Five "Q"

உலகத்திலேயே ரொம்ப ஈஸி கேள்வி கேக்குறது தான்னு ஒரு படத்துல கமல் சொல்லுவாரு, அதை தான் நானும் இப்போ சொல்லப்போறேன்!, Five Q என்பது "ஐந்து கேள்விகள்" என்ற தத்துவத்தை சொல்லுது, மேலாண்மையில் இது அடுத்த கட்ட வளர்ச்சின்னு கூட சொல்லலாம்!, நொய்யு நொய்யுன்னு கேள்வி கேட்டா யார்யா பதில் சொல்லப்போறான்னு நினைக்காதிங்க, பல பெரிய பிரச்சனைகளின் ஆதாரம் ஒரு சிறு முடிச்சா தான் இருக்கும், அந்த முடிச்சை கண்டுபிடிச்சிட்டா அந்த பெரிய பிரச்சனை உடனே தீர்ந்து விடும்!

உதாரணமா ஒரு கம்பெனிக்கு நாம அனுப்ப வேண்டிய பொருள் போய் சேரலை, நீங்க ஒரு மேலதிகாரி, உங்களுக்கு கீழே இருக்குறவர்கிட்ட விசாரிக்கிறிங்க!

ஏன் பொருள் போகல!?

முக்கியமான ஒரு பொருள் இன்னும் தயாராகலை

ஏன் தயாராகலை?

அதற்கு உண்டான ரா மெட்டீரியல் வந்து சேரல

ஏன் வரல?

அதற்கான பணம் நாம இன்னும் கொடுக்கல

ஏன் பணம் கொடுக்கல?

நமக்கு வர வேண்டிய அவுட் ஸ்டேண்டிங் இன்னும் வந்து சேரல

அதை ஏன் பாலோ பண்ணல?

இதுல ஐந்தாவது கேள்வியோடு முதல் பிரச்சனை முடிந்தாலும், அவ்விடத்தில் இன்னொரு பிரச்சனை ஆரம்பிக்குது, அதன் பின் மீண்டும் ஐந்து கேள்விகள் தான், நமக்கு கீழ இருக்குறவங்க ஒழுங்கா வேலை செய்யுறாங்களான்னு பார்க்க வேண்டியது தானே ஒவ்வோரு மேலதிகாரின் கடமை, அதற்காக ஐந்து கேள்விகள் கூட கேட்க முடியலைனா எப்படி?

இன்னோரு விசயம், இந்த தத்துவம் பெரும் இயந்திர உற்பத்தியகங்களுக்கு மட்டும் பயன்தரும்னு இல்ல, சாதாரண பெட்டிகடைக்கும் பொருந்தும், வீட்டிற்கும் பொருந்தும், சும்மா ஒரு தடவை முயற்சி செஞ்சு பாருங்களேன்!

***************
வேலையை சுலபமாக்குதல் அல்லது இலகுவாக்குதல், ”வொர்க் சிம்பிலிஃபை”ன்னு நானே சொல்லிகுவேன்!, ஒரு வேலையை முத தடவை பத்து நாள்ல செஞ்சு முடிச்சோம்னா அடுத்த தடவை எட்டு நாள்ல வேலை முடிய என்ன செய்யனும்னு பார்க்கனும், சின்ன சின்ன வேலைகள் மூலமா இதை சாத்தியமாக்க முடியும்,

அடிப்படையில் இந்த தத்துவத்துக்கு ரொம்ப முக்கியம் முதல் தடவை செஞ்ச தப்பை மறுபடி செய்யக்கூடாது, அதனால நாம இல்லாட்டியும் அடுத்தவங்க அதை செய்யாம இருக்க அதை குறிச்சு வைக்கனும், வேலை செய்யாத சுவிட்சுகள் மேல ”டூ நாட் டச்சு”ன்னு கூட எழுதி வைக்கலாம், எந்தந்த பொருள்களில் என்னன்ன பிரச்சனைன்னு எல்லோருக்கும் தெரியிற மாதிரி குறிப்பு வைக்கிறது ரொம்ப முக்கியம்!

அடுத்து எடுத்த பொருளை எடுத்த இடத்தில் திரும்பவும் மறக்காம வைக்கிறது, இதுனால மணி கணக்குல கூட வேலை நிற்கலாம், அதனால ஒவ்வோரு பொருளுக்கும் இது தான் இடம்னு முன்கூட்டியே பிக்ஸ் பண்ணி வச்சிகனும்.

கடைசியா டைம் மேனேஜ்மெண்ட், மேலே உள்ளதெல்லாம் ஒழுங்கா இருந்தா தான் இது சரியா இருக்கும், அதே நேரம் ஒரு வேலை தடை பட்டுச்சுன்னா அதோட தொடர்புடய இன்னோரு வேலையை பார்ப்பது மூலம் இதை சரி செய்யலாம், அனைத்திற்கும் முன்னாள் நாம் செய்ய பத்துநாள் அனுபவம் கைக்கொடுக்கும்!


டிஸ்கி: நாங்க துறை சார்ந்த மொக்கைகளும் போடுவோம்ல!

83 வாங்கிகட்டி கொண்டது:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இது மொக்கையில்லை. நல்லா எழுதியிருக்கீங்க வால்.

பாபு said...

good one

aathikku pottiyaa???

Raju said...

பேராண்மை தெரியும்..அதென்ன மேலாண்மை..?

ஊடகன் said...

//பல பெரிய பிரச்சனைகளின் ஆதாரம் ஒரு சிறு முடிச்சா தான் இருக்கும், அந்த முடிச்சை கண்டுபிடிச்சிட்டா அந்த பெரிய பிரச்சனை உடனே தீர்ந்து விடும்!//

தத்துவம்லாம் பேசுரீன்கோ...........

Anonymous said...

தளைவா கழக்கிட்ட !! டைம் மேனேஜ்மேன்டிள் நீ கிள்ளாடி தான்


நம்ம சிந்தனையும் நட்பும் வொண்ணு பொள இருக்கதாள,
நான் உன்னைப் பாராட்டினா மக்கல் எள்ளாம் நீ தன்னை தானே பாராட்டுவது போள் நினைக்கக் கூடாதுன்னுதான் போன பதிவுள டிஸ்கி போட்டேன்.

சொள் அலகன்

க.பாலாசி said...

//அதை ஏன் பாலோ பண்ணல?//

இந்த கேள்வி மட்டும் அடிக்கடி என்னிடம் கேட்கப்படும்....

Mahesh said...

இவ்வளவு நல்லா எழுதிட்டு மொக்கைன்னு சொல்றீங்களே !!

Rajeswari said...

கருத்துக்கள் நன்று

அகல்விளக்கு said...

//நாங்க துறை சார்ந்த மொக்கைகளும் போடுவோம்ல!//

இன்னாது மொக்கையா????

என்னா தல !!!

நல்லா எழுதிட்டு மொக்கன்றீங்க.

தராசு said...

நல்ல மொக்கைன்னு சொல்றதா, இல்ல நல்ல பதிவுன்னு சொல்றதா???

ஆரூரன் விசுவநாதன் said...

it confirm the old thoght" practice makes perfection"....nice article....

regards
arur

Anonymous said...

It's really very useful. Please do write more about time management.
Regards
Geetha

பீர் | Peer said...

பரவாயில்லை ஐந்து கேள்விகள் வரை வருது, சமாளிச்சுக்கலாம்...

இங்க ஒரே ஒரு கேள்விதான் அது கேணத்தனமா இருந்தாலும், பதில் சொல்ல முயன்றால்...

"I don't want any explanation"

:(

S.A. நவாஸுதீன் said...

Three Pillars of Production Management

1. Total Quality Management

2. Total Productive Maintenance

3. Just In-Time

and

What is needed
When is needed
Where it is needed
In the required Quantity

And the Most Important thing is to remember that Inventory is the root of all evil. Because it hides the waste.

கிருஷ்ண மூர்த்தி S said...

/நாங்க துறை சார்ந்த மொக்கைகளும் போடுவோம்ல! /

என்ன சொன்னீங்க?

வாலு எல்லாப்பக்கத்துலேயும் நீளும்னு சொன்ன மாதிரி காதில் விழுதே:-))

S.A. நவாஸுதீன் said...

What is Management?

Very Simple Concept.

Improvement without spending lot of money, but by motivating people & involving them.

Any fool can improve things by increasing resources / spending more money.

கலையரசன் said...

என்னங்க மேலாண்மையை இவ்வளவு சுருக்கமா முடிச்சிட்டீங்க? ரைட்டு! மேட்டர் இல்லன்னா.. இப்படிதான் எதையாவது கொத்த சொல்லும்!!

vasu balaji said...

நல்ல சிந்தனைகள் வால். இந்த எடுத்த எடுத்துல வைக்கிறது மட்டும் வந்துட்டாலே மத்ததில ஒரு ஒழுங்கு வந்துடும். சூப்பர்ப்.

Sanjai Gandhi said...

ஓவர் தன்னடக்கம் ஒடம்புக்கு ஆகாது. இது மொக்கை இல்லை. நல்ல கட்டுரை.

Nathanjagk said...

Five Qs! Really Fantastic Qs!
More Qs More quality!

Jawahar said...

இதத்தானங்க புரட்சித் தலைவர் 'ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை' என்கிற பாட்டிலே சொல்றாரு?

இதோட ஒரு H (How) ஐயும் சேர்த்துகிட்டோம்னா பிரச்சினையை எப்படி சரி பண்ணலாம்ன்னும் தெரியுமில்லை?

நல்ல ஆர்ட்டிகிள்.

http://kgjawarlal.wordpress.com

Anonymous said...

கடைசி நாலு பராவும் எங்க அம்மா எனக்கு சொல்லுவது. நான் தான் பிடாறி ஆச்சே. கேட்கவே மாட்டன். நானும் எடுத்த பொருள பத்திரமா வச்சேனா, அதை திருப்ப எடுக்க நாலு மணி நேரம் ஆகும். எதுக்குன்னு அங்கங்க தூக்கி போட்டுடுவன். ஹி ஹி

Last four Paras; nacchunu irukku... (chennai tamilppa)

பலே

புலவன் புலிகேசி said...

தல என்ன இது மொக்கைனு பாத்தா ரொம்ப புத்திசாலித்தனமான மேலாளர் பணிகள் எல்லாம் சொல்றீங்க.. இது மொக்கை இல்ல நல்ல வழி முன்னேற....

பித்தனின் வாக்கு said...

நல்ல கருத்துக்கள், இது நடைமுறை வாழ்க்கையில் கூட ஒத்துவரும். நன்றி வால்ஸ்.

Thamira said...

நல்ல பதிவு.

ஆனால் அது 5 Q அல்ல, 5 Whys.! Q என்று கேள்விப்பட்டமாதிரி தெரியவில்லை, தெளிவு செய்துகொள்ளவும்.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

கண்டிப்பா இது மொக்கை இல்ல.
ஏன் இந்த டிஸ்கி...

ஆ.ஞானசேகரன் said...

மொக்கையானாலும்... சரியாதான் இருக்கு தல..... இதுபோலதான் ஜப்பானியர்கள் கடைபிடிக்கும் 5sம் இதே போல தான்... பகிர்வுக்கு நன்றி நண்பா

யோ வொய்ஸ் (யோகா) said...

கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு முறையை நாங்கள் பின்பற்றுகிறோம். இதை நாங்கள் ஜப்பானியர்களின் 5s என சொல்லுவோம், எங்களது நிறுவனத்தில் 5S முறையை அறிமுகப்படுத்தி பல வெற்றிகளை கண்டுள்ளோம்.

அப்துல்மாலிக் said...

இதுலே நிறைய வேலை சம்பந்தபட்ட குறிப்புகள் அடங்கிருக்கு

மங்களூர் சிவா said...

என்னய்யா வெறும் 5 கேள்வின்னு சொல்லுறீங்க எங்கூட்டுக்காரி எதுக்கெடுத்தாலும் 500 கேள்வியில்ல கேக்குறா :))))))))))))))))

Jawahar said...

//எங்களது நிறுவனத்தில் 5S முறையை அறிமுகப்படுத்தி பல வெற்றிகளை கண்டுள்ளோம்.//


5S என்பது தொழிற்கூடத்தை சுத்தமாக வைத்திருத்தல் தொடர்பானது.

SEIRI - வேண்டாததைப் பிரித்தெடுத்தல்
SEITON - பொருட்களுக்கு ஒரு
இடம் ஒதுக்குதல்
SEISO - துடைத்து சுத்தப் படுத்துதல்
SEIKETSU - பார்வையிலேயே அடையாளம் காணும் வண்ணம் வைத்தல்
SHITSUKE - மேற்கண்டவற்றை தினசரி வழக்கமாக்குதல்

http://kgjawarlal.wordpress.com

You Don't Mess with the Zohan said...

வால் பையன் எந்த மயிருக்கு பதிவு எழுதிகிறார்?
பெரிய மயிறு என்று காட்டுவதற்கு

வால் பையன் ஏன் மயிரை காட்டுகிறார்?
அது நன்றாக வளர்கிறது என்று உறுதிபடுத்த.

வால் பையன் ஏன் அதை படுத்துகிறார்?
அவர் இல்லை என்றால் வேறு யாராவது படுத்தலாம்.

படுத்துவதற்கும், அவர்க்கும் என்ன சம்மந்தம்?
சம்மந்தத்தில் மந்தம் இருப்பதால் இருக்கலாம்.

அவர் ஏன் இன்னும் இருக்கிறார்?
தான் இருப்பதாக நினைத்து கொண்டு இருப்பதால்.

(பரவாயில்லை நன்றாகவே வொர்க் அவுட் ஆகிறது)

gayathri said...

அடுத்து எடுத்த பொருளை எடுத்த இடத்தில் திரும்பவும் மறக்காம வைக்கிறது

itha mattum than naan marakkama maranduduven

கிருஷ்ண மூர்த்தி S said...

என்ன ஒரு அக்கிரமம்!

மொக்கை இல்லை, மொக்கை இல்லை என்று எல்லோரும் கோரசாகச் சொல்வதைப் பார்த்தால், கடைசியில் வால்பையனுக்கு வாலே இல்லை என்று சொல்லிவிடுவார்கள் போல இருக்கிறதே:-))

நட்புடன் ஜமால் said...

மொக்கையல்ல நண்பா

நல்ல பகிர்வு தான்

முயற்சி செய்து பார்க்கனும்.

தமிழ் அமுதன் said...

/// ஒரு வேலையை முத தடவை பத்து நாள்ல செஞ்சு முடிச்சோம்னா அடுத்த தடவை எட்டு நாள்ல வேலை முடிய என்ன செய்யனும்னு பார்க்கனும், சின்ன சின்ன வேலைகள் மூலமா இதை சாத்தியமாக்க முடியும்,///

supper

அ.மு.செய்யது$ said...

//அடிப்படையில் இந்த தத்துவத்துக்கு ரொம்ப முக்கியம் முதல் தடவை செஞ்ச தப்பை மறுபடி செய்யக்கூடாது, அதனால நாம இல்லாட்டியும் அடுத்தவங்க அதை செய்யாம இருக்க அதை குறிச்சு வைக்கனும், வேலை செய்யாத சுவிட்சுகள் மேல ”டூ நாட் டச்சு”ன்னு கூட எழுதி வைக்கலாம், எந்தந்த பொருள்களில் என்னன்ன பிரச்சனைன்னு எல்லோருக்கும் தெரியிற மாதிரி குறிப்பு வைக்கிறது ரொம்ப முக்கியம்!..
//


டாகுமெண்டேஷன் இன்று சுருக்கமாக சொல்லலாம்.நல்லதொரு இடுகை வால்.

very informative !!!

அறிவிலி said...

இதையெல்லாம் மொக்கைன்னு சொன்னா அப்புறம் மொக்கையெல்லாம் என்னன்னு சொல்றது?

அப்பறம் ஆதி சொல்றா மாதிரி நானும் 5-why தான் கேள்வி பட்டிருக்கேன். why why analysis என்று சொல்வோம்.

அறிவிலி said...

//Anonymous said...
தளைவா கழக்கிட்ட !! டைம் மேனேஜ்மேன்டிள் நீ கிள்ளாடி தான்


நம்ம சிந்தனையும் நட்பும் வொண்ணு பொள இருக்கதாள,
நான் உன்னைப் பாராட்டினா மக்கல் எள்ளாம் நீ தன்னை தானே பாராட்டுவது போள் நினைக்கக் கூடாதுன்னுதான் போன பதிவுள டிஸ்கி போட்டேன்.

சொள் அலகன்//
இப்பதான் சந்தேகம் வளுக்குது தள.

மேவி... said...

வால்ஸ் ..... பெரிய விஷயமா எழுதுறிங்க .... வாழ்த்துக்கள்

எனக்கு "மேல ஆமை தான் மேலாண்மை" ன்னு தான் தெரியும் .... நீங்க ஏதோ ஏதோ சொல்லுரிங்க, ம்ம்ம்ம்

மேவி... said...

இன்னும் மக்கள் மேலாண்மையை அவர்கள் வேலை பார்க்கும் கம்பெனி மற்றும் மேனேஜர் வைத்தே மதிப்பிடு செய்றாங்க. அல்லது அதை கம்பெனியின் ஒரு அகமாக தான்
பார்க்குறாங்க..... தவறு

மேலாண்மை என்பது எல்லோரும் பழகி கொள்ள வேண்டிய ஒரு அவசியமான குணம்.......

மேவி... said...

"S.A. நவாஸுதீன் said...
What is Management?

Very Simple Concept.

Improvement without spending lot of money, but by motivating people & involving them.

Any fool can improve things by increasing resources / spending more money."


ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பார் போல் இருக்கே
(துரை இங்கிலீஷ் எல்லாம் பேசுதுப்பா)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா எழுதியிருக்கீங்க

மேவி... said...

"Jawahar said...
//எங்களது நிறுவனத்தில் 5S முறையை அறிமுகப்படுத்தி பல வெற்றிகளை கண்டுள்ளோம்.//


5S என்பது தொழிற்கூடத்தை சுத்தமாக வைத்திருத்தல் தொடர்பானது.

SEIRI - வேண்டாததைப் பிரித்தெடுத்தல்
SEITON - பொருட்களுக்கு ஒரு
இடம் ஒதுக்குதல்
SEISO - துடைத்து சுத்தப் படுத்துதல்
SEIKETSU - பார்வையிலேயே அடையாளம் காணும் வண்ணம் வைத்தல்
SHITSUKE - மேற்கண்டவற்றை தினசரி வழக்கமாக்குதல்

http://kgjawarlal.wordpress.com"


ரொம்ப படிச்சவர் ன்னு நினைக்கிறேன்

மேவி... said...

இது மேலாண்மை சார்ந்த மொக்கை பதிவு

மேவி... said...

operations research nnu oru subject irukkunga..... nalla interesting ah irukkum

தேவன் மாயம் said...

இதுல ஐந்தாவது கேள்வியோடு முதல் பிரச்சனை முடிந்தாலும், அவ்விடத்தில் இன்னொரு பிரச்சனை ஆரம்பிக்குது, அதன் பின் மீண்டும் ஐந்து கேள்விகள் தான், நமக்கு கீழ இருக்குறவங்க ஒழுங்கா வேலை செய்யுறாங்களான்னு பார்க்க வேண்டியது தானே ஒவ்வோரு மேலதிகாரின் கடமை, அதற்காக ஐந்து கேள்விகள் கூட கேட்க முடியலைனா எப்படி?///

அருமையான 5 கேள்விகள் வால்!!

sriram said...

தல,
ஜூப்பர் பதிவு..
Time Management / operations management etc பத்தி சேந்து மொக்க போடுவோமா?

Menaga Sathia said...

வால் நல்ல பதிவு!!

அன்புடன் அருணா said...

ஒரு பெரிய பூங்கொத்து!

Tech Shankar said...

ஆஹா.. சூப்பரப்பூ


//டிஸ்கி: நாங்க துறை சார்ந்த மொக்கைகளும் போடுவோம்ல

வினோத் கெளதம் said...

திடிர்னு ஏன் இப்படி..:)

Ashok D said...

//இது மொக்கையில்லை. நல்லா எழுதியிருக்கீங்க வால்.//

வழிமொழிகிறேன்

கண்ணகி said...

உபயோகமாத்தான் சொல்றீங்க. வால். குட். அப்ப்டியே போய் கனிமொழி என்ற பெண்ணின் உதிர்ந்த மலர்கள் பதிவுக்குப்போய் உற்சாகப்புடுத்திவிட்டு வாங்க. தொடர்பு. அகல்விளக்கு.

cheena (சீனா) said...

அன்பின் வாலு

ஐந்தே ஐந்து கேள்விகள் - ஒரு இடுகை தயார் - பலே பலே - நல்லாருக்கு

கடசி நாலு பாரா - சூபர் -சொல்றது எளிது -செய்வது கடினம் - முயலுவோம் - வெற்றி பெறுவோம்

நல்வாழ்த்துகல் வாலு

தினேஷ் said...

தல நீ :)

valaignan said...

You have an excellent taste for movies,tailboy!
;-) Please see the movies of Billy Wilder (Director) You may start with the movie 'The Apartment' and share your views here
Keep up your good work too!
Best regards,

நசரேயன் said...

குறிச்சுக்கிறேன்

இரா. வசந்த குமார். said...

//
பல பெரிய பிரச்சனைகளின் ஆதாரம் ஒரு சிறு முடிச்சா தான் இருக்கும்
//

oru mudichu thaanaa..? :))))

ஹேமா said...

வாலு இதுக்கு பேர் மொக்கை இல்ல.மாத்திடுங்க.நல்ல சிந்தனைகள்தானே !

vanila said...

//அதை ஏன் பாலோ பண்ணல?//

நான் அதிகம் எதிர்படும் கேள்வியும், நான் அதிகம் உபயோகிக்கும் கேள்வியும் இது தான்.. இதிலிருந்து என்ன தெரியுது.. "Time management" என்பது சுத்தமாக இல்லை.. இது ஒரு "Manufacturing Defected" பீசுன்னு (நான் தான்).. ரைட்டா?.. ரைட்டு! ..

ஊர்சுற்றி said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
இது மொக்கையில்லை. நல்லா எழுதியிருக்கீங்க வால்.
//
ரிப்பீட்டேய்.

Unknown said...

வாலா இது??? என்ன ஒரு ஆச்சிரியம்?

வால் போயிடிச்சா? :D

நல்லா புருஞ்சுகிறமாதிரி எழுதிருக்கீங்க.

Anonymous said...

மிக‌ப் பெரிய‌ வாழ்க்கை த‌த்துவ‌த்தை எளிமையா சொல்லிருக்கீங்க‌

Romeoboy said...

ரொம்ப நாட்களுக்கு அப்பறம் பயனுள்ள சூப்பர் பதிவு தல .

CS. Mohan Kumar said...

வால் பையன் பேரே ரொம்ப அழகா இருக்கு

எனது பழைய கம்பெனியில் பல நல்ல விஷயம் காது தந்தாங்க. அதில் ஒன்று எந்த விஷயத்துக்கும் நிறைய கேள்வி கேட்கனும் என்பது. ஆனால் சிலருக்கு நிறைய கேள்வி கேட்டால் பிடிப்பதில்லை. என்ன செய்வது?? Life moves on...

யூத் விகடனில் லிங்க் கண்டு இங்கு வந்தேன்.

எனது படைப்புகளும் முதல் முறை யூத் விகடனில் இந்த வாரம் தான் வந்தது. முடிந்தால் படிக்கவும்

கவிதை:

http://youthful.vikatan.com/youth/Nyouth/mohankumar16112009.asp
கட்டுரை:
http://youthful.vikatan.com/youth/Nyouth/mohankumar13112009.asp

பெசொவி said...

//இன்னோரு விசயம், இந்த தத்துவம் பெரும் இயந்திர உற்பத்தியகங்களுக்கு மட்டும் பயன்தரும்னு இல்ல, சாதாரண பெட்டிகடைக்கும் பொருந்தும், வீட்டிற்கும் பொருந்தும், சும்மா ஒரு தடவை முயற்சி செஞ்சு பாருங்களேன்!
//

என்னுடைய ஐந்து Q: (with Answers)

முன்னேற எது வழி?

நல்ல முறையில யோசிக்கணும்

எப்படி யோசிக்கணும்?

யார்கிட்ட நம்ம பிரச்சினைய சொல்றதுங்கரதத் தான்.

அதுக்கு எங்க போகணும்?

நல்ல வலைமனை அல்லது வலைப்பூவைத் தேடனும்.

யாரோட வலைப்பூ the best?

யார் மொக்கைன்னு சொல்லிக்கிட்டு நல்ல பதிவு போடறாங்களோ, அவங்கதான்.

கடைசியா அப்படி ஒரு நல்ல வலைப்பூவோட பேர் என்ன?

வால்பையன் தான்.

angel said...

m 1 doubt if the answer comes for 1st question as
the raw materials were not yet received so the products have not yet sent means wht to do

Anonymous said...

உங்களை தொடர் பதிவொன்றிற்கு அன்புடன் அழைத்திருக்கிறேன்...வந்து கலக்குங்கள்...

http://the-nutty-s.blogspot.com/2009/11/4-39.html

Admin said...

என்ன தத்துவம்.... தத்துவஞானி வால்பையன் வாழ்க...

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

நல்லாருக்கு வாலோட வால்

Rajan said...

// வால் பையன் எந்த மயிருக்கு பதிவு எழுதிகிறார்? //

இதற்க்கான பதிலை வால் பையன் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்பதை கேள்வி கேட்டவர் மயிரைப் பிய்த்துக் கொண்டு மயிராண்டி போல தார் ரோட்டில் தவழும் கொடுமையினை காண சகியாமல் இந்த இடத்தில் முன்வைக்கிறேன்

வால்பையன் said...

//
இதற்க்கான பதிலை வால் பையன் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்பதை கேள்வி கேட்டவர் மயிரைப் பிய்த்துக் கொண்டு மயிராண்டி போல தார் ரோட்டில் தவழும் கொடுமையினை காண சகியாமல் இந்த இடத்தில் முன்வைக்கிறேன் //

அதான் வலைச்சரத்துல டவுசர் அவுத்து விட்டாச்சே!

ரெண்டும் ஒரே ஆள் தான்!
அங்க பின்னூட்டம் போட்ட பிறகு தான், எனக்கு இந்த பின்னூட்டம் வந்தது

Rajan said...

செல்லத்தொறையா!

அவர் ஒரு விஷயத்தை கமேநதில் போடா மறந்துட்டார்னு நெனைக்கறேன்

அதன் உண்மை நகல் அவரது விருப்பபடி என்னால் வெளியிடப் படுகிறது

அட்டகாசமான ,
அதி அற்ப்புதமான
கதைகள் மற்றும் கவிதைகள்,
விரை வீக்கம்
நரம்புத்தளர்ச்சி
சொரியாசிஸ்
இன்ன பிற கோளாறுகளுக்கான அதிநவீன சிகிச்சை முறைகள் கொண்ட அட்டகாசமான லிங்க் இதோ

http://www.idhayame.blogspot.com/

விக்னேஷ்வரி said...

ஏன் சாப்பிடலை?
சாப்பாடு நல்லா இல்லை.
ஏன் நல்லா இல்லை?
நீ சமைச்சதால.
ஏன் நீங்க சமைக்கக் கூடாது?
சாப்பாடு தட்டுல போட்டுக் கொண்டு வா.
ஏன் நீங்களே எடுத்துப் போட்டுக்கக் கூடாது?
இது எப்போல இருந்து.
இப்போ இருந்து தான். போட்டு சாப்பிடப் போறீங்களா இல்லையா?
நான் வெளிய போய் உனக்கும் சேர்த்து சாப்பாடு வாங்கிட்டு வந்துர்றேன்.

இது தான் எங்க வீட்டுக் கேள்வி பதில். :)

பின்னோக்கி said...

என்னென்னமோ சொல்றீங்க. யாராவது உங்க ப்ளாக்க ஹேக் பண்ணி எழுதிட்டாங்களான்னு எனக்கு ஒரு டவுட். விஷயம் நல்லாயிருந்துச்சு.

ரோஸ்விக் said...

இது ஒன்னும் மொக்கையில்ல...நல்ல பதிவு தல.

அஞ்சு-ல நெஞ்சைத் தொட்டுட்டீங்க....கலக்குங்க.

பித்தனின் வாக்கு said...

வால்ஸ் தலை நீங்க கேக்க சொன்னீங்கன்னு நானும் அலுவலகத்துல கேட்டன், அதுனால எனக்கு ஜனூறு ரூபாய் தண்டம், எப்பிடினா ?

// ஏன் பொருள் போகல!? //
போலிஸ் மடக்கிட்டாங்க? விட மாட்டிங்கறாங்க

ஏன் விடல்லை ?
மாமுல் கேக்கறாங்க,
ஏன் கொடுக்கலை ?
காசு இல்லை, அதான் கொடுக்கலை.
அதை ஏன் சால்வ் பண்ணலை?
அதை சால்வ் பண்ணத்தான் உங்க கிட்ட வந்தேன் ஒரு ஜனூறு ரூபாய் தாங்க

இப்படித்தான், இனி நான் ஏன் கேள்வி எல்லாம்.

தாரணி பிரியா said...

வால் நல்ல பதிவு

லிங்காபுரம் சிவா said...

என்ன வாலு ப்ரமோசன் வாங்கிட்டிகலா? (ளா or லா?)

வால்பையன் said...

பின்னுட்டமிட்டு எண்ணங்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

mohamedali jinnah said...

You are very smart but dangerous fellow

பிடித்தது இதுவும் ஒன்று!

mohamedali jinnah said...

எனக்குப் பிடிக்காதது இதுவும் ஒன்று!

!

Blog Widget by LinkWithin