மரண தண்டனையை எதிர்க்கிறேன்!

குற்றங்கள் நடக்கையில் பொதுமக்கள் பெரும்பாலோர் உணர்ச்சி அடிப்பையிலேயே அதை அணுகுகின்றனர்.
அதிகபட்ச தண்டனை/கடுமையான தண்டனை என்றாலே அவர்களுக்கு கண் முன் மரண தண்டனை தான் வந்து நிற்கிறது.

மரணதண்டனை பெற்ற கைதி மரணத்தின் போது ஐந்து நிமிடம் அந்த வலியை அனுபவிப்பானா? அதன் பின்?

மரணம் தண்டனை அல்ல, விடுதலை என நான் ஆரம்பத்திலிருந்தே வலியிறுத்தி வருவதன் காரணம் அதுதான், மரண தண்டனையால் குற்றங்கள் குறையும் என எந்த நாட்டிலும் நிரூபிக்கப்படவில்லை. அதனால் பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது, ஒரு மரண தண்டனையால் குற்றவாளியால் கொல்லப்பட்டவர் எழுந்து வரபோவதில்லை.

ஏன் குற்றங்கள் என சமூகம் ஆராய்வதேயில்லை, வேலையின்மை, அங்கிகாரமின்மை, ஆதிக்க மனப்பான்மை(ஆதிக்கசாதி மனப்பான்மையும் தான்), பாலியல் வறட்சி கூடவே குடி இப்படி சமூகமே ஒரு மனிதனை குற்றம் செய்ய தூண்டும் பொழுது எவ்வாறு நாம் தண்டனையின் மூலம் மட்டுமே குற்றங்களை குறைத்து விட முடியும் என நம்புவது?

குற்றவாளியின் மனநிலையையும், குற்றம் செய்ததற்கான காரணங்களையும் ஆராயும் பொழுது அந்த சூழ்நிலை மற்றவர்களுக்கு ஏற்படாமல் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த முடியும். அதன் பொருட்டு எந்த சிரத்தையும் எடுத்துக்கொள்ளாதது அரசாங்கத்தின் தவறு.

சமூகம் நல்ல ஆண்மகனை வளர்க்க தவறுகிறது, அவன் செய்யும் குற்றங்களுக்கு பெண்கள் மேல் பழிபோடுகிறதும் ஆம்பளைன்னா அப்படி இப்படித்தான் இருப்பான் என்ற மனநிலையை சமூகத்தில் திணித்தது குறித்து இச்சமூகம் வெட்கமோ, வேதனையோ அடைந்ததாக தெரியவில்லை.



ஒவ்வொரு குற்றவாளியின் பிண்ணனியிலும் ஒரு மோசமான குடும்ப சூழ்நிலையும், சமூக அமைப்பும் இருக்கிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா? மரண தண்டனையினால் குற்றங்கள் குறையும் என்றால் நாட்டில் முக்கால்வாசி பேரை தூக்கில் போட வேண்டுமே. அத்தனை வஞ்சங்களும் நெஞ்சில் வைத்துக்கொண்டு தானே அலைகிறான்.

பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்ற பழிவாங்கும் முறையினால் குற்றவாளி செய்த அதே தவறை தானே சமூகமும் செய்கிறது. இதை எவ்வகையில் நியாயப்படுத்தமுடியும். உணர்ச்சிமிக்கவர்களின் ஓட்டைப்பெற அதிகபட்ச தண்டனை வழங்க அரசு உத்தரவிடும் அதே நேரம் ஒவ்வொரு மனிதனின் மனிதனின் மனதிலும் பழிவாங்குவது தவறில்லை என்ற எண்ணமும் வளரும். அரசே எவ்வழியோ மக்களும் அதே வழியே!

3 வாங்கிகட்டி கொண்டது:

Unknown said...

தமிழில் டைப்ப வேலை செய்யவில்லை.

மரண தண்டணையை ஒழிக்க முடியாது.

Anonymous said...

மிகச் சிறந்த கருத்து. என்றுமே மரண தண்டனைகள் குற்றங்களை குறைத்ததே கிடையாது, அது குற்றங்களை மறைக்கவும், குரூரமான சிந்தனைக்குமே வழி வகுக்கும். அதுவும் போக வசதியற்ற அப்பாவிகளின் தலைகளை வாங்கவே மரணதண்டனைகளை ஆதிக்க சமூகம் பயன்படுத்துகின்றது. தீர்வுகளை தண்டனைகளில் தேடுவதை விட, ஒவ்வொருவருக்குள்ளும் சமூகத்தின் வேர்களில் புரையோடியுள்ள அசுத்தங்களை களைவதில் தேட வேண்டும்.

ராவணன் said...

அண்ணே பொதுவாக கருத்து சொல்வது சுலபம். உங்கள் குடும்பத்தில் நடந்தால் குற்றம் செய்தவரை நீங்கள் மன்னித்து விட்டுவிடுவீர்களா?
…இன்னும் பச்சையாக....உங்கள் கண் முன்னே உங்கள் குடும்பத்து பெண் மீது பாலியியல் பலாத்காரம் செய்யும் ஒருவரை என்ன செய்வீர்கள்?

…அது சமூகத்தின் குற்றம் என்று அவரை மன்னிப்பீர்களா?

!

Blog Widget by LinkWithin