FROM HELL!!!! சினிமா பார்வை!

நான் திரையரங்கம் சென்று படம் பார்ப்பதில்லைன்னு நண்பர்களுக்கு தெரியும்!
உலக சினிமாக்கள் டீ.வீ.டீ வாயிலாக, ஆனால் உலக சினிமாக்களை முழுமையாக புரிந்து பதிவிட அதை மூன்று முறையாவது பார்க்க வேண்டும். அதனால் அந்த பக்கம் ஒதுங்குவதில்லை!, மற்றபடி இரவு ஒரு மணிக்கு மேலே ஸ்டார் மூவீஸில் போடும் திரைப்படங்கள் விளம்பரமேயில்லாமல் வரும், அதனால் அதை விரும்பி பார்ப்பேன்! அதில் பார்த்த படம் தான் இது!

மேலும் அதிகார மையத்தை சாடுவது போல் வரும் படங்கள் நல்ல ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அறிகுறி என்பது என் அவதானிப்பு! அவ்வகையில் அமெரிக்க ஆவணப்படமான 9/11 குறிப்பிடதக்கது! இரட்டை கோபுர தாக்குதலின் போது அதிபர் புஷ் ஒரு நர்சரியில் குழந்தைகளுடன் ரைம்ஸ் பாடி கொண்டிருந்தார் என அந்த ஆவணப்படம் நேரத்துடன் விளக்கியது!. அதே போல் இந்தப்படம் இங்கிலாந்து அரசவையின் அதிகாரத்தையும் அதனுடய அடிவருடிகள் செய்யும் அட்டூழியங்களையும் விவரித்திருக்கிறது!

இந்த படத்தை நான் விரும்பி பார்க்க மற்றொரு காரணம் நடிகர் ”ஜானி தெப்”.
”பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்” படம் மூலம் உலகெங்கும் அறியப்பட்ட இவரை முதன் முதலாக நான் அறிந்தது, ”எட்வர்டு சிசர் ஹேண்ட்ஸ்” படம் மூலமாக, 1990-ல் வெளிவந்த இந்த படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது!முன்னோட்டங்கள் போதும் படத்துக்கு செல்வோம்!
**************************************

ஆயிரத்தி எட்நூத்தி சொச்சத்தில் நடப்பது போன்ற கதை!
நகரத்தில் நடந்த ஒரு பெண்ணின் கொலையை விசாரிக்கும் பணி இன்ஸ்பெக்டருக்கு(ஜானி தெப்) வழங்கப்படுகிறது. விசாரனையில் இறங்கும் போதே மற்றொரு கொலை, அதே போல் பெண் இருவருக்கும் உள்ள ஒற்றுமை ஒருவருமே தெருவோரத்தில் விபச்சார தொழில் செய்பவர்கள், இரண்டு பேருமே கழத்தறுபட்டு, வயிற்றை கிழித்து உடல் பாகம் எதோ ஒன்று எடுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள்!

விசாரனையில் அவர்கள் 6 பேர் குழுக்கலாக இருந்தார்கள் என தெரியவருகிறது. மீதி இருந்த நான்கு பேரும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்கள். ஒரு பெணிடம்(மேரி) பேசி விசாரணைக்கு ஒத்துழைக்க வைக்கிறார் ஜானி. விசாரணையின் போது அவர்கள் ஏழு பேர் சேர்ந்த குழு என்றும் ஒருவள் மனநல மருத்துவமனையில் இருப்பதாகவும் தெரிகிறது. அவள் ஒரு ஓவியனுக்கு மாடலாக சென்ற பொழுது அவனுக்கு பிடித்து போய் மணம் செய்து கொண்டதாகவும் அவளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது எனவும் சொல்கிறாள். அவளது நிலைக்கு காரணம் மர்மமாகவே இருக்கிறது.மீதி இருந்த நான்கு பேரில் இரண்டு பேர் வரிசையாக கொல்லப்படுகிறார்கள் அதே போல். இந்த கொலையை செய்தது கண்டிப்பாக ஒரு அறுவை சிகிச்சை தெரிந்த ஒரு மருத்துவராக தான் இருக்கும் என சந்தேகப்படும் இன்ஸ்பெக்டர் மருத்துவ அகடாமிக்கு சென்று விசாரிக்கிறார்.
அனைவரும் ஒத்துழைக்காத பொழுது ஒரு வயதானவர் அழைத்து செல்கிறார். தான் ஒரு ஒரு அரசாங்க மருத்துவராக இருந்ததாகவும் தற்பொழுது ராஜகுடும்பத்துக்கு மருத்துவ ஆலோசகராக இருப்பதாகவும் சொல்கிறார்!. ஜானியின் சந்தேகங்களுக்கு பதிலளித்த அவர், இந்த கொலைகளை ஒரு மருத்துவர் தான் செய்திருக்க முடியும் என சொல்கிறார்!

ஜானி மேரியை ஒரு ஓவிய கண்காட்சிக்கு அழைத்து செல்கிறார், அங்கிருந்த ஒரு படத்தை பார்த்து ஆச்சர்யத்துடன் நிற்கிறாள் மேரி. படத்தின் கீழே இளவரசர் என பெயரிடப்பட்டுள்ளது, அவர் தான் தனது தோழியை மணம் முடித்தவர் எனவும், அவள் மனநல மருத்துவமனைக்கு வரும் வரை இவருடன் தான் குடும்பம் நடத்தியதாகவும் சொல்கிறாள்! ராஜகுடும்ப மருத்துவ ஆலோசகரிடம் விசாரிக்கையில் அந்த இளவரசரும் தற்பொழுது மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிகிறார்!

ஆக இந்த கொலைகளுக்கெல்லாம் மூலக்காரணம் அந்த திருமணம் தான் என அறிகிறார் ஜானி!
இளவரசருக்கு திருமணம் ஆனது அந்த ஆறு பேருக்கு தான் தெரியும், அவர்களை கொன்று விட்டால் இளவரசரின் அந்த வாரிசு செல்லாது! என அரசகுடும்பமே திட்டம் போட்டு இந்த கொலைகளை செய்கிறது! அவர்களுக்காக இந்த கொலைகளை செய்வது கண்டிப்பாக ஒரு மருத்துவர்! எஞ்சி இருப்பது மேரியும் அவளது தோழியும், தோழியும் கொல்லப்பட மேரியை காப்பாற்றி ராஜகுடும்ப மருத்தவ ஆலோசகர் தான் குற்றவாளி என நிறுப்பிக்கிறார் ஜானி!

விறுவிறுப்பாக செல்லும் இந்த கதையில் பல திருப்புமுனைகள் திரைக்கதையில் சொருகப்பட்டிருக்கும், இடையில் ஒரு போலிஸ் அதிகாரி கொலைகளுக்கு காரணம் ஒரு யூதர் என புரளியை கிளப்பிவிட பிரச்சனை பெரிதாகும், ஜானி மற்ற அதிகாரிகளால் தாக்கப்படுவார்.
இவைகலெல்லாம் நமக்கு பலபேர் மேல் சந்தேகத்தை உருவாக்கும்! இறுதி அரைமணி நேரப்படம் நகர்வதே தெரியாது!

58 வாங்கிகட்டி கொண்டது:

Anonymous said...

அறிவுஜீவி மாதிரி ஆக்ட் கொடுத்தாலும் நீங்கள் ஒரு மொக்கை மன்னன் வால். சுயத்தை இழக்கவேண்டாம். உங்கள் நலம் நாடும் ஒருவனின் அறிவுரை இது. தவறாக எடுத்துகொள்ளாதீர்.

கார்த்திகைப் பாண்டியன் said...

இந்தப் படம் "Jack the ripper" அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது நண்பா.. ஜானிக்காக நான் பார்த்த படம்..

வால்பையன் said...

மொக்கையாய் வாழ்வதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்மம்மா!

நன்றி அனானி!

வால்பையன் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...

இந்தப் படம் "Jack the ripper" அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது நண்பா.. //

ஆம், ”ஜாக் த ரிப்பர்” உண்மையில் வாழ்ந்த ஒரு கொலைகாரன்!
அதை பற்றி இந்த படத்தில் பேசுவார்கள்!
அதே போல் உள்ளதென்று!

ers said...

இந்தளவுக்கு என்னிடம் விஷய ஞானம் இல்லாததால் ஆங்கிலப்படம் குறித்து விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை. சிறப்பாக விமர்சித்திருக்கிறீர்கள்...

ஆமா... சொல்லவே இல்லை...

உங்களுக்கு ஆங்கிலம் நல்லாவே புரியமா?

சென்ஷி said...

/Anonymous said...

அறிவுஜீவி மாதிரி ஆக்ட் கொடுத்தாலும் நீங்கள் ஒரு மொக்கை மன்னன் வால். சுயத்தை இழக்கவேண்டாம். உங்கள் நலம் நாடும் ஒருவனின் அறிவுரை இது. தவறாக எடுத்துகொள்ளாதீர்.//

அதென்னடா ஆன்னா ஊன்னா வந்து அனானியா நீ மொக்கைன்னு கருத்து சொல்லிட்டு போறிங்க. மொக்க என்ன அவ்ளோ கேவலமா போயிடுச்சா உங்களுக்கு?!

வினோத் கெளதம் said...

Johnny Depp..

Gud actor..

sriraj_sabre said...

உலக சினிமாக்களை முழுமையாக புரிந்து பதிவிட அதை மூன்று முறையாவது பார்க்க வேண்டும். அதனால் அந்த பக்கம் ஒதுங்குவதில்லை!

repeatu!!

வால்பையன் said...

//நெல்லைத்தமிழ் said...
இந்தளவுக்கு என்னிடம் விஷய ஞானம் இல்லாததால் ஆங்கிலப்படம் குறித்து விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை. சிறப்பாக விமர்சித்திருக்கிறீர்கள்...
ஆமா... சொல்லவே இல்லை...
உங்களுக்கு ஆங்கிலம் நல்லாவே புரியமா?//

சினிமாவிற்கு மொழி ஒரு தடையில்லை தல!
ஆனா கதையோட்டத்தை புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம்!
நான் அதில் அடிக்கடி சறுக்குவேன்!

வால்பையன் said...

ஆமாங்க சென்ஷி மொக்கை போட நாம எவ்ளோ கஷ்டப்படுறோம்னு தெரியல அவுங்களுக்கு!

வால்பையன் said...

//vinoth gowtham said...
Johnny Depp..
Gud actor..//

”பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்” படித்தில் கதாநாயகன் ”ஒர்லேண்டோ ப்ளூம்” தான்.
ஆனால் ஜானிக்கு தான் பெயர் அந்த படத்தில்.

வால்பையன் said...

நன்றி தமிழ் விரும்பி!

ஏகப்பட்ட நுண்ணரசியல் இருப்பதால் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினம் தான்!

ராஜ நடராஜன் said...

தலைப்பை பார்த்துட்டு பக்கத்துக் கடைக்குப் போகும் போது உங்க கடை காலியாத்தான் இருந்தது.அதுக்குள்ள முண்டியடிச்சு பூந்துகிட்டாங்க.

ராஜ நடராஜன் said...

//மற்றபடி இரவு ஒரு மணிக்கு மேலே ஸ்டார் மூவீஸில் போடும் திரைப்படங்கள் விளம்பரமேயில்லாமல் வரும், அதனால் அதை விரும்பி பார்ப்பேன்! அதில் பார்த்த படம் தான் இது!//

இரவு ஒரு மணிக்கு மேல படம் பார்த்துட்டு அப்புறம் எப்ப தூங்கி எப்ப ஆபிஸ் போறீங்க?

(உங்களைப் பற்றி சுரேஷ் பதிவில் ஏதோ சொன்னதா ஞாபகம்:)

வால்பையன் said...

//ராஜ நடராஜன் said...

தலைப்பை பார்த்துட்டு பக்கத்துக் கடைக்குப் போகும் போது உங்க கடை காலியாத்தான் இருந்தது.அதுக்குள்ள முண்டியடிச்சு பூந்துகிட்டாங்க.//

நம் மக்களை தவறாக எடைப்போட்டால் இப்படி தான்! பாருங்களேன் பாராட்டுவதை விட திட்ட வந்தவர் தான் முதல் ஆளாக இருக்கிறார்!

ராஜ நடராஜன் said...

//மேலும் அதிகார மையத்தை சாடுவது போல் வரும் படங்கள் நல்ல ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அறிகுறி என்பது என் அவதானிப்பு! அவ்வகையில் அமெரிக்க ஆவணப்படமான 9/11 குறிப்பிடதக்கது!//

தேடு தேடுன்னு தேடுனதுதான் மிச்சம்.பெங்காலி கடைக்காரன் ஹரர்தான் அதிகமா ஓடுதுங்கிறான்.

வால்பையன் said...

//இரவு ஒரு மணிக்கு மேல படம் பார்த்துட்டு அப்புறம் எப்ப தூங்கி எப்ப ஆபிஸ் போறீங்க?
(உங்களைப் பற்றி சுரேஷ் பதிவில் ஏதோ சொன்னதா ஞாபகம்:) //

எனக்கு இன்சோமேனியா இருக்குது தல!
அதனால 4 மணிக்கு தான் தூங்குவேன்!
8 மணிக்கு எந்திரிப்பேன்!

Raju said...

அண்ணே..ஒலகப் படமா..?
நடத்துங்க..! நடத்துங்க..!
நமக்கு இதெல்லாம் அலைஜி தலைவா..!?!

வால்பையன் said...

9/11 ஒரு ஆவணப்படம்!
நெட்டில் தான் கிடைக்கும்!

டோரண்ட் இருந்தால் எளிதாக டவுன்லோடு செய்து கொள்ளலாம் தல!

ராஜ நடராஜன் said...

கோடு போட்டதுக்கப்புறம் கதை ரோட்டைத் தாண்டி பின்னூட்டத்துக்கு வந்து விட்டேன்.வருகிறேன்.

Anonymous said...

//நம் மக்களை தவறாக எடைப்போட்டால் இப்படி தான்! பாருங்களேன் பாராட்டுவதை விட திட்ட வந்தவர் தான் முதல் ஆளாக இருக்கிறார்!//

நான் உங்களை திட்டவில்லை வாலு. சுட்டிகாட்டினேன். திட்டினேன் என்று நினைத்தால் தயவுசெய்து அந்த கமெண்டை அழித்துவிடுங்கள்.

வால்பையன் said...

//
நான் உங்களை திட்டவில்லை வாலு. சுட்டிகாட்டினேன். திட்டினேன் என்று நினைத்தால் தயவுசெய்து அந்த கமெண்டை அழித்துவிடுங்கள். //

ஒகே தல சுட்டி காட்ட வந்தவர் தான் முதலில் வருகிறார் என திருத்தி வாசித்து கொள்ளலாம்!

எனக்கு ஒன்றும் வருத்தமில்லை தல!
எல்லா பதிவுகளையும் சுவாரஸ்யமாக எழுதும் கலை எனக்கு கைகூடி வரவில்லை என்பதை பகிரங்கமாக ஒப்புகொள்கிறேன்!

அதனாலேயே நான் பதிவெழுத அதிக சிரத்தை எடுத்து கொள்வதில்லை!

SUBBU said...

இது நம்ம ஏரியா இல்ல

நாஞ்சில் பிரதாப் said...

இந்தப்படத்தை இதுக்கு முன்னாடி ஸ்டார் மூவிஸ் போட்டபோது மொக்கைப்படமாக இருக்கும் என்று பார்க்கவில்லை...

ஆஹா...நல்ல படம்(வடை) போச்சே

மண்குதிரை said...

பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் எழுதும் உங்கள் அங்கத நடை பிடிக்கும். அதனால்தான் வந்தேன்.

பிரமதமாக அலசியிருக்கிறேர்கள். ஜானி டெப்த் பற்றி எதுவும் அறியேன். ”பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்” படம் பார்த்திருக்கிறேன்.

நன்றி நண்பா.

குசும்பன் said...

//”ஜானி தெப்”.
”பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்” படம் மூலம் உலகெங்கும் அறியப்பட்ட இவரை முதன் முதலாக நான் அறிந்தது, ”எட்வர்டு சிசர் ஹேண்ட்ஸ்” படம் மூலமாக, 1990-ல் வெளிவந்த இந்த படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டது!//

1990ல் இருந்து ஆபிசர் இங்கிலீஸ் படம் பாக்குறீங்களா? அப்ப எல்லாம் நான் சிலேட்டு குச்சியால A B c d எழுதிக்கிட்டு இருந்தேனுங்கோ!!!

குசும்பன் said...

கார்த்திகைப் பாண்டியன் said...
நண்பா.. ஜானிக்காக நான் பார்த்த படம்..//

வால் ஜானி வாக்கருக்காகவே பார்த்த படங்கள் லிஸ்டை சொல்லுங்கப்பு!!!

அப்புறம் ஐ லைக் அனானி கமெண்ட்!

வால்பையன் said...

//1990ல் இருந்து ஆபிசர் இங்கிலீஸ் படம் பாக்குறீங்களா? அப்ப எல்லாம் நான் சிலேட்டு குச்சியால A B c d எழுதிக்கிட்டு இருந்தேனுங்கோ!!//

1990 -ல் ரிலீசான படத்தை 2038-ல் பார்க்க முடியாதா?

1990-ல எனக்கு 2 வயசு தல!இப்போ தான் சமீபத்தில் பார்த்தேன்

வால்பையன் said...

//வால் ஜானி வாக்கருக்காகவே பார்த்த படங்கள் லிஸ்டை சொல்லுங்கப்பு!!!//

அதெல்லாம் இப்போ தான் !
முன்பெல்லாம் மானிட்டருக்கும், ஓல்டு மங்குக்கும் தான் சினிமா காட்டுவாங்க!

தேவன் மாயம் said...

எல்லாத் துறையிலும் புகுந்து கலக்குங்க!!

தேவன் மாயம் said...

மொக்கையும் போடுவோம்!!
சினி விமரிசனமும் போடுவோம்!! எல்லாத்தையும் ஒரு கை பார்க்கவேண்டியதுதான்!!

Prabhu said...

படம் விமர்சனம்னு சொல்றத விட படக் கதைனு சொல்லலாமா?

Romeoboy said...

நல்ல விமர்சனம், கிளைமாக்ஸ் மட்டும் சொல்லாம இருந்து இருந்த பதிவு இன்னும் சூட இருந்து இருக்கும்.

சின்னப் பையன் said...

தேடிப் பாக்கறேன்...

Cinema Virumbi said...

அன்புள்ள வால்பையன்,

என்னுடைய Wordpress வலைத்தளமான http://cinemavirumbi.tamilblogs.com ஏதோ சில தொழில்நுட்பக் கோளாறுகளால் சில நாட்களாக சரிவர இயங்கவில்லை. அது சரியாகும் வரை நீங்களும் மற்ற நண்பர்களும் என்னுடைய மற்றொரு வலைத்தளமான http://cinemavirumbi.blogspot.com க்கு அவ்வப்போது வருகை தரவும்.

நன்றி!

சினிமா விரும்பி

தினேஷ் said...

இன்றே பார்க்க முயற்சி பண்ணுறேன்...

kishore said...

நல்லா இருக்கு வால்ஸ்... கண்டிபாக டவுன்லோட் பண்ணி பார்க்குறேன்...

தருமி said...

//ஒரு மணிக்கு மேலே ஸ்டார் மூவீஸில் போடும் திரைப்படங்கள் விளம்பரமேயில்லாமல் வரும்//

அப்டியா?

”ஜானி தெப்”.அப்டின்றீங்க .. கதையெல்லாம் புட்டு புட்டு வைக்கிறீங்க...தம்பி என்னென்னமோ பேசுது ..!

அ.மு.செய்யது said...

//கொலைகளுக்கு காரணம் ஒரு யூதர் என புரளியை கிளப்பிவிட //

இந்த விசயம் நம்ம டோண்டு சாருக்கு தெரியுமா ??

நான் கூட தான் மிட்நைட்ல ஸ்டார் மூவிஸ் தவறாமல் பார்ப்பதுண்டு.இந்த படத்த எப்படி மிஸ் பன்னேன் ?

அ.மு.செய்யது said...

அனானியின் கருத்துகளைப் பற்றியெல்லாம் கவலைப் படாதீர்கள் வால்...!!!

மொக்கையில் நீங்க ஒரு பெரிய மன்னனெல்லாம் கிடையாது.

அப்பப்ப வாயிற்காப்போன் ரெஞ்சுக்கு தான் மொக்க போடறீங்க...

தாரணி பிரியா said...

எனக்கு இந்த நடிகரை பிடிக்கும். பைரேட்ஸ் ஆப் கரீபியன் மட்டும் பார்த்து இருக்கேன். ஆங்கில படம்னா எனக்கு கொஞ்சம் அலர்ஜியா அதனால நீங்க சொன்ன இந்த படத்தை பார்த்தது இல்லை. பார்த்திடலாம். என்ன பக்கத்தில ஒரு மொழிபெயர்பாளரை வெச்சுகிட்டு பாக்கணும் அவ்வளவுதான் :)

kailash,hyderabad said...

ed.in.scis. ivar nadichchathaa?
90-l paarththathu.ivar nadippu nanraaga irukkum.
neengal mokkaiyellaam illai.nanraaga eluthugireergal.
pala site-galil ungal comments migavum nagaichchuvaiyaaga ullana.
thodarattum.

மாதவராஜ் said...

//9/11 ஒரு ஆவணப்படம்!
நெட்டில் தான் கிடைக்கும்!//
டி.வி.டி கிடைக்கிறதே...

கிரி said...

//இரவு ஒரு மணிக்கு மேலே ஸ்டார் மூவீஸில் போடும் திரைப்படங்கள் விளம்பரமேயில்லாமல் வரும், அதனால் அதை விரும்பி பார்ப்பேன்! //

விளம்பரம் இல்லாமல் ஒரு படம் பார்க்கும் அனுபவமே தனி தான்..

இங்கே சிங்கையில் எந்த ஒரு விளம்பரமும் இடையில் வராது..

ஆனா ஒன்னு பெரும்பாலும் மொக்கை படமா தான் போடுவாங்க..எங்க தான் தேடி பிடிக்கறானுகன்னே தெரியல

ஆர்வா said...

விளம்பரமே இல்லைங்கிறதுக்காகவா
ராத்திரி ஒரு மணிக்கு மேல படம் பாக்குறிங்க?
பொய் சொல்லக் கூடாது

கண்ணா.. said...

புரொபைல் போட்டோ மாத்தியாச்சு போல.....திருவள்ளுவர் பயந்திட்டாரா..?

Anonymous said...

//நாஞ்சில் பிரதாப் said...
இந்தப்படத்தை இதுக்கு முன்னாடி ஸ்டார் மூவிஸ் போட்டபோது மொக்கைப்படமாக இருக்கும் என்று பார்க்கவில்லை...

ஆஹா...நல்ல படம்(வடை) போச்சே//
இது ஒரு மஹா மோசமான விறுவிறுப்பே இள்ளாத சக்கைப் படம். இங்க்ளீஸ் படம் என்பதாள் சும்மா புகழ்ந்து தள்ளிட்டீங்கலா தள !
த்ரிள்ளோ சஸ்பென்ஸோ துளியும் கிடையாது. நன்பர்கள் பார்த்துவிட்டு ஏமாற வேண்டாம்.
சொள் அலகன்.

RAMYA said...

இந்த படம் நான் பார்க்கலை எங்கேயாவது கிடைத்தால் பார்க்கறேன் வால்ஸ்.

நல்லா விமர்சனம் எழுதி இருக்கீங்க. அருமை அருமை!!

RAMYA said...

//
மொக்கையாய் வாழ்வதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்மம்மா!
//


Super Reeeeeeeeepeeeeeettaaaaaai!!

KRICONS said...

உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளது வாழ்த்துகள்

Rafiq Raja said...

உண்மையில் இந்த படம் எடுக்கபட்டது ஒரு காமிக்ஸ் புத்தகத்தை அடிப்படையாக கொண்டு. அந்த காமிக்ஸ் புத்தகத்துக்கு அடிப்படை ஜாக் த ரிப்பர் சம்பவம் தான் என்பது தான் சரி.

சமீபத்தில் தான் நண்பர் ஒருவர் அந்த காமிக்ஸ் புத்தகத்தை பற்றி விரிவான ஒரு விமர்சனத்தை பதிந்தார்... அதை படிக்க இங்கே சுட்டவும்:

http://kanuvukalinkathalan.blogspot.com/2009/02/blog-post_25.htmlஇந்த படத்தையும் பார்த்து விட வேண்டியதுதான். படம் அவ்வளவு சரியாக எடுக்கபட வில்லை என்று தான் தகவல், அதாவது நாவலின் உண்மையான வெளிபாடு இல்லை என.

விமர்சனத்துக்கு நன்றி வால் பையன். (நல்ல பெயர் :))

ÇómícólógÝ

கலையரசன்.. said...

இந்த படத்தை பார்த்து கஜினி_‍யில் ஒரு சீன் காப்பி அடித்திருப்பார்கள்.
http://www.kalakalkalai.blogspot.com

Cable சங்கர் said...

//அதென்னடா ஆன்னா ஊன்னா வந்து அனானியா நீ மொக்கைன்னு கருத்து சொல்லிட்டு போறிங்க. மொக்க என்ன அவ்ளோ கேவலமா போயிடுச்சா உங்களுக்கு?!
//

அதானே..

geevanathy said...

நல்லதொரு விமர்சனம் நன்றி நண்பரே..

வால்பையன் said...

thevanmayam said...

எல்லாத் துறையிலும் புகுந்து கலக்குங்க!!//

எல்லாம் உங்க ஆசி தான்!

வால்பையன் said...

ச்சின்னப் பையன் said...

தேடிப் பாக்கறேன்...//

ஸ்டார்மூவிஸ்லயே அடிக்கடி பொடுறாங்க தல!

வால்பையன் said...

ஒகே சினிமாவிரும்பி

பாருங்க சூரியன்

தருமி சார்! குழந்தையா இருக்கும்போதே ரீகல் தியேட்டருல படம் பார்த்து வளர்ந்தவன் நான்

மொக்கை போடுவது தான் எனக்கு பிடித்தமானதாக இருக்கு செய்யது அண்ணே

படங்கள் சில நிமிடங்களில் நமக்கே புரிய ஆரம்பித்துவிடும் தாரணிபிரியா

நன்றி கைலாஷ்
90-ல் வந்த படம் என்பதால் சின்னபையனாக இருப்பார்! ஆனால் அப்பவே நடிப்பில் கலக்கியிருப்பார்

நன்றி மாதவராஜ்
9/11 பிரபலமான பிறகு டி.வி.டி போட்டு விற்க ஆரம்பித்து விட்டார்கள்!

நன்றி கிரி
இங்கே இரவு நேரங்களில் மடும் விளம்பரம் கிடையாது!

வால்பையன் said...

நன்றி மணிகண்டவேல்!
என்னிடம் மடிக்கணினி இருக்கு இணையம் இருக்கு! ஆனாலும் சில படங்கள் கிடைப்பதில்லை!
"the stranger i married" வெகுவாக சிலாகித்து நான் விமர்சனம் எழுதிய படம் இரவு 3 மணிக்கு ஸ்டார் மூவீஸில் பார்த்தேன்!


ஆமாம் கண்ணா, திருவள்ளுவர் கனவில் வந்து மிரட்டுகிறார்!


சொள் அலகன்
அதுகுள்ள படம் பார்த்துட்டிங்களா?நாலே வரியில எப்படி நறுக்குன்னு விமர்சனம் எழுதுறிங்க

நன்றி ரம்யா!
ஸ்டார் மூவீஸ் சேனலில் பார்க்கலாம்
நைட்டு முழிச்சிருக்கனும் பரவாயில்லையா

நன்றி கிரிகோன்ஸ்

நன்றி காமிக்காலஜி!
நீங்கள் சொல்வது சரி தான்!
ஆனால் ஜாக் த ரிப்பர் ஒரு உண்மை சம்பவம், அதுவும் படமாக வந்திருக்கிறது, இது அதை ஒட்டிய படம்!

நன்றி கலை எந்த சீன்னு தெரியலையே
சொல்லமுடியுமா?

நன்றி கேபிள் சங்கர்

நன்றி ஜீவராஜ்

!

Blog Widget by LinkWithin