தமிலீஷ் ஓனர் யாரு?


திரட்டி ஒன்று புதிதாக ஆரம்பித்தாலே பதிவுலக மக்களுக்கு இந்த சந்தேகம் வந்துவிடும்!
ஒருவேளை அவராக இருப்பாரோ, இல்லை இவராக இருப்பாரோ என்று, அவரவர்க்கு ஒரு நம்பிக்கை நிலை கொள்ளும் நேரத்தில் நம் பங்குக்கு இம்மாதிரியான திரியை கொழுத்தி போடுதல் பதிவுலகை கொஞ்சம் அயற்சியடையாமல் கொண்டு செல்லும்.

சரி விசயதிற்கு வருவோம், தமிலீஷ் தொடங்கப்பட்ட போது அதற்காக லட்சகணக்கில் விளம்பரம் செய்யப்பட்டது உங்களுக்கு தெரியுமா? ஆம் நடந்தது. ஆக இது ஒரு சாதாரண ஆள் செய்திருக்க முடியாது! பணபுழக்கதிலும், பதிவர்கள் மத்தியிலும் பிரபலமாக இருந்த ஒருவரால் தான் இது சாத்தியப்படும், யார் அந்த ஒருவர்? பின் வரும் சாத்திய கூறுகளை ஆராய்வோம்.

இது சமீபத்தில் செந்தழல் ரவி அவர்கள் தமிலீஷ்க்கு நன்றி சொல்லி எழுதிய பதிவு.
சரி அவர் நன்றி தானே சொல்லியிருக்கிறார், பிறகு எப்படி அது அவருக்கு சொந்தமாகும் என கேள்வி வரலாம். இங்கே தான் அரசியல் இருக்கிறது. ஒரு திரட்டியின் நிர்வாகிகளே தங்களது முகத்தை காட்ட தயங்கும் போது அதன் உரிமையாளர் எப்படி தான் தான் உரிமையாளர் என ஒத்து கொள்வார். மேலும் சமிபகாலமாக செந்தழல் ரவி தமிழ்மணத்திலிருந்து ஓரங்கட்டப்படுவது அனைவரும் அறிந்ததே! அதற்கு இதுவும் ஒரு காரண்மாக இருக்கலாம் என ஏஜென்சி செய்தி சொல்லுகிறது. ஆக இவருக்கும் ஒரு சீட்டு போட்டு வைப்போம்.


இரண்டாவது ஓசை செல்லா! இவர் முன்பை போல பதிவுகள் எழுதுவதில்லை என்று நினைத்து கொண்டிருக்கும் வேளையில், அந்த பதிவு அவருது தான் , இந்த பதிவு அவருது தான் என சர்ச்சைகள் கிளம்பியது. அவரும் அதை ஒத்து கொண்ட போது இவருக்கு முன்பை விட பதிவுகள் எழுத அதிக நேரமிருப்பது தெரிய வந்தது. (இப்போதும் என்ன பெயரில் எழுதி கொண்டிருக்கிறாரோ), சரி இந்த சர்ச்சைக்கும், தமிலீஷ்க்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. செல்லா தொழில் முறையில் ஒரு இணைய பக்க வடிவமைப்பாளர். அவரை போன்ற திறமைசாலிகளுக்கு இம்மாதிரியான திரட்டிகளை வடிவமைக்க அதிக பட்சம் ஒரு மாதம் போதும், ஆக ஓசை செல்லாவையும் ஒரு சீட்டில் அமர வைப்போம்.


அடுத்தது காசி, இவர் ஏற்கனவே இப்போது பிரபலமாக இருக்கும் தமிழ்மணம் என்னும் திரட்டியை உருவாக்கியவர், ஆக இவரையும் சந்தேக லிஸ்டில் சேர்த்து விசாரித்தால்,
”ஒரு திரட்டியை ஆரம்பித்து தாவூ தீர்ந்தது போதும், போதும் நீங்களும் உங்கள் அரசியலும்” என்று ஒதுங்கி விட்டதாக தெரிகிறது. தற்சமயம் நாம் வீட்டிலேயே சேவை(சேமியா) செய்யும் குக்கர் செய்து அதை மார்கெட் செய்து கொண்டிருக்கிறாராம்.
ஆக இவர் இதில் சம்பந்த பட்டிருப்பார் என்ற சந்தேகதை மூட்டை கட்டுவோம்.

தமிழச்சி, பல பிரபல பதிவர்களையே சில நாட்களில் கவனிப்பாரற்று கிடக்க செய்தவர்.
சில சர்ச்சைகளுக்கு பிறகு தமிழ்மணத்தில் இருந்து விலகி கொண்டார். அப்பொழுது தானும் இதை விட ஒரு பிரபல திரட்டியை உருவாக்குவேன் என சூளுரைத்ததாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் செந்தழல் ரவி மற்றும் ஓசை செல்லாவும் இவருக்கு நெருங்கிய நண்பர்கள் ஆக இவர்களின் துணையுடன் ஒரு திரட்டியை ஆரம்பிப்பது ஒரு கடினமான வேலையே இல்லை தமிழச்சிக்கு! ஆக இவருக்கும் ஒரு சீட்டு போட்டு உட்கார வைப்போம்!


ஆரம்பத்தில் தமிலீஷில் சேர்ந்தவர்கள் ஒன்றை கவனித்திருக்கலாம், உங்களது பதிவு அங்கே பாப்புலர் ஆகும் பொழுது உங்களுக்கு ஒரு மெயில் வரும் உங்கள் பதிவு பாப்புலர் ஆகிவிட்டது என்று, அதன் கீழே இப்படிக்கு என்று பெயர் வருமே அதை கவனித்திருக்கிறீர்களா? ஆம் அங்கே அருண் என்று தான் இருக்கும். செந்தழல் ரவி, ஓசை செல்லா மற்றும் தமிழச்சிக்கும் நெருங்கிய நண்பன் என்ற முறையில் வால்பையன் என்ற அருணையும் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் ஒரு திரட்டியை நிர்வாகிக்கும் அளவுக்கு வாலுக்கு மண்டையில் மசாலா இல்லை என்பதால் வாலை ஒட்ட நறுக்கி விடுவோம்.

ஆக அலசி ஆராய்ந்து பார்த்ததில் தமிழச்சி இதற்கு உரிமையாளராக இருப்பார் என தெரிகிறது,

உங்களது சந்தேகங்களையும் தெரிவிக்கலாம்.

49 வாங்கிகட்டி கொண்டது:

நட்புடன் ஜமால் said...

\\"தமிலீஷ் ஓனர் யாரு?"\\

நான் அவரு இல்லை

அ.மு.செய்யது said...
This comment has been removed by the author.
நிஜமா நல்லவன் said...

:)

நட்புடன் ஜமால் said...

நிறைய சீட்டு இருக்கு போல ...

ers said...

வணக்கம் இந்த விளையாட்டுக்கு நாங்கள் வரவில்லை.

(இது இலவச விளம்பரம்)
தங்கள் செய்திகளை புக்மார்க் செய்ய மேலும் ஒரு திரட்டி விரைவில்...
சோதனை ஓட்டத்துக்கு...
http://india.nellaitamil.com/

Anonymous said...

கிகிகிகிகி

அ.மு.செய்யது said...

நல்லா போட்டீங்க‌ கொளுத்தி !!!

இந்த‌ விச‌ய‌ம் அவ‌ங்க‌ளுக்கு தெரியுமா ??

ers said...

ச‌ரி யார் அந்த வீர த‌மிழ‌ச்சி !! சிவ‌ப்பு நாடாவை அவிழுங்க‌ள்...ஃஃஃஃ

ஏன் இந்த கொலைவெறி செய்யது?

வால்பையன் said...

//அ.மு.செய்யது said...
ச‌ரி யார் அந்த வீர த‌மிழ‌ச்சி !! சிவ‌ப்பு நாடாவை அவிழுங்க‌ள்...//

போட்டோ பார்க்கலையா!
நீங்க நாடாவை அவுக்க சொன்னதுக்கே அவுங்க உங்க பேண்ட்டை உருவீருவாங்க!

அ.மு.செய்யது said...

//tamil cinema said...


ஏன் இந்த கொலைவெறி செய்யது? //

சிவப்பு நாடா என்பது ரகசிய கோப்புகளுக்கு போடப்படும் முடிச்சு என்று எங்கோ
கேள்விப் ப‌ட்டிருக்கிறேன். ( எஸ்கேப் ஆயிட்ட‌ம்ல‌ )

அ.மு.செய்யது said...

// வால்பையன் said...

போட்டோ பார்க்கலையா!
நீங்க நாடாவை அவுக்க சொன்னதுக்கே அவுங்க உங்க பேண்ட்டை உருவீருவாங்க! //

அதுக்குதான் முன் ஜாமின் வாங்கின‌ மாதிரி க‌மெண்ட்ட டெலிட் ப‌ண்ணிட்ட‌ன்.
ந‌ல்லா கெள‌ப்புனீங்க‌ பீதிய...

cheena (சீனா) said...

சரி யாருன்னு சீக்கிரம் யாரச்சும் கண்டு பிடிச்சுச் சொல்லுங்கப்பா !! ஆமா இப்ப இது எல்லோருக்கும் தெரிஞ்சு என்ன ஆவப் போகுது ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

////ஆக அலசி ஆராய்ந்து பார்த்ததில் தமிழச்சி இதற்கு உரிமையாளராக இருப்பார் என தெரிகிறது,////

:-)))))))))))))

கணினி தேசம் said...

சத்தியமா நான் இல்லீங்கோ !!

ஊர்சுற்றி said...

அது நான்தானுங்கோ......
அதுக்கு ஓனர் நான்தானுங்கோ.....
தமிலிஷ் ஓனர் நான்தானுங்கோ.......

அட, சொன்னா நம்புங்கப்பூ!!!

Selvaraj said...

இதன் உரிமையாளர் திரு. இக்பால் என நினைக்கிறேன். அவர் சிங்கப்பூரில் இருப்பதாக படித்த ஞாபகம்.

செல்வராஜ்
லண்டன்

இராகவன் நைஜிரியா said...

http://www.athishaonline.com/2008/12/blog-post_12.html

மேலே உள்ள லிங்கில் அதிஷா யார் தமிழிஷ் ஓனர் அப்படின்னு சொல்லியிருக்கார் பாருங்க..

இன்னுமா உங்களுக்கு சந்தேகம்..

- இரவீ - said...

கூடி கும்மியடிச்சிட்டு, குட்டைய குழப்புரத பாருங்க...
எனக்கு தெரியும் "அது நீ தான் ஆனா நீ இல்ல".

Tech Shankar said...

சூப்பர் அப்பு. நல்ல அலசல். சூடான இடுகைக்கு இது நல்ல தோதான இடுகை.

வாழ்த்துக்கள்.


http://www.tamilnenjam.org

raml19344 said...

பத்ரி, இட்லிவடை, பாச்டல் பாலா இவர்களில் ஒருவரோ எல்லோருமோ சம்பத்தப்பட்ட திரட்டி இது. இது ஒரு ஆர்.எஸ்.எஸ். குரூப் நட்சத்தும் திரட்டி.////அவரும் அதை ஒத்து கொண்ட போது இவருக்கு முன்பை விட பதிவுகள் எழுத அதிக நேரமிருப்பது தெரிய வந்தது. (இப்போதும் என்ன பெயரில் எழுதி கொண்டிருக்கிறாரோ), ///முன்பு லோடுக்கு பாண்டி, அதற்கு முன் அன்செட்டுல்டு உமன். இப்போ கயல்விழி, வருன் மற்றும் கா*******

ரவி said...

ஏன் இந்த கொலைவெறி ?

தமிழச்சி said...
This comment has been removed by the author.
தமிழன்-கறுப்பி... said...

ஏன் ராசா நல்லாதானே இருந்த இப்ப என்னைய்யா ஆச்சு உனக்கு...;)

தமிழன்-கறுப்பி... said...

:)

தமிழன்-கறுப்பி... said...

ஏன் ராசா பீதியைக்கிளப்புற..:)

சின்னப் பையன் said...

எனக்கு தெரியும்....

முதல்லே தமிலிஷ மைசூர் மகாராஜா வெச்சிருந்தாரு.. அதுக்குப்பிறகு திருவாங்கூர் ஹைனஸ் வெச்சிருந்தாரு...

அதுக்கப்புறம்தான் உங்களுக்கே தெரியுமே???

கபீஷ் said...

:-)

ரவி said...

யோவ் நீ கன்னியாகுமரியில எடுத்த மொக்கை போட்டோவ ப்ளாகுல போடனும்..

அந்த் மொக்கைக்கு தமிழிஷ் அது இதுன்னு :)))))))))

எப்படி கண்டுபிடிச்சேன் பாத்தியா

ரவி said...

தலைவியின் பின்னூட்டம் ஏன் டெலீட் செய்யப்பட்டுள்ளது ?

தமிழச்சி said...

//செந்தழல் ரவி said...
தலைவியின் பின்னூட்டம் ஏன் டெலீட் செய்யப்பட்டுள்ளது ?//

நீர் ஏன் கேட்க மாட்டீர்? சுவீஸ் சரக்கை வாலுக்கு அனுப்ப வேண்டாம் என்று எத்தனை தடவை சொன்னேன்? கேட்டாயா? நாம் கட்டிக் காத்த இரகசியங்கள் அத்தனையும் அம்பேல். செய்யறத செஞ்சிட்டு குட்டிச்சுவத்துல உட்கார்ந்து கொண்டு போஸ் கொடுக்கறத பாரு! வர்ற கோவத்தில வால புடுடிச்சி கடல்ல தள்ளனும் போல கிடக்கு.

மேவி... said...

"தமிலீஷ் ஓனர் யாரு?"
உண்மை யா நான் இல்லைங்க.....
நான் எம்பிஎ வரையும் கடைசி பெஞ்ச் தன்னுக.....

SurveySan said...

;)

//சரி விசயதிற்கு வருவோம், தமிலீஷ் தொடங்கப்பட்ட போது அதற்காக லட்சகணக்கில் விளம்பரம் செய்யப்பட்டது உங்களுக்கு தெரியுமா?//

ஹ்ம். சில பதிவுகளிலும், வேறு சில பாப்புலர் தளங்களிலும் விளம்பரம் பாத்திருக்கேன் ;)

ஸோ, விளம்பரம் ஏற்றிய பதிவர்கள் எல்லாம், பார்டர்னர்ஸா? ;)

கார்க்கிபவா said...

உமக்கு அறிவே இல்ல வால்.. முக்கியமான் ஒரு ஆள விட்டிங்க.. அவர் பேருல பாதி இந்த பின்னூட்டத்தில் இருக்கு.. கண்டுபுடிச்சுக்கோங்க‌

ILA (a) இளா said...

நானும் ரவுடிதான். என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்கப்பு

ILA (a) இளா said...

//அறிவே இல்ல //
இல்லேன்னுட்டு.. இருக்குன்னா? ஏன்யா கெளப்புறே?

Kumky said...

மறுபடியும் ஆரம்பிசிட்டாங்கப்பா....
இது எத்தன சுத்து வருதோ......

Kumky said...

நெருங்கிய நட்பு வட்டாரத்த பாத்ததுமே வயித்த கலக்குதே.....

S.sampath kumar said...

நான் அவரு இல்லை

Tech Shankar said...

super

ரவி said...

//ILA said...

நானும் ரவுடிதான். என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்கப்பு
///

மாப்ள வாலண்டியரா வந்து வண்டியில ஏறுரான் பாரு

வால்பையன் said...

நன்றி அதிரைஜமால்
இப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது

நன்றி அ.மு.செய்யது

நன்றி நிஜமா நல்லவன்
நீங்கள் தான் உண்மையான உரிமையாளர் என சிங்கை பதிவர்கள் சொல்கிறார்கள்

வால்பையன் said...

நன்றி தமிழ் சினிமா
அடுத்தது நீங்கள் தான்

நன்றி தூயா
கிகிகிகி

நன்றி சீனா ஐயா
அது நீங்க தானாமே!

நன்றி ராதாகிருஷ்ணன்

நன்றி கணிணிதேசம்
சத்தியம் பண்ணா நம்பிருவோமா

நன்றி ஊர்சுற்றி
சரி சரி நம்பிட்டோம்

வால்பையன் said...

தகவலுக்கு நன்றி செல்வராஜ்
அவர் சிங்க்கபூரில் இருக்கலாம் ஆனால் இக்பால் இல்லை, ஜோசப் பால்ராஜ் அய்யங்கார்

நன்றி ராகவன்
அதிஷாவும் குழப்பியிருக்கிறார்

நன்றி ரவீ
நீங்கள் சொன்னது சரிதான் ஆனா சரியில்லை

நன்றி தமிழ்நெஞ்சம்

நன்றி ராம்
செல்லாவை பற்றி இவ்வளவு விசயங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள், ஆனால் வருண், கயல்விழி அவரல்ல

வால்பையன் said...

நன்றி செந்தழல்ரவி
உண்மையை சொன்னா கோபத்தை பாரு

நன்றி தமிழன் கறுப்பி
நான் நல்லா தான் இருக்கேன்!
மத்தவங்களை குழப்புவேன்

நன்றி ச்சின்னபையன்
ஹாஹாஹாஹா

நன்றி கபீஷ்

வால்பையன் said...

//செந்தழல் ரவி said...

யோவ் நீ கன்னியாகுமரியில எடுத்த மொக்கை போட்டோவ ப்ளாகுல போடனும்..

அந்த் மொக்கைக்கு தமிழிஷ் அது இதுன்னு )))))))

எப்படி கண்டுபிடிச்சேன் பாத்தியா//


அதை தான் போன பதிவிலேயே போட்டுடேனே,
இது சும்மா ஒரு லுலுலாயிக்கு

வால்பையன் said...

வாங்கோ தமிழச்சி
ஊர்ல எல்லோரும் சவுக்கியமா?

நன்றி mayvee
கடைசி பெஞ்ச் தான் இந்த மாதிரி சேட்டை பண்ணுமாம்

நன்றி சர்வேசன்
அம்மாதிரியான விளம்பரங்கள் கொடுத்தது, தமிலீஷ் உரிமையாளரின் நெருங்கிய நண்பர்கள் தான்

நன்றி கார்க்கி
அவர் இல்லையாமே!

வால்பையன் said...

நன்றி இளா
வாங்க நீங்களும் ஆட்டையில இருக்கிங்க

நன்றி கும்க்கி
வரட்டும் அப்போ தான் பொழுது போகும்

நன்றி ssk

கணேஷ் said...

அந்த கடைசி போட்டால இருக்குறது எதாச்சும் தீவிரவாதியா ???

மந்திரன் said...

எல்லோரையும் குழப்பி ,நீங்க மட்டும் தப்பிக்க பார்கிறீங்க ... நீங்க tamilishக்கு உரிமையாளர் இல்லாமல் இருக்கலாம் ..ஆனால் அதன் பின்னணியில் நீங்கள் ஒளிந்து கொண்டு இருக்கீறீர்கள் ..

உணமைய சொல்ல ஏன் இத்தனை நாடகம் ....

!

Blog Widget by LinkWithin