இட்லிவடையும் குள்ளநரித்தனமும்!

CBSC பாடத்திடத்தில் மாமிச உணவு உண்பவர்கள் எளிதில் ஏமாற்றுவார்கள், பொய் கூறுவார்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டார்கள், நாணயம் தவறிவிடுவார்கள், கெட்ட வார்த்தை பேசுவார்கள், வன்முறையாளர்களாக இருப்பார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தட்டையான பார்வை கொண்ட சிலர் அது இருந்தால் நமகென்ன, நாம் அதை ஸ்கிப் பண்ணிட்டு போலாமே என்கிறார்கள்.. பார்பனீய தந்திரமோ இந்துமதத்தில் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கு என நம்மை மூளைச்சலவை செய்யப்பார்க்கிறது. இட்லிவடையின் இந்த பதிவில் வீரமணியின் கருத்தை இடைசொருக்கலாக போட்டு நடுநிலையில் நிறபதாக காட்டிகொள்ள நினைத்த இட்லிவடை. அவர்களது மஞ்சள் கமெண்டில் பார்பனீய தந்திரத்தை காட்டியிருக்கிறார்கள். மாற்று ஊடகமான இட்லிவடையின் நிறுவனர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அதன் தலைமை எடிட்டர்கள் பா.ரா. பத்ரி சேஷாத்ரி, என்றென்றும் வம்புடம் ஸாரி அன்புடம் பாலா போன்றவர்கள் தான். இதுமட்டுமல்ல அவர்கள் பதிவில் எப்போதுமே இந்துத்துவா நாற்றம் அல்லது வாடை அடித்து கொண்டே தான் இருக்கும்.

விசயத்திற்கு வருவோம்!

இன்று உலகபிரசித்த பெற்ற முகநூலில் முக்குலத்தோர், வன்னியர்கள், நாடார்கள் தம்மை ஆண்ட பரம்பரை என சொல்லிகொண்டு இருக்கிறார்கள். அவர்களை ஏத்திவிட்டு அழகு பார்ப்பது சந்தேகமில்லாமல் பார்பனர்கள் தாம். பிரித்தாளும் சூழ்ச்சியில் பெயர்பெற்று ஆதிமுதல் வீரம் என்றால் என்னவென்றே தெரியாமல் அரசனை முட்டாளாக வைத்திருந்து அவனுக்கு கூஜாவும் தூக்கி அண்டிபிழைத்த பார்பனர்கள் இன்று வேறு மாதிரியான பிரித்தாளும் சூழ்ச்சியை கையிலெடுத்திருக்கிறார்கள். 

அவர்கள் உருவாக்கிய வர்ணாசிரம படிகட்டும், தொழில்ரீதியாக வைக்கிறோம் என்று சாதி என்னும் பெரும்பேயை ஏவிவிட்டும் இன்று அவர்கள் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள். சிந்திக்க வேண்டும் நண்பர்களே தீண்டாமை எனும் பெரும்பாவச்செயல் இந்தியாவில் உருவாக காரணமே அந்த பார்பனர்கள் தானே, இந்திய அளவில் அம்பேத்காரிலிருந்து தென்னிந்திய அளவில் பெரியார் வரை எதிர்த்து போராடிய தீண்டாமையை கடைபிடித்தது யார். நாமா அல்லது பார்பனீயர்களா? ஆனால் இன்று அவர்கள் விதைத்த நச்சு சிலரை உயர்சாதியாகவும் மற்றவர்களை தாழ்ந்த சாதியாகவும் எண்ண செய்த்து, நீ என் தெருவிற்குள் வரக்கூடாது, என் முன் செருப்பு போடக்கூடாது, தோளில் துண்டுபோடக்கூடாது என சகோதர்களிடையே பகையை மூட்டி விட்டிருக்கிறது.

நான்கு ஆடுகள் ஒன்றாக இருந்த மந்தையை வேட்டையாட முடியாத குள்ளநரி, அவைகளிடம் தனித்தனியாக வேட்டையாடினால் நிறைய புல் கிடைக்குமே என அவர்கள் ஒற்றுமையை கலைத்தது. முடிவு உங்களுக்கே தெரிந்திருக்கும். நாம் சாதியரீதியாக பிரிந்து கிடப்பது நம் சமூகத்தை உயர்த்துவதற்காக என்னும் நஞ்சை விதைத்து நாமே அடித்து சாகும்படி செய்து வைத்திருக்கிறது இந்த பார்பனீய தந்திரம். சாதி என்ன பொருளாதாரமா அது வளர்ச்சியடையவோ? தாழ்த்தியடையவோ? .
அதுனால் நமக்கு பயன் கிடைத்திருக்கிறது, சற்றும் சிந்திக்காமல் ஆட்டைபோல் வாழ நினைப்பது பார்பன குள்ளநரிகளுக்கு கிடைத்த வெற்றி ஆகுமே!

மாமிசம் உண்பதால் மனிதன் மிருகமாவான் என்ற பார்பனீய தந்திரத்தின் மூலம் மீண்டுமொருமுறை உலகின் 90% மக்களை குற்றபரம்பரை ஆக்கும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளது பார்பனீயம்.

பிள்ளைகறி கேட்ட சிவன் என்ன மதம், இரணியனின் குடலை உருவிய நரசிம்மன் என்ன மதம், அர்ஜுனனிடம் கொலை செய்வது உன் கடமை என சொன்ன கிருஷ்னன் என்ன மதம், முனிவரின் வடிவில் போய் அவரது மனைவியை கெடுத்த இந்திரன் என்ன மதம். இவையெல்லாம் கற்பனையாக அவர்களே(பார்பனர்களே) கட்டிவிட்ட கதையாகினும் அதற்கு ஒரு நியாய விளக்கம் சொல்லி சப்பை கட்டு கட்டுவார்கள், அதே நேரம் உண்மையில் வாழ்ந்த அசோகனிடம் ஒரு புத்தபிச்சு அரசனின் கடமை மக்களை வாழவைப்பதே, போர் என்ற பெயரில் கொன்று குவிப்பது அல்ல என்றுரைத்த போதனையினால் மனிதனாக மாறி மக்களுக்காக வாழவில்லையா? , அவர் அன்று சாலை ஓரத்தில் நடத்தொடங்கிய மரம் இன்று வரை தொடரவில்லையா?
எந்த விலங்கும் தனது உணவை வளர்ந்து அதற்கு பாதுகாப்பளித்து, உணவிட்டு அதன் முதிர்சி காலத்தில் உண்பதில்லை, அவ்வளவு ஏன் எந்த பார்பனனுமே தனக்கான உணவை தாமே உருவாக்குவதில்லை(ஒரு சிலர் இருக்கலாம், அவர்கள் பார்பனியத்தை துறந்திருப்பார்கள்). மனிதன் மட்டுமே அவைகளை வளர்த்து பின்  உண்கிறான். அவைகளின் எண்ணிக்கை குறையாமல் பூமியில் பாதுகாத்தும் கொண்டிருக்கிறான். தாவரங்களுக்கும் உயிருண்டு அதிலும் தாவரங்களில் மாமிசம் உண்ணும் தாவரமும் உண்டு என நிரூபிக்கபட்ட பின்னும் நம்மை ஏமாற்றிபிழைக்க நினைக்கும் பார்பனீய தந்திரத்தை என்னவென்று சொல்வது!

பரிணாமத்தில் கோரைபற்களை இழந்த மனிதன் அப்பட்டமான மாமிசபட்சினியே, தாவர உணவிற்கும் மாறியதால் அவனுக்கு பச்சை மாமிசத்தை சொறிக்கும் தன்மை குறைந்து விட்டதே தவிர நாம் பார்பனர்கள் சொல்வது போல் தாவரபட்சிணிகள் அல்ல. டிஸ்கவரி சேனலில் மேன் vs வைல்டு நிகழ்சியில் பியேர் கிரில் பச்சையாக மாமிசம் சாப்பிடுவதை அவர்களும் பார்த்து கொண்டுதான் இருப்பார்கள், சாப்பிட்டதால் அவர் செத்தா போய்விட்டார் அல்லது தெருக்களில் செல்லும் பெண்களை கையை பிடித்து இழுத்தாரா? எங்கேயும் திருடினாரா? அல்லது பார்பனர்களை போல் எவன் பொழப்பிலும் மண் அள்ளி போட்டாரா?
அன்று இதே முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களை தான் குற்றபரம்பரை என அறிவித்து வெள்ளையன் அரசு அவர்கள் தினம் காவல்நிலையம் வந்து செல்ல வேண்டும் என்று சட்டம் போட்டது, எங்கு குற்றம் நடந்தாலும் அவர்களை எந்தவித ஆதாரமுமின்றி கைது செய்தது. அதற்காக அன்று போராடினோம் இன்று ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றபரம்பரை ஆக்கும் பார்பனீயதந்திரம் தொடங்கியிருக்கிறது, பார்பனசூழ்ச்சியை புரிந்து கொண்டு ஒவ்வொரு மனிதனும் தனது சாதி, மத பேதங்களை மறந்து பார்பனர்களின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும். அன்று பிரித்து சூழ்ச்சி செய்த அதே பார்பனன் இன்று புத்தி மழுங்கி நம்மை ஒற்றுமையடைய செய்யும் வழியை அவனுக்கு தெரியாமலே உருவாக்கிவிட்டான். சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம்.

என்ன செய்ய போகிறீர்கள்

குற்றபரம்பரை என்ற பெயரில் தினம் காவல்நிலையம் செல்லப்போகிறீர்களா?

அல்லது

நமது சந்ததியினருக்கு சமதர்ம நீதியையும், மனிதநேயத்தையும் கற்றுதரபோகிறீர்களா?


28 வாங்கிகட்டி கொண்டது:

நம்பள்கி said...

Excellent...!
தமிழில் பிறகு...

நம்பள்கி said...

Excellent..!

Jeevanantham Paramasamy said...

மீண்டும் பார்ப்பனீயம் தலைதூக்குவது உண்மை. நாம் தான் நம் தலைமுறைக்கு சொல்லனும்.

நல்ல பதிவு.

Mohan said...

நான்கு உள்ள அவர்கள் மீதமுள்ள 96 சதவீத மக்களை ஆள்கிறார்கள். கிட்டத்தட்ட 85 சதவீத மக்கள் பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டு தான் வாழ்கிறார்கள்.. ஒவ்வொருவருக்கும் ஒரு அடிமை தேவை படுகிறான். பார்பனருக்கு இடைநிலை சாதிக்காரர்கள் போல் இடைநிலை சாதிக்காரர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்கள்...இடைநிலை சாதிக்காரகள் மாறாமல் எவ்வளவுதான் நாம் கத்தினாலும் ஒன்றுமே ஆகாது...

Mohan said...

நான்கு உள்ள அவர்கள் மீதமுள்ள 96 சதவீத மக்களை ஆள்கிறார்கள். கிட்டத்தட்ட 85 சதவீத மக்கள் பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டு தான் வாழ்கிறார்கள்.. ஒவ்வொருவருக்கும் ஒரு அடிமை தேவை படுகிறான். பார்பனருக்கு இடைநிலை சாதிக்காரர்கள் போல் இடைநிலை சாதிக்காரர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்கள்...இடைநிலை சாதிக்காரகள் மாறாமல் எவ்வளவுதான் நாம் கத்தினாலும் ஒன்றுமே ஆகாது...

சவுக்கடி said...

‘தட்டிக்கேட்க ஆளில்லாத வரையில் தம்பி சண்டப்பிரசண்டன்’ – என்பார்கள். கேட்கத் தொடங்கினாலே போதும், அச்சமே கீழ்களது ஆசாரம் என்பது புரிந்துவிடும்.

Anonymous said...

அவர்களை கவுண்டர் (Counter) பண்வது ஈஸி, வேதத்தில் ஆடு, மாடு, குதிரை எல்லாம் பிடி பிடிக்கலாம் என சொல்லி இருக்கு, வேதத்தை எடுத்து வுட்டாலே பார்ப்பன் வேதாளம் மரமேறி வுடும்

தருமி said...

//CBSC பாடத்திடத்தில் மாமிச உணவு உண்பவர்கள் ..... குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.//

ஒரு பாடப்புத்தகம் எழுதும்போது ஒரு தனிமனிதர் அதை எழுதுவதில்லை. எப்போதும் ஒரு சிறு குழு, அதன் மேல் மேற்பார்வை பார்க்க மற்றொரு குழு என்று கட்டாயம் இருக்கும்.

இப்படி மடத்தனத்தை ஒரு ஆசிரியன் எழுதியிருந்தால், அதை மற்ற மடையர்களும் ஏன் ஒத்துக் கொண்டு அனுமதித்தார்கள் என்பது என் கேள்வி? அப்படியா புத்தகம எழுதும் ஒரு குழுவும், மேல் குழுவும் முட்டாள்களால் மட்டுமே நிறப்பப்பட்டு இருக்கும்? புரியலையே!!!

Suresh V Raghav said...

So as you said...
அவ்வளவு ஏன் எந்த பார்பனனுமே தனக்கான உணவை தாமே உருவாக்குவதில்லை(ஒரு சிலர் இருக்கலாம், அவர்கள் பார்பனியத்தை துறந்திருப்பார்கள்) - and hence
any non brahmin, who donot create his own food (goes to suguna chicken) is a brahmin....
Excellent article....

Anonymous said...

Excellent.

நம்பள்கி said...

உலகத்தில் மாமிசம் சாபிடாதவ்ர்கள் என்று எவனும் கிடையாது. தாய்ப்பால் குடித்தவர்கள் எல்லாம் யார்.

படிப்பறிவில்லாத பஜனி கோஷ்டி ஒளரும் பால் ஒன்றும் அப்படியில்லை என்று;

உண்மையான சைவம் பார்க்கவேண்டுமென்றால் அமேரிக்கா வாங்க...தேன் கூட சாபிடமட்டர்கள்; விமானத்தில் இவர்களுக்கு என்று தனி சாப்பிடும் உண்டு...!

வெள்ளைக்காரன்/வெள்ளைக்காரிகள் அதுவும் நான் வசிக்கும் இடத்தில அதிகம் உள்ளனர். பால் முட்டை எதுவும் சாப்பிடமாட்டார்கள்; அவர்கள் பெயர் Vegans...


எனக்கு தெரிந்து இந்தியர்களில் Vegan பார்க்க முடியாது...

"Veganism (/ˈviːgənɪzəm/) is the practice of abstaining from the use of animal products, particularly in diet, as well as an associated philosophy that rejects the commodity status of sentient animals. A follower of veganism is known as a vegan.

Distinctions are sometimes made between different types of vegans and veganism. A dietary vegan (or strict vegetarian) is one who abstains from including animal products (not only meat and fish, but also dairy products, eggs and often honey, as well as other animal-derived substances) from his/her diet. The term ethical vegan or lifestyle vegan is often applied to someone who not only follows a vegan diet, but extends the vegan philosophy into other areas of their life. Another term used is environmental veganism, which refers to the rejection of animal products on the premise that industrial farming of animals is environmentally damaging and unsustainable.[1]"

கிருஷ்ண மூர்த்தி S said...

//வேதத்தை எடுத்து வுட்டாலே பார்ப்பன் வேதாளம் மரமேறி வுடும்//

அன்புள்ள இக்பால் செல்வன்!

வேதம், உபநிஷத்துக்கள் என்று பார்க்கப் போனால் ஒரு சமுதாயத்தின் சிந்தனை, அறிவு வளர்ச்சி தொடர்ச்சியாக இருப்பதைப் பார்க்க முடியும்.அவை பார்ப்பனர்களுடைய தனிச்சொத்தோ,அல்லது தனிச் சிந்தனையோ அல்ல.தவிர, புலால் உண்ணாமை என்பது சமண பவுத்த மதங்களின் எழுச்சியினால் விளைந்தது. குறிப்பாக சமணர்கள்..பார்ப்பனர்களை வெறுப்பது உங்கள் தனி உரிமை. ஆனால், எதிர்ப்பதற்கு. சரியான காரணங்களுடன் பேசினால், அது இங்கே விஷயங்களை அதனதன் தராதரத்தில் புரிந்து கொள்ள நிஜமாகவே முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் உபயோகமாக இருக்கும்!

Unknown said...

நண்பரே முதல்ல எல்லோரும் அர்ச்சகர் ஆகட்டும். பார்ப்பனர்களின் கொட்டம் தானா அடங்கிடும்

சார்வாகன் said...

வணக்கம் நண்பரே,
அருமையான பதிவு. இந்த மாமிச உணவு உண்போர் மீதான விமர்சனம் கண்டிக்கத் தக்கது.
இப்படி வாதம் வைப்ப‌வர்கள் அனைவருமே வரலாற்றை மறு(றை)ப்பவர்கள்.
பரிணாமமும் உயிரின வரலாறு என்பதால் அனைத்து மத,உயர் சாதியினருக்கு பிடிக்காமல் போவதில்

பவுத்த்த்திற்கு முன் பிராமணர்களின் உணவும் மாமிசம்தான். எல்லாவற்றையும் வெளுத்துக் கட்டி இருக்கிறார்கள். குதிரை,மாடு, என ஒன்றையும் விடவில்லை. விக்கி பிடியா பார்த்தாலே இவர்களின் குட்டு அவிழ்ந்து விடும்.பாருங்கள்!!!

http://en.wikipedia.org/wiki/History_of_Brahmin_diet

Hindu scriptures belong or refer to the Vedic period which lasted till about 500 BCE according to the chronological division by modern historians. In the historical Vedic religion, the predecessor of Hinduism, meat eating was not banned in principle, but was restricted by specific rules. The Rig Veda (10.87.16) specifically notes: "yaḥ pauruṣeyeṇa kraviṣā samaṅkte yo aśveyena paśunāyātudhānaḥ,yo aghnyāyā bharati kṣīramaghne teṣāṃśīrṣāṇi harasāpi vṛśca" ("The fiend who consumes flesh of cattle, with flesh of horses and of human bodies,

அடிக்கடி எழுதுங்க!!!
நன்றி

வீரக்குமார் said...

அன்புள்ள வால்...நல்ல எதிர்வினை

-வீரா

வீரக்குமார் said...

அன்புள்ள வால்...நல்ல எதிர்வினை

-வீரா

Anonymous said...

// இப்படி மடத்தனத்தை ஒரு ஆசிரியன் எழுதியிருந்தால், அதை மற்ற மடையர்களும் ஏன் ஒத்துக் கொண்டு அனுமதித்தார்கள் என்பது என் கேள்வி? அப்படியா புத்தகம எழுதும் ஒரு குழுவும், மேல் குழுவும் முட்டாள்களால் மட்டுமே நிறப்பப்பட்டு இருக்கும்? புரியலையே!!!//

தருமி சார், நமது ஒரு கிளை சர்ச்சில் இருக்கிற Reverent பிரசங்கமோ அல்லது ஒரு புத்தகமோ வெளியிட்டால், மேல்மட்ட மடையர்கள் sorry தலைவர்கள் ஆகிய Bishop, Arch Bishop குழு வரை அதை அனுமதிக்கிறார்கள் அல்லது ஒத்துகொள்கிறார்கள். அதை follow பண்ண லட்சகணக்கான முட்டாள்கள் வேறு. இவ்வாறு அங்கேயும் நடக்கிறதற்கு வாய்ப்பு இருக்கிறது அல்லவா?

phantom363 said...

The move for vegetarianism is far more complex than blaming it on the brahmins (though I agree there are some fanatic cow lovers there). I think that the issue is how much fodder, grains etc it takes to feed the cows, chickens, pigs and goats.. and how many more humans can be fed with the same amount. The brahmins are a dead snake in Tamil Nadu and not fair to blame them for what happened in Dharmapuri. Here is a more balanced view

http://aadhavanvisai.blogspot.ca/2012/11/blog-post_19.html

Affectionately and regards...

Unknown said...

டியர் வால்பையன்,வாழ்த்துக்கள்..ரொம்ப நாளாவே இதைச் சொல்லணும்ணு நினைச்சேன்..இன்னிக்கித்தான் நேரம் கிடைச்சது,,,
sorry for the delay...............

குலசேகரன் said...

மாமிச உணவை எந்த தட்ப வெப்ப நிலையில் உட்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே எது சரி என முடிவெடுக்கலாம். குளிர்நாடுகளில் மாமிச உணவு தேவை. வெப்ப நாடுகளின் தேவையில்லை. அப்படி உட்கொண்டால் அது போகம். போகிகள் அறிவாளிகளாக‌ மாட்டார். எனவேதான் மாமிச உணவு உட்கொள்வோர் மட்டம்தான். மூர்க்கத்தனம்தான் அவர்களுக்கு வரும்.

தமிழ்நாட்டில் எல்லாரும் மரக்கறி உணவை உட்கொண்டால் மக்களிடையே நற்குணங்கள் உருவாகி, சண்டை சச்சரவெல்லாம் ஓயும்.

இவண்
என்றென்றும் அன்புடன்

வால்பையன் said...

@ குலசேகரன்

போகிகள் அறிவாளி ஆகமாட்டாங்களா?

அப்போ வெளிநாட்டில் இருக்குறவனெல்லாம் முட்டா பசங்களா?

வெப்பநாடுன்னு எதை வச்சு சொல்றிங்க?

வருடத்திற்கு பருவங்கள் எலா நாட்டிலும் மாறி மாறி தானே வருது!
அரிசோனா அமெரிக்காவில் தான் இருக்கு? அங்கே எவ்ளோ வெப்பம்னு தெரியுமா?

siva said...

really a nice article

siva said...

really a nice article

willswords m said...

மானம் என்ற சொல்லால் மறைந்திட்ட மா இனம்!

முன்னுரை:

தமிழில் பலரும் அறிந்திருக்கின்ற ஒரு பழமொழி 'மானம் போயிற்று பிராணன் போயிற்று'. இதனுடைய மெய்யான அர்த்தம், மதஆதிக்கக் களத்தினின்று பேதம் ஒதுவோர்களால் உயிராக (உயர்வாகவும்) எண்ணப்படுகின்ற வர்ணாசிரமம் (சாதிகளின் ஆளுமை), மக்கள் நாத்திகர்களாக மாறினால் ஒழிந்துவிடும்". அதாவது, இந்துமதம் அழிந்துற்றதென்றால் உடன்நிகழ்வாக பிராமணியம் எனப்படும் கற்பனை மானுடம் (வேடம்), களைவுப்பட்டு இல்லாது மறையும். இவற்றை, பின்வருமாறு உள்ள 'மானம்' என்னும் தமிழ் வார்த்தைக்கான சொல், பொருள், ஆய்வுரைகைள் மூலமாக விளங்கிக் கொள்ளபட முடியும்.

2) தமிழ்மொழியுள் நடைமுறையில் இருந்திடும் ஒன்று மற்றும் இரண்டெழுத்துக் களில் முற்றுப்பெறாத ஆனால் நிகழ்வுகளை ஆதாரங்களாக வெளிப்படுத்தும் வார்த்தைகளை தேர்வுசெய்து தனித்தனிச் சொல்லாக நுணுகி ஆய்வுச் செய்து முறையே, அவற்றின் மெய்யான அர்த்தங்களை கண்டறிய முற்படுகையில், தமிழ் சமுதாயத்தின் பல உண்மையான சரித்திரத் தொடர்களை, பழக்கவழக்கங்களை மற்றும் பயன்படுத்திய உடமைகளைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்புக்கள் கிட்டும்.; தமிழில் பேசப்படுகிற அநேகமாக எல்லாச் சொற்களுக்குமே அவை அவசியமான எழுத்துக்களுடன் முழுமை பெற்றிருக்காத போதும், மூலஅர்த்தங்களை அறியப்படும் படிக்கு, தலை முதன்மை) எழுத்துக்களாக, மற்றும் தாய்ச் சொற்களாக, உரிய சொல் ஆட்சிகளுடன் [உ-ம். வா போ நீ கா மா சா(வு) நில் தேய் தண் உண் - என்று இப்படி] ஏராளமாக உண்டு.

3) அந்தப்படிக்கு, ஈ இனம் என்பது, 'இனம்' ஆயிற்று. மா இனம் என்பது, 'மானம்' ஆயிற்று.; 'மா இனம்' இழந்தவன் என்பது, காலப்போக்கில் 'மானம் இழந்தவன்' என்றோர் புதிய அர்தத்தில், தவறான புரிதலாயிற்று.; மானுடம், மதம் வகுப்பு சாதி என்பதாக, என்று பிரிவுற்றனவோ அன்று மா இனம் என்பதானது மறைவுற்று, மோதல் கரு உற்றது.; மோதல் பின்னாளில் மோதம் என்றோ மாதம் எனறோ மாறிட்டதாக கணிக்க தலைச் சொற்கள் இல்லை;; என்றாலும் பேதங்கள் மற்றும் மோதல்கள் செய்திடுவதற்காகவும் மதம் எனும்படிக்கு நிலைமை உள்ளதால் மதம் (வெறி) ஆயிற்று.

4) இந்தப்படிக்கு, 'ஈ இனம்' என்பது குறைந்த எண்ணிக்கையிலான இனம் என்பதாகவும் அந்தப்படிக்கு மா இனம், பெரிய எண்ணிக்கையைக் குறிப்பிடுவதாகவும் அமைந்துற்றன. அதனடிப்படையில் ஈ இனம், மா இனம், உள்ளதோ? என்கின்ற கேள்வி துளிர்த்திட்டது. அது காலப்போக்கில் "மானம் ஈனம் உள்ளதோ" என்ற வரிவடிவத்தில் பொருள்மாற்றம் பெற்று, தமிழர்கள் ஒருவரையொருவர் சாடுவதற்காகப் பயன்பட்டது. ஒன்றுபட்டு வாழ்ந்திட்ட நாகரிக மனித குணத்தை முற்றுமாகப் புரட்டிப்போட்டது. சூழல் அடிப்படையில் தமிழுள் ஏற்பட்ட மொழிச் சிதைவுகளால் தமிழன் திராவிடர்கள் என்று அய்ந்து கூறுகளாகின்றான். திராவிடருள் தீராத எல்லைத் தொல்லைகள், நதிநீர் சச்சரவுகள், சாதி மற்றும் மதங்கள் அடிப்படையில், பேத மோதல்கள் என்று சண்டைகள் கரு ஆக, மா இனம் போர் இனம் ஆயிற்று.

5) தமிழரின் மேற்படி மா இனமான பேரினம் [பெரிய இனம்], பிளவுண்டு மோதல் இனமாக மாறிட, போர் இனம் என்று பிரிய நேர்ந்தது.; போர் இனம் மோதல்களைச் செய்து பேர் இனம் [அதாவது பெயர் பெற்ற இனம்] என்று ஆயிற்று.; பேர் இனம் என்பது போர்களில் வென்றதால் வந்துற்றது என்கின்ற உண்மையானது காலப் போக்கில் மறைந்து, பெரிய இனம் ஆயிற்று. அந்தப்படிக்கு, 'இன மா யினம் காக்க...' என்று அவ்வப்போது தமிழ் பேசப்படுகிறவர்களால் போர்முழக்கமே போல் ஆர்ப்பரிக்கப் படுகிறது. தமிழர்கள் திராவிடர்களாக பிளவுண்ட பின்னர், அந்த இனத்தின் தமிழ் மா இனம் காக்க... என்ற பொருளடிப்படையில் 'தமிழ் அல்லது தமிழர் மானம் காக்க...' என்பதானது, போர் முழக்கமாய் நெருக்கடி ஏற்படுகிற போதெல்லாம் அதிர்ந்து, ஆனால் சாதிக் கூறுகளால் பேதப்பட்டு வகுப்பு அடிப்படையில் எதையும் முடிவுசெய்திடும் நிர்பந்தஙகளால் மெலிந்து, இனம் மட்டும் அல்ல தமிழர் என்ற அடிப்படை அர்த்தமும் பலப்படாததால் கோரிக்கைகட்கு அடிப்படை இருந்தாலும், மேற்படி முழக்கங்களானது அவ்வப்போது பிசுபிசுக்கின்றது.

Go: [பக்கம்-2]

Wills in Kavithai Chittu[google]
http://willsindiaswillswords.blogspot.in

willswords m said...

மானம் என்ற சொல்லால் மறைந்திட்ட மா இனம்!

(பக்கம்-2)

6) மேலே பத்தி (2)ல் உள்ளபடி மா இனம் என்பதிலிருந்து மானம் என்பதானது துளிர்ந்திட்டது என்பதால் அதனடிப்படையில் அவமானம் என்பதும் கிளைவிட்டது. அவளுடைய அல்லது அவனுடைய என்பதானது 'அவ...' என்கின்ற ஈரெழுத்துக்களில் குறைச்சொல்லாக சுருங்கி... ஆக 'அவ...' என்ற அவ்ஈரெழுத்துச் சொல்லுடன் மா+இனம் என்கின்ற இரு கூட்டுச் சொற்கள் இணைய, அது 'அவ+மா+இனம்' என்றாயிற்று.; அதனடிப்படையில் அவமானம் என்பதற்கு [சாதி விலகி ஒருவர் காதல் மணம் புரிகிற போது அவர் சார்ந்த சாதி மா இனமாக இதுவரை இயங்கியது, இப்போது], அவளுடைய அல்லது அவனுடைய சாதி மா+இனம் ஆக, ஆயிற்று என்று புரிதலாகின்றது; அதனால், 'மானம் போயிற்று' என்பது மா+இனம் நிலைப்புரண்டு விலகிட்டது என்று பொருளாகின்றது.

7) இப்படியே, பா இனம் என்பதும் பா இனர் என்றாகி, பாணர் என்றும், அவர்கள் புலவர்களாக (உ-ம். இராமாண ஆசிரியர் வால்மீகி) மற்றும் புரவலர்களாகவும் (உ-ம். கடை எழுவள்ளல்கள், குறிப்பாக பாரிவள்ளல், அம்மன்னனின் குமாரத்திகள் மற்றும் அவர்களின் பிறப்புவழி முன்னோர்களும் அரசபரம்பரையினரும்) மானுடத்துள் தமிழ் புலமையில் உயர்ந்து சிறந்திருந்திட்ட காரணத்தால் மேலும், அன்றைய நிலையில் அவர்கள் இயற்கைச் சூழலால் மலைகள் மற்றும் பாறைகள் மீதும் [மேட்டுக் குடிகளாக] வாழ்ந்தவர்கள் என்பதால் பாறை அய்யர் என்றும் அரசர்களாக இருந்து முன்னோர்களின் செயல் (பாக்கள்) நிலைகளில் நீதி உரைத்திட்ட காரணங்களால் பா+உரையர் என்றும், பா உரை அய்யர் என்றும், இந்தியாவின் இருண்ட கால தெடக்க நாள் முடியவும் போற்றப்பட்டனர் என்பதும்,; தமிழர் வரலாற்றை இருண்ட காலத்துக்கு அப்பால், கடை எழு வள்ளல்கள் மற்றும் இராமாயண காவிய ஆசிரியர் ஆதிப் பா உரை அய்யர் வால்மீகி முதலானோர் வாழ்ந்திட்ட காலங்கட்குச் சென்று நிகழ்வுகளை முறையே ஆய்வுச் செய்கையில் தெளிவுப்படும்.

8) மானம் போயிற்று... பிராணன் போயிற்று [முன்னுரைத் தொடர்ச்சி]:

மானம் என்பதற்கு சுயமதிப்பு, கற்பு, பெருமை, வலிமை, கணிப்பு, அளவை, அன்பு, பற்று, இகழ்ச்சி, வெட்கம், குற்றம், மண்டபம், சுந்தரி, வானம் ஆகியன தற்கால தமிழ் அகராதிகள்படிக்கு அர்த்தங்களாக திணிக்கப்பட்டுள்ளன. அதனால் 'இனமானம் போயிற்று' என்பதற்கு, இன சுயமதிப்பு, இன கற்பு (உடலுறவு ஒழுக்கம்), இனப் பெருமை, இன வலிமை, இன கணிப்பு, இன அளவை(அளவு) , இன சுந்தரி [ஆகியன] போயிற்று என்றபடி, பொருள்கள் தரப்பட ஓரளவுக்கு வாய்ப்பு உண்டு; ஆனால் மானம் என்பதற்கு, விளக்கங்களாக தமிழ் அகராதிகளில் நடைமுறையில் இருந்திடும் ஏனைய இகழ்ச்சி, வெட்கம், குற்றம், மண்டபம், வானம் அகிய சொற்களை இந்த ஆய்வுரையில் இதுவரை விவரித்திடவாறு தகவல்கள்படிக்கு, அர்த்தங்களாக எடுத்துக்கொள்ளப்பட தாய்ச் சொல் (சொல்வழி ஆதாரங்கள்) இல்லை.

9) இந்நிலைமையால் மேலே, முன்னுரையில் எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டபடி, 'மானம் போயிற்று பிராணன் போயிற்று' என்பதாக உள்ள பழமொழிக்கு, "மா இனமாக கருதிடும் இந்துக்களில் பிற்படுத்தப் பட்டவர்கள் சூத்திரர்கள்தான் எனும்படிக்கு இன்றளவும் வழக்கில் இருந்திடும்நிலைமையும்; மலைவாழ் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் பார்பனியத்தின் ஒட்டுமொத்த அடிமைகள்தாம் என்கின்ற சுதந்திரமற்ற நிர்பந்தமும் [கடவுள் உண்டு என்பதாக நம்பிக்கையைத் திணித்து அடிமைகளாக நடத்தப்படும் சதிச் சூட்சமங்கள்] எப்போது இல்லாதபடி நிலமை மாறுமோ, அப்போது உடன் நிகழ்வாக பிராணன் (பிராமினன் என்கின்ற மானுடம்) போயிற்று" என்கின்ற அடிப்படையில்தான் பொருளாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமே தவிர, வேறு எந்த வகையிலும் அர்த்தம் தரப்படுமானால் மேற்படி இகழ்ச்சி, வெட்கம் முதலான அர்த்தங்களாக தமிழ் அகராதிகளில் தரப்பட்ட சொற்கள் யாவும் போன்றே 'மானம் போயிற்று பிராணன் போயிற்று' சொற்றொடரும், பொய்பூசிய கற்பனையே என்றாகிடும்.


Go: [பக்கம்-3]


Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in

willswords m said...

மானம் என்ற சொல்லால் மறைந்திட்ட மா இனம்!

[பக்கம்-2]


முடிவுரை:

10) அகராதிகளில் பேதங்களை வலுப்படுத்தும் புராணகால அர்த்தங்களை (கற்பனைகளை) விலகி தாய்ச்சொற்களை ஆய்வுச் செய்திடுகையில் மறைவுப்பட்ட பல சரித்திர நிகழ்வுகள் வெளிப்படக்கூடும் என்பதோடு,; எவையெல்லாம் தமிழ்மொழியின் மூல பேச்சுவழக்கு ஆதாரஒலிகள் என்பதும், மேலும் அவ்வொலிகளில் எவை தமிழ் எதிரிகளால் அகற்பட்டுள்ளன என்பதும், என்பதும் அறியப்படும். [உ-ம்], காகம் என்பதின் நடுவில் வருகின்ற 'க" (ha); கவசம் என்பதில் வருகின்ற (ஸ); கம்பம் என்பதில் உள்ள ப (ba); இடம் என்பதில் காணுகிற, 'ட' (dஅ) என்று இப்படியாக... பல ஒலிகள் அல்லது ஓசைகள் இவ்வொலிகளுக்கு வரிவடிவங்கள் தனித்தனியே ஆதியில் தமிழர்களின் மற்றும் தமிழ்முன்னோர்களின் மொழிப்புலக்கத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் மேற்படி ஒலிகட்கான வரிவடிவங்கள் அவை மதபேதமுரடர்களால் நாளந்தா பல்கலைக் கழகம் தீக்கிரையாக்கப்பட்டதாலோ அல்லது அந்நிகழ்வுக்கு முன்பாக ஏற்பட்டதாக அறியப்படுகின்ற இயற்கையின் ஆழிப் பெருவெள்ளங்களின் சீற்றங்களாலோ அந்தப் படிக்கு வந்துற்ற இக்கட்டான காலங்களில் தமிழ்வளர்ச்சித் தொடர்பான ஓலைச் சுவடி களைக் களவாடியவர்களின் நேர்மையற்ற நடைமுறைகளாலோ அழிந்திருக்கக்கலாம்.Show large loving, to your parents;


As such wishes on your wife;
Learn good characters,
For children and country;
Aim to remove...
The difference among nations;
Plan your thoughts, for uniting people;
And grant you yourself,
For Mother Tongue’s growing!
[Next]


Recent verses:
ஒற்றுமை வளம் உலக நலம்!
Say 'No to Caste based Reservation in Education, Jobs, etc., but on professionally basis - A new doctrine.
மதம் வகுப்பு விலகி தேசியம் பேசு அது நாட்டுப்பற்று! மூளைநிலை ஆய்வில் கருஆன கவிதைகள்!
சுவாசயியக்கம்... கழலஉடலம் ஆவிபேசுமோ?

Web site names / addresses :
1) Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in
2) Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com
3) Willswords English Twinkles
http://willswordsindiatwinkles.blogspot.in
4) Willswords India Twinkles
http://willswordstamil.blogspot.com
5) Willswords Sparrows Garden
http://willswordstamiltwinkles.blogspot.com

willswords m said...

சித்தர் பாடலும், சில தெளிவுரைகளும்.


இரவுகளில் உண்ணும் உணவுகளின் அளவில் குறைவு ஏற்பட்டாலோ அல்லது உண்ணும் அளவைக் குறைத்துக்கொண்டாலோ, உறக்கம் நமது உடலம் தழுவுவதை சற்று தள்ளிப்போடும். அவ்வாறு உறக்கம் நம்மை ஆலிங்கனம் செய்திடாத நேரங்களில் ஒரு மிருதுவான தலையணையை சுவற்றில் சாய்ந்தவாறு வைத்து தலையணையோடு முதுகை அழுந்திப் பதிகிறபடி வைத்து கண்களை மூடிக்கொண்டு சம்மணமிட்டு அமர்ந்தால் ஏதாவது சிந்தனை தானாக உருவாகும். அந்தச் சிதனையை உடன் எழுந்து தாளொன்றும் எழுதுகையுமாய் [Pen] அமர்ந்து முறையே பதிவுச் செய்திட முற்படும்போது அது கதையோ கட்டுரையோ ஆகின்றது. சில நேரங்களில் கவிதையாகிறது. உடன் எழுந்து இதைச் செய்யவில்லை என்றால், எழுதிடாமல் அப்படியே உறங்கிப் போனால், அவ்வளவுதான் இரவில் என்ன நினைத்தோம் என்பதே நினைவில் வராது. ஆக உண்ணும் உணவினது அளவு குறைவுப்படும் போது இயல்பாகவே சிந்தனை அதாவது சிந்திக்கும் திறன் விழித்துக்கொள்கின்றது. இதைத்தான் 'ஒருவேளை யோகியே' என்கின்றார் சித்தர்; அதாவது ஒரு வேளை மட்டும் உண்ணுகிறவன் சிந்திக்கிறவன்; அதாவது சிந்தனையாளன் ஆகின்றான். சிந்தனையாளன் யார் என்றால் அவன்தான் யோகி.


அடுத்ததாக இருவேளை போகியே என்கின்றார் சித்தர். நாளொன்றுக்கு இரு வேளை உண்ணுகிறவனுக்கு சிந்தனை வரும் ஆனால் அது பெரும்பாலும் காமம் தொடர்புடையதாகவும் இருந்திடும்; இதர சிந்தனைகளெல்லாம் அனேகமாக பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும்; தமிழுள் ஒரு பழமொழி உண்டு. அது 'விந்துவிட்டவன் நொந்து கெட்டான்' என்பது. இந்தப் பழமொழிக்கு பொருள் என்னவென்றால் சக்தியை அதிகமாக விரயமாக்குகிறவன் நோயாளியாகிச் செத்தான் என்பதாகும். இந்த பழமொழி அடுத்து மூன்றாவதாகதொடரும் வாக்கியத்துக்கு நன்கு பொருந்திடுவதாக அமைகின்றது. மூன்றாவதாக உள்ள வாக்கியம் என்னவென்றால் 'திரிபோது ரோகியே' என்பது. இரண்டு வேளைகள் உண்டாலே ஒருவன் காமுகனாகிறபோது நாளொன்றுக்கு மூன்று வேளைகள் உண்பானின் உடலில் காம உணர்வுகளானது மிகுதியாகுவது இயல்பாகின்றது. இந்நிலைமையில் காம நினைவுகளால் தூண்டப்பட்டு தனது சக்தியை அதாவது வீரியத்தை விரையமாக்குகின்றான் இந்நிலைமையால் காலப்போக்கில் நோயாளி ஆகவும், சாகவும் செய்கின்றான். சித்தர் தனது ஞானவுரையின் இறுதி வாக்கியமாக 'நான்குபோ துண்பா னுடல்விட்டுப் போகியே' என்று புகல் என்பதாக மானுடம் உண்ணும் நடைமுறையானது இப்படித்தான் இருந்திடவேண்டும் என்று தெளிவுப்படுத்துகிறார்.


அப்படி நாளொன்றுக்கு ஒருவேளை, இரண்டு வேளை, மூன்று முறை, நான்கு தடவைகள் உண்ணுகிகற நிலைமைகளில், பயன்படுடத்ததுகிற உணவு சைவமா அல்லது அசைவமா என்பன போன்ற உணவு வகையறாக்களைப்பற்றி சித்தர் குறிப்பிடபில்லை. எத்தகைய அல்லது எந்த உணவு உண்டாலும் உண்ணுகிற உணவுகளின் தன்மையைக் கொண்டும் உண்ணுகிறவற்றின் அளவுகளைக் கொண்டுமே காம நிலைமை அதாவது காம எண்ணம் மற்றும் வீரியம் குறைவுப்படும் அல்லது அதிகரிக்கும்; அதேபோல் சிந்தனைத் திறனும் குறையும் அல்லது மிகுதியாகும். அதனால் இறைச்சியை உண்பவனுக்கு சிநதனையே வராது என்பதோ அல்லது இறைச்சியை உண்ணாதவனுக்கு காம நினைவே இராது என்பதோ சிந்திக்கத் தெரிந்தவர்களின் மற்றும் அனைவரையும் ஏமாற்றுகிற அற்ப்பர்களின் கூற்று; அல்லது சிந்திக்க முற்படாதவர்களின் உழைப்பவரை அடிமைப்படுத்துகின்ற பிதற்றல். சிந்திக்கிறவர்களில் சிலர் உழைக்கும் மக்களை சுரண்டி சுகம் காணும் போக்கில் ஏமாற்றுகிறவர்களாகவும் அலைகின்றனர். அவர்களும் சொல்வார்கள் இறைச்சி உண்ணுகிறவன் மந்தமானவனாக இருப்பான் என்று; மந்தமானவன் எனப்படுகிறவன் வீரம் அற்றவன் என்பதாகவும் அர்த்தம் கொள்ளலாம். அப்படியானால் சான்சி ராணி வீரம் நாடறிந்த ஒன்றுதானே! அவள் மாமிசம் உண்டவளா?


மேலும் மாமிசம் உண்ணாதவன்தான் நல்லவனாக இருப்பான் என்பது இயற்கைக்கும் ஒவ்வாதது. இவன் நமக்கு கேடு விளைவிப்பானோ துன்பம் தருவானோ என்கின்ற எண்ணமானது எப்போது ஒருவனை விட்டு விலகுகிறதோ அப்போது எவன் மீது அப்படியொரு ஐயப்பாடு இருந்திட்டதோ அவனுக்கு எவனும் நல்லவனாகி விடுகிறான்.


சித்தர் பாடல் ஆதாரத்தில் கூடுதலாக சில தகவல்கள் -
காணுக: பக்கம் - 2.

willswords m said...

சித்தர் பாடல் கூடுதலாக சில தகவல்கள் -
பக்கம் - 2.
ஆங்கிலத்தில் ஒர் பண்டைய காலத் தமிழ் சொல்!

ஒருபோது யோகியே யொண்டளிர்க் கைமாதே!
இருபோது போகியே யென்பர் - திரிபோது
ரோகியே! நான்குபோ துண்பா னுடல்விட்டுப்
போகியே என்று புகல்.


- இது ஒரு பண்டைய தமிழ்ப் பாடல்.
பாடலின் கருப்பொருள்: ஒரு நாளில் ஒருவேளை உண்பவன் யோகியாகின்றான்; இருவேளை உண்பவன் போகியாகின்றான் மூன்று வேளை உண்பவன் ரோகி அதாவது பெரும்வியாதியோன் ஆகின்றான்; நான்கு வேளை உண்பவனோ பிணத்துக்கு ஒப்பாகின்றான் - என்பதாகும்.
அதுசரி, இந்தப் பாடலில் உள்ள ஒரு வார்த்தை இன்று ஆங்கில மொழியில் பிரிக்கமுடியாத பிரபலமான ஒரு சொல்லாகி இன்று ஆங்கில கணித எண்கள் வரிசையில் ஓர் அங்கமாக உள்ளது. அந்த தமிழ் சொல் எதுவென்று அறிவோமா?
"திரிபோது" என்பதிலுள்ள, 'திரி' என்பதே; திரி என்கின்ற அந்தப் பழந்தமிழ் சொல்லுக்கு தமிழிலும் மூன்று என்று (கணிதஎண் வரிசையிலேயே) பொருள் தரப்படுகின்றது; திரி என்றால் தமிழில் மூன்று என்பதற்கு, என்ன ஆச்சரியம் பாருங்கள், "திரிபுரம், திரிகோணமலை, திரிசூலம்", முதலான தமிழ் சொற்களை உதாரணமாகவும் கொள்ளலாம்.
இன்று அந்தத் 'திரி' தமிழில், மண்அகலின் (விளக்கின்) எண்ணெயில் முழ்கி எரிந்து கரிகின்ற (அழிகின்ற) 'திரி' ஆகிவிட்டது.

-- Wills in Kavithai Chittu
[http://willsindiaswillswords.blogspot.in

!

Blog Widget by LinkWithin