எனது முந்தைய பதிவில் எங்கேயும் ஓரின சேர்க்கையாளர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றோ, முற்றிலும் ஒதுக்க வேண்டியவர்கள் என்றோ சொல்லவில்லை. அது அவர்களது விருப்பமாக இருக்கும் பட்சத்தில் அதை தடுக்க நான் நீதிபதி அல்ல, அதே நேரம் அவர்களை ஆதிரிப்பதற்கு முன்னாள் அவர்களின் சில உத்திரவாதங்களை கேட்கிறேன். ஓரின சேர்க்கை, எதிர் பால் ஈர்ப்பை குறைக்கும் அதனால் புதியவர்களை இந்த சங்கடங்களுக்கு ஆளாக்காதீர்கள் என வேண்டுகோள் வைக்கிறேன் திரும்பவும் படித்து பாருங்கள் தெரியும்.
இம்மாதிரியான பதிவுகளில் ஒரு பிரச்சனை, பின்னூட்டம் இட சங்கடப்பட்டு சிலர் பதிவை மட்டும் படித்து சென்று விடுவார்கள், இது பற்றி என்ன விவாதம் நடக்கிறது, உண்மை நிலை என்ன என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் குறைவு என்பதால், அங்கே வந்த பின்னூட்டங்களில் சர்ச்சைகுறியவைகளை மட்டும் இங்கே எடுத்து, அதற்கு என்னுடய பதில்களை சொல்லி விடுகிறேன்.
*************************
vinoth gowtham said...
கண்டிப்பாக அவர்களக்கு ஒரு அமைப்பு தேவை, அதற்கு மருத்துவ ஆலோசனையும் வழங்க வேண்டும்.
கண்டிப்பாக அமைப்பு தேவை, ஈரோட்டில் விலைமாதர்களுக்கு தாய் என்னும் அமைப்பு இயங்குகிறது. அங்கே திருநங்கைகளும், பெண்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள், அவர்களுக்கு பாலியல் நோய்கள் மற்றும் பாதுகாப்பு பற்றி சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். நீங்கள் சொல்வதை நானும் ஏற்று கொள்கிறேன்.
ஸ்ரீதர் said...
அவர்களை இயற்கைக்கு மாறான இந்த ஈர்ப்பில் இருந்து விடுபட மனோதத்துவ ரீதியான சிகிச்சைகள் அளிக்கலாம்.
கண்டிப்பாக செய்ய வேண்டும்,
தனது தந்தையின் அராஜக செயலால் நிறைய பெண்கள் மொத்த ஆண்களையும் வெறுப்பதை நாம் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம். அவை குணப்படுத்த கூடிய சிறு மனஅழுத்தமே, அதே போல் ஓரினசேர்க்கையாளர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம்.
கிஷோர் said...
நீங்கள் ஓரினச்சேர்க்கையாளர்களின் வன்புணர்ச்சி மற்றும் அவர்களால் ஏற்படும் தொல்லை பற்றி கூறி இருக்கிறீர்கள்.
ஏன் இது போல் ஆண்களால் பெண்களுக்கும் பெண்களால் ஆண்களுக்கும் நடந்து கண்டதில்லையா?
ஏன் ஓரினச்சேர்க்கையாளர்களை வில்லனாகவே கருதுகிறீர்கள்?
நல்லதொரு கேள்வி!
நாம் எங்கேயும் வன்முறையை ஆதரிக்கவில்லை, ஒரு பெண்ணை ஆண்கள் துன்புறுத்துவது சட்டபடி குற்றம், ஆனால் ஒரு ஆண், தன்னை பலாத்காரம் செய்தான் என்று இன்னொரு ஆண் எப்படி கம்ப்ளைண்ட் கொடுப்பது. சிறுவயதில் அந்த ஆள் கூப்பீட்டால் போகாதே அவன் மோசமானவன் என்று நண்பர்கள் சொல்லி கேள்வி பட்டிருக்கேனே ஒழிய இதற்காக ஒரு சட்டம் இருப்பது கூட எனக்கு தெரியாது. அதே போல் அவர்கள் நாளுக்கு நாள் புதிய இணை தேடுவதையும் கேள்வி பட்டுள்ளேன். அவர்களை வில்லனாக பார்க்கவில்லை, பரிதாபமாக பார்க்கிறேன். அவர்களுக்கு நல்வழி காட்டாமல் மீண்டும் மீண்டும் புதிய ஓரினசேர்க்கையாளார்களை உருவாக்குவதை வேதனையுடன் நோக்குகிறேன்.
//தனிமையில் உழல்பவர்கள், பெண்கள் கிடைக்காதவர்கள் தாமாக, ஆண்களுடன் உறவு எப்படி இருக்கும் என்ற ஒரு க்யூரியாசிட்டியில் முயற்சிக்கும்போது புதிய ஓரினச்சேர்க்கையாளாராகவும் மாறுவாவதாக படித்தேன்.//
வாய்ப்பு உண்டு தான், பள்ளி பாடங்களிலேயே அதற்கான விழிப்புணர்வு இருந்தால் அவைகள் நடக்காமல் பார்த்து கொள்ளலாம்.
வெண்பூ said...
சுய இன்பம் கூடத்தான் தவறு. அது இயற்கைக்கு மாறானது இல்லையா வால்?
இனபெருக்கத்திற்காக இருந்த செக்ஸ் எப்போது தேவைக்காக மாறியதோ, அப்போதே அனைத்தும் ஏற்று கொள்ளப்பட்டது, நான் சொல்லவருவது அவர்களை நிறுத்த சொல்லியல்ல, அறியாசிறார்களை தொந்தரவு செய்வதை நிறுத்த சொல்லி!
//குடிக்காத நண்பனின் வாயைப் பிளந்து பியரை ஊற்றியவர்களைப் பற்றி நீங்கள் கேள்விபட்டதில்லையா? தூக்கத்தில் இருக்கும் ஒருவர் வாயில் சிகரெட்டை வைத்து அவர் இருமலுடன் திடுக்கிட்டு எழுவதை ரசிக்கும் ராகிங்கை பார்த்ததில்லையா? அதே போல்தான் இதுவும்.. அதற்காக யாருமே சிகரெட் குடிக்கக் கூடாது, மது அருந்தக்கூடாது என்று சொல்வது போலதான் இதுவும்..//
இம்மாதிரியான உதாரணங்கள் மேலும் தவறுகள் நடக்க தூண்டுவது போல் இருக்கிறது, ஒருவருக்கு சொந்தமான பொருளை அவரது சம்மதம் இல்லாமல் எடுப்பது கூட தவறு தான். கவனிக்க நான் சொல்வது பொருளைக்கூட. அப்படியிருக்க ஒருவனை துன்புறுத்துவது எப்படி சாதாரணமாக எடுத்து கொள்ள முடியும். மேலும் சிகரெட் குடித்தல், தண்ணி அடித்தல் ஆகியவை நமது ஆர்வ மிகுதியால் பரவும் பழக்கம், அதே போல் ஆர்வமுற்று நானும் ஓரின சேர்க்கைக்கு சென்றீருந்தால் தைரியமாக சொல்வேன் நானும் ஓரினசேர்க்கையாளன் என்று. நான் சொல்வது விருப்பமில்லாதவர்களை தொந்தரவு செய்யாதீர்கள் என்று. அதற்கு குழந்தைதனமான விளக்கம் அளித்து நியாயம் கற்பிக்காதீர்கள்.
//யாரோ ஒருவனின் பழக்கம் (அது மதுவோ, சிகரெட்டோ, ஓரினச் சேர்க்கையோ) என்னை பாதிக்காத வரை எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.//
இது சரியான வாதமல்ல, தன்னை பாதிக்காத வரை பிரச்சனையில்லை என்றால், உங்களுக்கு பாதிப்பு வரும்போது மட்டும் தான் கேள்வி கேட்பீர்களா?
பைக்கிலோ, காரிலோ அலுவலகம் சென்று வீட்டுக்கு வரும் நீங்கள், தினம் தினம் பஸ்ஸில் செல்லும் வாலிபர்களை பற்றி நினைக்கவேண்டும்.
//அந்தப்புரங்களில் நூற்றுக்கும் மேல் அரசிகள். அரசன் ஒருவனே அத்தனை பெண்களின் இச்சைகளையும் தீர்த்திருப்பானா? வெளியே இருந்தும் எந்த ஆணும் வர முடியாத சூழலில் அந்த பெண்கள் என்ன செய்திருப்பார்கள் வால்.. எனக்கென்னவோ இதை சூழ்நிலைதான் தீர்மானிக்குமே தவிர நானும் நீங்களும் அல்ல..//
அன்றைய அந்தபுரமும், இன்றைய ராணுவமும் ஒன்று தான், அந்தபுரத்தில் பெண்கள் மட்டும் தனியாக, இங்கே ஆண்கள் மட்டும் தனியாக. இயற்கையில் ஏற்படும் உடல் தேவைகளை நிறைவேற்ற விட்டால் நீங்கள் சொல்லும் சூழ்நிலை உருவாகும், அதற்கும் சேர்த்து நடவடிக்கை எடுக்க சொல்வோம்.
சொல்லரசன் said...
இந்த சேர்கையால் வாழ்க்கையில் சீரழிந்தவர்களை நேரில் பார்த்தவன். எனவே 377 பிரிவின் தடையை ரத்து செய்தால்தான்.இவர்களின் தொல்லையில் இருந்து அப்பாவிகள் காப்பற்றபடுவார்கள்
அப்பாவி மக்கள் பாதிக்கப்பட கூடாது என்ற கோரிக்கை நியாயமானது, அதே நேரம் அவர்களை குற்றவாளியாக்காமல் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தவும் செய்ய வேண்டும்.
எனது பதிவில் அவர்களுக்கு அங்கிகாரம் அளிக்ககூடாது என்று சொல்லவில்லை, அதற்கு முன் அப்பாவி வாலிபர்களை தொந்தரவு செய்ய மாட்டோம் என உத்திரவாதம் மட்டும் அளிக்க சொல்லியிருக்கிறேன்.
//இந்திய தண்டனைச் சட்டம். பிரிவு : 377//
மாற்று பரிசீலினைக்கு உட்படுத்த வேண்டிய சட்டம்.
ஆணும், பெண்ணும் சேர்த்திருப்பது மட்டுமே தண்டனையில்லாத செயல் என்றால் ஒருவன் பிரம்மச்சாரியாக இருப்பது தண்டனைகுறிய குற்றமாக பார்க்கப்படும். அவரவர் தேவையை அவர்கள் பார்த்து கொள்ளட்டும், விருப்பமில்லாதவர்களை துன்புறுத்தாமல்!
Bharath said...
வன்முறையையும், ஹோமோசெக்சுவாலிடியையும் குழப்பிக்கிட்டீங்கன்னு நினைக்கிறேன்.. நம்மால் புரிந்துகொள்ள முடியாததெல்லாம் தவறுன்னு முடிவுசெய்யக்கூடாது.. அவர்களின் அங்கீகாரம் காலத்தின் கட்டாயம்..
இல்லை, வன்முறையை மட்டும் எடுத்து பேசவில்லை, ஓரினசேர்க்கையை பற்றி விழிப்புணர்வு இல்லாமல் அதில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பால் ஈர்ப்பு குறைந்து போகலாம். சுய இன்பம் தவறானது என்று நினைத்து கொண்டு வரும் மன உளைச்சல் மற்றும் தாழ்வு மனப்பான்மை போல் இதற்கும் ஏற்ப்படலாம். இவைகளை எடுத்து சொல்லலாம், கேட்கவில்லை என்றால் நாம் ஏன் மறுப்பு சொல்ல போகிறோம்.
ஜ்யோவ்ராம் சுந்தர் said...
கட்டாயப்படுத்துவதை நிச்சயம் எதிர்க்கிறேன், ஆனால் எம்மாதிரியான உறவுகளில் அது அதிகம் இருக்கிறது - ஓரினச் சேர்க்கையை விட இருபால் உறவுகளிலேயே அது அதிகமென்பதை ஒப்புக் கொள்வீர்கள்தானே...
பேருந்துகளில் பயணம் செய்யும் போது இருக்கையில் தெரியாத ஒரு பெண்ணுடன் சேர்ந்து அமர தயங்குவோம். ஆனால் ஒரு ஆணுடன் அமர நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. காரணம் நம்மை போன்று தானே என்ற நம்பிக்கை, ஆனால் என்ன நடக்கிறது, தொடையை தடவுவது, பாக்கெட்டில் என்ன இருக்குன்னு உள்ளே கையை விடுவது என கூச்சத்தில் நெளிய வைப்பார்கள்.
இது வேறு மாதிரியான டார்ச்சர். வன்முறை எல்லா கோணங்களிலும் தவறு தான்.
//ஒரு பிரச்சனையை அணுகும்போது நீதிபதி ஸ்தானத்தில் உங்களை வைத்துக் கொள்ளாதீர்கள். உரையாடலைக் கொன்றுவிடும் அது.//
பாதிக்கப்பட்ட பிரதிவாதியின் வக்கில் தான் நான், அதே நேரம் குற்றவாளி கூண்டிருப்பவர்களுக்கு தேவை தண்டனையில்லை, புரிதல் மற்றும் விழிப்புணர்வு என்று தான் சொல்லி கொண்டிருக்கிறேன், எங்கேயேனும் அதிகார தோனியில் நான் பேசியிருந்தால் இனிமேல் அது நடக்காமல் பார்த்து கொள்கிறேன்.
கோவி.கண்ணன் said...
ஓரினப் புணர்ச்சி செயல் தவறு என்ற பெரும்பாண்மை சமூகப் பார்வைக்கு எதிராக அவர்கள் அது தவறல்ல எங்களையும் பிறரைப் போலவே பாருங்கள் என்கிறார்கள்.
அந்த பதிவிலேயே சொல்லியுள்ளேன், ஓரின சேர்க்கையாளர்களுடன் மணி கணக்கில் அமர்ந்து பேச தயார், கூடவே சரக்கடிக்கிறேன், பாதி அடித்த சிகரெட்டை கூட வாங்கி அடிக்கிறேன், ஆனால் என்னை படுக்க மட்டும் வற்புறுத்தாதே என்பது தான் என் வாதம். அவர்களுது விருப்பத்தில் நான் குறுக்கே வரவில்லை, என் மனதில் மண்ணை போடாதே என்கிறேன்.
ஆனால் இத்தகைய உறவுகளுக்கு திருமண அங்கீகாரம் கேட்பதை நான் எதிர்க்கிறேன். திருமண உறவுகள் குடும்பம் சார்ந்தது, அதைக் கொச்சை படுத்துவது போல் ஓரின திருமணங்கள் சகித்துக் கொள்வது கடினம் தான்.
திருமணம் கேட்பது இப்போதய வேண்டுகோள் தான்,
ஒரு ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்கியிருந்தால் அவர்கள் கண்டிப்பாக கணவன், மனையாக இருக்க வேண்டும் என்பது சமூகத்தின் பார்வை, ஆனால் இரு ஆண்களை சமூகம் கவனிப்பதில்லை. ஆக ஏற்கனவே அவர்கள் திருமணம் செய்து விட்டார்கள். அவர்களுக்கு தேவை, யாரும் மொய் வைக்கவில்லையாம். அதனால் உலகறிந்த திருமணம் வேண்டுமாம்.
//ஓரின இச்சையாளர்கள் மூலம் உயிர்கொல்லி நோய் மிகுதியாக பரவும் என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.//
மிகுதியோ, குறைவோ பரவுதா இல்லையா?
பரவும் சதவிகிததில் குறைவு என்பதால் பயன்படுத்திய ஊசிகளை மீண்டும் பயன்படுத்துவோமா?
அதே போல் தான் இதுவும்.
//பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் மட்டுமே பரவும் அது இருபால் புணர்சியாளர்களுக்கும் பொருந்தும்.//
95% ஓரினசேர்க்கையாளர்கள் பாதுகாப்பை பற்றி கவலைபடுவதில்லை, நிறைய பேர் பெண்களுடன் உறவு கொண்டால் மட்டுமே பால்வினை நோய் வரும் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்
//இயற்கைக்கு மாறானது என்று சொல்வதும் தவறென்றே படுகிறது. இருபால் புணர்சியிலும் 'இலக்கு' இல்லாத புணர்ச்சிகள் உண்டு, அதையெல்லாம் இயற்கை என்று சொல்லமுடியாது.//
செக்ஸ் என்பது இனபெருக்கதிற்கு என்பது இயற்கை, அது எப்படி இலக்கை இழந்ததோ அதே போல் தான் இதுவும், நான் குற்றம் சாட்டவில்லையே! ஆனால் ஏற்று கொள்வது ஒருவரின் தனிப்பட்ட உரிமைக்கு நாம் கொடுக்கும் மதிப்புக்காக இருக்க வேண்டுமே தவிர இயற்கையாக அதை ஏற்று கொள்ளக்கூடாது. அப்படி செய்தால் பின்னாளில் பல இயற்கைகளை புதிதாக நீங்கள் சந்திக்க வேண்டிவரும்
வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல முடியாத ஒன்றை சமுகத்திடம் சொல்லி தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது வீன் என்றே நினைக்கிறேன்.//
சரியான கருத்து தான், ஆனால் அவர்கள் சொல்வது சமூகம் ஏற்று கொண்டால் தான் எங்களை வீட்டில் ஏற்று கொள்வார்கள் என்று!
ஆண் ஓரின சேர்கையாளர்களால் குறிப்பாக பெண் சமூகத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது. அவர்களுக்கு இடையே ஒரு பெண் நிம்மதியாக நடமாடமுடியும்.//
நகைச்சுவை ஒன்று உண்டு,
சாலையில் செல்லும் ஒரு அழகான பெண்ணை ஒரு ஓரின சேர்க்கையாளன் எவ்வாறு ரசிப்பான்!
பதில்
அவளே எவ்வளவு அழகா இருக்களே இவளுக்கு ஒரு சகோதரன் இருந்தால் எவ்வளவு அழகா இருப்பான்.
செல்வன் said...
ஓரினசேர்க்கைக்கு அங்கீகாரம் கொடுத்தால் அவர்கள் ஏன் அதன்பின் பிறரை தொந்தரவு செய்ய போகிறார்கள்?ஓரினசேர்க்கைக்கு அங்கீகாரம் கொடுக்கும் எந்த நாட்டிலும் இம்மாதிரி நடப்பதில்லையே ஏன்?
நம்நாட்டிலேயே என்னை போன்ற சிலர் தான் வெளியே சொல்கிறோமே தவிர எல்லோரும் வெளியே சொல்வதில்லை, அவர்களுக்கு தெரியும் எல்லோரும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த சங்கடத்திற்கு உள்ளாயிருப்போம் என்று. அதனால் வெளிநாட்டை பற்றி கருத்து கூற ஒன்றுமில்லை
ஓரினசேர்க்கைக்கு அங்கீகாரம் வழங்கி,திருமனம் செய்யும் உரிமையை வழங்கினால் புது ஓரினசேர்க்கையாலர்கள் உருவாக மாட்டார்கள்.
இவ்வாறு அவர்கள் உத்திரவாதமளித்தால் அங்கிகரிக்கலாம், ஆனால் உண்மை ஓரினசேர்க்கையாளர்கள் தினம் தினம் வித வித சோடி தேடுபவர்கள் என்கிறதே!
.ஓரினசேர்க்கையாளன் என்று தெரிந்தும் அவனை திட்டி,மிரட்டி ஏதோ ஒரு பெண்ணுக்கு கட்டி வைத்தால் அவன் வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் திருட்டுதனமாக இன்னொருவரை தன் வழிக்கு இழுக்கத்தான் நினைப்பான்.//
உண்மைதான், இதை ஒப்பு கொள்கிறேன். ஒருவன் தன்னை ஓரினசேர்க்கை பிரியன் என்று சொல்வதால் அவனை தண்டிக்க கூடாது என்று நானும் சொல்கிறேன்.
சிறுமிகளை பலாத்காரம் செய்யும் ஆண்கள் இருப்பதுபோல் ஓசேக்களிலும் இருக்கிறார்கள்.பலாத்காரம் கட்டாயம் தண்டிக்கப்படவேண்டிய குற்றம்.ஆனால் ஓரினசேர்க்கை குற்றம் அல்ல.//
சிறுமிகளை பலாத்காரம் செய்வது மனநோயா இல்லையா?
ஓரினசேர்க்கை குற்றம் இல்லை, மற்றுவர்களை தொல்லைகுள்ளாக்குவதே குற்றம்.
***********************************
ஓரின சேர்க்கையாளர்களை அங்கிகரிக்கலாம்
அதற்கு முன்
அவர்களிடன் இனி விருப்பமில்லாதவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம் என உறுதி மொழி வாங்க வேண்டும்.
ஒரின சேர்க்கையாக இருந்தாலும் பாதுகாப்பற்ற உடலுறவு பால்வினை நோயை உருவாக்கும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஓரீன சேர்க்கையிலிருந்து வெளி வந்து சகஜ நிலையில் வாழ நினைப்பவர்களுக்கு கவுன்சிலிங் செய்து வாழ அனுமதிக்க வேண்டும்
சில மாற்று கண்ணோட்டங்கள் புதிய வழிகளை காட்டலாம் என்ற நம்பிக்கையில்
24 வாங்கிகட்டி கொண்டது:
Simply superb.
உங்களடுய கருத்தை ஆணித்தரமா முன் வைத்து விட்டிர்கள்.
அநேகமாய் பெரும்பாலனவர்களின் கருத்து இதுவாக தான் இருக்கும்..
அட
அருமைப்பா
பின்னூட்டங்களை பதிவு வழி சொல்வது
I am wondering about it..
அட
அருமைப்பா
பின்னூட்டங்களை பதிவு வழி சொல்வது
இது பேச்சு.. இப்ப போய் உங்களோட போன இடுக்கையை படிச்சுபாருங்க.. ஓரின சேர்க்கையாளர்கள் எல்லாருமே இந்த மாதிரித்தான்.. அப்படிங்கர தொனி வருதா இல்லையான்னு..
நீங்க பாட்டுக்கு உங்க வேலையைப் உங்களுக்குளே பாத்துக்குங்கன்னு சொல்லிட்டா அவங்க பாட்டுக்கு ஒரு சங்கம் வெச்சோ இல்ல வலைத்தளத்திலயோ பாத்துக்ப்போறாங்க.. அவங்களூக்கு வேணும்னா கல்யாணமும் பண்ணிக்கிட்டு போறாங்க.. நம்ப யாரு தடுக்க??
வால் பையன்,
தத்துவக் குழப்பமில்லாத அலசல். எனக்கும் அதே கருத்துதான். பாராட்டிக்கிறேன்.
நல்ல பதிவு. ஈரோடு பஸ் ஸ்டாண்டுல இவனுக ஆட்டம் too much. கொடுமுடியில ஒருதடவ, Hகூ ஒருத்தன ரயில்வே ஸ்டேசன்ல விட்டு நொக்கி நொங்கு எடுத்தோம். (அவன் ஒரு 5 வகுப்பு மாணவன மிட்டாய் குடுத்து பாத்ரூம் கூப்பிட்டான்.)
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைப்பூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்
உங்க பதிவு யூத்விகடனில்
வாழ்த்துக்கள்
//உங்க பதிவு யூத்விகடனில்//
கலக்குங்க வாழ்த்துக்கள் ..
பின்னூட்ட வாதங்களை வைத்தே பதிவா...
கலக்குங்க...
உங்கள் பதிவு யூத் புல் விகடனில் பார்த்தேன்..
வாழ்த்துக்கள்..
செல்வன் said...
//ஓரினசேர்க்கைக்கு அங்கீகாரம் கொடுத்தால் அவர்கள் ஏன் அதன்பின் பிறரை தொந்தரவு செய்ய போகிறார்கள்?ஓரினசேர்க்கைக்கு அங்கீகாரம் கொடுக்கும் எந்த நாட்டிலும் இம்மாதிரி நடப்பதில்லையே ஏன்?//
கனடாவில் இதுவரை நடந்த ஒரின திருமணங்கள் ரத்துசெய்யபட்டது ஏன்?
அண்ணே உங்களோடு ஒத்துப் போகிறேன்
:)
ஆரோக்கியமான விவாதத்தை அதிலும் ஒரு பேசாப்பொருளில் நிகழ்த்தியுள்ளமைக்கு வாழ்த்துகள்.. வால்.!
என்னைப்பொறுத்தவரை 'கனியிருப்பக் காய் கவர்வதே' ஓரினச்சேர்க்கையென கருதுகிறேன். எனக்கு கனி பிடிக்கலாம். ஆனால் காயை பிடிப்போரும் இருக்கலாம். சுய இன்பமோ, ஓரினச்சேர்க்கையோ எந்த விதமான உடற்பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதல்ல.. அது சூழலின் காரணமான இயல்பே. இதற்காக அநாகரீகமாக பொது இடங்களில் துணை தேடுவது அருவருக்கத்தக்க விஷயம். மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறையைப்போன்றே இந்த விஷயத்திலும் கட்டாயப்படுத்துதல், சிறார்களை துன்புறுத்துதல், வன்முறை செய்தல், தெரிந்தே நோய்களைப்பரப்புதல் போன்ற செயல்களை மன்னிக்கவேமுடியாது.
இந்தப்பதிவில் ஒரே கருத்துகள் திரும்ப திரும்ப ரிப்பீட்டாகியிருப்பதை எடிட் செய்திருக்கலாம்.. கச்சிதமாக இல்லை.!
நன்றி வினோத் கெளதம்
நன்றி ஜமால்
காரணமும் சொல்லியிருக்கிறேனே!
நன்றி தமிழ்நெஞ்சம்
நன்றி Bharath
நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், பொத்தம் பொதுவாக நான் ஆதரிக்கிறேன் என்பது, எதிர்க்கிறேன் என்பதும் சரியல்ல, அவர்கள் இருவரும் எதாவது ஒரு புள்ளியில் இணைவார்கள். நான் எதிர்க்கவில்லை அதே நேரம் பாதுகாப்பு கேட்கிறேன்.
அவர்களிடம் பாதுகாப்பு கேட்கும் பொழுது சில விளக்கங்கள் என் பக்கம் தர வேண்டியுள்ளது, அதற்காகவே போன பதிவு
நன்றி ரமேஷ் வைத்யா
அண்ணன் சொன்னா சரியா தான் இருக்கும்.
நன்றி அருண்!
ஆம் ஈரோடு மட்டுமல்ல!
எல்லாஊர்களிலும் இவர்களை பார்க்கமுடிகிறது.
நன்றி செய்யது
நன்றி அப்துல்லா
நன்றி தாமிரா
உண்மை தான்,
சரி செய்திருக்கலாம்
//நட்புடன் ஜமால் said...
உங்க பதிவு யூத்விகடனில்
வாழ்த்துக்கள்//
//vinoth gowtham said...
//உங்க பதிவு யூத்விகடனில்//
கலக்குங்க வாழ்த்துக்கள் ..//
//அ.மு.செய்யது said...
உங்கள் பதிவு யூத் புல் விகடனில் பார்த்தேன்..
வாழ்த்துக்கள்..//
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
ஆனால் எனக்கு இது பெரிதாக தோன்றவில்லை,
யூத்புஃல் விகடன் ஒரு இணைய பத்திரிக்கை, அது பிரபலமடைவதற்கு முன்னரே ப்ளாக் உலக அளவில் மக்களை அடைந்து விட்டது.
தமிழ்மணத்தில் சூடான இடுக்கைகளை வாழ்த்துவீர்களா, அது போல் தான் இதுவும்,
ஒருவேளை ஆனந்தவிகடனில் வந்தால் உங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் தகுதியானவனாக இருப்பேன் என்று நினைக்கிறேன்
hi mr.vaal,
as a psychiatrist i have some responsibility..to clarify some issues here.
Homosexuality is multifactorial.It is very biological and it is hard for them to live otherwise.
There are bisexual as well.So if someone gets into any homosexual act it doesnt mean the person will lose interest in the opposite sex.
Coming to your issue of the young boy in the osychiatric ward, what happened to him is sad, But that has to be seen more as a sexual assault(rape).It may not have anything to do with homosexuality.His seniors for all you know maybe experimenting/ just being rotten.There are girls who are sexually assaulted and sometimes boys by men. The latest is the issue of sexual assault by catholic priests in the west.The church had to pay huge amounts of compensation.Rape is also possible among men.Violence can be perpetrated just by showing some sort of Psychological superiority and aggression .Rape of male prisoners by other senior or powerful prisoners is is a known phenomenon.
Your statement that if some one is forced in to a sexual act with the same sex , the person will lose interest in opposite sex is not something that has any scientific basis.
Socially some of my best friends among men are homosexuals.Very kind and gentle souls.I dont see the competitiveness that i see in men who are straight.
Instead of looking at this issue with lot of emotions ,it will be good to talk to some people who are in this field, such as doctors.
Due to logistics i have to type in tamil.I am sorry about that.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மருத்துவர் அனுராதா!
நான் வன்முறையினால் எதிர்பால் ஈர்ப்பு குறையும் என்று சொல்லவில்லை.
எப்பால் ஒருவர் மீது வன்முறை கொள்கிறதோ, அப்பால் மீது வெறுப்பு உண்டாகி, அதன் எதிர்பால் மீது ஈர்ப்பால், மனப்பால் கொள்வது தான் மனிதமனம்.
பெண் ஓரினசேர்க்கை பிரியர்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் கனநேர இன்பத்திற்காக ஓரினசேர்க்கையில் ஈடுபட்டு பின் குற்றஉணர்ச்சியால் எதிர்பால் மேல் ஈர்ப்பு அற்று இருக்கிறார்கள்.
ஒரு மன உளவியல் மருத்துவராக, மருத்துவ ரீதியாக இது நிறுபிக்கப்டாத உண்மை என்று சொல்ல முடியுமே தவிர, இதனை வைத்து காசு பார்க்கும் சித்த வைத்தியர்களை ஒன்றுமே செய்ய முடியாது.
நீங்கள் சொல்லும் பை-செக்ஸுவல்கள்
விதிவிலக்குகளே அதாவதும் செக்ஸ் என்னும் விதியிலிருந்து ஹோமோ செக்ஸுவலை எப்படி விதிவிலக்காக பார்க்கிறோமோ அப்படி.
நான் ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிர்ப்பாளன் அல்ல, அதே நேரம் அவர்களுக்கும் விழிப்புணர்வு தேவை என்று கூறுபவன்.
நன்றி
வால் பையன், நீங்கள் சொல்லியாவை யாவும் உங்களது பார்வையில் சரியாக இருக்கலாம்.
ஓரினசேர்க்கை என்பது ஒரு தற்காலிக வடிகாலே தவிர இதை இவ்வளவு தூரம் காரசாரமக விவாதிக்கிற அளவுக்கு மிக மோசமானதாக எனக்கு தோன்றல. பெரும்பாலும் ஓரினசேர்க்கை-காரர்கள் யார் என்று பார்த்தால் பள்ளி, கல்லூரி-களில் படிப்பவர்கள் அல்லது சற்று வயதான(50) ஆண்கள் மட்டுமே. ஏன் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்? அவர்களுக்கு வேறு வடிகால் இல்லாத காரணத்தினால்.. பொதுவாக ஆண்களுக்கு வடிகால் என்பது பெண்களுடன் கூடுவதால் நிவர்த்தி ஆகிறது. பெண் துணை இல்லாதவர்களுக்கு..? வெளியில் சென்று தேட வேண்டும். or காசு கொடுத்து போகணும்.. சிரமமான காரியம். இதைதான் தினசரி நாளிதழ்களில் நாம் படிக்கிறோம் "தகாத உறவு.. கள்ள உறவு.. சிறுமி வயதானவரல் கற்பழிப்பு.. போன்று..". மேற் சொன்ன யாவையும் செய்ய சற்று துணிவு வேண்டும். so ஒரு temprory solution-ஆக அமைந்ததே நாம் விவாதிக்கும் ஓரினசேர்க்கை.
வால்பையன்... நீங்க சொன்னிங்க.. ஓரினசேர்க்கை-காரர்களுடன் tea குடிப்பிங்க.. சிகரட் exchange பண்ணிக்குவீங்க என. அது போல் தானே அவர்காளின் பரஸ்பர... ... exchange-உம்.
"அதற்காக கடுமையான முறையில், வற்புறுத்தி செய்கிற ஒரு சிலரை" நானும் வன்மையா கண்டிக்கின்றேன்.
டாக்டர் அனு சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.
ஓரின சேர்கையாளர்களுக்கு கண்டிப்பாக மருத்துவ கவுன்சிலிங் தேவை .........
பிற நாடுகளை போல் ஓரின சேர்கைக்கும் ஒரு சட்டம் கொண்டு வந்தால் என்ன..?
வணக்கம்.... ஒருபால் ஈர்ப்பை பற்றிய இந்த தளத்தின் பதிவை இப்போதான் பார்க்கிறேன்.... நிச்சயமாக ஒருபால் ஈர்ப்பை பற்றிய விவாதத்தை முன்வைத்தமைக்கு நன்றிகள்... நீங்கள் நினைப்பது போல எல்லா ஒருபால் ஈர்ப்பு நபர்களும் எப்போதும் செக்ஸ் நோக்கத்துடனே இருப்பது இல்லை.... போதுமான விழிப்புணர்வும், கல்வியும் இல்லாததால் சில நேரங்களில் வரம்பு மீறுவதையும் நான் மறுக்கவில்லை.... ஆனால், எல்லாவற்றுக்கும் காரணமாக ஒருபால் ஈர்ப்பை கைகாட்டுவதை நான் ரசிக்கவில்லை.... எங்கள் சமூகத்துக்காக, அவர்களின் விழிப்புணர்வுக்காக இப்போது நான் எழுதிவரும் வலைப்பூ இது... இதனை வாசிக்கும்போது நிச்சயம் எங்கள் மனநிலையை நீங்கள் அறியமுடியும் என்று நம்புகிறேன்.... நன்றி...
இனபெருக்கத்தின் தேவை என்ன? ஏன் அதை செய்ய வேண்டும்??
//இனபெருக்கத்தின் தேவை என்ன? ஏன் அதை செய்ய வேண்டும்??//
இனத்தை பெருக்கவே இனபெருக்கம்.
ஒரு செல் உயிர் தன்னை தானே இரண்டாக பிரித்து இனபெருக்கம் செய்கிறது
உயிரின் கடமையே இனபெருக்கம் தான்
Post a Comment