திமுக-காங்கிரஸ்

ராஜிவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு இலங்கைக்கு அமைதிபடை என்ற பெயரில் அராஜக படையை அனுப்பியதே இது இரு நாட்டு பிரச்சனையாக மாற இருந்த ஆதார புள்ளி.

ஆனால் அதற்கு பிறகும் திமுக காங்கிரஸும் கூட்டு வைத்தது. அமைதிபடையை அனுப்பியது இலங்கை ராணுவத்துக்கே பிடிக்கல, ஒரு இலங்கை ராணுவ வீரன் ரைபிளை தூக்கி ராஜிவ் நடுமண்டையில் போட தெரிந்தான்., மயிரிழையில் தப்பியது ராஜிவ் உயிர். ஒருவேளை அப்ப போயிருந்தா விடுதலை புலிகள் பற்றி இன்னைக்கு காங்கிரஸ் மற்றும் திமுக நிலைபாடு என்னவா இருக்கும் என்று ஐயப்பாடு எனக்கு பல ஆண்டுகளா இருக்கு

ராஜிவ் கொலையில் கூட்டு சதி செய்ததாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஏழுபேருக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றிய பொழுது அதை எதிர்த்து மனு செய்தது திமுக தலைமையிலான மாநில அரசு. தமிழர் உணர்வை விட காங்கிரஸ் தயவு மட்டுமே போதும் என திமுக எடுத்த நிலைப்பாடு அது.

இறுதி யுத்தத்தின் பொழுது கருணாநிதியின் ஒரு மணி நேர உண்ணாவிரத நாடகம் எல்லாருக்கும் தெரியும். ஆனா அந்த சமயம் கூட காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளிவரவில்லை. ஆ.ராசா, கனிமொழி மீதான 2ஜி வழக்கு அழுத்தம் கொடுத்த காரணம் தான் திமுக கூட்டணியில் இருந்து வெளி வந்தது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் களம் கண்டது.



அந்த சமயத்தில் எந்த உளந்தம் பருப்புகளும் விடுதலைபுலிகள் பற்றியோ, பிரபாகரன் பற்றி எந்த விமர்சனமும் வைக்க வில்லை. அதிமுக அரசு பிரபாகரன் படம் பயன்படுத்தக்கூடாது என்று சொன்னபொழுது கூட திமுக அதை ஆதரித்து அறிக்கை விட வில்லை. ஆனால் 2016 காங்கிரஸ் கூட்டணியுடன் சட்டமன்ற தேர்தலை சந்தித்த பொழுது பிரபாகரன் தான் மொத்த போருக்கும் காரணம் என்று சராமாரியாக புகார் எழுப்பினர். காங்கிரஸிடம் இருந்து என்ன ஆதாயம் கிடைத்ததோ.

சமீபமா உளுந்தம் பருப்புகள் காமராஜரையும், கக்கனையும் விமர்சித்து வருகின்றனர். ஓட்டு வாங்க ஆளும் கட்சியான அதிமுகவை விமர்ச்சிக்கனுமா இல்ல கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களை விமர்ச்சிக்கனுமா?

இப்ப என் கேள்வி என்னான்னா?
அதிமுகவின் பி டீம் மதிமுகவா இல்ல திமுகவா?

#வால்பையன்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin