மீண்டும் மடல் சீஷன்!


நண்பர் பரிசல்காரன் எனக்கு அவரது பதிவில் பதில் சொல்லியிருக்கிறார்! பதில்பதில் சொல்ல வேண்டும் அது தான் மரியாதை இல்லையா!

அவரது பதிவில் ஒரு ஓரத்தில் தான் வருவேன்! சினிமா துணை நடிகன் போல கடைசி வரை தேடணுமாக்கும்! இதோ லிங்க்.
************************
இனி மேட்டர்!

//வால்பையன்.... என்னைப் புரிந்து கொள்வீர்களா?//

ரெண்டு பேரும் ஓடி போலாமான்னு கேக்குற மாதிரி இருக்கு. நம்ம புரிதலுக்கு என்ன குறைச்சல்! அது நல்லா தான் இருக்கு!

//ஒரு நாளைக்கு 1000 பேர் படிக்கிறார்கள்.. சரி வேண்டாம் 500 பேர் படிக்கிறார்கள்//

ஆமாம் நிறைய நாட்டில் இருந்து வருவார்கள்! ஆனால் எல்லோருக்கும் தமிழ் படிக்க தெரியும் என்று நம்பாதீர்கள்! எதாவது ஒரு ஆங்கில வார்த்தை ரிலேட்டேடாக இருந்தால் கூட செர்ச் உங்களை காட்டிவிடும்.
சரி அப்படியே வந்தாலும் அவர்கள் முழுவதும் படிக்கிறார்களா இல்லை உங்களை மாதிரி ”ஓ ஸாரி” எல்லோரையும் போல தாண்டி தாண்டி ”கங்காரு” விளையாட்டு விளையாடுகிறார்களா என்று உங்களுக்கு எப்படி தெரியும்?

//50 பேரின் பின்னூட்டத்துக்கு பதில் சொல்வதை விட பின்னூட்டம் போடாமல் படிக்கும் 450 பேருக்காக அடுத்த நாளின் பதிவுக்காக உழைப்பதுதானே ஒரு பதிவனாய் என் கடமை?//


அதாவது மைனாரிட்டிக்கு மரியாதை இல்லை!
இது எப்படி தெரியுமா இருக்கு. ஜெயலலிதா தி.மு.க.வை பார்த்து எதெற்கெடுத்தாலும் மைனாரிடி அரசுன்னு சொல்வாங்களே அதை ஞாபகப்படுத்துது. அதனால் இந்த வார்த்தையை மறுபடி உபயோகப்படுத்தினால் தி.மு.க-வில் சீட்டு கேட்போம் அப்புறம் உங்களிடம் ஓட்டு கேட்போம்.

”சாரு” எதிர்வினை என்ற பெயரில் வரும் கடிதங்களுக்கு பதில் மரியாதை செய்கிறார்! அவருக்கு ஒரு நாளைக்கு நாலு ஹிட்ஸ் தான் கிடைக்குதா! இல்லை.. அவருக்கு கடிதம் எழுதுபவர்கள் குறைவு, ஏன் தெரியுமா?

தமிழில் பிரபலம் என்பார்கள்! மலையாளத்தில் அதற்கு பெயர் செலிபிரட்டி!
அவர்களிடம் போய் நாம் ஆட்டோகிராப் வாங்கினால் போட்டு தருவார்கள்!
நாம் ஒரு புன்னகையை தந்து விட்டு ஒதுங்க வேண்டும்!
அதை விட்டு ”நீங்கள் என்றும் அன்புடன்ன்னு” ஆட்டோகிராப் போட்டிங்களா!
நான் கீழேயே என்றும் வம்புடன்ன்னு ஆட்டோகிராப் போடுவேனாமா!
நீங்க அதுக்கு கீழ உங்க கருத்த சொல்லுனுமாம்னு சண்டை போட்டா அவரு ”கையில் கம்புடன்” அடிக்க வருவார்.

//நானென்ன வேண்டுமென்றா ‘உனக்கென்ன நான் பதில் சொல்வது’ மனோபாவத்தோடு இருக்கிறேன் நண்பா?//


இதிலுள்ள ஒரு வார்த்தை தான் எல்லாவற்றையும் தீர்மானித்தது!
நண்பன்!
யார் நண்பன்? நீங்கள் எனக்கு ஒருவரை அறிமுகம் செய்கிறீர்கள் நான் ஹலோ சொல்கிறேன், அவரும் சொல்கிறார்! அதன் பின் என்றாவது ஒருநாள் அவரை பற்றி பேச்சு வரும் பொழுது நான் எதாவது சொல்ல இருக்கிறதா! அப்படியே சொல்ல வேண்டுமானால் எனக்கு பரிசல் அறிமுகப்படுத்தினார் ஆனால் பழக்கமில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்!

ஆனால் நீங்களும் நானும் அப்படியா!

”வாலை” பற்றி கேட்டால் புட்டு புட்டு வைப்பீர்கள். நான் சனி ஞாயிறு நான் எங்கே இருப்பேன் என்பது முதற்கொண்டு உங்களுக்கு தெரியும்!

உங்களை பற்றி கேட்டாலும் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது!
கம்பெனிக்குள் நுழைந்து விட்டால் நீங்கள் எவ்வளவு கண்டிப்பு என நேரில் பார்த்தவன் நான்!

நண்பர்கள் எப்படி உருவாகிறார்கள்?

பழகி!

நேரில் பழகலாம், போனில் பழகலாம்! தூரம் மற்றும் இருவருக்கும் ஒரே நேரம் ஒத்து வரவில்லை என்பதால் பின்னூட்டத்தில் பழகலாம் என்று தான் நான் அழைக்கிறேன்.

வாங்க பழகலாம் பிடிச்சிருந்தா ஃப்ரெண்ஷா இருப்போம்!
இல்லைன்னா நண்பர்களா இருப்போம்! என்ன சொல்றிங்க!

***********************
படத்துக்கு காரணம் parisalkaran அப்படின்னு ஆங்கிலத்தில் அடித்து தேடினால் இதுவும் கிடைத்தது!

(நாங்களும் தேடுவோம்ல!)
************************
உங்கள் பதிவை படித்த பிறகு சர்வேசனின் லிங்கை பிடித்து விட்டேன். நன்றி.
புரியும் என நம்புகிறேன்.

70 வாங்கிகட்டி கொண்டது:

நட்புடன் ஜமால் said...

அன்புடன்
வம்புடன்
கம்புடன்

பொன்.பாரதிராஜா said...

எப்படித்தான் யோசிக்குறாங்களோ?பரிசல் என்ன சொல்றாருன்னு பாப்போம்..

உண்மைத்தமிழன் said...

தம்பி பரிசலின் கருத்தில் எனக்கும் உடன்பாடில்லை..

அதே சமயம் வாலு சனி, ஞாயிறுகளில் எங்கே, எப்படி இருப்பார் என்பதைத் தெரிந்து கொள்ள உடன்பாடு உண்டு..

Kumky said...

வம்ப வெலை குடுத்து வாங்கியத கேள்விப்பட்டிருக்கேன்.ஆனா இனையத்துக்கு வந்தப்புறம் சொந்த செலவில சூனியம் என்று ஒரு வார்த்தை புழக்கத்துல இருக்கு.அதற்கான அர்த்தம் இப்போதான் புரிஞ்சது...நன்றி.

Kumky said...

நானென்ன வேண்டுமென்றா ‘உனக்கென்ன நான் பதில் சொல்வது’ மனோபாவத்தோடு இருக்கிறேன்.
???????????????????????????????????

கார்க்கிபவா said...

ஒன்னும் புரியல.. நெக்ஸ்ட்டு நெக்ஸ்ட்டு

Kumky said...

பதில்பதில் சொல்ல வேண்டும் அது தான் மரியாதை இல்லையா!

நீங்க எப்படி பதில் மரியாதை செய்வீர்களென தெரியாதா>?

ஆயில்யன் said...

//வாங்க பழகலாம் பிடிச்சிருந்தா ஃப்ரெண்ஷா இருப்போம்!
இல்லைன்னா நண்பர்களா இருப்போம்! என்ன சொல்றிங்க!
///


ஐ லைக் திஸ்..!

அட இது நல்லா இருக்கே வாலு :)

சென்ஷி said...

நீங்களாச்சும் இங்க சொல்லியிருக்கலாம். இல்ல சர்வேசன் லிங்காச்சும் கொடுத்திருக்கலாம். :-))

டிவிட்டர்ன்னா என்ன ராசா??

சென்ஷி said...

சனி, ஞாயிறு எனக்கு ஆபிஸ் உண்டு. அதனால நீங்க எங்க இருப்பீங்கன்னு கேட்டு தொந்தரவு செய்ய விரும்பல.. :)

Kumky said...

யார் நண்பன்? நீங்கள் எனக்கு ஒருவரை அறிமுகம் செய்கிறீர்கள் நான் ஹலோ சொல்கிறேன், அவரும் சொல்கிறார்! அதன் பின் என்றாவது ஒருநாள் அவரை பற்றி பேச்சு வரும் பொழுது நான் எதாவது சொல்ல இருக்கிறதா! அப்படியே சொல்ல வேண்டுமானால் எனக்கு பரிசல் அறிமுகப்படுத்தினார் ஆனால் பழக்கமில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்!

இந்த லிஸ்ட்டில் யாரார்ல்லாம் இருக்கா?

சென்ஷி said...

//கார்க்கி said...

ஒன்னும் புரியல.. நெக்ஸ்ட்டு நெக்ஸ்ட்டு/

தொப்பி போட்டு கண்ணாடி போட்டவன் எஸ்ஸாகறான் பாரு. அவனைப்பிடி அவனைப்பிடி :))

சென்ஷி said...

வாலு, தமிழ்மணத்துல உங்க பதிவு நகைச்சுவை/நையாண்டி கீழ வகைப்படுத்தியிருக்காங்க.. நீங்க சும்மா விடக்கூடாது. தமிழ்மணத்துக்கும் ஒரு கடுதாசி எழுதிப்போடுங்க.

Kumky said...

”வாலை” பற்றி கேட்டால் புட்டு புட்டு வைப்பீர்கள். நான் சனி ஞாயிறு நான் எங்கே இருப்பேன் என்பது முதற்கொண்டு உங்களுக்கு தெரியும்!

இது தவறு.முழு பாட்டிலை சட்டைபையில் மறைக்க கூடாது.

என்னிடம் புட்டு புட்டு புட்டு வைத்திருந்தால் தப்பித்திருப்பேனே...ஏன் செய்யவில்லை?..ஏன்..ஏன்..ஏன்?

Kumky said...

உங்களை பற்றி கேட்டாலும் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது!

எங்க சொல்லுங்க பாப்போம்....

Kumky said...

நண்பர்கள் எப்படி உருவாகிறார்கள்?

அது போன ஜென்மத்து பாவ புன்னியங்களை பொறுத்தது.

Kumky said...

நேரில் பழகலாம், போனில் பழகலாம்! தூரம் மற்றும் இருவருக்கும் ஒரே நேரம் ஒத்து வரவில்லை என்பதால் பின்னூட்டத்தில் பழகலாம் என்று தான் நான் அழைக்கிறேன்.

இதென்ன கூத்து? பின்னூட்டத்தில் எப்படி பழகறதாம்...?

எங்கப்பா அந்த சொல் அழகன்>?

வியா (Viyaa) said...

: )

Kumky said...

வாங்க பழகலாம் பிடிச்சிருந்தா ஃப்ரெண்ஷா இருப்போம்!
இல்லைன்னா நண்பர்களா இருப்போம்! என்ன சொல்றிங்க!

என்னத்த சொல்றது........

வால்பையன் said...

//எங்கப்பா அந்த சொல் அழகன்>? //

தப்பு தப்பா தமிழ் பேச கூடாது!
எங்க சொல்லுங்க பார்ப்போம்

சொள் அலகன்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்லா இருக்கு(ங்க)!

வால்பையன் said...

//நட்புடன் ஜமால் said...

அன்புடன்
வம்புடன்
கம்புடன்//

மூணையும் போட்டா எப்படி?
நீங்க எதோட வர்றிங்கன்னு சொல்லுங்க!

வால்பையன் said...

பொன்.பாரதிராஜா said...

எப்படித்தான் யோசிக்குறாங்களோ?பரிசல் என்ன சொல்றாருன்னு பாப்போம்..//

வேறென்ன எதிர்மடல் போடுவாறு!

வால்பையன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
தம்பி பரிசலின் கருத்தில் எனக்கும் உடன்பாடில்லை..
அதே சமயம் வாலு சனி, ஞாயிறுகளில் எங்கே, எப்படி இருப்பார் என்பதைத் தெரிந்து கொள்ள உடன்பாடு உண்டு..//

பரிசலின் கருத்துகளில் நிறைய பேருக்கு உடன்பாடில்லை தான்!
ஆனா யாருமே மணி கட்ட வர்ர மாதிரி தெரியலையே!

சனி, ஞாயிறுகளில் நான் இருக்குமிடம் சமத்துவபுரம்!

Kumky said...

உங்கள் பதிவை படித்த பிறகு சர்வேசனின் லிங்கை பிடித்து விட்டேன். நன்றி.
புரியும் என நம்புகிறேன்.

இதெல்லாம் மெய்ல்ல சொல்லிக்க வேண்டியதுதான...இப்போ நாங்கள்லாம் சர்வேசனை தேடி என்ன ஏதுன்னு மண்டய ஒழப்பனுமாக்கும்.

அப்துல்மாலிக் said...

இன்னாய்யா இது

பதில் சொல்ல ஒரு பதிவா?

அப்படியே இப்போ இன்னோர் பதிவுபோடுவார் இதுக்கு பதில் என்னா என்று

பார்ப்போம் எதுவரை போகுதுனு

அப்துல்மாலிக் said...

//வாங்க பழகலாம் பிடிச்சிருந்தா ஃப்ரெண்ஷா இருப்போம்!
இல்லைன்னா நண்பர்களா இருப்போம்! என்ன சொல்றிங்க!//

ஹா ஹா ஹா

Kumky said...

அப்பாடா...ரொம்ப நாளா ஒரே போர்.நடுவுல இந்த கணேஷ வேற கானோம்.சொள் அலகன் சொல்லாம கொல்லாம எங்கியோ போய்ட்டாரு.
இப்போதைக்கு மடல் தொடர்தான்...
நடக்கட்டும்...நடக்கட்டும்.

வால்பையன் said...

கும்க்கி said...

வம்ப வெலை குடுத்து வாங்கியத கேள்விப்பட்டிருக்கேன்.ஆனா இனையத்துக்கு வந்தப்புறம் சொந்த செலவில சூனியம் என்று ஒரு வார்த்தை புழக்கத்துல இருக்கு.அதற்கான அர்த்தம் இப்போதான் புரிஞ்சது...நன்றி.//

நிஜமா தான்!
நாங்கெல்லாம்
வீம்புக்கு
வீணாபோனவர்கள்
சங்கத்தை சேர்ந்தவர்கள்!

வால்பையன் said...

கார்க்கி said...

ஒன்னும் புரியல.. நெக்ஸ்ட்டு நெக்ஸ்ட்டு//

புரியலையா
அடுத்த மடல் அங்க தான் வருது!

வால்பையன் said...

//ஆயில்யன் said...
ஐ லைக் திஸ்..!

அட இது நல்லா இருக்கே வாலு :)//

ரொம்ப நன்றிங்க!
எப்படி பார்த்தாலும் நண்பர்கள் தான்!
ஆனா அப்பப்ப முட்டிக்குவோம்!

வால்பையன் said...

சென்ஷி said...

நீங்களாச்சும் இங்க சொல்லியிருக்கலாம். இல்ல சர்வேசன் லிங்காச்சும் கொடுத்திருக்கலாம். :-))

டிவிட்டர்ன்னா என்ன ராசா??//

புரியுன்னு நம்புறேன்னு தானே சொன்னேன்!
புரிஞ்சிடுச்சுன்னு சொன்னேனா!

இந்த வார ஆனந்தவிகடன்ல வந்துருக்கு படிச்சிட்டு சொல்றேன்.

வால்பையன் said...

சென்ஷி said...

சனி, ஞாயிறு எனக்கு ஆபிஸ் உண்டு. அதனால நீங்க எங்க இருப்பீங்கன்னு கேட்டு தொந்தரவு செய்ய விரும்பல.. :)//

நம்பர் கொடுங்க நான் தொந்தரவு பண்றேன்

வால்பையன் said...

சென்ஷி said...

வாலு, தமிழ்மணத்துல உங்க பதிவு நகைச்சுவை/நையாண்டி கீழ வகைப்படுத்தியிருக்காங்க.. நீங்க சும்மா விடக்கூடாது. தமிழ்மணத்துக்கும் ஒரு கடுதாசி எழுதிப்போடுங்க.//

பாருங்களேன்!
எம்புட்டு சீரியஸா ஒரு பதிவு போட்டுருக்கேன்! நையாண்டியாம்ல!

வால்பையன் said...

கும்க்கி said...

”வாலை” பற்றி கேட்டால் புட்டு புட்டு வைப்பீர்கள். நான் சனி ஞாயிறு நான் எங்கே இருப்பேன் என்பது முதற்கொண்டு உங்களுக்கு தெரியும்!

இது தவறு.முழு பாட்டிலை சட்டைபையில் மறைக்க கூடாது.

என்னிடம் புட்டு புட்டு புட்டு வைத்திருந்தால் தப்பித்திருப்பேனே...ஏன் செய்யவில்லை?..ஏன்..ஏன்..ஏன்?//

சொல்லலைனா உங்களுக்கு தெரிஞ்சிருக்காதா!

பாம்பின் கால் பாம்பரியும்னு பழமொழி எதுக்கு! தூக்குங்க அதை!

வால்பையன் said...

கும்க்கி said...

உங்களை பற்றி கேட்டாலும் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது!

எங்க சொல்லுங்க பாப்போம்....//

கும்கி நல்லவரு
வல்லவரு
எம்புட்டு சரக்கு கேட்டாலும் வாங்கி தருவாரு

என்ன அய்யாசாமி இன்னைக்கு பிட்டு போதுமா?

வால்பையன் said...

வியா (Viyaa) said...

: )//

என்ன சொல்ல வர்றிங்க
நல்லாருக்கா இல்லையா?

வால்பையன் said...

அபுஅஃப்ஸர் said...
இன்னாய்யா இது
பதில் சொல்ல ஒரு பதிவா?
அப்படியே இப்போ இன்னோர் பதிவுபோடுவார் இதுக்கு பதில் என்னா என்று
பார்ப்போம் எதுவரை போகுதுனு//

யாரும் பதில் சொல்லலைனா நீங்களும் ஒரு பதிவு போடுங்க!
அம்புட்டு தான்!

SUBBU said...

இதுக்கும் பின்னூட்டம் போடனுமா :)) :)) :)) :))

Anonymous said...

தளைவா,
பூ வோட சேர்ந்த நாரும் மனக்கும்னு சொள்ர மாதிறி, உங்கலாள எனக்கும் பேறும் புகலும் கிடைக்கும் போளறுக்கே. ஆனா ஒன்னு தள எங்க பெங்கலூரை பத்தி எலுதுரேன்னு சொள்ளிட்டு எலுதமா கை கலுவி விட்டுவிடாதே. உனக்கு ஹெள்ப் பன்றதுக்கு தான் நிரைய இடங்கலைப் பர்ரிக் குரிப்பிட்டுறுந்தேன். ஆனா நீ கண்டுக்கவே இள்ளையே!

இந்தப் பதிவிலே நீதான் என்ன கறுமத்தை எலுதியிறுக்கே இள்ள அந்த அன்னன் தான் என்னத்தை எலுதியிறுக்கார் எனக்கு ஒன்னும் புரியளையே ! ஒனக்கு நகைச்சுவை கழக்காமல் எலுதவும் வரும் என்ரு காட்டியுல்லது இந்தப் பதிவு

டோட்டள் நகைச்சுவை வரட்சி.

சொள் அலகன்.

Bhuvanesh said...

//வாங்க பழகலாம் பிடிச்சிருந்தா ஃப்ரெண்ஷா இருப்போம்!
இல்லைன்னா நண்பர்களா இருப்போம்! என்ன சொல்றிங்க!//

அதே மாதிரி அவுரு பதில் சொன்னா ஃப்ரெண்ஷா இருங்க..
இல்லையா நண்பர்களா இருங்க..


மேட்டர் ஓவர் :)

Suresh said...

//ஒரு நாளைக்கு 1000 பேர் படிக்கிறார்கள்.. சரி வேண்டாம் 500 பேர் படிக்கிறார்கள்//

:-) nalla nakkal adichi pintia


//50 பேரின் பின்னூட்டத்துக்கு பதில் சொல்வதை விட பின்னூட்டம் போடாமல் படிக்கும் 450 பேருக்காக அடுத்த நாளின் பதிவுக்காக உழைப்பதுதானே ஒரு பதிவனாய் என் கடமை?//


//வாங்க பழகலாம் பிடிச்சிருந்தா ஃப்ரெண்ஷா இருப்போம்!
இல்லைன்னா நண்பர்களா இருப்போம்! என்ன சொல்றிங்க!//

super machan arumaiya sinthanai varthaigal nalla nagaichuvaiya sollitae

vanga palagi than puriyamudiyum


vallu pathi nanum putuputu vaikiran ha ha

Rajeswari said...

ஒண்ணும் சொல்ல முடியலை

// நட்புடன் ஜமால் said...
அன்புடன்
வம்புடன்
கம்புடன்//

ரிப்பீட்டு...

Anonymous said...

ஈஸ்டர் விடுமுரையிள் செள்வதாள் மூன்ரு நாட்கல் கலித்து தான் உங்கல் புதிய பதிவுகலை பார்க்க இயளும் போழிருக்கிரது குறு.

டிவிட்டரிள் உங்க பதிவு வறுமா ?

சொள் அலகன்.

குடுகுடுப்பை said...

என்ன நடக்குது இங்கே

குடுகுடுப்பை

அமர பாரதி said...

அருமையான satire

கணினி தேசம் said...

ஒரு மிச்சுடு கால் போட்டு
அவரு கூப்பிடும்போது
அரைமணி நேரமோ
அல்லது ஒரு மணி நேரமோ..
இல்லை எவ்வளவு நேரமாலானும்
பேசி தீர்த்துக்க வேண்டியதுதானே.

இதுக்கு போய்...
ப்ராது குடுத்து,
பஞ்சாயத்தக் கூட்டி,
எங்களையெல்லாம் வர வைச்சி...
..............

கணினி தேசம் said...

//”வாலை” பற்றி கேட்டால் புட்டு புட்டு வைப்பீர்கள். நான் சனி ஞாயிறு நான் எங்கே இருப்பேன் என்பது முதற்கொண்டு உங்களுக்கு தெரியும்!//

எங்களுக்கு தெரியாதே,
சொன்னா நல்லாயிருக்கும்.

கணினி தேசம் said...

//வாங்க பழகலாம் பிடிச்சிருந்தா ஃப்ரெண்ஷா இருப்போம்!
இல்லைன்னா நண்பர்களா இருப்போம்! என்ன சொல்றிங்க!//

நன்பர்களாவே இருந்தா எப்படி எங்களுக்கு பொழுத் போகும். அப்பப்போ அடிதடி நடந்தாத்தானே ஒரு குஷியா இருக்கும். :))

கணினி தேசம் said...

//உங்கள் பதிவை படித்த பிறகு சர்வேசனின் லிங்கை பிடித்து விட்டேன். நன்றி.
புரியும் என நம்புகிறேன்.//

புரியாட்டி சொல்லுங்க..
டிப்ளோமா ஏற்பாடு செஞ்சிரலாம். வேணும்னா பரிசலையே சொல்லித்தர வைச்சிருவோம்.

(சுத்தி வளைச்சு எப்படியோ கோர்த்து விட்டாச்சி. )

தேவன் மாயம் said...

/வாங்க பழகலாம் பிடிச்சிருந்தா ஃப்ரெண்ஷா இருப்போம்!
இல்லைன்னா நண்பர்களா இருப்போம்! என்ன சொல்றிங்க!///

இல்லை தோழர்களா இருப்போம்!
இல்லை கூட்டாளிகளா இருப்போம்!!
என்ன சொல்றிங்க!
இஃகி! இஃகி!!!

கிரி said...

:-) No comments

பரிசல்காரன் said...

நண்பன் என்பதுதான் எதையும் தீர்மானிக்கிறது - சூப்பர் வாலு! பின்றீங்க....

பாகம் இரண்டையும் எதிர்பார்க்கறேன் நண்பா....

வீணாபோனவன் said...

வால் பையன் said...
//நிஜமா தான்!
நாங்கெல்லாம்
வீம்புக்கு
வீணாபோனவர்கள்
சங்கத்தை சேர்ந்தவர்கள்!//

அடடா இவிங்களுக்கெல்லாம் சங்கம் வச்சிருக்கிங்களா?. சொல்லவே இல்ல... :-))

-வீணாபோனவன்.

Tech Shankar said...

மீ தி லாஸ்ட். இப்போதைக்கு.
எனக்கு அப்பால 6 ஃபர்ஸ்ட். பொறுத்திருந்து பார்ப்போம்.

தீப்பெட்டி said...

ஒன்னும் புரியலியே

இன்னா மேட்டரு தெளிவா சொல்லிபுடு மாமே

தாரணி பிரியா said...

ஆஹா அடுத்த சீசன் ஆரம்பிச்சாச்சா :)

ஒரு காசு said...

ஆமா, இங்கே என்ன நடக்குது ?

அ.மு.செய்யது said...

ஒரு காசு said...
ஆமா, இங்கே என்ன நடக்குது


// அதான் தலீவா எனக்கும் ஒன்னும் பிரியல. //

?!?!?!?!?!?!?!?!

மேவி... said...

:-))


naan saturday sunday nna
inox, satyam illatti landmark irupenunga

Anonymous said...

நகைச்சுவை இலவறசே !!
வால்குறுநாதா,

ஈஸ்டர் ழீவு முலுவதும் இண்டர்நெட் பக்கம் தளையக் காட்டது இறுந்து விட்டு, தங்கல் பதிவுக்கு வந்தேன்.

ஆனாள் என்ன செய்யரது , புதிய பதிவே இள்ளாமள் மொட்டையாக விட்டு விட்டீர்கல்.

ஏமார்ராதே தளைவா !

சொள் அலகன்.

ers said...

மீண்டு(ம்) வந்தாச்சு தலைவா....

Anonymous said...

தளைவா

தமில் புத்தாண்டு வால்த்துககல்!!

தள நள்ள பதிவுடன் வெலிய வா தள!! பதுங்காதே

சொள் அலகன்

Tech Shankar said...

அடடடா.. அங்கங்கே பின்றீங்களே

//எதாவது ஒரு ஆங்கில வார்த்தை ரிலேட்டேடாக இருந்தால் கூட செர்ச் உங்களை காட்டிவிடும்.

பட்டாம்பூச்சி said...

அட மக்கா..நல்லாத்தானே இருந்தீக.....பின்ன ஏன் இப்படி?!!????!!!

Suresh said...

பிறந்தநாள் வாழ்த்துகள்

Suresh said...

வாலுக்கு பிறந்தநாள் பரிசாக மிக பெரிய விருது .

என்று ஒரு பதிவு மச்சான் உனக்கு :-)

வால்பையன் said...

நட்புடன் ஜமால் said...

அன்புடன்
வம்புடன்
கம்புடன்//

நான் தெம்புடன்!

வால்பையன் said...

நன்றி சுப்பு
அதான் போட்டுடிங்கல்ல

நன்றி புவனேஷ்

நன்றி சுரேஷ்
புட்டு புட்டு வையிங்க தப்பே இல்ல

நன்றி ராஜேஷ்வரி

நன்றி குடுகுடுப்பை

நன்றி அமரபாரதி

நன்றி கணிணிதேசம்

நன்றி தேவன்குமார்
இருப்போம்

நன்றி கிரி
கமெண்டு தான் போட்டுடிங்களே

நன்றி பரிசல்
பாகம் ரெண்டுக்கு வேலையில்லம செஞ்சிபுட்டிங்களே!

நன்றி தமிழ்நெஞ்சம்

நன்றி தீப்பெட்டி

நன்றி தாரணிபிரியா

நன்றி ஒருகாசு

நன்றி அ.மு.செய்யது

நன்றி MayVee

நன்றி தமிழ்சினிமா

நன்றி பட்டாம் பூச்சி
அப்பப்ப இந்த மாதிரி செஞ்சா தான் நாம இருக்கோம்னு மத்தவங்களுக்கு தெரியும்!

நன்றி சுரேஷ்

Khader Mohideen said...

சூப்பர்

!

Blog Widget by LinkWithin