நாம் மில்கிவே என்னும் கேலக்ஸியில் ஓரத்தில் சிறு புள்ளியாக தெரியும் சூரிய குடும்பத்தில் உள்ள மூன்றாம் கோளான பூமியில் வசிக்கிறோம், இந்த பிரபஞ்சம் உருவாகி பல கோடி கோடி ஆண்டுகள் ஆனாலும் பூமியில் உயிர்கள் உருவாக காரணமாக இருந்த சம்பவம் நடந்து 450 திலிருந்து 500 கோடி வருடங்கள் ஆகியிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது, அது எவ்வாறு நடந்திருக்கலாம் என தமிழில் ஆராயலாம்!
கோள்களில் விண்கற்கள் அல்லது வால் நட்சத்திரங்களின் மோதல் மிக ஆபத்தானது என்றாலும் சில சமயங்களில் அதுவே நன்மையில் கூட முடியக்கூடும், 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் எரிமலைகள் நிரம்பி என்னேரமும் தங்கம் போல் முன்னி கொண்டே இருந்தது தான் இந்த பூமி, அதன் மீது ஒரு விண்கல் அல்லது வால்நட்சத்திரத்தின் மோதல் அதன் மீது பெரும் மாற்றத்தை ஏற்ப்படுத்தியது, முதலாவதாக சொல்ல வேண்டுமென்றால் பூமியின் பருவநிலை மாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் 23.5% சாய்வு கோணம் அதனால் தான் ஏற்பட்டது.
பூமியின் மேல் ஏற்பட்ட மோதலில் நம்மில் இருந்து பிரிந்து சென்றது அல்லது நம் மீது மோதிய கல்லும் கூடவே பூமியில் இருந்து பிய்த்து செல்லப்பட்ட தனிமங்களும் சேர்ந்தது தான் நிலா!, பசிபிக் பெருங்கடலில் உள்ள ஆழமான பகுதியில் நிலவை பொருத்தினால் அது சரியாக பொருந்தி கொள்ளும் அளவே உள்ளது!, நிலவு நம்மில் இருந்து வருடத்திற்கு ஒண்ணரை கிலோமீட்டர் விலகி செல்கிறது, நம் ஈர்ப்பு விசையின் எல்லையை அது கடக்கும் போது, தனி கோளாக மாறி பூமியை சுற்றாமல் சூரியனை சுற்றலாம், அல்லது செவ்வாயில் மோதி சுக்கல் சுக்கலாக உடையலாம்!
பூமியை சுற்றி கொண்டிருக்கும் நிலா தீடிரென்று பாதை மாறும் போது அதனால் சீரான பாதையை பெற முடியாது, ஒவ்வொரு பனிரெண்டாயிரமாவது சுற்றுக்கும் ஒருமுறை அது பூமியின் சுற்று பாதையை தொட்டு செல்லும், அப்போது அது பூமியின் மீதே மோதலாம், இதெல்லாம் நடக்கமூடிய சாத்தியங்கள் 40 லட்சம் வருடங்களுக்கு பின் இருப்பதால் இப்பொழுது கவலைப்பட வேண்டியதில்லை!,
பூமிக்கு அடுத்த கோளாக இருக்கும் செவ்வாய் 700 கோடி வருடங்களுக்கு முன் இப்போதிருக்கும் அளவை விட இரண்டு மடங்கு இருந்தது, அதன் மீது மோதியது நிச்சயமாக ஒரு பெரிய விண்கல்லாக தான் இருக்கும் அல்லது வியாழன் கிரக்கத்தில் இருந்த துணை கோள் ஒன்று முன் கூறிய நிலவின் கதையைப்போல் அதன் சுற்று பாதையில் இருந்து பிரிந்து செவ்வாயின் மீது மோதியிருக்கலாம், அதன் பெரும் மோதல் அதனுடய சாய்வு கோணத்தையும் மாற்றிவிட்டது, பூமியை போலவே அதுவும் 24.5% சாய்வான கோணத்தில் சுற்றி கொண்டிருக்கிறது, அதனுடன் மோதிய கோள் ஒன்று சேர முடியாமல் தன் உட்கருவை இழந்து சிறு சிறு கற்களாக ”அஸ்ட்ராய்டு பெல்ட்” என்ற பெயரில் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் சுற்றி கொண்டிருக்கிறது.
அஸ்ட்ராய்டு பெல்டில் ஆயிரக்கணக்கான கற்கள் இருக்கின்றன, சிறுகற்கள் என்று சொன்னேனே தவிர சில கற்கள் நுறு கிலோமீட்டர் சுற்றளவு கொண்டவை, செவ்வாய்க்கும், வியாழனுக்கும் உள்ள தூரம் மிக அதிகமென்பதால் அது வேறு கோள்களை அணுகி சுற்றாமல் தனியாக ஒரு வளையம் போல் சூறியனை சுற்றி வருகிறது, இதே போன்ற ஒரு வளையத்தை நாம் சனி கிரகத்தை சுற்றியும் பார்க்கலாம், அதுவும் மோதலில் ஒன்று சேர முடியாமல் தனி தனி கற்களாக சனிகிரகத்தை சுற்றி வருகிறது, வியாழன் தான் சூரிய குடும்பத்தில் பெரிய கோள் என்பதால் அது பல சிறு கோள்களை இழுத்து சூரிய குடும்பத்தில் பல துணைகோள் கொண்ட பெரிய கிரகமாக சுற்றி வருகிறது.
1994 ஆம் வருடம் சூமேக்கர் என்பவரும் லெவி என்பரும் புதிதாக ஒரு வால் நட்சத்திரத்தை வானில் கண்டனர், அதற்கு முன் அந்த வால் நட்சத்திரத்தை பற்றி எந்த ஒரு குறிப்பும் இல்லை, அதனுடய சுற்று பாதை ஆச்சர்யபடும் வகையில் வியாழன் கிரகத்துக்கு அருகில் இருந்தது, அந்த வால் நட்சத்திரம் வியாழன் கிரகத்தால் ஈர்க்கப்பட்டு 21 துண்டுகளாக உடைந்து வியாழன் கிரகம் நோக்கி ஒரு ரயில் வண்டி பெட்டியை போல் அசுர வேகத்தில் சென்றது, வியாழன் கிரகத்தின் காற்று மண்டலத்தை அடைந்த போது அவற்றில் தீ பற்றி வரிசையாக ஒரு தோரணம் போல் சென்றதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
அதற்கு முன் எந்த கோளிலும் இவ்வளவு பெரிய மோதலை பூமியில் வசிக்கும் மக்கள் கண்டிராதபடியால் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என யாராலும் கணிக்க முடியவில்லை, அந்த மோதலுக்கு பின் வியாழன் கிரகம் பெரிய தீப்பிழம்பாகி சூரிய குடும்பத்தில் இரண்டு சூரியன்கள் போல் காட்சியளிக்கலாம் என சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர் ஆனால் ஆச்சர்யப்படதக்க வகையில் சூரிய குடும்பத்தின் பெரும் கோளான வியாழன் அதை ஒரு பெரிய பூகம்பம் போல் தன்னகத்தே ஏற்று கொண்டது, அதன் பின் அதிலிருந்து கிளம்பிய புகையில் நடுமையத்தில் இருந்த ஓட்டை மட்டும் பூமியை விட பெரிதாக இருந்ததாம், அப்போது ஏற்பட்ட புகை மண்டலம் மட்டும் ஆயிரம் கிலோமீட்டருக்கும் மேலே உயர்ந்து இன்று வரை அப்பகுதியை மறைத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
கோள்களின் மோதலில் மிக விசித்திரமான விளைவை பெற்றது யுரேனஸ் கோள் மட்டுமே, பூமியும், செவ்வாயும் தன் அச்சிலிருந்து 23.5% சாய்ந்திருப்பது போல் யுரேனஸ் கிரகம் 90% சாய்ந்திருக்கிறது, காட்சியமைப்பாக சொல்ல வேண்டுமென்றால் பூமியும், செவ்வாயும் சற்றே சாய்ந்த நிலையில் சுற்றும் பம்பரம் ஆனால் யுரேனஸ் கிட்டதட்ட உருளையின் அச்சில் சுற்றுகிறது தன்னை தானே!, அதற்கு காரணம் அதன் மீது மோதிய மாபெரும் விண்கல்லே!, விண்கற்களினால் சூரிய குடும்பத்தில் பெரும் மாற்றத்தை சந்தித்தது யுரேனஸ் மட்டுமே
*******
இந்த பிரபஞ்சம் பல ஆச்சர்யங்கள் நிரம்பியது தொடர்ந்து உரையாடுவோம்!
88 வாங்கிகட்டி கொண்டது:
அட! அட! இவ்வளவு அறிவு பூர்வமான விடயமா?
நான் கேள்களும் மோதல்களுமுன்னு நினைச்சு அவசரமா ஓடியாந்தேன்!
வாலு...
என்னாதிது, பதிவையும் பதிவுலகத்தையும் அடுத்த கட்டத்துக்கு அலேக்கா தூக்கிட்டு போறா மாதிரி தெரியுது...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
மிக அருமையான இடுகை
ரொம்ப பிடிச்சிருக்குங்க
Excuse Me,
இது வாலாரின் வலைப்பூதானே!
என்னங்க என்ன என்னமோ சொல்றீங்க.
தொடருங்கள் :)
...தோடா சயின்ட்டிஸ்ட் வந்துகிறாரு...
இதெல்லாம் நடக்கமூடிய சாத்தியங்கள் 40 லட்சம் வருடங்களுக்கு பின் இருப்பதால் இப்பொழுது கவலைப்பட வேண்டியதில்லை!, //
அறிவியலா!!! நடத்துக!!
nice science articles
யாரு வாலுவா - பன்முகம் காட்டும் வாலு வாழ்க
நல்வாழ்த்துகள்
'வால்' நட்சத்திரம் - உண்மைதான்!!!
இத்தனை தகவலுக்கு நன்றி வால். தொடருங்கள்.
அம்மனமாக இருப்பது குழந்தை பருவம் ஆடைகள் உடுத்த உடுத்த வ்யது.. இல்லை அனுபவம் முதிர்கிரது
வாழ்துகள்
இது போல் நிறைய எதிர்பார்க்கிறோம் வித்தியாசமாக
சரி சரி அதுக்காக கமா கதையெல்லாம் மறந்திடாதிங்க
கோள்களும் O வால்களும் ~ நல்லாயிருந்தது :)
வாலு-நட்சத்திரம்தான்:))
இந்த சப்ஜெக்ட் எனக்கு ரொம்ப பிடித்தது. அதை நீங்கள் இங்கே பகிர்ந்ததில் மிகுந்த மகிழ்ச்சி
வாழ்த்துகள்
கோள்களும் மோதல்களும் அப்டி தல்ப்பப் பாத்து கிரிகிரியாப் பூட்டுதும்மே. இன்னானு கண்டுகினா மெய்யாலுமே ஜபக்குனு ஆய்ப்பூட்சி.
இப்படிக்கு
மண்ணடி மாரி
:-))
வால்பையனா வால் நட்சத்திரமான்னு சந்தேகமா இருக்கு
இது வால்ப் பதிவுதானா? இல்லே மண்டபத்துலே யாராவது எழுதி கொடுத்தாங்களா? ....:)
மதங்களோடு மோதிஅலுத்து விட்டதாம் வாலுக்கு!
கோள்களோடு..பம் பம் பம்..ஆரம்பம்!
ஐய்யோ வாலு இது உங்க ப்ளாக் தானா?என்னன்னமோ சொல்றீங்க.நல்லாயிருக்கு இந்த பதிவு.தொடருங்கள்....
ஐயோ வாலு நீங்கதானா !எப்போ விஞ்ஞானியா மாறி இப்படி ஒரு அலசல்.உண்மையா நல்லதொரு பதிவு.
மிக அருமையான பதிவு வாலு வாழ்த்துகள் !
மர்மம் நிறைந்த பெர்முட முக்கோணத்தையும் (bermuda triangle) பற்றி பதிவு போடுங்க.
வித்தியாசமான் தலைப்பில் நண்பர் வாலு!
அதிலும் ஒரு நட்ச்சத்திரமாக ஜொலித்திருக்கிறார்!
ஒண்ணரை கிலோமீட்டர் ////
நிலா விலகுவது செண்டிமீட்டர் கணக்கில எனக் கேள்விப் பட்ட ஞாபகம்.
என்ன திடீர்னு?
அடேங்கப்பா....அருமையான விஷயங்கள். மிகவும் விறுவிறுப்பாக சொல்லி இருக்கீங்க.
வாழ்த்துக்கள் : )
அருமை..
பூமிக்கு வெளில சொல்லிட்டிங்க, அப்படியே பூமிக்குள்ள பூந்து போன என்னாங்கரதையும் சொல்லிடுங்க, தெரிஞ்சு வச்சுக்கலாம்..
பதிவு எல்லாம் கொஞ்ச நாளாவே ஒரு மார்கமா தான் இருக்கு..:)
அருமையான இடுகை
Nice blog... About Val, by Val..
திரு வால்பையன்,
உங்களின் அறிவியல் சார் வின்வெளி கருத்துக்கள் அருமை.
சமீபமாக தமிழ் டிஸ்கவரி சேனல் நன்றாக பார்க்கிறீர்கள் என தெரிகிறது.
உங்கள் கட்டுரையில் சில வரிகள் அறிவியல் ரீதியாக மாற்று கருத்துக்கள் உண்டு. இருந்தாலும் வலையுலக மொக்கைகளை பார்க்கும் பொழுது உங்கள் கட்டுரை மிகவும் உன்னதமானது.
என்னை போன்றவர்கள் இப்படி எழுதினால் நீங்கள் அறிவியல் எழுத என்ன அதிகாரம் என கேட்பார்கள் ஆனால் நீங்கள் எழுதலாம். காரணம் பிரபஞ்ச பெரும் வெடிப்பை நம்புகிறீர்கள், மில்கிவே நம்புகிறீர்கள் (பார்க்க ஒன்றை). ஆனால் இறைநிலையை நம்புவதில்லையே...!
//செவ்வாயின் மீது மோதியிருக்கலாம், அதன் பெரும் மோதல் அதனுடய சாய்வு கோணத்தையும் மாற்றிவிட்டது, பூமியை போலவே அதுவும் 24.5% சாய்வான கோணத்தில் சுற்றி கொண்டிருக்கிறது,//
இக்கருத்தையும் உங்கள் பதிவில் வெளியிட்ருக்கும் இரண்டாவது படத்தில் உள்ள தகவலையும் சரிபார்க்கவும்.
மேலும் உங்கள் கருத்துக்கள் அறிவியல்பூர்வமாக வளர என் வாழ்த்துக்கள்.
கொன்னுடிங்க வால் உண்மையிலேயே அறிவு பசிக்கு நல்ல தீனி வால் இது மாதிரி நிறைய எழுதுங்க
செப்டெம்பர் மூணாம் தேதியன்னைக்கு வால்பையன் இந்த இடத்தில்
http://consenttobenothing.blogspot.com/2009/09/blog-post_03.html#comments
பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய செய்திகளை சேகரித்து கொண்டிருக்கிறேன்!
சும்மா மொட்டராசன் குட்டையில விழுந்த கணக்கா கடவுள்னு ஒண்னு இல்லைன்னு சொன்னா யாருக்கும் புரியாது, அதை இன்னும் தெளிவாக சொல்ல முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்!
கிருஷ்ணமூர்த்தி said...
September 3, 2009 8:22 PM
வால்பையன் பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியிருப்பதாகச் சொன்னதில் சந்தோஷப்பட்டு கிருஷ்ணமூர்த்தி சொல்வது:
நல்லதொரு தொடக்கம்!
ஆராய்ச்சி என்ன சொல்லுதுன்னு அப்ப அப்ப எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்க!
சொன்னபடியே ஆராய்ச்சி ஆரம்பமாகிடுச்சு போல! இப்படி ஆராயப் புகுந்தவங்க எல்லாம்,இது "தற்செயலாக" நடந்திருக்க முடியாது என்ற கருத்துக்கும் வந்த தருணங்கள் உண்டு. அப்படியே போனாக்க, இதையெல்லாம் ஒரு பேரருள் திட்டம் ஒன்று தான் நடத்திக் கொண்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தான் டாகின்ஸ் மாதிரி நாத்திகம் பேசுகிறவர்கள் கூட, அண்டங்களைப் பற்றியோ, பிரபஞ்சக் ஒழுங்கைப் பற்றியோ அதிகம் பேசுவதில்லை.
ஹலேலூயா என்று ஒரு கும்பல் காத்த ஆரம்பித்து ஏசுவை நம்பு நீ இரட்சிக்கப் படுவாய் என்று அப்புறம் கத்துவது போல, அதே மாதிரி, கடவுள் இல்லை,நீங்கள் தைரியமாக இருக்கலாம் என்று எதிர்ப்பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார் டாகின்ஸ்!
கடவுள் என்பது மாயை தான், இருந்தால் கூட நன்றாக இருக்குமே என்று தசாவதாரம் கமல் மாதிரிக் கத்திக் கொண்டிருக்கிறார்.
நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
நான் இஸ்கூல்ல Bigbang theory..Origin of the universe..catostrophic collapse..nu இங்கிலிபீசுல பிரியாம
படிச்ச எல்லாத்தயும் தமிழ்ல மொழி பெயர்த்து தந்ததற்கு மிக்க நன்றி !!!!
( நீங்க டிஸ்கவரி சேனல் ரேஞ்சுக்கு எழுத நினைச்சி, பதிவு காண்போம் கற்போம் ரேஞ்சுக்கு தான் வந்திருக்கு..அவ்வ்வ் !!! )
கொஞ்சம் அட்வான்ஸா எழுதுங்க தல..
என்ன ஒரு தகவல் களஞ்சியம் வாலு....
ஜியாகர்பினா " பூகோளம் " தான !
:-))
valpaiyan....Rocking....
மிக உபயோகமான நல்ல பதிவு. இது போலவே இன்னும் பல பதிவுகளை எழுத வாழ்த்துக்கள்.
பகிர்ந்துகொண்ட தகவல்கள் பயனுள்ளதுதான் தலைவரே...
சரியான பாதையிலான பதிவு
வாழ்த்துக்கள்
//வால் நட்சத்திரங்களின் மோதல் மிக ஆபத்தானது என்றாலும் சில சமயங்களில் அதுவே நன்மையில் கூட முடியக்கூடும்//
இதுல ஏதும் உள்குத்து இல்லையே.......
எப்புடீங்கோ இப்படில்லாம் .....................?
இருந்தாலும் புதுமையான பல விடயங்களை கூறியிருக்கிறீர்கள்............. நன்றி
அருமையான பதிவு வால்.
A Good start Vaalu! Interesting! keep it up! Best wishes! :)
You are right mr.omkar. That is 25 something. I am in mobile. Sorry for english . Valpaiyan
bore thala..
//Blogger ஸ்வாமி ஓம்கார் said..//
சும்மா சொல்லக் கூடாது சாமி ! போட்டோவுல சூப்பர் போசு ...
மீ த 50
ஐ லைக் திஸ் இடுகை... ப்ளீஸ் கண்டினியூ..
அறிவியல் பதிவு அருமை.
ஷூமேக்கர் லெவி - வியாழனில் மோதியதில் பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை என்பதாக செய்தி.
தொடரட்டும் உங்கள் சேவை.
2012 ருத்ரம் பார்த்த பிதியே இன்னும் குறையல. உங்க பதிவ பார்த்ததுமே அது இன்னும் அதிகம் அயிடுச்சு.
தொடர்ந்து இதுமாதிரி science Fiction பத்தி பகிர்ந்துகனும்.
நன்றி
அருமை.
நல்ல பதிவு. பல சுவாரஸ்யமான தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி.
தகவலுக்கு நன்றி வால். மிக அருமை.
neraya thagavalgal.. thegatadha alavuku surukama soliteenga..
vazhthukkal!
உபயோகமான தகவல்கள். நல்ல பதிவு.
திடீர் detective பற்றி பதிவு , திடீர் யோசிக்கவே மனம் போகாத கொலை கதை, திடீர் மொக்கை , திடீர் என்று Management தத்துவங்கள் , இப்பொது பூலோக பற்றி ஆராச்சி.
எப்படி இந்த திடீர் மாற்றம்??
நிறைவான செய்திகள்... நல்ல பகிர்வு.. பாராட்டுகள் நண்பா,.... கலக்குங்கோ ( சாதியம், பார்பனியம், நாத்திகம் கடந்து வந்து சொன்ன செய்திகள் நல்லவையாக இருக்கு நண்பா)
இந்த கட்டுரையை எழுதிய "வால் பையன்" அவர்களுக்கு "கோள் பையன்" என்ற பட்டதை அளிக்கிறேன்.
//நிறைவான செய்திகள்... நல்ல பகிர்வு.. பாராட்டுகள் நண்பா,.... கலக்குங்கோ ( சாதியம், பார்பனியம், நாத்திகம் கடந்து வந்து சொன்ன செய்திகள் நல்லவையாக இருக்கு நண்பா)//
நள்ள சொன்னீங்க வாத்யாரே ! தள இது மாதிரி குப்பைகலை எலுத மூளை வரண்ட பயள்கள் நெட்டி -ல் நிரைய உண்டு.
அதனாள போன & இந்தப் பதிவுகலைப் போள தொடர்ந்து எலுது தள.
(நள்ள பார்த்துங்க, தளைவரும் நானும் ஒண்ணு இள்ளை ன்னு நான் டிஸ்கி எல்லாம் போடளை)
சொள் அலகன்
தேடி, சேகரித்த தகவல்கள், பகிர்வுக்கு நன்றி. தொடருங்கள் !
௧. 23.5% சாய்வு கோணத்திற்கான காரணம்...
௨. 40 லட்சம் வருடங்களுக்கு பின் நிலவின் நிலை..
௩. அஸ்ட்ராய்டு பெல்ட் ஐ பற்றிய உண்மைகள்...
௪. வியாழனில் நடந்த வால் நட்சத்திர மோதல்...
இதுபோல எங்கள் அறிவுக்கு நிறைய தீனி தந்தது... இந்த பதிவு...
வாழ்த்துக்கள் வால்(நட்சத்திர) சார்....
கலக்கிடிங்க தல... நெறைய மேட்டரோட ஒரு பதிவு....
அட ரொம்ப நல்ல விசயத்தை எல்லாம் சொல்லி இருக்கிங்க. ஆனாலும் பாருங்க நம்ம பாசையில் சொன்னா எப்பவும் பழைய சரக்குக்கு புதிய மொந்தையில் குடுத்தா நல்லா இருக்கும்.
ஆன்மீகம் மொதல்ல ஒன்பது கோள் சொன்னாங்க- பகுத்தறிவு இல்லை சொல்லி அப்புறமா நெப்டியூனையும் , புளேட்டாவையும் கண்டு புடிச்சு சொன்னாங்க.
அப்புறம் இராகு மற்றும் கேது சுழற்சி மாறும்ன்னு சொன்னாங்க- இல்லைன்னு சொல்லிட்டு அப்புறம் ஆமா ரெண்டு சுழற்ச்சி எதிர் திசையில் இருக்கும் சொன்னாங்க.
சனி ஒரு மந்த கிரகம், நீலாஞ்சன சாயா புத்திர அப்படின்னு சனி கருமை, மற்றும் இருட்டு கிரகம், நீல நிறம் சொன்னாங்க, பார்க்காத, படிக்காத பாமரப் பசங்க- பகுத்தறிவு கிண்டல் பண்ணாங்க.
இப்ப சனி தூசுக் கிரகம், அதுனால கருமையா நீல நிறத்தில் இருக்கும் அப்படினாங்க.
செவ்வாய் செந்னிறம் மற்றும் ஆற்றல் வாய்ந்ததுன்னு சொன்னா தப்பு அதுவே அது சிகப்பு கிரகம் அறிவியல் சொன்ன சரி.
சந்திரன் மனகாரகன் அது புவியில் இருக்கும் மனிதர்களின் மனதைப் பாதிக்கும் சொன்னா ஹி ஹி அது டுபாக்குர்.
ஆனா சந்திரனின் ஈர்ப்பு விசை புவியின் மீது ஆதிக்கம் செலுத்தும், கடல் அலைகள் உருவாகுவது, மற்றும் ஃபொளனர்மி அம்மாவாசையில் அலைகள் அதிகம் இருக்கும் சொல்லறாங்க. என்னத்தைப் பண்ண?
முதல்ல பூமியைத் தவிர எங்கும் ஆக்ஸிஜன் இல்லை என்றார்கள், தண்ணீரும் இல்லை என்றார்கள். இப்ப சந்திரனில் தண்ணீர் இருக்கு என்பார்கள், அப்படி என்றால் ஆக்ஸிஜனும் இருக்கனும் இல்லையா? இல்லை என்றால் அது தண்ணீர் அல்ல ஜைட்ரஜன் ஆக்ஸிஜன் தண்ணிர் இல்லாமல் ஒரு திரவமாக இருக்கக் கூடும். இது எல்லாம் புரிய நான் என்ன திராவிடச் சிசுவா இல்லை கமல் மாதிரி புரியாம பேச பகுத்தறிவாதியா? நான் நம்பும் சராசரி. வால்ஸ். நாளைக்கு இன்னும் எதாது விஞ்ஞானம் எதாது போட்டா கொடுத்தா அதை வைத்து கதை விடுங்க. அப்படியே பார்ப்பானையும், இந்து சமயத்தையும் திட்டனும் என்ன சரியா?
ஆனா நல்ல பதிவு கொஞ்சம் மெனக்கொட்டு நல்ல பதிவு இட்டுருக்கின்றிர்கள். அதுக்கு வாழ்த்துக்கள்.
தல அப்பால கொஞ்சம் இன்னும் தூரமா போ தலை, அப்படியா போனாக்கா ஆண்டர்மீடா காலக்ஸி வரும், ஆப்பாலிக்க போனா நிறைய காலக்ஸி(பேர் மறந்து பேச்சு) வரும், அப்படியே குத்த வச்சு யோசிச்சா அந்த காலக்ஸி எல்லாம் யாரு இருக்கா? அங்கன கடவுள் இருப்பாரா. இல்லை பெரியாரும் அண்ணாவும் அங்கன செட்டில் ஆகி இருப்பாங்களா? சொர்க்கம் நரகம் அங்கிட்டு இருக்குமான்னு யேசிச்சேன்னு வை!. நீ அப்பாலிக்கா ஆன்மீக வாதி இல்லைனா குவாட்டர் கோவிந்தன் ஆகிடுவா தலை. ஆமா பிக் பாங்க் தியரி நம்ம மில்கிவேக்கு மட்டும்தான இல்லை மத்த பால்வீதிக்குமா தலை. கொஞ்சம் விளக்கு தலை. இதுக்கு யோசிச்சின்னா அப்புறம் வால்பையன் வலையைப் பித்தன் மகன் அப்பிடின்னு பேரு மாத்திடுவ. வேண்டாம் இந்த விளையாட்டுப்பா. பேசாம கண்ணை மூடிட்டு பார்ப்பனியம், சாதியம், திராவிடம் மட்டும் எழுதுப்பா. அதுக்குத்தான் விடுதலை, தீக்கதிர். எல்லாம் படிச்சா போதும். தனிப்பட்ட மூளை எல்லாம் வேண்டாம். இதுக்கு எல்லாம் யோசிச்சா அப்புறம் கெட்டுப் போய் விடுவாய். நன்றி வால்ஸ், நல்ல முன்னேற்றம், தொடரட்டும்.
kaivasam oru tholil irukkunu sollunga(science vaathiyaar)!!
nice explanations!!
You have an excellent taste for movies,tailboy!
;-) Please see the movies of Billy Wilder (Director) You may start with the movie 'The Apartment' and share your views here
Keep up your good work too!
Best regards,
நானும் இது மாதிரி பதிவெழுதணும்னு நெனப்பேன் .ஆனா வாசிப்பு மண்டையில நிக்கிரதிள்ள பாஸ்
.நல்ல தேடல்!நல்ல படையல் !
கலக்கல்,
தொடருங்கள்
வால் இதுவரை உங்க பதிவுலே நான் படித்த பதிவுலே பட்டயக்கெளப்புற பதிவு இது, தெளிவான விளக்கம்..
வால் கோல் பற்றி சொன்னவிதம் அருமை
படிக்கவில்லை..
ஆனாலும் ரொம்ப நல்லாருக்கு தலைவரே.
கவனமா எல்லா பின்னூட்டங்களையும் படிச்சுட்டேன்.அதிலிருந்தே பதிவையும் வாசிக்க முடிந்தது....ஹி..ஹி.
மிக அருமையான பதிவு
அருமையான பதிவு வால்
தள , என் பெயறை சிளர் வேறு தலங்கலிள் யூஸ் செய்வதாக அறிகிரீன். இனி மேள் நான் பின்னூட்டம் இட்டாள் உனக்கு செல்ளில் கூப்பிட்டு சொள்கிரேன். (அதாவது confirm செய்கிரேன்)
சொள் அலகன்
தள , என் பெயறை சிளர் வேறு தலங்கலிள் யூஸ் செய்வதாக அறிகிரீன். இனி மேள் நான் பின்னூட்டம் இட்டாள் உனக்கு செல்ளில் கூப்பிட்டு சொள்கிரேன். (அதாவது confirm செய்கிரேன்)
சொள் அலகன்
கிழிஞ்சது...
செல்லில் பேசுகின்ற அளவுக்கு ஆகிப்போச்சா...?
எங்கப்பன் குதிருக்குள்ளதான் இருக்காருங்னா...
ஏங்க இதுக்கு அந்த ரோலண்ட் எம்ரிச்சே பரவாயில்லை போல இருக்கே! தலைவரே என்னதான் சொல்லவறீங்க, மெய்யாலுமே உலகம் அழியப்போகுதா?
2012 ல உலகம் அழியுதுன்னா நான் இனிமே ரெகுலரா தண்ணி அடிக்க ஆரம்பிச்சுடுவேன்!
என் கருத்து இது தான்!
:-)
என்ன திடீர்னு ஆராய்ச்சியெல்லாம் வால்.
நல்ல தகவல்கள்.
எப்போது எதுக்கூட எது மோதினா என்ன?
நாம அட்டு ஃபிகரை பார்த்துகிட்டு லட்டுவிக்கிற அம்மா மேல ஏத்தாம ஒழுக்கமா வண்டிய விட்டா சரி..
!!
ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சு கடைசியா ப்ரபஞ்சத்தையும் கடிச்சுப்புட்டீங்களே எசமான்:)
ஏதோ நாங்க எல்லாம் புள்ளகுட்டி காரனுங்க பார்த்து செய்யுங்க எசமான்!:))
//வால்பையன் said...
You are right mr.omkar. That is 25 something. I am in mobile. //
அட கூடு விட்டு கூடு பாயும் வித்தை மாதிரி எப்படி , அந்த தக்குணூண்டு மொபைல் உள்ளே போனீங்க வால்?
மிக அரிதான செய்தி தொகுப்பு.... அறிந்தேன் அதிர்ந்தேன். ( நான் முன் பே இட்ட பின்னுட்டத்தை காணும் ....???)
நானும் இந்த ஜோதியில ஐக்கியமாகிக்கிறேன்!
உலகத்தில என்னன்னவோ நடக்குது? இது தெரியாம பய புள்ளைங்க.. ஐ.பி.எல் பார்த்து ஏமாந்து போகுதே?
அருமையான கட்டுரை .இது நல்லா இருக்கு நன்றி
வருணா... ரொம்ப நல்ல பெயர்.. வச்சாச்சா?
வாழ்த்துக்கள் ...
// நிலவு நம்மில் இருந்து வருடத்திற்கு ஒண்ணரை கிலோமீட்டர் விலகி செல்கிறது,//
இதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா?
நான் அறிந்தவரையில் இது ஒரு தவறான தகவலாகும்..
இதற்கு ஆதாரம் இருப்பின் தயவுசெய்து அவற்றை இணைக்கவும்..
Post a Comment