ஏன் முட்டாள்கள் தினம்!?

ஒரு விசயத்தை செய்யுறதுக்கு முன்னாடி நம்ம மக்கள் அதை ஏன் செய்யுறோம் என்று யோசிப்பதேயில்லை, அவன் செஞ்சான், நானும் செஞ்சேன், எங்க தாத்தா செஞ்சார், நானும் செஞ்சேன் என்பதே அனைவரின் பதிலும், சரி அவர் ஏனப்பா செஞ்சார் என்றால் அதுக்கு எதாவது அறிவியல் காரணம் இருக்கும் என்பார்கள், காதலனர் தினத்திற்கு ஒவ்வொரு வருடமும் வேலெண்டின் பெயர் ஞாபக படுத்தப்படுவதால் இன்னும் வரலாறு திரிக்கப்படாமல் இருக்கு, இன்னும் சில வருடங்களில் அம்பிகாபதி, அமராவதி மாதிரி அமரக்காதல் கொண்ட பாதிரியார் சட்டத்தால் தண்டிக்கபட்ட தினம் தான் காதலர் தினம் என்பார்கள்!, நம் மக்களுக்கு புரளியை கிளப்பி விடுவதென்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி!

பெரும்பாலான தினங்கள்(days) இங்கிலாந்திலேயே ஆரம்பிக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது!, கொண்டாட்டத்திற்கும், ஐரோப்பிய கண்டத்துக்கும் எதோ சம்பந்தம் இருக்கும் போல பெரும்பாலான விழாக்கள் கூட அங்கே தான் ஆரம்பித்திருக்கின்றன!, முற்காலத்தில் ராஜாவுக்கு மலச்சிக்கல் இல்லாமல் கக்கா போனால் கூட விழாவாக கொண்டாடுவார்களாம், நல்ல வேளை தமிழ்நாட்டில் ”பாராட்டு விழா” என்ற பெயரில் நடப்பதால் உண்மையான காரணம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை!, கள்ளன் பெருசா, காப்பான் பெருசான்னா, கள்ளன் தான் பெருசுன்னு ஒரு பழமொழி உண்டு, அங்கே அடிமட்டத்தில் இருப்பவன் பெருசு, ஜனநாயகத்தில் மட்டும் என்றுமே மக்கள் தான் முட்டாள்கள்!, ஐந்து வருடத்திற்கொரு முறை பெரிய முட்டாளாக ஆக வருடா வருடம் நாம் எடுக்கும் ட்ரைனிங்க் தான் ஏப்ரல் ஒன்னு என்று சென்னையில் வசிக்கும் ஒரு அதிர்ஷ்டகார ஞானி சிரித்து கொண்டே சொல்லுவார்!




முட்டாள்கள் தினம் கதையை சொல்ல வந்து நாம் முட்டாளான கதையை சொல்லி கொண்டிருக்கிறேன் பாருங்கள், வாங்க நாம முதல்ல அந்த கதையை பார்த்துட்டு வரலாம்!.

1550 வாக்கில் இங்கிலாந்தில் இருந்த பல செல்வந்தர்களில் முக்கியமான ஒரு செல்வந்தர் எட்வர்ட் மார்ஷல், அப்போதைய கெஜட்டில் மட்டும் அவர் 158 தொழில்கள் செய்து கொண்டிருந்ததாக பதிவாகியிருக்கிறதாம்!, வெகு சிறப்பாக தொழில் செய்து கொண்டிருந்த அவருக்கு 1579 ஆம் வருடம் ஏப்ரல் முதல் தேதி ஒரு மகன் பிறந்தார் அவரது பெயர் ஸ்டீவ் மார்ஷல், அது அவரது செல்ல மகனும் கூட, மூத்த மகன் ஒருவர் இருந்தாலும் அவர் ஒரு விபத்தில் இறந்த விட்டதாக மட்டும் தகவல் இருக்கிறது.

பெரும் செல்வமும், செல்லமும் கொண்ட ஸ்டீவ் படிக்க வீட்டிலேயே ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டார்கள், அவர்களுக்கு சொல்லி கொடுப்பதை விட, ஸ்டீவ் எதையும் உடைக்காமல் பார்த்து கொள்வதே முக்கிய பணீயாக இருந்தது! சன்னல் ஏன் பெருசா இருக்கு, இந்த ரொட்டி ஏன் சிறுசா இருக்கு என்ற அறிவு பூர்வமான கேள்விகளும் அவ்வபோது கேட்பதுண்டு!, ஆசிரியர்களும் வாங்கும் சம்பளத்துக்கு வஞ்சகம் செய்யாமல் வேலை பார்த்தார்கள், மேற்படிப்பு படிக்க விருப்பமில்லை என்றும், தனக்கு தொழிலை கவனித்து கொள்ள எல்லா தகுதியும் வந்துவிட்டது என சொல்லும் பொழுது அவரது தந்தைக்கு மிகவும் பெருமையாக இருந்தது, காரணம் ஸ்டீவ் அதை சொல்லும் பொழுது அவனுக்கு வயது எட்டு!


அந்த சமயம் சிரித்து கொண்டே மறுத்த தந்தை ஸ்டீவின் 21 ஆம் வயதில் மறுக்க முடியாத இக்கட்டில் சிக்கினார்! ஸ்டீவுக்கு 21 வயது ஆகும் பொழுது அவனிடம் கம்பெனியின் முழு பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தனது ஏழு மனைவியருடன் உலகை சுற்றி வர வாக்களித்திருந்தார், அவரது ஏழாவது மனைவி வாக்கு தவறினால் குதிரை வண்டிகாரனுடன் ஓடி போய்விடுவதாக ஏற்கனவே மிரட்டியிருந்ததால், வேறு வழியில்லாமல் அரைமனதுடன் கெம்பேனி பொறுப்பு ஸ்டீவுக்கு மாற்றப்பட்டது!, அடுத்த இரண்டு வருடத்தில் 158 கம்பெனிகளும் திவாலாகி ஸ்டீவ் வீட்டில் வந்து அமர்ந்தான், அதன் பிறகு அவனது வேலை யார் என்ன கதை விட்டாலும் உங்களை போலவே சீரியஸாக கேட்டு கொண்டிருப்பது! உங்களுக்கும் ஸ்டீவுக்கும் ஒரே ஒற்றுமை தான், இன்னைக்கு ஏப்ரல் ஒன்னு!


டிஸ்கி:சும்மா லுலுலாயி

45 வாங்கிகட்டி கொண்டது:

சைவகொத்துப்பரோட்டா said...

நீங்களுமா!!!!!!!

Ahamed irshad said...

சரியான தேர்தெடுத்த,பொறுக்கியெடுத்த மொக்கை....

நாமக்கல் சிபி said...

//அதன் பிறகு அவனது வேலை யார் என்ன கதை விட்டாலும் உங்களை போலவே சீரியஸாக கேட்டு கொண்டிருப்பது! உங்களுக்கும் ஸ்டீவுக்கும் ஒரே ஒற்றுமை தான், இன்னைக்கு ஏப்ரல் ஒன்னு!//

:))

Prabu said...

ஸ்டீவ் கதையைக் கிளப்பிவிட்டது யார் என்று தெரியவில்லை... நேற்றிரவிலிருந்து இதே கதையை இ மெயிலிலும் எஸ் எம் எஸ் ஸிலும் அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.... நீங்களுமா!!

பொதுவாக நான் ஏப்ரல் முதல்வாரத்தில் என்ன வாசித்தாலும் முதலில் கடைசி பாராவில் ஏதேனும் ஏப்ரல் ஃபூல் டிஸ்கி இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத்தான் வாசிப்பது வழக்கம்...... அந்தளவு ஏமாந்திருக்கிறேன் என்பதுதான் உண்மை :)

வால்பையன் said...

//ஸ்டீவ் கதையைக் கிளப்பிவிட்டது யார் என்று தெரியவில்லை... நேற்றிரவிலிருந்து இதே கதையை இ மெயிலிலும் எஸ் எம் எஸ் ஸிலும் அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.... நீங்களுமா!!//

எனக்கு அனுப்பியது அடலேறு!
மனுசன் எனக்கு மட்டும் தான் அனுப்பியிருப்பார்னு பார்த்தா ஊருக்கே அனுப்பியிருப்பாரு போலயே!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

வாலு..
ப்ளீஸ்..ப்ளீஸ்..ஸ்டீவுக்கு ஒரு கோயில் கட்டி.. கும்மாபிஷேகம் பண்ணலாமா?..

ஆமாமா.. பொறம்போக்கு இடத்திலதான்

இராஜ ப்ரியன் said...

நல்லா கத சொன்னீங்க போங்க....... அந்த //ஏழாவது மனைவி வாக்கு தவறினால் குதிரை வண்டிகாரனுடன் ஓடி போய்விடுவதாக ஏற்கனவே மிரட்டியிருந்ததால்// வரியிலேயே நீங்க உங்க வேலையகாட்டிடிங்க :)

பித்தனின் வாக்கு said...

நல்ல கதை, ஆனா இதை வெளியில சொன்ன தெய்வ குத்தம் ஆகிவிடும். ஆமா ஏப்ரல் 1க்கு எல்லாம் பார்ட்டி தரமாட்டீங்களா?.

கல்வெட்டு said...

.

சம்பந்தம் இல்லாத பின்னூட்டம்தான்...இருந்தாலும் என்ன கொடுமைங்க இது? எல்லாம் நடக்குற வரைக்கும் சும்மா இருக்காக நடந்தப்புறம் அந்தப் பழம்தான் இந்தப் பழம் என்று காப்பிரட் வாங்கிவிடுகிறார்கள்.
:-)))))


பெருவெடிப்பு சோதனை வெற்றி - சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உண்மைகள் அனைத்தும் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டு இது இறை வேதம் தான் எனபதை நிரூபிக்கின்றது.
http://athikkadayan.blogspot.com/2010/04/blog-post.html

.

வால்பையன் said...

@ கல்வெட்டு

அந்த கொடுமையை ஏன் கேக்குறிங்க?
முதல் வரியை படிச்சு சிரிப்பு தாங்க முடியல எனக்கு!

ஐயாயிரம் வருடங்களுக்கு முன் அல்லா உலகத்தை ஆறே நாளில் படைத்தார், எப்போ பெருவெடிப்பு நடத்தினார்,! இன்னும் குரானுக்குள் பல அடைப்புகுறி வார்த்தைகள் உருவாகப்போகுது பாருங்க!

Rajan said...

//அவரது ஏழாவது மனைவி வாக்கு தவறினால் குதிரை வண்டிகாரனுடன்//

குதரை வண்டிக் காரனோடயா மேட்டம்!

Rajan said...

//தனது ஏழு மனைவியருடன் உலகை சுற்றி வர வாக்களித்திருந்தார்,//

நம்ம சில்க் சிவபெருமான் கதைய சொல்லி இருந்தீங்கன்னா ஈசியா உலகத்த சுத்தி இருப்பாரு

Rajan said...

//அதை சொல்லும் பொழுது அவனுக்கு வயது எட்டு!//

எட்டு வயசா ? ஆன்டிக்கு அறிவித்த பொது உங்க வயசு என்ன தல !

Rajan said...

//ஆசிரியர்களும் வாங்கும் சம்பளத்துக்கு வஞ்சகம் செய்யாமல் வேலை பார்த்தார்கள்,//

நம்ம ஊரு வாத்திகளா இருந்தா என்னாகறது !

Rajan said...

//அறிவு பூர்வமான கேள்விகளும் அவ்வபோது கேட்பதுண்டு!,//

நம்மள மாதிரியே !

Rajan said...

//158 தொழில்கள் செய்து கொண்டிருந்ததாக பதிவாகியிருக்கிறதாம்!,//
ஆம்னி வேன் வைத்திருந்தாரா தல !

Rajan said...

//ஒரு அதிர்ஷ்டகார ஞானி சிரித்து கொண்டே சொல்லுவார்!//

அது யாரு தல மெட்ராஸ்ல அவ்வளவு பெரிய ஞானி ! ஒ பக்க ஞானியா

Rajan said...

//http://www.jeyamohan.in/?p=6954

இதைப்படிச்சீங்களா?//

அதப் படிக்காமலா !

Rajan said...

//கள்ளன் பெருசா, காப்பான் பெருசான்னா, கள்ளன் தான் பெருசுன்னு ஒரு பழமொழி உண்டு,//

காப்பானா ? பாப்பானா தல !

இரசிகை said...

appo sonathellaam poiyaa?

ok...
april 1st yaetheyns nagar gnani saakradees pirantha thinam.
avar thathuvangalaiyellam.., muttaalthanamaana pithatralkalnu solli,avar pirantha naalaiye muttaalkal thinamnu solla aarambichuttaangalaam!

namma oor sardaarjees i british kaaranga kindal seithu..ippo athu vazhamaiyaanathu pola!

ithuthaan yenakkuth therintha kathai...

இராகவன் நைஜிரியா said...

:-)

பிரேமா மகள் said...

பொதுவாக ஏப்ரல் பூல் சொல்லி மற்றவர்களை ஏமாற்றும் பழக்கத்தை நான் கல்லூரி காலத்திலேயே கைவிட்டுவிட்டேன்..மற்றவர்கள் யாரேனும் என்னை ஏமாற்றினால் கூட சிரித்துக் கொண்டே நகர்ந்துவிடுவேன்..ஆனால் இன்று காலையில் எனக்கு நடந்தது கொடுமையான விஷயம்..

அதாவது அரசாங்கத்திடம் இருந்து எனக்கு வர வேண்டிய அனுமதிக் கடிதத்துக்காக மாதக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறேன். அந்த கடிதம் இன்று வந்திருப்பதாக அலுலகத்தில் உடன்வேலை பார்ப்பவர் சொன்னதும் ஒரு நிமிடம் உயிர் தெறித்ததும், அடுத்த நிமிடமே அது ஏமாற்றுவேலை என்று தெரிந்து அழதுவிட்டேன்.. இப்போது வரை அந்த வருத்தம் இருக்கிறது..

என்னை அழவைத்ததில் என்ன சந்தோஷம் இவர்களுக்கு?

வால்பையன் said...

//என்னை அழவைத்ததில் என்ன சந்தோஷம் இவர்களுக்கு? //


கேட்டேன்!

யானைகுட்டி அழுதால் எப்படியிருக்கும் என பார்க்க வெகுநாள் ஆசை என்றார்!
இன்று தான் நிறைவேறுச்சாம்!

வால்பையன் said...

//இப்போது வரை அந்த வருத்தம் இருக்கிறது..//

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது,
கிடைக்காதது கிடைக்காது!

cool buddy!

Rajan said...

//கிடைக்கிறது கிடைக்காம இருக்காது,
கிடைக்காதது கிடைக்காது!//

அடா அடா டா ! என்னே தத்துவம் !

மன்னார்குடி said...

ரைட்டு...

Mythees said...

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியாகிவிட்டது....

பெரிய இவன் said...

சரி உன் கோவத தூக்கி தூர போடுடே...விசயம் தெரியுமாடே மக்கா, ஜெயமோகன் சாருவோட பாண்ட உருவிட்டாருலா...அங்க போய் பாருடே.

சசிகுமார் said...

ஏன்பா இப்படி போடுற, பதிவு எழுதறத விட்டுட்டு போ ன்னு சொன்னா போக போறேன் அதுக்காக இப்படியா

மாதவராஜ் said...

//உங்களுக்கும் ஸ்டீவுக்கும் ஒரே ஒற்றுமை தான், இன்னைக்கு ஏப்ரல் ஒன்னு!//

:-))))))

மதன் said...

Ada pavi..
Nanum romba serious a vasichen..
Ippadi emathitigale?
idhu niyayama?

தமிழ் பொண்ணு said...

பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் டு வாலு பையா.........

தமிழ் பொண்ணு said...

இந்த வாழு பையன் டெய்லி ஆபீஸ் ல பொய் வேல பாக்கமா ரூம் போடு யோசிப்பான் போல .

தமிழ் பொண்ணு said...

entha vaalu payanuku vera velayea ella..

தமிழ் பொண்ணு said...

சரியான மொக்க பையனா இருக்கான்.போங்க போய் புள்ள குட்டிய வழகுற வேலைய பாருங்க ஆமா சொல்லிட்டேன்

வால்பையன் said...

South Indian Movies said...

entha vaalu payanuku vera velayea ella..//


ஆமங்க, நல்ல வேலையா வாங்கி கொடுங்க ப்ளீஸ்

வால்பையன் said...

South Indian Movies said...

பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் டு வாலு பையா.........//


இன்னைக்கு ஸ்டீவ் மார்ஷலுக்கு தாங்க பிறந்த நாள் எனக்கு ஏப்ரல் 14 தான்!

வால்பையன் said...

// South Indian Movies said...

இந்த வாழு பையன் டெய்லி ஆபீஸ் ல பொய் வேல பாக்கமா ரூம் போடு யோசிப்பான் போல .//

தனியா எதுங்குங்க ரூம் போடனும், ஆபிஸ்லயே ரூம் இருக்கு!

கபிலன் said...

சும்மா ஒரு விவரத்துக்காவது எதுக்கு இந்த முட்டாள் தினம் வந்துச்சுன்னு சொல்லி இருக்கலாம்!
நான் படித்த வரை, பல சமுதாயத்தினர், பல ஊர்க்காரங்க ஏப்ரல் மாதத்தைத் தான் வருடத்தின் துவக்கமாக வச்சிருந்தாங்க...அதனால் கிறித்துவ காலெண்டர் முறையை அமல்படுத்த சிக்கலாக இருந்துச்சாம். அதனாலத் தான் ஏப்ரல் ஒண்ணாம் தேதியை, மற்றவரை கிண்டல் செய்வதற்காக, முட்டாள்கள் தினமாக கொண்டாட ஆரம்பித்தனர். அப்படியே மெல்ல ஜனவரி 1 ஆம் தேதியே ஆண்டின் முதல் மாதம் என்று ஒப்புக் கொள்ளவைத்தனர்,

எனக்கு தெரிந்தவரையில் இது தான் ஏப்ரல் 1, முட்டாள் தினத்திற்கான காரணம்!

Unknown said...

ரூம் பூட்டு யோசிப்பீங்களோ.. ! அட்ரா அட்ரா

மறக்காமல் படியுங்கள் .. கருத்து சொல்லுங்கள்

"ராமாயண "ராமனும்" நவீன யுக "ராமன்களும்" " /

http://myownscribblings.blogspot.com/2010/04/blog-post.html

கண்மணி/kanmani said...

நண்பருக்கு
நீங்க கேட்டுக் கொண்டபடி பதிவு போட்டிருக்கிறேன்இரகசியமாய்...ஒரு பதிவு

ஏப்ரல் ஃபூல் இல்லைங்க நிஜம்.:D

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. என் மனதில் பட்டதை வெளியே சொல்லி விட வேண்டும். சொல்லாமல் மறைத்து வைத்தால் அது உள்ளுக்குள்ளேயே புரண்டு புரண்டு தூக்கத்தைக் கெடுத்து விடும். அங்காடித் தெரு பார்த்ததிலிருந்து அந்தப் படத்தைப் பற்றிய என் மதிப்பீட்டை எழுதக் கூடாது எழுதக் கூடாது என்று என் தர்க்க அறிவு என்னை அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் மனசாட்சி எழுது எழுது என்று என்னைத் தூங்க விடாமல் செய்து கொண்டிருக்கிறது. கடைசியில் என் மனசாட்சியே வென்றது.//

பொது அறிவிப்பு போட்டி..

மேலே உள்ளதை யார் எழுதியது என சொல்பவர்களுக்கு , சாணியுடன், ஒரு வேளை, மதிய உணவு இலவசம்...

Anonymous said...

இந்தியாவில் வருடத்தில் 365 நாளுமே முட்டாள் தினம் கொண்டாடலாம்!

பின்னோக்கி said...

எதோ நாட்டுக்கு நல்லது சொல்றவங்கன்னு நம்பி வந்து படிச்சா... போதும்பு... இந்த வருஷத்துக்கு இது போதும்.... :)

Aba said...

@பட்டு,

நம்ம சாருதானே? வேற யாரு?

எப்புடி நம்ம பொது அறிவு?

!

Blog Widget by LinkWithin