சாதிவெறி அலப்பறைகள்!

முக்குலத்துபிரசாத் சண்டியர்
vanakam

வால் பையன்
வணக்கம்

முக்குலத்துபிரசாத் சண்டியர்
நீங்க கதை எழுதுபவரா

வால் பையன்
கதையும் எழுதுவேன்

முக்குலத்துபிரசாத் சண்டியர்
அப்ப தலித் தேவர் சமூகத்த பத்தியும் எழூதுவிங்களோ

வால் பையன்
எல்லாத்த பத்தியும்

முக்குலத்துபிரசாத் சண்டியர்
நீங்க என்ன சமூகம்னு தெரிஞ்சுகளாமா

வால் பையன்
நான் சாதி, மத மறுப்பாளன்

முக்குலத்துபிரசாத் சண்டியர்
நீங்க தேவர் இனத்தை இழிவு படுத்தி பேசியபோல் உள்ளதே

வால் பையன்
தேவர் இனத்தை மட்டுமல்ல, பிறரை மதிக்காத யாரையும் விமர்சிப்பேன்

முக்குலத்துபிரசாத் சண்டியர்
நாங்கள் யாரை மதிக்க வில்லை எங்கள் மேல் தான் முழு தப்புமா

வால் பையன்
தப்பு பண்றவங்களை விமர்சிப்பேன்னு சொன்னேன், என் எழுத்தை எங்கயாவது பார்த்திருந்தால் அதிலேயே விளக்கம் இருக்கும்

முக்குலத்துபிரசாத் சண்டியர்
நீங்கள் தேவர் இனத்தை சாதி வெறியர்கள் என்று சித்தரித்துள்ளீர்கள் அது எவ்விதத்தில் நீங்கள் கூறலாம்

வால் பையன்
சாதி வெறியோட இருக்குறவங்களை வேற எப்படி சொல்றது?

முக்குலத்துபிரசாத் சண்டியர்
அப்டி பாத்தா எல்லோரும் சாதி வெறியர் தான் இருக்காங்க நாங்க என்ன சாதி பெயர சொல்லி ஆட்டமா போடுறோம் வரூஷம் ஒருமுறை ஆட்டம் போடுவது தப்பா

வால் பையன்
தனது பெயருடன் சாதி சேர்த்து கொள்வதே நான் உன்னை விட பெரியாள்டா என காட்டும் ஆணவம் தான். இதுல வருசத்துக்கு ஒருக்கா தனியா வேற ஆடனுமா
பெயருடன் சாதி சேர்த்திருக்கும் யாரும் சாதி வெறியர் தான் என்னை பொறுத்தவரை

முக்குலத்துபிரசாத் சண்டியர்
அப்ப நீங்க எங்கள அந்த தலித் இனத்தோட சேர்த்து அவர்களை நாங்கள் இழிவு படுத்துவது போல் எழுதி இருக்கிறீர்கள்

வால் பையன்
இழிவு படுத்திய போதெல்லாம் எழுதியிருக்கேன்

முக்குலத்துபிரசாத் சண்டியர்
எழுதுவதற்கு அரசாங்கத்திடம் உத்தரவு வாங்கி உள்ளீர்களா

வால் பையன்
எழுதக்கூடாதுன்னு அரசாங்கம் சட்டம் போடல

முக்குலத்துபிரசாத் சண்டியர்
எழுதுவதற்கு அரசாங்கத்திடம் உத்தரவு வாங்கி உள்ளீர்களா
எழுதுவதற்கு அரசாங்கத்திடம் உத்தரவு வாங்கி உள்ளீர்களா

வால் பையன்
எழுதக்கூடாதுன்னு சொன்னா தானே உத்தரவு வாங்கனும். விட்டா நான் கக்கூஸ் போறதுக்கு அரசாங்கத்திடம் உத்தரவு வாங்க சொல்விங்க போலயே. இது ஜனநாயக நாடு சார்

முக்குலத்துபிரசாத் சண்டியர்
அவர்கள் எங்களுக்கு கொடுமைகள் பண்ணும் போது அதை எழுத உங்கள் கை கோணி எழுத முடியவில்லயா

வால் பையன்
உங்களுக்கு யார் கெடுத்தல் பண்ணாலும் நிச்சயம் எழுதுவேன். எழுதியிருக்கேன். அது உங்க கண்ணில் படல போல

முக்குலத்துபிரசாத் சண்டியர்
நீங்கள் தெய்வீக திருமகனார் தேவர் ஐயாவை இழிவு படுத்தி பேசியது போல் உள்ளதே

வால் பையன்
அவரு உங்களுக்கு தெய்வம், எனக்கு நம்மை போன்ற சக மனிதர். அவர் பிறரை பற்றி தவறாக பேசியதை விமர்சித்திருக்கலாம்

முக்குலத்துபிரசாத் சண்டியர்
சுந்திர நாட்டில் அடுத்தவர்கள் மனம் புண்படும் படி பேசுவது கண்டிக்க தக்க ஒன்று

வால் பையன்
நான் பேசுவது உங்கள் மனதை புண்படுத்தினால் உங்கள் நம்பிக்கையில் பிசிறு
உங்களுக்கு தெய்வமா இருக்குறவரு, உங்களை காப்பாற்றுவாருன்னு நம்புங்க. அவரை காப்பாத்த எங்கிட்ட பேச
வேண்டியதில்லையே

முக்குலத்துபிரசாத் சண்டியர்
அவர நாங்க காப்பாற்ற வேண்டியதில்லை ஒரு காலத்தில் இந்த தமிழ்நாடயே அவர் தான் காப்பத்துனாரு அவரின் பிச்சையில் தான் இன்னும் சிலர் வாழ்கின்றனர்

வால் பையன்
அவ்வாறு நீங்கள் நம்பலாம், அதையே நானும் நம்பனும்னு அரசாங்கம் சட்டம் போட்டால் பார்க்கலாம்

முக்குலத்துபிரசாத் சண்டியர்
சாதி வெறியர்கள் என்று எங்களை சொல்ல உங்களுக்கு என்ன உரிமை உள்ளது

வால் பையன்
சாதி வெறியோட இருக்குறவங்களை வேற எப்படி சொல்லனும்?

முக்குலத்துபிரசாத் சண்டியர்
பெருமை பட கூடிய இனத்தில் பிறந்து எங்கள் பெருமையை உரைத்து எங்கள் வரலாறை போற்றுவது சாதி வெறி ஆகுமா

வால் பையன்
எல்லாரும் மனுசனா தான் பிறக்குறாங்க? அதுல பெருமை என்ன வேண்டிகிடக்கு? மத்தவங்களை விட உங்களுக்கு ரெண்டு கை எக்ஸ்ட்ரா இருந்தா தாராளமா பெருமை பட்டுக்கோங்க
Seen 5:04pm 

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin