கடவுள்!.............


ஒருவன் எவ்ளோ பெரிய பக்தி பலாப்பழமாக இருந்தாலும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது உண்மையில் இந்த கடவுள் இருக்கா இல்லையா என யோசிப்பான். அப்படி யோசிப்பவனை திரும்ப இழுத்துப்போட்டு மதத்திற்குள் வைத்திருப்பதே மதத்தின் வெற்றி!

கடவுள் இல்லையென்றால் மதம் இல்லை. மதம் இல்லையென்றால் பிரிவினை இல்லை. பிரிவினை இல்லையென்றால் சண்டை இல்லை. இவ்வுலகில் நில ஆக்கிரமிப்பிற்காக நடந்த போர்களை விட அதிக மக்கள் மதசண்டையில் கொல்லப்பட்டுள்ளனர் என்றால் நீங்கள் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்.

கிறிஸ்தவனிடம் பேசினால் சிலுவையை பற்றிய உபதேசம் பிறருக்கு பைத்தியமாய் இருக்கிறது என்பான். இஸ்லாமியனுக்கு முஸ்லீம்கள் தவிர மற்ற அனைவரும் காஃபீர்கள். இந்துவிடம் பேசினால் நீ கடவுளை மறுத்தாலும் இந்துதான்னு பெரிய குண்டாத்தூக்கி போடுவான். ஆனா கடைசி வரை ஏன் கடவுள் எதற்கு கடவுள்னு யோசிக்க மட்டும் மாட்டான்.

ஆதியில் இருந்தே மக்கள் குழுமத்தை ஒரு தலைவன் நிர்வாகிக்கும் பழக்கம் மனித இனத்திற்கு உண்டு, அவன் என்ன சொன்னாலும் கேட்கனும் அப்பொழுது கடவுள் என்ற பதம் இல்லையேயொழிய அரசன் கடவுள் மாதிரி தான் நடத்தப்பட்டான். அவன் சிறப்பு பிறப்பு அவன் வம்சாவழிகளே மீண்டும் நம்மை நிர்வாகிக்க தகுதியானவர்கள் என்ற கட்டம் வரும்பொழுது அதில் சிக்கல் ஏற்படாமல் இருக்க அவனை முன்னிறூத்தி பல வழிபாட்டு துதிகளையும் பாடச்சொன்னேன். காலம் காலமாக அது தொடர்ந்து வருகிறது.

ஆதிகாலத்துக்கு மனிதனுக்கு இயற்கையின் மேல் இருந்த பயத்தை விட மரணத்தின் மேல் அதிக பயம் இருந்தது. அதுவரை அனுபவித்ததை அப்படியே விட்டு செல்லவேண்டும் என்பதை அவனால் ஜீரணிக்கமுடியவில்லை. இறப்பிற்கு பின் என்ன என்ற குழப்பத்தில் ஒருவனுக்கு ஏற்பட்ட கனவே மறுஜென்மத்திற்கான முதல் விதையை விதைத்தது. ஆம் ஒருவனது கனவில் வந்த இறந்தவன் அவனை குழப்பினான். அவன் எங்கே இருக்கிறான் எப்படி வந்தான் என யோசித்தவன் முடிவில் இதுவல்லாது எதோ ஒரு உலகம் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான்.

தகவல் தொடர்பே ஒன்றை தொட்டு அடுத்ததற்கு நம்மை யோசிக்க வைத்தது, அன்றிருந்த குறைந்தபட்ச தகவல் தொடர்பிற்கு அதற்கு மேல் மனிதனால் சிந்திக்கமுடியவில்லை. எதோ ஒன்று இருக்கிறது என்று முடிவுக்கு வந்தவன் நாளடைவில் அதற்கு உருவம் கொடுத்தான். குழுக்கள் பிரிந்தது ஒவ்வொருவரும் அவர்கள் வசதிகேற்ப வழிபாடுகளை வைத்துக்கொண்டனர். ஆபிரஹாம மதத்தின் தோற்றம் வரை உலகில் உருவ வழிபாடு மட்டுமே இருந்தது.

ஆபிரஹாம மதத்தின் தோற்றத்தின் போதே இந்தியசுற்று வட்டார பகுதிகளில் த்வைதம், அத்வைதம் என்ற உருவ மற்றும் உருவமற்ற வழிபாட்டு சிக்கல்கள் உருவாகின. கடவுளை மனிதனைப்போல் காது, மூக்கெல்லாம் வச்சு, தினம் காலையில் மனிதனைப்போலவே கக்கா போக வைப்பதெல்லாம் அவனால் ஏற்றுக்கொள்ள முடியாததே அதற்கு காரணம். நன்றாக சிந்தித்தி பார்த்தீர்களேயானால் உலகில் உள்ள மதம் அனைத்திற்கும் ஒன்றிற்கொன்று தொடர்பிருப்பது தெரியும்.

இன்று பகுத்தறிவு இல்லாத மனிதனே இல்லை M370 விமானம் ஆஸ்திரேலியாவிற்கு மேற்கே விழுந்து விட்டதாம் என்றால் தெக்கால போக வேண்டிய விமானம் ஏண்டா வடக்கால வந்துச்சு என உலக வரைபடம் தெரிந்த ஒவ்வொருவனும் கேப்பான். ஒருவிசயத்தின் அதிகபட்ச சாத்தியகூறுகளை ஆராய்வதே பகுத்தறிவு. கடவுள் விசயத்தில் மட்டும் ஏன் பலருக்கு பகுத்தறிவு வேலை செய்வதில்லை என தெரியவில்லை.

சிலரால் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அது கடவுள் செயல் என கன்னத்தில் போட்டுகொண்டு ஒதுங்கி சென்று விடுகிறான். அதை புரிந்து கொள்ள சிரத்தையே மேற்கொள்ளாதவன் கலைக்டர் போறார் கோயிலுக்கு, முதலமைச்சர் போறார் கோவிலுக்கு அவங்க என்ன முட்டாளா அதுனால நானும் போவேன் என்கிறான். சுயமா அறிவில்லாதவன் தான் அடுத்தவன் பண்ணான் நானும் பண்ணேன்னு சொல்லுவான்.

காலம் காலமாக தொன்று தொட்டு வந்த வழக்கம் என்பதால் உளவியல் ரீதியாக கடவுள் வழிபாடு சிறிது மன அழுத்ததை குறைக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன் ஆனால் அதுவே தீர்வாகாது. எதாவது ஒருகட்டத்தில் அதுவே உங்களுக்கு அதிக மன அழுத்தத்தைக்கொடுக்கலாம். உங்களது இயற்கை கடமைகளிலிருந்து நீங்கள் விடபட நினைக்கத்தோன்றும் அளவிற்கு கடவுள் பக்தி உங்களை இழுத்துச்செல்லும். பயந்து ஓடுபவர்கள் என அதை கடவுள் மறுப்பாளன் சொல்லுவான்

இவ்வுலகை படைத்தது கடவுள் என்றால் கடவுளை படைத்தது யார்?
கடவுள் சுயம்பு என்றால் ஏன் இவ்வுலகம் சுயம்பாக இருக்கக்கூடாது. இந்த பிரபஞ்சத்தை என்றேனும் பார்த்துள்ளீர்களா? அதற்கு முன் நாம் அணுவிலும் ஆயிரம் கோடி மடங்கு சிறியவர்கள். ஆனால் அந்த பிரபஞ்சத்தை அறியும் அறிவை பெற்றுள்ளோம். கற்றதை தகவல் தொடர்பு மூலம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றால் மட்டுமே இதற்கொரு தீர்வு கிடைக்கும். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதால் எந்தவித பயனும் இல்லை. எத்தனையோ கோடி பேர் பிறந்தது போல் நீயும் பிறந்தாய் செத்தாய் அவ்ளோ தான்.

இப்பிரபஞ்சம் உருவாக கடவுள் தேவை என்பவர்கள் உரையாடலுக்கு வரலாம்!

5 வாங்கிகட்டி கொண்டது:

இரா.சி said...

நான் வாசித்த சிறந்த கட்டுரைகளில் உங்களின் இந்த கடவுள்!... எனும் பதிவும் ஒன்று.

//சுயமா அறிவில்லாதவன் தான் அடுத்தவன் பண்ணான் நானும் பண்ணேன்னு சொல்லுவான்.//

மேற்கண்ட வரிகளுக்கும் தற்போதைய தேர்தலுக்கும் சம்பதம் உண்டா?

இரா.சி said...

//சுயமா அறிவில்லாதவன் தான் அடுத்தவன் பண்ணான் நானும் பண்ணேன்னு சொல்லுவான்.//

மேற்கண்ட வரிகளுக்கும் தற்போதைய தேர்தலுக்கும் சம்பதம் உண்டா?

வருண் said...

வால்: பண்டாரங்கள் பெருத்துக் கொண்டு வரும் உலகம் இது. நீங்க என்ன மொதல்ல இருந்தா? :)))

இவர்களுக்கு கடவுள்னு யாரையாவது கட்டி அழணும்!

எப்படி?

/// பரம்பொருளே! என்னைக் காப்பாத்து, நான் அயோக்கியன், பாவி நான், என் சிந்தனைகளெல்லாம் கேவலமா இருக்கு, சுயநல்ம்பிடிச்ச கேவலமானவன் நான். ஆனா இதை ஒரு பயட்ட சொல்ல முடியாது. அதுக்குத்தான் நீ இருக்கியே? எல்லாத்தையும் உன்னிடம் மட்டும்தான் சொல்ல முடியும்! யார்ட்டையும் நீ சொல்ல முடியாது பாரு..ஏன்னா நான் சொன்னால் என்னைக் கேவலமாப் பார்ப்பாணுக. அவனுக நடிக்கிறமாரியே நாணும் நடிச்சாகனும். நான் என்ன பரிகாரம் செய்யப்போறேன்னா..நான் அயோக்கியத்தன்ம் பண்ணிக்கிட்டே உன்னை டெய்லி வணங்குறேன். நீதான் எல்லாம்னு சொல்றேன். நீ என்னை கவனிச்சுக்கோ. சொர்க்கத்துக்கு ஒரு டிக்கட் நமக்கு மட்டும் ஒதுக்கிரு! நமக்குள்ள ஒரு டீல்! சரியா? சொர்க்கத்துக்கு வந்தும் அயோக்கியத்தன்ம் பண்ணத்தான் செய்வேன். ஆனால் உன்னை தொடர்ந்து வணங்குவேன் பரம்பொருளே!///

இப்படித்தான்! :)

பகத்ர்கள் என்பர்கள் மன்வியாதியஸ்தர்கள். கடவுள் என்பது அவர்களுடைய "கற்பனை டாக்டர்" அவ்ளோதான்! :)

Stay smile said...

அருமை அருமை...

ssk said...

சிறப்பான கட்டுரை ..
ஆனால் நாம் எதை சொன்னாலும் இதை உனக்கு புரிய வைக்க முடியாது, இது உணர வேண்டியது என்று பண்டாரங்கள் நம்மை மடக்கி விடுகின்றன. உனக்கு இன்னும் பக்குவம் வேண்டும் உள்ளத்தில். பிறகு நீயும் உணர முடியும் என்கிறார்கள்.

!

Blog Widget by LinkWithin