பொய் மனிதர்கள்!

பொய் மனிதர்கள்!


புறவெளியில் ஆசையை துறந்தும்
நினைவுலகில் அதனுடன் புணர்ந்தும்,
கனவு வாழ்க்கை
நன்றாக தான் இருக்கிறது
எல்லோரும் அதை தான்
செய்தாலும்
சொல்வதற்கினிய வார்த்தை
கிடைக்காமல்
பொய் சொல்கிறார்கள்!


 கண்ணீர்

கணப்பொழுதில்
நிரம்பும் குழியொன்றில்
புலியொன்று
வேட்டைக்கு சென்றது
பசி விட்ட கண்ணீரால்
அது
உப்புக்கடல் ஆனது!

72 வாங்கிகட்டி கொண்டது:

தமிழ் பொண்ணு said...

//பசி விட்ட கண்ணீரால்
அது
உப்புக்கடல் ஆனது// பேசாம புலிய கூட வீட்ல வளர்க்கலாம் போல

தமிழ் பொண்ணு said...

ஆமா அருண் எங்க இன்னொரு கண்ண காணோம் படத்துல ?

தமிழ் பொண்ணு said...

இப்போ முடிவா என்ன சொல்ல வாரிங்க.

தனி காட்டு ராஜா said...

//நினைவுலகில் அதனுடன் புணர்ந்தும்,
கனவு வாழ்க்கை
நன்றாக தான் இருக்கிறது//

கனவு(சுய) இன்பம் ??!!....

//வார்த்தைகிடைக்காமல்பொய் சொல்கிறார்கள்!//
வார்த்தை எல்லாம் கிடைச்சாலும் ....இப்படி எக்கு தப்பா பேசி புட்டா ...ஊர்ல ஒரு பயலும் மதிக்க மாட்டாங்கலே....

சௌந்தர் said...

கனப்பொழுதில்
நிரம்பும் குழியொன்றில்
புலியொன்று
வேட்டைக்கு சென்றது
பசி விட்ட கண்ணீரால்
அது
உப்புக்கடல் ஆனது//

வால் பையன் கவிதை அருமை

அகல்விளக்கு said...

செம கவிதைங்க...

கண்ணகி said...

அட... கலக்கறிங்க...வால்...அருமை..

தமிழ் பொண்ணு said...

அருண் படம் சுபெர்ர்ர்ரர்ர்ர்....

Chitra said...

அருமை. :-)
nice pictures too.

Sanjai Gandhi said...

தலைப்பை படிச்சிட்டு, வினவுல நீங்க எழுதி இருக்கும் கட்டுரை பத்தி தான் சொல்லப் போறிங்கன்னு நினைச்சிட்டேன்..

என்னாது .. நீங்க எழுதலையா?

அப்போ சரி.. ஓடி ஓடி பதில் சொல்லிட்டு இருந்திங்களா? அப்பாலிக்கா புது புது பேர்ல வந்து யாரும் யாரையும் திட்டவும் இல்லையா.. அதான் நீங்க தான்னு முடிவே பண்ணிட்டேன்..

டேக் கேர் வால்.. டாட்டா.. பை பை..

தினேஷ் said...

டாஸ்மாக்பாரில் ஆடையை துறந்தும்
போதையுலகில் அதனுடன் மறந்தும்,
போதை வாழ்க்கை
நன்றாக தான் இருக்கிறது
எல்லோரும் அதை தான்
செய்தாலும்
சொல்வதற்கினிய வார்த்தை
கிடைக்காமல்
வாந்தி எடுக்கிறார்கள்!

ஹேமா said...

முதலாவது கவிதை யாருமே வெளியில் சொல்லத் தயங்கும் அல்லது மறுக்கும் மனதிற்கு மட்டும் தெரிந்த உண்மை.

வாலு...அசத்தல் கவிதைகள் இரண்டுமே.

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு வால் :)

sathishsangkavi.blogspot.com said...

//கனவு வாழ்க்கை
நன்றாக தான் இருக்கிறது
எல்லோரும் அதை தான்
செய்தாலும்
சொல்வதற்கினிய வார்த்தை
கிடைக்காமல்
பொய் சொல்கிறார்கள்!//

அழகான உண்மை அருண்.....

க ரா said...

வால் பின்றீங்க.

Ashok D said...

என்னமோ சொல்லறீங்க... சரி ரைய்டு... :)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//கனவு வாழ்க்கை
நன்றாக தான் இருக்கிறது//

கவிதையில் இந்த வாக்கியம்
நன்றாகத்தான் இருக்கிறது.

Unknown said...

தலீவா.. ஒண்ணுமே பிரில..

Unknown said...

அருமையான கவிதைகள்.

- ஸ்ரீராம்
http://sriramsrinivasan.net

ராஜவம்சம் said...

முதல் கவிதை முகத்தில் அரையும் உண்மை

ஜில்தண்ணி said...

//புறவெளியில் ஆசையை துறந்தும்
நினைவுலகில் அதனுடன் புணர்ந்தும்//

உண்மைதான் வால்
நல்லாயிருக்கு

எப்பூடி.. said...

ம்ம்ம்ம்... வாழ்த்துக்கள்

தமிழ் பொண்ணு said...

ஆமா நீங்க அடிக்கடி ஒரு தலைப்புல ஒரு பதிவு போடுவீங்களே ம்ம்ம் ஞாபகம் வந்துருச்சு.அதான் ப்பா பரிணாமம் அது போடு பா.லைப் ரொம்ப சப்பைய போறதுக்கு இந்த பதிவு கரெக்ட் அஹ இருக்கும்.

கே. பி. ஜனா... said...

இரண்டு கவிதைகளுமே அருமை!

- இரவீ - said...

தல ... பலே பலே...
அருமை.

தமிழ் பொண்ணு said...

அப்புறம் நீங்க செம்மொழிக்கு போறதுக்கு என்னோட வாழ்த்துக்கள்.

தமிழ் பொண்ணு said...

//கணப்பொழுதில்
நிரம்பும் குழியொன்றில்
புலியொன்று
வேட்டைக்கு சென்றது
பசி விட்ட கண்ணீரால்
அது
உப்புக்கடல் ஆனது!
//

ரொம்ப நாளா சாப்டலையோ யார சொன்னாலும் உங்கள சொன்ன மாதிரியே இருக்கு.

தமிழ் பொண்ணு said...

ஆமா கடைய தொறந்து போட்டு எங்க போய்டிங்க அருண்.

Romeoboy said...

நல்லா இருக்கு தல

பனித்துளி சங்கர் said...

///////கனப்பொழுதில்
நிரம்பும் குழியொன்றில்
புலியொன்று
வேட்டைக்கு சென்றது
பசி விட்ட கண்ணீரால்
அது
உப்புக்கடல் ஆனது!///////

நண்பரே இந்த கவிதையில் பசி விட்ட கண்ணீரால் இந்த இடம் சரியாக பிடிபடவில்லையே !

ஷர்புதீன் said...

நல்லா இருக்கு தல
:)

nellai அண்ணாச்சி said...

நீங்ககூட கவிதை எழுதுரீங்களா

Jey said...

சரி ரைட்டு. நமக்கு கவுஜனா அலர்ஜி , அதனால அப்பாலிக்கா வர்றேன்.

Nathanjagk said...

பொய் மனிதர்கள் - தெரிந்த உண்மை.
கண்ணீர் - ஆழம் அதிகம்.
பொய் மனிதர்களுக்காக நீங்க கண்ணீர் விடாதீங்க.

மங்குனி அமைச்சர் said...

அட போங்க வால்ஸ் , கவிதைய யோசிச்சதுல நைட்டு அடிச்ச மப்பு இறங்கிடுச்சு (மரியாதையா 100 அனுப்புங்க )

அமா கண்ணீர் என்றாலே லேடிஸ் ???? ஏன் லேடிஸ் மட்டும் தான் கண்ணீர் விடுவாங்களா ???

மங்குனி அமைச்சர் said...

madurai ponnu said...

ஆமா கடைய தொறந்து போட்டு எங்க போய்டிங்க அருண்.////


ஒரு வணக்கம் போட்டுகிர்றேன் , வணக்கம் அம்மணி

சசிகுமார் said...

நல்ல கவிதை நண்பா அருண். உங்கள் புகழ் மென்மேலும் உயர ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Anonymous said...

தலைவரே ..உங்களுக்கும் எதை பார்த்தாலும்,கவிதையா பொங்குதா

செல்வா said...

antha kanner appadinnu oru photo pottirukkeenkalla athu nalla irukku..!!

அமுதா கிருஷ்ணா said...

ம்ம் நல்லாயிருக்கு....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கவிதை..ஹி..ஹி...
அடுத்த பதிவுல பார்ப்போம்..ஹி..ஹி

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

கவிதயில் உள் குத்து ஏதும் இல்லீயே..?

ரோகிணிசிவா said...

super kavithanga rendumae ,

Mythili said...

கவிதை இரண்டும் நன்றாக உள்ளது அருண் , கண்ணீர் திவலை தெறிக்கும் கண்ணின் படம் மிக அருமை

வால்பையன் said...

//SanjaiGandhi™ said...

தலைப்பை படிச்சிட்டு, வினவுல நீங்க எழுதி இருக்கும் கட்டுரை பத்தி தான் சொல்லப் போறிங்கன்னு நினைச்சிட்டேன்..//


நீங்க தான் அந்த புரளிக்கு காரணமா!?

வால்பையன் said...

சூரியன், உங்க எதிர் கவுஜ சூப்பர்!

தமிழ் பொண்ணு said...

என்ன லே நடக்குது இங்க?

தமிழ் பொண்ணு said...

எதாச்சும் சூடா ஒரு கவுஜ போடுங்க அருண்.

வால்பையன் said...

//madurai ponnu said...

ஆமா நீங்க அடிக்கடி ஒரு தலைப்புல ஒரு பதிவு போடுவீங்களே ம்ம்ம் ஞாபகம் வந்துருச்சு.அதான் ப்பா பரிணாமம் அது போடு பா.லைப் ரொம்ப சப்பைய போறதுக்கு இந்த பதிவு கரெக்ட் அஹ இருக்கும்.//

வெள்ளிகிழமை அல்லது அடுத்த வாரம் நிச்சயம் ஒரு பரிணாமம் கட்டுரை உண்டு!

வால்பையன் said...

//madurai ponnu said...

அப்புறம் நீங்க செம்மொழிக்கு போறதுக்கு என்னோட வாழ்த்துக்கள்.//


நான் போகலைன்னா மாநாடு நடக்காதுன்னு சொன்னாங்க, அதான் போறேன்!

தமிழ் பொண்ணு said...
This comment has been removed by the author.
தமிழ் பொண்ணு said...

@ arun

ஐயையோ வெள்ளி கிழமை எனக்கு காய்ச்சல் சொல்லுபுட்டேன்.

வால்பையன் said...

//நண்பரே இந்த கவிதையில் பசி விட்ட கண்ணீரால்
இந்த இடம் சரியாக பிடிபடவில்லையே !//

சங்கர்,

கவிதை ஒற்றை பரிமானத்தில் அனுகினால் அது புரியாதது போல் தான் தோன்றும், ஒரு குளூ தர்றேன், அது ஒரு போர்னோ டைப் கவிதை!

வால்பையன் said...

madurai ponnu said...

எதாச்சும் சூடா ஒரு கவுஜ போடுங்க அருண்.//


சூடா, பஜ்ஜி தான் சுடனும்!

வால்பையன் said...

//madurai ponnu said...
@ arun
ஐயையோ வெள்ளி கிழமை எனக்கு காய்ச்சல் சொல்லுபுட்டேன்.//


இப்பவே சுக்கு கசாயம் சாப்பிட்டா வெள்ளிகிழமை காய்ச்சல் வராது!

தமிழ் பொண்ணு said...

@ arun,
டீ கட சப்ளையர் மாதியே பேசுறேங்க எல்லாம் திறமை கலக்குங்க அருண் (பஜ்ஜி மாவ சொன்னேன்).

வால்பையன் said...

ஊக்களித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி!

குறியீடுகளாக கவிதை(மாதிரி) தோன்றும் போது, அதை வெளியிடலாமா வேண்டாமா என்ற போராட்டம் நடக்கும், காரணம் யாரடிமாவது இதை வாசித்து காட்டினால் எரிப்பது போல் பார்ப்பார்கள், பின் எனது மனதில் தோன்றியதையும், அதன் குறியிட்டையும் விவரிக்கும் பொது லேசாக புரிந்தது போல் தலையாட்டுவார்கள், இங்கே பல பரிமானங்களில் கவிதை புரியபட்டு அல்லது ரசிக்கபட்டு அதன் வருகையின் நோக்கத்தை பூர்த்தி செய்து விடுகிறது!

கவிதையின் அகரம் கூட தெரியாமல் தான் முயற்சியில் இறங்கியிருக்கிறேன், உங்கள் ஆதரவே என்னை கைபிடித்து அழைத்து செல்லும், மீண்டும் ஒருமுறை நன்றி!

தமிழ் பொண்ணு said...

//உங்கள் ஆதரவே என்னை கைபிடித்து அழைத்து செல்லும், மீண்டும் ஒருமுறை நன்றி//

நன்றி நன்றி நன்றி.. அவளோ தானா படம் :(

வால்பையன் said...

16.06.10 புதன்கிழமை சரியாக 8.48 மணியளவில் 1,99,986 வீவர்ஸ் மீட்டர் காட்டுது, ப்ளாக் ஆரம்பிச்சு ஆறு மாசம் கழிச்சு தான் அதை வைத்தேன் என்றாலும், அதை பார்க்கும் போது கொஞ்சம் மகிழ்ச்சியாக தான் இருக்கு!

அதற்கும் ஒரு நன்றி தோழர்களே!

தமிழ் பொண்ணு said...

//வால்பையன் said...
ஊக்களித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி!//

நான் எப்போ உனக்கு ஊக்கு குடுத்தேன்.???

வால்பையன் said...

//madurai ponnu said...

//வால்பையன் said...
ஊக்களித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி!//

நான் எப்போ உனக்கு ஊக்கு குடுத்தேன்.???//


ஸாரி, ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிருச்சு!

அது ”ஊக்கமளித்த”

Santhini said...

Hi Arun,
முதல் கவிதை அப்பட்டமான யதார்த்தம். மிகவும் நன்றாக இருக்கிறது.
இரண்டாம் கவிதையின் உருவகம் நன்று. (கொஞ்சம் குழப்பினாலும்) ஆனால் படம்தான் பொருந்தவில்லையோ. (போர்னோ என்பதால் அடக்கி வாசிக்கப்பட்ட படமா ?)
I have been following and visiting your blogs quite frequently. But have you ever visited my blog, as you promised?
You may need to monitor your followers list if you like to promise. Asking you to visit my blog is not a dignified way for me.

புலவன் புலிகேசி said...

புலிக்கவிதை ஜீப்பரு தல...

புலவன் புலிகேசி said...

முதல் கவிதையில் சொன்னது போலத்தான் பலர் வாழ்கின்றனர்.

Anonymous said...

நான் கவிதை தொலைத்த நேரம் நீங்கள் கவிஞர் ஆனீரோ?

தொடுக்க வல்லா கவிதை நன்றே புனைந்து உள்ளீர் வாழ்த்துக்கள் அருண்

Anonymous said...

2nd one

இங்கே பல பரிமானங்களில் கவிதை புரியபட்டு அல்லது ரசிக்கபட்டு அதன் வருகையின் நோக்கத்தை பூர்த்தி செய்து விடுகிறது!

ena nengaley sollitenga....nice one meaningful lyrics...

Unknown said...

இரண்டும் அருமையான கவிதை தல..
நிறைய எழுதுங்க..
நேரமில்லை என பொய் சொல்லாமல் ..

VELU.G said...

இரண்டு கவிதைகளையும் ரசித்தேன்

மிகவும் அருமை

முத்து said...

கவிதை இரண்டும் நன்றாக உள்ளது

Revathyrkrishnan said...

'தான் ஊரில இல்லை'ங்கற தைரியத்துலத்தான் நீங்க கவிதை போஸ்ட் பண்ணியிருக்கறதா சொல்லிட்டு திரியறாரு ஒருத்தர்... கொஞ்சம் என்னன்னு கேளுங்க‌

வினோத் கெளதம் said...

அடடா..

Radhakrishnan said...

அருமையான கவிதைகள்.

!

Blog Widget by LinkWithin