல்லை , பிரச்சனை எங்கு ஆரம்பம் என்றால் நாம் நம்புவது மட்டும் உண்மை எனும் எண்ணம் ஓங்கும் போது தான் .ஒரு மனிதனின் நம்பிக்கை இன்னொருவனை காயப்படுத்தாது அந்த நம்பிக்கை அவன் மேல் திணிக்க படாத வரை .
நாத்திகமும் கூட கடவுள் இல்லை எனும் நம்பிக்கையை கடவுள் இருக்கு என்று நம்பும் மனிதர்களிடம் சில நேரங்களில் திணிக்கிறது.மதங்கள் தங்களை நிறுவி கொள்ள முயல்வது போல் நாத்திகமும் நிறுவி கொள்ள முயல்கிறது . மீண்டும் மீண்டும் எனக்கு தோன்றுவது இது தான் மதங்களும் சித்தந்தங்களும் அப்படியே அவர் அவர் வசதிக்கேற்ப இருந்தால் பிரச்சனை இல்லை , ஆனால் எல்லா மதங்களுமே தங்களை நிறுவுவதில் அதிக முனைப்புடன் இருக்கிறது .

நாத்திகம் மேல் எனக்கு இருக்கும் பிரச்சனை இது தான் , வாழ்க்கைக்கான் பொருளை எனக்கு போதிய அளவில் நாத்திகம் வழங்கவில்லை என்பதே உண்மை , நாம் ஏன் வாழ வேண்டும் எனும் கேள்விக்கு எனக்கு உள்ள நாத்திக புரிதல் மூலம் புரிந்து கொள்ள முடியவில்லை.ஏன் பூமியில் நாம் பிறக்க வேண்டும் என்கின்ற கேள்விக்கான விடை தெரியவில்லை .எப்படி பிறந்தோம் ,உருவாகினோம் என்பதை உணர நமக்கு பரிணாமம் ,அறிவியல் உதவுகிறது ஆனால் இதற்க்கு சரியான விடை இல்லை என்றே படுகிறது .

Unknown said...

எங்க டம்மிய சாரி கும்மிய கானோம்..
தூங்கிட்டேளா..

Unknown said...

எங்க அம்பி ராஜனையும் கானோமே ஆங் வினாயகருக்கு பூஜையா.. பேஷா பன்னுங்கோ..

எவனோ ஒருவன் said...

sir, quite fed up with theism and atheism. why cant we bring peace by being agnostic for time being. atleast write better

Anonymous said...

நல்ல பதிவு அருண்...

உமர் | Umar said...

இன்னும் அரை மணி நேரத்துல வர்றேன்பா. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க.

Unknown said...

@கும்மி.
//இன்னும் அரை மணி நேரத்துல வர்றேன்பா. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க//

எப்படி அசிங்கமாக கமெண்ட் போடலாமென்னு யோசிக்கிறேளா..ஐயோ ஐயோ சரி வந்து பேலுங்க சாரி போடுங்க..

Unknown said...

//சூப்பர் வாலு....! எனக்கு புரியுது....இந்த கட்டுரை பார்த்துட்டு படிச்சு ஆழமா வெளங்காமா டென்சன் ஆகப் போறவங்க எத்தனை பேரோ தெரியல//
வாலு என்ன காவியமா எழுதிட்டாரு புரியாம இருக்குறதுக்கு இந்த மொக்கை எல்லாம் படிக்க அமெரிக்கா போயா படிக்க முடியும்.. சும்மா காமெடி பன்னாதேள்..

Unknown said...

//இருட்டுக்கு டார்ச் அடிக்கும் முயற்சியில்// உங்க உர்ல கரெண்ட் இல்லயா ஐயோ பாவம்..

Unknown said...

எப்படியெல்லாம் சமாளிக்கிறாங்க..

அருள் said...

இது ஒரு சிக்கலான விஷயம். ஆனால், தீர்வுகாண முடியாதது அல்ல.

மனித உரிமை நோக்கில் பார்த்தால் இதில் மூன்று அமசங்கள் உள்ளன.

1. மதம் அல்லது நம்பிக்கையைக் கைக்கொள்வதற்கான உரிமை.

"Everyone shall have the right to freedom of thought, conscience and religion" (Article 18)

2. தனது கருத்தினை சுதந்திரமாக வெளியிடுதல் - பேச்சுரிமை.

"Everyone shall have the right to hold opinions without interference." (Article 19)

3. அவதாறு பிரச்சாரத்தை தடுத்தல்.

"Any advocacy of national, racial or religious hatred that constitutes incitement to discrimination, hostility or violence shall be prohibited by law." (Article 20)

இவற்றில் முறையே (1) மற்றும் (2) ஆகிய இரண்டு உரிமைகளும் பலநேரங்களில் ஒன்றுக்கு ஒன்று எதிரானதாக போக வாய்ப்பிருக்கிறது. அச்சமயத்தில் மூன்றாவது அம்சம் தேவைப்படுகிறது.

இவை மூன்றுமே "பன்னாட்டு குடிமை மற்றும் அரசியல் உரிமை உடன்படிக்கையில்" வலியுறுத்தப்பட்டுள்ளன.

(இந்த உடன்படிக்கை - இந்திய அரசால் ஏற்கப்பட்டுள்ள, இந்திய அரசைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பன்னாட்டு சட்டமாகும்)

International Covenant on Civil and Political Rights

http://www2.ohchr.org/english/law/ccpr.htm

தருமி said...

ஆய்வு சரி; ஆனால் எதற்கு 'மறு' ஆய்வு??

உமர் | Umar said...

பின்னூடங்களில் விவாதங்கள் பல்வேறு திசைகளிலும் சென்றுள்ளது. ஒவ்வொன்றிற்கும் பதில் சொல்லுவதை விட கட்டுரையின் மையம் தொடர்பாய் ஒரு கருத்து.

To surrender to ignorance and call it God has always been premature, and it remains premature today - Isaac Asimov.

மேவி... said...

தல ... உலக (பிட்) படங்களை பற்றி எப்ப எழுத போறீங்க ????

pichaikaaran said...

கடவுளை மறுப்பதோ , ஏற்பதோ குற்ரம் இல்லை என நீங்கள் சொல்வது உண்மைதான்.
ஆனால் இரண்டுமே தேவையில்லை என்பதே நல்ல நிலைப்பாடு..

கடவுள், குரு என ஆளுக்கொரு கிளையை பிடித்து தொங்குவதற்கும், கடவுள் இல்லை என்ற கிளையை பிடித்து தொங்குவதற்கும் வித்தியாசம் இல்லை ..

Unknown said...

//கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை முட்டாள்கள் என்றோ, வாழ தகுதியற்றவர்கள் என்றோ நான் எங்கேயும் எப்போதும் சொன்னதில்லை,
அதே போல் கடவுள் நம்பிக்கை கொள்ளக்கூடாது என சொல்லவும் உரிமை இல்லை//

ஏன் இந்த நொண்டி சமாதானம்.. பகுத்தறிவு பற்றி பேசி சலித்துவிட்டதா இல்லை கூட்டம் சேர்க்க முடியாமல் போய்விட்டதா.. வால்பையன் & கோ வீழ்ச்சிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

மேவி... said...

இன்னுமா இந்த சமுதாயம் கடவுளை பற்றி பேசிகிட்டு நேரத்தை போக்கிட்டு இருக்கு .

இப்புடி விவாதம் பண்ணாம எல்லா கிட்டயும் அன்பு செலுத்துங்க பாஸ் .... பிறகு நீங்களே கடவுள் ஆகிவிடுவீங்க (கடவுளை நீங்க நம்பின்ன)

அருள் said...

கும்மி said...

// //To surrender to ignorance and call it God has always been premature, and it remains premature today - Isaac Asimov.// //

மதம் அல்லது கடவுள் நம்பிக்கையை ஒரு மூடநம்பிக்கை என்று விமர்சிப்பதற்கான உரிமை எவருக்கும் உண்டு.

அதேசமயம் - மதம் அல்லது கடவுள் நம்பிக்கையை தன்விருப்பம் போல (அதாவது அடுத்தவர் மனிதஉரிமையை பறிக்காத வகையில்) பின்பற்றவும் எவருக்கும் உரிமை உண்டு.

இவ்விஷயத்தில் ICCPR Article 18 உலக மக்களுக்கு ஒரு வழிகாட்டி மட்டுமல்ல - உலக சட்டமும் அதுதான்.

ICCPR Article 18:

1. Everyone shall have the right to freedom of thought, conscience and religion. This right shall include freedom to have or to adopt a religion or belief of his choice, and freedom, either individually or in community with others and in public or private, to manifest his religion or belief in worship, observance, practice and teaching.

2. No one shall be subject to coercion which would impair his freedom to have or to adopt a religion or belief of his choice.

3. Freedom to manifest one's religion or beliefs may be subject only to such limitations as are prescribed by law and are necessary to protect public safety, order, health, or morals or the fundamental rights and freedoms of others.

4. The States Parties to the present Covenant undertake to have respect for the liberty of parents and, when applicable, legal guardians to ensure the religious and moral education of their children in conformity with their own convictions.

Unknown said...

@தருமி..

//ஆய்வு சரி; ஆனால் எதற்கு 'மறு' ஆய்வு??//

உங்களுக்கு புரியுது.. பாவம் விடுங்க சார் ஏதாவது சொல்லி மனச ஆறுதல்படுத்தட்டும்..

Unknown said...

@கும்மி..
//பின்னூடங்களில் விவாதங்கள் பல்வேறு திசைகளிலும் சென்றுள்ளது. ஒவ்வொன்றிற்கும் பதில் சொல்லுவதை விட கட்டுரையின் மையம் தொடர்பாய் ஒரு கருத்து//

வந்துட்டார்யா ஞானி கருத்து சொல்ல அவசரமா சொல்லிட்டு கிளம்புங்க தூங்கனும்ல்

உமர் | Umar said...

//அதேசமயம் - மதம் அல்லது கடவுள் நம்பிக்கையை தன்விருப்பம் போல (அதாவது அடுத்தவர் மனிதஉரிமையை பறிக்காத வகையில்) பின்பற்றவும் எவருக்கும் உரிமை உண்டு.//

யாருக்கும் உரிமை இல்லை என்று நாம் கூறவில்லை. தன்னுடைய மதமே உயர்ந்தது; தன்னுடைய கடவுளே உயர்ந்தவர் என்று கூறிக்கொள்ளும் அனைத்துக் கூட்டத்திடமும், கடவுளை பற்றிய சித்தாந்தங்களின் மீது கேள்வி எழுப்புகின்றோம்.

இங்கே நான் அசிமோவின் கருத்தைக் கூறியதற்கு காரணம் கூட, அவர் மிகச் சரியாக ignorance என்னும் வார்த்தைய உபயோகித்திருக்கின்றார்.

இன்னும் தங்களுடைய அறியாமையை அவர்கள் உணராமல் இருக்கின்றனர் என்பதைத்தான் தெளிவுப்படுத்துகின்றோம்.

Unknown said...

//கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், இருட்டறைக்குள் எதோ உள்ளது //

அப்பிடியா ஒருவேள மோகினி பிசாசா இருக்குமோ ஹி...ஹி...

உமர் | Umar said...

//ஒருவேள மோகினி பிசாசா இருக்குமோ ஹி...ஹி... //

இல்லை காமெடி பீசு!

உமர் | Umar said...

பதிவர் கல்வெட்டு தனது பதிவொன்றில் கூறியுள்ள கருத்துக்கள் சற்று சிந்தனையைத் தரக்கூடும்.

சிறு வயதில் கற்பிக்கப்பட்டவைகளை மீறி என்றேனும் சிந்தித்ததுண்டா?

அந்நியன் said...

பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

மதம் அல்லது கடவுள் நம்பிக்கையை ஒரு மூடநம்பிக்கை என்று விமர்சிப்பதற்கான உரிமை எவருக்கும் உண்டு.

-----------------------

அருள் , இது குறித்து சட்டத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது.?

விமர்சிக்கலாம் என்றால் வரைமுறை?.

எண்ணங்கள் 13189034291840215795 said...

To surrender to ignorance and call it God has always been premature, and it remains premature today - Isaac Asimov

-----------

மிக சரி..

தாய் குழந்தையிடம் நிலா , பூச்சாண்டி காட்டி சப்பாடு ஊட்டுவது பூச்சாண்டியை முன்னிறுத்த அல்ல.. குழந்தைக்கு உணவு சென்றாகணும்...

ப்ரிமெச்சூராகவோ, முட்டாள்தனமாகவோ இருந்துவிட்டு போகட்டும்.. மதம்/கடவுள் என்ற கற்பனையால் நன்மை அதிகமா தீமை அதிகமா என்பதுதான் கேள்வி..

எண்ணங்கள் 13189034291840215795 said...

சிறு வயதில் கற்பிக்கப்பட்டவைகளை மீறி என்றேனும் சிந்தித்ததுண்டா?
----------

என் மகனுக்கு 11 வயது வந்ததுமே கடவுள் பற்றிய பல கேள்விகளை வைக்க ஆரம்பித்துவிட்டான்.. என்னை முட்டாளாக பார்க்க ஆரம்பித்தான் என்பதுதான் உண்மை,.,.

சிந்தனைகளை யாராலும் தடை செய்ய முடியாது என்னதான் போராடினாலும்...

சிந்தனையை கட்டுப்படுத்த நினைப்பதுமே முட்டாள்தனம்...

ஆக நாம் இன்னும் நம் -பெர்றோர் சொல்லி மட்டும்தான் கடவுள்/மதம் பின்பற்றுகிறோம் என்று சொல்ல முடியாது..

என் மகனுக்கு இப்போதைக்கு , ஆலயம் செல்வது ஒரு ஒழுக்க செயல் என்பதாக சொல்லியிருக்கேன்...அவனுக்கும் அது பிடித்தமானதாகவே இருக்கின்றது.. முக்கியமா அவர்கள் செயல்கள்... ( கவனிக்க போதனைகள் அல்ல )

கிட்டத்தட்ட Agnostic நிலைமை..

நாம் பார்க்கும் உலகம் வேறு .. வளரும் குழந்தைகள் பார்க்கும் உலகம் வேறு...

ஆக கற்பிக்கப்பட்டவைகள் மாற்றம் அடைந்தே தீரும் ..

எண்ணங்கள் 13189034291840215795 said...

தன்னுடைய மதமே உயர்ந்தது; தன்னுடைய கடவுளே உயர்ந்தவர் என்று கூறிக்கொள்ளும் அனைத்துக் கூட்டத்திடமும், கடவுளை பற்றிய சித்தாந்தங்களின் மீது கேள்வி எழுப்புகின்றோம்.

-------------

கவனிக்கவும், இப்படி செய்பவர்கள் வீணர்கள் மட்டுமே..

ஆக இத்தகையோருடன் என்னதான் நீங்கள் வாதம் செய்தாலும் எடுபடாது..நேர விரயம் மட்டுமே.ஏனெனில் அவர்கள் செய்வது மத வியாபரம் மட்டுமே...

தன் மதம் , தன் கடவுள் என நினைக்க ஆரம்பித்தாலே அவன் முழுதும் கெட்ட நாத்திகன் , ஆத்திகன் வேடத்தில் என்று புரிந்துகொள்ளுங்கள்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

தனது கருத்தினை சுதந்திரமாக வெளியிடுதல் - பேச்சுரிமை.

"Everyone shall have the right to hold opinions without interference." (Article 19)
---------

Interference என்றால் எந்த அளவுகோல்.?

இதுதானே முக்கியம்..

உமர் | Umar said...

//ஆக இத்தகையோருடன் என்னதான் நீங்கள் வாதம் செய்தாலும் எடுபடாது..நேர விரயம் மட்டுமே.ஏனெனில் அவர்கள் செய்வது மத வியாபரம் மட்டுமே... //

நன்றாக அறிந்தே இருக்கின்றோம். நாம் அவர்களோடு விவாதித்து வெற்றி பெறுவது என்பது நோக்கம் அல்ல. அவர்களது வியாபாரத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதுதான் குறிக்கோள்.

நீங்கள் குறிப்பிடும் ஆலயங்களும், மத அமைப்புகளும், வணிக நோக்கத்தைதானே அடிப்படையாக கொண்டிருக்கின்றன? பிறகு எப்படி அவற்றால் நன்மை விளையும் என்று கூறுகின்றீர்கள்?

எங்களுடைய முந்தைய பதிவொன்றில், மதத்தலைமை பிறை விஷயத்தில் எப்படி எல்லாம் ஏமாற்றுகிறது என்று விளக்கினோம். இதுபோன்று ஒவ்வொரு விஷயங்களிலும் சுட்டிக்காட்டித்தான் வருகின்றோம்.

தனியன் said...

கடவுள் எங்கே இருக்கார் என்று இவ்வளவு தேடத்தேவை இல்லை.
அண்மையில் கலியாணம் கட்டிக் கொண்டாரே உன் நண்பன் அவன்ட போட்டோவில பாரு மேலுக்கு பிள்ளையார் இருப்பார்...

ஆத்திகன் பிள்ளையார் சுழிதான் வைப்பான், நாத்திகன் பிள்ளையாரே வைப்பானோ?
சும்மா சந்தேகம் நண்பா

உமர் | Umar said...

//ஆக நாம் இன்னும் நம் -பெர்றோர் சொல்லி மட்டும்தான் கடவுள்/மதம் பின்பற்றுகிறோம் என்று சொல்ல முடியாது..

என் மகனுக்கு இப்போதைக்கு , ஆலயம் செல்வது ஒரு ஒழுக்க செயல் என்பதாக சொல்லியிருக்கேன்...அவனுக்கும் அது பிடித்தமானதாகவே இருக்கின்றது.//

உங்கள் மகன் வளர்ந்தபிறகு, ஆலயம் செல்வது ஒழுக்க செயல் என்னும் உங்கள் கற்பிதம் குறித்து சிந்திக்கத் தலைப்பட வாழ்த்துகள்.

உமர் | Umar said...

//அண்மையில் கலியாணம் கட்டிக் கொண்டாரே உன் நண்பன் அவன்ட போட்டோவில பாரு மேலுக்கு பிள்ளையார் இருப்பார்...//

அவருக்கு தெரியும் அது கடவுள் அல்ல என்று.

உங்களுக்கெல்லாம் பொறக்கும்போதே சொல்லிக்குடுத்துருவாங்களா, பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டைப்பாக்கு துட்டுக்கு எட்டுன்னு சொல்லு அப்படின்னு?

Elangovan singapore said...

சிந்திக்க மறுப்பவன் கோழை. சிந்தியுங்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். ஏற்றுக்கொள்ளaதிர்கள். சித்திக்க மட்டும் மறுக்கaதிர்கள்.

Krishnan said...

Good Post Val. :) Keep going.......I expect you to read my blog once...This is mine http://teabench.wordpress.com/

அருள் said...

பயணமும் எண்ணங்களும் said...

// //மதம் அல்லது கடவுள் நம்பிக்கையை ஒரு மூடநம்பிக்கை என்று விமர்சிப்பதற்கான உரிமை எவருக்கும் உண்டு.
-----------------------
அருள் , இது குறித்து சட்டத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது.? விமர்சிக்கலாம் என்றால் வரைமுறை?.// //

ICCPR Article 20:

"Any advocacy of national, racial or religious hatred that constitutes incitement to discrimination, hostility or violence shall be prohibited by law." (Article 20)

எண்ணங்கள் 13189034291840215795 said...

உங்கள் மகன் வளர்ந்தபிறகு, ஆலயம் செல்வது ஒழுக்க செயல் என்னும் உங்கள் கற்பிதம் குறித்து சிந்திக்கத் தலைப்பட வாழ்த்துகள்.

----------------------

கற்பிதம் குறித்து சிந்தித்திடுவானோ என பயந்து கற்பிக்காமல் இருக்க முடியாதே..

என்னுடன் பொறியியல் படித்தவர் ஹெர்பல் பிஸினஸ் செய்கிறார்.. அதற்காக அவர் படித்த பொறியியல் வீண் என வருந்தலாமா?..

எல்லாவற்றையும் கற்கலாம்.. நாம் கூட இதே எண்ணத்தில் ஆயுசு முழுக்க இருப்போம் என உத்திரவாதமுண்டா?..

மாற்றம் ஒன்றுதானே மாறாதது?.

எண்ணங்கள் 13189034291840215795 said...

ICCPR Article 20:

"Any advocacy of national, racial or religious hatred that constitutes incitement to discrimination, hostility or violence shall be prohibited by law." (Article 20)

--------

நன்றி அருள்.

discrimination -- இது போதுமே..

எண்ணங்கள் 13189034291840215795 said...

நீங்கள் குறிப்பிடும் ஆலயங்களும், மத அமைப்புகளும், வணிக நோக்கத்தைதானே அடிப்படையாக கொண்டிருக்கின்றன? பிறகு எப்படி அவற்றால் நன்மை விளையும் என்று கூறுகின்றீர்கள்?

-------------

இல்லை .

ஒண்ணுமில்லை இன்று மகன் பள்ளி ஆசிரியர் பெற்றோர் சந்திப்புக்கு சென்றோம்..

அவர்கள் அப்பள்ளியை நடத்துவதே சேவையை மனதில் கொண்டு மட்டுமே..

இது அவர்கள் மதத்துக்கு செய்யும் மரியாதையாம்...

சீக்கிய பள்ளி..

இப்படி எத்தனை மதப்பள்ளிகள் /மருத்துவமனைகள்/சேவை இல்லங்கள் நடக்கின்றன.?

குற்றங்குறை இல்லாமல் இல்லை..ஆனால் அதை வைத்து மட்டுமே மதிப்பீடு செய்ய கூடாது..

எண்ணங்கள் 13189034291840215795 said...

எங்களுடைய முந்தைய பதிவொன்றில், மதத்தலைமை பிறை விஷயத்தில் எப்படி எல்லாம் ஏமாற்றுகிறது என்று விளக்கினோம். இதுபோன்று ஒவ்வொரு விஷயங்களிலும் சுட்டிக்காட்டித்தான் வருகின்றோம்.

----------

எல்லா மதத்திலுமுள்ள மூட நம்பிக்கைகள் /மக்களுக்கு கேடு செய்பவை கட்டாயம் களையப்படவேண்டும்..

மாற்று கருத்தில்லை..

ஆனாலும் நாகரீகமாக ..

Jayadev Das said...

"எங்கம்மா மலடியா இல்லையா என்ற கேள்விக்கு பதில் தெரியாம தேடிகிட்டே இருக்குறேன்" -இப்படி யாராவது சொன்னால் அது எவ்வளவு பெரிய கேனத் தனம்? இறைவன் யார் என்பதில் வேண்டுமானால் குழப்பங்கள் இருக்கலாமே தவிர இருக்கிறானா இல்லையா என்பதில் குழப்பமே இல்லை. [எப்படின்னு திரும்ப கேட்டா, நீங்க மறுபடியும் முதலில் இருந்து படிங்க!]. மதங்களால் வரும் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் மற்ற பிரச்சினைகள்-இவையெல்லாம் கடவுள் இல்லை என்பதற்கான சான்றுகளே அல்ல. நீங்க ஒரு வாஷிங் மெஷினை வாங்கிகிட்டு வரீங்க. அதுல நிறைய பிரச்சினைகள் வரலாம். மெக்கானிக்கை கூப்பிட்டு சரி செய்ய வேண்டியிருக்கும். பிரச்சினை குடுக்குதே, அதனால இந்த வாஷிங் மெசினை யாரும் செஞ்சிருக்க முடியாது என்பது பகுத்தறிவு இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம், உங்களுடைய பௌதீக விதிகளைப் பயன் படுத்தி ஒரு போதும் உங்களால் இறைவனைப் பத்தி அறிய முடியாது. உதாரணத்துக்கு எல்லோரையும் கடவுள் படச்சருன்னா, அவரை படிச்சது யாருன்னு கேள்வி கேட்பது. [கேட்டுவிட்டு தனக்குத் தானே புத்திசாலி என்று நினைத்துக் கொள்வது]. இதுவும் கூமுட்டைத் தனமான கேள்விதான். "எல்லா காரணத்துக்கும் காரணமானவன், அவனுகென்று காரணமெதுவுமில்லை"- அவருதான் கடவுள். [God is one who is the cause of all causes and who has no other cause] உங்களோட ஆற்றல் அழியாமை விதி [Law of conservation of Energy] இந்த ஜடப் பொருட்களுக்குத்தான், இறைவனுக்கு அல்ல. கூட்டுப் புழு தன்னைச் சுற்றி ஒரு கூட்டை கட்டி கொண்டு உள்ளேயே இருக்கும், அது மாதிரி உனக்கென்று நீயாக எதையாவது கற்பித்துக் கொண்டு இறைவன் இல்லை என்று சொன்னால் நீதான் மக்கு. நீ இல்லை என்பதால் இறைவன் இல்லாமல் போவது இல்லை. இருக்கிறான், எப்படி? மறுபடியும் முதல் வரியைப் படி. படித்தும் புரியவில்லை என்றால் உனக்கு எதைச் சொல்லியும் புரியவைக்க முடியாது.

ஞாஞளஙலாழன் said...

வால்,

http://anand-pathivu.blogspot.com/2010/08/blog-post.html

உங்கள் கேள்விகளுக்கு மேற்கூறிய பதிவு ஒருவேளை விடை தரலாம்.

vijayakumar said...

நீங்கே மதத்தின் பேரிலும் , மத தலைவர்கள் பேரிலும் உள்ள வெறுபின் காரணமாக ..கடவுள குறை சொல்லாதீங்க ...மதமும் , தலைவர்களும் மனிதர்கள்ளல் நிறுவப்பட்டது ...அன்பாய் கூபிடுவர்கலுக்கு கடவுள் அன்பை வெளிபடுவார் ...கடவுள கண்டுபுடிக்கரவர்கல்லுக்கு அது கஷ்டம்தான் .தேடிகிட்டே இருக்கவேண்டியதுதான் ..தவறா எடுதுகதிங்க

தனி காட்டு ராஜா said...

இப்போது எல்லாம் இந்த மாதிரி பதிவுகளை படிக்கும் போது சிரிப்பு தான் வருகிறது :)
ஒருவேளை என் புரிதல் அதிகமாகி விட்டதோ ...அல்லது புரிந்து கொள்ளும் விதம் நகைச்சுவையாய் மாறி விட்டதோ தெரியவில்லை :))

கல்வெட்டு said...

.

வால்,
கடவுள் என்றால் என்ன? அது ஒரு பொருளா? பொருள் என்றால் உயிரா அல்லது உயிரியா? விலங்கா? பறவையா? மரமா? கோளா? நம்பிக்கையா? சித்தாந்த‌தமா? தியரியா?

கடவுள் என்பதின் டெபனிசன் தெரியாதவரை அதைப் பற்றிய பேச்சுகள் தேவையற்றது. அதாவது பயனில்லாதது.

உலகம் படைக்கப்பட்டது அல்லது சமைக்கப்பட்டது கடவுளால்தான் என்று ஒருவர் விளக்கம் சொன்னால்கூட, "சரி கடவுள் என்பவர் யார்?" என்று அதற்கான டெபனிசனை அவர்கள் சொல்லாதவரை அதைப்பற்றிப்பேசாமல் இருப்பதே நல்லது. ஏன் என்றால் அது அவர்களின் நம்பிக்கை மட்டுமே.

.

சர்ணா said...

அண்ணாச்சி... இருள் என்பதை ஒழி இல்லை என்றும் சொல்லலாம்.
சோ நீங்க இல்லை என்று சொல்வதே இருக்கலாம் என்ற உருவில் அடிப்டையில். நான் விவாதம் (விதண்டாவாதம்) பண்ணல.
எல்லாம் எங்க தலைவர் அன்பே சிவம்-ல சொல்லிட்டாருன்னே ...!
Less Tension More work..More Work Less Tension...

உமர் | Umar said...

@பயணமும் எண்ணங்களும்
//கற்பிதம் குறித்து சிந்தித்திடுவானோ என பயந்து கற்பிக்காமல் இருக்க முடியாதே..//

அவர் சிந்திப்பதற்கு வாழ்த்துகள். ஆனால், நீங்கள் கற்றுக்கொடுப்பது உங்கள் சிறுவயது கற்பிதங்களைதானே! நீங்கள் உங்கள் சிறுவயது கற்பிதங்களை மீறி சிந்தித்து அவற்றைக் கற்றுக் கொடுக்கவில்லையே!

-----
மத அமைப்புகள் நல்லது செய்கின்றன; அதனால் அவை இருக்கட்டும் என்னும் ரீதியில் சில கருத்துக்களை கூறுகின்றனர். உங்கள் பார்வைக்காக லக்கியின் பதிவு ஒன்று.

மத அமைப்புகள் மக்களை பிரித்துத்தானே வைத்திருக்கின்றன. முடிச்சூரில் உள்ளது போன்ற உள்ளூர் அமைப்புகள் எவ்வித பாகுபாடும் இல்லாமல், அப்பகுதி முன்னேற நடவடிக்கை எடுக்குமே. அது போன்ற அமைப்புகளை ஊக்குவிப்போமே!.

-----
கடவுளைப் பற்றி பேசத் தொடங்கி மத அமைப்புகளுக்கே வந்துவிடுகிண்றீர்கள். மதங்களையும் மத அமைப்புகளையும் விடுவோம். பதிவின் மையமான கடவுளுக்கு வருவோம். கடவுளை பற்றிய சித்தாந்தங்கள் தகர்க்கப்பட்டு வருகின்றன என்பதை ஒத்துக்கொள்கின்றீர்களா?

உமர் | Umar said...

@Jayadeva
It can't be seen, smelled, felt, measured, or understood, therefore let's worship it.

நடத்துங்கள்!

எண்ணங்கள் 13189034291840215795 said...

அவர் சிந்திப்பதற்கு வாழ்த்துகள். ஆனால், நீங்கள் கற்றுக்கொடுப்பது உங்கள் சிறுவயது கற்பிதங்களைதானே! நீங்கள் உங்கள் சிறுவயது கற்பிதங்களை மீறி சிந்தித்து அவற்றைக் கற்றுக் கொடுக்கவில்லையே!

------------

நன்றி கும்மி..

என் சிறு வயது கற்பிதங்கள் கண்மூடித்தனமான கடவுள் பக்தி , பயம் மட்டுமே..( ஒரு இலையில் கூட கடவுள் இருக்கிறார் என்று அதை காயப்படுத்தாமல் வளர்க்கப்பட்டேன். ரொம்ப ஓவர். )

ஆனால் நான் கற்பிப்பது மதத்தில் சொல்லியுள்ள நல்லவைகளை மட்டுமே..

கடவுள் இருக்கிறாரா , இல்லையா என்பதை ஆப்ஷனில் விட்டுட்டேன்.. அது ஒருபோதும் நிரூபிக்க இயலாது..உணர்வு சம்பந்தமானது..

ஒரே ஒரு கேள்வியில் என்னை மடக்குவார் மகன்..

" கடவுள் இருக்கிறார் என்றால், ஜெபம் பலிக்கும் என்றால் ஏன் உலகின் மற்றொரு பகுதியில் வறுமை, போர் , துன்பம் எல்லாம்.?.அவர்கள் ஜெபம் கடவுள் கேட்பதில்லையா?..என் ஜெபத்தை மட்டும் அவர் கேட்பதில் எனக்கு உடன்பாடில்லை " .

ஆனால் மதம் என்ன சொல்கிறது ?.

" உன்னைப்போல் சக மனிதனை நேசி.. முக்கியமா எதிர்களை.. "

இது ஒன்று போதாதா?... மனிதனை நல்வழிப்படுத்திட..

இத்தகைய மத உபதேசங்களை நேரிலேயே பார்த்து அதில் ஈடுபடவும் சந்தர்ப்பங்களை தருவதால் ( ஆலய் சேவகர்கள் ) மகனுக்கு மத வகுப்புகள் பிடித்திருக்கிறது..

இது எந்த மதமானலும் எமக்கு சரியே..

நம் லட்சியம் சக மனிதனை சமமாக மதிக்க ,மகிழ்விக்க , வாழ விடுவதாய் இருந்தால் கூட போதுமானது..

( என் வீட்டில் கீதை உண்டு ) .

கோவில்களில் , ஆலயங்களில் மட்டுமே ஏழை பணக்காரன் , மேல்சாதி கீழ்சாதி, உய்ர்ந்தவன் , தாழ்ந்தவர்ன் என்ற எவ்வித பாகுபாடும் இல்லை.. அது மிக நிறைவை தரும் செயல் மனிதனுக்கு..

அன்னை தெரசா சொன்னதுபோல, மனிதனுக்கு தேவை பணமோ பொருளோ விட , அங்கீகாரம்.. அன்பு என்ற முறையில்..

அதற்குத்தான் ஏங்குகின்றான்..

அதை தர மதம் வழிவகுக்குமாயின் அதை ஏற்பது தவறேயில்லை..

எண்ணங்கள் 13189034291840215795 said...

மத அமைப்புகள் மக்களை பிரித்துத்தானே வைத்திருக்கின்றன. முடிச்சூரில் உள்ளது போன்ற உள்ளூர் அமைப்புகள் எவ்வித பாகுபாடும் இல்லாமல், அப்பகுதி முன்னேற நடவடிக்கை எடுக்குமே. அது போன்ற அமைப்புகளை ஊக்குவிப்போமே!.

-------------

நிச்சயமாக..

இது போன்ற மாற்று ஏற்பாடுகள் வெற்றிகரமாக நடக்கும் பட்சத்தில் மக்கள் தானாகவே மதம் , கடவுள் என்பதிலிருந்து விடுபட ஆரம்பிப்பார்கள்..

ஒன்றை ஊக்குவிக்க மற்றொன்றை எதிர்த்தே ஆகணும் என்பதில்தான் உடன்பாடில்லை...

எண்ணங்கள் 13189034291840215795 said...

பதிவின் மையமான கடவுளுக்கு வருவோம். கடவுளை பற்றிய சித்தாந்தங்கள் தகர்க்கப்பட்டு வருகின்றன என்பதை ஒத்துக்கொள்கின்றீர்களா?

-----------------

நிச்சயாமாக..

கடவுள் இருக்கின்றாரா என்பதை சிந்திக்காத மனிதன் இருக்கவே முடியாது..

எல்லாவற்றையும் கவனிக்கிறான் மனிதன்..

தினம் கோவிலுக்கு செல்பவன் கூட மனதில் ஒரு சந்தேகம் வைத்துக்கொண்டு இருக்கக்கூடும்...

நான் ஏற்கனவே சொன்னது போல , முழு நாத்திகன் கூட கோவிலுக்கு சென்று வழிபடுவது /நடிப்பது அதில் உள்ள நல்ல விஷயம் பரவட்டும் என்ற எண்ணமும் இருக்கலாம்..

ஒன்று நிச்சயம் .

உலகிலுள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வாழ முடிந்தால் மட்டுமே கடவுள் இருப்பதாய் என்னால் ஒத்துக்கொள்ள முடியும்..

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரப்போவதில்லை கடவுள் என்பது பல முறை நிரூபணமாயிற்று..:))

ஆனால் கடவுள் என்ற கற்பனை பாத்திரம் , மதம் என்ற ஒரு சமூக குழும அமைப்புக்கு தேவைப்பட்டால் இருந்துவிட்டு போகட்டும் என்பதே எம் எண்ணம்.. ஏனெனில் அது வெற்றிகரமாக இதுவரை நிரூபித்துள்ளது..தனிமனித வாழ்வில்.. கடவுளை நிரூபிக்க முடியாவிட்டாலும்..

என் தனிப்பட்ட வாழ்க்கையில் பல அதிசயங்கள் நடந்த போது நானும் அது கடவுளால் என பிரமித்து உருகியவள்தான்..

ஆனால் அதே அனுபவம் உலகிலுள்ள மக்களனைவருக்கும் கிடைக்க முடியா பட்சத்தில் அந்த எண்ணமும் தோற்றது.:((

எண்ணங்கள் 13189034291840215795 said...

அப்படியே கடவுள் இருந்தாலும் ,

1. என்னை மட்டுமே வணங்கு என சொல்ல மாட்டார்..

2. எனக்கு பயந்து தப்பு செய்யாதே என சொல்ல மாட்டார்..

3. நீ இதை செய்தால் நான் அதை தருவேன் என லஞ்சம் பேசமாட்டார்...

4. பல மதம் உருவாக வழி செய்திருக்க மாட்டார்.:)

5. ஏழைகள் , பசி , பிணி, என போராடுவதையும், பணக்காரர்கள், மன நோயால் , பதவி ஆசைக்காரர்கள் , போரினால் சீரழிய விட்டு ரசிக்க மாட்டார்..

ஏன் அவருக்கு பொழுது போக வேறு வழியே இல்லையா?..

அருமையா மக்களை பார்த்து பார்த்து படைத்துவிட்டு அவர்கள் உடலளவிலோ மனதளவிலோ பாதிக்க வழி செய்வாரா?..

உலகில் எத்தனை பேர் கடவுளை கண்மூடித்தனமாக நம்புவதால் மட்டுமே நிம்மதியாக இருக்கின்றார்கள்... ?.

ஆனால் மத கற்பிதத்தால் நிம்மதியாக இருக்கிறார்கள் என சொல்லலாம்..

"மக்கள் சேவை மகேசன் சேவை .. " "ஏழையின் சிரிப்பில் இறைவனை காணுங்கள் "என்பதெல்லாம் மதம் சொல்லித்தந்தவை ..

இவை ஏன் அழியணும்?..

'Survival of the fittest' என்பதை மதம் தகர்க்கின்றது.. ஒருவன் மாற்று திறானாளியோ, வசதி அற்றவனோ , யாராக இருந்தாலும் அவனை நேசிக்க மதம் சொல்லித்தருகிறதென்றால் அம்மதத்தை பின்பற்றுவது எங்ங்அனம் தவறாகும்...?..

ஆக மதம் சில விதத்தில் கம்யூனிசமே...:)


Communist principles are found at the very birth of Christianity:

All the believers were together and had everything in common. Selling their possessions and goods, they gave to anyone as he had need. (Acts 2:44-45, NIV)

All the believers were one in heart and mind. No one claimed that any of his possessions was his own, but they shared everything they had. With great power the apostles continued to testify to the resurrection of the Lord Jesus, and much grace was upon them all. There were no needy persons among them. For from time to time those who owned lands or houses sold them, brought the money from the sales and put it at the apostles’ feet, and it was distributed to anyone as he had need.

Joseph, a Levite from Cyprus, whom the apostles called Barnabas (which means Son of Encouragement), sold a field he owned and brought the money and put it at the apostles’ feet. (Acts 4:32-37, NIV).

Jayadev Das said...

@ கும்மி
//It can't be seen, smelled, felt, measured, or understood, therefore let's worship it.
நடத்துங்கள்!// இப்படியெல்லாம் நான் எங்கே சொன்னேன். Kindly don't put your words into my mouth. God is the source of all sources. He is the Origin of everything, but has no other origin. அதனால, நீங்க இங்க மனிதர்களுக்கும் ஜடப் பொருட்களுக்கும் உள்ள குணங்கள் அத்தைனையும் அவருக்கு உண்டு அதுக்கு மேலேயும் உண்டு. அவருக்கு உருவம் உண்டு, உணர்சிகள் உண்டு, பார்க்க முடியும், அவரை நீங்களும் பார்க்கலாம், சொல்லப் போனால் அவரைப் போல அழகு யாருமே இல்லை. தன்னோட அழகைப் பார்த்து தானே பிரமிச்சு போற அழவுக்கு அழகானவர். அது மட்டுமல்ல இருப்பதிலேயே வயதானவர் அவர்தான், ஆனாலும் பார்க்கிறதுக்கு எப்பவுமே பதினாறு வயசுப் பையனைப் போல இளமையாக இருப்பார். இது நாங்க கற்பனைப் பண்ணிய கடவுள் அல்ல, உண்மையிலேயே கடவுள் இருக்கார், அவர் இப்படித்தான் இருக்கார், மேலும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் எல்லோருக்குமே இவர்தான் கடவுள்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

தன்னோட அழகைப் பார்த்து தானே பிரமிச்சு போற அழவுக்கு அழகானவர். அது மட்டுமல்ல இருப்பதிலேயே வயதானவர் அவர்தான், ஆனாலும் பார்க்கிறதுக்கு எப்பவுமே பதினாறு வயசுப் பையனைப் போல இளமையாக இருப்பார்.

---------------

:))

!

Blog Widget by LinkWithin