தலைப்பு - பாகம் இரட்டை!

ஏற்கெனவே சில பதிவர்கள் வரும் நாட்களில் என்ன என்ன தலைப்புகளில் பதிவிடப்போகிறார்கள் என ஒரு பதிவிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சி இது.
புதிதாக வருபவர்கள் முதலில் இதன் முந்தைய பாகத்தை படித்துவிட்டு வாருங்கள்

தாமிரா
தங்கமணி செய்த தங்கபஸ்பம்
புத்தகத்தில் தங்கபஸ்பம் செய்வது எப்படி என செய்முறை படித்துவிட்டு தாமிராவின் பிப்ரவரி மாத சம்பளத்தை கொண்டு மொத்தமாக தங்கம் வாங்கி அப்படியே அதை பஸ்பம் செய்து தாமிராவின் மூக்கை பிடித்து ஊற்றி விட்டாராம். அன்றிலிருந்து தாமிரா ஜொலிக்கிறாராம். அதை தான் பதிவாக போடப்போகிறாராம். பண கஷ்டம் உள்ளவர்கள் தாமிராவை லேசாக சுரண்டி கொள்ளலாம். தங்கமானவர் என்ற சொல்லுக்கு ஏற்றவர்.

அபிஅப்பா
கோழைசேகர விலாஸ்
தற்போது எழுதிவரும் விரசேகர விலாஸ் பயங்கர மொக்கை என்று பல நண்பர்கள் சாட்டில் முரட்டியதால், இந்த மொக்கையை கூட படிக்க முடியாத கோழை சேகரர்கலா என்று பதிவிடப்போகிறாராம். கண்டிப்பாக இந்த பதிவிலும் கல்யாணம் உண்டு ஆன கடைசி வரை பந்தி என்ற வார்த்தையை கூட பயன்படுத்த மாட்டாராம். பசியோடு இருப்பவர்கள் வேறு கடையை பார்ப்பது நல்லது.

டோண்டு
உழைப்பால் உயர்ந்த காக்கை,குருவி சாதிகள்
நான்: அதுங்க என்னங்க பண்ணுச்சு! அதை கூட விடமாட்டிங்கிறிங்க

டோண்டு:பாரதியே சொல்லியிருக்கார், காக்கை,குருவி எங்கள் சாதின்னு அதை எப்படி விடுவதாம்

நான்: சரி என்னா தான் சொல்ல போறிங்க

டோண்டு:காக்கைகள் தரையில் வைக்கும் சாப்பாட்டை சாப்பிடக்கூடாது.
அதே போல் தனி இலை என்று தெரிந்தால், சாப்பிடாமல் தானே சமைத்து தனியாக சாப்பிட பழக வேண்டும்.

நான்: தலைக்கு மேல ஒரு காக்கா பறக்குது கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க

கார்க்கி
பாட்டி கதைகள்
புட்டி கதைகளின் நாயகர்கள் ஏழுவும்,ஆறுமுகமும் அடிக்கும் லூட்டி உங்களுக்கே தெரியும்,
ஆனால் அவர்களுடய பாட்டிகள் அதை விட பெரிய லொள்ளு பார்ட்டிகளாம். தற்சமயம் ஊருக்கு போயிருந்த கார்க்கி, பாட்டி அடித்த லூட்டிகளை கேள்வி பட்டு அதையும் இனி பாட்டி கதைகள் என்ற பெயரில் எழுதப் போகிறாராம்.

நர்சிம்
கட்டுதறியும் கவிபாடும்
முடிந்த வரை கம்பனை பற்றி அலசி விட்டதால், கடைசியாக கம்பர் வீட்டு கட்டுதறி பாடிய கவிதையை எழுதுகிறாராம், சரி அது என்னான்னு ரெண்டு வரி சொல்லுங்கன்னு கேட்டேன்
டக் டடக் டக்
டடக் டக் டடக்
டக் டடக் டக்
டடக் டடக் டக்
டக் டக் டடக்

இது தான் கவிதையாமாம்
புரிந்தவர்கள் எனக்கு விளக்குங்களேன்

ஜிம்ஷா
கேள்வி கேட்டு அலுத்து போச்சு
ஜிம்ஷாவின் பதிவுகளை படிப்பவர்களுக்கு!? மட்டுமே தெரியும் ரகசியம், அவரது பெரும்பாலான பதிவுகள் கேள்வி குறியுடன் தான் முடியும். ஆனால் பாருங்கள் யாருமே பதில் சொல்ல மாட்டிங்கிறாங்களாம் கடுப்பாயி போன ஜிம்ஷா இனிமே யார் கிட்டயும் கேள்வி கேட்க மாட்டேனு சொன்னார்! அப்படியானு கேட்டேன்! உங்களுக்கு தெரியுமா?னு ஆரம்பிச்சார்..................

இன்னும் தொடரலாம்

36 வாங்கிகட்டி கொண்டது:

அ.மு.செய்யது said...

ஆரம்பிச்சாட்டாய்ங்கய்யா !!!!!!

அ.மு.செய்யது said...

//பண கஷ்டம் உள்ளவர்கள் தாமிராவை லேசாக சுரண்டி கொள்ளலாம். //

//தாமிராவின் பிப்ரவரி மாத சம்பளத்தை கொண்டு மொத்தமாக தங்கம் வாங்கி அப்படியே அதை பஸ்பம் செய்து தாமிராவின் மூக்கை பிடித்து ஊற்றி விட்டாராம்//

இந்த‌ விஷ‌ய‌ம் அவ‌ருக்கு தெரியுமா !!!!!!

நட்புடன் ஜமால் said...

இன்னாபா மேட்டரு ...

நட்புடன் ஜமால் said...

எல்லாம் பெரியவா பேரா தெரியுது நான் அப்பீட்டுக்கிறேன் ...

Mahesh said...

தலைப்பை "தலைப்பு"ன்னு வெக்கறத்கு பதிலா "வால்ப்பு"ன்னு வெக்கலாம். :)

அ.மு.செய்யது said...

//உழைப்பால் உயர்ந்த காக்கை,குருவி சாதிகள்//

ஒன்னும் சொல்லுறதுக்கில்லை...

( உங்க ஸ்டைல் தான் )

அ.மு.செய்யது said...

//ரெண்டு வரி சொல்லுங்கன்னு கேட்டேன்

டக் டடக் டக்
டடக் டக் டடக்
டக் டடக் டக்
டடக் டடக் டக்
டக் டக் டடக்//

ஆமா....இதான் அந்த ரெண்டு வரிகளா ??

அபி அப்பா said...

//அபிஅப்பா
கோழைசேகர விலாஸ்
தற்போது எழுதிவரும் விரசேகர விலாஸ் பயங்கர மொக்கை என்று பல நண்பர்கள் சாட்டில் முரட்டியதால், இந்த மொக்கையை கூட படிக்க முடியாத கோழை சேகரர்கலா என்று பதிவிடப்போகிறாராம். கண்டிப்பாக இந்த பதிவிலும் கல்யாணம் உண்டு ஆன கடைசி வரை பந்தி என்ற வார்த்தையை கூட பயன்படுத்த மாட்டாராம். பசியோடு இருப்பவர்கள் வேறு கடையை பார்ப்பது நல்லது.
//

அட வாலு! உனக்காகவே அதை இன்னும் 4 பாகமா இழுத்து உன்னை கட்டி போட்டு உன் கண்ணை பழுக்க வக்கிறேன்!

குசும்பன் said...

டக் டக் டக் கலக்கல்!:)

குசும்பன் said...

//. அன்றிலிருந்து தாமிரா ஜொலிக்கிறாராம். அதை தான் பதிவாக போடப்போகிறாராம். பண கஷ்டம் உள்ளவர்கள் தாமிராவை லேசாக சுரண்டி கொள்ளலாம். தங்கமானவர் என்ற சொல்லுக்கு ஏற்றவர்.//

எனக்கு ஒரு கால் கிலோ வேண்டும், சுரண்டினால் லேட் ஆகும், அர்ஜெண்ட் ஆர்டர் என்றால் என்ன செய்யவேண்டும்!?

அபி அப்பா said...

//எனக்கு ஒரு கால் கிலோ வேண்டும், சுரண்டினால் லேட் ஆகும், அர்ஜெண்ட் ஆர்டர் என்றால் என்ன செய்யவேண்டும்!?/

"வெட்டி" தனமா டைம் வேஸ்ட் பண்ணாம எது செய்யனுமோ செய்யிப்பா குசும்பா:-))

அபி அப்பா said...

//ஜிம்ஷா
கேள்வி கேட்டு அலுத்து போச்சு
ஜிம்ஷாவின் பதிவுகளை படிப்பவர்களுக்கு!? மட்டுமே தெரியும் ரகசியம், அவரது பெரும்பாலான பதிவுகள் கேள்வி குறியுடன் தான் முடியும். ஆனால் பாருங்கள் யாருமே பதில் சொல்ல மாட்டிங்கிறாங்களாம் கடுப்பாயி போன ஜிம்ஷா இனிமே யார் கிட்டயும் கேள்வி கேட்க மாட்டேனு சொன்னார்! அப்படியானு கேட்டேன்! உங்களுக்கு தெரியுமா?னு ஆரம்பிச்சார்..................//

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

வெண்பூ said...

வால்.. கலக்குறீங்க.. சூப்பர்.

Tech Shankar said...

அதேதான்.

தயவுசெய்து இப்பதிவில் இடம்பெற்றிருக்கும் பதிவர்களே!

வால்பையன் இட்டு நிரப்பியுள்ள தலைப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும்.

Anonymous said...

வால்,

ஏன் இந்தக் கொலை வெறி... இவங்கள்ளாம் உங்களுக்கு என்ன பாவம் பண்ணாங்க. தமிழீஷ்ல உங்க பதிவ "burry" பண்ணாங்களா, இல்லை தமிழ்மணத்துல நெகட்டிவ் வோட்டு போட்டாங்களா. ஏனய்யா இந்தக் கொலை வெறி...

சின்னப் பையன் said...

ஹாஹா... சூப்பர்...

டக் டடக் -> அருமை... :-)))))

Anonymous said...

வால், அந்த "பச்சை மனிதன்" டிக்கெட் இருந்தால் உங்கள் மொபைலில் படம் எடுத்து என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்புங்களேன். மின்னஞ்சல் vijayagiri2882008@gmail.com.

நன்றியுடன்
விஜய்கோபால்சாமி

dondu(#11168674346665545885) said...

//நான்: தலைக்கு மேல ஒரு காக்கா பறக்குது கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க//
:))))))))))))
இப்பத்தான் ஒரு படத்துல வடிவேலு தலைல காக்கா அசுத்தம் செய்ய அவரது செர்வண்ட் காக்காயை கல்லால் அடிக்கிறேன் பேர்வழி என்ன வடிவேலுவின் மண்டையை பிளக்க, செர்வண்டை நோக்கி அடித்த கல்லு சைக்கிளின் மேல் வந்தவன் மேல் பட, அவன் அடிக்கும் கல் டீக்கடைக்காரன் மேல் பட, கடைசியில் டீக்கடை பற்றி எறிய, தண்ணி என நினைத்து வடிவேலு கிஷ்ணாயில் டப்பாவை நெருப்பு மேல கவுக்கன்னு ஒரு சீன் பாத்துட்டு கணினிக்கு வந்தா உங்களோட இந்தப் பதிவு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

இராகவன் நைஜிரியா said...

சூப்பர்...

மனசு விட்டு சிரிச்சேன்...

கார்க்கிபவா said...

கிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகி

கிரி said...

ஹா ஹா ஹா

கலக்கல்

g said...

அபி அப்பா said...
//ஜிம்ஷா
கேள்வி கேட்டு அலுத்து போச்சு
ஜிம்ஷாவின் பதிவுகளை படிப்பவர்களுக்கு!? மட்டுமே தெரியும் ரகசியம், அவரது பெரும்பாலான பதிவுகள் கேள்வி குறியுடன் தான் முடியும். ஆனால் பாருங்கள் யாருமே பதில் சொல்ல மாட்டிங்கிறாங்களாம் கடுப்பாயி போன ஜிம்ஷா இனிமே யார் கிட்டயும் கேள்வி கேட்க மாட்டேனு சொன்னார்! அப்படியானு கேட்டேன்! உங்களுக்கு தெரியுமா?னு ஆரம்பிச்சார்..................//

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

நல்ல விமர்சனம். கேள்விக்குறி எதற்காக போடுகிறார்கள் என்பது பற்றி விளக்கினால் நல்லது.

Kumky said...

எது எப்பிடியோ ஜிம்சா கண்ணு போட்டோ ஜூப்பரு...ஒரிஜினலா..?

Thamira said...

தாமிராவின் பிப்ரவரி மாத சம்பளத்தை கொண்டு மொத்தமாக தங்கம் வாங்கி ////

டுபாக்கூர்னு இங்கியே எல்லோருக்கும் தெரிஞ்சுபோயிருக்கும். என்னோட ஒரு மாச சம்பளத்துல தங்கமா? பித்தாளைதான் வேங்கமுடியும்..

Thamira said...

எனக்கு ஒரு கால் கிலோ வேண்டும், சுரண்டினால் லேட் ஆகும், அர்ஜெண்ட் ஆர்டர் என்றால் என்ன செய்யவேண்டும்!?// நீங்க 'நான் கடவுள்' பாக்காம இருக்கிற‌து எனக்கு நல்லதுன்னு நெனைக்குறேன்.

Kumky said...

தாமிரா said...

எனக்கு ஒரு கால் கிலோ வேண்டும், சுரண்டினால் லேட் ஆகும், அர்ஜெண்ட் ஆர்டர் என்றால் என்ன செய்யவேண்டும்!?//

தங்கம் விலை ஏறிட்டே போகுது..
பாதுகாப்பு படையுடன் செல்வது உசிதமாகப்படுகிறது.

வெற்றி said...

என்னா வில்லத்தனம்,
என்ன தலைப்பு வெச்சாலும் "வாலு" ஆடாம விடாது, பேசாம "தலை"ப்பு இல்லாம "வால" வெச்சு எழுதலாமோ?

பதிவர்கள் கிசு கிசுப்பது கேகுதா தல.

RAMYA said...

//
தாமிரா
தங்கமணி செய்த தங்கபஸ்பம்
புத்தகத்தில் தங்கபஸ்பம் செய்வது எப்படி என செய்முறை படித்துவிட்டு தாமிராவின் பிப்ரவரி மாத சம்பளத்தை கொண்டு மொத்தமாக தங்கம் வாங்கி அப்படியே அதை பஸ்பம் செய்து தாமிராவின் மூக்கை பிடித்து ஊற்றி விட்டாராம். அன்றிலிருந்து தாமிரா ஜொலிக்கிறாராம். அதை தான் பதிவாக போடப்போகிறாராம். பண கஷ்டம் உள்ளவர்கள் தாமிராவை லேசாக சுரண்டி கொள்ளலாம். தங்கமானவர் என்ற சொல்லுக்கு ஏற்றவர்.
//

எனக்கு ஒரு பத்து பவுனு வேணுமே வால்பையன் கிடைக்குமா அவிக அட்ரஸ் கொஞ்சம் தாரீங்களா?

RAMYA said...

//
அபி அப்பா said...
//அபிஅப்பா
கோழைசேகர விலாஸ்
தற்போது எழுதிவரும் விரசேகர விலாஸ் பயங்கர மொக்கை என்று பல நண்பர்கள் சாட்டில் முரட்டியதால், இந்த மொக்கையை கூட படிக்க முடியாத கோழை சேகரர்கலா என்று பதிவிடப்போகிறாராம். கண்டிப்பாக இந்த பதிவிலும் கல்யாணம் உண்டு ஆன கடைசி வரை பந்தி என்ற வார்த்தையை கூட பயன்படுத்த மாட்டாராம். பசியோடு இருப்பவர்கள் வேறு கடையை பார்ப்பது நல்லது.
//

அட வாலு! உனக்காகவே அதை இன்னும் 4 பாகமா இழுத்து உன்னை கட்டி போட்டு உன் கண்ணை பழுக்க வக்கிறேன்!
//

இதுதான் சரியான கொல வெறி !!!

RAMYA said...

////ரெண்டு வரி சொல்லுங்கன்னு கேட்டேன்

டக் டடக் டக்
டடக் டக் டடக்
டக் டடக் டக்
டடக் டடக் டக்
டக் டக் டடக்//
//

இந்த இரெண்டு வரி சூப்பர் ஒ சூப்பர்
இரெண்டே வரி தானே சரி சரி
ஒத்துக்கறோம்!!!

RAMYA said...

//
கும்க்கி said...
தாமிரா said...

எனக்கு ஒரு கால் கிலோ வேண்டும், சுரண்டினால் லேட் ஆகும், அர்ஜெண்ட் ஆர்டர் என்றால் என்ன செய்யவேண்டும்!?//

தங்கம் விலை ஏறிட்டே போகுது..
பாதுகாப்பு படையுடன் செல்வது உசிதமாகப்படுகிறது.

//

Note this point...........

Unknown said...

// தங்கமணி செய்த தங்கபஸ்பம் //

நானுமு இத ட்ரை பன்னலாமுன்னு நெனச்ச... நெல்லவேள ... நீங்க இந்த பதிவ போட்டுபுடீங்கோ .... இல்லீனா நானும் கக்கூச 10 நாளைக்கு புக்கு பநீட்டு கோந்துட்டு இருப்பே ..............// கோழைசேகர விலாஸ் //

தெப்புடியோ..... வடைல பருப்பு வெந்தா சேரிங்கோவ் ....// உழைப்பால் உயர்ந்த காக்கை,குருவி சாதிகள் //

காக்காயே 5 ரூவா பிரியாணியாயி எலைக்கு வந்துருசாமா .. இதுல அதுக்கு வேற எல வேணுமா .........?????// பாட்டி கதைகள் //

அட இபெல்லாம் அவிங்களுக்குதானப்பா ட்ரெண்டே .... அடுத்து மணிரத்னம் சாருகோட பாட்டிங்கள வெச்சு "அஞ்சலி " மாதிரி ஒரு படம் பண்ண போறாரு சாமி ....... இதுக்கு கார்கி எவ்வளவோ பரவால்ல போ ............

// கட்டுதறியும் கவிபாடும் //

டக் டக் டக் டக் ... இது ஏதோ சகிலா படத்துல வர மியூசிக் மாதிரி தெரியுதே......

// கேள்வி கேட்டு அலுத்து போச்சு //

" என் கேள்விக்கு என்ன பதில் " ன்னு ஒரு புக்கு போட்டா ஸ்கூலு பசங்க சுடோகு போக்கு மாதிரி இதையும் வாங்கி பதிலு எழுதறதுக்கு ட்ரை பண்ணுவாங்கோ ....
யோவ் வாலு ... நீ எழுதுனத எங்கையா ...??? பதிவுல போடவே இல்ல .............ஊருல யாரு பதிவு போட்டாலும் .. அத காப்பி பண்ணி , அத வெச்சு கும்மியடிக்க வேண்டியது ... இதுல வேற பாகம் 1 .. பாகம் 2 ... நல்ல பொழப்புயா......

gayathri said...

அவரது பெரும்பாலான பதிவுகள் கேள்வி குறியுடன் தான் முடியும்.

eaan appadi??????????????

வால்பையன் said...

நன்றி செய்யது

நன்றி ஜமால்

நன்றி மகேஷ்
”வால்ப்பு” வாய்ப்பு கிடைச்சா போட்டு தாக்குறிங்களே

நன்றி அபிஅப்பா
அது தெரிஞ்ச விசயம் தானே!
தொடரட்டும் உங்கள் கொலைவெறி

நன்றி குசும்பன்
குருவே கலக்கல் பாராட்டுறார்
நெம்ப சந்தோசம்

நன்றி வெண்பூ

நன்றி தமிழ்நெஞ்சம்

நன்றி விஜய்கோபால்சாமி
இது நட்புரீதியான காலாய்த்தல்

வால்பையன் said...

நன்றி ச்சின்னப்பையன்

//வால், அந்த "பச்சை மனிதன்" டிக்கெட் இருந்தால் உங்கள் மொபைலில் படம் எடுத்து என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்புங்களேன். //

மன்னிக்கனும் போனவாரம் தான் அதை கிழித்து தூக்கி எறிந்தேன்

நன்றி டோண்டு சார்
அந்த படத்தின் பெயர் வேல்,
சூர்யா இரட்டை வேடத்தில் ந்டித்திருப்பார்

நன்றி இராகவன் நைஜிரியா

நன்றி கார்க்கி

நன்றி ஜிம்ஷா
கேள்விகுறியை அதிகமாக பயன்படுத்தும் நீங்க தான் அதை சொல்லனும்

நன்றி கும்கி
ஐயோ ஐயோ அது வந்து...
வேணா அப்புறம் திட்டு விழும்

நன்றி தாமிரா
உங்க சம்பளத்துல கோலார் சுரங்கத்தையே வாங்கலாம்னு பேசிகிட்டாங்களே!

நன்றி தேனியார்

நன்றி ரம்யா
தாமிரா சென்னையில தான் இருக்கார்!
அசந்த நேரத்துல ஒரு அரைகிலோவை லவட்ட வேண்டியது உங்க சாமார்த்தியம்

நன்றி மாதேஷ்
உங்கள் பின்னூட்டதிற்கு பிறகு தான் பதிவு முழுமையடைகிறது

நன்றி காயத்திரி
ஏன்னா அவருக்கு கேள்விஞானமாம்!
எனது பதிவுகள் ஆச்சர்யகுறியுடன் முடியுறதால எனக்கு ஆச்சர்ய ஞானமான்னு கேட்காதிங்க

Anonymous said...

all da best

!

Blog Widget by LinkWithin