சோதிடமும், சந்திரனும்!

//////வால்பையன் said...
எனது பதிவுகள் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதுன்னு ஒரு டெம்ப்ளெட் வச்சிருந்திங்களே!
இடம் பத்தலைன்னு எடுத்துட்டிங்களா?/////

SP.VR. SUBBIAH said...
பகுக்கவும், வகுக்கவும், கழிக்கவும், கூட்டவும், பெருக்கவும், ஒதுக்கவும், அள்ளவும், கொட்டவும் எனக்கு
நேரமில்லை. ஆனால் பகுத்தறிவு பற்றி அந்த டெம்பிளேட்டில் எதுவும் சொல்லவில்லையே? இறைவனை
நம்புபவனுக்கும், நம்பாதவனுக்கும், அறிவு பொதுவானதுதான். அறிவை வைத்து பகுப்பதும் வகுப்பதும்
அவரவர்கள் இஷ்டம்.

*********************

மேலிருப்பது சுப்பையா வாத்தியாரின் இந்த பதிவுக்கு நான் இட்ட பின்னூட்டமும் அதற்கு அய்யாவின் பதிலும்!,

சென்ற ஆண்டு சூலை மாதம் நான் எழுதிய ”இருட்டுக்கு டார்ச் அடித்தல் அல்லது உங்கள் நம்பிக்கைக்கு ஆப்பு வைத்தல்” என்ற பதிவும், அதற்கு எதிர்வினையாக நண்பர் கூடுதுறையும் அண்ணன் உண்மைதமிழனும் எழுதிய பதிவிற்கு நான் எழுதிய பதில் “கூடுதுறை மற்றும் உண்மைத்தமிழன் பதிவுகளுக்கு பதில்!”, இந்த இரண்டு பதிவுகளுக்கு பிறகு சுப்பையா வாத்தியார் பதிவின் முன்னால் கொட்டை எழுத்தில் “எனது பதிவு தன்னம்பிக்கையை குறைக்கலாம், பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டது என்று வைத்திருந்தார்” இப்போ நேரமில்லையாம், ஆனால் எனக்கு நேரமிருக்கே, எதிர்வினையாற்ற!

********************

இந்த பதிவிலேயே சொல்லியிருந்தேன், சந்திரன் தோன்றியது எப்படியென்று, இங்கேயும் கொஞ்சம் முன்னோட்டம்,

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர், பூமியின் மீது ஏற்பட்ட விண்கல்லின் மோதலில் தோன்றியது தான் நிலா என்ற துணைக்கோள், இந்த சூரிய குடும்பத்தில் பூமியை விட பெரிய துணைகோள்கள் சுற்றி வருகின்றன, ஆனால் பாருங்கள் தம்மாத்துண்டு புதன் கிரகம் நம் மீது செலுத்தும் கதிரியக்கத்தை அவைகள் நம் மீது செலுத்தாது!, ஆனால் உண்மையில் சூரியனை தவிர வேறு எந்த கோள்களும் கதிரியகத்தை ஏற்படுத்த முடியாது!. சந்திரன் பூமியை சுற்றி கொண்டு தம்மை தாமே சுற்றி வரும் ஒரு சிறு கிரகம், அதனால் பூமியில் low tide, high tide ஏற்படுவது உண்மை தான், ஆனால் அதற்கு மிக முக்கிய காரணம் பூமியை, நிலா சுற்றுவதோடு மட்டுமில்லாமல், பூமியின் வேகத்தில் அதனோடு இணையாக நிலா சூரியனையும் சுற்றி வருகிறது, அந்த வேகம் தான் பூமிக்கும் ஈர்ப்பு விசையை தருகிறது, மற்ற கோள்களுக்கும் ஈர்ப்பு விசை தருகிறது!



அதை தவிர பத்து பைசாவுக்கு பெருமானமுள்ள சிறு செயலைக்கூட சந்திரனால் ஏற்படுத்த முடியாது, அதனால் ஏற்படும் ஒரே நன்மை சுப்பையா வாத்தியாரின் பதிவில் இருப்பது போல் கதையளந்து காசு சம்பாரிக்கலாம்!, சரி சந்திரன் மட்டும் தான் எனக்கு எதிரியா என்றால், பதில் சந்திரன் மட்டுமல்ல, மொத்த சோதிடத்துக்கும் நான் எதிரி, ஏன் என்று விளக்க முயற்சிக்கிறேன்!

மனிதன் நாகரிக வளர்ச்சி பெற்றாலும் அவனுக்கு புரியாத புதிராக இருந்தது, இயற்கை சீற்றங்களும், மாறுதல்களும். ஒரு பகல்,ஒரு இரவு சேர்ந்து ஒருநாள் என கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாறுதல்களுக்கும் ஆகும் கால அளவை அவர்கள் குறித்து வைத்திருந்தனர்!,அவர்களுக்கு மனிதர்களின் வருங்காலத்தையோ, குணாநலன்களையோ தெரிந்து கொள்ளும் ஆர்வம் சிறிதும் இருந்ததில்லை, ஆனால் பின்னாள் வந்த சில பொறம்போக்குகள், அனைவருக்கும் பொருந்துவது போல் சில பலன்களை எழுதி காசு சம்பாரிப்பது மட்டும் அல்லாமல், அதை பயன்படுத்தி எப்போதும் மக்கள் சுயசிந்தனையில்லாமல் வாழ செய்து விட்டார்கள்!



நான் ஒன்பதாவது படிக்கும் போது ஒரு நோட்டின் பத்து பக்கத்தில் பத்து விதமன பலன்களை எழுதி, ஒவ்வொன்றிற்கும் நம்பர் கொடுத்து, பத்து துண்டு சீட்டில் நம்பர் எழுதி யாரைவாது எடுக்க சொல்வேன், அந்த நம்பருக்குண்டான பலன் அப்படியே பொருந்துகிறது என்பார்கள், அதை பல பேரிடம் நான் சோதித்திருக்கிறேன், கிட்டத்தட்ட கிளி சோதிடம் மாதிரி தான், யாராவது மறுமுறை சோதித்திருந்தால் அந்த பலனும் பொருந்தியிருக்கும், அவர்களும் எப்படியென்று கேள்வி கேட்டிருப்பார்கள், ஆனால் யாருக்கும் அப்படி கேள்வி கேட்க தோன்றுவதில்லையே என்பது தான் பெரும் வருத்தம்!
எனக்கிருக்கும் வாய்க்கு குடும்ப சோதிடம் என்ற புத்தகத்தை மட்டும் வைத்து கோண்டு மாதம் ஐம்பதாயிரம் சம்பாரிப்பேன், ஆனால் அந்த பொழப்புக்கு...................

பொதுவாக இரண்டு சாத்தியகூறுகள் தான் உலகில் உண்டு, நடக்கும், அல்லது நடக்காது, நான் மூணாவது ஒரு ஆப்ஷன் தருகிறேன், நல்லது நடக்கும். கெட்டது நடக்கும் அல்லது எதுவுமே நடக்காது!, ஆக இந்த மூன்றிம் எதாவது ஒன்று உங்களுக்கு நடந்தாக வேண்டும் இல்லையா, சோதிடம் என்றால் என்னவென்று தெரிந்த பகுத்தறிவுவாதி இதை துவைத்து காயப்போடுவான்!, உங்களுக்கு ராகுதிசை நடக்கும் அதனால் நல்லது நடக்கலாம், நடக்கலையா இன்னும் உள்ளே போங்கள் கேது புத்தி அதற்கு கெட்டது, அதற்கும் ஒன்னும் ஆகலையா என்ன ஹோரை என்று பாருங்கள், ஆக உங்களுக்கு இருக்கும் மூன்று ஆப்ஷனுக்கு எதாவது ஒன்றில் பலன் வருவது போல் திறைமையான ஒருவனால் அல்லது, வளரும் கேள்விகளுக்கேற்ப பலரால் மாற்றம் செய்யபட்டு உருவாக்கப்பட்டதே சோதிடம் என்னும் டுபாக்கூர்!
(சின்ன இடைச்சொருகல்:இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னாலேயே இப்படி ஒன்றை உருவாக்கி இருக்கும் போது, அதற்கு பின் வந்த மக்கள் ஏன் பைபிள், குரான் போன்ற புத்தகங்களை உருவாக்கியிருக்க முடியாது)

12 ராசியில் எந்த ராசி என்று தெரியாத ஒருவனுக்கு எதாவது ஒரு ராசியை எடுத்து காட்டுங்கள், சரியாக இருக்கிறது என்பான், இந்த உலகில் ஒரே குணநலனுடன் யாரும் பிறப்பதில்லை, கோபம், சந்தோசம், அழுகை, இரக்கம் போன்ற அனைத்தும் கலந்தது தான் மனிதன், அவைகளின் கலவை தான் சோதிடம், இதை மிக எளிதாக புரிந்து கொள்லலாமே, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னாள், இரும்பு தொழில் செய், எண்னை தொழில் செய்யுன்னு எழுதிட்டு போயிட்டாங்க, அப்ப கம்பியூட்டர் இருந்துச்சா, காம்ப்ளான் இருந்துச்சா, ஏன்யா இன்னும் அதை கட்டிகிட்டு அழுறிங்க! ஒழுங்கா புள்ளகுட்டிகளை படிக்க வைக்கிற வேலைங்கள பாருங்க!

******************

டிஸ்கி:ரொம்ப நாளாக சர்ச்சைகுறிய பதிவு எழுதவில்லை என்று வருத்தப்பட்ட அ.மு.செய்யதுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!

124 வாங்கிகட்டி கொண்டது:

அப்பாவி முரு said...

ஹி ஹி போயிட்டு அடுத்த பதிவுக்கு வாரேன்

நிஜாம் கான் said...
This comment has been removed by the author.
நிஜாம் கான் said...

அண்ணே! வான சாஸ்திரம் பத்தி நல்லாத்தான் எழுதியிருக்கிறியண்ணே. அசத்தல் போங்க.

க.பாலாசி said...

ம்ம்ம்....தெரியாம உள்ள வந்துட்டேன்...
தகவல்கள் பயனுள்ளவை

கிருஷ்ண மூர்த்தி S said...

"ஜோசியரும் வால்பையனும்!"நு தலைப்பு வைத்திருந்தால் ரொம்பப் பொருத்தமாக இருந்திருக்கும்!

அப்புறம் வால்ஸ்,பாலாசி ரொம்பவே வருத்தப் பட்டிருக்கிறாரே?

சரக்கு சரியா மிக்ஸ் ஆகலையோ?

தமிழினியன் said...

நல்ல பதிவு,

சொற் பிரயோகமும் அருமை.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

நல்ல பதிவு,
ஆனா கும்மி ஸ்டார்ட்ஸ்,
நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்.

Sabarinathan Arthanari said...

நண்பரே,

//அதை தவிர பத்து பைசாவுக்கு பெருமானமுள்ள சிறு செயலைக்கூட சந்திரனால் ஏற்படுத்த முடியாது//
அப்படியா ? அமாவாசை பௌர்ணமியில் மனிதன் மனநிலையில் ஏற்படும் மாற்றம் பற்றிய விளக்கம் என்ன ?
சுனாமி எச்சரிக்கை, அறிவியல், சோதிடம் : பகுத்தறிவு ? : எதிர்வினை

//12 ராசியில் எந்த ராசி என்று தெரியாத ஒருவனுக்கு எதாவது ஒரு ராசியை எடுத்து காட்டுங்கள், சரியாக இருக்கிறது என்பான்//
ஆயிரம் முறை சொன்னாலும் சரி பொது பலன்களை கட்டி கொண்டு திரும்ப திரும்ப பகுத்தறிவு கும்மி அடிப்பது ஏன் ?
திருமண சாதக பொருத்தம் மூட நம்பிக்கையா ? (match making)

//அப்ப கம்பியூட்டர் இருந்துச்சா, காம்ப்ளான் இருந்துச்சா, ஏன்யா இன்னும் அதை கட்டிகிட்டு அழுறிங்க! ஒழுங்கா புள்ளகுட்டிகளை படிக்க வைக்கிற வேலைங்கள பாருங்க!//
புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப சோதிடமும் வளர்ச்சி அடைந்து கொண்டு தான் இருக்கிறது வால் பையன்.
இந்திய அறிவியலின் உலக கொடை

Rajeswari said...

உங்களது ராசிநாதன் சினேகப்பார்வை பார்த்ததனாலேயே..உங்களது நண்பர் செய்யதின் வேண்டுகோளுக்கிணங்க எழுத முடிந்த்து.உங்களுக்கு குரு உச்சத்தில் இருப்பதால் எழுத்துக்கள் சரளமாக வருகிறது..

ஆங்..இந்த நாள் ராசி எப்பூடி..

vasu balaji said...

/நான் ஒன்பதாவது படிக்கும் போது ஒரு நோட்டின் பத்து பக்கத்தில் பத்து விதமன பலன்களை எழுதி, ...ஆனால் யாருக்கும் அப்படி கேள்வி கேட்க தோன்றுவதில்லையே என்பது தான் பெரும் வருத்தம்!/

அப்பவே ஆரம்பிச்சாச்சா!

இங்க படிக்கிறப்ப இதாஞ்சரின்னு தோணுது. ராஜ் டிவி பார்த்தா அதான்சரின்னும் தோணுதே!=))

ஒன்னு மட்டும் நிஜம் வால். ஜோசியம் சம்பந்தமான வானிலைக் கணக்குகள், சூத்திரங்கள் நிஜம். அதன் புரிதலும், அதன் தாக்கமும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட முடிந்தால் ஒரு தீர்மானமான முடிவுக்கு வர இயலும். அது வரை நம்ம கெரகம் சரியில்லைன்னு இருக்கதான் முடியும் போல.

Sanjai Gandhi said...

என்னாது சர்ச்சைக்குரிய பதிவா? தல.. ம்ம்னு சொல்லுங்க.. இது வெறும் கும்மிப் பதிவுன்னு நிரூபிக்கிறேன்.. :))

நாமக்கல் சிபி said...

//என்னாது சர்ச்சைக்குரிய பதிவா? தல.. ம்ம்னு சொல்லுங்க.. இது வெறும் கும்மிப் பதிவுன்னு நிரூபிக்கிறேன்.. :))//

yanum avvanname korum,
Namakkal Shibi

SUFFIX said...

சிந்திக்க வேண்டிய பதிவு!! சூரியன், சந்திரன் மற்றும் இன்ன பிற கோள்கள் புவியியல் மாற்றத்தை ஏற்படுத்துமே அல்லாது, நமது அன்றாட செயலகளுக்கும், வேலை கிடைப்பதற்கும், திருமண வாழ்விற்கும் அவை என்ன செய்யப்போகிறது?!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாலு!

நான் ஹாலி வால் நட்சத்திரத்தைப் பற்றி ஒரு பதிவு எழுத நினைத்திருக்கிறேன்!

அது நான் சிறுவயதில் எழுதிய கட்டுரை.

நீங்கள் அதைப் பற்றியும் எழுதிவிடாமல் எனக்கும் ஒரு வாய்ப்பளிக்கவும்.

:)

மற்றபடி பகுத்தறிவு, மூடன் நம்பிக்கை பற்றிய எதிர்வினை நன்று!

:))))

கலையரசன் said...

வாலும் பயனுள்ள பதிவு எழுதுவாப்புலன்னு சொன்னேன்.... கேட்டாதானே..

Ashok D said...

வால் எனக்கு பாதி படிக்கசொல்ல தூக்கம் வந்துடுச்சு... கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Anonymous said...

Thala,

Innaikku "chat" panna time irukka.

TechShankar @ டெக்‌ஷங்கர் said...

கலக்கிட்டீங்க தல. கங்க்ராட்ஸ்

அமுதா கிருஷ்ணா said...

nice pathivu...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அசத்தல் வால்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல இடுகை.

தருமி said...

உங்க ராசிக்கு இந்த வாரத்தில ..
நீங்க எதிர்வினைன்னு போட்டா அது மொக்கையாகும். இன்னொரு மொக்கை போட்டால் அது சீரியஸாகும்.

ததாஸ்து ........

Anonymous said...

தள,

களக்கிட்டிங்க.

உங்கலுக்கு ராசினாதன் உச்சத்ல உக்காந்துட்டு இறுக்காறு
சநி ஏலாம் வீட்ட பாக்குரதால நேறமே சரியிள்ள
ஒரு வாட்டி பாண்டிசேறி போய் வந்திங்கன்னா பொலப்ப நள்ளா பாக்களாம்
குறு பலண் எள்ளாம் நாந் நள்ளா சொள்ளுவேன் வேணுமின்னா என்னயவும் கூட்டுபோனிங்கண்ணா உங்க திசா புக்தியவே மாத்தி காட்டுறேன்.

சொள் அலகன்.

கிரி said...

ஒன்றும் புரியலை..

Jerry Eshananda said...

யப்பா வால்ஸ், "யோசன மஞ்சுவாடு, வண்டி சாணி சக்கட", ஜோதிடம் உண்மையப்பா, ஜோதிடர்கள் தான் பொய்

Ungalranga said...

இருக்கும்னு சொல்றவங்களுக்கு இருக்கும்..
இல்லைன்னு சொல்றவங்களுக்கு இருக்காது..

ங்கொய்யால..இந்த இருக்கலாம்னு சொல்ற பயபுள்ளைங்க..(எ.கா.- கடவுள் இல்லைன்னு சொல்லல..இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றேன் - கமலு)
தான் நம்மை டென்ஷன் பண்றாங்க..!!

இவ்ளோதான் நான் சொல்றது..வர்ட்டா!!

Dr.Rudhran said...

keep writing this is a good post

Chitra said...

வாலு, இந்த ஆட்டம் ஆடுது........ போடுது......

ஸ்ரீ.கிருஷ்ணா said...

வால் பையன் jothidam pakka aarmbichitaaraa

தருமி said...

சொள் அலகன்,
தயவு செய்து உங்கள் மொழிநடையை மாற்றிக் கொள்ள முடியுமா? தேவையற்ற இதை நீங்கள் நிறுத்துவது நலமாயிருக்கும்.

சிவாஜி said...

ஏனோ பதிவை முழுவதுமாக பொறுமையுடன் படிக்க முடியவில்லை. இதுல லிங்க்ஸ் வேற நிறைய கொடுத்திருக்கிங்க! சலிப்பைத் தருகிறது. அடுத்த பதிவுல பார்ப்போம்.

Paleo God said...

எதையுமே யாராலுமே நிச்சயமாய் சொல்லமுடியாத நிலையில்தான் நாம் இருக்கிறோம்... அறிவியலில் சொன்னாலும் அதை சொன்னவர் யாரோ தான்.. ஜோதிடம் சொன்னாலும் அதை சொன்னது யாரோ தான்.. நீங்களும் நானும் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து இதுதான் சரி என்று கூற முடியுமா?? உங்களின் நிறைய கருத்துக்கள் எனக்கு உடன்பாடுதான்.. அனால் இவரை நம்பாதே எனும்போது அவரை நம்பு என்பது வந்துவிடுகிறதே உன்னையே நீ நம்பு என்றாலும் நான் மட்டுமே உலகமில்லையே ... சம்பந்தமே இல்லை என்றாலும் சக மனிதரோடு சேர்ந்ததுதானே நம் வாழ்வு.. ரயில் ஓட்டும் DRIVER நிதானத்திலிருக்கிறாரா? என்று பார்த்து வண்டி ஏற முடியுமா?? ஏதோ ஒரு நம்பிக்கை அது தோற்கின் அதற்கு ஏதோ ஒரு காரணம் அது அறிவியலோ..ஜோதிடமோ..அவரவர் சௌகரியம்.. என்னதான் பகுத்தாலும் எவ்வளவு தான் பகுக்க முடியும் நண்பரே ??

puduvaisiva said...

நல்ல பதிவு வாலு வாழ்துகள் !

அ.மு.செய்யது said...

சர்ச்சைக்குரிய பதிவு தான் ஒத்துக்குறேன்.ஆனா எனக்கில்ல.ஏன்னா நானும் ஜோதிடத்தை ஆதரிப்பதில்லை.அதில் நம்பிக்கையும் இல்லை.

காரணம் 6:59 ஐல் தீரா நம்பிக்கை கொண்டவன்.புரியலன்னா என்னோட வலைப்பக்கம் பாருங்க.

நல்லதொரு இடுகை வால்.இந்த நிலா எப்படி உருவாச்சி..சூரியன் எப்படி உருவாச்சின்னெல்லாம் கிளாஸ் எடுக்காதீங்க ப்ளீஸ்..All outdated syllabus la ?!?!?!

கல்வெட்டு said...

.





வால் சொல்வது
// அதை தவிர பத்து பைசாவுக்கு பெருமானமுள்ள சிறு செயலைக்கூட சந்திரனால் ஏற்படுத்த முடியாது, அதனால் ஏற்படும் ஒரே நன்மை சுப்பையா வாத்தியாரின் பதிவில் இருப்பது போல் கதையளந்து காசு சம்பாரிக்கலாம்!,//

உண்மை வால்.

***

இதற்கு அடுத்து வருகிறேன். அதற்கு முன்னால் எனக்கும் சுப்பையா அவர்களுக்கும் எனக்கும் உள்ள பிரச்சனையை இங்கே சொல்லிவிடுகிறேன். :-)))))


ஏதாவது கேள்விகேட்டால் அதனை வெளியிட மாட்டார்.

சார் நீங்க கடவுள்.
கலக்கீட்டீங்க.
ஆறாவது வீட்டில் இருந்து பார்க்கும் ஆறுமுகத்தால் எனது மனைவிக்கு தொந்தரவு உண்டா?
நீசப்பய சந்திரனால் எனது கடைக்கு வருமானம் வருமா?

என்ற கேள்விகளை மட்டும் அனுமதிப்பார்.

சூரியன் is a நட்சத்திரம் (star), சந்திரன் கிரகம் (planet)அல்ல என்ற கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல மாட்டார்.

அது சரி இரும்படிக்கிற பட்டறையில போயி இரும்புத்தாது பற்றிக்கேட்டால் என்ன தெரியும் அவர்களுக்கு. :-)))

எனவே .....அவரை நோக்கிய கேள்விகள் நாம்..

நல்லடியார்,ஆசிப்,மாலிக்கிடம் குரான் பற்றிப் பேசுவது போன்றது. அல்லது ஓம்ஹாரிடம் மரம் சிடி படிக்காது என்று சொல்வது போன்றது. ரொம்பக்கஷ்டங்கண்ணா இது. :-))))


**

ஓவர் to point....


மனித மனங்களில் ஒவ்வொரு வினாடியும் மாற்றங்கள் நடக்கத்தான் செய்யும். சைக்கிள் டயர் திடீரென்று வெடித்துவிட்டால்கூட சஞ்ஜலம் ஏற்படும்.

டுபாக்கூர்கள் சொல்லும் நிலா கதை எல்லா உலக மக்களுக்கும் ஆனது அல்ல. நார்வேயில் இவர்கள் நிலா ஜோசியம் டப்பாவாகிவிடும். :-)))

http://www.fjordtravel.no/program_arctic_summer.html


**

யாருக்குத்தான் பிரச்சனை இல்லை?
பிரச்சனை உள்ளவனிடம் , எதைத்தின்றால் புத்தம் தெளியும் என்று இருப்பவர்களிடம் நிலா கதை சொல்லி காசு தேத்தலாம். தவறான வழிகாட்டுதல்கள் கொலையைவிட பாவம்.

நிலவோ சூரியனோ தோன்றுவதும் இல்லை மறைவதும் இல்லை. அது பாட்டுக்கு அதன் விதிப்படி சுத்திக்கிட்டு இருக்கும்.

பூமியில் இருக்கும் நாம் கவுந்தடிச்சு சுத்துவதால் நிலவின் பவுர்ணமி அமாவசை எல்லாம்.

**

சுப்பையா அவர்கள் முதலில் ஒரு தொலை நோக்கியில் நிலவை கண்டு இரசிக்கக் கடவது. :-))

**

அமாவாசை, பெளர்ணமி தினங்களில் மனித மனங்களில் மாற்றம் உண்டு என்று உளவியல் ரீதியாகவோ, விஞ்ஞானபூர்வமாகவோ எந்த ஆதரமும் இல்லை. டாக்டர் ருதரன் மேலும் விளக்கலாம்.

சுலபமாகச் சொன்னால் , ஒரு பொருளின் எடை அது மற்ற ஒரு பொருளிடம் இருந்து இருக்கும் தூரம் போன்றவை ஒன்றின் மீது ஒன்று செலுத்தும் சக்தியை தீர்மானிக்கும்.

நிலவின் மீதான பூமியின் பிடி குறைந்து கொண்டே வருகிறது. நிலவு பூமியைவிட்டு விலகி தனியாகவோ அல்லது வேறேதும் கோளின் எல்லைக்கு உட்பட்டு அதன் துணைக்கோளாகவோ அல்லது எங்காவது மோதி நாசமாகவோ போக வாய்ப்பு உள்ளது.

**

ஒன்றின் மீது ஒன்று செலுத்தும் சக்தி அதன் பரப்பில் வாழும் எல்லா ஜடங்களையும் பாதிக்கும்.

மனிதர்கள் நிலாவிற்கு போனால் எப்படி அவர்களின் எடை குறைந்து உடல் மாற்றங்கள் வருகிறதோ அதுபோல பூமி‍சந்திரன் இடையே ஈர்ப்பு விசைகள் மாறி மாறி விளையாடும் போது உடல் மாற்றங்கள் நடைபெறும்.

ஆனால்.... மனிதனின் மீது ஒரு கொசு உட்கார்ந்து விளைவிற்கும் ஈர்ப்புவிசையானது முழு நிலவு மனிதன்மீது காட்டும் ஆற்றல்லைவிட அதிகமானது. கொசுவால் யாரும் மனநிலை பாதிக்கப்படவில்லை. எனவே கொசுவைவிட குறைந்த சக்தியை நம்பீது தொடுக்கும் முழு நிலவால் ஒன்றும் ஆகாது.


இது ஒரு சப்ப மேட்டர். அதை வைத்து பலன் சொல்வதும் பல்லி விழும் இடத்தை வைத்து பலன் சொல்வதும் ஒன்றே.

****

Lunacy and the Full Moon
http://www.scientificamerican.com/article.cfm?id=lunacy-and-the-full-moon

Florida International University psychologist James Rotton, Colorado State University astronomer Roger Culver and University of Saskatchewan psychologist Ivan W. Kelly have searched far and wide for any consistent behavioral effects of the full moon. In all cases, they have come up empty-handed.

By combining the results of multiple studies and treating them as though they were one huge study—a statistical procedure called meta-analysis—they have found that full moons are entirely unrelated to a host of events, including crimes, suicides, psychiatric problems and crisis center calls.

கல்வெட்டு said...

கோள் கிரகம் குறித்தான எனது பதில்கள்
http://www.tamilscience.co.cc/2009/10/blog-post_30.html

கல்வெட்டு said...
This comment has been removed by the author.
ILA (a) இளா said...

அம்மா, ஆடு, இலை, ஈ, உளி, ஊசி, எருது, ஏர், ஐயோ அம்மா, ஒருதரம் சொன்னா கேளு, ஓடிப்போயிரு..

ஹேமா said...

வாலு முழுசா எல்லாம் வாசிச்சேன்.

Anna said...

நன்றாக எழுதியிருக்கிறீங்கள். நான் சொல்லவந்த அநேகமானவற்றை கல்வெட்டே ந‌ன்றாக விளக்கி எழுதி விட்டார்.

எவ்வ‌ள‌வோ அறிக்கைக‌ள், ஆய்வுக‌ள் செய்தாச்சு. எவையுமே சந்திரனின் இயக்கத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் உள்ளதாகக் கூறப்படும் ஒருவித‌ குறிப்பிட‌த்த‌க்க‌ நேர்நிலையான‌ ச‌ம்ப‌ந்த‌த்தையும் காட்ட‌வில்லை.(significant positive correlation, இதுக்கு நான் எழுதிய‌ த‌மிழ் ச‌ரியா தெரிய‌வில்லை)

ஆனாலும் பலரைக் கொஞ்சமாவது அவர்களின் நம்பிக்கைகளையும் மீறி அவர்களைச் சுற்றியுள்ள சான்றுகளை திறந்த மனதுடன் பார்க்க முயற்சிக்கச் செய்தல் சரியான கடினமான விடயம்.

மஞ்சரி said...
This comment has been removed by the author.
மஞ்சரி said...

சிந்திக்க வைக்கும் பதிவு

கலக்குறீங்க வாலு :-))

Sabarinathan Arthanari said...

கோள் கிரகம் குறித்தான எனது பதில்கள்
http://www.tamilscience.co.cc/2009/10/blog-post_30.html

பதில் போட்டாச்சு :)

Romeoboy said...

ஹ்ம்ம் ஹ்ம்ம் இது வேலைக்கு ஆகாது தல . நான் கிளம்புறேன் படிக்கிறதுக்குள்ள தாவு திந்துடுச்சு ...

பீர் | Peer said...

ஒரு சர்ச்சைக்குறிய பதிவா? :)

இளைய கவி said...

மாப்பி நீ ஒரு ஈரோட்டுக்காரன் அப்டிங்கறது நிறுபித்துள்ளாய்.

இளைய கவி said...

ஏன் மாப்பி அடுத்தவன் டவுசர் மேலெயே ஒரு கண்ணா சுத்துற ?

Rajan said...

தல வணக்கம் ! நல்லா இருக்கீங்களா !

Rajan said...

அகில பாரத வால் பையன் ரசிகர் நற்பணி மன்றங்கள் மற்றும் வால் பேரவை

அண்ணன் அஞ்சாநெஞ்சன்
ஈரோட்டுக் கருஞ்சிறுத்தையின் வால் பிடித்து நடை பழகிய தோழர்களே வாரீர் வாரீர் வாரீர் !

தனியொரு மனிதனாக அமெரிக்க , ஐரோப்பிய வல்லரசுகளிளிருந்து உள்ளூரில் லங்கா கட்டை உருட்டும் போங்கு சோதிடர்கள் வரை தனது எதிர்ப்பினை பதிவு செய்யும் கொள்கைத் திறமும் நெஞ்சுரமும் கொண்ட நமது தன் மானத் தலைவரின் தோள்களுக்கு வலு சேர்க்கும் விதத்தில் பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண்ணில் சனவரித் திங்கள் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் மற்றும் புதிய கட்சி தொடக்க அறிவிப்பு விழா ஆகியவற்றை அ.பா.வா.பை.ர.ந. மன்றங்கள் மற்றும் வால் பேரவை சிறப்புற நடத்த திட்டமிட்டுள்ளது ....

அன்றைய தினம் நமது இயக்கத்தின் நிறுவனர் /தலைவரான அண்ணன் வால் பையன் கழகத்தை பெயரிட்டு துவக்கி வைத்து சிறப்புரையாற்ற உள்ளார்கள் என்பதனை இதன் வழி தெரிவித்துக் கொள்கிறோம் ...

பகுத்தறிவே தொகுத்தறிவு!

விழு -எழு!
இவண்,
ராஜன் ராதா மணாளன் ,
அ.பா.வா.பை.ர.ந. மன்றங்கள் மற்றும் வால் பேரவை

Unknown said...

//அதை தவிர பத்து பைசாவுக்கு பெருமானமுள்ள சிறு செயலைக்கூட சந்திரனால் ஏற்படுத்த முடியாது, அதனால் ஏற்படும் ஒரே நன்மை சுப்பையா வாத்தியாரின் பதிவில் இருப்பது போல் கதையளந்து காசு சம்பாரிக்கலாம்!//

ரொம்ப சரியாய் சொல்லிடிங்க போங்க..,

அருள்மொழியன் said...

தன்னையறிதலை விட்டுவிட்டு வாழ்க்கையை மூடநம்பிக்கைகளில் தேடுவோரை ரஜினி ஸ்டைலில் சொல்லுனும்னால்

"ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது"

Rajan said...

//"ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது"//

அண்ணன் வாழ் பையன் அவர்களின் உரை வீச்சிலிருந்து

" தோழர்களே அனானிகளிடமிருந்து காப்பாற்றுங்கள் ! ஆண்டவனை நான் பார்த்துக் கொள்கிறேன் "

மூலம் "கரிவால் பெருவளத்தான் " - ஆசிரியர் சோரு

௦௯/௧௦/௨௦௦௯ ஈரோட்டு செயற்குழு தீர்மானங்கள் ,
அ.பா.வா.பை.ர.ந. மன்றங்கள் மற்றும் வால் பேரவை

Anonymous said...

அய்யோ ஐயோ தருமி அய்யா வந்திருக்காக !!!!
சார் நீங்களும் காமெடி பண்ண ஆரம்பிச்சாச்சா !!! நண்பர்கள் விளையாண்டுகிறாங்க போலருக்கு. லூசில விடுறதை லூசில் விடுங்க.

நமக்கு இருக்கவே இருக்கு பைபிள், குரான், கீதை எல்லாம்.

Rajan said...

சோதிடம் பற்றி உண்மையிலேயே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் சட்டையை கழட்டிக் கொண்டு கோதாவில் குதிக்க சரியான தருணம் வந்து விட்டது .

அங்கனம் தாங்கள் கூறும் சோதிடம் உண்மையெனில் எதிர் வரும் 2011 சட்டப் பேரவை இடைத் தேர்தலில் இன மான சிங்கம் அண்ணன் வால் பையன் தலைமையிலான எமது கழகம் மொத்தம் எத்தனை தொகுதிகளைக் கைப்பற்றும் ( தோழமைக் கட்சிகளின் எண்ணிக்கை நீங்கலாக ) என்பதை சூரிய சந்திர புளூடோ கணக்குகளின் படி நிர்ணயித்துச் சொல்லக் கூடுமா ? என அகில பாரத வால் பையன் ரசிகர் நற்பணி மன்றங்கள் மற்றும் வால் பேரவை சார்பில் வலது தொடை தட்டி சவால் விடப் படுகிறது;

பார்வை ; சற்று முன் தலைவரிடமிருந்து வரப்பெற்ற தொலைபேசிச் செய்தி

உண்மை அறிக்கை உத்தரவுப்படி ,

(ஒப்பம்) மாண்புமிகு முனைவர் வால் பையன் ,
தலைவருக்காக - ராஜன் ராதாமணாளன் ,அகில பாரத வால் பையன் ரசிகர் நற்பணி மன்றங்கள் மற்றும் வால் பேரவை

Anbu said...

:-))..Raittu..

அப்துல்மாலிக் said...

ராசிப்பலன் பார்த்து எதையுமே செய்யும் மேதாவிகளூக்கு இது ஒரு சாட்டையடி என்று கூட சொல்லலாம்

புலவன் புலிகேசி said...

//ஆனால் யாருக்கும் அப்படி கேள்வி கேட்க தோன்றுவதில்லையே என்பது தான் பெரும் வருத்தம்!//

இந்த வருத்தம் எனக்குமிருக்கு தல..இவனுங்கல்லாம் படித்த தர்க்குரிகள்....சோசியமாவது வெங்காயமாவுது.....

புலவன் புலிகேசி said...

//புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப சோதிடமும் வளர்ச்சி அடைந்து கொண்டு தான் இருக்கிறது வால் பையன்.//

நாங்களும் நாட்டுல நடக்குற விசயங்கள வச்சி சோசியம் சொல்லுவோம்...என்னய்யா சோசியம்...

புலவன் புலிகேசி said...

//ஒன்னு மட்டும் நிஜம் வால். ஜோசியம் சம்பந்தமான வானிலைக் கணக்குகள், சூத்திரங்கள் நிஜம். அதன் புரிதலும், அதன் தாக்கமும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட முடிந்தால் ஒரு தீர்மானமான முடிவுக்கு வர இயலும். அது வரை நம்ம கெரகம் சரியில்லைன்னு இருக்கதான் முடியும் போல.//

அது அப்படி இல்லீங்க.அந்த காலத்து அறிவியலாளன் கண்டு பிடிச்ச சில விசயங்களுக்கு முலாம் பூசி சோசியமாக்கிட்டாங்க...

Samuel | சாமுவேல் said...

//
Florida International University psychologist James Rotton, Colorado State University astronomer Roger Culver and University of Saskatchewan psychologist Ivan W. Kelly have searched far and wide for any consistent behavioral effects of the full moon. In all cases, they have come up empty-handed.
//

இந்த நாலு பேர் ஆராய்ச்சியில் behavioral சம்பந்தம் கண்டுபிடிச்சாலும், இந்த விஷயங்களை நம்புவது இல்லை....

சுருக்கம்மா ஆராய்ச்சி எல்லாமே சரியானதும் இல்லை, நம்பிக்கை எல்லாமே தப்பானதும் இல்லை....

கல்வெட்டு said...

// Sammy said...

சுருக்கம்மா ஆராய்ச்சி எல்லாமே சரியானதும் இல்லை, நம்பிக்கை எல்லாமே தப்பானதும் இல்லை....//

தயவு செய்து இப்படி ஒப்புமை செய்து குழப்பாதீர்கள் :-(((

ஆராய்ச்சி:
அறிவியல் உண்மைகள் மீண்டும் மீண்டும் நிரூபிக்க முடிந்தவை. அப்படி இல்லாத பட்சத்தில் அது உண்மையாக இல்லாமல் இன்னும் ஆராய்ச்சி செய்யப்படும் தியரியாகவே இருக்கும்.

உண்மை என்று நிரூபிக்கமுடியும் ஒரு தியரி எதிர்காலத்தில் தவறு என்று நிரூபிக்கபடும்போது பழைய தியரி குப்பைக்கு போகும்.

நம்பிக்கை:
நம்பிக்கை என்பது எக்காலத்திலும் நிரூபிக்க முடியாதது. அதனாலேயே அது இன்னும் நம்பிக்கையாய் இருக்கிறது.

**
கடவுள் இருக்கிறார் எனப்து நம்பிக்கை.

கடவுள் என்ற தமிழ் எழுத்தை யுனிகோடில் எழுத என்ன செய்யவேண்டும் என்பது ஆராய்ச்சி.

‍‍‍‍‍‍‍=================================

பேர் அண்டு லவ்லி, மைக்கேல் ஜாக்சன், ஜோதிடம் மற்றும் சில மனிதர்கள்
http://kalvetu.blogspot.com/2007/11/blog-post_20.html

மதங்களின் மூத்திரச் சந்துகளின் வழியாக வரும் கோர்வையற்ற நாற்றம்
http://kalvetu.blogspot.com/2007/12/blog-post.html

கம்யூனிசம்-காந்தியம்-நாடி ஜோதிடம் மற்றும் பக்கவாட்டு நவீனத்துவம்
http://kalvetu.blogspot.com/2007/10/blog-post_26.html

Samuel | சாமுவேல் said...

கல்வெட்டு
//தயவு செய்து இப்படி ஒப்புமை செய்து குழப்பாதீர்கள் :-((( //

நான் ஏன் குழம்பி போயிருக்கேன் சொல்லிடுறேன். சமீபத்தில் வந்து science journal, publish ஆகி, எல்லா முன்னணி நாளிதழிலும் வெளியான ஒரு ஆராய்ச்சி...."பெண்களுடைய அழகை (அதுவும் குறிப்பிட்ட...(இங்கு சொல்லமுடியாத)) தினமும் பத்து நிமிஷம் உத்து பார்த்தா, ஆண்களின் வாழ்நாள் பல நாள் அதிகமாகுமாம், அது அரை மணிநேரம் gym உடற்பயிற்சி செய்ததற்கு இணையாம்"

நிருபிசிட்டேனு சொல்றாங்க....எங்க ஊர்லா இதை பண்ணேன்னு வச்சுகோங்க, பனமரத்துல கட்டி வச்சு அடிச்சா அன்னிக்கே உயிர் போயிடும்.....இன்னும் இதை விட லூசு தனமான ஆராய்ச்சி வாரா வாரம் படிச்சிட்டு தான் இர்ருகோம் நாளிதழ்களில்....

//உண்மை என்று நிரூபிக்கமுடியும் ஒரு தியரி எதிர்காலத்தில் தவறு என்று நிரூபிக்கபடும்போது பழைய தியரி குப்பைக்கு போகும். ///

வெறி குட்.....அப்ப அது ஒரு variable....இன்னும் நூறு வருஷக்கு அப்புறம், உலகம் முக்கோணம் அப்படின்னு கண்டுபிடிக்கலாம் சொல்றீங்களா?

குறிப்பு ---நன் இங்கு எங்கயும் ஜோதிடத்தை நியாய படுத்த வில்லை, அதில் சுத்தமாக நம்பிக்கை இல்லாதவன்.

பின்னோக்கி said...

வால் சரியான பார்ம்ல இருக்கீங்க. சிக்ஸரா அடிக்குறீங்க. அறிவியல், ஜோதிடம்னு எல்லாத்த பத்தியும் எழுதுறீங்க.

பின்னோக்கி said...

வால் சர்ச்சைக்கு உரிய பதிவுன்னு ஒன்னும் இல்லை. உங்க கருத்து, உங்க பதிவுல போடுறீங்க. இதுல மாற்று கருத்து இருக்குறவங்க அவங்க பதிவுல போடுறாங்க. அவ்வளவு தான்.

Atchuthan Srirangan said...

சோதிடம் சரியாக இருக்கலாம், பிழையாக இருக்கலாம் அல்லது அயோக்கியத்தனமாகக் கூட இருக்கலாம்.

சோதிடம் அறிவியலே. வானவியலை அடிப்படையாகக் கொண்ட அறிவியல். தமிழில் 'தெய்வம்' என்ற சொல்லுக்கு 'விதி' என்ற பொருளும் உண்டு. 'விதி'யை யார் விதித்தார்கள், யாருமல்ல. நாமேதான். அதனால்தான் சங்கப் புலவன் 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்று மிக உறுதியாகக் கூறினான்.

சோதிடம் ஒரு கைவிளக்கு. இரவில் செல்கிறோம். சாலையின் நடுவில் ஒரு பள்ளம் இருக்கிறது. கைவிளக்கு இருந்ததால் பள்ளம் தெரிகிறது. விலகிப்போய்விடுகிறோம். ஆனால் கைவிளக்கை எப்பொழுது, எந்த அளவுக்கு நம்பிப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு சோதிடத்தைப் பயன்படுத்தினால் அறிவுடையவன்.

Rajan said...
This comment has been removed by the author.
Rajan said...

/சோதிடம் ஒரு கைவிளக்கு//

அப்ப அவனவனே புடிச்சுக்கனும் , அடுத்தவனுக்கு வெளக்கு புடிச்சு காசு கேக்க கூடாது

Atchuthan Srirangan said...

நான் சொன்னதில் தப்பு என்றால் மன்னிக்கவும்

Rajan said...

மன்னிக்க நான் யாருங்க !

மொட்டையா எல்லாத்தையும் நம்பாதீங்கன்னு சொல்றேன் அவ்வளவுதான் !

இதனால தான் சேனலுக்கு சேனல் மைக்கும் கையுமா ஜோசியம் பாக்கறேன்னு ஆரமிச்சுடரானுங்க

ராஜவம்சம் said...

//எனக்கிருக்கும் வாய்க்கு குடும்ப சோதிடம் என்ற புத்தகத்தை மட்டும் வைத்து கோண்டு மாதம் ஐம்பதாயிரம் சம்பாரிப்பேன், ஆனால் அந்த பொழப்புக்கு.//

நாத்திகத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஜோதிடத்தில் கரை கண்டவர்கள் தானோ

என் வாழ்நாளில் ஒரு முறைகூட ஜோதிடம் பார்த்தது கிடையாது காரணம் தெரியாது பார்க்கனூனு தோனல இனிப்பாக்கப்போறதும் இல்லை

vanila said...

வால்.. நல்லா இருக்கு. ஆனா ஜோதிட சாஸ்திரம் என்பது அறிவியலில் ஒரு பகுதி.. Yes its a science.

ஆரூரன் விசுவநாதன் said...

கங்கை வென்றான், கடாரம் வென்றான் என்று பாராட்டப்படும் ராஜராஜசோழன் தான் முதன்முதலில், ஆரியத்தின் வாசலை தென் நாட்டிற்க்கு திறந்துவிட்டு மாபெரும் சமுதாய சீர்கேட்டினை தொடங்கி வைத்தான். 5000 பார்ப்பணர்களை கொண்டு வந்து, சதுர்வேதி மங்களங்கள் அமைத்து, ஆரிய அயோக்கியத்தனங்களுக்கு வித்திட்டான்.

அதற்குப் பிறகுதான், இந்த நாற்றம் பிடித்த, நவக்கிரகங்களெல்லாம். தேவதாசி முறையும் அவனாலே வளர்க்கப்பட்டது.

வர்ணாசிரமக் கொள்கையெல்லாம் அதன் பின்னால் வந்ததுதான்.


அதன் பின்னால் இந்த அயோக்கியத்தனத்தை வளர்த்த பெருமை முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கும், இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்குக்குமே சேரும்.


15, 20 ஆண்டுகளுக்கு முன்னால், கோவில்களில் நான்கு வயதான பெரியவர்களையும், சில குழந்தைகளை மட்டுமே காணமுடியும். பிரதோச வழிபாடு முடிந்து, சாமி தூக்கி சுற்றிவர கூலிக்கு ஆள் தேடியது நினைவிருக்கிறது. ஆனால் இன்று...

இன்று திருவண்ணாமலை கிரிவலம் செய்யும் கூட்டம் இருபது வருடங்களுக்கு முன் எங்கே சென்றிருந்தது...

முதலாளிதத்துவ பொருளாதாரக் கொள்கைகளும், தடையில்லா வாணிகக் கொள்கையும் இங்கே, உயர் நடுத்தர வர்க்கத்தை, ஏழையாகவும், ஏழையை, பிச்சைகாரனாகவும் ஆக்கியிருக்கிறது.

கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணம் இது என்று அறியும் அறிவுமிலார்-என்பான் பாரதி

இப்படி அறிவிழந்த மனிதன் தன் அவல நிலைக்கு எவனோ காரணமென்று நம்பி, இப்படி நவக்கிரகங்கள் பின்னால் திரிகிறான்.

அதை இவர்கள் காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அருமையான பதிவு வால்

வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

நிறைய எழுதியிருக்கீங்க

சரியான்னு யோசிக்கிர அளவுக்கு எனக்கு தெரியாது

Sanjai Gandhi said...

//அதன் பின்னால் இந்த அயோக்கியத்தனத்தை வளர்த்த பெருமை முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கும், இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்குக்குமே சேரும்.//

என்னா ஒரு கண்டுபிடிப்புடா சாமி? வாஜ்பாய் ஆட்சி காலத்துல கோயில்கள் கூட மூடி வச்சிருந்தாங்களா சார்?. நரசிம்மராவ், மன்மோகன் சிங் எப்டி இந்த அய்யோக்கியதனத்தை வளர்த்தாங்கன்னு சொன்னிங்கன்னா புண்ணியமாப் போவும் சார்.

புலவன் புலிகேசி said...

தல இந்த வார டரியல்ல இந்த பதிவையும் சேத்துருக்கேன்

ஆரூரன் விசுவநாதன் said...

//சஞ்சய் காந்தி//

நரசிம்மராவ், மன்மோகன் சிங் எப்டி இந்த அய்யோக்கியதனத்தை வளர்த்தாங்கன்னு சொன்னிங்கன்னா புண்ணியமாப் போவும் சார்.


தடையில்லா வாணிகம் என்ற ஒரு மா(முட்டாள்த்தனத்தை) தொடங்கி வைத்த பெருமை இந்த இருவரைத்தான் சேரும்

Sanjai Gandhi said...

//தடையில்லா வாணிகம் என்ற ஒரு மா(முட்டாள்த்தனத்தை) தொடங்கி வைத்த பெருமை இந்த இருவரைத்தான் சேரும் //

ஆரூரான் சார், அவரா நீங்க? ரைட்டு விடுங்க.. இந்த தாராளமயம் இல்லைனா இன்னும் எவ்வளவி பிச்சைக்காரர்கள் இருந்திருப்பார்களோ?. சரி விடுங்க. நம் பிணி குறை சொல்லி வாழ்வதே.

hayyram said...

///இவ்வளவு தூரம் வந்துரிக்கிங்க!
எதாவது சொல்லிட்டு போங்க///

நன்றி வணக்கம்.

ஷாகுல் said...

ரொம்ப நாளாக சர்ச்சைகுறிய பதிவு எழுதவில்லை என்று வருத்தப்பட்ட அ.மு.செய்யதுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!//


சரி ரைட்டு

Nathanjagk said...
This comment has been removed by the author.
Nathanjagk said...

சோதிடத்தை நாடிப் பிடித்து அல்லது நாடி பிடித்து அறிவியலை விளக்கியிருக்கிறாற் போல் தோன்றுகிறது.

தர்க்கவியலால் மட்டுமே நிரூபிக்கப்பட்ட தத்துவங்கள் என்று எதுவுமே நம்மிடம் கிடையாது. அதாவது hypothetically proven / experimented science! ஸ்பெக்ட்ரல் லைன்ஸ் விழும் குறையுள்ளதுதான் மைக்ரோஸ்கோப் என்ற உண்மையில் மெட்டீரியல் ஸயன்ஸும் மைக்ரோ பயாலஜியும் கேள்விக் குறியாகின்றன. நேரம், காலம் என்பது ஸீஸ்மியம் அணு வெளியேற்றும் கதிர்களின் நிலைத்தன்மைக் கொண்டு மட்டுமே முடிவாகிறது எனும் போது காலம் என்பது குழப்பமாகிவிட்டது.. அப்புறம் ஈரப்பு விசை, விரிந்து விரையும் பால்வெளி, டாரிவின், கெப்லர், ரெபரென்ஷியல் ப்ரேம்ஸ், சார்பியல் என்று படிக்கும் போது அறிவியல் நமக்கு தந்தது ப்ரபஞ்சத்தின் மிக மிகக் கொஞ்சம் என்று fractionalஆகப் புரிகிறது.

Nathanjagk said...

LHC என்ற உலகமகா பரிசோதனையை உலகமே சேர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது... இன்னும் நடத்திக்........!

முடிவு எட்டிய பாடு காணோம்..!

நீங்கள் பெருமிதமாகவும் தன்னம்பிக்கையாகவும் நம்புகிற சந்திர சுழற்சி, ஆகர்ஷணம் இவற்றிலெல்லாம் மேற்கத்திய அறிவியலறிஞர்களுக்கே நம்பிக்கையில்லாமல் போயி இந்த மாதிரி உலகின் மிகப் பிரம்மாண்ட சோதனையை பெரும் பொருட்செலவில் நடத்திக் கொண்டிருக்கிறது.

உங்களைப் போலவே அனைத்து ஆத்மாக்களும் - அதாவது ஈரோடு முதல் இஸ்தான்புல் வரை உள்ள மக்கள், உயிரினங்கள் அனைத்தும் - இந்தமாதிரி நிலா, பூமி வரையப்பட்ட படத்தைப் பார்த்து... அட்ரா சக்கை.. இதுதாம்பா கரீக்ட்டு.. பூமி இப்படிதான். சந்திரன் இதுதான்.. கிரக சுழற்சி, ஈர்ப்பு விசை எல்லாம் இப்டி இப்டித்தான் என்று புரிந்து கொள்வார்களேயானால்.... ஸஸ்ஸ்ப்பாடா இந்த ஸயின்டிஸ்ட்கள் பாடு கொஞ்சம் சுலபமாகிவிடும். அல்லவா?

Nathanjagk said...

// ஆனால் உண்மையில் சூரியனை தவிர வேறு எந்த கோள்களும் கதிரியகத்தை ஏற்படுத்த முடியாது //
என்று நீங்கள் எளிமையாக சொல்லிவிட்டிருக்கிற உண்மையை அல்லது தத்துவத்தை வேறு யாராவது ஸயின்டிஸ்ட்கள் ஒத்துக் கொள்ளுவார்களா என்று தோன்றுகிறது. ஏனென்றால் சில ஆண்டுகளுக்கு முன்புதான் (ஆகஸ்ட் 2006) ப்ளூட்டோவை 'குடும்பத்திலிருந்து' விலக்கி வைத்தது அறிவியல்! இதுபோல் எந்நேரமும் திடுக் அதிர்ச்சிகள், மாற்றங்கள், திருத்தங்கள் கொண்டதுதான் அறிவியல். ஆக அறிவியலில் நிரந்தர உண்மை / நிராகரிப்பட்ட பொய் என்று எதுவுமே கிடையாது!
இவ்வளவு கஷ்டப்பட்டு புவியீர்ப்பு விசை என்றால் என்ன, எனர்ஜி / டார்க் எனர்ஜி என்றால் என்ன என்பதை நிரூபிக்க (hypothetically..!!) மிகுந்த பொருட்செலவில் மெனக்கெட வேணாமே?
மேலதிக விபரங்களுக்கு http://prabanjapriyan.blogspot.com/2009/11/blog-post_25.html
என்ற இடுகையைப் போய் பாருங்கள்..! படிக்க ஆளில்லாமல், மிக முக்கிய ஆக்கங்கள் அவ்விடம் சிந்திக் கிடக்கின்றன.
நான் சொன்ன ஒரு வார்த்தைக்காக இந்த LHC (Big Bang Machine) பற்றி எழுதிய நண்பன் ப்ரபஞ்சப்ரியனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

Nathanjagk said...

இந்த பிளாக் உலகில் என்னை மிகவும் திடுக்கிட வைத்தது - அறிவியலுக்காக மக்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தைதான்...! அபாரம் மக்கா!!

இருந்தும் எந்த கவலையுமற்று தன்பாட்டுக்கு உழைத்துக் கொண்டிருக்கும் ப்ரபஞ்சப்ரியன் மேல் நான் ப்ரபஞ்சம் அளவுக்கு ப்ரியம் கொள்கிறேன்!

சரி அதை விடுங்கள்... சிம்பிளா நான் சொல்ல வந்தது இதுதான்: வெள்ளைத்தாடி ஸயின்டிஸ்டுகளுக்கே.. கண்டுபுடிச்ச விஞ்ஞானத்தை விளக்கத் தெரியலே..! இன்னும் தர்க்கவியலா ஒத்துக் கொள்ளப்படாத / ஒத்துக் கொள்ள முடியாத உண்மைகள்தான் நீங்க படம் போட்டு விளக்கியிருக்கிற சந்திர சுழற்சி மற்றும் ஆகர்ஷணம்!
அதாவது அறிவியலும் மொத்தமுமா இன்னும் நிரூபிக்கப் படலே என்னும் போது (பாருங்க ஒரு காமடியை... புவியீர்ப்பு விசை டுபாக்கூர் என்று நிரூபணம் ஆகிவிட்டால்.. கிட்டத்தட்ட உலகில் கண்டுபிடிக்கப்பட்ட 70% அறிவியல் தத்துவங்கள்... இம்மீடியட்டாக காலி ஆகிவிடும்..! டைம் என்பதே சும்மா, அதில் தப்பு இருக்கு என்று ஆகிவிட்டால்....... அட... முழிக்காதீங்க... புவியீர்ப்பு விசையே காலாவதியாகிவிடும்!!!)

Nathanjagk said...

எனக்குப் பிடிச்ச தற்காலத்திய தத்துவயியல் அறிஞர் Alex Rosenberg எழுதிய Philiosophy of Science என்ற புத்தகத்திலிருந்து...
Philosophy deals with two sets of questions:

First, the questions that science - physical, biological, social, behavioral cannot answer now and perhaps may never be able to answer.

Second, the questions about why the sciences cannot answer the first lot of questions.
(ஹிஹி புரொபஸருக்கு ஆனாலும் நக்கல் ஜாஸ்தி!)

என்னால் அந்த கேள்விகளுக்கு அறிவியலிடமிருந்து விடை கிடைக்கவில்லை. உங்களுக்கு??

என் எதிர்பார்ப்பு இதுதான்:

சோதிடத்தை எதிர்க்க வேண்டுமானால் அதை சோதிடமாகவே எதிர்த்து விட்டுப் போங்கள். ஆனால், அறிவியல், வானவியல் என்று எதிர்-தத்துவங்களைக் கொண்டு சோதிடத்தையோ அல்லது வேறு ஏதாவது (வாஸ்து, பிளாக் மாஜிக், வூடு, பி.சூ., ஆவி, அருந்ததி, ஈரம், வெங்காயம்) தத்துவங்களையோ நிராகரிக்க முற்படுகிறீர்களேயானால்... ஐ ம் ஸாரி... அறிவியலே ஒரு முரண்பாடுதான். முரண்பாட்டைக் கொண்டு இன்னொரு முரண்பாட்டை (சோதிடம் எப்படியோ அப்படியே அறிவியலும்..!) நிராகரிக்க முடியாது.

சோதிடத்தை நிரூபிக்க முடியாதது போல அறிவியலையும் (இப்போதைக்கு) நிரூபிக்க முடியாது.

இந்த புள்ளியில் இரண்டு தத்துவங்களும் (சோதிடம் அன்ட் அறிவியல்) ஒரே நிலையில்தான் இருக்கின்றன.

நல்ல சம்பளம் கிடைக்கிறது என்பதற்காக கலிலீயோ, கெப்லர், லாரன்ஸ், நியூட்டன், ஜேஜே தாம்ஸன், சொன்னவற்றை நம்பிக் கொண்டு, அறிவியலைக் கற்றுக் கொண்டு வாழ்கிறோம்.

சிலருக்கு மனத்திருப்தி கிடைப்பதால் எதைப் பற்றியும் கவலைப் படாமல் சோதிடத்தை நம்பி வாழ்ந்து கொள்கிறார்கள்.

So... ரெண்டுமே ஒண்ணுதான்!

ஆ.ஞானசேகரன் said...

//ஆனால் அந்த பொழப்புக்கு...................//

ம்ம்ம்ம்ம்.... நடக்கட்டும்

விஜய் said...

நண்பர் ஜெகனின் கருத்தை நான் ரிபீட்டுக்கிறேன்


விஜய்

Anonymous said...

பெறியவறின் பதிவை இப்ப தான் பார்த்தேன் அடக் கடவுலே இவறைப் பார்த்து தான் நம்ம தள -யும் அடிக்கடி "மதங்கலை" கடிச்சு வச்சிடுராரா.

வலைஞன் said...

//5000 பார்ப்பணர்களை கொண்டு வந்து, சதுர்வேதி மங்களங்கள் அமைத்து, ஆரிய அயோக்கியத்தனங்களுக்கு வித்திட்டான்.//

உலகம் அழிவதும் பார்ப்பனராலே!
வாடும் மலர்களும்
பார்ப்பனராலே!
நதிகள் வரள்வது
பார்ப்பனராலே!
பெரியோ(யா)ர்கள் கடையை விரித்தார் பார்ப்பனராலே!

(பாசம் பட பாட்டின் மெட்டில்
பாடவும்)

சிவாஜி said...

அண்ணா, நான் "மறைந்திருக்கும் உண்மைகள்" என்ற ஓஷோ புத்தகம் படித்தேன், இன்னும் படித்துக் கொண்டும் இருக்கிறேன். ஒருவேளை நீங்கள் தேடுவது கிடைக்க இந்தப் புத்தகம் உதவலாம். எனக்கு ஓரளவிற்கு திருப்தியையும் நம்பிக்கையையும் இந்தப் புத்தகம் கொடுத்திருக்கிறது.

அன்புடன்,
சிவாஜி

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

ஆஹா! அருமை ! 'சரளமான நடை ' என்பார்களே, அது இதுத்தான் ! வழக்கமாக இதுபோன்ற விஷயங்களை எழுதினால், பழைய பஞ்சாங்கங்கள் வரிந்துக்கட்டிக்கொண்டு வரத்தான் செய்யும். ஆனால் உங்கள் வீச்சின் தாக்கம் கண்டு பழசுங்க யாரும் வரவில்லை கவனித்தீர்களா?! சும்மா விளாசுங்கள்! (இந்தப் பதிவை எனக்கு அறிமுகம் செய்துவைத்த ' பின்னூடப்பிதாமகன் ஜெகன் ' அவர்களுக்கு நன்றிகள் பல.) இதுப்போல நிறைய எழுதுங்கள் வாலு !

கூடுதுறை said...

வெளி ஊரில் உள்ளேன். வருகிறேன் ஈரோடுக்கு வந்து கச்சேரி வைத்து கொள்கிறேன்

வாத்தியார் வேண்டாம் என்று தான் சொல்வர் அனால் நான் விட மாட்டேன்

Rajan said...

//நான் விட மாட்டேன்//

போ ! போ ! வீட்ல யாராவது பெரியவங்க இருந்தா வரச்சொல்லு

Anna said...

ஜெகநாதன்,

WOW! நீங்கள் உங்கள் கருத்துக்களை மிதமான நம்பிக்கையுடன் எழுதினாலும், சொல்லும் விடயங்களை மிகப் பிழையாக விளங்கிக் கொண்டுள்ளீர்கள் என்று மட்டும் தெரியுது. சில இடங்களில் நீங்களே உங்களைக் குழப்பிக் கொண்டுள்ளீர்கள் போலுல்லது.

நீங்கள் சொன்ன அந்தப் புத்தகத்தில். அவ்வரிகளில் Alex Rosenberg தத்துவவியலின் வரைவிலக்கணத்தைத் தான் கூறுகிறாரே ஒழிய விஞ்ஞான பரிசோதனைகளைப் பற்றி அல்ல. அவரே

"Now of course, there might not be any questions that the sciences cannot answer eventually, in the long run, when all the facts are in, but there certainly are questions that the sciences cannot answer yet. These include new questions science hasn't had a chance to answer because it has only just noticed them and doesn't yet have either the experimental equipment or the right theories to deal with them. For example, every year high-energy physics faces new questions about matter that it could not have solved or even entertained before the latest particle accelerators came on-line. There are also questions that scientists have faced for millennia but only at present think themselves able to answer. For example, most biologists now believe they can answer questions about human nature, the origins of man, and the nature of life that have perplexed science and philosophy since their beginnings. And there are other questions that are equally old and still remain unanswered. For example, questions about consciousness, thought, sensation, and emotion remain unsolved..........As previously noted, at various times in the history of science, questions at first deemed unanswerable by science, and addressed by philosophy, have been expropriated by science. In fact the history of science is the story of how each of the sciences emancipated itself from philosophy: mathematics in the time of the ancient Greeks, physics in the seventeenth century, chemistry one hundred years later, biology in 1859 with the publication of Charles Darwin's Origin of Species, psychology in the early part of the twentieth century, and linguistics and computer science in our own lifetimes.

என்று மேலும் கூறுகின்றார்.

ஆனால் மேற்சொன்னதற்கும் இந்த சந்திர/சோதிட விவாதத்திற்கும் என்ன தொடர்பு?

"சோதிடத்தை எதிர்க்க வேண்டுமானால் அதை சோதிடமாகவே எதிர்த்து விட்டுப் போங்கள்."
இங்கு என்ன சொல்ல வருகிறீர்கள்? அமாவாசை/பெளர்ணமி தினங்களுக்கும் மனித வாழ்க்கைக்கும் எவ்வித சம்பந்தமும் இருப்பதாக கூறும் சான்றுகள் எதுவும் இல்லை. இதுவரைக்கும் இந்தக் கேள்வியைப் பரீட்ச்சித்து வெளியான அறிக்கைகள் அவ்வாறு எந்தத்தொடர்புகளும் இருப்பதைக் காட்டவில்லை. அதனால் அமாவாசை/பெளர்ணமி தினங்களுக்கும் மனித வாழ்க்கைக்கும் தொடர்புகள் உண்டு எனும் கோட்பாடு அனேகமாகத் தவறானது என்று கூறுவதில் என்ன பிழை?

Anonymous said...

//15, 20 ஆண்டுகளுக்கு முன்னால், கோவில்களில் நான்கு வயதான பெரியவர்களையும், சில குழந்தைகளை மட்டுமே காணமுடியும். பிரதோச வழிபாடு முடிந்து, சாமி தூக்கி சுற்றிவர கூலிக்கு ஆள் தேடியது நினைவிருக்கிறது. ஆனால் இன்று...

இன்று திருவண்ணாமலை கிரிவலம் செய்யும் கூட்டம் இருபது வருடங்களுக்கு முன் எங்கே சென்றிருந்தது...//

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் திராவிட கழக ஆட்சியில் தான் பக்தி என்னும் மூடத்தனம் பெருகி விட்டது என்றா

க‌ரிச‌ல்கார‌ன் said...

//பொதுவாக இரண்டு சாத்தியகூறுகள் தான் உலகில் உண்டு, நடக்கும், அல்லது நடக்காது, நான் மூணாவது ஒரு ஆப்ஷன் தருகிறேன், நல்லது நடக்கும். கெட்டது நடக்கும் அல்லது எதுவுமே நடக்காது!, ஆக இந்த மூன்றிம் எதாவது ஒன்று உங்களுக்கு நடந்தாக வேண்டும் //

அது

க‌ரிச‌ல்கார‌ன் said...

Sabarinathan Arthanari said...
நண்பரே,

//அதை தவிர பத்து பைசாவுக்கு பெருமானமுள்ள சிறு செயலைக்கூட சந்திரனால் ஏற்படுத்த முடியாது//
அப்படியா ? அமாவாசை பௌர்ணமியில் மனிதன் மனநிலையில் ஏற்படும் மாற்றம் பற்றிய விளக்கம் என்ன ?//

பௌர்ண‌மிக்கு மொட்ட‌ மாடியில‌ போய் ச‌ர‌க்க‌டிக்க‌லாம்னு தோணும்
அமாவ‌சைக்கு பார்லேயே அடிச்சுட்டு போலாம்னு தோணும்

(நானும் பாத்துகிட்டே இருக்கேன் பின்னூட்ட‌ம் 98 லேயே நிக்குது 100 ஆக்க‌லாம்னு வ‌ந்தேன் த‌ல‌)

வால்பையன் said...

////எனக்கு கடவுள் இல்லைன்னு யாரும் சொல்லல, நான் தான் எங்கே கடவுள்ன்னு கேட்டேன்!//

itha than Vivekanandar kettar?

Vellathanaya malar neetam //

விவேக்கின் முன் பாதி கதை வெகு சுவாரஸ்யமானது! ராசாராம் மோகன்ராயின் சீடராக உருவ வழிபாட்டில் நம்பிக்கையற்று இருந்தார், ஆனால் அவரிடம் உருவமற்ற கடவுளின் மேல் நம்பிக்கையில்லை,

ஆக அவர் எங்கேயாவது இருக்கும் என்ற நம்பிக்கையில் தேடினாரே தவிர, அவரிடம் நாத்திகம் இல்லை, ராமகிருஷ்ணருக்கு காளி காட்சியளித்ததை கேள்விபட்டு அவரிடம் சீடராக சேர்ந்தார்!

நான் உனர்ந்து அவர் சிக்கி கொண்டார் என்றே கூறலாம், அவரது படிப்பும், அனுபவமும் அவரை வேறு வழியில் கொண்டு சென்றது, இல்லையென்றால் விவேக்கை இன்னேரம் கடவுளாக்கியிருப்பீர்கள்!

ராம்கியும், விவேக்கும் பார்த்தது மாய தோற்றங்கள் தானேயொழிய கடவுள் அல்ல! அம்மாதிரியான தோற்றங்கள் இன்றும் பலரால் பார்க்கபடுகிறது! அவர்களை பார்க்க நாம் தான் மனநல மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருக்கும்!

வால்பையன் said...

//மதுரை-ல் பினாயில் குடித்துட்டு விழுந்து எழுந்ததை பற்றி பதிவே போட்டார்கள் "பார்பான்"கள். (பார்பானை எல்லாத்திலையும் சேர்த்துக்கனும்) //

பத்து தலைமுறைக்கு முன்னாடி பார்த்தா பாப்பானும் பங்காளி தான்!
நீங்க கூட எனக்கு தாத்தாவாகவோ, பெரிய தாத்தாவாகவோ இருக்கலாம்!
எல்லாரும் சொந்தபந்தங்கள் தான்!


அப்புறம், பினாயில் நான் குடித்ததில்லை, உங்களுக்கு நிறைய அனுபவம் போல, நல்ல மப்பு இருக்குமா!?

வால்பையன் said...

//திரும்ப திரும்ப பாக்காத படத்துக்கு விமர்சனம் எழுதிறிங்க,... //

நீங்க அந்த படத்தை எத்தனை தடவை பார்த்திங்க!?

Anna said...

"நான் ஏன் குழம்பி போயிருக்கேன் சொல்லிடுறேன். சமீபத்தில் வந்து science journal, publish ஆகி, எல்லா முன்னணி நாளிதழிலும் வெளியான ஒரு ஆராய்ச்சி...."பெண்களுடைய அழகை (அதுவும் குறிப்பிட்ட...(இங்கு சொல்லமுடியாத)) தினமும் பத்து நிமிஷம் உத்து பார்த்தா, ஆண்களின் வாழ்நாள் பல நாள் அதிகமாகுமாம், அது அரை மணிநேரம் gym உடற்பயிற்சி செய்ததற்கு இணையாம்"

நிருபிசிட்டேனு சொல்றாங்க....எங்க ஊர்லா இதை பண்ணேன்னு வச்சுகோங்க, பனமரத்துல கட்டி வச்சு அடிச்சா அன்னிக்கே உயிர் போயிடும்.....இன்னும் இதை விட லூசு தனமான ஆராய்ச்சி வாரா வாரம் படிச்சிட்டு தான் இர்ருகோம் நாளிதழ்களில்...."


நீங்கள் குறிப்பிட்ட அந்த ஆய்வு இதுதானே?


http://timesofindia.indiatimes.com/life/health-fitness/health/Stare-at-boobs-to-live-longer/articleshow/5304136.cms

என்ன Sammy நீங்கள், நாம் ஆதாரத்துடன் எத்தனையோ விடயங்களைச் சொல்கிறோம். அத்தனையையும் முழுச் சந்தேகத்துடன்/அதில் ஏதாவது கொஞ்சமாவது உண்மை இருக்குமா என்று யோசிக்காமல் கைவிடுகிறீர்கள். ஆனால் எதாவது பத்திரிகை (அதுவும் அறிவியல் பத்திரிகை இல்லை) ஒரு ஆய்வைப் பற்றி செய்தி போட்டால் கொஞ்சம் கூட அதன் நம்பகத்தன்மையைப் பற்றி யோசிக்காமல் எப்படி அதை எடுத்துக்கொண்டீர்கள்?


நானும் எவ்வளவோ தேடிப்பார்த்தும் Dr. Karen Weatherby என்ற ஒரு மருத்துவரோ/ஆய்வாளரோ Germany யில் இல்லை. New England Journal of Medicine இலும் அவ்வாறு எந்தவொரு ஆய்வும் பிரசுரிக்கப்படவில்லை. பிறகு தான் பார்த்ததில் தெரிந்தது இந்தப் பொய்ச் செய்தி 2000ம் ஆண்டிலிருந்து மின்னஞ்சல் வழியே திரியுதாம்.

http://urbanlegends.about.com/od/medical/a/ogling_breasts.htm

யார் எதைச் சொன்னாலும் face value வுடன் மாத்திரம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

Nathanjagk said...

Analyst,

பற்றுதல் கொண்ட நம்பிக்கைகளையே எழுதுகிறேன். அதில் மிதம், திடம் அளவைகள் எப்படி சாத்தியமென்று புரியவில்லை.

அதே புத்தகத்திலிருந்து நான் மேற்கோள் காட்டியது தத்துவம் அறிவியிலிடம் தேடுகிற கேள்விகள்தான். என் மனதில் தங்கிவிட்டிருக்கிற கேள்விகள் அது.
எடுத்துப் போட்டிருக்கிற பெரிய பத்தியிலிருந்து நீங்கள் அறிந்து கொண்டது என்ன? அறிவியலிடம் தத்துவார்த்தமான அணுகுமுறையின் அவசியத்தை உரைப்பதே அது. முழுப்புத்தகமும் அறிவியலை, பரிசோதனைகளை, கண்டுபிடிப்புகளை, தொழில்நுட்பங்களை இந்த மாதிரியான தத்துவார்த்தமாக அணுகுவதே. Philosophy of Science என்பது அறிவியலின் அவதானங்கள், அணுகுமுறைகள், சமூக, நடைமுறை ரீதியான அதன் தாக்கங்கள், எதிர்-அறிவியல் (anti science) போன்றவற்றை ஆராய்வதுதான்.

Nathanjagk said...

....
/ஆனால் மேற்சொன்னதற்கும் இந்த சந்திர/சோதிட விவாதத்திற்கும் என்ன தொடர்பு?//
இதற்கும் பதில் உங்க பின்னூட்டதிலேயே இருக்கு..! தத்துவத்திலிருந்து கிளைத்ததுதான் அறிவியல், வானவியல், மருத்துவம், இயற்பியல் எல்லாம் என்கிறது நீங்கள் காட்டிய மேற்கோள். இது மிக்க சரி.. அதிலும் இந்த இடுகைக்குப் பொருத்தமான கருத்து. சமூகவியலின் அடிப்படையே தத்துவம்தான். சமூகவியலின் முக்கிய முகமான functionalism, அதன் அறிவியல் சார்ந்த தொடர்புகளின் காரணியாய் இருக்கிறது.
சோதிடம் அறிவியல் இரண்டும் வெவ்வேறு (எதிர் அல்ல) தீர்மானங்கள், இயக்கங்கள், அடிப்படைகள் கொண்ட தத்துவங்கள். சமூகவியலின் ஏதோ ஒரு அடிப்படை தேவை கருதியே இந்த தத்துவங்கள் உதித்திருக்க வேண்டும் - ஆதி காலத்திலேயே. சோதிடத்திற்கு எதிரான எதிர்-தத்துவமல்ல அறிவியல். அறிவியிலின் இயக்கம் தனியானது. அந்த அறிவியலை சோதிடத்திற்கு எதிரான தத்துவமாக பயன்படுத்தி சோதிடத்தை எதிர்ப்பது சரியான அணுகுமுறை அல்ல. ஏனென்றால் அறிவியலே இன்னும் நிறைய விடையில்லா கேள்விகளோடு இயங்கிக்கொண்டிருக்கிறது.
...

Nathanjagk said...

முக்கியமான என் பின்னூவில் நான் எந்த இடத்திலும் சோதிடத்தை ஆதரித்துப் பேசவில்லை.
சோதிடத்தை தர்க்கரீதியாக எதிர்ப்பவர்கள் பெரும்பாலும் செய்யும் தவறு இதுதான் - சோதிடத்திற்கான / மூடநம்பிக்கைக்கான வெறும் எதிர் தத்துவங்களைக் காட்டி ஒருவரின் நம்பிக்கையை நிராகரிப்பது.
எப்போதும் வரலாறு சொல்லிவரும் உண்மை - மொத்த சமூகத்தின் நம்பிக்கையான ஒரு அடிப்படை தத்துவத்தை நிராகரிக்க வேண்டுமானால் வேறொரு மாற்றுத் (எதிர் அல்ல) தத்துவம் நிறுவப்பட்டிருக்க வேண்டும். இந்த மதத்திலிருந்து வெளியேறுபவனுக்கு வெறொரு தத்துவம் தேவையாகிறது (கிறித்துவம், இஸ்லாம், புத்தம் மாதிரி மாற்றுத் தத்துவங்கள்) வெள்ளையனை வெளியேற்ற இந்தியர்களுக்கு அஹிம்சா வழி சுதந்திரப் போராட்டம் என்ற மாற்றுத் தத்துவம் தேவையாகியிருக்கிறது. மூடநம்பிக்கைகளை, ஆத்திகத்தை எதிர்க்க பெரியாருக்கு சுயமரியாதை இயக்கம் என்ற மாற்றுத் தத்துவம் தேவையாகிறது.
...

Nathanjagk said...

இந்த மாற்றுத் தத்துவ அடிப்படையை நன்றாக புரிந்து செயல்பட்டதாலேயே பெரியாரால் நேரிடையாக மக்களிடம் இயக்க முடிந்திருக்கிறது.
கடவுளை நம்புகிறவனுக்கு ஸ்லோகம் தெரியாவிட்டாலும் கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி என்ற பெரியாரின் வரிகள் ப்ரக்ஞையில் இருக்கும். இந்த தாக்கம் பெரியாரின் மாற்றுத் தத்துவ அணுகுமுறையாலேயே சாத்தியமாயிற்று. அறிவியலை சோதிடத்திற்கு / மூடநம்பிக்கைக்கு எதிர்-தத்துவமாகப் பயன்படுத்தியிருப்பாரேயானால் அவரால் தனித்த இயக்கமாக காலத்தைத் தாண்டி நிலைத்திருக்க முடியாது.
...

Nathanjagk said...

சோதிடத்தை எதிர்க்க, நிராகரிக்க அறிவியலைப் பயன்படுத்தினால் அறிவியல் அதற்கு நிகரான மாற்றுத் தத்துவமாக இருக்க வேண்டும். அறிவியல் முன்னமே சொன்ன மாதிரி ஒரு functionalism தேவையைப் பூர்த்தி செய்யும் தத்துவம். சமூகத்திற்காக அடிப்படைத் தத்துவமாக அது மாறாது.

மனிதனுக்கு எப்போதும் அடிப்படையாக, நம்பிக்கையாக ஒரு தத்துவம் தேவையாயிருக்கிறது. அந்த பற்றுதல் இல்லாமல் மனிதன் ஏன் மிருகம் கூட இயங்க முடியாது. அந்த அடிப்படை நம்பிக்கையைப் பறிக்கிறோமானால் அதற்கான மாற்று நம்பிக்கையை / தத்துவத்தை வழங்கிவிட்டிருக்க வேண்டும்.

சோதிடத்தை அல்லது மூடநம்பிக்கையை அதன் உள்ளீடுகளிலுள்ள முரண்களைக் பரிசோதிப்பது விளக்குவது போன்ற அணுகுமுறைகள்தாம் ஒரு நம்பிக்கையாளனை அந்த தத்துவத்திலிருந்து அகன்று அவனையே மாற்று தத்துவத்தை தேடச் செய்யும்.

அதாவது சோதிடத்தை சோதிடமாகவே எதிர்த்து விட்டுப் போங்கள்.

//அமாவாசை/பெளர்ணமி தினங்களுக்கும் மனித வாழ்க்கைக்கும் எவ்வித சம்பந்தமும் இருப்பதாக கூறும் சான்றுகள் எதுவும் இல்லை//

கரிசல்காரன் அவர்களின் 2வது பின்னூட்டம் பார்க்கவும்.
அதுவும் மனித வாழ்க்கைதானே?

Nathanjagk said...

//கிருஷ்ணமூர்த்தி said...
"ஜோசியரும் வால்பையனும்!"நு தலைப்பு வைத்திருந்தால் ரொம்பப் பொருத்தமாக இருந்திருக்கும்!
//
வகுப்பறையில் ஒரு வால்பையன்???

தருமி said...

ஜெகநாதன்,
//மதத்திலிருந்து வெளியேறுபவனுக்கு வெறொரு தத்துவம் தேவையாகிறது (கிறித்துவம், இஸ்லாம், புத்தம் மாதிரி மாற்றுத் தத்துவங்கள்) //

இது எனக்குச் சரியாகத் தெரியவில்லை. மாற்றுத் தத்துவங்கள் வேண்டும்; ஆனால் அவைகளும் சமயத்தத்துவங்களாக இருக்கத் தேவையில்லை.

Nathanjagk said...

//ஜெகநாதன்,
//மதத்திலிருந்து வெளியேறுபவனுக்கு வெறொரு தத்துவம் தேவையாகிறது (கிறித்துவம், இஸ்லாம், புத்தம் மாதிரி மாற்றுத் தத்துவங்கள்) //

இது எனக்குச் சரியாகத் தெரியவில்லை. மாற்றுத் தத்துவங்கள் வேண்டும்; ஆனால் அவைகளும் சமயத்தத்துவங்களாக இருக்கத் தேவையில்லை. //

தருமி,
இங்கு குறிப்பிடுவது மதத்திலிருந்து வெளியேறுபவன், கடவுள் நம்பிக்கையிலிருந்து அல்ல. கடவுள் நம்பிக்கையைப் பற்றாகக் கொண்டுள்ளவன் ஏதோவொரு பற்றாக்குறையின் பொருட்டு ஒரு தத்துவத்திலிருந்து விலகி வேறொரு மாற்றுத் தத்துவத்திற்கு குடியேறுகிறான் என்பதே நான் சொல்ல விரும்பியது.

Anna said...

Dear Sammy,
"//உண்மை என்று நிரூபிக்கமுடியும் ஒரு தியரி எதிர்காலத்தில் தவறு என்று நிரூபிக்கபடும்போது பழைய தியரி குப்பைக்கு போகும். ///

வெறி குட்.....அப்ப அது ஒரு variable....இன்னும் நூறு வருஷக்கு அப்புறம், உலகம் முக்கோணம் அப்படின்னு கண்டுபிடிக்கலாம் சொல்றீங்களா?"


இல்லை. கொஞ்சம் விரிவாக விளக்க முயற்சிக்கிறேன்.

ஒரு உதாரணத்திற்கு, நான் கீழிருந்து ஒரு பொருளை எடுத்து மேலே எறிந்தால் அது அநேகமாகக் கீழே விழும். அதே போல் பின்பும் மேலே எறியும் பொருட்கள் கீழே விழுவதை அவதானித்ததால், எனது கடந்த கால அவதானிப்புகளின் படி, நான் இனி எதிர்காலத்தில் ஏதாவது பொருள் மேலே எறிந்தாலும் அது கீழே வந்து விழும் என அவ்வாறு நடக்க முன்னே கூறலாம். ஆனால் நான் அடுத்த முறை எறியும் போது அப்பொருள் கீழே விழாமல் போகலாம்/மேலே கூடப் போகலாம். ஆனால் பொது அறிவுள்ள‌ யாரும் அவ்வாறு சொல்லமாட்டார்கள். எமது சாதாரண வழக்கமான வாழ்விற்கு 'மேலே எறியும் பொருட்கள் கீழே விழும்' எனும் கோட்பாடு (theory) ஒரு உண்மை (fact).

கோட்பாடுகள் ஒரு நிச்ச‌ய‌த்த‌ன்மை/உண்மை அள‌விகோலில் (நிச்ச‌ய‌மாக உண்மையிலிருந்து, நிச்ச‌ய‌மாக‌ப் பொய் வரை) இருப்ப‌தாக‌ நினைத்துக் கொள்ள‌லாம். உதாரணத்திற்கு, பூமி தட்டையானது என்னும் கோட்பாடு இப்போதுள்ள சான்றுகளின் படி, அளவுகோலின் அடி நிலையில் (நிச்சயமாகப் பொய்க்குக் கிட்ட) இருக்கும் (ஆனால் பூமியின் வளைந்த தன்மை ஒவ்வொரு மைல் தூரத்திற்கும் பார்த்தால் கிட்டத்தட்ட பூச்சியம் ‍ அதனால் மிகப் பழைய காலத்தில் அப்போதிருந்த தொழில்நுட்பம், அறிவின் படி அது ஒரளவிற்கு சரியான கணிப்பே). பூமி ஒரு உருண்டையானது எனும் கோட்பாடு இந்த உண்மை அள‌விகோலில் பூமி தட்டையானது எனும் கோட்பாட்டிற்கும் சில படிகள் மேலே இருக்கும். ஆனால் பூமி oblate spheroid வடிவமானது (துருவங்களில் கொஞ்சம் தட்டையானது) ‍ இந்தக் கோட்பாட்டை உண்மை அள‌விகோலில் கிட்டத்தட்ட சரி மேல்மட்டத்தில் (நிச்சயமாக உண்மை) வைக்கலாம். 'மேலே எறியும் பொருட்கள் கீழே விழும்' எனும் கோட்பாட்டையும் அதே இடத்தில் வைக்கலாம்.

பூமி தட்டையானது என்ற கோட்பாட்டை விட பூமி உருண்டையானது எனும் கோட்பாடு சரியானது. அதையும் விட பூமி oblate spheroid வடிவமானது என்பது மிகச்சரியானது.
அதனால், அறிவியல் ஒரு பழைய கோட்பாட்டைக் கண்மூடித்தனமாக தூக்கி எறிந்து விட்டு இன்னொரு புதிய கோட்பாட்டை உண்மை என்று நம்புவதில்லை. It's more like புதிய‌ கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்களால் அறியப்படும் புதிய தகவல்களைக் கொண்டு அறிவியல் கோட்பாடுகளைத் திருத்துவது/விஸ்தரிப்பது.

நீங்கள் கொஞ்சம் மாற்றி யோசித்தால் இது இலகுவாக விளங்கும்.

சுருக்கமாகச் சொன்னால் எமது வாழ்க்கையைப் பற்றி, பூமியைப் பற்றி, வானத்தைப் பற்றி, பிரபஞ்சத்தைப் பற்றி மனிதருக்கு அவர்கள் வாழும் காலகட்டங்களில் இருக்கும் அறிவிற்கும், தொழில்நுட்பத்திற்கும் ஏற்ப தான் அவதானிக்கும் நிகழ்வுகளிற்கு ஒரு விளக்கத்தை/கோட்பாட்டைக் கொடுப்பர். அவ்விளக்கத்திற்கு எற்ப எதிர்காலங்களில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை அவை நடக்கு முன்னரே உணர்ந்து சொல்வர். பின் அவ்வாறு சொன்னதை பிற்பாடு நடக்கும் செயல்களை/அவதானிப்புகளைக் கொண்டு பரிசோதிப்பர். அதன் படி கண்டுபிடிக்கப்பட்ட முடிபுகளைக் கொண்டு முதல் தன் அந்த நிகழ்விற்கு கொடுத்த விளக்கத்தை/கோட்பாட்டை விரிவிப்பர்/திருத்துவர். இது தொடரும். இதுவே அறிவியல் மூலம் உலகத்தை, பிரபஞ்சத்தை கற்கும் முறை. இது தான் உலகப் பற்றி அறிய எம்மிடம் இருக்கும் ஒரே வழி.

Samuel | சாமுவேல் said...

//நானும் எவ்வளவோ தேடிப்பார்த்தும் Dr. Karen Weatherby என்ற ஒரு மருத்துவரோ/ஆய்வாளரோ Germany யில் இல்லை. New England Journal of Medicine இலும் அவ்வாறு எந்தவொரு ஆய்வும் பிரசுரிக்கப்படவில்லை//

தவறான செய்தியை எழுதிட்டேனா ? ஆய்வாளர்/விஞ்ஞானி மேடம் மன்னிக்கவும். தினசரி பேப்பரில் படித்ததே அப்படின்னு நம்பி எழுதினேன்..

//யார் எதைச் சொன்னாலும் face value வுடன் மாத்திரம் எடுத்துக் கொள்ளாதீர்கள். //

அட்வைஸ்கு ரொம்ப நன்றி. சரி இந்த urbanlegends.about.com இதை நம்பலாம் தானே. முடிந்தால் என்னுடைய மற்றொரு கேள்வியையும் //அப்ப அது ஒரு variable....///தெளிவு படுத்தவும்.

நீங்க தமிழ்ல எழுதிறதே நல்லா இருக்கு ....ஆங்கிலத்தில் இன்னும் நாலு வரி அதிகம் எழுதிருப்பீர்கள், தாக்கமும் அதிகமா இருந்திருக்கும். உங்களிடம் ஏற்கனவே இந்த ஆராய்ச்சி, அறிவியல் பத்தி பதிவுகள் கேட்டதாக நியாபகம்.கொஞ்சம் பார்த்து பன்னுங்க ஆய்வாளரே.

சப்பாணி said...

The Analyst நீங்க சொல்றதுதான் அனைத்துப்பின்னூட்டங்களையும் படித்தபின் தோன்றியது.

Science basically keeps fine tuning it's laws with time. As you said, it is the only method to learn the universe.

Baski said...

உங்க எழுத்துக்கள் நல்லாருக்கு.
ஒரு சின்ன விஷயம்.

ஜாதக நம்பிக்கையை தப்புன்னு சொல்லற அளவுக்கு நமக்கு (உங்களுக்கு :-)) அறிவு கிடையாது.
ஆனால் நீங்கள்/நான் பார்த்த ஜோசியர்கள், குறி சொல்பவர்கள் வைத்து பார்த்தால் இது "பிராடு" தொழில்.

நம்ம ஊரு மட்டுமல்ல, இது பல நாடுகளிலும் இருக்கு. கொஞ்சம் "Astrology" கூகிள் செய்தால் கிடைக்கும். சீனா, எகிப்து, அரபு, பெர்சியா, மாயன் என எல்லா பழைய நாகரீகங்களிலும் இது தொடர்ந்து இருந்து வந்தது.

நம்ம ஊரில் நடப்பதேன்னமோ பித்தலாட்டம் தான்.

ராஜவம்சம் said...

//நம்ம ஊரில் நடப்பதேன்னமோ பித்தலாட்டம் தான்.//

லோக்கல் சரக்குல கிக்கு இல்ல ஃபரின் சரக்குத்தான் வேனும்

Anna said...

இன்னுமே நீங்கள் பிழையாகத் தான் விளங்கிக்கொண்டுள்ளீர்கள்.

"சோதிடத்தை நிரூபிக்க முடியாதது போல அறிவியலையும் (இப்போதைக்கு) நிரூபிக்க முடியாது."


இவ்வசனம் சில உண்மைகளைக்கொண்டுள்ளாலும் அவற்றால் நீங்கள் சொல்ல வருவது மிக மிகப் பிழையான கருத்து.

நான் Sammy க்கு கொடுத்த பதிலையும் பார்க்கவும். நீங்கள் அறிவியலையும் விளக்கங்களையும் பிழையான விதமாக யோசிக்கிறீர்கள். உண்மையில் கணிதத்தால் மட்டுமே எதையும் நிச்சயமாக நிரூபிக்க முடியும். அறிவியல் எதையும் 100% நிச்சயமாக நிரூபிப்பதில்லை. என்னால் அல்ல, எவராலும் நாளை சூரியன் உதிக்குமென நிரூபிக்க முடியாது. ஆனால் எமக்கு இதுவரை உள்ள அறிவின் படியும் இருக்கும் அளவுக்கதிகமான ஆதாரங்களின் படியும் என்னால் நாளை சூரியன் உதிக்கும் எனச் சொல்ல முடியும்.

Bertrand Russel சொன்னது மாதிரி நாம் எல்லோரும் ஒரு 5 நிமிடங்களுக்கு முன் தான் இவ்வுலகத்தில் தோற்றுவிக்கப்பட்டு, உடனடி நினைவாற்றல்களும் கொடுக்கப்பட்டு நாம் இருக்கும் இடங்களுலேயே எப்படியோ வைக்கப்பட்டிருக்கலாம். Who knows? ஆனால் எமக்கிருக்கும் சான்றுகளின் படி அப்படியிருக்க சாத்தியமில்லை என்று எம்மால் தெளிவாகச் சொல்ல முடியும்.

அறிவியல் என்பது ஒரு செயலுக்கு நாம் கொடுக்கும் விளக்கங்களை மீண்டும் மீண்டும் பரிசோதித்து அவற்றிற்குறிய ஆதாரங்களைச் சேகரித்து, கடைசியாக எவ்விளக்கதை எம்மிடம் உள்ள ஆதாரங்கள் சரி என்று காட்டுகின்றனவோ அவ்விளக்கத்தை எற்றுக்கொள்வது தான். அவ்விளக்கத்தை மேலும் விஸ்தரிப்பது தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கும். அவ்விளக்கம்/கோட்பாடு எவ்வளவு தான் சான்றுகளின் ஊடாக சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதாக இருப்பினும் எமக்கு பரீட்சியமில்லாத வேரொரு சந்தர்ப்பத்தில்/வேறு நிபந்தனைகளின் கீழ் அக்கோட்பாடு செல்லுபடியாகாமல் போகலாம் என்பதால் in a literal sense 100% நிரூபிக்கப் படுவதில்லை. 100% நிரூபிக்கப் படாததால் அதில் உண்மையில்லை என்று சொல்ல ஏலாது. நான் முதல் சொன்ன மாதிரி, நான் எதிர்காலத்தில் மேலே எறியும் பொருட்கள் கீழே தான் விழும் என என்னால் 100% நிரூபிக்க முடியாது. ஆனால் அதற்காக மெலே எறியும் பொருட்கள் வேறு எவ்வித வெளித்தாக்கங்களும் இல்லாதிருப்பின் ஈர்ப்பு விசையால் கீழே விழும் எனும் கோட்பாட்டை நம்பவில்லை என எவரும் சொல்லமாட்டார்கள்.

அதனால் நீங்கள் கூறிய "சோதிடத்தை நிரூபிக்க முடியாதது போல அறிவியலையும் (இப்போதைக்கு) நிரூபிக்க முடியாது." எனும் கருத்து ஓரளவு சரி. ஆனால் அறிவியலுக்கும் சோதிடத்திற்கும் உள்ள ஒரு மிக மிக மிக முக்கியமான வேறுபாடு ‍ அறிவியற் கோட்பாடுகளை விளக்க அவற்றின் பின்னால் நிறைய சான்றுகள் உள்ளன. சில சந்தேகங்க‌ள் இருந்தால் கூட‌ மீண்டும் மீண்டும் பரிசோதனைகள் செய்து அதற்கு விளக்கமோ/தீர்வோ காணலாம். சோதிடத்திற்கு சார்பாக ஒரு ஆதாரங்களும் இல்லை. அது ஆதரங்களற்ற வெறும் நம்பிக்கை.

அதனால் நீங்கள் கூறிய,

"இந்த புள்ளியில் இரண்டு தத்துவங்களும் (சோதிடம் அன்ட் அறிவியல்) ஒரே நிலையில்தான் இருக்கின்றன."

இக்கருத்து மிக மிகப் பிழையானது.

"அதாவது சோதிடத்தை சோதிடமாகவே எதிர்த்து விட்டுப் போங்கள்."
"சோதிடத்தை அல்லது மூடநம்பிக்கையை அதன் உள்ளீடுகளிலுள்ள முரண்களைக் பரிசோதிப்பது விளக்குவது போன்ற அணுகுமுறைகள்தாம் ஒரு நம்பிக்கையாளனை அந்த தத்துவத்திலிருந்து அகன்று அவனையே மாற்று தத்துவத்தை தேடச் செய்யும்."


சரி அறிவியல் சார்ந்த ஆதாரங்கள் கூட வேண்டாம் என்று விடுவோம். எமது வழமையான வாழ்க்கைக்கு நாம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று தான், சோதிடம் உண்மையில் அது சொல்லும் மாதிரி வேலை செய்யுதா? உண்மையில் சோதிடர்கள் மனிதனின், தலையெழுத்தை, எதிர்காலத்தை முன்கூட்டியே அறிந்து சொல்கிறார்களா? இல்லை. இதையும் விட வேறு சிறப்பாக என்னத்தைச் சொல்லலாம் என்கிறீர்கள்?

மக்கள் சோதிடத்தில் (அல்லது வேறு மூட நம்பிக்கைகளில்) வைத்துள்ள நம்பிக்கைக்கு மிக முக்கிய காரங்களில் ஒன்று அவர்கள் எப்பவாவது ஒரு சின்ன விடயம் யாராவது சோதிடர் சரியாகச் சொன்னால் அதை நன்றாக நினைவில் வைத்திருப்பர். ஆனால் அதன் முன்னும் பின்னும் எவ்வளவோ விடயங்கள் பிழையாகக் கணித்தாலும் அதை மறந்து விடுவர். They remember the hits and forget the misses. It's basic human psychology. ஆனால் சரியாகச் சொன்னவற்றையும் பிழையாகச் சொன்னவற்றையும் கவனமாகக் கணக்கெடுத்து பார்ர்த்தால் நன்றாக விளங்கும் சோதிடர் சொல்வதற்கும் எம் வாழ்விற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்று.

Anna said...

Dear Sammy,

"ஆய்வாளர்/விஞ்ஞானி மேடம் மன்னிக்கவும். தினசரி பேப்பரில் படித்ததே அப்படின்னு நம்பி எழுதினேன்.."

ஜய்யய்யே... இந்த மேடம் கீடமெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுப்பா. Hey sis ஏ நல்லாயிருக்கு.
முக்கியமாக அந்நாளிதல் பெரும்பாலானோர் வாசிக்கும் மதிப்பிற்குரிய நாளிதல் எனில் தயவு செய்து புகார் கொடுங்கள். That was ridiculous journalism.

"முடிந்தால் என்னுடைய மற்றொரு கேள்வியையும் //அப்ப அது ஒரு variable....///தெளிவு படுத்தவும்."

இது என்ன கேள்வி, வடிவா விளங்கேல்லை. கேள்வியைக் கொஞ்சம் விளக்கமாக எழுதினால் எனக்குத் தெரிந்திருப்பின் நிச்சயம் சொல்கிறேன்.

"ஆங்கிலத்தில் இன்னும் நாலு வரி அதிகம் எழுதிருப்பீர்கள், தாக்கமும் அதிகமா இருந்திருக்கும்."

பாப்பம்,இன்னும் கொஞ்சம் தமிழில் எழுதி அனுபவம் கூடும் போது கூடத்தாக்கத்துடன் எழுத வருதா என்று. :)

Nathanjagk said...

Analyst,
நன்றி.
முதலில் எனக்கொன்றை தெளிவாக புரியவைத்துவிடவும்.
மிகமிகமிக நான் பிழையாக புரிந்து கொண்ட கருத்து எது என்று சொல்லவும்.
விளக்கங்களற்ற வெறுமனே திரும்ப திரும்பச் சொல்லப்பட்ட வாக்கியங்கள் பாவனையான கருத்து மோதலுக்கு மட்டும் வழிவகுக்கும்.
உண்மையை தேடும், அறிவை விரித்துக்கொள்ளும் வகையிலான ஆக்கபூர்வமான கருத்துரையாடலையே இங்கு எதிர்பார்க்கிறேன்.
பிறகு அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டவனாகிறேன்.
உங்களின் இந்த பின்னூட்டத்தில் என் கருத்துக்கள் மேலான தங்களின் நிலைபாடு என்ன என்றே புரியாதபடிக்கு இருக்கிறது.

வால்பையன் said...

உரையாடிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி! இது தொடர்பாக இன்னும் பல பதிவுகள் இருப்பதால் நண்பர்கள் தொடர்ந்து உரையாடலில் கலந்து கொள்ளவும்!

spiritual ocean said...

ஜோதிடத்தை இகழ்வது தவறு.உங்களுக்கு ஒரு துறையைப் பற்றி தெரியாது என்பதற்காக நீங்கள் அதை அசிங்கப்படுத்துவது தவறு.இப்படிக்கு www.aanmigakkadal.blogspot.com

வால்பையன் said...

//spiritual ocean said...

ஜோதிடத்தை இகழ்வது தவறு.உங்களுக்கு ஒரு துறையைப் பற்றி தெரியாது என்பதற்காக நீங்கள் அதை அசிங்கப்படுத்துவது தவறு.இப்படிக்கு www.aanmigakkadal.blogspot.com//

உங்களுக்கு தான் தெரியுமே!
நீங்களாவது பதில் சொல்லுங்க தோழரே!

Chandru said...

//பூமியை, நிலா சுற்றுவதோடு மட்டுமில்லாமல், பூமியின் வேகத்தில் அதனோடு இணையாக நிலா சூரியனையும் சுற்றி வருகிறது, அந்த வேகம் தான் பூமிக்கும் ஈர்ப்பு விசையை தருகிறது, மற்ற கோள்களுக்கும் ஈர்ப்பு விசை தருகிறது!//

இன்னும் சின்னப் பையனாகவே இருக்கிறீர்கள். உங்களுக்கு அறிவியலும் தெரியலை சோதிடமும் தெரியவில்லை யாராவது போற போக்குல ஏதாவது சொன்ன அதைக் கேட்டுட்டு ரீல் விடக் கூடாது. நீங்க எழுதியிருக்கிறதுல என்ன தப்புன்னு கண்டுபிடியுங்க.கும்மி யடிக்க ஒரு கூட்டம் இருக்குங்கிறதுக்காக என்ன வெல்லாம் எழுதுகிறீர்கள். உங்களுக்காகவே எனது பிளாக்கில் விரைவில் இது பற்றி எழுதப் போகிறேன்.

Chandru said...

//பூமியை, நிலா சுற்றுவதோடு மட்டுமில்லாமல், பூமியின் வேகத்தில் அதனோடு இணையாக நிலா சூரியனையும் சுற்றி வருகிறது, அந்த வேகம் தான் பூமிக்கும் ஈர்ப்பு விசையை தருகிறது, மற்ற கோள்களுக்கும் ஈர்ப்பு விசை தருகிறது!//

இன்னும் சின்னப் பையனாகவே இருக்கிறீர்கள். உங்களுக்கு அறிவியலும் தெரியலை சோதிடமும் தெரியவில்லை யாராவது போற போக்குல ஏதாவது சொன்ன அதைக் கேட்டுட்டு ரீல் விடக் கூடாது. நீங்க எழுதியிருக்கிறதுல என்ன தப்புன்னு கண்டுபிடியுங்க.கும்மி யடிக்க ஒரு கூட்டம் இருக்குங்கிறதுக்காக என்ன வெல்லாம் எழுதுகிறீர்கள். உங்களுக்காகவே எனது பிளாக்கில் விரைவில் இது பற்றி எழுதப் போகிறேன்.

வால்பையன் said...

//நீங்க எழுதியிருக்கிறதுல என்ன தப்புன்னு கண்டுபிடியுங்க//


:)


என்ன தப்புன்னு நீங்களே சொல்லுங்க!
எழுதியதும் லிங்க் கொடுங்க!

Chandru said...

ஒவ்வொரு கிரகத்திற்கும் அல்லது பொருளுக்கும் அதனுடைய நிறைதான் ஈர்ப்பு விசைக்கு காரணம்.இதில் வேகத்தை சம்பந்தா சம்பந்தமில்லாமல் இழுத்து வைத்து எழுதியுள்ளீர்கள். Gravitation, or gravity, is a natural phenomenon by which physical bodies attract with a force proportional to their mass.

!

Blog Widget by LinkWithin