சேது சமுத்திர திட்டம்...

//சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது : மத்திய அரசு உறுதி.//

வட அமெரிக்காவிற்கும், தென் அமெரிக்காவிற்கும் இடையில் பனாமா என்ற நாடு இருக்கிறது. இரு அமெரிக்காவிற்கு இடையில் நீர் இல்லை. நிலபகுதி தான்.

கடல் வழி பயணத்திற்கு அந்த நிலபகுதி மட்டுமே தடையாக இருப்பதை அறிந்து 40 ஆண்டுகள் வேலை செய்து கிட்டதட்ட விபத்தில் 40000 மக்கள் இறந்து, நிலபகுதி ஏற்றம் இறக்கமாக இருப்பதால் செயற்கையாக ஒரு ஏரியை உருவாக்கி

அதும் அந்த ஏரியை கடப்பதை யூடியூப்பில் தேடிப்பாருங்கள். வாயில் ஈ போயிரும், மூன்று கட்டமாக நீரை உயர்த்தி அடுத்த உயரத்திற்கு தள்ளி கடைசியில் கடலுக்குள் தள்ளப்படும்.

இன்றைய நிலைக்கு பனமா கால்வாயால் பனாமா நாட்டுக்கு பல மில்லியன் மில்லியன் டாலர் லாபம். கடக்கும் ஒவ்வொரு கப்பலும் பணம் கொடுக்க வேண்டும், கடக்கும் ஒவ்வொரு கப்பலுக்கும் சில மில்லியன் டாலர் லாபம். ஏன்னா சுற்றி போக வேண்டிய அவசியம் இல்லை என்பதால் எரிபொருளும் நேரமும் மிச்சம்



சேது சமுத்திரம் வந்தால் கொழுப்பு துறைமுகத்திற்கு மாபெரும் நட்டம். இது அனைத்து அரசியல் வாதிகளூக்கும் தெரியும், இலங்கையை சுற்றிச்செல்ல தேவையில்லை என்பதால் சேது சமுத்திரத்தில் அமைக்கப்படும் டோல்கேட்டில் பணம் கட்டி செல்ல அனைத்து நாட்டு கப்பல்களூம் ஒப்புக்கொள்ளும்

மேலும் எரிபொருளுக்கும், உணவுபொருள்களுக்கும் அருகில் இருக்கும் தூத்துகுடி துறைமுகத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளதால் அங்கே அதிக வேலை வாய்ப்பும், புதிய தொழிலும் பெருகும், தூத்துகுடியை நிர்மூலமாக்கும் ஸ்டெர்லைட்டை தூக்கிவிடலாம்.

உண்மையில் சேது சமுத்திர திட்டம் ராமர் பாலம் என்ற காரணத்திற்காக நிறுத்தி வைக்கப்படவில்லை. இலங்கை நாட்டுடன் செய்த ஒப்பத்தத்தால் எதாவது ஒரு காரணம் சொல்லப்படுகிறது. நன்றாக கவனித்துப்பாருங்கள் இலங்கையுடன் முரண்படும் அரசியல் தலைவர்கள் மட்டுமே சேது சமுத்திர திட்டத்தை தீவிரமாக ஆதரிப்பார்கள்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin