நன்றி வாழ்த்துனவுங்களுக்கும், திட்டுனவங்களுக்கும்!

என்னோட 250 வது பதிவா இதை எழுதுறதுல ரொம்ப சந்தோசம்! கதிர் தான் ஆரம்பத்தில் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டார், எனக்கு பொறுப்பு விசயத்தில் சிரத்தை மிக குறைவு என்பதால் முன்னரே எனது பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை சொல்லிவிட்டேன், கதிரும், ஆருரானும் பொறுப்பை எடுத்து கொண்டு யாரும் எதிர்பாராத வகையில் மிக சிறப்பாக நிகழ்ச்சியை நடத்தி முடித்தனர்! எனது குறுக்கு கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்த நண்பர்களுக்கு நன்றி!

புலவர் ராசுவை நான் கேள்வி கேட்டது தான் பலரின் கோவத்துக்கு காரணம் என்று காலையில் பாஸ் சொல்லி தான் தெரியும், புலவர் ராசு பதிவர் என்று நான் நினைத்திருந்தேன், அதனால் என்னை பற்றி முன்னரே அறிந்திருப்பார் என நினைத்தேன்! அதனால் அவரிடம் மட்டும் மன்னிப்பை கேட்டு கொள்கிறேன்! சஞ்சய் அங்கிளுக்கு வயசாகி போச்சு அதனால் என்னை மாதிரி சின்னப்பசங்க கேள்வி கேட்பதை ஏற்று கொள்ளமுடியவில்லை! ஒரு நிகழ்ச்சின்னா கலகலப்பா இருக்கனும்! சும்மா தூங்கி வழியக்கூடாது!

சென்னையில் இருந்து வந்திருந்த ரம்யா, கலையக்கா, சித்தர் சுரேஷ், அப்துல்லா, அகநாழிகை வாசுதேவன், தண்டோரா, கேபிள் சங்கர் மதுரையில் இருந்து வந்திருந்த சீனா ஐயா, கார்த்திகைபாண்டியன், ஸ்ரீதர் கோவையிலிருந்து வந்திருந்த லதானந்த், தமிழ்மணம் காசி, சஞ்சய் அங்கிள் திருப்பூரிலிருந்து வந்திருந்த வெயிலான், பரிசல்காரன்,ஈரவெங்காயம் ஆகியோருக்கும் நன்றி! உங்களால் தான் சந்திப்பே சிறப்படைந்தது!

சிறப்பு வருகையாக வந்திருந்த பழமை(ப்)பேசி, நாகா ஆகியோருக்கும் நன்றி!
உடலுழைப்பை தாராளமாக வழங்கிய ஜாபர், அகல்விளக்கு ஜெய்சிங், பாலாசி ஆகியோரையும் மறக்க முடியாது! நான் பதிவெழுத வந்த காலத்திலிருந்து இன்று வரை எனக்கு ஆதரவு அளித்து என்னை செம்மை(இது தான் உங்க செம்மையா) படுத்தி கொண்டிருக்கும் நந்து அண்ணாவுக்கும் எனது நன்றிகள்!


பல புதிய நண்பர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது! திருப்பூரில் இருந்து வந்திருந்த பேரழகன்! குடும்பத்துடன் வந்திருந்த தொழிநுட்ப பதிவர் சுமஜ்லா ஆகியோருக்கும் நன்றி! அய்யா வானம்பாடிகள், இரா.வசந்தகுமார் ஆகீயோருக்கும் நன்றி!
பலரது பெயர் விட்டு போயிருக்கலாம், கிட்டதட்ட நூறு பேர் வந்திருந்ததாக கதிர் சொன்னார்! நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி கொடுத்து அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி!

படங்களை காண இங்கே சொடுக்கவும்!

*************

நிகழ்ச்சியில் ஹேக்கிங் பற்றி பேச நேரம் கேட்டேன்! குறைவான நேரமே இருந்ததால் விரிவாக பேசமுடியவில்லை, தனிப்படிவாக எழுதும் படி கதிர் கேட்டு கொண்டார், அதனால் இங்கேயே!

ப்ளாக்கருக்கும் ஜிமெயிலுக்கும் ஒரே பயனர் கணக்கு தான், யாரும் உங்கள் ப்ளாக்கை ஹேக் பண்ணவருவதில்லை, அவர்களது குறி உங்கள் ஜிமெயில் தான்! ஜிமெயிலில் இருக்கும் நண்பர்களுக்கு உங்களை போலவே மெயில் அனுப்பி பணம் பறிக்க வாய்புண்டு! அவர்களுக்கு உங்கள் ப்ளாக்கை பற்றி எந்த கவலையும் இல்லாததால் அதை அழிக்க வாய்புண்டு!

orkut இந்த சுட்டியை நீங்கள் அழுத்தினால் அது ஆர்குட்டுக்கு செல்லாது, மாறாக யாஹூவிற்கு செல்லும், இதே போல் ஆர்குட் இணைப்பு கேட்டு உங்களுக்கு வரும் லிங்கை அழுத்தினால் அது நேரடியாக பயனர் சொல் உள்ளிட ஆர்குட் தளத்திற்க்கு செல்ல வேண்டும், மீண்டும் ஒருமுறை பயனர் சொல் கேட்ககூடாது! அப்படி கேட்டால் அது போலி ஆர்குட் தளம், அங்கே உங்களது ஜிமெயில் பயனர் சொல்லை இடும் போது, உங்களுடய கடவுச்சொல் திருடப்படும், செர்வர் பிஸியென்ற அடுத்த பக்கத்திற்கு செல்லும் பொழுது உண்மையிலேயே தொழில் நுட்ப பிரச்சனை போலன்னு நினைச்சு நீங்க அதை பற்றி மறந்து விடுவீர்கள்! தெரியாத லிங் வரும்பொழுது அதை அழுத்தாமல் இருப்பதே ஹேக்கிங்கை தடுக்கும் ஒரே வழி!

66 வாங்கிகட்டி கொண்டது:

ஈரோடு காக்கா said...

நல்லா விளம்பரம்ணா!

Unknown said...

பதிவர் சந்திப்பை சிறப்பான முறையில் நடத்தி முடித்ததற்கு வாழ்த்துக்கள்...,

ராஜவம்சம் said...

இலக்கிய ரசனையோடா இல்ல ரம் வாசனையோடா எப்படியோ கலகலா இருந்திற்கும்


வாழ்த்துக்கள்

தமிழ் அமுதன் said...

ஹீரோ கணக்கா அசத்துறீங்க வாலு...!

பீர் | Peer said...

ஹெக்கிங் பற்றி தனியாக எழுதுங்க, வால்.

ஈரோட்டிற்கு மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்!

ஈரோடு கதிர் said...

//முன்னரே எனது பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பதை சொல்லிவிட்டேன், //

இந்த அளவுக்குனு சொல்லையேப்ப்ப்ப்ப்புபூ....


ஹேக்கிங் விளக்கம் நிச்சயம் பயனுள்ளது

தமிழ் அமுதன் said...

கண்களில் தெரியுது ஒரு ''ஞான'' பார்வை ..! கலக்கி இருக்கீங்க...!

Sanjai Gandhi said...

அய்யா ராசா, நீங்க கேள்விகள் கேட்டதுல எந்தக் குறையும் இல்லை. உங்களின் பல கேள்விகளுக்கு நான் கைதட்டினேன். உங்களுக்கும் இந்த சந்திப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் யாரோ நடத்தறாங்க, நான் ஏன் வரவங்களை( இதைக் கூட வேற மாதிரி சொன்னிங்க ) கவனிக்கனும்னும் கேட்டிங்க. அதுக்குத்தான் வால்பையன் தவிர்த்த மற்றவர்களுக்கு சல்யூட்னு எழுதினேன். செய்யாத வேலைக்கு உங்களுக்கு எதுக்கு வாழ்த்து சொல்லனும்.

ஆனால் கடைசியில், ஒரு ஓரத்தில் தனியாக தரையில் அமர்ந்து சாப்பிட்ட உங்களிடம் வந்து அமர்ந்து பேசினேனே, அப்போ சிலரிடம் நீங்கள் நடந்துக் கொண்டதும் அது தவறென்று சொன்னதுக்கு நீங்கள் உங்கள் திருவாய் மலர்ந்ததும் தான் குறை. அதை நான் என் பதிவில் எங்குமே குறிப்பிடவில்லை. இப்போதும் கூட நீங்கள் கேள்வி கேட்டதுக்கு நான் குறை பட்டுக் கொண்டது போல் தவறாக நினைப்பதால் மட்டுமே இதை சொல்கிறேன். போதை என்பதை நீங்கள் அட்வாண்டேஜாக எடுத்துக் கோள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. போதையில் உங்கள் குடும்ப விருந்தினர்களிடம் அப்படி பேசுவீங்களா?. சென்னையிலிருந்து வந்த பதிவரிடம் நீங்கள் எவ்வளவு மோசமாக நடந்துக் கொண்டீர்கள் என நினைவில்லை என்றால் சொல்லுங்கள். நினைவூட்டுகிறேன். பிறகு என் வருத்தம் சரியா தவறான்னு சொல்லுங்க.

மீண்டும் சொல்கிறேன். சந்திப்பு அரங்கில் நீங்கள் கேள்வி கேட்டதும் நடந்துக் கொண்டதும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சாப்பிடும் இடத்தில் நடந்து கொண்ட விதம் தான் சகிக்கலை. எதிரியா இருந்தாலும் விருந்தாளியா வந்தா அன்பா தான் நடந்துக்கனும்னு நினைப்பேன்.

☀நான் ஆதவன்☀ said...

//தெரியாத லிங் வரும்பொழுது அதை அழுத்தாமல் இருப்பதே ஹேக்கிங்கை தடுக்கும் ஒரே வழி! //

சரி தான் வால்.

வெற்றி said...

பதிவர் சந்திப்புக்கும 250ஆவது பதிவுக்கும் வாழ்த்துக்கள்..
ஹேக்கிங்ல இருந்து தப்பிக்க ஒரே வழி-தேவையற்ற தளங்களில் லிங்க்களில் கடவுச்சொல் தராமல் இருப்பதே...

க.பாலாசி said...

இடுகைக்கும், ஹேக்கிங் பற்றின பயனுள்ள தகவல்களுக்கும் நன்றி தலைவரே....

வால்பையன் said...

அங்கிள்!

என்ன சொன்னேன்னு நியாபகம் இல்லை! அப்படி சொல்லியிருந்தாலும் அதிக உரிமை எடுத்து கொண்டதற்கு மன்னிக்க!

தயவுசெய்து யாரும் மப்பில் இருக்கும் போது அட்வைஸாதீர்கள்!

சங்கர் said...
This comment has been removed by the author.
Sanjai Gandhi said...
This comment has been removed by the author.
அ.மு.செய்யது said...

விடுங்க தல...இதெல்லாம் சகசம்...ரெகுலரா போயிட்டே இருங்க..

ஒரு மெகா பதிவர் சந்திப்பையே நடத்தி முடித்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்

ஜனவரி சென்னை வருகிறேன்.பத்து நாள்.புத்தக கண்காட்சி...ஏதாச்சும் ப்ளான் இருக்கா ??

Sanjai Gandhi said...

//என்ன சொன்னேன்னு நியாபகம் இல்லை! அப்படி சொல்லியிருந்தாலும் அதிக உரிமை எடுத்து கொண்டதற்கு மன்னிக்க!

தயவுசெய்து யாரும் மப்பில் இருக்கும் போது அட்வைஸாதீர்கள்!

//

நீங்கள் என்னை எதுவும் திட்டவில்லை. அவர்களைத் தவறாக பேசியது தவறு என்று சொன்னதுக்கும் அவர்களையே தான் இன்னும் மோசமாக பேசினீர்கள். மப்புல இருக்கும் போது அட்வைஸ் பண்ணித் தொலையக் கூடாது என்ற கன்றாவித் தெரியாம எடுத்து சொல்லி யாரோ திட்டு வாங்க நான் காரணமான குற்ற உணர்வு தான். மப்புல அட்வைஸ் பண்ணனும்னு யாருக்கும் ஆசை இல்லை ராசா. அடுத்தவனுக்கு அதனால் பாதிப்பு வரும் போது தான் அட்வைஸ் பண்ண வேண்டி இருக்கு. இல்லைனா யாரும் சொம்பை வெளிய எடுக்கறதே இல்லை.

Sanjai Gandhi said...

//orkut இந்த சுட்டியை நீங்கள் அழுத்தினால் அது ஆர்குட்டுக்கு செல்லாது, மாறாக யாஹூவிற்கு செல்லும், இதே போல் ஆர்குட் இணைப்பு கேட்டு உங்களுக்கு வரும் லிங்கை அழுத்தினால் அது நேரடியாக பயனர் சொல் உள்ளிட ஆர்குட் தளத்திற்க்கு செல்ல வேண்டும், மீண்டும் ஒருமுறை பயனர் சொல் கேட்ககூடாது! அப்படி கேட்டால் அது போலி ஆர்குட் தளம், அங்கே உங்களது ஜிமெயில் பயனர் சொல்லை இடும் போது, உங்களுடய கடவுச்சொல் திருடப்படும், செர்வர் பிஸியென்ற அடுத்த பக்கத்திற்கு செல்லும் பொழுது உண்மையிலேயே தொழில் நுட்ப பிரச்சனை போலன்னு நினைச்சு நீங்க அதை பற்றி மறந்து விடுவீர்கள்! தெரியாத லிங் வரும்பொழுது அதை அழுத்தாமல் இருப்பதே ஹேக்கிங்கை தடுக்கும் ஒரே வழி!//

இப்படி இத்தனை வரிகளை எழுதி பயமுறுத்தத் தேவையில்லை. இதில் தீர்வும் சொல்லி இருக்கலாம். ஒவ்வொரு முறையும் அட்ரஸ் பாரில் இணையதளத்தின் பெயரைப் பாருங்கள். முதல் ஸ்லாஷிற்கு(/) முன் நீங்கள் செல்லும் தளத்தின் பெயருடன் முடிந்தால் அது போலி தளம் இல்லை. உதா: xx.yy.zz.orkut.com/ என்று இருந்தால் நிச்சயம் அது ஆர்குட் உண்மையான தளம் தான். எந்த நேரத்திலும் தைரியமாக நம் கணக்கை உள்ளிடலாம்.அந்த xxக்கு முன்னால் http:// அல்லது www. http://www. என எப்படி இருந்தாலும் கவலை வேண்டாம். மாறாக yy.orkut.zz.com/ என இருந்தால் அது நிச்சயம் போலி தளம். இங்கே zz என்பது தான் தளத்தின் பெயர். yy.orkut என்பது xx என்ற தளத்தின் sub domain.

இது புரியலைனா சொல்லுங்க. படம் போட்டு விளக்கிடலாம்.

இதுல உதாரணத்துக்கு வேற 2 எழுத்துகளைப் பயன்படுத்தி இருந்தேன். அது ஒரு கன்றாவி சைட்க்கு போகுது. :( என்னக் கொடுமை இது? எதையுமே விட்டு வைக்கலையா.. பாவிகளா.. :( அதனால மேல போட்ட கமெண்ட் அழிச்சிட்டு திருத்தி வெளியிட்டிருக்கிறேன்...

இராகவன் நைஜிரியா said...

250வது இடுகைக்கு வாழ்த்துகள்.

மேன் மேலும் வளர வாழ்த்துகள்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

மணிஜி said...

மரத்துலேர்ந்து இறங்கியாச்சா?

நிகழ்காலத்தில்... said...

//எனக்கு பொறுப்பு விசயத்தில் சிரத்தை மிக குறைவு என்பதால் //

//காலையில் பாஸ் சொல்லி தான் தெரியும்,//

//ஒரு நிகழ்ச்சின்னா கலகலப்பா இருக்கனும்! சும்மா தூங்கி வழியக்கூடாது!//

உங்களிடம் அபாரமான திறமைகள் இருக்கின்றன..:))

ஆனால் உங்களை நீங்களே ஏன் இப்படி பஞ்சராக்கி, டேமேஜ் பண்ணிக் கொள்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை அருண்...

Thekkikattan|தெகா said...

எல்லாருக்கும் வாழ்த்துக்கள்!

வால், தலையில் இளை வெள்ளி இவ்ளோ, மேலே நண்பர் 'ஜீவன்' சொன்ன மாதிரி ஏதாவது இருக்குமோ ;-)

sathishsangkavi.blogspot.com said...

இப்பதிவை எழுதும் போது பொறை ஊத்தியாச்சா? இல்லையா வாலு............

நசரேயன் said...

சந்திப்பு சிறப்பாய் அமைந்ததற்கு வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

ஈரோடு பதிவர் சந்திப்புக்கும் உங்களது 250ஆவது பதிவுக்கும் வாழ்த்துக்கள்..

Anonymous said...

//தயவுசெய்து யாரும் மப்பில் இருக்கும் போது அட்வைஸாதீர்கள்//

அவரு சொல் அழகனா இருக்கப்ப ஏம்ப்பா பக்கத்தில போறீங்க

Jerry Eshananda said...

"மப்புல என்னைய மறந்துட்டியே ராசா."

வால் பையன் said...

இவ்விடத்தில் இதை நான் சொல்லியே ஆகவேண்டும், பெரும்பாலான நண்பர்கள் ”பூஸ்ட்” குடிக்க உட்கார்ந்துட்டா வயசு வித்தியாசம் பார்க்காமல் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்னு நினைச்சிகிட்டு இருக்காங்க, அது தப்புன்னு நான் நினைக்கிறேன்!, நான் டோண்டு சார், தருமி சார் கூட அமர்ந்து கூட பூஸ்ட் சாப்பிட்டிருக்கேன், யாரும் இதுவரை முகம் சுழித்து சென்றதில்லை, நாம் ப்ளாக்கர் என்ற ஒரே விசயத்தில் மட்டும் ஒன்றுபடுகிறோமே தவிர ஒவ்வோருவருக்கும் ஒரு தொழில், வித்தியாசமான குணாதிசியங்கள் உண்டு! அதற்குறிய மரியாதையை தர வேண்டியது நம் கடமை, மீறும் பட்சத்தில் நீங்கள் நிகழ்ச்சிகளில் ஒதுக்கப்படலாம்.(சில பேர், என்னை ஒதுக்குவது போல)

கலையரசன் said...

லிங்கை க்ளிக் பண்றதுக்கு முன்னாடி.. அந்த லிங்க் மேல மவுஸ் கர்சரை வச்சாலே, கீழ உள்ள ஸ்டேட்டஸ் பார்ல தெரியுமே தல? அத பார்த்து உசாரா இருந்துக்க வேண்டியதுதான்!!

சரக்கடிக்குற பார்தான் தெரியும்.. ஸ்டேட்டஸ் பார் எல்லாம் தெரியாதுன்னா.. நான் ஒன்னியும் பண்ண முடியாது தல...

துளசி கோபால் said...

அட! காலாயிரம்!!!!

இனிய பாராட்டுகளும் வாழ்த்து(க்)களும்.

நல்லா இருங்க, வால்

☼ வெயிலான் said...

// இந்த அளவுக்குனு சொல்லையேப்ப்ப்ப்ப்பூ.... //

:)

Subankan said...

250வது இடுகைக்கு வாழ்த்துகள்.

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

250 பதிவைத் தொடர்ந்து 2500ம் பதிவையும் உடனே எதிர்பார்க்கிறேன்.

கூகிள் விளம்பரம் எங்கே பிடிச்சீங்க. சூப்பரப்பூ.

துபாய் ராஜா said...

வரமுடியாத பதிவர் அனைவர் மனதிலும் கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்திய சந்திப்பை சிறப்புற நடத்தி காட்டிய கொங்குநாட்டு தங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.

250வது பதிவிற்கும் வாழ்த்துக்கள்.

ஆரூரன் விசுவநாதன் said...

250 பதிவிற்கு வாழ்த்துக்கள்

சிம்பா said...

பொறுப்பு இருக்குனு வெள்ளை முடியை வெளிய விட்டு தான் காட்டணுமா..

மறுபடி ஒரு குவாட்டர் அடிசிருகீங்க (250/1000) வாழ்த்துக்கள்.

Hacking தகவல் அருமை.. முடிந்தால் ஒரு தனி பதிவு மூலம் சிறிது விரிவாக போடலாம்.

Prabhu said...

இப்படியே 250 300 நு எல்லார் வயத்துலயும் பிளிய கரைக்கனும். :)
வாழ்த்துக்கள்!

butterfly Surya said...

நன்றி அருண்.

சென்னையிலிருந்து நானும் வந்திருந்தேன்.

butterfly Surya said...

250க்கு வாழ்த்துகள்..

ஹேமா said...

வாழ்த்துக்கள் வாலு.

என்ன...எல்லா இடத்திலயும் இப்ப உங்க படம் ஓடுது.அசத்துங்க.

ஆனா ஒழுங்கா வந்து படத்துக்கு கவிதை எழுதிடுங்க.
உங்களுக்கு எழுத வரும் !

பரிசல்காரன் said...

நேர்மையா சொல்லணும்னா எனக்கு உங்கமேல அவ்வளவா கோவம் வரல வாலு.

அதைத்தான் என் பதிவுலயும் எழுதிருக்கேன். (நாளைக்கு வரும்)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வால்பையன், வணக்கம். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி!! இதையே உங்களிடம் பல முறை கூறினேன்.

सुREஷ் कुMAர் said...

இந்த முறையும் திருவிளையாடல் தொடர்ந்ததா.. கலக்குங்க வால்..

சாரி வால்.. போனவாரம் சென்னையில் வேலைகிடைத்து கோவையை காலி செய்துகொண்டு சென்னை வந்துவிட்டேன்..
இணையம் உபயோகிப்பது 90% குறைந்துவிட்டதால் உங்களிடம் அதிகம் பேசமுடியவில்லை..
(சனியன் தொலைந்ததுன்னு நிம்மதி பெருமூச்சு விடுரிங்களோ..)

RAMYA said...

இடுகைக்கு வாழ்த்துக்கள் வாலு!

ஈரோடு பதிவர் சந்திப்பும் நல்ல முறையில் முடிந்தது.

வாழ்த்துக்கள் வாலு!!

மைக் முனுசாமி said...

ஈரோடு பதிவர் சந்திப்பு பற்றி என்னுடைய கருத்துகள்...

http://mikemunusamy.blogspot.com/2009/12/blog-post_20.html

Jackiesekar said...

எல்லோருக்கும் எனது வாழ்த்துக்களும் அன்பும்...

அன்புடன்
ஜாக்கி...

அது சரி(18185106603874041862) said...

பதிவர் சந்திப்பு படமெல்லாம் நிறைய ப்ளாக்ல இருக்கு...ஆனா யார் என்ன பேசினாங்க/விவாதப் பொருள் பத்தி விரிவா யார்னா எழுதுனா நல்லா இருக்கும்...

(அது சரி, நீங்க அப்படி என்ன கேள்வி கேட்டீங்க?? இன்னும் சில ப்ளாக்ல அதைப் பத்தியே சொல்லிருக்காங்க?)

நட்புடன் ஜமால் said...

250க்கு வாழ்த்துகள்.

அன்புடன் நான் said...

நல்லதுங்க... ஹங்கிங்கில் சிக்காமல் இருக்க தெளிவாக சொல்லுங்களேன்.

முனைவர் இரா.குணசீலன் said...

250 இடுகை இட்டமைக்கு வாழத்துக்கள் நண்பரே..

குசும்பன் said...
This comment has been removed by the author.
Anonymous said...

250வது இடுகைக்கு வாழ்த்துக்கள்..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

250வது இடுகைக்கு வாழ்த்துக்கள்!

வாலு, நீங்க வேட்ட... வேட்ட... வேட்ட... வேட்டைக்காரன்(விசய்)) கணக்கா இருக்கீங்க...

பேருக்கு தகுந்தாப்புல நடந்துக்கலன்னா அப்பரம் எதுக்கு அந்த பேரு!

கீப் இட் அப்!

Rajeswari said...

வாழ்த்துக்கள் வாலு...

Kumky said...

க்வாட்டருக்கு வாழ்த்துக்கள் வால்...

சிங்கத்த சாச்சுப்புட்டாங்களாமே உண்மையா?

பித்தனின் வாக்கு said...

கூட்டத்தைப் பற்றி எதுவும் தெரியாமல் எந்தக் கருத்தையும் நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒரு சில சமயங்களில் சாதாரன உரையாடல்களில் கூட ஒரு சில சமயம் நல்ல கருத்தான கேள்விகளுக்குக் கூட உங்களின் பதில் வார்த்தைகள் தடித்து விடுகின்றன(குறிப்பாக கடவுள் மற்றும் பார்ப்பனியம்). சத்தியமாய் எனது பின்னூட்டத்தில் அல்லது இடுகையில் அல்ல. என்னிடம் அப்படி நீங்கள் பேசியதும் இல்லை. நீங்கள் அப்படி என்னிடம் பேசினாலும் தவறு இல்லை. ஞானப்பித்தன் கடவுள் பற்றிக் கேட்ட சில பின்னூட்டக் கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளித்த விதம் அநாகரிகமாய் இருந்தது. அவர் மிக மென்மையானவர்,நல்லவர் அவருக்கு நீங்கள் பதில் அளித்த விதம், என்னை நீங்கள் மப்பில் எழுதியதாக நினைக்க வைத்தது. சங்கடத்தில் உங்களின் அந்தப் பதிவில் நான் பின்னூட்டம் இடாமல் சென்று விட்டேன். உங்களின் இந்த வேகத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளூங்கள் பாஸ்.

இது கூட நான் உங்களின் மீது வைத்துருக்கும் அன்பு மற்றும் மரியாதை காரணமாக கூறுகின்றேன். நன்றி. (கோவித்துக் கொள்ளாதீர்கள்).

பித்தனின் வாக்கு said...

Leave your comment

// இவ்வளவு தூரம் வந்துரிக்கிங்க!
எதாவது சொல்லிட்டு போங்க //
எதாவது தான சொல்லனும் சரி சொல்லறேன்.
ஒன்று
இரண்டு
மூன்று
நாலு
ஜந்து
சொன்னது போதுமா? ஹா ஹா ஹா

பித்தனின் வாக்கு said...

250க்கு வாழ்த்துக்கள் தலைவா. நன்றி. இதுக்கு ஒரு பார்ட்டி வைக்கனுமே. எப்ப வச்சுக்கலாம்?

Unknown said...

250க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
எவ்வளவு குடிச்சாலும் ஸ்டெடியா இருப்பேன்னு ​சொல்ற மக்கள் மத்தியில அக்குவாபினா குடிச்சாலும் அலும்புக்கு குறைவிருக்காது என்று அடித்து ஆடிய வாலுக்கு வாழ்த்துக்கள்!
கேட்ட கேள்விகளை​தொகுத்து வழங்கியிருக்கலாம்.

Unknown said...

250 க்கு வாழ்த்துகள் தல..

பதிவர் சந்திப்பு பற்றி போன் பண்ணுறேன்(எப்போன்னு கேட்காதிங்க) :-)

Beski said...

அப்படி என்னதான் கேட்டீங்கன்னு ஒரு பயலும் சொல்லல...

Kodees said...

விழாவே உங்களால்தான் வால் கலகலப்பா இருந்துச்சு. யார் என்ன சொன்னாலும் சரி, நான் உங்க பக்கம்தான்.

ஆனாலும் உங்களிடம் எனக்குப் பிடித்ததே உங்கள் அபார தன்னம்பிக்கைதான்! அதான் - ஆர்குட், ஜிமெயில் னு என்னவோ சொல்ல முயற்சி செஞ்சீங்களே அதைத்தான் சொல்றேன்.

Kumky said...

(இது தான் உங்க செம்மையா)

இத..ஈரோட்டு சித்தர்கிட்ட நீங்க கேக்க கூடாது...நாங்கதான் கேக்கோனும்.
கூடவே உங்க பாஸையும்.

அப்துல்மாலிக் said...

250 க்கு வாழ்த்துக்கள்

அய்யா ஜாமாய்ச்சிருக்கீங்க.. 100 பதிவர்கள் கலந்துக்கிட்டாங்களா? ஆச்சரியம்தாங்க‌

சுடுதண்ணி said...

வாழ்த்துக்கள்!

வால்பையன் said...

பின்னுட்டமிட்டு ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

!

Blog Widget by LinkWithin