குவியல்!..(24.11.09)

வரும் வெள்ளிக்கிழமை(27.11.09)நண்பரும் பதிவருமான லவ்டேல் மேடியின் திருமணம் ஈரோட்டில் நடக்க இருப்பது யாவரும் அறிந்ததே!, நண்பரும் தனக்கு தெரிந்த வரை அனைவருக்கும் இ-மெயிலிலும், அலைபேசியிலிலும் அழைப்பு விடுத்திருந்தார், அழைப்பு கிடைக்காத நண்பர்களும் கலந்து கொள்ளலாம், தயவுசெய்து நண்பர்களுக்குள் சங்கோஜம் இல்லாமல் கலந்து கொள்ளவும், மேடி, வரும் நண்பர்களை தங்க வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார், வரும் நண்பர்கள் உங்களது வருகையை உறுதி செய்தால் எவ்வித தடங்கலும் இல்லாமல் சிறப்பான கவனிப்பிற்கு வழிவகுக்கும்!

எனது மின்னஞ்சலுக்கோ, அலைபேசிக்கோ அழைத்து வருகையை உறுதி செய்து கொள்ளவும், ப்ளீஸ்!

****

கடைசியாக அல்லது ஒரு வழியாக நானும் ட்வீட்டரில் இணைத்து விட்டேன், ஆர்வ கோளாரில் அதை எனது அலைபேசிக்கு லிங்க் கொடுக்க இரவெல்லாம் ”டொய்ங்” ”டொய்ங்” என்று அடித்து இல்லாளின் கோபத்தை சமாளிக்க வேண்டியிருந்தது, எனது அலைபேசியில் GPRS அருமையாக வேலை செய்கிறது, எனது வலைப்பூவை அதன் மூலமே பார்க்க முடிகிறது, அதிலிருந்தே ஒரு பின்னூட்டம் கூட போட்டேன்! இனி அடுத்து மூன்றாம் தலைமுறை அலைவரிசையில் என்னவெல்லாம் நடக்கும் என ஆர்வம் பொங்க உங்களை போலவே காத்திருக்கிறேன்!

****

pulp fiction

இதனை தனி பதிவாக இடும் எண்ணத்தில் இருந்தேன்! பல்பு வாங்க வைத்த ”பல்ப் பிக்‌ஷன்” என்ற பெயரில் பதிவெழுதி ஒரு எண்ணிக்கையை கூட்டும் எண்ணம் ஹாலிவுட் பாலா போன்ற ஜாம்பாவான்களை பார்க்கும் போது என்னை விட்டு அகன்று விட்டது! இந்த படத்தின் இயக்குனர் திரைக்கதையில் பல புதுமைகளை புகுத்தியவர் என அனைவரும் அறிந்ததே! ஆனால் நான் பார்த்த இவரது முதல் படம் kill bill, ஆக்‌ஷன் படம் என்பதால் திரைக்கதையில் அவர் செய்த மேஜிக் வேலைகள் எனக்கு தெரியவில்லை, சண்டை காட்சிகளில் அதீத வன்முறைக்கு பதில் அனிமேஷன் காட்சிகளை புகுத்தியது பின்னாளில் ஆளவந்தானில் பயன்படுத்தப்பட்டது!

இந்த படத்தை பொறுத்தவரை இது ஒரு non liner படம் என்று பின்நவீன பார்ட்டிகள் சொல்கிறார்கள், பத்து பக்க கதையை கலைத்து போட்டு வரிசையாக இல்லாமல் இஷ்டத்துக்கு படிப்பது திரைக்கதையில் ஒரு புதுமை, ஆனாலும் சேப்டர்(அத்தியாயம்) வாரியாக கதை தொடர்போடு இருப்பதால் அதிகம் மண்டை காயவில்லை, புருஸ் வில்லிசின் சேப்டரில் ஜான் ட்ரோவோல்டா சாக, மீண்டும் அடுத்த சேப்டரில் வருவது, புதிதாக இம்மாதிரியான படம் பார்ப்பவர்களுக்கு குழப்பலாம்!, கடைசி சேப்டரில் சாமுவேல் ஜான்ஷனுக்கு ஃப்ரெண்டாக வருபவர் தான் இந்த படத்தின் இயக்குனர், பெரும்பாலும் இவரது படங்களில் ஒரு காட்சியிலாவது நடித்து விடுவது இவரது வழக்கம்.படத்தின் ஆரம்பம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மெதுவாக தான் இருந்தது!, போக போக சீட்டின் நுனிக்கு வருவது உங்கள் சீட்டின் அளவைப் பொறுத்தது, சரி இது தான் கதை போல என்று நிமிர்ந்து அமர்ந்தால் அடுத்த சேப்டரில் புருஷ் வில்லீஸ், இவ்விடத்தில் சொல்ல வேண்டிய முக்கிய காட்சி, வில்லீஸின் கனவில் வரும் சிறுவயது காட்சி, ஒரே ஒரு காட்சிக்கு வந்தாலும் கிரிஸ்டோபர் வால்கின்னின் நீண்ட பேச்சு ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பது ஹாலிவுட் நடிகர்களின் திறமைக்கு ஒரு அத்தாட்சி, இப்படத்தில் பல காட்சிகள் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டவை தான்!,

இந்த சேப்டரில் ட்ரவோல்டா இறந்தவுடன் அது முடிந்தவிடும் என்று நினைத்தால் அதன் பிறகு தான் விசயமே ஆரம்பம், புருஷும் அவரது முன்னாள் ஓனரும் இரண்டு சைக்கோக்களிடம் மாட்டும் போது, ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சியின் உச்சிக்கே போவோம், எனக்கு பிடித்த சேப்டராக கடைசி சேப்படரை தான் சொல்வேன், இயக்குனருக்கு நடிகர்களை தேர்தெடுப்பதில் மிக சிறந்த சுவை, கடைசி சேப்டரில் சாமுவேல் ஜாக்‌ஷனின் வசனமும், அதை சொல்லும் அழகும், holy smoke புகழ் ”ஹார்வி கீத்தலின்” அசால்டான நடிப்பும் மிக அருமை, ஒருவேளை நான் தியேட்டரில் பார்த்திருந்தால், ட்ரவோல்டாவின் கடைசி காட்சிக்கு மட்டும் எழுந்து நின்று கை தட்டியிருப்பேன், அந்த ரெஸ்டாரண்டில் இருந்து வெளியே போகும் காட்சிக்காக மறுபடி ஒருமுறை பார்க்கலாம்!

****

புதிர்!

venom, poison இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன!?

70 வாங்கிகட்டி கொண்டது:

இராகவன் நைஜிரியா said...

லவ்டேல் மேடிங்கு என்னோட வாழ்த்துகளை தெரிவிக்கவும்..

டிவிட்டரில் இணைந்து, என்னோட ஃபாலோயராகவும் ஆகிவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி..

உங்கள் தொலைபேசியில் gprs நன்கு வேலை செய்வது மிக்க மகிழ்ச்சி. இல்லால் கோபத்திற்கு அடிக்கடி ஆளாக வேண்டாம் என அறிவுறுத்தப் படுகின்றீர்கள்.

இராகவன் நைஜிரியா said...

ஹை... வாலின் இடுகையில் ரொம்ப நாள் கழிச்சு.. மீ த ஃபர்ஸ்ட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

டிவிட்டர் வாழ்க..

Menaga Sathia said...

லவ்டேல் மேடிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்!!

//இல்லால் கோபத்திற்கு அடிக்கடி ஆளாக வேண்டாம் // ஹி ஹி...

அ.மு.செய்யது said...

எங்கள் அண்ணன், தானைத்தலைவன், நவீன மண்டைத்துவ புகழ்
லவ்டேல் மேடிக்கு திருமண வாழ்த்துகள் !!!!

கலந்து கொள்ள முடியாமைக்கு மிகவும் வருந்தியதாக மேடியிடம் தெரிவித்து
விடுங்கள் வால் !!!! ப்ளீஸ் !!!

ஈரோடு கதிர் said...

வந்துடறோம்ங்க.....

மணிஜி said...

லவ்டேல் மேடிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்!!

வர இயலவில்லை..........

Subankan said...

லவ்டேல் மேடிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்!

டிவிட்டரில் உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. மூன்றாம் தலைமுறையெல்லாம் ரொம்ப몮 பழைய தொழில்நுட்பம் தல. இப்போதுதான் இந்தியாவுக்கு வருவது ஆச்சரியமாக இருக்கிறது.

நேசமித்ரன் said...

பிரியத்துக்கு உரிய நண்பன் மேடிக்கு என் கவிதார்த்த வாழ்த்துகள்

ட்விட்டரின் குருவே வாழ்க

உங்களின் பல்ப் ஃபிக்சன் அருமையான அலசல்

sriram said...

ஹாலிவுட் பாலா = ஜாம்பவான்???
நோ கமெண்ட்ஸ்...

இப்படித்தான், நம்ப நண்பர்கள் பெரிய ஆளா ஆனாக்கூட அவங்களை நணபர்களாத்தான் பாக்க முடியுது, பெரிய ஆளா பாக்க முடியல...
கலக்குங்க வாலு & பாலா

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Ashok D said...

அதே 27 இங்க யாத்ராவுக்கு நிச்சயதார்த்தம்பா..

Ashok D said...

வால்.. அது NON liner அல்ல non லீனியர்.

ஃப்ஃப்ஜ்ஜ்புர்3உ9ஜ்ப்ஜ் மப்பு அதிகம்ம்ஃப்ன்ஃப்ன்ஃப்

ஃப்ன்ஃப்ன்ஃப்ன்க்ரெர்ர்ன்

RAMYA said...

டிவிட்டரில் இணைந்துட்டீங்களா ஓகே ஓகே:)

//
இல்லால் கோபத்திற்கு அடிக்கடி ஆளாக
//

அப்பா! இப்பவாவது நீங்க தங்க்ஸ் கிட்டே சிக்கி தவிக்கிறது மனதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு :-)

Anonymous said...

லவ்டேல் மேடிக்கு திருமண வாழ்த்துகள் !!!!

கிரி said...

லவ்டேல் மேடிக்கு திருமண வாழ்த்துக்கள்

பெருசு said...

போன தடவை பாத்தபோது எங்கிட்டே வாங்குன ஆயிரம் ரூபாயை மேடிக்கு
"மொய்" எழுதியிருங்க தலை., சே
வால்....

பெருசு said...

லவ்டேல் மேடி

வாழ்த்துக்கள்.

தெரியப்படுத்தவும்.

பாலா said...

அண்ணாத்த.. இப்டி.. ஜாம்பவான்னு எல்லாம்.. சொல்லி... கலாய்க்கறீங்களே.!

இதெல்லாம் நல்லா கீதா?? :)

பாருங்க.. ஸ்ரீராம்.. இதுக்குன்னே.. வெய்ட் பண்ணிகிட்டு இருந்திருக்காரு! :) :) :)
=====

பேரு ஸ்டான்லீ ங்க.. said...

Venom னா venommu... poison னா poisonnu.. venom_poisonnu..

Sampath said...

http://en.wikipedia.org/wiki/Venom#The_distinction_between_venom_and_poison

கடைக்குட்டி said...

லவ்டாலுக்கு வாழ்த்துக்கள்..

பட அறிமுகம் அருமை.. தனிபதிவே போடுங்க..

Romeoboy said...

குஜு குஜு குவியல்.

சரக்கு காமிய இருக்கே இன்னைக்கு .

பீர் | Peer said...

மேடிக்கு வாழ்த்துக்கள் :)

ஆ.ஞானசேகரன் said...

லவ்டேல் மேடி க்கு என் திருமணவாழ்த்துகளை சொல்லிவிடுங்கள் நண்பா.....

ஈ ரா said...

//போக போக சீட்டின் நுனிக்கு வருவது உங்கள் சீட்டின் அளவைப் பொறுத்தது//

புரியலியே, இத யதார்த்தமா போட்டீயளா, இல்ல வால் பன்ச் எதுனா இருக்கா?

நண்பர் மேடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும்....

பித்தனின் வாக்கு said...

ஜிபி ஆர் ஸ் வளர்ச்சி வாழ்த்துக்கள். திரைப்பட விமர்சனங்களுக்கு நான் பின்னூட்டம் இடுவது இல்லை. நன்றி.

புலவன் புலிகேசி said...

லவ்டேல் மேடிக்கு வாழ்த்துக்கள்...

Raju said...

\\பித்தனின் வாக்கு said...
ஜிபி ஆர் ஸ் வளர்ச்சி வாழ்த்துக்கள். திரைப்பட விமர்சனங்களுக்கு நான் பின்னூட்டம் இடுவது இல்லை. நன்றி.\\

GPRS வளர்ந்ததுக்கு வாலுக்கு வாழ்த்தா..?
ஹா..ஹா..! என்ன கொடுமை.
:-)

லிங்காபுரம் சிவா said...

மேடி கல்யாணத்துக்கு நான் வந்தாலும் கவனிப்பிங்களா? ;)

//மூன்றாம் தலைமுறை அலைவரிசையில் // அப்படினா என்ன?? (3G?)

புதிர் venom, poison
ரெண்டுலயும் 4வது எழுத்து 'o' லொல்!!

இளவட்டம் said...

வாழ்த்துக்கள் மேடி.

எங்க பல்ப் வாங்கிடுவோம்னுதான் அந்த படத்தை இன்னும் பாக்காம வச்சிருக்கேன்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நானும் கார்த்தியும் திருமணத்திற்கு வருகிறோம்.

க.பாலாசி said...

ஓ.கே. ஆஜர்.

மணிப்பக்கம் said...

;) நடக்கட்டும் நடக்கட்டும்!

Beski said...

மேடிக்கு வாழ்த்துக்கள்.
என்னால் வர இயலாது, ஆனால் அண்ணன் கிகி வருவார். பார்த்துக்கொள்ளுங்கள்.

ட்விட்டர் லிங்க் எங்கே?

பல்ப் பிக்சன் - பார்த்திருக்கிறேன். பிடித்திருந்தது.
இப்போது குயிண்டினின் இன்குலோரியஸ் பாஸ்டர்ட்ஸ் வந்துவிட்டது பார்த்தீர்களா?
---
venom, poison - என்னப்பா இது, இன்னும் யாரும் சொல்லல! சரி ஃபாலோ...

//புதிர் venom, poison
ரெண்டுலயும் 4வது எழுத்து 'o' லொல்!!//
ஆமா, வித்தியாசம்னா டிபரன்ஸ்தான?

venom என்பது ஒரு விலங்கின் உடலில் உற்பத்தியாகும் poison... சரியா?

cheena (சீனா) said...

அன்பின் வால்

அருமையான குவியல்

நானும் டிவிட்டரில் இருக்கேனே -ஆனா கைபேசி பயன் படுத்துவது இல்லை

பட விமர்சனம் அருமை - எப்படிப்பா இப்படி எல்லாம் எழுதறே - உண்மையிலேயே எனக்குப் பொறாமையா இருக்கு

அப்புறம் நம்ம மேடிக்கு எங்களோட வாழ்த்தினைத் தெரிவிக்கவும் - நல்லதொரு பதிவர்கள் சந்திப்பு - கலந்து கொள்ள இயலாமல் போகிறதே என வருத்தம் தான்

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

Anonymous said...

தள,
வற இசயவில்லை,
கும்க்கி அன்னா, என் சார்பா மேடிக்கு வாழ்த்துக்கலை தெறிவிக்கவும்.

சொள் அலகன்

cheena (சீனா) said...

சொல்ல அய்யே கேக்க மறந்துட்டேனே - வூட்ல கண்ட்ரோல் பண்ன ஆரம்பிச்சுட்டாங்களா - நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது

அவங்களுக்கு நல்வாழ்த்துகள்

ஊர்சுற்றி said...

லவ்டேல் மேடிக்கு வாழ்த்துக்கள்.
Pulp Fiction-ஐ மூன்று முறை பார்த்தும் புரியவில்லை. அப்புறம் ஹாலிபாலாவின் தெளிவுரைதான் விளக்கியது.

ட்விட்டர் முகவரி ப்ளீஸ்!

Anonymous said...

மேடிக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.. நானும் வரேனே....

இல்லால் கோபத்தின் விளைவை சொல்லவேயில்லையே...

ஆமா எனக்கு தமிழ் படமே புரியாது இதில் வேற்று மொழி படமா? நான் வரலை..

Anonymous said...

என்னயா இது !! புதிறை ஒருத்தறும் கண்டுக்களையே !! யாராச்சும் பதிள் சொள்ளுங்கப்பு

சொள் அலகன்

தர்ஷன் said...

//இந்த படத்தின் இயக்குனர், பெரும்பாலும் இவரது படங்களில் ஒரு காட்சியிலாவது நடித்து விடுவது இவரது வழக்கம்.//

நம்ம கே.எஸ். ரவிகுமார் போலன்னு சொல்லுங்க

ராமலக்ஷ்மி said...

மேடிக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அகல்விளக்கு said...

ப்ரசண்ட் சார்....

மேரேஜ்லயும் ப்ரசன்ட்டாயிடுவோம் சார்..

அகல்விளக்கு said...

புதிர்.

venom - புளுவு கலரு
poison - சிவப்பு கலரு

அவ்ளோதான்பா எனக்கு தெரியுது.

S.A. நவாஸுதீன் said...

மேடிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

Unknown said...

லவ்டேல் மேடி க்கு என் வளத்தை தெரிவிக்கவும்...

யோ வொய்ஸ் (யோகா) said...

நாங்களும் டிவிட்டரில் இருக்கோமில்ல, எங்களையும் தொடருங்க, நாங்களும் உங்கள தொடருவோமில்ல

எனது டிவிட்டர் தொடர்பு பெயர் yoghs007

Vidhoosh said...

///என்னயா இது !! புதிறை ஒருத்தறும் கண்டுக்களையே !! யாராச்சும் பதிள் சொள்ளுங்கப்பு

சொள் அலகன்///

ஜொள் அழுக்கா, நீங்க வாளின் டூப்பா?
:))
--வித்யா

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

Poison is a substance that causes death or harm when introduced into or absorbed by a living organism.

venom is a poisonous fluid secreted by animals such as snakes and scorpions and typically injected into prey or aggressors by biting or stinging.

கலையரசன் said...

லவ்டேல் மேடிக்கு திருமண வாழ்த்துக்கள்!!!

என் பங்கு சரக்கையும் சேர்த்து அடிங்க!!

Venkatesh Kumaravel said...

பல்ப் ஃபிக்ஷன் குறித்து எழுதியதில் மகிழ்ச்சி. ரொம்ப தீர்க்கமான படம். ஜி.பிஆர்.ஏஸ் கொஞ்சம் பழசு சார்... வை-ஃபையே பழசாயிருச்சு.

Anonymous said...

// பாலகுமாரன், வத்திராயிருப்பு. //

யு ஆற் றைட் .
நன்ரி

சொள் அலகன்

பின்னோக்கி said...

ஆமாங்க இவங்க என்னைக்கு மூணு ஜி குடுக்கப்போறாங்கன்னு தெரியலை. சென்னையில பியெஸ்ன்ல் கனெக்சன் குடுக்குறாங்க இப்ப.

புதிர்க்கு விடை சொல்லுங்க

கார்ல்ஸ்பெர்க் said...

பாம்பு கடிச்சு ஒருத்தன் காலியானா அது 'Venom Death', வேற எதக் குடிச்சு செத்தாலும் அது 'Poison death'..

இதான் நமக்கு தெரிஞ்சது தல..

NO said...

Poison - An harmfull toxin that exists and affects any living organisms when contacted!

Venom - Name when its delivered!

For exammple a Food Poison is not food venom! whereas Snake delivering a poison thro its fangs is called as venom.

Another example is that Naxalites are poisonous. But they can be termed as venomous only after they start blowing up police stations or for that matter write a blog!

nandri

http://nonono-no-no.blogspot.com/

Mahesh said...

லவ்டேல் மேடிங்கு என்னோட வாழ்த்துகளை தெரிவிக்கவும்...

"பல்பு பிக்சன்" உங்க விமர்சனம் அருமை !!

ஆ! இதழ்கள் said...

VENOM: விஷம் - உடலில் ஏற்றப்படுவது / புகுத்தப்படுவது

POISON: விஷம் - உறிஞ்சப்பட்டால், சாப்பிட்டால்

என்னைய வச்சு காமெடி கீமடி பண்ணலியே?

Samuel | சாமுவேல் said...

உங்க டிவிட்டர id என்ன ?

பெசொவி said...

The distinction between venom and poison
There is a difference between organisms that are venomous and those that are poisonous, two commonly confused terms applied to plant and animal life.

Venomous, as stated above, refers to animals that deliver (often, inject) venom into their prey when hunting or as a defense mechanism.
Poisonous, on the other hand, describes plants or animals that are harmful when consumed or touched. A poison tends to be distributed over a large part of the body of the organism producing it, while venom is typically produced in organs specialized for the purpose.

thanks to : http://en.wikipedia.org/wiki/Venom#The_distinction_between_venom_and_poison

thiyaa said...

அருமை

Valaignan said...

You have an excellent taste for movies,tailboy!
;-) Please see the movies of Billy Wilder (Director) You may start with the movie 'The Apartment' and share your views here
Keep up your good work too!
Best regards,

கூடுதுறை said...

(எனது அலைபேசியில் GPRS அருமையாக வேலை செய்கிறது, எனது வலைப்பூவை அதன் மூலமே பார்க்க முடிகிறது, )

நண்பரே இது என்ன அலை பேசி விவரம் கொடுங்கள்

நானும் தேடிக்கொண்டு உள்ளேன்

Nathanjagk said...

ஆளவந்தான் கில்பில்லுக்கு முன்​பே ரிலீஸாகி விடவில்​லை????? ப்ளீஸ் கன்பர்ம்.

Nathanjagk said...

/லவ்டேல் மேடி// நம்மூர் பதிவரா?? சந்​தோஷம்.. எனது ​மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்!! 16ம் ​பெற்று ​பெருவாழ்வு வாழ்க!!!

Anonymous said...

தள!!

லவ்டேளுக்கு வாழ்த்துக்கல். எங்கே பதிவர் சந்திப்பு பத்திய பதிவு . ஆவளுடன் எதிர்பாரகிரேன்.
பள தளப்புகளிள் எலுதவதா அரிவிப்பு மட்டும் உடுர, ஆனா அதை அம்பூன்னு உட்டுடுர .
அகம் புகுதள் ஜகம் புகுதள்-ன்னு எதோ எலுதினியே அதுக்கு தொடற்ச்சி எங்கப்பா ? அப்படியே ஜகா வங்கிட்டள்ள .............

உனக்கே இது நள்ளா இறுக்கா ???

சொள் அலகன்

வால்பையன் said...

D.R.Ashok said...
வால்.. அது NON liner அல்ல non லீனியர்.
ஃப்ஃப்ஜ்ஜ்புர்3உ9ஜ்ப்ஜ் மப்பு அதிகம்ம்ஃப்ன்ஃப்ன்ஃப்
ஃப்ன்ஃப்ன்ஃப்ன்க்ரெர்ர்ன்//

இது என்ன லாங்குவேஜுங்க!
மப்பு அதிகமான எனக்கு மேல இருப்பிங்க போலயே!

வால்பையன் said...

//பெருசு said...
போன தடவை பாத்தபோது எங்கிட்டே வாங்குன ஆயிரம் ரூபாயை மேடிக்கு
"மொய்" எழுதியிருங்க தலை., சே
வால்....//

ஒரு ருவா சேர்த்து போட்டு 1001னா வச்சிடுறேன்!

வால்பையன் said...

பித்தனின் வாக்கு said...

ஜிபி ஆர் ஸ் வளர்ச்சி வாழ்த்துக்கள். திரைப்பட விமர்சனங்களுக்கு நான் பின்னூட்டம் இடுவது இல்லை. நன்றி.//

அதனால தான் நான் தனியா விமர்சனம் எழுதுவதில்லை!

வால்பையன் said...

எனது டுவிட்டர் முகவரி!

mokkaiwriter

வால்பையன் said...

பின்னுட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!

CRICKET KA MAHASANGRAAM said...

Aalavanthan was released before Kill Bill....

!

Blog Widget by LinkWithin