இங்கே உத்தமர் என்று எவருமில்லை!

ஊழல் வழக்கில் சிக்கி ஒரே ஒரு விசாரணைக்கு மட்டும் ஆஜராகி லண்டன் ஓடிப்போட லலித் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் செய்த உதவி சட்டப்படி தவறு.அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, ஆனால் அதை காங்கிரஸ் அரசியல் பண்ணுவது தான் சகிக்கல.

லலித் மோடி நிதி மோசடி செய்தவர். அவரால் இந்திய பொருளாதாரத்திற்கு இழப்பு ஆனால் உயிர் இழப்பு இல்லை.

போபாலில் விசவாயு கசிந்து ஏற்பட்ட விபத்தின் காரணமாக இன்றும் அங்கே குழந்தைகள் ஊனமாக பிறக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா. அந்த ஒவ்வொரு குழந்தைக்கும் பதில் சொல்ல வேண்டியது காங்கிரஸ். அந்த நிறுவனத்தின் தலைவரை பத்திரமாக அனுப்பி வைத்தது காங்கிரஸ், சென்ற வருசம் தான் ஆண்டர்சன் அமெரிக்காவில் உயிர் இழந்தார்.

பணம் படைத்தவர்களுக்கு சொம்பு தூக்குவதில் காங்கிரஸ் பாஜகவிற்கு வித்தியாசம் இல்லை.

என்னை போன்ற கடவுள் மறுப்பாளர்களையும், மாற்று மத சிறுபான்மையினரையும் உங்களை எங்களுக்கு பிடிக்காது என வெளிப்படையாக சொல்வதால் நமக்கு பாஜக எதிரி. நம்மால் பாஜகவின் நடவடிக்கைகளை கவனித்து கொண்டு இருக்க முடியும். எச்சரிக்கையுடனும்.ஆனால் காங்கிரஸ் அப்படியல்ல, நாங்க தான் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தோம்னு கதை பேசிகிட்டே பெரிய வாழப்பழமா வாயில் திணிச்சிட்டு போகும் துரோகி.

ஒன்றை விதவையின் பழிவாங்கும் நோக்கிற்காக லட்சம் பெண்களை விதவையாக்க உதவி செய்த பஞ்சாமாபாதகர்கள்.

எதிரி நேருக்கு நேர் சண்டையிடுவான், அவனை சமாளிக்கலாம். துரோகி முதுகில் கத்தி ஏத்துவான். அவனிடம் தான் எச்சரிக்கையாக இருக்கனும்.

தமிழகத்தின் சாபம் திமுக,அதிமுக
இந்தியாவின் சாபம் காங்கிரஸ், பாஜக

தெளிவான மனிதன் இரண்டையும் ஒதுக்க வேண்டும்.

1 வாங்கிகட்டி கொண்டது:

Vinoth Subramanian said...

nalla pathivu sir.

!

Blog Widget by LinkWithin