தீடீர் பதிவர் சந்திப்பு!

இடம்:சென்னை

ஒரு இனிய விடுமுறை தினம்!(வேலைக்கு போறவங்களுக்கு)

கலந்து கொண்டவர்கள்!

ராகவன் நைஜிரியா
நட்புடன் ஜமால்
ரம்யா
லவ்டேல் மேடி
தமிழரசி
ஆதிமூல கிருஷ்ணன்
அப்துல்லா
வால்பையன்

**************************

ரம்யா: வாங்க வாங்க! எல்லாரும் வாங்க,

வால்பையன்:வந்தோம் தகமிதிதோம் தித்தோம்!

அப்துல்லா:நேத்து அடிச்சது இன்னும் தெளியலையா வால்!

ஆதி:என் அடுத்த குறும்படம் கூட மியூசிக்கல் சப்ஜெக்ட் தான்!

ரம்யா:ஆதி போன படம் பார்த்து சுழுக்குன கழுத்து இன்னும் சரியாகலையே! அதுக்குள்ள இன்னொன்னா!

ஆதி:இந்த படம் உலகத்தரத்துல எடுக்குறோம், முழு செலவும் அப்துல்லா அண்ணன் ஏத்துகிறேன்னு சொல்லிட்டார்!

அப்துல்லா:அமெரிக்கா விசா வாங்கி கொடுத்தா ஏத்துக்கிறேன்னு சொன்னேன்! அதை மறந்துட்டிங்களே!

ஆதி:அதெல்லாம் கிடைக்கும் அப்துல்லா! நீங்க நம்பி பைனான்ஸ் பண்ணுங்க! ஹாலிவுட்ல இருந்து உங்களுக்கு தானா விசா வரும்!

மேடி:நீங்க மட்டுமே நடிப்பிங்களா!?

ஆதி:ஆமா ஏன்!

மேடி:வீட்ல குழந்தைங்க இல்லாத நேரத்துல பாக்கனும் அதான்!

வால்:உங்களுக்கு சான்ஸ் வேணும்னா கேட்டு வாங்கிக்கோங்க மேடி

மேடி:சிலிண்டர் மண்டையா! நீ பேசாதா, ஈரோட்ல இருந்து ஒரு டீ கூட வாங்கி தராம கூட்டியாந்துட்ட!

ரம்யா:அடடே நானும் மறந்துட்டேன் பாருங்க! வாங்க சாப்பிடலாம்!

ஜமால்:இடம் சிறுசா இருக்கே! நான் முதல்ல உட்காந்துகிடட்டுமா!?

வால்:சரி வாங்க நாம எல்லாம் எதாவது ஹோட்டலுக்கு போலாம்!

தமிழ்:ஏன்

வால்:ஜமால் உட்கார்ந்தா நமக்கு எங்க மிச்சம் இருக்கப்போவுது!

ரம்யா:நானே நிறையா செஞ்சிருக்கேன்பா!

வால்:நீங்களேவா, அப்ப ஆதி அண்ணனுக்கு முதல்ல கொடுங்க, அவருக்கு தான் சோதனை எலியா இருந்து நிறையா எக்ஸ்பீரியன்ஸ்

ராகவன்:புதுசா கேமரா வாங்கியிருக்கேன், வாங்க எல்லோரும் போட்டோ எடுத்துக்கலாம்!

ஆதி:வாங்க வாங்க எல்லோரும் போட்டோ எடுத்துக்கலாம்!

அப்துல்லா:இவரு என்ன கேமரான்னா முன்னாடி போய் நிக்கிறாரு!

ராகவன்:ஜமால் நீங்க இன்னும் ஒட்டி வாங்க, பிரேமுகுள்ளயே வர மாட்டிகிறிங்க

வால்:அண்ணே ஜமால் அண்ணன போட்டோ எடுக்க 70MM கேமரா தான் வேணும், இந்த சின்ன கேமராவெல்லாம் பத்தாது!


********************

வால்:ரைட்டு எல்லாரும் திருப்தியா சாப்டாச்சு!

தமிழ்:நிலவொளியில் மலர்ந்த மலர்களை போலமைந்தது சந்திப்பு!

மேடி:ரிப்பீட்டே

ஜமால்:ரசித்த வரிகள்

வால்:அம்மா தாயே! ப்ளாக்குல தான் கவிதையா எழுதி கொல்றிங்கன்னா, இங்கேயுமா! அதுக்கு ரிப்பீட்டு வேற,

மேடி:டே வடசட்டி மண்டையா! உனக்கு ரசிக்க தெரியலைனா விட வேண்டியது தானே!

ராகவன்:இப்படிதான் நைஜீரியாவுல ஒருதடவை!

அப்துல்லா:ரைட்டு நண்பர்களே நான் கிளம்புறேன்!

ராகவன்:சரி சரி சொல்லல உட்காருங்க!

ஜமால்:உக்காரு மாப்ளே, நீ எங்க போவேன்னு எனக்கு தெரியாதா!?

ரம்யா:சாப்பாடு எப்படியிருந்ததுன்னு சொல்லவேயில்ல!

மேடி:அருமையா இருந்தது அக்கா! ஏன் கேக்குறிங்க

ரம்யா:இப்ப தான் புதுசா செஞ்சேன், இனிமே தான் நான் சாப்பிடனும் அதான் கேட்டேன்!

தமிழ்:இன்னைக்கு எல்லாருமே எலியா!?

அப்துல்லா:ரசத்துல கூட கத்திரிக்கா கிடந்ததே!

ரம்யா:புக்குல போட்டிருந்தா மாதிரி தான் செஞ்சேன்

அப்துல்லா:கொண்டாங்க புக்கை

ரம்யா:இந்தாங்க

அப்துல்லா:அவ்வ்வ்வ்வ்வ்வ், என்னாங்க இது ஏழாம் பத்துக்கு அப்புறம் பத்தாம் பக்கம் இருக்கு, மிழகு ரசத்தையும், கத்திரிக்கா சாம்பாரையும் கலந்து கட்டி அடிச்சிருக்கிங்க!

தமிழ்:எங்க கொண்டாங்க பார்க்கலாம், .... அய்யய்யோ

அப்துல்லா:என்னங்க ஆச்சு

தமிழ்:நல்லவேளை பத்தாம் பக்கம் இருந்துச்சு, அடுத்த பக்கத்துல பாருங்க, அவசர பசை செய்வது எப்படின்னு குறிப்பு இருக்கு!

அப்துல்லா:நல்லவேளை தப்பிச்சோம்

மேடி:இந்த டிபன்பாக்ஸ் மண்டைய சமையல் பண்ணும் போது போன் பண்ணி குழப்பிருப்பான்,

அப்துல்லா:உங்க ஊர்காரரையே இப்படி திட்டுருங்களே, கல்யாணத்துக்கு வராம போயிரப்போறாரு

மேடி:இந்த அண்டாவாயன் வரலைனா சந்தோஷம் தான், பத்தாள் சோறும், ரெண்டு பாட்டில் ஃபுல்லும் மிச்சம்!

ரம்யா:சரி விடுங்கப்பா, நாமெல்லாம் ஒண்ணா சேர்ந்திருக்குறதை பார்த்தா எனக்கு ஒரு ஐடியா வருது!

ராகவன்:என்னம்மா தங்கச்சி

ரம்யா:கிரிக்கெட் மாதிரி பதிவர்கள் சேர்ந்து ஒரு புட்பால் மேட்ச் ஆடலாமா?

வால்:அம்மணி ஏற்கனவே மேடிகிட்ட வாங்குன அடி இன்னும் ஆறல, அதுகுள்ள புட்பாலா, யாராவது புத்தூர் செலவு ஏத்துகிறா மாதிரி இருந்தா நான் கிரவுண்டுக்கு வர்றேன்!

மேடி:டே தார்டின் மண்டையா, உன் மண்டை தாண்டா எங்களுக்கு புட்பாலே, நீ இல்லாம எப்படிடா விளையாடுறது!

ராகவன்:இந்த தடவையும் நான் தான் அம்பயரா?

தமிழ்:வயசான காலத்துல ஏன் கஷ்டம்னு நினைச்சிருப்பாங்க!

ராகவன்:எனக்கா வயசாயிருச்சு! என்னை கிரிக்கெட் ஆட விட்டிருந்தா 50 கோல் அடிச்சிருப்பேன்!

ஜமால்:கிழிஞ்சது போ! சார் கோல் போடுறது டென்னிஸ்ல!

அப்துல்லா:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், நீங்கெல்லாம் தெரிஞ்சிகிட்டே தான் பேசுரிங்களா?

ஆதி:விளையாட்டை மையமா வச்சு ஒரு குறும்படம் எடுக்கலாம்!

தமிழ்:இவரு அடங்க மாட்டாரு, இவரு தங்கமணிக்கு போன் பண்ணி இவரு நிறைய பேசுறாருன்னு சொல்லுங்க யாராவது

ஆதி:தங்கமணின்னவுடனே ஞாபகம் வருது, வரும்போது மறக்காம இதயம் நல்லெண்ணை வாங்கிட்டு வர சொன்னா!

ராகவன்:சரி எல்லோரும் கிளம்புவோம், அடுத்த சந்திப்பில் பேசுவோம்!**********************

டிஸ்கி:
கும்மியடித்து வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம்
ஸ்மெலி போட்டு போவார்!

97 வாங்கிகட்டி கொண்டது:

அமுதா கிருஷ்ணா said...

சூப்பர் அடுத்த சந்திப்பு சொல்லிட்டு செய்யுங்க..பார்வையாளராய் வரவேண்டும்!!!

sakthi said...

அமுதா கிருஷ்ணா said...

சூப்பர் அடுத்த சந்திப்பு சொல்லிட்டு செய்யுங்க..பார்வையாளராய் வரவேண்டும்!!!

:)))))))))

முரளிகண்ணன் said...

அசத்தல் ரகம் வால்பையன்

தினேஷ் said...

வந்தோம் தகமிதிதோம் தித்தோம்!

Vidhoosh said...

இந்தாங்க இன்னொரு கும்மி
இன்னொரு :)

-வித்யா

ப்ரியமுடன் வசந்த் said...

//வால்:அம்மா தாயே! ப்ளாக்குல தான் கவிதையா எழுதி கொல்றிங்கன்னா, இங்கேயுமா! அதுக்கு ரிப்பீட்டு வேற,//

ரிப்பீட்டே

அம்மா தாயீ...

ப்ரியமுடன் வசந்த் said...

//வால்:ஜமால் உட்கார்ந்தா நமக்கு எங்க மிச்சம் இருக்கப்போவுது!//

அண்ணா அப்டியா அளவா சாப்டுங்க ஜமால் அண்ணா

ilangan said...

உங்கள் சந்திப்பை நேரடி ஒளிபரப்பியிருக்கலாமே

ப்ரியமுடன் வசந்த் said...

கலக்கல் சந்திப்பு தல...

:)
:)

Anonymous said...

:)

அ.மு.செய்யது said...

வாலு செம்ம கிளப்பல்ஸ்....குறிப்பா அந்த சமையல் குறிப்பு தாறுமாறு..........ஒருத்தர விடாம கலந்து கட்டி அடிச்சிருக்கீங்க.....

விஜய் ஆனந்த் said...

:-))))))))))...

கும்மியடித்து வாழ்வார் said...

டேய்..சிம்கார்டு மண்டையா.....எங்க லவ்டேல்மேடியண்ணே வரட்டும்..இரு இரு.

பித்தனின் வாக்கு said...

rasathula kathrikaiya? ayya ramya rasam nalla panni irukkanga, avar veetukarauku alntha anuthabangal.

நமீதா said...

ஆதி அங்கிள் அடுத்த‌ குறும்படத்துல எனக்கு ஒரு குத்துப்பாட்டு சான்ஸ் வேணும் !!

சில்க் ஸ்மிதா said...

அப்ப எனக்கு ??????????????

17 said...

17

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... வாலு சூப்பரோ சூப்பர்...

நடக்கட்டும்

pudugaithendral said...

செம கலக்கல்.

அப்துல்லா பத்தி எழுதும்போது அவர் அடிக்கடி சொல்லும் வார்த்தைகளான

சரி, சரி... அங்கங்க அண்ணா சேத்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.

மண்குதிரை said...

-:) -:) nalla sirichcheen nanbaree

Vidhoosh said...

//(வேலைக்கு போறவங்களுக்கு)///

இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரில??
-வித்யா

இராகவன் நைஜிரியா said...

//வால்:அம்மா தாயே! ப்ளாக்குல தான் கவிதையா எழுதி கொல்றிங்கன்னா, இங்கேயுமா! அதுக்கு ரிப்பீட்டு வேற,//

டபுள் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் said...

வால்ஸ் தூள்ஸ்

அபி அப்பா said...

ஆஹா வாலு! உன் கும்மிக்கு அப்துவும், என் தங்கச்சியும் வருவாங்க!!! இராகவண் அண்ணாவையும் இழுத்து விட்டியலே!!!!!!!!!

ஈரோடு கதிர் said...

//மேடி:இந்த அண்டாவாயன் வரலைனா //

கவுண்டமணிக்கு மேடிதான் வசனகர்த்தாவா

நையாண்டி நைனா said...

அயன், லாடம், நாடோடிகள், மாசிலாமணி, கந்தசாமி எல்லாமே டூப்பே... இந்த பதிவுதான் டாப்பே...

நட்புடன் ஜமால் said...

வந்தோம் தகமிதிதோம் தித்தோம்!]]


சூப்பர் ரிதமிக் ...

கார்த்திகைப் பாண்டியன் said...

LOL..:-)))))))

Ashok D said...

சோக்கா... எயிதிகிறப்பா? ...
நீ நெஜமாலுமே பெரிய வாலுபா..சீய் ஆளுபா

நட்புடன் ஜமால் said...

மேடி எங்கேப்பா ...

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

திடீர் தோசை மாதிரி திடீர் சந்திப்பு...

சந்திப்பு கலக்கலாய் போயிருக்கு...

சொல்லீட்டு நேரடி ஒளிபரப்பில இனிச் செய்யுங்கோ

Mahesh said...

நல்ல வேளை... ஜெனீவா போனதால நான் சந்திப்புலாஇருந்து தப்பிச்சேன்....

வால்... நல்ல அப்சர்வேஷன்!! அருமை !!

Admin said...

திடீர் சந்திப்பு என்றாலும் நல்ல பல விடயங்கள் பேசப்பட்டு இருக்கிறதே.

தமிழ் அமுதன் said...

என்னைய பதிவர் சந்திப்புக்கு அழைக்காததால வெளி நடப்பு செய்கிறேன்!!

கார்ல்ஸ்பெர்க் said...

//சிலிண்டர் மண்டையா//
//வடசட்டி மண்டையா//
//டிபன்பாக்ஸ் மண்டைய//
//தார்டின் மண்டையா//

-உண்மையாவா? என்ன தல, சொல்லவே இல்ல.. இதான் உங்கள எல்லாரும் 'தல' 'தல'ன்னு கூப்பிடுறாங்களா?


//கிழிஞ்சது போ! சார் கோல் போடுறது டென்னிஸ்ல!//

-இதான் Highlight!!!

எம்.எம்.அப்துல்லா said...

சரி, இன்னைக்கு நானும் ஊறுகாயா

:)))

மாதவராஜ் said...

ம்ம்ம்ம்...
சாத்தூருக்கு ஒரு விஜயம் தரலாமே..! இங்க ஒரு பதிவர் கூட்டம்(?) போட்டுருவோம்!

யோ வொய்ஸ் (யோகா) said...

:)

ஆ.ஞானசேகரன் said...

//தமிழ்:நல்லவேளை பத்தாம் பக்கம் இருந்துச்சு, அடுத்த பக்கத்துல பாருங்க, அவசர பசை செய்வது எப்படின்னு குறிப்பு இருக்கு!//

ஹிஹிஹி கலக்கல்

Venkatesh Kumaravel said...

ஃபைனல் பஞ் பட்டைய கெளப்புது!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ரம்யா:அடடே நானும் மறந்துட்டேன் பாருங்க! வாங்க சாப்பிடலாம்!

ஜமால்:இடம் சிறுசா இருக்கே! நான் முதல்ல உட்காந்துகிடட்டுமா!?///


அவ்வ்வ்வ்வ்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ராகவன்:எனக்கா வயசாயிருச்சு! என்னை கிரிக்கெட் ஆட விட்டிருந்தா 50 கோல் அடிச்சிருப்பேன்!

ஜமால்:கிழிஞ்சது போ! சார் கோல் போடுறது டென்னிஸ்ல!

அப்துல்லா:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், நீங்கெல்லாம் தெரிஞ்சிகிட்டே தான் பேசுரிங்களா?///


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

மந்திரன் said...

ரொம்ப நல்லா, நக்கலா , ஒரே சோக்கா இருக்குது .....
என்னை வேண்டுமென்றால் கொஞ்சம் கூப்பிட்டு பாருங்களேன் ...
கூப்பிட்டு தான் பாருங்களேன் ...
(ஆட்டத்துக்கே வரலைன்னு சொல்லிட்டு போக கூடாது ...
பய புள்ளை அழ ஆரம்பிச்சா , நிறுத்த முடியாது ஆமாம் சொல்லி புட்டேன் ...)

Sanjai Gandhi said...

வால்.. சூப்பரப்பு.. நிஜமா ரொம்ப சிரிக்க வச்சிட்டிங்க.. :)


பைதிவே.. இதுக்கு முன்னாடி தெருக்கூத்துல நடிச்சிங்களா? தித்தோம் தத்தோம்னு எண்ட்ரி குடுக்கறிங்க? :)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

உண்மையான சந்திப்புன்னு நெனச்சு படிக்க ஆரம்பித்தேன்.நல்ல தமாஷ்.

Anonymous said...

காணோம்! காணோம் ! நான் போட்ட பின்னூட்டத்தை காணோம்!

பீர் | Peer said...

//ஸ்ரீ said...
உண்மையான சந்திப்புன்னு நெனச்சு படிக்க ஆரம்பித்தேன்.நல்ல தமாஷ்.//

அப்ப இது உண்மை இல்லையா? :(

சூப்பர் வால்...

ரமேஷ் வைத்யா said...

//ஏழாம் பக்கத்துக்கு அப்புறம் பத்தாம் பக்கம்//


அது மாயப்புத்தகமா? :‍)


மேட்டர் சூப்பர் வாலு

Cable சங்கர் said...

arumai.

அத்திரி said...

கலக்கல் வாலு

RAMYA said...

ஹா ஹா வாழு சூப்பர் போங்க
நீங்க தான் அருமையான நண்பர்
என்னோட சமையலை பத்தி
ரொம்ப கலக்கலா எழுதி இருக்கீங்க
அதுவும் அந்த ரசத்துலே கத்தரிக்காய்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

புத்தகம் இல்லாமலே சமைப்பேனாக்கும் :))

வாலு கலக்கிட்டீங்க போங்க!!

RAMYA said...

//
PITTHAN said...
rasathula kathrikaiya? ayya ramya rasam nalla panni irukkanga, avar veetukarauku alntha anuthabangal.
//

வீட்டுக்காரரா? எங்கே இருக்காரு :-)

நல்ல வேளை தப்பிச்சாருன்னு சொல்றீங்க :-)

sriram said...

//வால்:அண்ணே ஜமால் அண்ணன போட்டோ எடுக்க 70MM கேமரா தான் வேணும், இந்த சின்ன கேமராவெல்லாம் பத்தாது!
வால்:நீங்களேவா, அப்ப ஆதி அண்ணனுக்கு முதல்ல கொடுங்க, அவருக்கு தான் சோதனை எலியா இருந்து நிறையா எக்ஸ்பீரியன்ஸ்
ராகவன்:எனக்கா வயசாயிருச்சு! என்னை கிரிக்கெட் ஆட விட்டிருந்தா 50 கோல் அடிச்சிருப்பேன்///

எவ்வளவு நாளா இந்த கொல வெறி. ஒரே பதிவுல அத்தனைப் பேரையும் character assassination பண்ணிட்ட..
நானெல்லாம் நிஜமாவே காமடி பீஸுன்னு ஆட்டத்துக்கு சேத்துக்கலயா
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com

vasu balaji said...

செம கலக்கல்.:))

Unknown said...

படிக்க படிக்க என்னால சிரிப்பை அடக்க முடியலைங்க..

அதுவும் மேடிக்கு வெடிச்சிரிப்பு சிரிச்சேன்..

Menaga Sathia said...

செம கலக்கல் வால்!!

Jawahar said...

நமக்கு ஒரு குறும்படத்துக்கு ம்யூசிக் போடற சான்ஸ் கேளுங்கா வால்ஜி.....

http://kgjawarlal.wordpress.com

அறிவிலி said...

ஹா..ஹா..ஹா....

சங்கர் தியாகராஜன் said...

ஆபிஸ்ல தனியா உட்காந்து சிரிக்கரான்னு லுசு மாதிரி பாக்க ஆரம்பிச்சிட்டங்க‌

T.V.ராதாகிருஷ்ணன் said...

அசத்தல்

தேவன் மாயம் said...

நல்ல காமெடி வால்ஸ்!!!

GEETHA ACHAL said...

கலக்கிட்டிங்க...திரும்பவும் எப்ப மீண்டும் சந்திப்பு....

கலையரசன் said...

//என்னாங்க இது ஏழாம் பத்துக்கு அப்புறம் பத்தாம் பக்கம் இருக்கு,//

இது டயமிங்கு! வால்... நீங்க உண்மையிலேயே பெரிய ஆள்..

Unknown said...

பதிவர்கள் கலந்துரையாடல் மிகவும் அருமையாக இருக்கிறது வால் பையன் அவர்களே...!! இதுபோல் உங்கள் எழுத்துப் பணி தொடர என் வாழ்த்துக்கள்..!!

மங்களூர் சிவா said...

சூப்பர்!

மேவி... said...

இலக்கியவாதி ஆனா இப்படி தான் நாம தலையை வைச்சு புட் பால் ஆடுவாங்க ன்னு தெரியும் ... அதுக்கு தான் நான் இலக்கியம் பக்கமே போகவில்லை

கந்தசாமி பார்த்த நொந்தசாமி said...

வால்ஸ் ..... நீங்க தேங்காய் மண்டையனா ???? இல்லை டிபன் பாக்ஸ் மண்டையனா ?????

Anonymous said...

இந்த பதிவை நான் வன்மையா கண்டிக்கிறேன்.இதில் என் பகுதி எல்லாம் கட் பண்ணிட்டாங்க பாவி அருண் நான் அங்க சொன்ன கவிதை எதுவுமே பதிவிலே போடலையே? ஹைய்யோ நான் புலம்புவது யார் காதுக்கும் கேட்கலையா?

Anonymous said...

பிரியமுடன்...வசந்த் said...
//வால்:அம்மா தாயே! ப்ளாக்குல தான் கவிதையா எழுதி கொல்றிங்கன்னா, இங்கேயுமா! அதுக்கு ரிப்பீட்டு வேற,//

ரிப்பீட்டே

அம்மா தாயீ...

ரீப்பீட்டே வா இரு வசந்த் உன்னை அப்பீட் பண்றேன்..

Anonymous said...

இராகவன் நைஜிரியா said...
//வால்:அம்மா தாயே! ப்ளாக்குல தான் கவிதையா எழுதி கொல்றிங்கன்னா, இங்கேயுமா! அதுக்கு ரிப்பீட்டு வேற,//

டபுள் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

அண்ணா ஹாரம் மேட்டர்ல உங்களை காப்பாத்தினது ரொம்ப தப்பாப்போச்சு....

Anonymous said...

ஷார்ட் அண்டு கீயூட் அருண் நல்ல வேளை இன்னும் கொஞ்சம் அதிகமாவே டேமேஸ் இருக்குமுன்னு எதிர்பார்த்தேன்.... நல்லா சிரிக்கவெச்சீங்க..ஆனால் சந்தித்த மாதிரியே இருந்தது ...

Anonymous said...

நான் சமைக்கிறேன்னு சொன்னேன் கேட்டியா ரம்யா? இப்படி ரசத்தில் கத்திரிக்காயா போட்டு ஒரு வழி பண்ணிட்ட? இந்த அருணைப் பாரு அத ஒரு பதிவா போட்டு ஒரு வழி பண்ணிட்டாரு,,,,,

நிஜமா நல்லவன் said...

ஒரு ஸ்மைலி மட்டும் போட்டுட்டு போகலாம்னு வந்தா அதுக்கும் ஒரு டிஸ்கி போட்டு ஆப்பு வைக்கிறாங்களே:))

நிஜமா நல்லவன் said...

/அப்துல்லா:நேத்து அடிச்சது இன்னும் தெளியலையா வால்!/

அப்துல்லா அண்ணே...என்ன இது சின்னபுள்ளத்தனமா கேள்வி கேக்குறீங்க....வாலை பார்த்தா தெளியுற அளவுக்கு அடிக்கிறவர் மாதிரியா தெரியுது:)))

நிஜமா நல்லவன் said...

/ரம்யா:ஆதி போன படம் பார்த்து சுழுக்குன கழுத்து இன்னும் சரியாகலையே! அதுக்குள்ள இன்னொன்னா!/

ஹையோ...ஹையோ...முள்ளை முள்ளால எடுக்கிற டெக்னிக் உங்களுக்கு தெரியாதா....கவலைப்படாம அடுத்த படத்தை பாருங்க....சரி ஆகிடும்:))

நிஜமா நல்லவன் said...

/அப்துல்லா:அமெரிக்கா விசா வாங்கி கொடுத்தா ஏத்துக்கிறேன்னு சொன்னேன்! அதை மறந்துட்டிங்களே!/

அண்ணனோட விசா இப்படி கும்மில மாட்டிகிடுச்சே:)

நிஜமா நல்லவன் said...

/வால்:அண்ணே ஜமால் அண்ணன போட்டோ எடுக்க 70MM கேமரா தான் வேணும், இந்த சின்ன கேமராவெல்லாம் பத்தாது/


ஹா...ஹா...ஹா...சூப்பரேய்ய்ய்ய்....

Jerry Eshananda said...

நீளமான வால்.

Thamira said...

செம கலக்கல்ஸ் பண்ணியிருக்கீங்க.. நல்லா வந்திருக்குது வால், நம்மையும் ஆட்டையில் சேத்ததுக்கு நன்றி.!

வர கொஞ்சம் லேட்டாயிருச்சு, ஹிஹி..

Thamira said...

அப்புறம் இதுவரை சந்தித்திராத லவ்டேல், தமிழரசியை சந்தித்ததில் மகிழ்ச்சி.!

RAMYA said...

//
தமிழரசி said...
இந்த பதிவை நான் வன்மையா கண்டிக்கிறேன்.இதில் என் பகுதி எல்லாம் கட் பண்ணிட்டாங்க பாவி அருண் நான் அங்க சொன்ன கவிதை எதுவுமே பதிவிலே போடலையே? ஹைய்யோ நான் புலம்புவது யார் காதுக்கும் கேட்கலையா?
//

எனக்கு கேக்குது தமிழ்!

ஆனாலும் ரொம்ப மோசம் இல்லே
ஒரே பொறாமை அதான் கட் பண்ணிட்டாங்க போல:-)

இதுலே அரசியல் கிரசயல் ஏதாவது:-)

RAMYA said...

//
தமிழரசி said...
பிரியமுடன்...வசந்த் said...
//வால்:அம்மா தாயே! ப்ளாக்குல தான் கவிதையா எழுதி கொல்றிங்கன்னா, இங்கேயுமா! அதுக்கு ரிப்பீட்டு வேற,//

ரிப்பீட்டே

அம்மா தாயீ...

ரீப்பீட்டே வா இரு வசந்த் உன்னை அப்பீட் பண்றேன்..
//

தமிழ் நல்லா யோசிச்சு முடிவெடுக்கணும் ஆமா சொல்லிப்பிட்டேன் :-)

RAMYA said...

//
தமிழரசி said...
நான் சமைக்கிறேன்னு சொன்னேன் கேட்டியா ரம்யா? இப்படி ரசத்தில் கத்திரிக்காயா போட்டு ஒரு வழி பண்ணிட்ட? இந்த அருணைப் பாரு அத ஒரு பதிவா போட்டு ஒரு வழி பண்ணிட்டாரு,,,,,
//

ஹையோ ஹையோ தமிழ் ஒரு சூப்பர்
சமையல் பார்ட்டியே போட்டு கலாய்ச்சு இருக்காரு!

இந்த வாலுவை என்ன பண்ணலாம்னு யோசிச்சிகிட்டு இருக்கேன்!

பேசாம வாலுவை கடத்திடலாமா?

அதுக்கு உதவக் கூடாதா தமிழ் :-)

அப்துல்மாலிக் said...

தல உமது "வால்" தனம் அப்பட்டமா தெரியுது

முழுதும் ரசித்தேன்

Jaleela Kamal said...

ரொம்ப சிரிப்பு, நல்ல நகைசுவை,
கலக்கலான பதிவு.

சப்ராஸ் அபூ பக்கர் said...

அடுத்த சந்திப்புக்கு எனக்கும் அழைப்பு கொடுங்க வால்....

சூப்பர் பதிவு....

நிஜாம் கான் said...

//ஒரு இனிய விடுமுறை தினம்!(வேலைக்கு போறவங்களுக்கு)//

ஆரம்பமே குபீர்.

கிருஷ்ண மூர்த்தி S said...

/Anonymous கந்தசாமி பார்த்த நொந்தசாமி said...

வால்ஸ் ..... நீங்க தேங்காய் மண்டையனா ???? இல்லை டிபன் பாக்ஸ் மண்டையனா ?????/

இதை வன்மையாக் கண்டிக்கறேன்.

வால்சுக்கு வால் தான் பிரதானம்!
தேவையே இல்லாம மண்டையை பத்தியெல்லாம் ஆராயக்கூடாதுன்னு வால்பையன் ரசிகர் மன்றத்தின் சார்பா ஒரு எச்சரிக்கை விட்டுக்கறேன்!

Unknown said...

// கிருஷ்ணமூர்த்தி said...

இதை வன்மையாக் கண்டிக்கறேன். //


அதைய ஏனுங் நீங்க கடிக்கோணும்.....!!
// தேவையே இல்லாம மண்டையை பத்தியெல்லாம் ஆராயக்கூடாதுன்னு வால்பையன் ரசிகர் மன்றத்தின் சார்பா ஒரு எச்சரிக்கை விட்டுக்கறேன்! //ரொம்ப உடாதீங்க ... !! அப்பறம் கஷ்ட்டமாயிரும்....!!

Prapa said...

நாங்கெல்லாம் உங்களுக்கு முன்னுக்கு இருந்து பேசுனதெல்லாம் காதில vilalaiyo ?

குசும்பன் said...

//அப்துல்லா:ரசத்துல கூட கத்திரிக்கா கிடந்ததே!//

ஹி ஹி சூப்பர்

கிரி said...

ஹி ஹி ஹி ஹி சூப்பரு

அது சரி(18185106603874041862) said...

உங்களுக்கு பார்ட்டி குடுக்குறதுன்னா ஒரு பாரையே வாங்கினா தான் முடியும் போலருக்கே :0))

நாஞ்சில் நாதம் said...

கலக்கிட்டிங்க

ARIVUMANI, LISBON said...

;-))

வால்பையன் said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள்!

தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்!
விரலு விண்ணு விண்ணுன்னு தெரிக்குது!

உங்க ப்ளாக்குல வந்து பின்னூட்டம் போட்டு விடுகிறேன்!

!

Blog Widget by LinkWithin