சாதிபுத்தி!

சென்ற குவியலில் வந்திருக்கும் ஒரு சர்ச்சைகுறிய பின்னூட்டம் தான் இந்த பதிவிற்கு காரணம்!
இந்த பதிவை எழுத தூண்டிய அண்ணன் டக்ளஸ் அவர்களுக்கு நன்றி!

*********************

//கும்க்கி said...

ஸ்ரீதர் செய்தது மிகப்பெரும் தவறாகத்தான் படுகிறது.விருப்பமில்லாதவர் ஒதுங்கிப்போயிருக்கலாம். உதவி செய்த பின் அதை பதிவேற்றியது அருவருப்பான செயலாகத்தான் படுகிறது.
அது அவர்களுக்கே உரிய அம்சம்.//

இந்த பின்னுட்டத்திற்கு நான் எதுவும் மறுப்பு சொல்லவில்லை என்பது டக்ளஸின் வாதம், அதற்கு காரணமான இன்னோரு பின்னூட்டத்தையும் சபைக்கு கொண்டு வருகிறார்!

அந்த பின்னூட்டம்!

//வால்பையன் said...
மற்றோரு வேண்டுகோள்!
உங்கள் ஊரில் தலித்துகளுக்கு, சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகள் இருந்தால் சொல்லுங்கள், அதை மாற்றி அமைக்க உடன் வருகிறேன் குழுவோடு!பழைய அரைவேக்காடுகள் அதுவும் வேகாமல் நம்மையும் வேகவிடாமல் செய்யும். அடுத்த தலைமுறைக்கு சாதி என்பதே என்னவென்று தெரியக்கூடாது நண்பரே!//


இது தான் அந்த பின்னூட்டம்! உயர்சாதியினர் என்று தம்மை அழைத்து கொள்ளும் சிலர் தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது! யாரும் அதை கேட்பதாக தெரியவில்லை! ஆனால் எப்போதும் பார்ப்பனீய எதிர்ப்பை காட்டுவதில் முனைப்பாக இருக்கிறார்கள்! அதனால் எனது கருத்துகள் விரிவாக!

**********************

பார்பனர்களுகென்று தனியாக சாதி புத்தி இருக்கும் என்று எவ்வாறு நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை! இந்தியா முழுவதும் ஏற்றுகொள்ளப்பட்ட இந்து என்ற மதத்தையும் அதன் வேதத்தையும் நம்பி அதை கடைபடித்து வாழ்ந்து கொண்டிருப்பது பார்பன சமூகம்! பார்பனர்களை எதிர்ப்பவர்கள் ஏன் இந்து மதத்தை எதிர்ப்பதில்லை! புத்தகத்தை நம்பி கொண்டிருக்கும் புத்தகப்புழுக்கள் தானே அவர்கள்! அவர்களுக்கு எவ்வாறு பிறப்பிலேயே அறிவு காது வழியாக ஒழுகும்!ஒருவருடைய அறிவை தீர்மானிக்க வேண்டியது அவர்கள் கடந்து வந்த சூழலும், அவர்களது கற்கும் ஆர்வமும் தானே! இது அனைவருக்கும் பொது தானே!



கடவுள் பயத்தில் இருந்த மக்களை தனக்கு கீழ் பயன்படுத்தி கொண்ட ஆதிக்க பார்ப்பனர்கள் இருந்தது உண்மை தான்! அதை தான் அப்போதே பெரியார் என்ற மனிதர் சிதையில் இட்டு பொசுக்கிவிட்டாரே! இன்னும் இவ்வாறு தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறையை கையாள்வது பார்ப்பனர்கள் மட்டுமே என்று எவ்வாறு நம்புகிறீகள்! சாதியை ஒழிக்கவேண்டும் என்று நான் காட்டுகத்தல் கத்தி கொண்டிருகிறேன், நீங்கள் சாதிபுத்தி என்ற பெயரில் அவர்களை சொறித்துவிட்டு கொண்டு தான் இருக்கிறீர்கள்!

உங்கள் பேச்சுக்கே வருவோம்! அப்படி பார்ப்பனியர்களுக்கு சாதி புத்தி இருக்குமானால் அதே போல், ஒவ்வோரு சாதியினருக்கும் சாதிபுத்தி இருக்குமல்லாவா!, நான் பார்பனன் அதனால் புரோகிதம் செய்கிறேன் என்று சொல்லுவதை போல, ஒவ்வொரு சாதியினரும் அவர்களது புத்திகேற்ற குலதொழிலை செய்வதா! வர்ணாசிரம் என்று அழைக்கப்படும் குலதொழிலை எதிர்த்தது இதற்காகவா!

சாதி ஒழியாமல் எங்கிருந்து சமத்துவம் பிறக்கும்!
தமது வாரிசுகளுக்கு பார்பனர்கள் என்ற சாதியை அறிமுகபடுத்தி வைக்கும் போதே அவர்கள் தாம் என்ன சாதி என்பார்களே! என்ன சொல்வீர்கள், நாமும் ஆதிக்கசாதி என்றா! இல்லை நாம் தாழ்த்தப்பட்டவர்கள் என்று தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்துவீர்களா!? நீங்கள் சாதி ஒழிக்க பாடுபடாவிட்டாலும் பரவாயில்லை, இருக்கின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றி சாதியை வளர்த்து விடாதீர்கள்!

**********************
என் கண்ணை திறந்துவிட்ட டக்ளஸ் அண்ணனுக்கு மீண்டும் ஒருக்கா நன்றி!

105 வாங்கிகட்டி கொண்டது:

Raju said...

.

Arun Kumar said...

Me the second..
serious so escape

Anonymous said...

ரொம்ப வெயிட்டான சுப்ஜெக்ட் , என் உடம்புக்கு இது ஒத்துக்காது அதனாள முதள் போனி மட்டும் பண்ணிகிரேன். ( எலுத்துகல தேடி அடிக்கிறதுக்குல்ல மூணாவது போனி ஆயிடுத்து )

சொள் அலகன்

கிருஷ்ண மூர்த்தி S said...

பார்ப்பனர்களுக்கு சாதி புத்தி இருக்கிறதோ, இல்லையோ, அதைப்பற்றி பேசுகிறவர்களுக்கு நிறையவே இருக்கிறது.இது பேசுபவர்களுக்குமே தெரிந்தது தான்!

இங்கே உள்ளவனை,வடக்கே இருப்பவன் இட்லி சாம்பார், மதராசி, என்றெல்லாம் அழைப்பது மாதிரி, ஆந்திராவில் அரவம் என்று அழைப்பது மாதிரி இதுவும் ஒரு வியாதியாகப் போய்விட்டது அவ்வளவுதான்!

ஆ.ஞானசேகரன் said...

//சாதி ஒழியாமல் எங்கிருந்து சமத்துவம் பிறக்கும்!
தமது வாரிசுகளுக்கு பார்பனர்கள் என்ற சாதியை அறிமுகபடுத்தி வைக்கும் போதே அவர்கள் தாம் என்ன சாதி என்பார்களே! என்ன சொல்வீர்கள், நாமும் ஆதிக்கசாதி என்றா! இல்லை நாம் தாழ்த்தப்பட்டவர்கள் என்று தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்துவீர்களா!? நீங்கள் சாதி ஒழிக்க பாடுபடாவிட்டாலும் பரவாயில்லை, இருக்கின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றி சாதியை வளர்த்து விடாதீர்கள்!//

உண்மைதான் நண்பா,.. இன்னும் சாதிய கொடுமைகள் இருக்கதான் செய்கின்றது. கரூர் பக்கத்தில் ஒரு கிராமத்தில் இன்னும் தனி டம்ளர் கூட இன்னும் இருப்பதாக செய்திகளில் படித்தேன்.... இன்னும் நான் சாதீயம் பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். சாதி ஓட்டுகளை நம்பியே அரசியலே இருக்கே?????!!!!!

அகநாழிகை said...

வால்பையன்,
முந்தைய பதிவினை படிக்கவில்லை.
ஆனால் தொடர்ச்சியற்று வாசித்தாலும் நீங்கள் பேசியிருக்கும் கருத்தை தீர்க்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

SUBBU said...

//சாதி ஓட்டுகளை நம்பியே அரசியலே இருக்கே?????!!!!!//

யாருப்பா அது எங்க அய்யாவ இடையில இழுக்குரது

Admin said...

சாதிக்கொடுமை என்பது முற்றாக ஒழிக்கப்படவேண்டிய ஒன்று.
நிறையப்பேசலாம், விவாதிக்கப்படவேண்டிய விடயம். நேரம் இடம் கொடுக்கவில்லை பின்னர் வருகிறேன்.

g said...

“சாதிகள் இல்லையடி பாப்பா” சாதிகள் இல்லாம எப்படி சாமி வாழ்றது?

யோ வொய்ஸ் (யோகா) said...

கொஞ்சம் வெயிட்டான சப்ஜெக்ட் எடுத்துடீங்க. எதுக்கும் கொஞ்சம் கவனமா இருங்க. சாதி வெறியங்க உங்கள போட்டு தள்ளீருவாங்க அப்புறமா உங்கள வச்சி அரசியல் நடத்திருவாங்க..

Anonymous said...

//ஏன்னா வாலு, என்னாது ? ரொம்ப போரடிக்கிரேன்னு சொள்ளி உன் பதிவுக்கு ஒறிரு நால் வரமா இருந்தா இப்படியா பண்றது ? முன்னூத்தி சொச்சம் பின்னுவா ? போளி இண்டலக்ஸுவல் பசங்க ஆட்டமா அடி ரத்தக் கலரி பண்ணி வசசிருக்கானுவளே ? இது மாதிரி "பின்ன்னூ" குப்பைகலை படிச்சா பன்றி காய்ஸ்ஸல் வந்திடாதா ? //
சொள் அலகன் //

கருத்து கந்தசாமி, கட் அண்ட் பேஸ்ட் அண்ணாச்சி, இனைய வீரpathranகள் -கலை
குரிவைத்து இது போன்ர பதிவிடும் வால் தள, என் போன்ர அப்பாவிகளுக்கு கடைசியிள் ஏதாவது ஜோக் இனத்தாள், அதப் படிச்சிட்டு அப்பீட்டு ஆயிருவோம்.
அய்யா லவ்டேல் மேடி அண்ணாத்தைக்கு ஹெள்ப் பண்ணுங்கோ

மணிஜி said...

தென் மாவட்டங்களில் நடந்த சாதிக் கலவரங்களில் பார்ப்பனருக்கு பங்கு இருக்கிறதா?அங்கு ஆதிக்க சாத்யினர் யார் என்பது நன்றாக தெரியும்.அவர்களை எதாவது சொல்ல முடியுமா?அரிவாள்தான் பேசும்..முட்டாள்தனமாக பழைய பல்லவியையே பாட வேண்டாம்

सुREஷ் कुMAர் said...

என்னோட இடுகைக்கு போட்டிருந்த உங்க பதில்ல இவ்ளோ தீவிரமா ஒருத்தர் எறங்கி வேலை பாத்திருக்காரா.. அதுல அவ்ளோ தீவிரம் இருக்குன்றதே இப்போதான் தெரியுது..

உண்மைத்தமிழன் said...

ஆதிக்க சாதியினர் என்ற சொல்லாக்கமே தலித்துகள், பிராமணர்களைத் தவிர மற்ற ஜாதிக்காரர்களைத்தான் குறிப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இங்க ஆதிக்க சாதி என்பதே பணத்தை பிரதானமாக அல்லாமல், தலித்துகளை சாதி சார்ந்த நோக்கில் பார்க்கும், நடந்து கொள்ளும் சாதியினரைத்தான் குறிப்பிடுகிறது.

அந்த வகையில் பிராமணர்களெல்லாம் சுத்தமாக இல்லை..

தவறு, இவர்கள் இருவரைத் தவிர இருக்கும் மற்ற ஜாதிக்காரர்கள் மேல்தான்..!

सुREஷ் कुMAர் said...

//
அப்படி பார்ப்பனியர்களுக்கு சாதி புத்தி இருக்குமானால் அதே போல், ஒவ்வோரு சாதியினருக்கும் சாதிபுத்தி இருக்குமல்லாவா
//
அது அவர்கள் வளரும் சூழ்நிலையைபொறுத்தது.. ஆனால் பெரும்பாலும் நமது வாழ்க்கை சூழலில் கண்டிப்பாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்..
(உங்க அளவுக்கு டீப்பா ஆராயவெல்லாம் முடியாது.. மேலோட்டமா யோசித்ததில் என் கருத்து.. அவ்ளோதான்..)
//
நான் பார்பனன் அதனால் புரோகிதம் செய்கிறேன் என்று சொல்லுவதை போல, ஒவ்வொரு சாதியினரும் அவர்களது புத்திகேற்ற குலதொழிலை செய்வதா!
//
செய்யலாம்னு சொல்றிங்களா.. கூடாதுன்னு சொல்றிங்களா.. சரியா புரியலை..

க.பாலாசி said...

//ஏன் இந்து மதத்தை எதிர்ப்பதில்லை! புத்தகத்தை நம்பி கொண்டிருக்கும் புத்தகப்புழுக்கள் தானே அவர்கள்! அவர்களுக்கு எவ்வாறு பிறப்பிலேயே அறிவு காது வழியாக ஒழுகும்!ஒருவருடைய அறிவை தீர்மானிக்க வேண்டியது அவர்கள் கடந்து வந்த சூழலும், அவர்களது கற்கும் ஆர்வமும் தானே! இது அனைவருக்கும் பொது தானே!//

உண்மைதான். அறிவுவையும், சாதியையும் ஏன் ஒப்பிடுகிறீர்கள். அது இருந்தால் இது இல்லையே.

ஜெட்லி... said...

//சாதி ஒழியாமல் எங்கிருந்து சமத்துவம் பிறக்கும்!
//
நல்ல கருத்து வால்....

கோவி.கண்ணன் said...

வாலு,

தலித்துகள் பெரும்பாண்மையாக வாழும் ஊர்களில் மற்ற சாதிக்காரர்களும் பயம் இல்லாமல் வாழ்வது கிடையாது. பிரச்சனை இந்த சாதி என்கிற குறிப்பிட்ட சாதி இல்லை. அந்தந்த ஊர்களில் இருக்கும் சாதிப் பெரும்பாண்மை பொருத்ததே. உங்களுக்குத் தெரியுமா தலித் பள்ளர் பிரிவு, தலித் பறையர்களை தாழ்வாகத்தான் நடத்துவார்கள்.

வருண ஆலமரத்தின் சாதி விழுதுககள் ஆலமரத்தை தாங்கிப் பிடிப்பது உண்மைதான், அந்த ஆலமரத்தை சாய்க்க ஆணிவேரை சாய்ப்பது சரியான செயல்முறை என்கிறார்கள். ஆணிவேர் போய்விட்டால் விழுதுகளும் வேறு வழி இன்றி வீழ்ந்தே ஆகனும்.

கலையரசன் said...

பார்பனர்கள், தலித் சமூகத்தை அடக்கி சாதனை நிகழ்த்துவோமென யாருக்கும் சவால்விடவுமில்லை, சபதமெடுக்கவும் இல்லை.சாதிய ஒடுக்குமுறை பற்றி பேசுவது தேசியத் துரோகமாகவும், இதை மூடி மறைப்பதன் மூலம் சாதிப்பிரச்சினையை தீர்த்து விடலாமெனவும் செய்யப்பட்டு வருகின்ற பொய்யான பிரச்சாரத்தினை உடைத்து இது பேசப்படவேண்டும்.

உதாரணமாக உயர்சாதியினர் அரசியலை துரோக அரசியலாக முட்டாள்தனமாக அறிமுகப்படுத்தியதாக சொல்லலாம். துரோக அரசியல் எனக்குறிப்பிடும் கருத்து நிலையை வைத்தருப்பவர்கள் தமிழ்தேசிய வெறியர்களைத்தவிர வேறு யாரும் இல்லை. தலித்திய கருத்துக்களைப்பற்றி பேச முற்படுபவர்களை அதுபற்றி தேட முனைபவர்களை குளிர்காய்தலுக்குள் உள்ளடக்கி கொச்சைப்படுத்துவது என்பது சாதி அமைப்பை தொடர்ச்சியாக கட்டிக்காக்கும் முயற்சியாகும்.

வர்ணாசிரம் என்று அழைக்கப்படும் குலதொழிலை எதிர்த்து உண்மைப் பெரியார் தொண்டர்கள் இந்த அறிவுசார் சொத்துரிமைக் கூட்டத்தை உடனடியாக கடுமையாக எதிர்த்துப் போராடி இச்சிக்கலுக்கு இப்போதே முடிவு காணாவிட்டால் கீழ் கூறியவை உண்மையாகிவிடும்.

"பெரியார் திடலில் இரண்டு கல்லறைகள் உள்ளன: ஒன்று பெரியாரின் உடலுக்கு; இன்னொன்று பெரியாரின் கொள்கைக்கு."

Admin said...

அன்பின் வாலு...

//வால்பையன் சொன்னது…


தமிழர் சம்பிரதாயத்துக்கும், கடவுளுக்கும் சம்பந்தம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை!
தமிழ் கல் தோன்றி மண் தோண்றா கால்த்திலிருந்து இருக்கிறது!
கடவுள் நேற்று முளைத்த காளான்!
August 7, 2009 8:06 AM //



எனும் உங்கள் பினூட்டத்துக்குரிய பதில் http://shanthru.blogspot.com/2009/08/blog-post_11.html இங்கே இருக்கின்றது வந்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்..

Jackiesekar said...

படிச்சு பின்னுட்டம் போட வந்தா செம காரமா இருக்கே நண்பா?

கோவி.கண்ணன் said...

வால் படம் நல்லா இருக்கு, தென்கலைக்காரவாளை மட்டும் புடிச்சுப் போட்டு இருக்கிங்க. வடகலை ஐயங்கார்கள் கோவித்துக் கொள்ளப் போகிறார்கள்.

Ashok D said...

http://ashokpakkangal.blogspot.com/2009/05/blog-post_23.html

என் பதிவுகளில் ஒன்று.

சாதி இருக்கிறது... இன்னும் வன்மையாய் தமிழ் சமுகத்தில். எங்கள் சென்னையில் அதிகம் தெரிவதில்லை. ஆனால் ஊரிலிருந்து வருபவரிடம் அதிகம் இருக்குகிறது. ஊருகளிலும் நிறைந்துள்ளது.

Bleachingpowder said...

என்னை பொறுத்த வரை பார்ப்பனர்கள், they are harmless. அவர்கள் கல்லூரிக்கு போனால் படிக்க மட்டுமே போவார்கள். அங்கே ஒரு கூட்டத்தை சேர்த்துட்டு ஒருத்தருக்கு ஒருத்தர் நாய் சண்டை போட மாட்டார்கள். ஆதி சங்கருக்கு சிலை வைக்கனும்னு பஸ்ஸை எரிக்க மாட்டார்கள். இட ஒதுக்கீடு வேனும்ன்னு மரத்தை வெட்டி ரோட்டுல போட மாட்டாங்க. எங்க ஜாதி பவரை பாருன்னு தேர்தல்ல நின்னு பல்ப்பு வாங்க மாட்டாங்க. இட ஒதுக்கீட்டுல கவர்மெண்ட் வேலை கிடைச்சா தான் வேலை பாப்போம் சொல்ல மாட்டாங்க. யூனியன் ஆரம்பிச்சு, கொடி பிடிச்சு போராட்டாம் பண்ண மாட்டாங்க.

நல்ல படிச்சு ஒரு நல்ல எடத்துக்கு வந்த உடனே அவங்களை பார்த்து மல்லாக்க படுத்துட்டு எச்சி துப்புறவங்களை பார்த்து நக்கலா சிரிச்சுட்டு, அந்த பகவான் உங்களுக்கு கூலி கொடுப்பாருன்னு சாபம் கொடுத்துட்டு அவங்க வேலையை பார்த்துட்டு போயிட்டே இருப்பபங்க.


படிப்பும் மண்டையில எறாம, நாலு பேரு சொல்ற நல்ல புத்தியையும் கேட்க்காம, படிக்க வேண்டிய வயதில் படிக்காம, கவர்மெண்ட் கொடுக்குற சலுகையை முறையா பயன் படுத்தாம, திரிஞ்சிட்டு, எங்க முப்பாட்டன் உருப்படாம போனாதுக்கு காரணம் பார்பான் தானு இன்னமும் சொல்லீட்டு இருப்பாங்க

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//ஸ்ரீதர் செய்தது மிகப்பெரும் தவறாகத்தான் படுகிறது.விருப்பமில்லாதவர் ஒதுங்கிப்போயிருக்கலாம். உதவி செய்த பின் அதை பதிவேற்றியது அருவருப்பான செயலாகத்தான் படுகிறது.//

விருப்பமில்லாமல் இல்லை.விருப்பம் இல்லை என்றால் நானும் விட்டு விட்டுப் போயிருப்பேன்.இன்னும் அவர் நூறு முறை குடித்துவிட்டு விழுந்தாலும் தூக்கிக் கொண்டு போவேன்.மறுபடி இவ்வளவு குடிக்காதே அல்லது உடம்பைக் குறை தூக்க முடியவில்லை என்று சொல்லுவேன்.வேறென்ன சொல்ல முடியும்.இந்த பதிவு அவர் அனுமதி பெற்றுக் கொண்டு இட்ட பதிவல்ல.ஆனாலும் அவரைக் காயப் படுத்தும் நோக்கில் இட்டதல்ல என்பதை வால் நன்கறிவார்.

//அது அவர்களுக்கே உரிய அம்சம்.//

அப்படியா! நன்றி கும்கி.
நான் எந்த விளக்கமும் இந்த வார்த்தைகளுக்குத் தர விரும்பவில்லை.நன்றி.

சப்ராஸ் அபூ பக்கர் said...

:-)

SUBBU said...

//இட ஒதுக்கீடு வேனும்ன்னு மரத்தை வெட்டி ரோட்டுல போட மாட்டாங்க.//

மறுபடியும் யாருப்பா எங்க அய்யாவ வம்புக்கு இழுக்கிறது, ஏதாவது பிரச்சன பன்னனுமா? பன்னனும்னா சொல்லுங்க பன்னிடலாம்.....

SUBBU said...

// எங்க ஜாதி பவரை பாருன்னு தேர்தல்ல நின்னு பல்ப்பு வாங்க மாட்டாங்க.//

கெட்ட காலம் ஆரம்பிச்சிடுச்சி ...

Anonymous said...

இந்த ஜாதி வெறிக்கு காரனோம் எல்லாம் பார்பான்
தான் .தமிழன் னா பத்தி பேசுறதுக்கு இவர்களுக்கு அருகதைஇல்லை

When it is high time said...

//ஒருவருடைய அறிவை தீர்மானிக்க வேண்டியது அவர்கள் கடந்து வந்த சூழலும், அவர்களது கற்கும் ஆர்வமும் தானே! இது அனைவருக்கும் பொது தானே//

Wrong. Not common.

Our pasts and our prsent backgrounds are not the same. Look at the four men in your picture. They are well-fed, contented and happy. They have a regular job, which is clean and respectable.

And copy and past another group of dalit laborers and their unclean children and their huts - then, you conscience wont allow you to write the same sentence.

What arivu will the dalits - whose only thought is from where to get their next meal from - come to acquire from their past and present background? Will they deeply analyse which public school is ideal for their children? Unthinkable.

These things do not come under the idea of others are guilty; we, brahmins are not, in relationship with dalits.

I dont single out the four in the pic. If you had pasted some another four from another community, I would have compared it to dalits and said, you are wrong.

The cotton cross belts on their bodies indicate not their anmikam but their castes. The naamam on their forehead is also called caste mark, although it is not. I have seen it written even by brahmins that it is a caste mark.

After pasting such a pic, you have the temerity to say you want to abolish caste. Hypocricy.

Castes will continue. It is not necessary to go and tell a dalit he is a dalit. It is enough to have caste symbols on your body. That tells all.

Others practise untouchability in their violent style; and you do it in your style.

Difference in degree; not in kind!

Bleachingpowder said...

//SUBBU said...
//இட ஒதுக்கீடு வேனும்ன்னு மரத்தை வெட்டி ரோட்டுல போட மாட்டாங்க.//

மறுபடியும் யாருப்பா எங்க அய்யாவ வம்புக்கு இழுக்கிறது, ஏதாவது பிரச்சன பன்னனுமா? பன்னனும்னா சொல்லுங்க பன்னிடலாம்.....
//

எங்களுக்கும் பிரச்சனை பன்றது பிடிக்கும் ஆனா அதை பன்றது நாங்களா இருக்கனும் :)

மந்திரன் said...

// எங்க முப்பாட்டன் உருப்படாம போனாதுக்கு காரணம் பார்பான் தானு இன்னமும் சொல்லீட்டு இருப்பாங்க//

ஒத்துக்குறேன் அப்படியே..

நல்லத் தலைவர்களை சாதி என்ற பெயரில் அடைத்து வைக்கும் பழக்கம் எல்லா சாதி மக்களிடமும் இருக்கிறது (காமராஜர், முத்துராமலிங்கம் ,...)

எந்த சாதி சண்டையில் ஒரு பார்ப்பான் ரத்தம் சிந்தி இருக்கறான் ?

சண்டை தேவர், உடையார், முதலியார் , தலித் . இப்படி இவங்களே சண்டை போட்டுக்குவாங்க ..
அப்புறம் கோவிலுக்கு போய் , " சாமி , சாமி " அப்படின்னு ஒரு பூசாரியை கூப்டுவாங்க ...
அந்த சாமியும் கை படாம (கவனிக்க ) திருநீர் , குங்குமம் கொடுக்கும் , அதை வாயலேயும் , தலையிலேயும் போட்டுக்குவாங்க ..

SUBBU said...

//எங்களுக்கும் பிரச்சனை பன்றது பிடிக்கும் ஆனா அதை பன்றது நாங்களா இருக்கனும் :)//

இந்த பதிவுக்கும் அய்யாவுக்கும் சம்பந்தம் எங்கயிருந்து வந்துது, நீ என்ன படிச்சிருக்க அத சொல்லு முதல்ல

Bleachingpowder said...

//Sword Fish said...
Look at the four men in your picture. They are well-fed, contented and happy. They have a regular job, which is clean and respectable.
//

ஆமா அந்த நாலு பேரும் பிஎம்டபிள்யூ காருக்கு முன்னாடி நின்னு போஸ் கொடுக்கறாங்க, ரொம்ப சந்தோஷமா இருக்கிறதுக்கு. என்ன ஒரு பத்தாயிரம் ருபாய் வாங்குவாங்களா மாசத்திற்கு. அத வச்சு இந்த காலத்துல என்ன பண்ண முடியும். இங்க கவர்மெண்ட்ல அடிப்படை சம்பளமே அதுக்கும் மேல. பார்பனர்களிலும் நிறைய பேர் ஏழை தான், ஆனால் அதை மற்றவர்களிடம் கூறி உதவி கேட்க அவர்கள் கவுரவம் இடம் கொடுக்காது. அந்த வெறியை தான் அவர்கள் படிப்பில் காட்டுவார்கள்.

Bleachingpowder said...

//SUBBU said...
இந்த பதிவுக்கும் அய்யாவுக்கும் சம்பந்தம் எங்கயிருந்து வந்துது, நீ என்ன படிச்சிருக்க அத சொல்லு முதல்ல
//

யாருய்யா உங்க அய்யா, மொதல்ல நீ அத சொல்லு, அவருக்கு பேரெல்லாம் கிடையாதா,இல்லை பொறக்கும் போதே அய்யான்னு தான் பேரு வச்சாங்களா?? அய்யா கொய்யான்னு....

SUBBU said...

//Bleachingpowder said...
//SUBBU said...
இந்த பதிவுக்கும் அய்யாவுக்கும் சம்பந்தம் எங்கயிருந்து வந்துது, நீ என்ன படிச்சிருக்க அத சொல்லு முதல்ல
//

யாருய்யா உங்க அய்யா, மொதல்ல நீ அத சொல்லு, அவருக்கு பேரெல்லாம் கிடையாதா,இல்லை பொறக்கும் போதே அய்யான்னு தான் பேரு வச்சாங்களா?? அய்யா கொய்யான்னு....
//

நீ முதல்ல அடுத்தவன நொட்டம் சொல்ரத விட்டுட்டு உன்னோட உன்மையான பேருல வா

Bleachingpowder said...

//SUBBU said...
நீ என்ன படிச்சிருக்க அத சொல்லு முதல்ல
//

சொன்னா அய்யா கிட்ட சொல்லி வேலை வாங்கி தருவீங்களா ??

Bleachingpowder said...

//நீ முதல்ல அடுத்தவன நொட்டம் சொல்ரத விட்டுட்டு உன்னோட உன்மையான பேருல வா//

நீ அவ்வளவு வொர்த் இல்லை தம்பி

Anonymous said...

Karuththu Kandasamy , adichchu adungo, aen ippadi adakki vasikirenga ! ethaavathu kuththu mathippa ularungo

ummar said...

பார்பனர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் சாதி வெறியர்களும் இருக்கிறார்கள் எனக்கு தெரிந்து ஒரு பெண் தாழ்தபட்ட பையனை காதலிப்பது
தெரிந்து அவருக்கே அந்த பென்ணை கல்யாணம் செய்து கொடுத்தார்.

Ashok D said...

Mr.Bleacing powder.. நகர்புறங்கல்ல இன்னைக்கு(past 30 yearsa) யாரு ரௌடின்னா அவ பிராமனதான்னு உன்னக்கு தெரியுமா.. அதிமா சரக்கு அடிக்கறது யாருன்னு தெரியுமா... even in chenai... police அவள்ளா புடிச்சாளும் ‘பாவம் இவா ஐயர் ஆத்து பய்யன் (மற்றும் பெரிய எடத்து சப்போட்) இதனால அவா புழச்சிக்கறா இல்லையா? இதல்லாம் விடுங்க எங்க areavukku 20 இயர்ஸ் முன்னாடி மஞ்ச துனியோட ஒருத்தர் வந்தார். இன்னக்கி அந்த மஞ்ச துனிக்கு 6 ஆட்டோ ஓடுது... 1 மளிகைக்கடை.. 3 சொந்த வீடு... his qualification... just poonool... just poojari of ambal temple. how cant it is poosible.? More than 18 hrs I am working in a day past 20 years still I dont have குந்தாமணி.

இது தெரியுமா.. அவா சாபம் மட்டும் கொடுத்துட்டு ஒடிடடுவோன்னு -ல் _க்கறது செரியோ....

அப்பாவி முரு said...

///////////////////////&&&&&&&&&&&&&&&&&&&&&&&&((((((((((((((((())))))))))))))))))


ஸ்ரீ said...
//ஸ்ரீதர் செய்தது மிகப்பெரும் தவறாகத்தான் படுகிறது.விருப்பமில்லாதவர் ஒதுங்கிப்போயிருக்கலாம். உதவி செய்த பின் அதை பதிவேற்றியது அருவருப்பான செயலாகத்தான் படுகிறது.//

விருப்பமில்லாமல் இல்லை.விருப்பம் இல்லை என்றால் நானும் விட்டு விட்டுப் போயிருப்பேன்.இன்னும் அவர் நூறு முறை குடித்துவிட்டு விழுந்தாலும் தூக்கிக் கொண்டு போவேன்.மறுபடி இவ்வளவு குடிக்காதே அல்லது உடம்பைக் குறை தூக்க முடியவில்லை என்று சொல்லுவேன்.வேறென்ன சொல்ல முடியும்.இந்த பதிவு அவர் அனுமதி பெற்றுக் கொண்டு இட்ட பதிவல்ல.ஆனாலும் அவரைக் காயப் படுத்தும் நோக்கில் இட்டதல்ல என்பதை வால் நன்கறிவார்.

//அது அவர்களுக்கே உரிய அம்சம்.//

அப்படியா! நன்றி கும்கி.
நான் எந்த விளக்கமும் இந்த வார்த்தைகளுக்குத் தர விரும்பவில்லை.நன்றி.













^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அவசரப்படாத,

பக்குவமான,

வலைஉலகின் அரசியல் தெரிந்த,

நிதானமான,

உறுதியான

சரியான வார்த்தைகள்.


வாழ்த்துகள் ஸ்ரீ...

கார்ல்ஸ்பெர்க் said...

//
நான் பார்பனன் அதனால் புரோகிதம் செய்கிறேன் என்று சொல்லுவதை போல, ஒவ்வொரு சாதியினரும் அவர்களது புத்திகேற்ற குலதொழிலை செய்வதா!
//
செய்யலாம்னு சொல்றிங்களா.. கூடாதுன்னு சொல்றிங்களா.. சரியா புரியலை..

// ரிப்பீட்டு..!!

மேட்டர் கொஞ்சம் சீரியஸ்.. அதனால நான் வெளிய இருந்து ஆதரவு தர்றேன்'ணா..

When it is high time said...

//சாதியை ஒழிக்கவேண்டும் என்று நான் காட்டுகத்தல் கத்தி கொண்டிருகிறேன்,

When it is high time said...

In the last two paragraphs of your post, your points have not come out clearly. There is some confusion.

When it is high time said...

Bleaching Powder!

They are not standing in front of their BMW car. But in front of a temple, in AP, as the words behind them are in Telugu. A good and properous temple. Secure empllyment for them. No wonder, they look healthy and happy.

I wish this Vaalpayan had pasted a picture of the poor too. He made a mistake of posting a band of healthy brahmins, that too, with caste marks on forehead and body.

Even if the priests are poor, compare them with dalits. Your brahmins wont go and beg, according to you. Your brahmins are full of pride and honor. According to you, that will transform into a feeling of 'revenge'. Pride and honor are costly virtues of the rich and lucky. The poor cant afford such virtues. In the case of poor brahmins, such feelings come from the assured feeling that they are usantha saathi. sangku suttaalum...!

Compare the dalits. They suffer from double handicap: one poverty and another, being a castelss untouchable. Your brahmins will be respected although poor. If a police catches a bramin poor in a bad act, as D.R.Ashok has pointed out here, the police will take a lenient attitude towards the brahmins. But the dalits will be thrashed. No wonder, the Tamil films project dalits in such light. For e.g the muscleman of dadas are all dalits.

The brahmins are lucky, even in poverty. What a strange situation?

In povery, in life, in crime, and even in death, the dalits suffer.

In poverty, they wont have shame and their girls go for Rs.10 or 20. How can they have pride and honor when they worry how their babies get the milk for survival?
Even when they sell their bodies, as I said, it is for a few rupees. No one want their tanned black skin.

When I was young and lusty, I was standing at a place where I shouldnot, in Chennai. It was nightfall. I had just come out of of a matinee show. A man approached me with offers reeling out the names of states. I zeroed on Tamilnadu. Then he bargained for a few rupees.

On seeing me thus, another man waved me aside. He came to me: Avankiitta irukkethellaam - pointing towards the kuuvam huts - antha sarakkuththaan. Nammakkittaa irukkirathu usantha sarakku"

I feigned ignorance: What do you mean by usantha sarakku?

He mentioned the caste - yes, allow me, Vaalpayan, to say this! -of the priests you saw in the pic.

I wondered, not surprised. Because it is common in city. You find every girl of every caste in the trade. 'What do you expect?' The rate was steep. Why so steep? Usantha sarakkunna you have to pay more!

I rejected both men that day. Returned home wishing for the day when the black skin of dalits will also go for some few hundreds more, if not thousands. Because, as long as poverty dogs our life, so long as prostitution flourishes.

Discrimination and inequality - or sheer bad luck - even in flesh trade!

In life, the dalits will have to bow down before others, if not, they will be killed.

In crime, the police will beat them beyond shape.

In death, their bodies will not be allowed to be taken in a procession through thoroughfares. The routes in many villages are blocked for them. They have to take circuitous routes to reach their graveyards or cremataria.

Even in the said places, they will have to be buried in a place separately kept away from other community people.

And, finally, even after telling you all, your weeps only for the employed four men here, JUST BECAUSE THEY ARE BRAHMINS!

Keep it up. No amount of bleaching powder can clean us.

Anonymous said...

//நல்லத் தலைவர்களை சாதி என்ற பெயரில் அடைத்து வைக்கும் பழக்கம் எல்லா சாதி மக்களிடமும் இருக்கிறது (காமராஜர், முத்துராமலிங்கம் ,...)//

Don't mention Muthuramalingam as a Good Leader, its shame

Unknown said...

அய்யய்யோ...... வட போச்சே....... !!!!!

அறிவிலி said...

வால்,

உங்களோட நேர்மை எனக்கு ரொமப புடிச்சிருக்கு

மந்திரன் said...

ஏன் சொல்ல கூடாது ..
அட அனானி , கொஞ்சம் தைரியமா வந்து உன் முகம் காட்டி பேசு ..
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை , எந்த கேள்வி , விசாரணை இன்றி கொல்ல கூட உரிமை உண்டு என்று ஆங்கிலேயரால் உருவாக்க பட்ட ஒரு சட்டத்தை எதிர்த்து ஜெயித்தவர் .
சுதந்திரம் கிடைக்க பட்டுப் பட்டவர் ..... நெறைய சொல்லலாம் ..

நண்பரே வால் ,
இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல சாமி ..

நான் said...

அய்யா வெளியில் இருந்து வந்து நம்ம குடிய கெடுக்குறாங்க..வேற ஜாதிகாரங்க ...நாம தமிழ்நாட்டின் தோன்றல்கள்...அவங்க பிழைக்க வந்தவுக ..அவுகளால முடிஞ்சதை செய்தார்கள்...இப்போழுது இங்கு பருப்பு வேகவில்லைன்னு வெளிநாட்டுக்கு குடும்பத்தோட போய் சேரானுக...படிப்பு இல்லன்னு மிச்சசொச்சம் இங்கு இருக்குது....அவங்க அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்ன்னு திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன் மீதி எல்லோருக்கும் பீஸ் போய்டும் கவலையே வேண்டாம்....

kumar said...

வால்பையன் said...
மற்றோரு வேண்டுகோள்!
உங்கள் ஊரில் தலித்துகளுக்கு, சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகள் இருந்தால் சொல்லுங்கள், அதை மாற்றி அமைக்க உடன் வருகிறேன் குழுவோடு!பழைய அரைவேக்காடுகள் அதுவும் வேகாமல் நம்மையும் வேகவிடாமல் செய்யும். அடுத்த தலைமுறைக்கு சாதி என்பதே என்னவென்று தெரியக்கூடாது நண்பரே!/

அன்புள்ள வால்பையனுக்கும்/கோ.வி கண்ணன் அவர்களுக்கும்,

மற்றும் உங்களுடைய சக பதிவர்களுக்கும் குமார் திருப்பூரிலிருந்து,

உங்களுடைய எண்ணம் சரியானாதாக இருந்தால் எனது என்னிற்கு தொடர்பு கொள்ளுங்கள் 996565959 முதலில் எங்க‌ளூரில் உள்ள சாதி கொடுமைய சமாளிச்சு காட்டுங்க இதுல உங்க புத்திய காட்டி சாதி வெறிய தூண்டாம சாதிச்சு காட்டுங்க எனக்கு ரொம்ப சந்தோசம் நான் உங்க பக்கம்........

kumar said...

மண்ணிக்கவும்

எனது எண் 9965659599

Anonymous said...

//வால் படம் நல்லா இருக்கு, தென்கலைக்காரவாளை மட்டும் புடிச்சுப் போட்டு இருக்கிங்க. வடகலை ஐயங்கார்கள் கோவித்துக் கொள்ளப் போகிறார்கள்.//

யாருய்யா இந்த அரை மெண்டல், சாதி வேண்டாம்ன்னு சொல்ற பதிவில் சாதி பெயர்களை சொல்லி கேலி செய்து கொண்டு இருக்கிறது

இதை போல வெத்து வேட்டுகளால் தான் இன்னமும் சாதி கொடுமை தலைவிரித்து ஆடுகிறது

இவ்வளவு பேசற இந்த கோவி.கண்ணன் தன் சுய சாதியை விட்டு திருமணம் செய்தாரா அல்லது செய்வாரா? வந்துட்டானுங்க

kumar said...

உங்களுடைய கருத்துக்கள் ஒலிப்பதிவு செய்யப்படும்

Vidhoosh said...

அன்பின் வால்.
இது போன்ற sensitive விவாதங்கள் மூலம் அதிக பின்னூட்டங்கள் மற்றும் ஓட்டுக்கள் கிடைக்கலாம். இதன் மூலம் ஏதும் தீர்வு பெற முடியும் என்று நம்புகிறீர்களா? இது அனாவசியம் என்று கருதுகிறேன். உங்களுக்கு வேறு எந்த subject எழுதக்கிடைக்கும் வரை, நிறைய படிக்கலாமே?

-வித்யா

Vidhoosh said...

அல்லது உங்கள் மகளோடு quality time செலவிடலாமே?
-வித்யா

kumar said...

......

வால்பையன் said...

குமார்!
இப்பவே இதை பற்றி உங்களிடம் பேசனும்னு எதிர்பார்க்குறிங்களா?

நான் ஈரோடு தான்! திருப்பூரில் இருந்து அறுபதே கிலோமீட்டர்!
லீவு கிடைத்தால் பஸ் ஏறிவிடுவேன்!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

மேடி போதும்!
இங்க நம்பர் கத்துகிட்டு என்னை டரியல் ஆக்காதிங்க!

வேணுமின்னா என்னை பனங்கொட்டை தலையா! செல்போன் மண்டையான்னு திட்டிபுடுங்க!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
kumar said...

//சாதியை ஒழிக்கவேண்டும் என்று நான் காட்டுகத்தல் கத்தி கொண்டிருகிறேன்,

உங்களை ஆவளுடன் எதிர்பார்கும் குமார்

Prabhu said...

வாலு அண்ணே என்ன சண்டை போட விட்டு வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க! தீர்ப்பச் சொல்லி பஞ்சாயத்த கலைச்சு விடுறது!

kumar said...

குமார்!
இப்பவே இதை பற்றி உங்களிடம் பேசனும்னு எதிர்பார்க்குறிங்களா?

நான் ஈரோடு தான்! திருப்பூரில் இருந்து அறுபதே கிலோமீட்டர்!
லீவு கிடைத்தால் பஸ் ஏறிவிடுவேன்!

you are allways wellcome \உங்களை நான் குறை கூறவில்லையே எங்கள் ஊரிலும் உங்களுடைய சுட்டிக்காட்டல்கள் நிறைய உள்ளன உங்களுடைய வரவினை ஆவலுடன் எதிர்பார்க்கும்.........
குமார்

அ.மு.செய்யது said...

உங்கள் கருத்தை நான் ஏற்று கொள்கிறேன்.

வாஸ்தவம் தான்.இன்னும் நிறைய பேசலாம்..இப்போதைக்கு இம்புட்டு தான் எழுத முடிகிறது.

VISA said...

இந்த பதிவு படித்த பிறகு எனக்கு தெளிவு படுவது யாதெனின்

ஜாதி இரண்டொழிய வேறில்லை சாற்றங்கால்
நேரம் வழுவா நெறிமுறையில் பிளாகினியில்
கமென்ட் இட்டார் பெரியோர்
இடாதோர் இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.

நான் கமென்ட் போடுட்டேன்.

Anonymous said...

//சுதந்திரம் கிடைக்க பட்டுப் பட்டவர் ..... நெறைய சொல்லலாம் ..//

Joke of the millennium.. Can you mention in which agitation did he participate? FYI, He is the murderer of Emanuel. Sorry I don't have blog

When it is high time said...

////வால் படம் நல்லா இருக்கு, தென்கலைக்காரவாளை மட்டும் புடிச்சுப் போட்டு இருக்கிங்க. வடகலை ஐயங்கார்கள் கோவித்துக் கொள்ளப் போகிறார்கள்.//

நியாய்ந்தான்.அவங்க இரண்டுபேர்களிடையே தீராத சண்டை உண்டு. யார் போலி, யார் நிஜம் என அடித்துக்கொண்டு, இன்றும் உண்டு. ஆனால் வெளியில் தெரிவதில்லை.

கோவி. கண்ணன் சொன்னமாதிரி, இந்த படத்தை பார்த்தவுடனே வடகலையாருக்கு என்ன தோன்றும்?

‘இந்த வால்பிடித்தவனுக்கு நாங்கல்லாம் பாப்பாங்களாத் தெரியலையா? போலி ஆசாமிக படத்தேல்ல போட்றான்!”

Let us leave the matter to the Valpayan. It is between him and vadagalaiyaars.

Next time, I hope, when he posts any pic, he will think twice before clicking the mouse.

sakthi said...

இத்தனை அனானியா???

sakthi said...

வெகு காரமான பதிவு

NRISPOT said...

வால்பையன்னு பெயரு வைச்சுட்டு எப்படி ரொம்ப seriousya எளுதின எப்படி ..... any way good post and thoughts...

- இரவீ - said...

அப்டீங்கறீங்க ... றீங்க ...றீங்க..றீங்க...

Kumky said...

Vidhoosh said...

அன்பின் வால்.
இது போன்ற sensitive விவாதங்கள் மூலம் அதிக பின்னூட்டங்கள் மற்றும் ஓட்டுக்கள் கிடைக்கலாம். இதன் மூலம் ஏதும் தீர்வு பெற முடியும் என்று நம்புகிறீர்களா? இது அனாவசியம் என்று கருதுகிறேன். உங்களுக்கு வேறு எந்த subject எழுதக்கிடைக்கும் வரை, நிறைய படிக்கலாமே?

விவாதிக்கலாம்.......ஆனால்...மேலே கண்டுள்ளவையே சொல்ல நினைக்கின்றேன்.
வித்யா அக்காவிற்க்கு நன்றி.

Kumky said...

ஸ்ரீ said...

//ஸ்ரீதர் செய்தது மிகப்பெரும் தவறாகத்தான் படுகிறது.விருப்பமில்லாதவர் ஒதுங்கிப்போயிருக்கலாம். உதவி செய்த பின் அதை பதிவேற்றியது அருவருப்பான செயலாகத்தான் படுகிறது.//

விருப்பமில்லாமல் இல்லை.விருப்பம் இல்லை என்றால் நானும் விட்டு விட்டுப் போயிருப்பேன்.இன்னும் அவர் நூறு முறை குடித்துவிட்டு விழுந்தாலும் தூக்கிக் கொண்டு போவேன்.மறுபடி இவ்வளவு குடிக்காதே அல்லது உடம்பைக் குறை தூக்க முடியவில்லை என்று சொல்லுவேன்.வேறென்ன சொல்ல முடியும்.இந்த பதிவு அவர் அனுமதி பெற்றுக் கொண்டு இட்ட பதிவல்ல.ஆனாலும் அவரைக் காயப் படுத்தும் நோக்கில் இட்டதல்ல என்பதை வால் நன்கறிவார்.

//அது அவர்களுக்கே உரிய அம்சம்.//

அப்படியா! நன்றி கும்கி.
நான் எந்த விளக்கமும் இந்த வார்த்தைகளுக்குத் தர விரும்பவில்லை.நன்றி.



மிக்க நன்றி ஸ்ரீ.......

உடன் பேசியும் பழகியும் புரிந்துகொள்ள சிரமமாயிருக்கிறது.....எனக்கல்ல.


சொல்லிலும் செயலிலும் வேண்டும் நேர்மை.

திரும்பவும் உங்களின் சம்மந்தமான
பதிவை படிக்க சங்கடத்துடன் உங்களுக்கே பரிந்துரைக்கின்றேன்.

Kumky said...

வால்.,

வாதம் செய்யலாம்...ஆனால் பலனிருக்காது.

போதுமே......

நன்றி.

அதுவும் மிக்க நன்றி.

Anonymous said...

திருவாளர் வால்பையன் அவர்களக்கு,
நான் பரிசில்காரன் வாசகன், முதன் முறையாக தங்களுடைய பதிவு பதிவு படித்தேன்

இங்கு பதிவு செய்தவர்கள் யாவரும் பார்பீனிய எதிர்ப்பு பற்றி எழுதி இருகிறார்கள், இங்கு ஆதிரிப்பவர்கலக்கு சிலவற்றை என் வாழ்வில் நடந்தவைகளை இங்கு குறிப்பிட நினைக்கிறேன்...யார் மனதையும் புண் படுத்தும்படி என் வார்த்தைகள் இருந்தால் மன்னிக்கவும்.
நான் படித்தது ஆண்டாள் பிறந்த ஊரில் இருக்கும் ஒரு பள்ளியில் , அதுவரையிலும் வேறொரு பள்ளியில் படித்த எனக்கு அந்த பள்ளியில் சேர்ந்த உடன்தான் அந்த பிரிவினை வாதம்(பார்ப்பினிய) தோன்றியதே. ஒரு வெறுப்பு வருவதற்கு காரணமாக இருந்தவர்களே அங்கு இருந்த ஒரு சில ஆசிரியர்களே. பாடம் நடத்தும் போது நாம் சரியாக கவனிக்க விட்டால் " உனக்கு என்ன , quoto முறை இருக்குன்னு , எங்கள மாதிரி பிராமினா கஷ்ட படுவதர்க்குன்னு கேட்டவர்கள் கூட இருக்கிறார்கள், " பள்ளியில் நடக்கும் முக்கிய விழாக்களக்கு அதிகம் முக்கியத்துவம் தரப்பட்டவர்கள் கூட ஒரு குறிப்பிட்ட ஜாதிய சேர்ந்தவர்கள் தான். வேற்று ஜாதி மாணவன் ஒரு பிராமின் மாணவனை விட அதிக மதிபெண்கள் பெற்றால், எப்படி தெரியும் அந்த மாணவனை திட்டுவார்கள், "அங்க பாரு அவனே இவளவு மதிப்பெண் எடுக்குறான் நீ எல்லாம் என்கிர்ந்து " என்று. பிறகு விசாரித்த பார்த்ததில் அந்த குறிப்பிட்ட ஆசிரியரின் புதல்வனக்கு engineering கல்லூரியில் அவன் எதிர்பார்த்த பாடம் கிடைக்கவில்லை என்ற கோபதினால்தானம்(பிறகு அவனே அமெரிக்காவில் செட்டில் ஆனா கதை வேறு). இங்க மேலே பின்னோட்டம் இட்டவர்கலக்கு சில கேள்விகள்,

1. அக்ரகாரம் என்பது என்ன, அங்கு ஏன் பிராமின் மட்டும் இருக்கிறார்கள், வேறு யாரையாவது குடிஇருக்க அணுமதிப்பீர்கல.
2. தங்கள் வீடிற்கு யாராவது வந்து தண்ணீர் கேட்டால், வீட்டிற்க்கு வெளியே வைத்து கொடுப்பீர்களா அல்லது திண்ணை உட்கார் வைத்து தண்ணீர் கொடுப்பீர்களா.
3. வேற்று நாட்டில் இருந்தாலும் ஒரு பிரமினைக் கண்டால் , எப்படி பழுகுவீர்கள் . அதே சமயம் வேறொருவரைக் காண்டால் பேசினாலும் ,(do u feel comfortable) உண்மைய கூறவும்.
4. இங்கே படிப்பது அவன் அவன் அறிவை பொறுத்துன்னு , தங்களின் தந்தை என்னவாக இருந்தார், தங்களின் பாட்டனார் என்னவாக இருந்தார், தாங்கள் எந்த மாதிரியான சூழ்நிலையில் வளர்ந்தீர்கள்?
5. இங்கு ஒருவர் தன்னுடைய companyil பிராமின் என்பதால் பதவி உயர்வு கிடைததுன்னு கூறினார். அதற்க்கு மறுப்பு தெரிவிதவர்க்கு ஒரு சின்ன விஷயம் "நானும் ஒரு சாப்ட்வர் தொழிலாளிதான் இங்கையும் அது நடக்குது. என்னையும் பிராமின்னு தப்ப நெனைச்சிக்கிட்டு ஒரு மேனேஜர் என்கிட்டே சொன்ன விஷயம் இது.. அவர் college campus interview போன அப்ப நிறைய பிராமின் பசங்களத்தான் எடுத்தாராம். ஏன்னு கேட்டதுக்கு , நமக்குத்தான் quotaannu ஒன்னு இல்லையேன்னார்(அப்புறம் நானும் பிராமின் இல்லன்னு தெரிய வந்து அவர் முழிச்ச விடம் வேற)

மேற்கூறிய விஷயங்கலக்கு விளக்கம் மட்டுமே எதிர்பார்கிறேன், இன்னொருமுறை யார் மனதையும் புண் படுத்தும்படி என் வார்த்தைகள் இருந்தால் மன்னிக்கவும்.
குறிப்பு: எனக்கு நிறைய பிராமின் நண்பர்கள் இருக்கிறார்கள் , தெளிந்த மனதுடனும் அறிவுடனும். ........தயவு செய்து யாரும் திட்டாதீர்கள்( பயம்மா இருக்குப்பா)

நட்புடன்
ஆதவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

தான் சரியென்று நினைப்பதை..'பட்' என போட்டு உடைப்பவர் அருண் என்பதை சொல்லும் மற்றுமொரு பதிவு உங்களிடமிருந்து...வாழ்த்துகள்

Jawahar said...

தலித் நண்பர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது பிராமணர்கள் அல்ல. இரட்டை டம்ளர் வைத்து டீக்கடை நடத்துகிறவர்கள் பிராமணர்கள் அல்ல. தீண்டாமையும் ஜாதியை இழித்துப் பேசுவதும் சட்ட விரோதம் என்று ஆனா பிறகு சட்டத்தை மீறுகிறவர்கள் பிராமணர்கள் அல்ல. ஒதுக்கீட்டு முறையால் வாய்ப்பை நழுவ விட்ட ஏழை பிராமணர்கள் கூட வீட்டுக்குள்ளும்,நண்பர்களிடமும் சொல்லி அழுவதோடு சரி.

ஆனாலும் பிராமணர்களை இழிவாக விமர்சனம் செய்வது தொடர்வதற்கு ஒரே ஒரு காரணம்தான்.

செத்த பாம்பை எத்தனை அடித்தாலும் அது கடிக்காது என்கிற தைரியம்தான்.

http://kgjawarlal.wordpress.com

மேவி... said...

திரு. Sword Fish அவர்களே..... உங்களுடைய கருத்துக்களை தமிழ்யில் சொல்லி இருக்கலாமே.... அப்படி சொல்லி இருந்தால் என்னை மாதிரி முட்டாள்களுக்கும் புரிந்து இருக்கும்.

கிருஷ்ண மூர்த்தி S said...

/Sword Fish said...

//சாதியை ஒழிக்கவேண்டும் என்று நான் காட்டுகத்தல் கத்தி கொண்டிருகிறேன்,/
பிரச்சினையே, நெருஞ்சி முள்ளாக இருந்து இப்போது sword fish ஆக மாறியிருக்கும் நீங்கள், காட்டுத் தனமாகவும், காட்டுமிராண்டி போல எதையும் அறிந்துகொள்ளாமலேயே உளறிக் கொண்டிருப்பதும் தான்!

சாதியை ஒழிக்கக் காட்டுக் கத்தல் கத்தினால் மட்டும் போதுமா?

Anonymous said...

//பார்பனர்களுகென்று தனியாக சாதி புத்தி இருக்கும் என்று எவ்வாறு நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை! இந்தியா முழுவதும் ஏற்றுகொள்ளப்பட்ட இந்து என்ற மதத்தையும் அதன் வேதத்தையும் நம்பி அதை கடைபடித்து வாழ்ந்து கொண்டிருப்பது பார்பன சமூகம்! பார்பனர்களை எதிர்ப்பவர்கள் ஏன் இந்து மதத்தை எதிர்ப்பதில்லை!//

நல்ல கேள்வி.

எனக்கு தெரிந்தவரை எல்லா சாதியிலும் மூட நம்பிககைய்கள் இருக்கிறது..என் பாப்பனர்களை மட்டும் குறி வைத்து துரத்துகிறார்கள் ..?no offense..தோணினத கேட்டேன்..

அன்புடன்,
அம்மு.

குடுகுடுப்பை said...

பெரியார் பார்ப்பணர்களை எதிர்த்த காலம் வேறு ,இன்று நிலை வேறு பார்ப்பன விரோதத்தை கூட்டாமல், அவர்களிடம் இருக்கும் திறமையை அனைவருக்கும் சென்றடையும் வழியைத்தான் கண்டுபிடிக்கவேண்டும்.

Ashok D said...

ஆதவன் கூறிய 5 பாயிண்ட்ஸ்க்கு 100% ஒத்துபோகிறேன். சொல்ல இன்னும் நெறைய இருக்கு.80 % brahmins have 'லட்ச்மன் கோடு’

எனக்கும் நிறைய பிராமின் நண்பர்கள் இருக்கிறார்கள். மென்மையானவர்கள் மற்றும் மேன்மையானவர்கள் என்பதையும் இங்கே பதிவு செய்ய ஆசை படுகிறேன்.

When it is high time said...

//திரு. Sword Fish அவர்களே..... உங்களுடைய கருத்துக்களை தமிழ்யில் சொல்லி இருக்கலாமே.... அப்படி சொல்லி இருந்தால் என்னை மாதிரி முட்டாள்களுக்கும் புரிந்து இருக்கும்.//

I am using three computers: two during the day and one at night at home. The home PC has got the tamil software.

MUTTAALKALNAALE ENTHA THOLLAIYUM ILLAI. ARIVAALINGRAVANAALATHTHAAN PRIASSAANAIYEE!

When it is high time said...

//இப்போது sword fish ஆக மாறியிருக்கும் நீங்கள், காட்டுத் தனமாகவும், காட்டுமிராண்டி போல எதையும் அறிந்துகொள்ளாமலேயே உளறிக் கொண்டிருப்பதும் தான்!

சாதியை ஒழிக்கக் காட்டுக் கத்தல் கத்தினால் மட்டும் போதுமா?//

Sir,

Sword Fish is the nick for my English blogging, in which I first used the Tamil nick name Nerunji Mul. Since an English blog needs only an English name, according to me, I changed the tamil nick to English nicname, Sword fish. I coninued with nerunji mull in dondu blog where you wrote, only to tell the members that it is the same person.

Coming to your point regarding caste,

a person, who wants to abolish castes, should first abolish it from his own life and mind. They dont do so. They keep their caste symbols on their bodies proudly and want others to give up the castes. Even if you cant, as you cant respect the sentiments of your near and dear, then, you should at least remove it from your mind, keeping only the outward show for the near and dear.

I do, however, see a lot of persons, who say they are against castes, keep the symbols and also, rush in to defend the brahmins who argue it is right to follow all caste customs to perpetuate castes on the plea that it is their inalienable right which cant be questioned by others. Thus, you see a casteist like Dondu has a lot of supporters among whom you find the hypocrits who says no castes, but accept castes and casteists.

This is cant, which, wherever opportunity occurs, I strike at.

When it is high time said...

//Even if you cant, as you cant respect the sentiments of your near and dear, then, you should at least remove it from your mind, keeping only the outward show for the near and dear.//

In the above, replace the word, 'respect' with the word, 'disregard'

Sorry for the inconvenience.

Selvaraj said...

அரசு விண்ணப்பபடிவங்களில் ஜாதியை பற்றி அரசு கேட்க வில்லையெனில் அது தானாக மறைந்துவிடும். அப்படி அரசு செய்தால், பாப்பான் என கத்துகிறவர்கள்தான், முதலில் தெருவில் இறங்கி ஜாதி வேண்டுமென போராட்டம் நடத்துவார்கள்!

When it is high time said...

Selvaraj!

பாப்பான் என கத்துகிறவர்கள்தான்

Confusing.

Who are they? The brahmins or others?

As I see it, the tamil brahmins will never accept the status of being less than brahmins. As bleeching powder has remarked correctly, they consider the said status as a honour and pride.

That is why, even when they are pushed to a corner after being deprived of all social advantage, they wont give up the status.

Instead, as Bleaching Powder has correctly pointed out, they transform such a social disadvantage into a fist of fury to get on in life. They succeed.

This has made them say, however much we are crushed, it is impossible to stifle us. We are like phoneix birds that can never be put an end to. The more you crush us, the stronger we will emerge.

Others have given up their lables given by the Hindu religion. Tamil brahmins have not. Will not. Others will change. But Tamil brahmins can never be made to feel that the status of being a brahmin is just an imaginatary existence and a lie. In other words, they prefer to live with lie like a woman has to live with a husband whom she cant love ever.

Let the reservations go; and all of us come to open field. You will see how my words will come true.

Baski said...

//Selvaraj!

பாப்பான் என கத்துகிறவர்கள்தான்

Confusing. //

நம்ம பெயர் சொல்லி நாமே கத்துவோமா? மாட்டோம்.

அப்போ நாம செல்வராஜ் சொல்லறது "ஜாதி பேர் சொல்லி பிழைப்பு நடத்துவோர்" பற்றியது.

என் கல்லூரி நண்பன் இஸ்மாயில் பற்றி சொல்லவேண்டும். பணக்காரன் கிடையாது அதே சமயம் பண கஷ்டமும் கிடையாது. ஒரு நடுத்தர வர்க்கம்.

இப்படியோ அவனுக்கு எல்லோருடன் ஊக்க தொகை (scholarship) வந்தது. பல இடங்களுக்கு சென்று வேண்டியவர்களை பார்த்து "எனக்கு ஊக்க தொகை வேண்டாம்" என கடிதம் கொடுத்து அதை மறுத்தவன். ஆனால் அவனை விட நல்ல கொளுத்த பணக்காரர்கள் இந்த ஊக்க தொகை வெட்கம் இல்லாமல் வாங்கி கொள்வார்கள்.

"தட்டு பார்த்து தான் தானம் இடனும்" என்று சொல்லிருகாங்க.
இப்போ ஜாதி பார்த்து தான் என மாத்திக்கணும் போல !!

அப்புறம் யாரோ சாப்ட்வேர் கம்பனிகளில் அய்யர்களுக்கு மட்டும் வேலை கொடுக்காத சொன்னார். அடிப்படை இல்லாத நல்ல ஜோக் என தான் நான் சொல்வேன். I have worked in 3 or 4 companies in Chennai and Bangalore. There is no such discrimination.

"உண்மை மட்டும் சொல்லுங்கள்" என மட்டும் வேண்டுகோள் வைத்து கொள்கிறேன்.

When it is high time said...

//அப்புறம் யாரோ சாப்ட்வேர் கம்பனிகளில் அய்யர்களுக்கு மட்டும் வேலை கொடுக்காத சொன்னார். அடிப்படை இல்லாத நல்ல ஜோக் என தான் நான் சொல்வேன். I have worked in 3 or 4 companies in Chennai and Bangalore. There is no such discrimination.

"உண்மை மட்டும் சொல்லுங்கள்" என மட்டும் வேண்டுகோள் வைத்து கொள்கிறேன்.//

Ok. I agree with your first part explaining the 'kaththukiravarkal'. However, I would have preferred Selvarja to have clarified.

You refer to the experences of others vis- a - vis your own.

People have their experences differently, and express them here or elsewhere.

Whom to believe?

especially, when the two parties - one you and other the Athavan here, for example - are from opposite camps? I mean - one brahmin and the other, non-brahmin.

You have said: I request all to tell truth.

They will say it to you: I request all to tell truth.

I appreciate Athavan ending with a disclaimer: தயவு செய்து யாரும் திட்டாதீர்கள்( பயம்மா இருக்குப்பா)

Honest, though sarcastic disclaimer. He expected you, didnt he? Why does he say that? He is afraid of your reacting negative comments denying his experiences. So also, many of us: who hvae experiences of discrimination; but wont express them out: because, in the larger interests, lets bury them with us.

Ravidass told his dalits: If the brahmins discriminate you and call you untouchable, you dont hesitate to discriminate them and call them 'Untouchables'.

I wont say to anyone who has such experiences with Tamil brahmins, like Ravidass. Rather, I would advise:

"Keep away from them. Let them live in their own world of brahminism. That is a kind of punishment for them: self-imposed isolation!"

Ashok D said...

sword fish கலக்கறபா.. continue...

திறக்காத கண்களும் திறக்கும்...
புரியாத விஷயங்களும் புரியும்...

cheena (சீனா) said...

அன்பின் வால் - இடுகையினையும் மறுமொழிகளையும் முழுவதுமாகப் படித்தேன்.

ஸ்ரீ - வால் - இவர்களுக்கு இடையேயான சிறு விவகாரத்தினை கும்க்கி விவாதமாக்கி இருக்க வேண்டாம் - அதுவும் வால் சும்மா இருக்கும் போது .

கடைசி வரி தேவையற்றது என்பது எனது கருத்து. கும்க்கி என் மீது வருத்தப்படவேண்டாம்.

பிறகு வாலின் இந்த இடுகை - விவாதங்கள் - எல்லாம் காலாகாலமாக நடந்து வருவது தான். அவ்வப்பொழுது கிளம்பும் - தானாக அடங்கி விடும்.

ஆக்க பூர்வமாக ஒன்றும் நடக்காது.

அவ்வளவுதான்

Selvaraj said...

Sword Fish said...
Selvaraj!

பாப்பான் என கத்துகிறவர்கள்தான்

Confusing.

Who are they? The brahmins or others?


//ஜாதியை வைத்து பிழைப்பு நடத்துகிறவர்களைத்தான் சொன்னேன்//

வால்பையன் said...

நன்றி டக்ளஸ்
நன்றி அருண்குமார்
நன்றி சொள் அலகன்
நன்றி கிருஷ்ணமூர்த்தி
நன்றி ஆ.ஞானசேகரன்
நன்றி அகநாழிகை
நன்றி சுப்பு
நன்றி சந்ரு
நன்றி ஜிம்ஷா
நன்றி யோ
நன்றி அனானி
நன்றி தண்டோரா
நன்றி சுரேஷ்குமார்
நன்றி உண்மைதமிழன்
நன்றி பாலாஜி
நன்றி ஜெட்லி
நன்றி கோவி.கண்ணன்
நன்றி கலையரசன்
நன்றி ஜாக்கிசேகர்
நன்றி அசோக்
நன்றி ப்ளீச்சிங்பவுடர்
நன்றி ஸ்ரீ
நன்றி சப்ராஸ் அபூ பக்கர்
நன்றி அனானி
நன்றி ஸ்வார்டு பிஷ்
நன்றி மந்திரன்
நன்றி அனானி
நன்றி உம்மர்
நன்றி அப்பாவி முரு
நன்றி கார்ல்ஸ்பெர்க்
நன்றி அனானி
நன்றி லவ்டேல்மேடி
நன்றி அறிவிலி
நன்றி கிறுக்கன்
நன்றி குமார்
நன்றி அனானி
நன்றி விதூஷ்
நன்றி பப்பு
நன்றி அ.மு.செய்யது
நன்றி விசா
நன்றி அனானி
நன்றி சக்தி
நன்றி NRISPOT
நன்றி இரவீ
நன்றி கும்க்கி
நன்றி அனானி
நன்றி T.V.Radhakrishnan
நன்றி Jawarlal
நன்றி டம்பி மேவி
நன்றி அம்மு மது
நன்றி குடுகுடுப்பை
நன்றி செல்வராஜ்
நன்றி பாஸ்கி
நன்றி சீனா

Radhakrishnan said...

சாதிகள் இல்லையடி பாப்பா.

சாதி எண்ணங்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும், மொத்தமாக மாற்ற வேண்டுமெனில் இதற்குரிய சாத்தியக்கூறுகள் என்னவென பார்த்து செயலாற்றுவது நல்லது.

நாம ஊர் விட்டு தாண்டிட்டா நமக்கு என்ன சாதி, நாம பார்க்கறவங்க என்ன சாதினு தெரியாது.

மனிதன் said...

//குமார்!
இப்பவே இதை பற்றி உங்களிடம் பேசனும்னு எதிர்பார்க்குறிங்களா?

நான் ஈரோடு தான்! திருப்பூரில் இருந்து அறுபதே கிலோமீட்டர்!
லீவு கிடைத்தால் பஸ் ஏறிவிடுவேன்!

August 11, 2009 10:09 PM//
சொல்லி ஏழு மாதங்கள் ஆயிருச்சே! வாலுக்கு லீவ் கிடைச்சதா,இல்லையா?
பஸ் ஓடுது தானே!
திருப்பூரைத் திருத்தியாச்சா?
சும்மா கொஞ்சம் general knowledge வளர்த்துக்கத் தான் கேட்கிறேன்! ;-)

வால்பையன் said...

நீங்க கொடுத்த நம்பருக்கு போன் பண்ணி எடுக்கல!

நான் திருப்பூருக்கு ஆறு தடவை வந்துட்டேன்!

9994500540

இந்த நம்பருக்கு கூப்பிட முடியுமா

!

Blog Widget by LinkWithin