அனுபவம்

எங்களுக்கு பெங்களூர், கோலார், கோலார் தங்கவயல் பகுதியில் கஸ்டமர்ஸ் இருக்காங்க. வருசம் ஒருக்கா அங்கே மீட்டிங் போவேன். போகும் போது ஆபிஸில் ட்ரெயின் டிக்கெட் போட்டு கொடுத்துருவாங்க, வரும் போது பஸ் தான். ஏன்னா வேலை முடிய டைம் சரியா சொல்ல முடியாது இல்லையா

ஒருநாள் பெங்களூர் முடிச்சிட்டு, தங்க வயல் முடிச்சிட்டு கோலாரில் ஒரு கிறுக்கன் கூட சண்டை போட்டு சரியான டென்சனில் சரக்கடிக்க வந்துட்டேன். அப்ப ஸ்மார்ட் போன் இருந்த மாதிரி ஞாபகம் இல்ல.

எனக்கு ஒரு பழக்கம் உண்டு, புது இடத்தில் சரக்கடிக்க போனா ஒரு புத்தகம் வாங்கிப்பேன், அதை படிச்சிகிட்டே தான் அடிப்பேன். நான் படித்து, ரசித்து, ருசித்து குடிப்பதை ஒருத்தர் பார்த்துகிட்டே இருந்தார். கர்நாடகா சரக்கா உடனே ஏறல, அதுனால இன்னொரு குவாட்டரும் போச்சு

ஊருக்கு வரணுமே, என்னை பார்த்தவரிடம் how can i get the bus to go to erodeனு கேட்டேன். நீங்க தமிழ்லயே கேளுங்கன்னு சொன்னாரு. இங்கிலீஸ் தெரியாது போலனு தழிழ்ல கேட்டேன். இன்னேரம் கோலார்ல இருந்து பஸ் இல்ல . ஆந்திரா பார்டர் பக்கம் போனா பஸ் கிடைக்கலாம், நான் அந்த பக்கம் தான் போறேன் வாங்கன்னு சொன்னார்

போனோம், போனோம், போய்கிட்டே இருந்தோம். எங்க போறிங்கன்னு கேட்டேன். என் வீட்டுக்குன்னு சொன்னார். என் கையில் கணிசமான ஆபிஸ் பணம் இருக்கு. அடிச்சு புடுங்கிருவானுன்னோ, என்னை கொன்றுவாங்கன்னோ எனக்கு பயம் இல்ல. அவர் ஹோமோவா இருந்தா என்ன பண்றதுன்னு பதட்டம்

நேரா அவர் வீட்டுக்கு போனார், அவர் மனைவி இரண்டு மகன்கள் இருந்தாங்க. இப்ப பஸ் இல்ல. காலையில் போலாம் என் வீட்டில் தங்குங்கன்னு சாப்பாடு போட்டாங்க. மொட்டை மாடியில் படுங்க பாய், தலகாணி கொடுத்தாங்க.

என் ட்ராவல் பேக்கில் ஒரு பிரஸ், பேஸ்ட், சிந்தால் சோப்பு எப்பவும் இருக்கும். காலையில் எழுந்ததும் பல்லு விளக்கிட்டு கவனிச்சிட்டேன். வீட்டில் தெலுங்கில் பேசிகிட்டு இருந்தாங்க. அவரை கூப்பிட்டு நீங்க தெலுங்கான்னு கேட்டா அவருக்கு தமிழ்,தெலுங்கு,கன்னடம் மூணும் தெரியுமாம், அவரை போய் இங்கிலீஷ் தெரியாதவர்னு மட்டமா நினைச்சிட்டேன்.

காலையில் இருந்து சாப்பிட்டு போங்கன்னு சொன்னார். வண்டி எடுங்க, இப்ப சரக்கு எங்க கிடைக்கும்னு கேட்டேன். பேக்கை எடுத்துகிட்டேன். அவரு ஒரு ஃப்ரெண்டை பார்க்க கூட்டிட்டு போனார். மூணு பேரும் ஒரு இடத்திற்கு போனோம், அவரு வேணாம் வேணாம்னு சொல்ல வலுகட்டாயமா அவருக்கு சரக்கு வாங்கி கொடுத்தேன். நல்லவங்க சந்தோசமா இருக்குறதை பார்ப்பது தான் சொர்க்கம்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்

அப்ப என் பழைய நம்பர் 9994500540 இருந்தது( இப்ப ஒரு பொண்ணுகிட்ட இருக்காம்) எப்பவாவது போன் பண்ணி நல்லாயிருக்கிங்களான்னு நலம் விசாரிப்பார். அந்த நம்பர் தொலைந்ததில் இருந்து காண்டாக்ட் விட்டு போச்சு. அவர் பேரு கூட மறந்து போச்சு. அவர் பசங்களுக்கு அவளுக்கு நூறு ரூபாய் கையில் கொடுத்துட்டு வந்தேன், அதான் நான் பண்ண கைமாறு

இது தான் நடந்த உண்மை

ஒருவேளை வேற மாதிரி போய் அவரு எங்கிட்ட சப்ப கொடுக்க மாட்டிங்களான்னு கேட்டா என்ன பண்ணிருப்பேன்

சத்தியமா கொடுத்திருப்பேன்

ஆனா அவரு கதிரும் இல்ல, நான் லக்ஷ்மியும் இல்ல

1 வாங்கிகட்டி கொண்டது:

'பரிவை' சே.குமார் said...

அனுபவம் அருமை.

!

Blog Widget by LinkWithin