நான்கு ஆண்டு ஆட்சியில்

ஊழியர்களின் வைப்பு நிதியில் கை வைக்கிறது புதுசேரி அரசு, திவாலாகி விட்டதா என பத்திரிக்கை செய்தி பார்த்திருக்கலாம். புதுசேரிக்கே அந்த கதின்னா தமிழ்நாட்டுக்கு.

ஜெயலலிதா பதவி ஏற்றதும் என்னுடைய “ஏன் விடுதலையை ரத்து செய்ய வேண்டும்” பதிவை கமெண்ட் போட்டு மேல கொண்டு வர்றாரு மாயவரத்தான். பங்காளி ராஜனுக்கு அடுத்து நான் தான் போல.

கடந்த நான்கு ஆண்டு அதிமுக ஆட்சியில் ஆட்சிக்கு வந்த உடன் கொண்டு வந்த அம்மா உணவகம் தான் மரணமாஸ். அதின் பின் இலவச லேப்டாப் மற்றும் இன்னபிற இலவங்கள் மட்டுமே பேசப்பட்டன, வளர்ச்சி திட்டம்னு பார்த்தா ஒரு மண்ணாகட்டியும் இல்ல.

டாஸ்மாக் மட்டுமே அரசின் வருவாயா இருக்கும் அவலம் உலகத்தில் வேற எந்த மாநிலத்துக்கும் இருக்காதுன்னு நினைக்கிறேன். கஜானாவில் காசு இல்லாதபோது இந்தமாதிரி தொழிலாளர்களின் வைப்பு நிதியில் கைவைப்பது அரசின் வேலை தான், ஆனால் இதுவரை அரசின் கடனாக இருந்த ஒருலட்சம் கோடியை வந்த நான்கே ஆண்டில் இரண்டு லட்சம் கோடியாக மாற்றிய அரசு வருவாய்க்கு என்ன திட்டம் வைத்திருக்கின்றது?

மீதம் இருக்கப்போவது ஒரே வருடம். அதற்குள் நல்லபேர் வாங்க பார்க்குமா அல்லது நிதி நெருக்கடியை சமாளிக்க வெளிநாட்டி முதலீடு எப்படி வந்தாலும் சரின்னு மீண்டும் ஒரு கோலா கம்பெனியை பெருந்துறைக்கு கொண்டுவருமா?

விசன் 2020 என்பது அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் முக்கிய இடம் வகித்தது, அதற்காக ஒருதுறையை உருவாக்கியது ஆனால் ஒரு இலையை கூட கிள்ளிபோடவில்லை என்பது மொத்த தமிழகத்துக்கும் தெரியும்.

மக்களுக்கு திமுக மீது இருக்கும் வெறுப்பை மட்டுமே வைத்துகொண்டு மீண்டும் ஆட்சியை புடிச்சுவிடலாம் என்பதே அதிமுகவின் கனவாக இருக்கின்றது.

சிறுகட்சிகள் ஒன்று சேர்த்து கூட்டணி அமைத்தால் நிச்சயம் அது அதிமுகவுக்கு ஆப்பாக தான் அமையும். இருக்கும் ஒரு வருடத்தாலாவது மக்களுக்கு நலதிட்டத்தில் அறிவித்து நல்லபெயர் எடுத்தால் கொஞ்சமாவது கட்சிக்கு மரியாதை இருக்கும்.

பழையபடி மமதையில் ஆடினால் எம்.ஜி.ஆர் மாதிரி தொடர்ந்து ஆட்சியை பிடிப்பது கனவாகத்தான் போகும்.

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin