பின்நவீனம்!

எந்த ஒரு செயலிக்கும் தனிமனிதனின் அரசியல் பார்வை மிக முக்கியமாகிறது, அந்த செயலின் உயர்விற்கும், மறு சீரமைப்பிற்கும், மீண்டும் மீண்டும் அதை சோதனைகுள்ளாக்குவது மிக அவசியமாகிறது, எந்த ஒரு அரசியல்தன்மையும் இல்லாத மனிதர்கள் தங்களை சமகாலத்திற்கு தயார் படுத்தி கொள்வதில்லை, உரையாடலிலோ, சாடலிலோ ஒருவரை பொதுபுத்தி உள்ளவர் என குற்றஞ்சாட்டபடுதல் இம்மாதிரியான மனிதர்களே!, சரியோ தவறோ முதலில் உங்கள் புரிதல் அவசியமாகிறது, அதற்குண்டான மாற்று கருத்துகளை நேர்மையுடன் எதிர்கொள்ளுதல் சமகாலத்தில் உங்களை தங்க வைத்திருக்கும், பொதுபுத்தியுடனே எதையும் மறுத்து பிற்போக்கான எண்ணத்துடன் இருத்தல் உங்களை பின் தள்ளி உலகம் முன்னேறி கொண்டே இருக்கும்!

புதுமுன்னேற்றம் அல்லது சீரமைப்பு கலை மற்றும் அறிவியலுக்கு மிகவும் தொடர்புடயது, தற்கால அறிவியல் வளர்ச்சி மிக வேகமானது என்றாலும் அவைகளின் முன்னோடி கலை தான்!, பல மாற்றங்களை பெற்று இன்றும் மாறி கொண்டிருப்பதில் கலை மிக முக்கியமான இடத்தை பெற்றிருக்கிறது, கலை மட்டுமே தத்துவங்களாலும் மாற்றம் பெறும் அல்லது கலைக்கு தத்துவ விளக்கங்கள் மாற்றம் கொடுக்கும்!

புரிதல் என்பதே பன்முகதன்மை கொண்டவை என்பதற்கு முதல் வித்திட்டவர் பிக்காஸோ!, கியூபிஸம் என்ற புது தத்துவத்தில் ஒரே ஓவியம் பன்முகதன்மை கொண்ட புரிதல்களை கொடுத்தது, இது சரி, இது தவறு என எந்த விளக்கத்தையும் பிக்காஸோ கொடுக்கவில்லை, உனக்கு என்ன தோன்றுகிறதோ அதையே எடுத்து கொள் என்றார், வாசகன்/ரசிகனுக்கு இது முழு சுதந்திரம் கொடுத்தாலும் ஓவியம் தவிர மற்ற விசயங்களுக்கு கியூபிஸம் ஒத்துவரவில்லை, சமகாலத்தில் சிலரது கவிதைகள் அந்த தன்மை பெற்றிருந்தாலும் தொடர்ந்து ஒரே மாதிரியான முயற்சி தட்டையான சிந்தனைகளையே தக்க வைத்து கொள்கிறது!காலம்காலமாக காப்பாற்றி வந்த மரபை உடைத்தல், பழமைக்கு எதிரான எழுச்சி, பொதுபுத்திக்கு எதிரான நிர்வாணநிலை சமூகத்தில் பின்நவீனமாக பார்க்கப்படுகிறது, இல்லை பின்நவீனம் என்பது வேறு என்பவர்களும் உண்டு, ஏற்கனவே சொன்னது போல் நமது புரிதலில் சில சிக்கல்கள் இருக்கலாம், ஆனால் எதையும் புரிந்து கொள்ள முயற்சிக்காமல் இருப்பது ஜடநிலைக்கு சமம்!, என்னுடய புரிதல் முழுவதும் கூட தவறாக இருக்கலாம், ஒருவேளை இங்க நடக்கப்போகும் உரையாடல் எனக்கும், என்னை போன்ற தவறான புரிதலில் இருப்பவர்களுக்கும் தெளிவு ஏற்படுத்தலாம்!, அதற்காக தானே நான் இருக்கிறேன்!


தொடர்புடய பழைய பதிவுகள்!

58 வாங்கிகட்டி கொண்டது:

மோனி said...

மொத வெட்டு என்னது...

தமிழ் பொண்ணு said...

ayaiyo.moni..

தமிழ் பொண்ணு said...

சரி நான் ரெண்டாவது வெட்டு.

மோனி said...

..//சரியோ தவறோ முதலில் உங்கள் புரிதல் அவசியமாகிறது, அதற்குண்டான மாற்று கருத்துகளை நேர்மையுடன் எதிர்கொள்ளுதல் சமகாலத்தில் உங்களை தங்க வைத்திருக்கும்//..

அப்படியா...?

மோனி said...

..//கலை மட்டுமே தத்துவங்களாலும் மாற்றம் பெறும் அல்லது கலைக்கு தத்துவ விளக்கங்கள் மாற்றம் கொடுக்கும்!//..

மறுபடியும் அப்ப்ப்ப்படியாயாயாயா?

மோனி said...

..//உனக்கு என்ன தோன்றுகிறதோ அதையே எடுத்து கொள் என்றார், வாசகன்/ரசிகனுக்கு இது முழு சுதந்திரம் கொடுத்தாலும் ஓவியம் தவிர மற்ற விசயங்களுக்கு கியூபிஸம் ஒத்துவரவில்லை//..

உன் சமையலறையில் நான் வசகனா/ரசிகனா????

மோனி said...

..//பொதுபுத்திக்கு எதிரான நிர்வாணநிலை//..

இதுக்கும் சுவாமிஜி நித்யானந்தாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...(யே)?

Ahamed irshad said...

///எதையும் புரிந்து கொள்ள
முயற்சிக்காமல் இருப்பது ஜடநிலைக்கு சமம்!//

உண்மை... சரியாக அலசியிருக்கிறீர்கள்...

Ahamed irshad said...

10வது வெட்டு..

மோனி said...

..//பின்நவீனம் என்பது வேறு என்பவர்களும் உண்டு//..

ஆமா ... திருப்பி வெச்சு பாக்கணும்...

உமர் | Umar said...

இப்போதைக்கு ஆயிக்கிறேன் அப்பீட்டு

மோனி said...

..//என்னுடய புரிதல் முழுவதும் கூட தவறாக இருக்கலாம், ஒருவேளை இங்க நடக்கப்போகும் உரையாடல் எனக்கும், என்னை போன்ற தவறான புரிதலில் இருப்பவர்களுக்கும் தெளிவு ஏற்படுத்தலாம்//..

ஆகவே.. இங்கே.. நான்.. சொல்லுப்போவது.. என்னவென்றால்..

VELU.G said...

//
காலம்காலமாக காப்பாற்றி வந்த மரபை உடைத்தல், பழமைக்கு எதிரான எழுச்சி, பொதுபுத்திக்கு எதிரான நிர்வாணநிலை சமூகத்தில் பின்நவீனமாக பார்க்கப்படுகிறது
//

அது எந்த நவீனமாக இருந்தாலும் சரி, மரபை உடைத்தல், பின் புது மரபை உண்டாக்குதல், பின்னர் அதையும் உடைத்தல் என்ற தெளிவின்மையிலேயே தான் காலம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது சரி, இது தவறு என்று சொல்லும் வல்லமை யாருக்கு இருக்கிறது

மோனி said...

..//பிக்காஸோ!, கியூபிஸம்//..

இந்த ரெண்டு சாக்லேட்டும் எங்க கிடைக்கும்?

அகல்விளக்கு said...

//கியூபிஸம் என்ற புது தத்துவத்தில் ஒரே ஓவியம் பன்முகதன்மை கொண்ட புரிதல்களை கொடுத்தது, இது சரி, இது தவறு என எந்த விளக்கத்தையும் பிக்காஸோ கொடுக்கவில்லை, உனக்கு என்ன தோன்றுகிறதோ அதையே எடுத்து கொள் என்றார், வாசகன்/ரசிகனுக்கு இது முழு சுதந்திரம் கொடுத்தாலும் ஓவியம் தவிர மற்ற விசயங்களுக்கு கியூபிஸம் ஒத்துவரவில்லை,//

ஏன் ஒத்துவராது... நம்ம (???) நித்தியானந்தாவின் வீடியோவையே எடுத்துக்கொள்ளுங்களேன்... அதை நீங்கள் பார்க்கும் விதத்தில்தான் உங்கள் புரிதல் உள்ளது...

அகல்விளக்கு said...

//காலம்காலமாக காப்பாற்றி வந்த மரபை உடைத்தல், பழமைக்கு எதிரான எழுச்சி, பொதுபுத்திக்கு எதிரான நிர்வாணநிலை சமூகத்தில் பின்நவீனமாக பார்க்கப்படுகிறது, இல்லை பின்நவீனம் என்பது வேறு என்பவர்களும் உண்டு, ஏற்கனவே சொன்னது போல் நமது புரிதலில் சில சிக்கல்கள் இருக்கலாம்,//

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க...

வால்பையன் said...

//நம்ம (???) நித்தியானந்தாவின் வீடியோவையே எடுத்துக்கொள்ளுங்களேன்... அதை நீங்கள் பார்க்கும் விதத்தில்தான் உங்கள் புரிதல் உள்ளது...//


இந்த விசயங்களில் ராஜன் தான் கில்லாடி!

தமிழ் பொண்ணு said...

பதிவு அருமை நண்பரே.

அகல்விளக்கு said...

இப்போ நாம கேட்டுட்டு இருக்குற ராவணா பாட்டை ஏதாவது தாத்தாகிட்ட போட்டு காட்டி, அதுக்கு அவரு கருத்த கேட்டீங்கன்னா என்ன சொல்வாரு....

அதே மாதிரித்தான் பின்நவீனமும்... ஒருவேளை அது வருங்கால நாகரீகமாக்கூட இருக்கலாம்...

அகல்விளக்கு said...

பாரதியார் ஒரு கவிதைப்போட்டில கலந்துகிட்ட போது அவருக்கு இரண்டாம் பரிசு கிடைச்சுதாம்...

ஆனா அவரோட கவிதைகள் அப்போ அவ்வளவா பாராட்டப்படல...

புதுக்கவிதை-னு புதுசா ஒரு டைப்பா அவரு எழுதுனாரு.. அது அந்தகாலத்து பின்நவீனம்..

மோனி said...

இப்போ என்னய்யா சொல்ல வர்றீங்க..?

தமிழ் பொண்ணு said...

எனக்கு ஒன்னுமே புரியல, ஆனா பதிவு நல்லாயிருக்கு. :(

மோனி said...

..//எனக்கு ஒன்னுமே புரியல, ஆனா பதிவு நல்லாயிருக்கு. :(//..

பாதி உண்மை - பாதி பொய்...

வால்பையன் said...

//madurai ponnu said...

எனக்கு ஒன்னுமே புரியல, ஆனா பதிவு நல்லாயிருக்கு. :(//


எங்களுக்கு மட்டும் புரிஞ்சிருச்சாக்கும்!

தமிழ் பொண்ணு said...

பிப்டி பிப்டி பிஸ்கட் மோனி.

மோனி said...

வால்பையன் said...
எனக்கு ஒன்னுமே புரியல, ஆனா பதிவு நல்லாயிருக்கு. :(//

எங்களுக்கு மட்டும் புரிஞ்சிருச்சாக்கும்!

---

என்னா அக்கிரமம்...

மோனி said...

மொத்தமாக
தீர்ந்துபோன சரக்கொன்று
வயிற்றுக்குள்
சுழண்டு சுழண்டு
வாய் வழியாக
முடிவைத் தேடியது...
என் பாதத்திற்கடியில்
வாந்தியின் நாற்றம்
ஆரம்பித்திருந்தது..

மோனி said...

சரக்கடித்த தருணங்களில்
வாந்தியெடுக்க ஆசையில்லை
ஆனாலும் வயிற்றுக்குள் ஒளிந்திருந்த
காற்றலைகள் உடனே
வாந்தியாய் வந்து பின்பு
குடிகாரா என்றது...

மோனி said...

என்னை சுற்றி
ஏழெட்டு கைகள்
என் கையோடு ஒட்டியிருந்த
சரக்கு பாட்டிலை குடித்துக் கொண்டிருந்தது!
சரக்கு தீர்ந்ததும் கைகள் என்னை விட்டு
விலகி ஓடியது
நினைவு தப்பி
மட்டை ஆனேன்!

மோனி said...

நான் தான் தனியா டீ ஆத்திட்டு இருக்கேனா..?

மோனி said...

தொடர்புடைய பழைய பதிவுகளை படித்ததால் மனநிலை பாதிக்கப்பட்ட மோனி-யை கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்க முடியாது எனச் சொல்லியதால் - கோவை மருத்துவக் கல்லூரியை இழுத்து மூடச்சொல்லி நாளை பயங்கரப் போராட்டம்.

இடம்: லாலி ரோடு TASMAC
நேரம்: காலை 10.00

பொதுமக்களே அலை கடலென திரண்டு வாரீர்..!

வால்பையன் said...

//தொடர்புடைய பழைய பதிவுகளை படித்ததால் மனநிலை பாதிக்கப்பட்ட மோனி//


இப்படியெல்லாம் பப்ளிக்குல உண்மைய உடைக்ககூடாது!

VISA said...

//சமகாலத்தில் சிலரது கவிதைகள் அந்த தன்மை பெற்றிருந்தாலும் தொடர்ந்து ஒரே மாதிரியான முயற்சி தட்டையான சிந்தனைகளையே தக்க வைத்து கொள்கிறது!
//

யாருன்னு புரிஞ்சு போச்சு.

கொல்லான் said...

//இடம்: லாலி ரோடு TASMAC
நேரம்: காலை 10.00

பொதுமக்களே அலை கடலென திரண்டு வாரீர்..!//

தலைமை யாரு? வாலா?

மோனி said...

..//கொல்லான் said...
தலைமை யாரு? வாலா?//..

அவரு இலைஞர் மாதிரி ஈரோட்டுல இருந்துட்டே ரிமோட் மூலமா போராட்டத்தை தொடங்கி வைப்பார்...

VIKNESHWARAN ADAKKALAM said...

வால்... இன்னோரு விசயம் மிஸ்ஸிங்... இட்ஸ் ஓகே.... யூ புல் பீல் தேர்...

Ashok D said...

ஏதோ சொல்லறாப்பல தெரியுது?

பட்டாசு said...

பின் நவீனம்னு சொன்னாலே ஏதோ ஒருத்தர் ஞாபகம் வர்றாரு, ஆனால் இங்க கதையே வேற மாதிரி இல்ல இருக்கு.

அகல்விளக்கு said...

http://en.wikipedia.org/wiki/Postmodernism

எனக்கு ஒன்னியும் பிரியில...

யாராவது தமிழ் விக்கில போட முடியுமா??

வால்பையன் said...

<a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D>எடுத்துகோங்க அகல்விளக்கு, ஆனா முழுமையாக இல்லை என்பது உண்மை!</a>

வால்பையன் said...

<a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D”>எடுத்துகோங்க அகல்விளக்கு, ஆனா முழுமையாக இல்லை என்பது உண்மை!</a>

வால்பையன் said...

:) ஹிஹீஹி

Ashok D said...

மனம் விலாசம்
பதிவின் சுருக்கம்

THE UFO said...

பின் நவீனம்.....
பின்னாடி ஜிப் வைத்த ஜீன்ஸ் போடுவது அல்லவா?

Chitra said...

காலம்காலமாக காப்பாற்றி வந்த மரபை உடைத்தல், பழமைக்கு எதிரான எழுச்சி, பொதுபுத்திக்கு எதிரான நிர்வாணநிலை சமூகத்தில் பின்நவீனமாக பார்க்கப்படுகிறது, இல்லை பின்நவீனம் என்பது வேறு என்பவர்களும் உண்டு, ஏற்கனவே சொன்னது போல் நமது புரிதலில் சில சிக்கல்கள் இருக்கலாம்,


......சரி..... சரி.... சரி...... :-)

அனு said...

இது எதுவும் உள்குத்து போஸ்ட் இல்லைல்ல??

தைரியமா கமெண்ட் போடலாமா??

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...

///வால்பையன் said...


எங்களுக்கு மட்டும் புரிஞ்சிருச்சாக்கும்!/////எதிலையும் ஒரு நேர்மை இருக்கனும், வால்ஸ் உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு

கிருஷ்ண மூர்த்தி S said...

இந்த முன்-பின் நவீனத்துவக் குழப்பங்களை விட "வால் நவீனத்துவம்" இன்னும் அதிகக் குழப்பமாக அல்லவா இருக்கிறது!

சேக்காளி ராஜன் எங்கிருந்தாலும் "வால் வெட்டுக்கு" உடனடியாக வரவும்!

Rajan said...

//சேக்காளி ராஜன் எங்கிருந்தாலும் "வால் வெட்டுக்கு" உடனடியாக வரவும்//


நானே எம்பொண்டாட்டி எட்டி ஒதச்சதுல கொடல்ல இருந்து பெடல் வரைக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் கழண்டு போயி கெணத்து மேட்டுல தவுந்துகிட்டி இருக்கேன்! அவ்வ்வ்வ்

Rajan said...

நாந்தா அம்பதா! ரைட்டு

Rajan said...

//பின்னாடி ஜிப் வைத்த ஜீன்ஸ் போடுவது அல்லவா?//


பாலிதீன் பேப்பர்ல பேண்டு தெச்சு போடுவது!

Rajan said...

//முதல் வித்திட்டவர் பிக்காஸோ!//

ஆமா தல ! போட்டோல்லாம் நல்லா அப்லோடு ஆவுது பிக்காசோல!

Rajan said...

//ஒரே மாதிரியான முயற்சி தட்டையான சிந்தனைகளையே தக்க வைத்து கொள்கிறது!

//


ஆமா தல தட்டயா இருந்தாலே நமக்கு புடிக்காதே! குஷ்பு மாதிரி புஷ்டியா இருக்க வேணாம்!

Rajan said...

//அதற்காக தானே நான் இருக்கிறேன்!
//


அவ்வ்வ்வ்! நாந்தான் இருக்கேன்ல! ஹ்ம்ம்ம்!

Rajan said...

//இந்த விசயங்களில் ராஜன் தான் கில்லாடி!//

ஆமாயா! இப்பவே கண்டா கட்ட வெளக்கமாத்தக் கொண்டு அடிக்கராளுக... இப்பிடி வேற ஏத்தி விட்டுடுங்க

Radhakrishnan said...

//காலம்காலமாக காப்பாற்றி வந்த மரபை உடைத்தல், பழமைக்கு எதிரான எழுச்சி, பொதுபுத்திக்கு எதிரான நிர்வாணநிலை சமூகத்தில் பின்நவீனமாக பார்க்கப்படுகிறது,//

நிறைய நாள் சந்தேகம் இப்போது தீர்ந்துவிட்டது என நினைத்தேன். ஆனாலும் இந்த இடுகையை முடித்த வரிகள் இவைதான் முடிவு என கருத முடியாது என்று இருப்பதுதான் குழப்பத்திற்கு வழிவகுக்கும். இதுதான் என் பார்வை என்பதில் திடமாய் இருக்க ஒரு தைரியம் வேண்டும். அது சரியோ தவறோ!

வால்பையன் said...

//இதுதான் என் பார்வை என்பதில் திடமாய் இருக்க ஒரு தைரியம் வேண்டும்.//


நிச்சயமாக!

அதே நேரம் எதிர்வாதத்தில் உள்ள சாத்தியகூறுகளையும் ஆராய வேண்டும்! அடமெண்டாக இருந்தால் சில விசயங்கள் புரியாமலேயே போகக்கூடும்!

!

Blog Widget by LinkWithin