குவியல்!..(20.05.09)

முதலில் மகிழ்ச்சியான செய்தியிலிருந்து ஆரம்பிப்போம்!
நமது வலைப்பதிவர்கள் கிரீடத்தில் இன்னோரு வைரமாக அண்ணன் ஆதிமூலகிருஷ்ணனின் சிறுகதை இந்தவார ஆனந்த விகடனில் வந்திருக்கிறது! சின்னபையன் மாதிரி ரேஸ் ஓட்டினாலும் டுவிஸ்ட் கொடுப்பதில் கிரைம் எழுத்தாளர்களுக்கு நிகராக இருக்கிறார்!

அடுத்து யாருங்கோ!

****************************************

அப்படியே எனக்கு பாலோயர்ஸ் 200 தாண்டி போனதுக்கு எனக்கு நானே வாழ்த்திக்கிறேன்!

நமக்கு நாமே திட்டம் தலைவர் கலைஞர் கொண்டு வந்ததாக்கும்!

****************************************

பிரபல பதிவரான தோழி ரம்யாவுக்கு நேற்று பிறந்த நாள்!
முதல் ஆளாக வாழ்த்த வேண்டிய நானே கோட்டைவிட்டேன்! அதனால் மறுநாள் முதல் ஆளாக நான் வாழ்த்தி கொள்கிறேன்!
பல்லாண்டு பல்லாண்டு பலநூறாண்டு பேரும் புகழுடன் வாழ வாழ்த்துக்கள்!

ஜமால் எனக்கும் ஒருவார்த்தை சொல்லியிருக்கலாம்

*******************************************

சமீபத்தில்(ரெண்டு நாளைக்கு முன்னாடி) சில புது பதிவர்களின் ப்ளாக்குகள் காணாமல் போனதாக அறிந்தேன். Ntamil என்ற திரட்டியின் voting code சேர்த்ததால் வந்த வினை என்று சில பதிவர்கள் சொன்னார்கள்! தயவுசெய்து நண்பர்கள் வாரம் ஒரு முறை உங்கள் ப்ளாக்கை சேமித்து வைத்து கொள்ளவும். அதன் முறை

dashboard -> layout -> Edit Html -> Download Full Template

இதை செய்து வைத்து கொண்டால் பின்னூட்டங்களுடன் உங்களது பழைய பதிவுகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும்!

தற்சமயம் ப்ளாக் தொலைத்த நண்பர்கள் எனக்கு பாலோயராக இருப்பீர்களேயானால் நிச்சயமாக நானும் உங்களுக்கு பாலோயராக இருப்பேன்! உங்களது பழைய பதிவுகள் எனது ரீடரில் சேமிக்கப்படுள்ளன! எனக்கு மெயில் அனுப்பினால் அதை உங்களுக்கு அனுப்புகிறேன்! உங்களது புது ப்ளாக்கில் ஒவ்வொன்றாக போட்டு கொள்ளவும்!

***********************************

சென்னையில் வசிக்கும் வலைப்பதிவர் ஒருவருக்கு, கேரள பிரபல மந்திரவாதியை ஸாரி எழுத்தாளரை பற்றி எதாவது சொன்னால் மூக்கு மேல கோபம் வருகிறதாம்! மற்றவர்களை விமர்சிக்கும் காப்பிரைட்ஸ் இவர்கள் இருவருக்கு மட்டும் தான் உள்ளதென்றால் அதை ஒரு முறை அவர்களது தளத்தில் வெளியிட்டால் மற்றவர்கள் அமுக்கி கொண்டு இருப்பார்கள்!
மேலும் விசாரிக்கையில் இம்மாதிரி கோபப்பட காரணம் சென்னையில் அடிக்கும் அக்னிவெயில் தான் என்று தெரிய வந்திருக்கிறது. சென்னை வாழ் நண்பர்கள் யாராவது ஒரு பார் ஐஸ் வாங்கி அவர் சீட்டுக்கு(சீட்டுன்னா பைக் சீட்டு, எத சொன்னாலும் தப்பா அர்த்தம் பண்ணக்கூடாது) அடியில் வைத்தால் கொஞ்சம் சூடு தனிய வாய்ப்புண்டு!

***********************************

வரும் ஞாயிறு 24.05.09 அன்று மதுரையில் ஒரு வலைப்பதிவர்கள் கூட்டம் நடத்தலாம் என்று நண்பர்கள் தெரிவித்திருக்கிறார்கள்! புதிய ப்ளாக்கர்கள் தெரியாதவற்றை தெரிந்து கொள்ளவும், பழைய ப்ளாக்கர்கள் தெரியாதவர்களுக்கு சொல்லி கொடுக்கவும் கண்டிப்பாக வர வேண்டுமென அன்பு கட்டளையிடப்படுகிறது!

தொடர்புக்கு
கார்த்திகைப்பாண்டியன் - 9841432763
தருமி -9952116112
அப்புறம் நானு -9994500540

***********************************

கவிதை எனக்கு சொந்தமா எழுத தெரியாது! அடுத்தவங்க கவிதையும் படிச்சா புரிய மாட்டிங்குது!
அதனால நான் இந்த விளையாட்டுக்கு வரல!

************************************

70 வாங்கிகட்டி கொண்டது:

selventhiran said...

படிச்சிட்டேன் வால்!

selventhiran said...

படிச்சிட்டேன் வால்!

அ.மு.செய்யது said...

ஆதி அவ‌ர்க‌ளின் ஆவி எக்ஸ்பெக்ட‌ட் ஒன்.

உங்க‌ க‌தை எப்ப‌ வ‌ரப் போகுது வால் ??

லுக்கியார் said...

ஐஸ் வாங்கி வர் சீட்டுக்கு(சீட்டுன்னா பைக் சீட்டு, எத சொன்னாலும் தப்பா அர்த்தம் பண்ணக்கூடாது) அடியில் வைத்தால் கொஞ்சம் சூடு தனிய வாய்ப்புண்டு!

சும்மா டைம் பாசுக்கு ஏதாச்சும் சொல்லாத மச்சி.

வால்பையன் said...

செல்வா அண்ணே ரெண்டு வாட்டி படிச்சிங்களா!

ரொம்ப நன்றியண்ணே!

Suresh Kumar said...

தல மதுரைக்கு வர முடியாதே சரி அடுத்த பதிவர் சந்திப்பில் சிந்திப்போம்

Anonymous said...

உங்க பதிவு மற்றும் ஆதியின் பதிவு எனக்கு வரலையே??? என்னாச்சு?

தமிழ்மணம் மூலமா வரவேண்டியாத இருக்கு... என்னனு கவனிங்க.

கே.என்.சிவராமன் said...

அச்சில் வந்த ஆதிக்கும், 200 ஐ தாண்டிய வாலுக்கும், பிறந்தநாள் கொண்டாடிய ரம்யாவுக்கும்

வாழ்த்துகள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

வினோத் கெளதம் said...

தல எல்லாம் போச்சு..

வால்பையன் said...

//அ.மு.செய்யது said...
ஆதி அவ‌ர்க‌ளின் ஆவி எக்ஸ்பெக்ட‌ட் ஒன்.
உங்க‌ க‌தை எப்ப‌ வ‌ரப் போகுது வால் ??//

கதையை தான் போடுவாங்களாம், சும்மா தோணுனதை கிறிக்கி கொடுத்தா போட மாட்டாங்களாம்!

கிரி said...

அருண் டெம்ப்ளேட் சேமிப்பதால் உங்கள் இழந்த பதிவுகளை பெற முடியாது அது உங்கள் பழைய டெம்ப்ளேட் வடிவத்தை பெற மட்டுமே உதவும்.

Export blog option பயன்படுத்தி சேமித்தால் மட்டுமே நீங்கள் கூறியது போல வரும்.

Ntamil க்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை

கணேஷ் said...

//
தற்சமயம் ப்ளாக் தொலைத்த நண்பர்கள் எனக்கு பாலோயராக இருப்பீர்களேயானால் நிச்சயமாக நானும் உங்களுக்கு பாலோயராக இருப்பேன்! உங்களது பழைய பதிவுகள் எனது ரீடரில் சேமிக்கப்படுள்ளன! எனக்கு மெயில் அனுப்பினால் அதை உங்களுக்கு அனுப்புகிறேன்! உங்களது புது ப்ளாக்கில் ஒவ்வொன்றாக போட்டு கொள்ளவும்!
//

கடை சரக்கெல்லாம் காணாம போயிருச்செனு சோகமா இருந்தேன்... என் வயித்துல பீர வார்த்திங்க... இருக்குற மிச்ச சொச்சத்த அனுப்புங்க எசமான்...

Suresh said...

//Ntamil என்ற திரட்டியின் voting code சேர்த்ததால் வந்த வினை என்று சில பதிவர்கள் சொன்னார்கள்//

உண்மை அது வைரஸ் போட்டு தாங்கியது, நான் அந்த வைரஸ் தாக்கியவுடனே அந்த வோட்டிங்க் கோடை ரீமுவ் பண்ணிட்டேன்..

நீங்க சொன்ன மாதிரி ஒரு பேக் அப் ;) இருக்கு, உங்க யோசனை எல்லாருக்கும் உதவும்..

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்...

அப்புறம் அந்த சீட் மேட்டர் ஹீ ஹீ நான் என்ன செய்ய தப்பா தான் நினைத்தேன் ;)

தோழி ரம்யாவுக்கு வாழ்த்துகள்

உங்களுக்கு 200க்கு வாழ்த்துகள் தல..

நையாண்டி நைனா said...

குவியல் அருமை.

இப்படி தொலைந்த பதிவுகளை எப்படி திரும்ப பெறுவது?

இப்படி காணாம போனா பதிவிற்கு அரசாங்கம் ஏதாவது நிவாரணம் தந்தா நல்ல இருக்கும் என்று சும்மா டைம்பாசிற்கு மச்சிகளோட பேசிகிட்டு இருக்கும்போது கேட்டு வைங்க.

ஹூம் என்னோட பதிவெல்லாம் காணாம போக மாட்டேங்குது. (அவ்வளவு மொக்கையாவா இருக்கு, வைரசு கூட தொட முடியாத அளவுக்கு???? ஆவ்வ்வ்வ்வ்......)

கண்ணா.. said...

ஆதி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்,

நீங்கள் 204 பாலோயர் பெற்றதற்கு வாழ்த்துக்கள்..

205 ஆ நானும் இணையுறேன்...

என்னோட ப்ளாக் ல பாலோயர் வரலை ...டெம்ப்ளேட் மாத்தாம ஏதும் வழி இருந்தா சொல்லுங்க....யாரு சொல்லுறாங்களோ அவுகளை வாழ்த்தி ரெண்டு பதிவு போடலாம்னு இருக்கேன்..

Mythees said...

நமக்கு நாமே திட்டம் தலைவர் கலைஞர் கொண்டு வந்ததாக்கும்!

vote ok.......

நையாண்டி நைனா said...

/*அ.மு.செய்யது said...
ஆதி அவ‌ர்க‌ளின் ஆவி எக்ஸ்பெக்ட‌ட் ஒன்.*/

நீங்க ஆவி அமுதாவிற்கு ரிலேடிவா?

/*உங்க‌ க‌தை எப்ப‌ வ‌ரப் போகுது வால் ??*/
அடக் கொலை காரப்பாவி, அவரை கதை எழுத வச்சி, எங்க கதைய முடிக்க பாக்குறியா மாமு???

கணேஷ் said...

//
கவிதை எனக்கு சொந்தமா எழுத தெரியாது! அடுத்தவங்க கவிதையும் படிச்சா புரிய மாட்டிங்குது!
அதனால நான் இந்த விளையாட்டுக்கு வரல!
//

கவிதை எழுத வரல
படிச்சாலும் புரியல - இந்த
விளையாட்டுக்கு நான் வரல

இது தான் கவிதை... வெரி சிம்பிள்...

கணேஷ் said...

//

இப்படி காணாம போனா பதிவிற்கு அரசாங்கம் ஏதாவது நிவாரணம் தந்தா நல்ல இருக்கும்
//

இது நல்ல ஐடியாவா இருக்கே

Anonymous said...

வால் நோங்க சொன்னது டெம்ப்ளேட்ட சேமிக்க. பதிவுகளச் சேமிக்காது.

சுலபமான வழி வேர்டு பிரஸ்ல ஒரு பிளாக் வச்சுகிட்டு அங்கன இம்போர்ட் செஞ்சு வச்சிக்கிடறதுதான்.

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துக்கள்:-

ஆதி - கதை வெளியானதற்கு..
ரம்யா - பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ் - 200 நாட அவுட்..

அடிச்சு ஆடுங்க தல..

இராகவன் நைஜிரியா said...

ஆதி அவர்களுக்கு வாழ்த்துகள்.
200 பின் தொடருபவர்களைப் பெற்றதற்கு வாழ்த்துகள். அதில் நானும் ஒருவன் என்பதில் எனக்குப் பெருமை.
ரம்யா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
NTamil ஓட்டு போட முடியவில்லை, வைரஸ் என்று வருகின்றது, எதாவது ப்ராப்ளமா என்று சில நாட்கள் முன் நண்பர் அணிமா கேட்டார். இப்போது தான் அதற்கான காரணம் புரிந்தது.
மதுரை வலைப்பதிவர் கூட்டத்திற்கு வாழ்த்துகள் - நைஜிரியா வலைபதிவர் சங்கம்.

கணேஷ் said...

நம்மூருல நடந்தும் கலந்து கொள்ள முடிய வில்லை. நல்லபடியாக நடைபெற நல வாழ்த்துக்கள்.

அண்ணன் அழைக்கிறார்... மருத மக்களே அலை கடலென திரண்டு வாரீர்...

நையாண்டி நைனா said...

/*நைஜிரியா வலைபதிவர் சங்கம்.*/

இதுக்கு முன்னே நீங்க தி.மு.க மெம்பரா? (இதில் எந்த நுண்ணரசியலும் இல்லை. இல்லை. இல்லை.)

S.A. நவாஸுதீன் said...

குவியலில் வழக்கம்போல பல்சுவை உண்டு.

தேவன் மாயம் said...

குவியல் நல்ல அவியல்!!

நர்சிம் said...

200க்கு வாழ்த்துக்கள் வால்..

பட்டாம்பூச்சி said...

தோழி ரம்யாவுக்கு வாழ்த்துகள்.

உங்களுக்கு 200க்கு வாழ்த்துகள் :)

SUBBU said...

//அப்படியே எனக்கு பாலோயர்ஸ் 200 தாண்டி போனதுக்கு எனக்கு நானே வாழ்த்திக்கிறேன்!

நமக்கு நாமே திட்டம் தலைவர் கலைஞர் கொண்டு வந்ததாக்கும்!//

:)))))))))))))))

Mahesh said...

ஆதிக்கு வாழ்த்துகள் !!

உங்களுக்கு வாழ்த்துகள் !!!

தோழி ரம்யாவுக்கு வாழ்த்துகள் !!!

கேரள, தமிழக, ஆந்திர மற்ற எல்ல மாநிலத்து மந்திரவாதிகளுக்கும் வாழ்த்துகள் !!!!!

இவ்வளவு வாழ்த்துகள் போட்ட எனக்கும் வாழ்த்துகள் !!!!!!

அப்துல்மாலிக் said...

நன்றி வால்

நானும் என்னுடைய டெம்லேட்டை சேமித்துவிட்டேன், அப்புறம் அழக்கூடாதல்லவா

மற்றபடி குவியல் சூப்பர்

பதிவர் சந்திப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள்

SK said...

நிறைய செய்திகளை தொகுத்து கொடுத்து இருக்கீங்க..

கலகுங்கோவ் ..

butterfly Surya said...

வாலுக்கு வாழ்த்துகள்.. தலைக்கும் தான்.

Venkatesh Kumaravel said...

வால், தல பரிசல், அக்கா ரம்யா.. எல்லோருக்கும் வாழ்த்துகள் !

நட்புடன் ஜமால் said...

தவறு தான் நண்பரே!

நிச்சியம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்றே இருந்துவிட்டேன்

மன்னியுங்கள் ...

வாழவந்தான் said...

//
கவிதை எனக்கு சொந்தமா எழுத தெரியாது! அடுத்தவங்க கவிதையும் படிச்சா புரிய மாட்டிங்குது!
அதனால நான் இந்த விளையாட்டுக்கு வரல!
//
highlight pa

அப்படியே பூதத்தை பாட்டில்ல அடைக்கற மாதிரி நம்ம பிளாக்கையும் ஒரு 'dump' எடுத்து வேச்சாசுங்கோ!!

தகவலுக்கு நன்றி. மதுரை சந்திப்புக்கு வாழ்த்துக்கள்!

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
தவறு தான் நண்பரே!

நிச்சியம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்றே இருந்துவிட்டேன்

மன்னியுங்கள் ...
//

உங்கள தான் தேடிட்ருந்தேன்.

டீச்சருக்கு கால்பண்ணும் போது, ஜமால் தான் சொல்லாமா விட்டுட்டாரு..

அவர புடிங்கன்னு அவங்க தான் கோர்த்து விட்டாங்க..இங்க வால்கிட்டயும் அதே தான் சொல்லியிருக்காங்க போல

நட்புடன் ஜமால் said...

200 பெற்றமைக்கு வாழ்த்துகள்

manoharan said...

மதுரை ல ஏற்கனவே ஆபீஸ் எ எரிச்சாங்க . அப்பறம் ஏன் திரும்பவும் அங்க வைக்ரிங்க . வேற ஊற பார்த்து போங்க

manoharan said...

மதுரை ல ஏற்கனவே ஆபீஸ் எ எரிச்சாங்க . அப்பறம் ஏன் திரும்பவும் அங்க வைக்ரிங்க . வேற ஊற பார்த்து போங்க

Anonymous said...

very worst blog

Anonymous said...

me the 51st

kovilpatti kolappan

vivek said...

தல, உங்கள சென்னை பொறம்போக்கு பதிவர் தன பதிவில் தமக்கு தாமே பின்னூட்ட திட்டத்தின் கீழ் சைக்கோ என்று declare செய்துள்ளாரே. கவனித்தீர்களா.

ஜெட்லி... said...

வலைப்பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" said...

blog காணாமபோயி டரியலாகி போயிருந்தவர்களுக்கு, இந்த குவியல் பயன்பட்டிருக்கும்.
கார்த்திகைப்பாண்டியன் ஒவ்வொரு பதிவர் சந்திப்புக்கும் ஒவ்வொரு மொபைல் நம்பர் வச்சிருப்பாரா??
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.

பத்த வைச்சிட்டயே பரட்டை said...

லக்கிலுக் said...
//வால்கள் னு டைட்டில் பாத்த உடனே ஏதோ எதிர்வினை னு ஓடி வந்து பாத்தா ... //

தோழர். முதல் பார்வையிலேயே சிலரை கண்டதுமே சைக்கோ என்பது தெரிந்துவிடும் :-)

சைக்கோக்களிடம் நமக்கு எதுக்கு கொடுக்கல் - வாங்கல்?

2:52 PM, May 21, 2009


Anonymous said...
//தோழர். முதல் பார்வையிலேயே சிலரை கண்டதுமே சைக்கோ என்பது தெரிந்துவிடும் :-)
//

Correct. He is believed to have many psycho sites like bleaching powder,nalla thanthi etc.

am i right ?

3:00 PM, May 21, 2009


லக்கிலுக் said...
//Correct. He is believed to have many psycho sites like bleaching powder,nalla thanthi etc.

am i right ?//

தோழர்!

நீங்க பாட்டுக்கு அனானியா வந்து எதையாவது கொளுத்திப் போட்டுட்டு போயிடுவீங்க. அப்புறமா கண்ட கருமாந்திரப் பயலுவளும் நம்மளை பாத்து தனிநபர் தாக்குதல், நாகரிகம்னு வாந்தி எடுப்பானுவ. இதெல்லாம் தேவையா எனக்கு?

3:02 PM, May 21, 2009


Anonymous said...
லக்கி கொடி பறக்குதடா !
என்று யாராவது எழுதும் வரை இது போன்ற வாந்திகளை
சாரி வதந்திகளைப் பொறுக்கத்தான் வேண்டும் தோழரே

3:31 PM, May 21, 2009

Anbu said...

பாலோயர்ஸ் 200 தாண்டி போனதுக்கு வாழ்த்துக்கள் தல..

நையாண்டி நைனா said...

/*புதிய ப்ளாக்கர்கள் தெரியாதவற்றை தெரிந்து கொள்ளவும்,*/

எனக்கு நமீதா வீட்டு அட்ரஸ்ஸும் அவங்க எப்ப எப்ப பிரியா இருப்பாங்கன்னும் தெரியனும். இதெல்லாம் அங்கே வந்தா தெரிஞ்சுக்கலாமா???

Maximum India said...

அன்புள்ள வால்பையன்!

முதலில் 200 பாலோயர்ஸ் கொண்ட அருணுக்கு வாழ்த்துக்கள்.

தோழி ரம்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அப்புறம் அண்ணன் ஆதிமூலகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்.

புதிய பதிவர்களுக்கு உங்கள் அறிவுரை அருமை.

ஏற்கனவே ஏகப்பட்ட வெயில். நீங்கள் பாட்டுக்கு ஏதாவது கொளுத்திப் போடாதீர்கள்.

அப்புறம் மதுரை பதிவர் கூட்டத்திற்கு முன் கூட்டியே வாழ்த்துக்கள்.

நன்றி.

நசரேயன் said...

குவியல் ஒரு பல் சுவை விருந்து, சந்திப்புக்கு வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

200க்கு வாழ்த்துக்கள்

மாதவராஜ் said...

மதுரையிலா வலைப்பதிவர்கள் கூட்டம் என்று சந்தோஷமாக பார்த்தால் 24.5.09 தேதி! அன்று எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் மகன் திருமணம் கோவில்பட்டியில். ம்... வர இயலாதே! இருப்பினும் வாத்துக்கள்.

Arun Kumar said...

வாழ்த்துக்கள் வாலு சார்..
200 சீக்கிரமே 1000 ஆக வாழ்த்துக்கள்

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

அண்ணன் ஆதிமூலகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்.
, 200 ஐ தாண்டிய வாலுக்கும், பிறந்தநாள் கொண்டாடிய ரம்யாவுக்கும்

வாழ்த்துகள்.

வசந்த் ஆதிமூலம் said...

கலக்குற தல... வாழ்த்துகள்.

தினேஷ் said...

//கவிதை எனக்கு சொந்தமா எழுத தெரியாது! அடுத்தவங்க கவிதையும் படிச்சா புரிய மாட்டிங்குது!
அதனால நான் இந்த விளையாட்டுக்கு வரல!//

அதான் வாலுஜி ... நானும் உங்க கட்சி

Sanjai Gandhi said...

ஆவி ஆதிக்கு வாழ்துகள்.. :)

200 பேருக்கு பேல் பாலோயர் பெற்றதுக்கு ஸ்பெஷல் வாழ்துகள்.. :)

பதிவுகளை சேமித்து வைக்க நீங்கள் சொல்லி இருக்கும் முறை தவறானது. அதை கொண்டு வடிவமைப்பை மட்டுமே சேமிக்க முடியும். settings - Export blog வசதி மூல பதிவுகளை சேமிக்கலாம்.

அந்த சென்னை பதிவர் யாரென்று சாட்டில் சொல்லவும்.

நன்றி வணக்கம்.. :)

VIKNESHWARAN ADAKKALAM said...

இந்த முறை குவியல் ரொம்ப சிக்கனமா இருக்கே?

Rafiq Raja said...

200 பின்தொடருபவர்களுக்கு வாழ்த்துகள் வால்பையன்.... மேலும் வளர பிரார்த்திக்கிறேன்.

கூடவே, பதிவுகளை சேமிக்க Download Template முறை உதவாது. வேண்டும் என்றால், லைவ் ரைட்டர் போன்ற சாப்ட்வேர் கொண்டு நமது கணிணியிலேயே சேமித்து கொள்ளலாம்... நான் செய்யும் யுத்தி அதுதான்.

வால்பையன் said...

அ.மு.செய்யது said...
ஆதி அவ‌ர்க‌ளின் ஆவி எக்ஸ்பெக்ட‌ட் ஒன்.
உங்க‌ க‌தை எப்ப‌ வ‌ரப் போகுது வால் ??//

இன்னும் எனக்கு அந்த அளவுக்கு தகுதி வந்துட்டதா தோணலையே பாஸ்
**********************

லுக்கியார் said...
ஐஸ் வாங்கி வர் சீட்டுக்கு(சீட்டுன்னா பைக் சீட்டு, எத சொன்னாலும் தப்பா அர்த்தம் பண்ணக்கூடாது) அடியில் வைத்தால் கொஞ்சம் சூடு தனிய வாய்ப்புண்டு!
சும்மா டைம் பாசுக்கு ஏதாச்சும் சொல்லாத மச்சி. //

நீங்க பெரிய ஆளு தான் டைம் பாஸுக்கு தான் சொல்ரேன்னு கண்டுபிடிச்சிடிங்களே!

************************

Suresh Kumar said...
தல மதுரைக்கு வர முடியாதே சரி அடுத்த பதிவர் சந்திப்பில் சிந்திப்போம்//

நிச்சயமாக சந்தித்து சிந்திப்போம்

வால்பையன் said...

மயில் said...
உங்க பதிவு மற்றும் ஆதியின் பதிவு எனக்கு வரலையே??? என்னாச்சு?
தமிழ்மணம் மூலமா வரவேண்டியாத இருக்கு... என்னனு கவனிங்க. //

ரீடர்ல சொல்றிங்களா மயில்!
நீங்க எனக்கு பாலோயரா இருந்தா வந்துருக்குமே!

*********************

பைத்தியக்காரன் said...
அச்சில் வந்த ஆதிக்கும், 200 ஐ தாண்டிய வாலுக்கும், பிறந்தநாள் கொண்டாடிய ரம்யாவுக்கும்
வாழ்த்துகள்.//

ரொம்ப நன்றி தலைவா

************************

vinoth gowtham said...
தல எல்லாம் போச்சு..//

கவலைப்படாதிங்க! பெருசா திரும்ப கிடைக்கும்

வால்பையன் said...

கிரி said...
அருண் டெம்ப்ளேட் சேமிப்பதால் உங்கள் இழந்த பதிவுகளை பெற முடியாது அது உங்கள் பழைய டெம்ப்ளேட் வடிவத்தை பெற மட்டுமே உதவும்.//

ஆமாம் நண்பரே அடுத்த குவியலில் அதை எழுதி விடுகிறேன்!

********************

கணேஷ் said...
கடை சரக்கெல்லாம் காணாம போயிருச்செனு சோகமா இருந்தேன்... என் வயித்துல பீர வார்த்திங்க... இருக்குற மிச்ச சொச்சத்த அனுப்புங்க எசமான்...//


மெயிலுக்கு வாங்க நண்பா!
எல்லாத்தையும் அனுப்புறேன்

************************

நையாண்டி நைனா said...
குவியல் அருமை.//

நன்றி நண்பரே!

//இப்படி தொலைந்த பதிவுகளை எப்படி திரும்ப பெறுவது?//

எக்ஸ்போர்ட் ப்ளாக்குன்னு இருக்காம்!
இல்லைனா என்னோட ரீடர்ல இருக்கு தர்றேன்!

//இப்படி காணாம போனா பதிவிற்கு அரசாங்கம் ஏதாவது நிவாரணம் தந்தா நல்ல இருக்கும் என்று சும்மா டைம்பாசிற்கு மச்சிகளோட பேசிகிட்டு இருக்கும்போது கேட்டு வைங்க.//

காணாமல் போன மனிதர்கள் இதுவரை எத்தனை பேர்ன்னு கேட்டா கணெக்கே இல்லையாம்! மனுசாளுக்கே இந்த கதின்னா

//ஹூம் என்னோட பதிவெல்லாம் காணாம போக மாட்டேங்குது. (அவ்வளவு மொக்கையாவா இருக்கு, வைரசு கூட தொட முடியாத அளவுக்கு???? ஆவ்வ்வ்வ்வ்......)//

என்ன பேராசப்பா!

வால்பையன் said...

நன்றி கண்ணன்!
பலோயர் வராம இருக்க காரணம் கண்டிப்பா இருக்கும், அடுத்த குவியலில் கேட்டு சொல்கிறேன்

*********************

mythees said...
நமக்கு நாமே திட்டம் தலைவர் கலைஞர் கொண்டு வந்ததாக்கும்!
vote ok.......//

அதாவது நமக்கு நாமே ஓட்டு போட்டுகனும், வேர யாரையும் நம்பக்கூடாது

*********************

சரியா சொன்னிங்க நையாண்டி நைனா

**********************

வடகரை வேலன் said...
வால் நோங்க சொன்னது டெம்ப்ளேட்ட சேமிக்க. பதிவுகளச் சேமிக்காது.
சுலபமான வழி வேர்டு பிரஸ்ல ஒரு பிளாக் வச்சுகிட்டு அங்கன இம்போர்ட் செஞ்சு வச்சிக்கிடறதுதான்.//

ஆமாங்க அண்ணாச்சி!
நான் தான் சரியா புரிஞ்சிக்கல!

வால்பையன் said...

நன்றி கார்த்திகைப்பாண்டியன்

**********************

நன்றி இராகவன் நைஜீரியா

**********************

S.A. நவாஸுதீன் said...
குவியலில் வழக்கம்போல பல்சுவை உண்டு./

என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே

**********************

thevanmayam said...
குவியல் நல்ல அவியல்!!//

இதே மாதிரி போய் பரிசலோட பதிவுல
“அவியல் நல்ல குவியல்”ன்னு சொல்லிறாதிங்க
சண்டைக்கு வந்துருவார்

வால்பையன் said...

நர்சிம் said...
200க்கு வாழ்த்துக்கள் வால்..//

நன்றி தல!

***********************

பட்டாம்பூச்சி said...
தோழி ரம்யாவுக்கு வாழ்த்துகள்.
உங்களுக்கு 200க்கு வாழ்த்துகள் :)//

ரொம்ப நன்றிங்க!

**************************

நன்றி சுப்பு

*************************

நன்றி மகேஷ்

************************

அபுஅஃப்ஸர் said...
நன்றி வால்
நானும் என்னுடைய டெம்லேட்டை சேமித்துவிட்டேன், அப்புறம் அழக்கூடாதல்லவா//

அப்படியா! அடுத்த வாரம் பதிவுகளை சேமிப்பது எப்படி

வால்பையன் said...

SK said...
நிறைய செய்திகளை தொகுத்து கொடுத்து இருக்கீங்க.. //

நன்றி தல!

*********************

வண்ணத்துபூச்சியார் said...
வாலுக்கு வாழ்த்துகள்.. தலைக்கும் தான்.//

நன்றி தல!

*********************

வெங்கிராஜா said...
வால், தல பரிசல், அக்கா ரம்யா.. எல்லோருக்கும் வாழ்த்துகள் !//

நன்றி தல!

************************

நட்புடன் ஜமால் said...
தவறு தான் நண்பரே!
நிச்சியம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்றே இருந்துவிட்டேன்
மன்னியுங்கள் ...//

பரவாயில்லைங்க! உங்க பிறந்தநாளுக்கு மறந்துறாதிங்க சொல்ல!

வால்பையன் said...

நன்றி வாழவந்தான்

//manoharan said...
மதுரை ல ஏற்கனவே ஆபீஸ் எ எரிச்சாங்க . அப்பறம் ஏன் திரும்பவும் அங்க வைக்ரிங்க . வேற ஊற பார்த்து போங்க//

டில்லி போய்யிட்டாருங்கிற தைரியத்துல தான்!

*************************

Anonymous said...
very worst blog//

ஆனாலும் உங்க கமெண்டு நல்ல கமெண்டு!

*************************

நன்றி கோவில்பட்டி கோலப்பம்!

************************

//vivek said...
தல, உங்கள சென்னை பொறம்போக்கு பதிவர் தன பதிவில் தமக்கு தாமே பின்னூட்ட திட்டத்தின் கீழ் சைக்கோ என்று declare செய்துள்ளாரே. கவனித்தீர்களா.//

நிறைய பைத்தியகார டாக்டருங்க இருக்குறாங்க! அங்க நமக்கு என்ன வேலை

வால்பையன் said...

நன்றி ஜெட்லி

நன்றி உழவன்!
கார்த்திகை பாண்டியன் ரெண்டு நம்பர் வச்சிருக்கார்!

நன்றி அன்பு

//நையாண்டி நைனா said...
/*புதிய ப்ளாக்கர்கள் தெரியாதவற்றை தெரிந்து கொள்ளவும்,*/
எனக்கு நமீதா வீட்டு அட்ரஸ்ஸும் அவங்க எப்ப எப்ப பிரியா இருப்பாங்கன்னும் தெரியனும். இதெல்லாம் அங்கே வந்தா தெரிஞ்சுக்கலாமா???//

தாரளமாக, ஆனா மற்ற பதிவர்கள் உங்களிடம் நயன்தாரா அட்ரஸ் கேட்பாங்க பரவாயில்லையா

*********************

நன்றி மேக்ஸி இந்தியா

நன்றி நசரேயன்

நன்றி ராதாகிருஷ்ணன் சார்

//மாதவராஜ் said...
மதுரையிலா வலைப்பதிவர்கள் கூட்டம் என்று சந்தோஷமாக பார்த்தால் 24.5.09 தேதி! அன்று எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் மகன் திருமணம் கோவில்பட்டியில். ம்... வர இயலாதே! இருப்பினும் வாத்துக்கள்.//

முன்னாடியே தெரிஞ்சிருந்தா நாங்க கோவில் பட்டி வந்துருப்போமே தலைவா!

வால்பையன் said...

நன்றி அருண்குமார்

நன்றி வைகறை தென்றல்

நன்றி வசந்த் ஆதிமூலம்

நன்றி சூரியன்

நன்றி க்ரிபா

நன்றி சஞ்சய் அங்கிள்

நன்றி விக்னேஷ்வரன்
விலைவாசி ஏறி போசுங்கோவ்

நன்றி ரஃபிக் ராஜா!

Tech Shankar said...

annaa.. I didnt add any vote for from any aggregator.

I tried with Tamilish vote bar - but I didnt get sufficient votes for my posts. I removed it - after removing vote bar I am getting good votes.

So that I am still not using any vote bar.

//
சமீபத்தில்(ரெண்டு நாளைக்கு முன்னாடி) சில புது பதிவர்களின் ப்ளாக்குகள் காணாமல் போனதாக அறிந்தேன். Ntamil என்ற திரட்டியின் voting code சேர்த்ததால் வந்த வினை என்று சில பதிவர்கள் சொன்னார்கள்! தயவுசெய்து நண்பர்கள் வாரம் ஒரு முறை உங்கள் ப்ளாக்கை சேமித்து வைத்து கொள்ளவும். அதன் முறை

!

Blog Widget by LinkWithin