ஒரினசேர்க்கை ஆதரவும், எதிர்ப்பும்!!

பாலியல் கல்வி பள்ளிகளிளேயே தேவை என்பதால் இதற்கு 18+ போடவில்லை.

************************

எட்டு வருடங்களுக்கு முன் மதுரை அரசு மருத்துவமனையில் எனது உறவினர் ஒருவர் மனச்சிதைவு காரணமாக சேர்க்கப்பட்டிருந்தார், அவரை பார்த்து கொள்ளும் பொறுப்பு எனக்கு தரப்பட்டது. அங்கு எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ”உள்ளேயிருந்து சில குரல்கள்” என கோபி கிருஷ்னன் தலைப்பில் எழுதலாம் என்றிருந்தேன், ஆனால் தற்போது நடந்து வரும் ஓரினசேர்க்கையாளர்களுக்கு ஆதரவு திரட்டுதல் அதிலும் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் ஞாநி அவர்கள் நேரடியாக ப்ளாக்குக்கு வந்து கருத்துகளை பரிமாறி கொள்ளுதல் அவற்றின் முக்கியதுவத்தை அதிகபடுத்தியது. இருப்பினும் எந்த விசயதையும் மாற்று கருத்துகளையும் சேர்த்து அலசுவதே சிறந்தது,

என் பங்கிற்கு

நான் அங்கு சென்ற ஓரிரு தினங்களில் அவனை சேர்த்தார்கள், பெயர் ஞாபகமில்லை. குமார் என்று வைத்து கொள்ளுங்கள். வயது பதினெட்டுக்குள் தான் இருக்கும். பொறியியல் முதலாம் ஆண்டு கல்லுரியிலேயே ஒரு விடுதியில் தங்கி படிப்பதாக அவரது தந்தை கூறினார். அவனது பெற்றோர்கள் இருவரும் அரசு வேலைக்கு செல்பவர்கள், இன்னோரு மகள் உறவினர் வீட்டில் இருந்து படிக்கிறாலாம்.

குமார் மருத்துவமனையில் சேரும் போது ஒரு வார்த்தை கூட பேச முடியாதவனாக சேர்க்கப்பட்டான். எந்த கேள்விக்கும் அவனிடத்தில் பதிலில்லை, ஆரம்பத்தில் மத சம்பந்தமான சடங்குகள் செய்து பார்த்து அது வழக்கம் போல எந்த பயனையும் தராததால் இறுதியிலேயே இங்கே அழைத்து வந்திருக்கிறார்கள். குமார் சாப்பிட கூட வாய் திறக்க மறுத்தான், அப்படியே சாப்பிட்டாலும் அது யாரும் இல்லாத போது, தூரத்து படுக்கையில் இருந்து அதை நான் கவனித்திருக்கிறேன்.

இயல்பாகவே நான் அனைவரிடமும் சகஜமாக பழகுவேன், மேலும் அங்கே நான் தான் அப்போது சீனியர் என்பதால் மற்ற நோயாளிகளுக்கு ரத்த சோதனை கூடம், மற்றும் வெளியெ இருந்து உணவு வாங்கி வருதல் போன்ற கடமைகளை தவறாமல் செய்து வந்தேன், அங்கிருந்தவர்கள் அனைவரும் அவர்கள் குடும்பத்தில் இருவராக தான் என்னை நினைப்பார்கள். நோயாளிகளுடனும் பேசுவது, அவர்களுது மனநிலையை புரிந்து கொள்ள முயல்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.

குமார் சேர்ந்து ஒரு வாரம் ஆகியும், அவனது குறையை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, மாத்திரைகளும் ஊசியும் போடப்பட்டது ஆனால் அவன் வாயை திறக்கவேயில்லை. ஒருநாள் அவன் குளித்து விட்டு வந்து எதையோ தேடுவது போல் இருந்தது, அருகில் சென்று என்னவென்று கேட்டேன், அவன் வழக்கம் போலவே பதில் சொல்லவில்லை.
டேபிள் மேல் இருந்த நோட்டை பார்த்தது எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. அவனிடம் நோட்டும் பேனாவும் கொடுத்து அவன் என்ன தேடுகிறான் என்று எழுதி காட்ட சொன்னேன்.
“ஜட்டி” என்று எழுதினான்.

அதன் பின் அவனுடன் பழகுவது எனக்கு சுலபமாகிவிடது, ஒரே நாளில் அவனுடன் நெருக்கமானேன், நானும் விடுதியில் படித்தவன் என்றும், அது நரக வாழ்க்கை என்றும் அவனுள் இருந்த ரகசியத்தை தெரிந்து கொண்டேன். அந்த அதிர்ச்சியூட்டும் தகவலை எழுதும் முன்னே இதை யாரிடமும் சொல்லகூடாது என்று சத்தியம் வாங்கினான்.

விடுதியில் ராகிங் என்ற பெயரில் சில மேல்நிலை மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள், உச்சகட்டமாக வாய்வழியாக புணரசெய்து அவனை பெரும் மன உளைச்சளுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். அன்றிலிருந்து வாயை திறந்தாலே எதோ கெட்ட வாடை வருவதாக உணர்ந்தானாம், அதனால் வாயை திறக்கவே பயமாக இருக்கிறது என்று கூறினான். வீட்டில் சொல்லவும் முடியவில்லை. நன்றாக படித்து கொண்டிருந்த அந்த மாணவனின் எதிர்காலத்துக்கு ஓரினசேர்க்கை ஆதரவாளர்கள் என்ன நஷ்டஈடு கொடுக்க போகிறீர்கள்.

*************************************

செக்ஸ் என்பது என்ன?
இயற்கையில் எல்லா உயிரனங்களுக்கும் செக்ஸ் உண்டு, அவை இனபெருக்கதிற்காக,
ஓரினசேர்க்கையாளர்கள் அலெக்ஸாண்டர் காலத்திலேயே இருந்திருக்கிறார்கள், பெண் என்பவள் இனபெருக்கதிற்கு மட்டுமே! நமது செக்ஸ் வீரம் மற்றொரு ஆணுடன் என்ற மூடநம்பிக்கையில்!

ஓரினசேர்க்கையாளர்களின் ஆதரவாளர்கள் பெரும்பாலும் இதை கவனிப்பதில்லை, மற்றவர்கள் அவர்களை புரிந்து ஏற்று கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர அவர்கள் செய்யும் வேலைகளை கண்டிப்பதே இல்லை.

நான் ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்த போது ஒரு வடநாட்டவர் 500 ரூபாய் பணம் தருகிறேன் என் அறைக்கு வா என்று அழைத்தார். புரிந்துகொண்ட நான் மறுத்து விட்டேன்,ஆனால் அதன் பின் ஒரு ரூம் சர்வீஸ் பாய் அந்த அறைக்கு சென்று அரைமணி நேரம் கழித்து வந்தான் என்று மற்றவர்கள் பேசி கொள்ளும் போது தான் தெரியும், அந்த ஆள் மொத்த ஹோட்டலையும் அழைத்திருக்கிறான் என்று. அதன் பிறகு அந்த ரூம் சர்வீஸ் பாயை அழைத்து கண்டித்தேன்.

நீ ஒரு ஓரினசேர்க்கையாளன் இல்லையென்றால் இந்த பழக்கம் உன்னை எதிர்பாலின ஈர்ப்பு அற்றவனாக்கி உன்னையும் ஒரு ஓரின சேர்க்கையாளனாகவே மாற்றிவிடும், பிறப்புக்குகே உரிய முதல் கடமை நமது சந்ததியினரை இந்த மண்ணில் விட்டு செல்வது, அதில் நீ தவறக்கூடும் என்று. அதன் பின் அவன் அம்மாதிரியான உறவுகளை தவிர்த்துவிடுவதாக உறுதியளித்தான்.

*****************************

ஓரின சேர்க்கையாளர்கள் கூட்டம் நடத்துவது எதற்காக, தம்மை இந்த உலகம் அங்கிகரிக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக என்றால் சரி என்று ஏற்று கொள்ளலாம், ஆனால் தனது இணையை தேடி கொள்ள என்றால் அது எம்மாதிரியான பாலியல் விழிப்புணர்வற்ற தனம்,
ஐந்து நட்சத்திர விடுதியில் கார் சாவி மாற்றி துணையை மாற்றி கொள்ளும் நாலந்தர பணக்காரர்கள் கூட அதற்காக பாதுகாப்பு கவசம் அணியக்கூடும், ஆனால் இந்த ஓரின சேர்க்கையாளர்கள் அதை செய்வார்களா அல்லது எய்ட்ஸ் என்னும் அரக்கனை அனைவர் உடம்பிலும் பரப்புவார்களா?

ஓரின சேர்க்கையாளர்களிடம் மணி கணக்காக பேசலாம், அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதற்காக, ஆனால் சாதாரணமானவர்களும் அவர்களுக்கு கம்பெனி தர வேண்டுமா என்ன?
என்றாவது ஓரின சேர்க்கையாளர்கள் விருப்பமில்லாதவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம் என உத்திரவாதம் அளித்திருகிறார்களா? எத்தனை பேருந்துகளில், எத்தனை சினிமா அரங்குகளில் உடன் பிறந்த சகோதரனோடோ, பெற்ற தந்தையினோடோ செல்லும் போது சங்கடபட வேண்டியிருக்கிறது.

ஓரின சேர்க்கையாளர்களை புரிந்து கொள்ள வேண்டும் என என்னை போல உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நினைப்பவர்கள், ஓரின சேர்க்கையாளர்களுக்கு தான் முதலில் விழிப்புணர்வு தேவை என்பதை ஏன் உணரவில்லை.

திருநங்கைகள் வேறு, ஓரின சேர்க்கையாளர்கள் வேறு, ஓரிரு ஓரின சேர்க்கையாளர்கள் பல ஓரின சேர்க்கையாளைகளை உருவாக்குகிறார்கள், அதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும்.
ஓரின சேர்க்கையாளர்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்படுவது தவறாகவே இருக்கலாம், அதே நேரம் அப்பாவி சிறுவர்கள் அவர்கள் பாதிக்கப்படுகிறார்களே அதை என்ன சொல்வது? ஓரின சேர்க்கையாளர்களின் உணர்வு இயற்கை என்றால், பின்பு விலங்குகளுடன் உறவு கொள்வதையும் இயற்கை என்று ஏற்று கொள்வீர்களா?

ஓரின சேர்க்கையாளர்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் முன் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துங்கள், அப்புறம் ஆதரவு அளிக்கலாம்.

இப்படிக்கு
பேச தயங்குவதை பேசுபவன்.

55 வாங்கிகட்டி கொண்டது:

வெற்றி said...
This comment has been removed by the author.
வெற்றி said...

இது எனக்கு புரியாத சப்ஜெக்ட்.

இருந்தாலும், ஓரினச் சேர்க்கையோ அல்லது மாற்றினச் சேர்க்கயோ, கட்டாயத்தின் பேரில் எது நடந்தாலும் அது தண்டனைகுரிய குற்றமே.

ஆ! இதழ்கள் said...

ஓரின சேர்க்கையாளர்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் முன் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துங்கள், அப்புறம் ஆதரவு அளிக்கலாம்.//

இது சரியான வாதம்.

Anonymous said...

//இது எனக்கு புரியாத சப்ஜெக்ட்.

இருந்தாலும், ஓரினச் சேர்க்கையோ அல்லது மாற்றினச் சேர்க்கயோ, கட்டாயத்தின் பேரில் எது நடந்தாலும் அது தண்டனைகுரிய குற்றமே.//

ரிப்பீட்டே .................

கார்த்திக் said...

//இது எனக்கு புரியாத சப்ஜெக்ட்.

இருந்தாலும், ஓரினச் சேர்க்கையோ அல்லது மாற்றினச் சேர்க்கயோ, கட்டாயத்தின் பேரில் எது நடந்தாலும் அது தண்டனைகுரிய குற்றமே.//

ரிப்பீட்டே .................

வினோத் கெளதம் said...

மிக சரியாக சொன்னிர்கள்.

ஓரின சேர்கையாளர்கள் மற்றவர்களை வற்புறுத்துவதை ஏற்று கொள்ளவே முடியாது.அப்படி செய்தால்
அவர்களை மற்றவர்கள் மிருகமாக தான் கருதுவார்கள்.

எனக்கு கூட ஒரு மூறை இதே போல் அனுபவம் பேருந்தில் ஏற்பட்டு உள்ளது.
அவர்கள் மேல் பரிதாபத்தை உண்டாகுவதை விட இது போன்ற சம்பவங்கள்
அவர்களை ஒரு கிழ் தரமானவர்களாக தான் காட்ட கூடும்.

ஆனால் கண்டிப்பாக அவர்களக்கு ஒரு அமைப்பு தேவை, அதற்கு மருத்துவ ஆலோசனையும் வழங்க வேண்டும்.

அவர்களூடைய வாழ்க்கை முறை மற்றவர்களை பாதிக்காத வகையில்,
குறிப்பாக மற்றவர்கள் எள்ளி நகையாடும் வகையில் இருக்காமல் இருப்பது பெரும்பாலும் அவர்கள் கையில் தான் இருக்கிறது.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ,சென்னையில் பெண் ஒரினச்சேர்க்கையாளர்களுக்காக ஹெல்ப் லைன் ஒன்று தொடங்கப் பட்டதாக அறிந்தேன்.ஒரே நாளில் 50 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வருகின்றன என்கிறார்கள்.அந்த நபர்களுக்கு எந்த விதத்தில் உதவுகிறார்கள் என்று தெரியவில்லை.சமூகத்தால் அங்கீகரிக்கப் படாமல், தற்கொலை என்ற தவறான முடிவுக்கு வருபவர்களைத் தடுக்கத்தான் இந்த அமைப்பு என்று மட்டும் சொன்னார்கள் .அதை விட அவர்களை இயற்கைக்கு மாறான இந்த ஈர்ப்பில் இருந்து விடுபட மனோதத்துவ ரீதியான சிகிச்சைகள் அளிக்கலாம்.நீங்கள் சொல்வது போல புதிய துணைகளை தேடிக் கொள்ள வாய்ப்பாக அது அமையாமல் இருந்தால் சரி.என்னைப் பொறுத்த வரையில் இதை மன நோய் என்றுதான் சொல்வேன்.மற்ற நாடுகளில் இதை அங்கீகரித்து விட்டதை போன்ற நிலைமை இங்கு வராது இருந்தால் சரி.

Maximum India said...

நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள்.

இயற்கைக்கு மாறான செயல்களை செயற்கையாக செய்பவர்களை ஆதரிப்பது இப்போதெல்லாம் ஒரு பாஷனாகி விட்டது.

ஓரின சேர்க்கையாளர்களில் பலர் கட்டாயத்தின் பேரிலேதான் இது போன்ற செயல்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்கள் என்பதும் இவர்களாலேயே எய்ட்ஸ் போன்ற கொடுமையான வியாதிகள் பரவுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கவை. எனவே, இப்படிப் பட்டவர்களை திருத்துவது அல்லது குணப் படுத்துவதுதான் நாகரிக மனிதர்களின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர இது போன்ற செயல்களை ஊக்கப் படுத்தக் கூடாது என்பதுதான் என் கருத்து.

நன்றி

M.Rishan Shareef said...

நல்லதொரு பதிவு வால் பையன் !

Tech Shankar said...

good post from Arun The Hero.

கிரி said...

//பேச தயங்குவதை பேசுபவன்.//

:-)

Mangai said...

Yes. They can be given councelling and be treated phycologically so that they get into normal life rather than recognising and making more people to get into it.

கிஷோர் said...

எனக்கு ஒன்று தான் புரியவில்லை.

நீங்கள் ஓரினச்சேர்க்கையாளர்களின் வன்புணர்ச்சி மற்றும் அவர்களால் ஏற்படும் தொல்லை பற்றி கூறி இருக்கிறீர்கள்.

ஏன் இது போல் ஆண்களால் பெண்களுக்கும் பெண்களால் ஆண்களுக்கும் நடந்து கண்டதில்லையா?

ஏன் ஓரினச்சேர்க்கையாளர்களை வில்லனாகவே கருதுகிறீர்கள்?

//ஓரின சேர்க்கையாளர்களின் உணர்வு இயற்கை என்றால், பின்பு விலங்குகளுடன் உறவு கொள்வதையும் இயற்கை என்று ஏற்று கொள்வீர்களா? //

உங்கள் மனதில் இருந்து வரும் வாதமும் உண்மையும் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை நண்பரே :)

நட்புடன் ஜமால் said...

\\கட்டாயத்தின் பேரில் எது நடந்தாலும் \\

மிகச்சரி

தண்டனைக்குறியதே

இராகவன் நைஜிரியா said...

// பாலியல் கல்வி பள்ளிகளிளேயே தேவை என்பதால் இதற்கு 18+ போடவில்லை. //

வெரி குட்... ஆரம்பமே கலக்கல்.

இராகவன் நைஜிரியா said...

// நன்றாக படித்து கொண்டிருந்த அந்த மாணவனின் எதிர்காலத்துக்கு ஓரினசேர்க்கை ஆதரவாளர்கள் என்ன நஷ்டஈடு கொடுக்க போகிறீர்கள். //

ராகிங் என்ற பெயரில் செய்யப்படும் வன்முறைகளில் இதுவும் ஒன்று...

இராகவன் நைஜிரியா said...

// அதே நேரம் அப்பாவி சிறுவர்கள் அவர்கள் பாதிக்கப்படுகிறார்களே //

மனநிலை பிறழ்ந்து போகின்றார்கள்..

அதற்கு இந்த சமுதாயம் என்ன செய்யப் போகின்றது.

குப்பன்.யாஹூ said...

மிக அருமையான பயனுள்ள பதிசு, நன்றிகள் வால்பய்யன்.

நாம் கூட நம் குழந்தைகளிடம் உரிய வயதில், ஓரினச்சேர்க்கை அதனால் ஏற்படும் நன்மை தீமை போன்றவற்றை தெளிவாக சொல்லி கொடுக்க வேண்டும்.

நம் தம்பி தங்கைகளிடம் கூட இது பற்றி உரிய வயதில் தெளிவாக பேசலாம்.

வீடுகளில் இருந்து மாற்றத்தை ஆரம்பிப்போம்.


குப்பன்_யாஹூ

கிஷோர் said...

//ஓரிரு ஓரின சேர்க்கையாளர்கள் பல ஓரின சேர்க்கையாளைகளை உருவாக்குகிறார்கள், அதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும்.//

இந்த விஷயம் மிக முக்கியமானது. கட்டாயம் வெளிக்கொணரவேண்டியது

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

அதாவது, தனிமையில் உழல்பவர்கள், பெண்கள் கிடைக்காதவர்கள் தாமாக, ஆண்களுடன் உறவு எப்படி இருக்கும் என்ற ஒரு க்யூரியாசிட்டியில் முயற்சிக்கும்போது புதிய ஓரினச்சேர்க்கையாளாராகவும் மாறுவாவதாக படித்தேன்.

Kumky said...

Maximum India said...
நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள்.

இயற்கைக்கு மாறான செயல்களை செயற்கையாக செய்பவர்களை ஆதரிப்பது இப்போதெல்லாம் ஒரு பாஷனாகி விட்டது.

ஓரின சேர்க்கையாளர்களில் பலர் கட்டாயத்தின் பேரிலேதான் இது போன்ற செயல்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்கள் என்பதும் இவர்களாலேயே எய்ட்ஸ் போன்ற கொடுமையான வியாதிகள் பரவுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கவை. எனவே, இப்படிப் பட்டவர்களை திருத்துவது அல்லது குணப் படுத்துவதுதான் நாகரிக மனிதர்களின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர இது போன்ற செயல்களை ஊக்கப் படுத்தக் கூடாது என்பதுதான் என் கருத்து.

சொல்ல நினைத்ததை சொல்லிவிட்டதால் அவருக்கு நன்றியும்...உங்களுக்கு ஒரு மங்களூரும்.(ரிப்பீட்டுக்கு ஆல்டர்னேட் மங்களூர்தானே)

அ.மு.செய்யது said...

என்னைப் பொறுத்த வரை இந்த ஓரினச்சேர்க்கை ஒரு இயற்கைக்கு முரணான‌
ஒரு செயலாகவே நினைக்கிறேன்.

இந்த பதிவின் மூலம் பல அரிய கருத்துகளை அறிந்து கொண்டேன்.

கருத்துகளை எவ்வித தயக்கமின்றி வெளியிட்டமைக்கு நன்றி வால்.

வெண்பூ said...

வால்,

உங்கள் சில கருத்துகள் சரி என்றாலும் முழுவதுமாக ஒத்துப்போக முடியவில்லை.

சொல்லப்போனால் நீங்கள் காட்டும் எல்லா உதாரணங்களுக்கும் இணையான உதாரணங்களை ஆண்‍, பெண் உறவிலும் காட்ட முடியும், வண்புணர்வும், பெண்களிடம் "வர்றியா" என்று கேட்பதும், காசுக்காக படுப்பது என்று.. அதற்காக ஆண்,பெண் உறவே வேண்டாம் என்று சொல்வீர்களா?

அப்படிப் பார்த்தால் சுய இன்பம் கூடத்தான் தவறு. அது இயற்கைக்கு மாறானது இல்லையா வால்?

ஒருவருக்கு அசைவம் பிடிக்கும், ஒருவருக்கு சைவம். ஒருவருக்கு விஸ்கி, ஒருவருக்கு வோட்கா, மற்றொருவருக்கு டக்கிலா. ஒருவருக்கு பயணம் பிடிக்கும், மற்றவருக்கு வீட்டிற்குள் இருப்பது மட்டும்.. அதே போல் இதையும் ஏன் பார்க்கக்கூடாது?

அதே போல்தான் இதுவும்.. குடிக்காத நண்பனின் வாயைப் பிளந்து பியரை ஊற்றியவர்களைப் பற்றி நீங்கள் கேள்விபட்டதில்லையா? தூக்கத்தில் இருக்கும் ஒருவர் வாயில் சிகரெட்டை வைத்து அவர் இருமலுடன் திடுக்கிட்டு எழுவதை ரசிக்கும் ராகிங்கை பார்த்ததில்லையா? அதே போல்தான் இதுவும்.. அதற்காக யாருமே சிகரெட் குடிக்கக் கூடாது, மது அருந்தக்கூடாது என்று சொல்வது போலதான் இதுவும்..

என்னைப் பொறுத்தவரை மது, உணவு, சிகரெட்டில் இருப்பது போல இதுவும் ஒரு வெரைட்டி அவ்வளவே. அதை அவனவன் சூழ்நிலையும், அவனுக்கு கிடைக்கும் / கிடைக்காத வாய்ப்புகளுமே தீர்மானிக்கின்றன.
யாரோ ஒருவனின் பழக்கம் (அது மதுவோ, சிகரெட்டோ, ஓரினச் சேர்க்கையோ) என்னை பாதிக்காத வரை எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

இதை மனநோயாக பார்க்கச் சொல்வதும் ஒரு விதத் திணிப்புதான்.

அந்தப்புரங்களில் நூற்றுக்கும் மேல் அரசிகள். அரச‌ன் ஒருவனே அத்தனை பெண்களின் இச்சைகளையும் தீர்த்திருப்பானா? வெளியே இருந்தும் எந்த ஆணும் வர முடியாத சூழலில் அந்த பெண்கள் என்ன செய்திருப்பார்கள் வால்.. எனக்கென்னவோ இதை சூழ்நிலைதான் தீர்மானிக்குமே தவிர நானும் நீங்களும் அல்ல..

Anonymous said...

//அவனது பெற்றோர்கள் இருவரும் அரசு வேலைக்கு செல்பவர்கள், இன்னோரு மகள் உறவினர் வீட்டில் இருந்து படிக்கிறாலாம்.//

அருமையான நேர்த்தியான ஆழமான நீளமான பதிவு. வாழ்த்துக்கள்.
பி.கு.:வாழ்த்துக்கள் வால்!! பிழையே இல்லை.

வீரார்பட்டி வேந்தன்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

சொல்லரசன் said...

நன்றி நண்பா.
கலாச்சார சீரழிவு என்கிற தலைப்பில்
பிப் 9 அன்று எனது பதிவிற்கு,கருத்து கூறும் பதிவாக திரு.மாதவராஜ் அவர்களின்
ஓரினச்சேர்க்கைகளும் ஒற்றை வார்த்தை நிராகரிப்புகளும் என்ற பதிவில் அவர்களின் கோரிக்கையை எதிர்த்தற்கு என்னை வசை பாடிய கூட்டத்திற்கு சரியான சவுக்கடி இது.
இந்த சேர்கையால் வாழ்க்கையில் சீரழிந்தவர்களை நேரில் பார்த்தவன். எனவே 377 பிரிவின் தடையை ரத்து செய்தால்தான்.இவர்களின் தொல்லையில் இருந்து அப்பாவிகள் காப்பற்றபடுவார்கள்

சொல்லரசன் said...

இந்திய தண்டனைச் சட்டம். பிரிவு : 377


இயற்கை முறைக்கு மாறாக, ஆடவன் அல்லது பெண் எவருடனேனும், விலங்கு எதனுடனேனும் தன்னிச்சையாக காமவிகார உடலுறவு கொள்கிற எவரொருவரும் ஆயுள் சிறை தண்டனை; அல்லது பத்து ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை ஆகிய இவற்றில் இரண்டில் ஒன்றை தண்டனையாக விதிக்க வேண்டும். மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்"

பாபு said...

இப்படிக்கு
பேச தயங்குவதை பேசுபவன்.

ஒத்துக்குறோம்

Bharath said...

”இவன் சூத்திரனா.. அடிச்சி விரட்டு..”
”இவன் பாப்பானா.. ரொம்ப கெட்டவன்..” அப்படி என்பது மாதிரி இருக்கு..

வன்முறையையும், ஹோமோசெக்சுவாலிடியையும் குழப்பிக்கிட்டீங்கன்னு நினைக்கிறேன்.. நம்மால் புரிந்துகொள்ள முடியாததெல்லாம் தவறுன்னு முடிவுசெய்யக்கூடாது.. அவர்களின் அங்கீகாரம் காலத்தின் கட்டாயம்..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நீங்கள் ஒரு பக்கச் சார்பான உதாரணத்தை மட்டுமே கொடுத்திருக்கிறீர்கள். கட்டாயப்படுத்துவதை நிச்சயம் எதிர்க்கிறேன், ஆனால் எம்மாதிரியான உறவுகளில் அது அதிகம் இருக்கிறது - ஓரினச் சேர்க்கையை விட இருபால் உறவுகளிலேயே அது அதிகமென்பதை ஒப்புக் கொள்வீர்கள்தானே...

இயற்கைக்கு மாறானது என நீங்கள் சொல்வதுடன் எனக்கு உடன்பாடில்லை. வெண்பூ சொல்லியதையும் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

எய்ட்ஸ் பூச்சாண்டியை எவ்வளவு விஷயங்களுக்குத்தான் எடுத்து விடுவார்களோ தெரியவில்லை :( எய்ட்ஸை எதிர்ப்பதாகச் சொன்னால் அதற்கு அமெரிக்காவைத்தான் எதிர்க்க வேண்டும்!

என்னுடைய வேண்டுகோள் : ஒரு பிரச்சனையை அணுகும்போது நீதிபதி ஸ்தானத்தில் உங்களை வைத்துக் கொள்ளாதீர்கள். உரையாடலைக் கொன்றுவிடும் அது.

கோவி.கண்ணன் said...

ஜ்யோராம் சுந்தர், வெண்பூ மற்றும் கிஷோர் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.

ஓரினப் புணர்ச்சி செயல் தவறு என்ற பெரும்பாண்மை சமூகப் பார்வைக்கு எதிராக அவர்கள் அது தவறல்ல எங்களையும் பிறரைப் போலவே பாருங்கள் என்கிறார்கள். ஒருவரது உடன்பிறப்பு அப்படி என்றால் அவரை கொன்றுவிட முடியுமா ?

ஆனால் இத்தகைய உறவுகளுக்கு திருமண அங்கீகாரம் கேட்பதை நான் எதிர்க்கிறேன். திருமண உறவுகள் குடும்பம் சார்ந்தது, அதைக் கொச்சை படுத்துவது போல் ஓரின திருமணங்கள் சகித்துக் கொள்வது கடினம் தான்.

ஓரின இச்சையாளர்கள் மூலம் உயிர்கொல்லி நோய் மிகுதியாக பரவும் என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது மதவாதிகளின் வாதம் ஏற்புடையது அல்ல. பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் மட்டுமே பரவும் அது இருபால் புணர்சியாளர்களுக்கும் பொருந்தும்.

அதே போல் இயற்கைக்கு மாறானது என்று சொல்வதும் தவறென்றே படுகிறது. இருபால் புணர்சியிலும் 'இலக்கு' இல்லாத புணர்ச்சிகள் உண்டு, அதையெல்லாம் இயற்கை என்று சொல்லமுடியாது.

பால் உணர்வு, அதனை அடையும் வழி இதெல்லாம் சேர்ந்து செயல்படும் அந்த இருவரின் மன நிலையை ஏற்பை பொருத்தது. ஏற்பில்லாத எந்த வகை புணர்ச்சி என்றாலும் அது வண்புணர்வே.

முடிவாக,
இந்தியர்கள் இந்த ஓரின உறவுகளை ஏற்கும் பண்பாட்டில் வளரவில்லை எனவே ஓரின சேர்க்கையாளர்கள் உடனடியாக அங்கீகாரம் எதிர்ப்பார்பதும், நொந்து கொள்வதும் தேவையற்றது. சமூகமாற்றம் என்பது ஒரே நாளில் ஏற்பட்டுவிடாது. முதலில் தனது வீட்டில் உள்ளவர்களை சமாதானம் செய்தால் பிறகு சமூகத்தின் அங்கீகாரம் கூட தேவையற்றதாகிவிடும்.

வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல முடியாத ஒன்றை சமுகத்திடம் சொல்லி தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது வீன் என்றே நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் said...

ஒன்றே ஒன்று... ஆண் ஓரின சேர்கையாளர்களால் குறிப்பாக பெண் சமூகத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது. அவர்களுக்கு இடையே ஒரு பெண் நிம்மதியாக நடமாடமுடியும். அவர்களுடம் எந்த சேதாரமும் இன்றி படுத்துறங்க முடியும்.

:)

Unknown said...

//என்றாவது ஓரின சேர்க்கையாளர்கள் விருப்பமில்லாதவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம் என உத்திரவாதம் அளித்திருகிறார்களா? எத்தனை பேருந்துகளில், எத்தனை சினிமா அரங்குகளில் உடன் பிறந்த சகோதரனோடோ, பெற்ற தந்தையினோடோ செல்லும் போது சங்கடபட வேண்டியிருக்கிறது.//

ஓரினசேர்க்கைக்கு அங்கீகாரம் கொடுத்தால் அவர்கள் ஏன் அதன்பின் பிறரை தொந்தரவு செய்ய போகிறார்கள்?ஓரினசேர்க்கைக்கு அங்கீகாரம் கொடுக்கும் எந்த நாட்டிலும் இம்மாதிரி நடப்பதில்லையே ஏன்?

ஒரு உதாராணத்துக்கு சொல்கிறேன். ஆண்-பெண் உடலுறவை/கல்யாணத்தை தடை செய்தால் அதன்பின் சராசரி ஆண்-பெண் இதுபோல் தானே பொது இடங்களில் நடந்துகொள்வார்கள்?

செக்ஸ் என்பது ஒரு மனிதனின் அடிப்படை தேவை.அதை மறுக்கும்போது இம்மாதிரி தான் ஆகும்.ஓட்டலில் ரூம் கொடுக்க மறுப்பதால் பார்க்குகளை காதலர்கள் பள்ளியறையாக்குவது மாதிரிதான் இதுவும்.

Unknown said...

//ஓரிரு ஓரின சேர்க்கையாளர்கள் பல ஓரின சேர்க்கையாளைகளை உருவாக்குகிறார்கள், அதை முதலில் தடுத்து நிறுத்த வேண்டும்.
ஓரின சேர்க்கையாளர்கள் சட்ட ரீதியாக தண்டிக்கப்படுவது தவறாகவே இருக்கலாம், அதே நேரம் அப்பாவி சிறுவர்கள் அவர்கள் பாதிக்கப்படுகிறார்களே அதை என்ன சொல்வது?//

தடுத்து நிறுத்தவேண்டுமெனில் சமூகத்தில் செக்ஸ் குறித்து இருக்கும் மனத்தடைகள் அகலவேண்டும்.ஜெயிலில் 25 வருடம் ஒருவனை அடைத்து வைத்து, மனைவியை பார்க்காமல் வைத்திருப்பதை நிறுத்த வேண்டும்.முதிர்கன்னி,முதிர்கன்னன்களை உருவாக்குவதை நிறுத்தவேண்டும்.இதை செய்தால் புது ஓசேக்கள் உருவாவது மட்டுப்படும்.

ஓரினசேர்க்கைக்கு அங்கீகாரம் வழங்கி,திருமனம் செய்யும் உரிமையை வழங்கினால் புது ஓரினசேர்க்கையாலர்கள் உருவாக மாட்டார்கள்.ஓரினசேர்க்கையாளன் என்று தெரிந்தும் அவனை திட்டி,மிரட்டி ஏதோ ஒரு பெண்ணுக்கு கட்டி வைத்தால் அவன் வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் திருட்டுதனமாக இன்னொருவரை தன் வழிக்கு இழுக்கத்தான் நினைப்பான்.

சிறுமிகளை பலாத்காரம் செய்யும் ஆண்கள் இருப்பதுபோல் ஓசேக்களிலும் இருக்கிறார்கள்.பலாத்காரம் கட்டாயம் தண்டிக்கப்படவேண்டிய குற்றம்.ஆனால் ஓரினசேர்க்கை குற்றம் அல்ல.

அபி அப்பா said...

//ஒன்றே ஒன்று... ஆண் ஓரின சேர்கையாளர்களால் குறிப்பாக பெண் சமூகத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது. அவர்களுக்கு இடையே ஒரு பெண் நிம்மதியாக நடமாடமுடியும். அவர்களுடம் எந்த சேதாரமும் இன்றி படுத்துறங்க முடியும்.//

எதுக்கு சும்மா போற பொண்ணு அங்க வந்து படுக்கனும்??

கோவி.கண்ணன் said...

//அபி அப்பா said...

//ஒன்றே ஒன்று... ஆண் ஓரின சேர்கையாளர்களால் குறிப்பாக பெண் சமூகத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது. அவர்களுக்கு இடையே ஒரு பெண் நிம்மதியாக நடமாடமுடியும். அவர்களுடம் எந்த சேதாரமும் இன்றி படுத்துறங்க முடியும்.//

எதுக்கு சும்மா போற பொண்ணு அங்க வந்து படுக்கனும்??
//

சும்மா போற பொண்ணை சொல்லவில்லைங்க, ஒரு பெண் ஆண்கள் பலர் இருக்கும் ரயிலில் இரவில் தனியாக பயணிக்க முடியாத நிலைதானே இருக்கிறது.

எம்.எம்.அப்துல்லா said...

ஒன்லி அட்டெண்டண்ஸ் :)

Unknown said...

கல்யாணம் ஆனவனுக்கு ஆயிரம் கவலைகள், கல்யாணம் ஆகாதவனுக்கு ஒரே கவலை - துணை இல்லை என்பது தானே..

Anonymous said...

ஒருவ‌ர் ஓரின‌சேர்க்கையாள‌ராக‌ இருப்ப‌து அவ‌ர‌து த‌னிப்ப‌ட்ட‌ விருப்பு வெறுப்பு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌து.. ஆனால் அது ஏனையோரை ம‌ன‌ரீதியாக‌வோ செய‌ல்ரீதியாக‌வோ பாதிக்குமானால் க‌டுமையான‌ த‌ண்ட‌னைக்குரிய‌தே.. இந்த‌ விதி எதிரின‌சேர்க்கையாள‌ர்க‌ளுக்கும் பொருந்தும்..

அப்துல்மாலிக் said...

தேவையான பதிவு நண்பரே
ஓரினச்சேர்க்கை எந்த வகுப்பினரும் ஒத்துக்கொள்ளாத சமுதாயத்திற்கு முரணான ஒன்று, இதை ஆதரிப்பவர்கள் முறையான கவுன்சிலிங் கொடுக்கட்டும், அதன் மூலம் படிப்படியாக அவர்களின் தவறை புரியவைக்கட்டும் அதை விட்டுவிட்டு புதிய ஜோடி தேடுகிறார்கள்.

அது ஒரு கனா காலத்தில் கூட பாலுமகேந்திரா அழகாக சொல்லிருப்பார், ஒருதருடைய வாழ்க்கைப்பாதை எப்படியெல்லாம் மாறுகிறதென்று

இதை கட்டாயம் அரசு அங்கீகரிக்க கூடாது

வாழ்த்துக்கள் வால், தைரியமாக சொன்னதுக்கு

வால்பையன் said...

தேனியார் said...
ஆ! இதழ்கள் said...
Anonymous said...
கார்த்திக் said...
vinoth gowtham said...
ஸ்ரீதர் said.
Maximum India said...
எம்.ரிஷான் ஷெரீப் said.
தமிழ்நெஞ்சம் said...
கிரி said...
Mangai said.
கிஷோர் said.
நட்புடன் ஜமால் said
இராகவன் நைஜிரியா said.
குப்பன்_யாஹூ said...
கும்க்கி said...
அ.மு.செய்யது said...
வெண்பூ said..
சொல்லரசன் said...
பாபு said
Bharath said...
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
கோவி.கண்ணன் said...
செல்வன் said.
அபி அப்பா said...
எம்.எம்.அப்துல்லா said...
ஆகாயமனிதன்.. said...


கருத்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

மாற்று கருத்துகளுடன் விளக்கங்கள் அளித்த நண்பர்களுக்கு அடுத்த பதிவில் எனது கருத்துகளை கூறியிருக்கிறேன்

ஷாஜி said...

/பேச தயங்குவதை பேசுபவன்.//

நன்னா இருக்கு....

Sabarinathan Arthanari said...

மிகவும் சிந்திக்க வைத்த பதிவு,

பகிர்ந்தமைக்கு நன்றி!

Anonymous said...

திரு. வால்பையன் அவர்களே, திரு மாதவராஜின் blog ல் பல்வேறு கோணங்களில் விவாதிக்கப்பட்ட இந்த விடயத்தின் மிக முக்கியம்மான கோணத்தை காட்டி உள்ளிர்கள். சிலர் இதை அங்கிகரிக்கலாம் ஆனால் திருமணம் செய்வதெல்லாம் டூ மச் என்பதற்கு சிலர் திருமணம் செய்ய அனுமதித்தால் மேலைநாடுகளில் உள்ளது போல் மற்றவர்களுக்கு தொல்லை தரமாட்டார்கள் என்று ஏதோ மேலைநாடுகளுக்கு வந்து தீவிர ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை சொல்வது போல் தீர்கமாக சொல்கின்றனர். நான் சில காலம் சென்னையில் counsellor ஆகா வேலை செய்து தற்போது கனடாவில் பணிபுரிகிறேன். இது போன்ற பல்வேறு மக்களை தினமும் சந்தித்துள்ளேன். நான் இவர்களின் திருமணத்தை எதிர்பவன் அல்ல ஆனால் இவர்கள் திருமணம் என்பதே ஒரு விளம்பரத்திற்காகவே நடப்பதாக உள்ளது. இதில் அனேகமாக எல்லாரும் தன் இனையைவிட்டு பலரோடு உறவு கொள்ளவது சகஜமாக உள்ளது. இதற்கு இவர்களுக்குள் அழமான குடும்ப அமைப்பு இல்லாததே அடிப்படை காரணம். ஏன் இது போல் ஆண் பெண் உறவிலும் கூட நடகிறதே என்று கேட்கலாம் ஆனால் அங்கே இயற்கையின் விந்தையில் ஒரு புது உயிர் உருவாவதினால் அந்த உறவில் கட்டபடுகின்றனர், அல்லது அப்படியே கணவன் மனைவி பிரிந்தாலும் தன் குழந்தைக்காகவே வாழும் தாய் அல்லது தந்தைகள் நம் நாட்டிலும், அல்லது மேலை நாட்டில் வேறு கணவனுடன் அல்லது மனைவியுடன் வாழும்போதும் தன் குழந்தையை வளர்ப்பதை காண முடிகிறது இது குடும்ப அமைப்பின் வேறு பரிணாமம். இங்கே நான் கூற வருவது bondage and responsibilities in the regular family structure. இந்த அடிப்படை மரபியல் பிணைப்பு மற்றும் பொறுப்பு அறவே இவர்களின் திருமணத்தில் இல்லாததால் எதை, எங்கு யாரிடம் வேண்டுமானாலும் செய்துகொல்லாம் என்ற பொறுப்பற்ற தன்மை பல விபரீதங்களுக்கு மூல காரணமாக உள்ளது. ஆகவே இவர்களின் திருமணம் அல்லது அங்கிகாரம் ஒரு புதிய positive கலாச்சாரம் அல்லது குடும்ப அமைப்பை ஏற்படுத்தும் என்ற 70's வாதம், நம்பிக்கை எல்லாம் பொய்யாக்கபடுள்ளது -Nithy Toronto

அண்ணன் வணங்காமுடி said...

இந்த பதிவு யூத் விகடன்
குட் ப்ளாக்கில் இடம் பெற்றுள்ளது.

வாழ்த்துக்கள்...

Unknown said...

வால் பையா....

ஓரின சேர்கையாளர்கள் மேல் உங்களுக்கு அப்படியென்ன கோபம், வாய் புணர்ச்சி பண்ண வைத்த சம்பவம் ஒரு வன்முறை சம்பவம்....!! வாய் புணர்ச்சி செய்ய வைத்த சீனியர் மாணவனை வன்முறையாளன் என்றே கருத வேண்டுமே அல்லாமல் ஓரின முத்திரையை ஏன் அவன் மீது திணித்து இருக்குறீர்கள்.....ஆண்களுடன் எல்லாம் உறவு கொள்ளும் எல்லா ஆண்களும் ஓரின உறவாளர்கள் அல்ல என்பது தாங்கள் அறியாததா....ஓரின நாட்டம் என்பது தன் உறவின் மீதே ஈர்ப்பு வருவது....பிற பால் உறவின் மீது சிறிதும் நாட்டம் இல்லாத தன்மை!! ஓரின உறவென்பது மன பிறழல் அல்ல என்பது மருத்துவ உலகமும்...உலக சுகாதார நிறுவனமும் ஏற்று கொண்ட உண்மை....டில்லி உயர் நீதி மன்றம் தன் உத்தரவை பிறப்பிக்கும் முன் மருத்துவர்கள், உளவியலாளர்கள், சமுக ஆர்வலர்கள் ஆகிய பல தரப்பில் இருந்தும் கருத்து கேட்ட பின்பே அவுத்தரவை பிறப்பித்தது உங்களுக்குதெரியுமா? உலக சுகாதார நிறுவனமும் இந்திய தலைநகர் நீதிமன்றமும் ஏற்று கொண்ட ஒரு உண்மையை உங்கள் மனம் ஏற்காமல் முரண்டு பிடிப்பதால் தான்...உங்கள் மன வன்முறையை இவ்வாறு நீங்கள் ஓரின உறவாளர்கள் மீது ஏவி இருகிறீர்கள்...இந்திய அளவிலும் உலக அளவிலும் எய்ட்ஸ் பரவும் முறையை ஆராய்ந்தவர்கள் ஆண் பெண் பாதுகாப்பற்ற சேர்கையால் 60% விகிதமும் முறையாக சுத்திகரிகபடாத ஊசி மற்றும் ரத்த மாற்றுகளினாலும் 30% சதவிகிதமும், ஓரின சேர்கை முறையால் 10% விகிதமும் பரவுவதாக தெரிவித்து உள்ளனர்! ஓரின சேர்கை முறையை விட....ஆண் பெண் சேர்கை வழியாக தான் எய்ட்ஸ் அதிக அளவில் பரவுகிறது....அதனால் ஆண் பெண் உறவே வேண்டாம் என்று வாதம் செய்தால் அது வடிகட்டின முட்டாள் தனம் அல்லவா....! உங்களுக்கு ஒரு உறவு முறை பிடிக்கவில்லை என்றால் அதை தவறு என்று வாதாடுவீர்களா...? ஒருவன் தவறு செய்தால் அதை தான் எல்லா ஓரின உறவாலர்களும் தவறு செய்வார்கள் என்று நீங்கள் சொல்ல்வது உங்களுக்கு மன முதிர்ச்சி இல்லாததையே காட்டுகிறது....ஏவாள் தவறு செய்துவிட்டாள் என்பதால் ஓட்டுமொத்த பெண் இனமும் தவறு செய்துவிட்டது என்பது எவ்விதம் சரி என்பது எனக்கு விளங்கவில்லை ...! தனிப்பட்ட தவறுக்கு ஓட்டுமொத்த சமூகத்தை குறை கூறினால் அது எத்தகைய எதிர்பலைகளை ஏற்படுத்தும் என்பது தமிழ் நாடறிந்த செய்தி!! :-) ஓரின உறவாலர்களில் பொறுபற்றவர்களும் வக்கிரம் பிடித்தவர்களும் இருகிறார்கள் என்பது உண்மைதான்....அத்தகையவர்கள் ஓரின உறவுகளில் மட்டுமல்ல எல்லா வித உறவு முறைகளை கடைபிடிப்பவர்களிடயேயும் இருக்கிறாகள் என்பதை அறிக!!! ஓரின வன்புணர்ச்சிக்கு வரிந்து கட்டி கொண்டு எழுத்தும் நீங்கள்...இருபால் வன்புணர்ச்சி நடந்தால் அதையும் எதிர்கிறீர்கள் தானே...அதனால் இருபால் புணர்ச்சியும் வேண்டாம்...சரிதானே :-) !!! சந்ததியை விருத்தி செய்யவே செக்ஸ் என்பது பாமர மக்களின் கூற்று!! அன்பை வெளிபடுத்தும் ஒரு வழியே செக்ஸ் என்பது அறிவாளிகளின் கூற்று...நீங்கள் பாமரனா....அறிவாளியா?

Unknown said...

வால் பையா....

ஓரின சேர்கையாளர்கள் மேல் உங்களுக்கு அப்படியென்ன கோபம், வாய் புணர்ச்சி பண்ண வைத்த சம்பவம் ஒரு வன்முறை சம்பவம்....!! வாய் புணர்ச்சி செய்ய வைத்த சீனியர் மாணவனை வன்முறையாளன் என்றே கருத வேண்டுமே அல்லாமல் ஓரின முத்திரையை ஏன் அவன் மீது திணித்து இருக்குறீர்கள்.....ஆண்களுடன் எல்லாம் உறவு கொள்ளும் எல்லா ஆண்களும் ஓரின உறவாளர்கள் அல்ல என்பது தாங்கள் அறியாததா....ஓரின நாட்டம் என்பது தன் உறவின் மீதே ஈர்ப்பு வருவது....பிற பால் உறவின் மீது சிறிதும் நாட்டம் இல்லாத தன்மை!! ஓரின உறவென்பது மன பிறழல் அல்ல என்பது மருத்துவ உலகமும்...உலக சுகாதார நிறுவனமும் ஏற்று கொண்ட உண்மை....டில்லி உயர் நீதி மன்றம் தன் உத்தரவை பிறப்பிக்கும் முன் மருத்துவர்கள், உளவியலாளர்கள், சமுக ஆர்வலர்கள் ஆகிய பல தரப்பில் இருந்தும் கருத்து கேட்ட பின்பே அவுத்தரவை பிறப்பித்தது உங்களுக்குதெரியுமா? உலக சுகாதார நிறுவனமும் இந்திய தலைநகர் நீதிமன்றமும் ஏற்று கொண்ட ஒரு உண்மையை உங்கள் மனம் ஏற்காமல் முரண்டு பிடிப்பதால் தான்...உங்கள் மன வன்முறையை இவ்வாறு நீங்கள் ஓரின உறவாளர்கள் மீது ஏவி இருகிறீர்கள்...இந்திய அளவிலும் உலக அளவிலும் எய்ட்ஸ் பரவும் முறையை ஆராய்ந்தவர்கள் ஆண் பெண் பாதுகாப்பற்ற சேர்கையால் 60% விகிதமும் முறையாக சுத்திகரிகபடாத ஊசி மற்றும் ரத்த மாற்றுகளினாலும் 30% சதவிகிதமும், ஓரின சேர்கை முறையால் 10% விகிதமும் பரவுவதாக தெரிவித்து உள்ளனர்! ஓரின சேர்கை முறையை விட....ஆண் பெண் சேர்கை வழியாக தான் எய்ட்ஸ் அதிக அளவில் பரவுகிறது....அதனால் ஆண் பெண் உறவே வேண்டாம் என்று வாதம் செய்தால் அது வடிகட்டின முட்டாள் தனம் அல்லவா....! உங்களுக்கு ஒரு உறவு முறை பிடிக்கவில்லை என்றால் அதை தவறு என்று வாதாடுவீர்களா...? ஒருவன் தவறு செய்தால் அதை தான் எல்லா ஓரின உறவாலர்களும் தவறு செய்வார்கள் என்று நீங்கள் சொல்ல்வது உங்களுக்கு மன முதிர்ச்சி இல்லாததையே காட்டுகிறது....ஏவாள் தவறு செய்துவிட்டாள் என்பதால் ஓட்டுமொத்த பெண் இனமும் தவறு செய்துவிட்டது என்பது எவ்விதம் சரி என்பது எனக்கு விளங்கவில்லை ...! தனிப்பட்ட தவறுக்கு ஓட்டுமொத்த சமூகத்தை குறை கூறினால் அது எத்தகைய எதிர்பலைகளை ஏற்படுத்தும் என்பது தமிழ் நாடறிந்த செய்தி!! :-) ஓரின உறவாலர்களில் பொறுபற்றவர்களும் வக்கிரம் பிடித்தவர்களும் இருகிறார்கள் என்பது உண்மைதான்....அத்தகையவர்கள் ஓரின உறவுகளில் மட்டுமல்ல எல்லா வித உறவு முறைகளை கடைபிடிப்பவர்களிடயேயும் இருக்கிறாகள் என்பதை அறிக!!! ஓரின வன்புணர்ச்சிக்கு வரிந்து கட்டி கொண்டு எழுத்தும் நீங்கள்...இருபால் வன்புணர்ச்சி நடந்தால் அதையும் எதிர்கிறீர்கள் தானே...அதனால் இருபால் புணர்ச்சியும் வேண்டாம்...சரிதானே :-) !!! சந்ததியை விருத்தி செய்யவே செக்ஸ் என்பது பாமர மக்களின் கூற்று!! அன்பை வெளிபடுத்தும் ஒரு வழியே செக்ஸ் என்பது அறிவாளிகளின் கூற்று...நீங்கள் பாமரனா....அறிவாளியா?அப்பாவி சிறுவர்கள் பாதிகபடுகிறார்கள் என்று சொல்கிறீர்கள்....குழந்தை தொழில், இருபால் வன்புணர்ச்சி வழியாக தான் குழந்தைகள் அதிகம் பாதிக்க படுகிறார்களே அன்றே ஓரின சேர்கையால் பாதிக்கப்படும் குழந்தைகள் சொற்பமே....காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்படும் குழந்தை செக்ஸ் புகார்களில் சிறுமிகளே அதிகமே தவிர சிறுவர்கள் அல்ல....அதுவும் இன்றைய சிறுவர்கள் மீடியா மூலம் தான் அதிகமாக மிக மிக இளம் வயதிலேயே பாதிகப்படுகிரார்களே தவிர ஓரின உறவவாலர்களால் அல்ல ....சிறுவர்களை காக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறை உங்களுக்கு இருக்குமானால் உங்கள் எதிர்ப்புகளை இனைய தளங்களில் ஆபாச படம் போடுபவர்களையும், சினிமாக்களில் செக்ஸ் காட்சியையும், பள்ளி மாணவர்களின் மொபைல் போன்களில் ஆபாச படம் ஏற்றி தருபவர்களிடம், செக்ஸ் சீடி தயாரிக்கும் விற்கும் நபர்களிடமும் காட்டினால்...சிறுவர்களை காப்பாற்றியபுண்ணியம் கிடைக்கும்!!

Unknown said...

வால் பையா,

ஓரின உறவாளர்கள் மேல் உனக்கு ஏன் இந்த காழ்புணர்ச்சி...உலக சுகாதார நிறுவனமும் டில்லி உயர் நீதிமன்றமும் மருத்துவர்கள், உளவியலார்கள், சமூக ஆர்வலர்கள் ஆகிய அணைத்து தரப்பின் கருத்தை கேட்ட பின்பே ஓரின சேர்க்கை தொடர்பான தன் உத்தரவுகளை பிறப்பித்தது....! வாய் வழி புணர்ச்சியில் ஈடுபட வைத்தவன் வன்முறையாளன் அன்றி அவனுக்கு ஓரின சாயம் பூசி..ஓரின உறவாலர்களின் மேல் ஒரு வன்முறை ஆயுதத்தை உங்கள் எழுத்தின் மூலம் ஏவி விட்டு இருகிறீர்கள்...உங்களுக்கு ஒரு உறவு முறை பிடிக்க வில்லை என்றால் அந்த உறவே தவறென்று வாதாடுவது தலைகனம் அன்றி வேறென்ன? ஓரின சேர்க்கையை விட ஆண் பெண் சேர்கை மூலமும் மற்ற முறைகளினாலும் தான் செக்ஸ் அதிகமாக பரவுகிறது என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்று! ஒரு ஆணுடன் இன்னொரு ஆண் உறவு கொள்வதாலேயே அவன் ஓரின உறவாலன் ஆகி விடுவது இல்லை! ஓரின உறவென்பது தன் இனத்தின் மீதே காதல் கொள்வது...பிற இனத்தின் மீது சற்றும் ஈர்பிலாத தன்மை!! ஓரின உறவாலர்களால் சாதாரன ஆண் பாதிக்க படுகிறான் என்பதை விட....சார்தர்ண ஆண்கள் பெரும்பாலானவர்கள் (வால் பையன் போல ஒரு சிலரை தவிர :-) )தங்கள் இச்சைக்காக ஓரின உறவாலர்களை வாய் புணர்ச்சி செய்யவும்....அவர்கள் பின்புறம் புணரவும் பயன் படுத்தி கொள்கிறார்கள் என்பதே உண்மை! ஒரு ஆணிடம் முயலும் போது அந்த ஆண் எதிர்ப்பு சிக்னல்களை காட்டும் பொது பெரும்பாலான ஓரின விருப்பம் உள்ள ஆண் ஒதுங்கி போய் விடுவார்களே அன்றி உங்களை வலுகட்டாயமாக கற்பழிப்பது கிடையாது...இருபால் இன உறவில் எத்தனை கற்பழிப்புகள் புகாரும், சிறுமிகளின் குழந்தை செக்ஸ் புகார்களும் பதிவாகி இருக்கிறதென்று பாருங்கள்....சிறுவன் கற்பழிப்பு புகார்கள் காவல் நிலையங்களில் ஒன்று அல்லது ரெண்டு தான்...ஆனால் சிறுமிகள் கற்பழிப்பு ஓராயிரம் மேல் என்பதை நன்கறிக!!

Unknown said...

மிருகங்களிடம் புணர்வதையும் இயற்கை என்பீர்களா ? என்று கேட்கிறீர்கள்....பிராணிகளிடம் புணரும் மனிதர்கள் உலகில் இருகிறார்கள் ஆனால் அவர்கள் பெண்களிடம் புணரும் நீங்கள் சொல்வது போல் சாதாரண மனிதர்களே ....அன்றி மிருகங்களை புணர்பவர்களில் ஓரின சேர்கையாளர்கள் இல்லை என்கிறது ஒரு வெளி நாட்டு செக்ஸ் ஆய்வறிக்கை!!! பெண் சுகத்துக்கு அடிமையாகி அது கிடைக்காத நிலையில் அதீத காம உணர்ச்சியில் 'சார்தார்ண' மனிதர்கள் விலங்குகளிடமும் செக்ஸ் அனுபவிகிறார்கள்!

விதவைகள் வாழ்வதே தவறு என்றது இச்சமூகம்....பின்பு அவர்கள் சாக வேண்டாம் வெள்ளை சேலை அணிந்தால் போதும் என்றது...விதவைகள் மறுமணம் கடவுளுக்கே எதிரானது என்றது இச்சமூகம் (ஓரின உறவு தவறு...இயற்கைக்கு மாறானது என்று சிலர் கூப்பாடு போடுவதை போல ) ஆனால் இன்றைய சமூகம் விதவைகள் மறுமணத்தை முழு மனதோடு ஏற்கிறது....அதே போல் தான் நாளைய சமூகம் ஓரின உறவையும் ஏற்று கொள்ளும்....வால் பையா நீங்கள் ரொம்பவும் கவலை பட வேண்டாம்! வாரிசு விருத்திகே செக்ஸ் என்பது பாமர மக்களின் கூற்று...அன்பை வெளிபடுத்தும் அற்புத ஆயுதமே செக்ஸ் என்பது அறிவாளிகளின் கூற்று...அன்பை வெளிபடுத்த ஆண் என்ன? பெண் என்ன?

Unknown said...

அப்பாவி சிறுவர்கள் பாதிகபடுகிறார்கள் என்று சொல்கிறீர்கள்....குழந்தை தொழில், ஆண் பெண் வன்புணர்ச்சி வழியாக தான் குழந்தைகள் அதிகம் பாதிக்க படுகிறார்களே அன்றே ஓரின சேர்கையால் பாதிக்கப்படும் குழந்தைகள் சொற்பமே....காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்படும் குழந்தை செக்ஸ் புகார்களில் சிறுமிகளே அதிகமே தவிர சிறுவர்கள் அல்ல....அதுவும் இன்றைய சிறுவர்கள் மீடியா மூலம் தான் அதிகமாக மிக மிக இளம் வயதிலேயே பாதிகப்படுகிரார்களே தவிர ஓரின உறவவாலர்களால் அல்ல ....சிறுவர்களை காக்க வேண்டும் என்ற உண்மையான அக்கறை உங்களுக்கு இருக்குமானால் உங்கள் எதிர்ப்புகளை இனைய தளங்களில் ஆபாச படம் போடுபவர்களையும், சினிமாக்களில் செக்ஸ் காட்சியையும், பள்ளி மாணவர்களின் மொபைல் போன்களில் ஆபாச படம் ஏற்றி தருபவர்களிடம், செக்ஸ் சீடி தயாரிக்கும் விற்கும் நபர்களிடமும் காட்டினால்...சிறுவர்களை காப்பாற்றிய புண்ணியம் கிடைக்கும்!!

வால்பையன் said...

@ hard

ஓரினசேர்க்கை இயற்கைக்கு புறம்பானது என்றே சொல்லியிருக்கிறேன், விருப்பமில்லாதவர்களுக்கு தொந்தரவு செய்யாமல் என்னவோ செஞ்சுட்டு போறாங்க!

Anonymous said...

நல்ல கருத்து......

Unknown said...

ஓரிணச்சேர்க்கை என்பது மிகவும் கேடு இவர்கள் எல்லோரும் ஆண் என்று சொல்ல அருகதை அற்றவர்கள் ����������

Unknown said...

Kevalam

Alages said...

சரி தான் ஓரு ஓரினச்சேர்க்கையாளனா நானும் பயணங்களில் அனுபவ பட்டு இருக்கேன் ஆனா எல்லாரும் அப்படி இல்ல ஓரு சிலர் பன்ற தப்ப வச்சி எல்லாரையும் குற்றவாளி ஆக்க வேணாம்

Alages said...

சரி தான் ஓ நானும் பயணங்களில் அனுபவ பட்டு இருக்கேன் ஆனா எல்லாரும் அப்படி இல்ல ஓரு சிலர் பன்ற தப்ப வச்சி எல்லாரையும் குற்றவாளி ஆக்க வேணாம்

ஏன் மாற்று இனச்சேர்க்கையில் வன்புணர்வுகள் நடப்பது இல்லையா பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நாட்டுக்கே பெரும் சவாலாக இருக்கு அவர்களையும் ஓரினச்சேர்க்கையாளர்கள் தான் வன்புணர்வு பன்றாங்களா? விருப்பம் இல்லமா நடக்குற எந்த உறவும் தண்டனைக்கு உரிய குற்றம் தான்

!

Blog Widget by LinkWithin