ஏற்றத்தாழ்வற்ற போதையுலகம்!

டிஸ்கி:இதற்கும் இந்த பதிவிற்கும் சம்பந்தமுண்டு என்று நினைப்பவர்கள், ஃபுல் பாட்டிலோடு என்னை அணுகவும்.

*************************

அன்புள்ள வால்,

உங்களுடன் குடிப்பதற்கோ அல்லது சந்திப்பதற்கோ முன்பு நான் ஒரு ஒரு சராசரி குடிகாரன். என்றைய தினம் டாஸ்மாக் பாரில் உங்களை சந்தித்தேனோ, என்று உங்களுடன் குடித்தேனோ, அன்றிலிருந்து எதைக் குடிக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். ”ரெட் லேபிள்”, ”ப்ளாக் டாக்” போன்ற சரக்குகளைக் குடிக்க நேர்ந்தது நீங்கள் அறிமுகப் படுத்தியதற்குப் பின்புதான்.”குடிச்சிகோவாரம்” சந்திப்பில் நீங்கள் குடித்த சரக்கை பார்த்த பிறகுதான். என்னைப் பொறுத்த வரையில் நீங்கள் ஒரு legend!?(ங்கொய்யால). சும்மா சொல்லவில்லை. உங்கள் அனைத்துச் சரக்குகளையும் (பட்டசாராயம் நீங்கலாக - அந்த சரக்கை ஒரு மடக்கு குடித்ததோடு சரி; முழுமையாகப் குடிக்க இன்னும் சற்று லோக்கல்சரக்கு குடிக்க வேண்டும்) குடித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.

இப்படி இருக்கையில், இன்று மாயக்கா பாரில் சில குடிகாரர்களை பார்க்க நேர்ந்தது. உங்கள் குடியைப் பற்றி விமர்சனம் செய்த சல்பேட்டாக்கள் அவை. அவைகளைப் பார்த்தது முதல் உங்களிடம் பேச வேண்டும் என்று ஒரு எண்ணம்.

உங்கள் மேல் அவதூறு சொல்ல நினைப்பவர்கள் பலர். காரணம் எனக்குத் தெரியாது. ”விஷேசத்திற்கு குடிப்பவர்கள்” என்று தாங்களே சொல்லி விட்டீர்கள். எனவே அவர்களைப் பற்றி நான் சொல்ல எதுவுமே இல்லை. நீங்கள் காசு கொடுத்து வாங்காமல், ஃபாரின் சரக்கு குடிக்காமல் பிதற்றுகிறீர்கள் என்ற அவர்களது முட்டாள்தனமான உளறல் என்னை இந்த மெயில் அனுப்ப வைத்து விட்டது. அவர்கள் கிடக்கிறார்கள் பரதேசிகள்.

என்னைப் பொறுத்த வரையில், லோக்கல் சரக்கு மற்றும் ஃபாரின் சரக்கில் எனது ஆசான், எனது குரு நீங்கள்தான். பொதுவாகவே குடிகாரனுக்கு ஒரு மனோபாவம் உண்டு. யாரவது குடிகாரனிடம் போய் பேசி கொண்டிருப்பது. ஆனால் நான் அப்படி அல்ல. உங்களை மிதிக்கிறேன் ஸாரி மதிக்கிறேன். உங்கள் நட்பை மதிக்கிறேன். காரணம், நீங்கள் எனக்கு அறிமுகப்படுத்திய சரக்கு. அது போலிகளற்ற, எப்போதும் ஒரே மாதிரி போதை தருகின்ற சரக்கு. எந்தவிதமான வேறுபாடும் அற்ற ஒரு உயர்ந்த சரக்கு. அத்தகைய ஒரு சரக்கை எனக்கு அறிமுகப்படுத்திய உங்களுக்கு எனது வணக்கங்கள்.

எனவே, குடிகார பாதையில் பட்டையை அடித்து கொண்டு பயணம் செய்யும் உங்கள் குடிபிரதாபத்தை விமர்சனம் செய்யும் பரதேசிகளை சட்டை செய்யாமல் நீங்கள் சொல்லியது போல் இந்த ஆசாமிகளுக்கு வாங்கி கொடுக்க எந்த விதமான தேவைகளும் இல்லாமல் உங்கள் சரக்கை அடியுங்கள். வாழ்த்துக்கள்.

அன்புமிகு,

கூஜாஷ்.


*************************

காமெடி பண்ண சிரிக்கணும், டென்ஷன் ஆவக்கூடாது!

68 வாங்கிகட்டி கொண்டது:

வெறுமை said...

இந்த வாரம் ....சுய சொரிதல் வாரம் ...
:) ..ஆனா இது புதுசா இருக்கு பாஸு..

குவாட்டர் கோயிந்தன் said...

பார்க்கலாம் பார்க்கலாம் என்னதான் நடக்குதுன்னு.

ஹலோ பதிவர்களா இங்கே நான் துண்டு போட்டு வச்சிருக்கேன்.

போய் ஒரு குவாட்டர் மட்டும் வாங்கிட்டு வந்திற்றேன்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ஒரண்ட இழுக்கலைன்னா தூக்கம் வராதே உங்களுக்கு.நடத்துங்க.

ers said...

nachnu... oru sarkku...

இரும்புத்திரை said...

உங்க வால்ல நீங்களே தீ வச்சுபீங்களா ?

இல்ல யார்கிட்டயாவது வம்பு இழுத்த பிறகு அவங்க தீ வைப்பாங்களா?

அப்பாவி முரு said...

மேலே சொன்னதுக்கெல்லாம்

கன்னா... பின்னா...

ரிபீட்டேய்!!!

(அதுவும் அந்த ஒரண்டை மேட்டர், சூப்பர்)

பீர் | Peer said...

//அவர்கள் கிடக்கிறார்கள் பரதேசிகள்.//

பரதேசிகள் அப்டின்னா என்.ஆர்.ஐ ஸ் தான???

பீர் | Peer said...

இலக்கியப் பாதையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு பயணம் செய்யும் உங்கள் வாழ்க்கையை விமர்சனம் செய்யும் பரதேசிகளை சட்டை செய்யாமல் நீங்கள் சொல்லியது போல் இந்த ஆசாமிகளுக்கு பதில் சொல்ல எந்த விதமான தேவைகளும் இல்லாமல் உங்கள் பயணத்தைத் தொடருங்கள். வாழ்த்துக்கள்.

அன்புமிகு,

பெங்களூர் வாசகி.

நசரேயன் said...

எம்புட்டு சரக்கு இருக்கு.. குடிச்சி பாத்துட்டு சொல்லுறேன்

Anonymous said...

அன்ழ்னே ...உங்கழ பழ்த்தி அதிகழ்மா புஅழ்ந்து சூழ்ப்பரா சொழ்ழி இருக்காரு ...

Kumky said...

வால்பையன்...பேரை காப்பாத்திக்கிட்டீங்க.

cheena (சீனா) said...

நல்லாருக்கு வாலு - ஏற்கனவே என்னோட இடுகைய வச்சி இது மாதிரி எழுதினீயே - நினைவிருக்கா

நல்லாரு

அத்திரி said...

போலாம் ரைட்டு............

Anbu said...

\\டிஸ்கி:இதற்கும் இந்த பதிவிற்கும் சம்பந்தமுண்டு என்று நினைப்பவர்கள், ஃபுல் பாட்டிலோடு என்னை அணுகவும்.\\\


ஒரு புல் போதுமா வால்...

தமிழ் அமுதன் said...

//"ஏற்றத்தாழ்வற்ற போதையுலகம்!"//

இந்த தலைப்பு வாலு க்கு தவிர வேற யாருக்கு தோணும்?

வாலு கூட தண்ணி அடிச்சே ஆகனும்னு தோனுது!
எப்போ! எப்போ! மீட் பண்ணுறது?

Admin said...

என்ன வாலு இப்படி எல்லாம் நடந்திருக்கு சொல்லவே இல்ல....

காதலில் தோத்தவன் கண்டு பிடித்த சரக்கு எது தெரியுமா....

☀நான் ஆதவன்☀ said...

அது!!!! யாரு டென்ஷனான்னா நமக்கென்னபா...நாம நம்ம வேளைய பாக்கனும்..

ஜெட்லி... said...

ஒரு குவாட்டர் சொல்லு மச்சி....

Mahesh said...

மேட்டரும் சூப்பர்... சிக்னேச்சரும் சூப்பர் :)))

தினேஷ் said...

போதை ஏறிப்போச்சு ...
போதைய போட்ட ஒரு சண்டைய போடனும் ஆனா நீங்க சண்டை இழுக்க போதைய போடுறீங்க ..

என்ன இருந்தாலும் போதை உலகம் வாழ்க ...

கூஜாசுக்கு யாராச்சும் இந்த லின்க அனுப்புங்க .. அப்படியே பாருவுக்கும் ...

கலையரசன் said...

அந்த லெட்டரை நான்தான் எழுதுனேன்னு
யாருகிட்டையும் சொல்லாதீங்க!!

ny said...

//"விஷேசத்திற்கு குடிப்பவர்கள்”//

... இதன் உள்ளர்த்தத்தில் வியந்தேன்!!

நானெல்லாம் அதக் கூட செய்யறதில்லையே... ப்ச்!

gulf-tamilan said...

பாரு ஆதரவாளர்கள் கும்ம போகிறார்கள். :)))

அ.மு.செய்யது said...

ஹா..ஹா..ஹா..அங்க வாசிக்கற மாதிரியே இருந்துது...

சித்து said...

அன்புமிகு,

கூஜாஷ்.

ஹா ஹா ஹா இந்த கடைசி வார்த்தை தான் வெயிட். பாக்கலாம் நாளைக்கு என்ன நடக்குதுன்னு.

உண்மைத்தமிழன் said...

அடங்க மாட்டாத வாலு இதுதான்..!

அடக்க முடியாத வாலுவும் இதுதான்..!

ஈரோடு எப்படித்தான் தாங்குதோ தெரியலைப்பா..!

VISA said...

பின்னூட்ட கவிதை என் பிளாகில்


http://writervisa.blogspot.com/2009/07/blog-post_09.html

Beski said...

தூள் தல.

சப்ராஸ் அபூ பக்கர் said...

இன்னக்கி ஓசில ஒரு சரக்கு அடிச்சிட்டேன்.. ( சாரி... சருக்கிடுச்சி... குடிச்சிட்டேன்... )

தொடருங்கள் வால்....

Prabhu said...

ஹைய்யோ,.... முடியல!

நீங்க எதிர் பதிவு போட்டே பொழுத ஓட்டறீங்களே!

ஆனா, அதுவும் செம் காமெடிதான்!

Unknown said...

ரொம்ப காமெடியா இருந்தது... பாரு கிட்ட இருந்து மிரட்டல் வந்தா மறக்காம பதிவேற்றம் செய்யுங்க.

Vidhoosh said...

:)))
மாத்தி யோசிங்க.//

Baski said...

Lollu Shaba partha effect. Super...

Anonymous said...

அண்ணே...உங்களை ஓரண்டை இழுக்கணும் என்றோ, உங்களை வம்பிழுத்து பெரிய ஆள் ஆகலாம் என்றோ நான் "யார் பார்ப்பனன்" என்ற பதிவை இடவில்லை. இதைப் பற்றி உங்களிடம் முன்பே சொல்லி விட்டு எழுதி விடலாம் என்று தான் இருந்தேன். இருப்பினும் நம்ம வால் அண்ணன் தானே என்கிற உரிமையில் நான் எழுதிவிட்டேன்.அதற்கு அப்புறம் நமக்குள் காரசாரமான விவாதமும் நடந்தது.

இதைப் பற்றி இப்போ ஏன் பேசுறேன்னு நினைக்கிறீங்களா? ப்ளாக் உலகம் போகுற போக்கை பார்த்தால் பயமாக இருக்கு. அதான். எனது பதிவு உங்களை எந்த விதத்திலாவது புண் படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.

வால்பையன் said...

இங்கிலீஷ்,
என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை!,
மேலும் அந்த சம்பவத்தை நான் அப்போதே மறந்துவிட்டேன், என்னை பற்றி பிறர் விமர்சிக்க கூடாத அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை,

நாம் செய்தது ஆரோக்கியமான உரையாடல், இடையில், ஒருவர் வந்து கிணறு தவளைகளுடன் வாதம் செயாதீர்கள் என்று சொன்னார் பார்த்தீர்களா, அம்மாதிரி ஆட்கள் தான் உள்ளே வந்து சொறிந்து விட்டு செல்வது, பின் நாம் அடித்து கொள்வோம், நான் அம்மாதிரி ஏற்கனவே பல முறை அனுபவப்பட்டதால் அதில் கவனம் செலுத்த மாட்டேன்.

வழக்கம் போல் தாரளமாக நீங்கள் இயங்கலாம்!

Anonymous said...

இடையில், ஒருவர் வந்து கிணறு தவளைகளுடன் வாதம் செயாதீர்கள் என்று சொன்னார் பார்த்தீர்களா, அம்மாதிரி ஆட்கள் தான் உள்ளே வந்து சொறிந்து விட்டு செல்வது, பின் நாம் அடித்து கொள்வோம்//


நான் கமென்ட் மாடரேஷன் வைக்க வில்லை.அதே போல எனக்கு வரும் கமேன்ட்டுகளையும் நான் மாற்றுவதில்லை. அப்படியே வெளியாகும்.அதனால் வந்த சிக்கல் அது.மற்றபடி நாம் செய்தது ஆரோக்கியமான உரையாடல் என்று நீங்கள் கூறுவதை கேட்டு மனதார மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றியும்..வணக்கமும்...

Bhuvanesh said...

//காமெடி பண்ண சிரிக்கணும், டென்ஷன் ஆவக்கூடாது!//


நீங்க சொன்னாலும் டென்ஷன் ஆகா முடியாது!! அவ்வளவு சிரிச்சுட்டேன்! :)

போன பதிவுல வால் தனம் கம்மியா இருக்குன்னு எல்லோரும் சொன்னதுக்காக இப்படியா ?

Joe said...

//
பொதுவாகவே குடிகாரனுக்கு ஒரு மனோபாவம் உண்டு. யாரவது குடிகாரனிடம் போய் பேசி கொண்டிருப்பது.
//
ஒரு வேளை இதுனாலே தான் ஆன்லைன்-ல இந்தாளைப் பாத்தவுடனே நான் சாட்டிங் பண்றேனோ? ;-)

Bleachingpowder said...

டியர் வால்,

என்று உங்களை சந்தித்தேனோ அன்று முதல் நீங்கள் காட்டும் வொயின் ஷாப்பின் திசையை நோக்கியே செல்லும் குடிகாரன் நான். உங்கள் பதிவை படிக்கும் முன்பு சில வருடங்கள் உவ்வே எழுத்தளரின் பதிவை படித்த சிலரின் மனம் பேதலித்ததை நான் அறிவேன்.நீங்கள் எழுதிய கட்டிங்கும் பின்நவினத்துவமும், போதை லாலாவும் இங்கே சோமாலியாவில் எங்கே கிடைக்கும், அதை எனக்கும் அனுப்பி வைக்க முடியுமா, அடுத்த முறை இந்தியா வரும் போது கட்டாயம் உங்களை வந்து சந்திக்கிறேன்.

அன்புடன்
பிளிச்சிங்
சோமாலியா
July 10, 2009
12.44pm

மணிஜி said...

வாலு.. விசயம் தெரியுமா?நாகூர்ல காசை கிழே போட்டா குனிஞ்சு எடுக்கறதுக்குள்ள அடிச்சிடுவாங்க....(பின்னாடி)

உங்கள் ராட் மாதவ் said...

கலக்குங்க ராசா கலக்குங்க... :-)

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

கஷ்ட்ட காலம்....!!!! ஒண்ணுமே பண்ண முடியாது ....!!!

அஸ்வினி said...

உங்கள் பதிவுகள் அருமை...

பயமில்லாதவன் said...

உங்கள் பதிவுகள் சூப்பரு தலைவா.......

கார்த்திகைப் பாண்டியன் said...

பின்னவீனத்துவப் பாதையில் இலக்கிய வாலின் பயணம் தொடரட்டும்.. அசத்தல் தல..

நாஞ்சில் நாதம் said...

ஹா ஹா

Suresh said...
This comment has been removed by the author.
Suresh said...

/காமெடி பண்ண சிரிக்கணும், டென்ஷன் ஆவக்கூடாது!//

:-)

தலை செம்ம செம்ம செம்ம ;0

இனி யாராச்சும் லெட்டர் போட்டா அவங்க போன் நம்பர் போட சொல்லுங்க

நம்ம போன் போட்டு நேரடியா அந்த ரசிகரிடம் பேசுவோம் ;)

செலிபிரட்டி - என்னா டியோ

இந்த வார்த்தை பார்த்தாலே இல்லை படித்தாலோ

இப்போ எல்லாம் செம சிரிப்பு வருது ;)

Suresh said...

/காமெடி பண்ண சிரிக்கணும், டென்ஷன் ஆவக்கூடாது!//

:-)

தலை செம்ம செம்ம செம்ம ;0

இனி யாராச்சும் லெட்டர் போட்டா அவங்க போன் நம்பர் போட சொல்லுங்க

நம்ம போன் போட்டு நேரடியா அந்த ரசிகரிடம் பேசுவோம் ;)

செலிபிரட்டி - என்னா டியோ

இந்த வார்த்தை பார்த்தாலே இல்லை படித்தாலோ

இப்போ எல்லாம் செம சிரிப்பு வருது ;)

Nathanjagk said...

நல்லாத்தான் இருக்கு இந்த பகடி.
உங்களுக்கு பின்னூட்டம் ​போடறதுன்னால யோசனயா இருக்கு. எங்கடா இந்த பின்னூட்ட கூட்டத்தில நம்மளது எந்த மூலைக்கினு.

தேவன் மாயம் said...

ஒரண்ட இழுக்கலைன்னா தூக்கம் வராதே உங்களுக்கு.நடத்துங்க.///

ரசித்தேன்!!!

Prapa said...

போயா .....டுபுக்கு...

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா. கடைசியில ஒரு நோட் (காமெடி பண்ண சிரிக்கணும், டென்ஷன் ஆவக்கூடாது!) தேவையேயில்லை தல. படிச்ச யாருக்கும் சத்தியமா டென்சன் வராது. சிரிப்புதான் வரும்.

Anonymous said...

அது....

மாஸ்டர்னு நிருபிச்சுடீங்க...

கிறுக்கன் said...

குடிபோதையில் நின் வழி - உன்
குடிவீழ வெட்டும் குழி.

ஓ இது காமடி டைமா சாரிப்பா....
கருத்து கிறுக்க கிளம்பிட்டான் கூறுக்.......

கிறுக்கன்.

வீணாபோனவன் said...

செம கிக்ல இருக்கேன்பா...போதை ஓகே..பாதை தான் தெர்ல... ஒன்னுமே புர்ல..யாராச்சும் என்ன வீட்டுக்கு கூட்டிட்...முடியல...

Admin said...
This comment has been removed by the author.
Admin said...

சந்ரு said...
என்ன வால் அண்ண ரொம்பவே எங்கள சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறிங்க... உங்கள சும்மா விடுறது சரி இல்லையே... அதுதான் ஏதாவது உங்களுக்கு தரணுமே எண்டு யோசிச்சன் அது பெரிய ஏற்பாடா போச்சுது... அதுதானுங்க..."வால் பையனுக்கு சமர்ப்பணம்"" நம்ம பக்கம் வந்து பெற்றுக்கொள்ளுங்க.....

ஊர்சுற்றி said...

உங்கள் வாலுக்கு எனது வாழ்த்துக்கள். ஹிஹிஹி... :)

Admin said...

அண்ணே வால் உங்களுக்காக வெயிட் பண்றமில்ல சரக்கோடு.... சீக்கிரமா வாங்க....

VIKNESHWARAN ADAKKALAM said...

ஒரு பாட்டில் பியர் பிலிஸ்....

Admin said...

//VIKNESHWARAN said...
ஒரு பாட்டில் பியர் பிலிஸ்....//


அது நம்ம வாலுக்கு மட்டும்தான் நீங்க எங்களோட வந்து சேருங்க நாங்க ஆரம்பிச்சுட்டோம் வாங்க.... வாங்க......

सुREஷ் कुMAர் said...

//
காமெடி பண்ண சிரிக்கணும், டென்ஷன் ஆவக்கூடாது!
//
எல்லா வேலையையும் முடிச்சுபுட்டு...............

ம்ஹும்.. நீங்க நடத்துங்க..

Anonymous said...

தள,

சரக்கு வேணாமின்னா கேட்டாதானே !

தள நகைசுவை பதிவுகல் குரைந்துகிட்டே இருக்கு!! இப்படியே போனா உன் பதிவுக்கு வறவே மாட்டேன் போ !!!

:-(
சொல் அலகன்

Tech Shankar said...

me the 66th.

Unknown said...

கிளம்பிட்டாங்கையா..

கிளம்பிட்டாங்க...

..!!??

வால்பையன் said...

நன்றி வெறுமை
நன்றி குவாட்டர் கோவிந்தன்
நன்றி ஸ்ரீதர்
நன்றி தமிழ்சினிமா
நன்றி அரவிந்த்(நானே தான்)
நன்றி அப்பவி முரு(இனிமே பாவியில்ல)
நன்றி பீர்(என்னைய சொன்னேன்)
நன்றி நசரேயன்
நன்றி இங்கிலீஷ்காரன்
நன்றி கும்க்கி
நன்றி சீனா
நன்றி அத்திரி
நன்றி அன்பு
நன்றி ஜீவன்
நன்றி சந்ரு
நன்றி நான் ஆதவன்
நன்றி ஜெட்லி
நன்றி மகேஷ்
நன்றி சூரியன்
நன்றி கலையரசன்
நன்றி kartin
நன்றி gulf-tamilan
நன்றி அ.மு.செய்யது
நன்றி சித்து
நன்றி உண்மைத்தமிழன்
நன்றி விசா
நன்றி எவனோ ஒருவன்
நன்றி சப்ராஸ் அபூ பக்கர்
நன்றி பப்பு
நன்றி macbookpro
நன்றி Vidhoosh
நன்றி பாஸ்கி
நன்றி புவனேஷ்
நன்றி ஜோ
நன்றி பீளிச்சிங்பவுடர்
நன்றி தண்டோரா
நன்றி RAD MADHAV
நன்றி லவ்டேல் மேடி
நன்றி அஸ்வினி
நன்றி பயமில்லாதவன்
நன்றி கார்த்திகைப்பாண்டியன்
நன்றி நாஞ்சில்நாதன்
நன்றி சுரேஷ்
நன்றி ஜெகநாதன்
நன்றி தேவன்மயம்
நன்றி பிரபா
நன்றி S.A. நவாஸுதீன்
நன்றி மயில்
நன்றி கிறுக்கன்
நன்றி வீணாப்போனவன்
நன்றி சந்ரு
நன்றி ஊர்சுற்றி
நன்றி விக்னேஷ்வரன்
நன்றி சுரேஷ்குமார்
நன்றி சொள் அலகன்
நன்றி தமிழ்நெஞ்சம்
நன்றி பட்டிகாட்டான்

!

Blog Widget by LinkWithin