சட்டம் ஒழுங்கும் - சமூக பொறுப்பும்!

சுவாதி கொலையை பொறுத்தவரை காவல்துறையின் பொறப்பன்ற தன்மை வெறும் 10% தான். மீதி 90% நாமே பொறுப்பு. இந்த சமூகம் பொறுப்பு, நம் வளர்ப்பு முறை பொறுப்பு.

இங்கே அழகென்றால் சிகப்பா இருப்பதும், கருப்பென்றால் தேவாங்கு என்றும் மூளையில் பதியவைக்கப்பட்டுள்ளது.
ஒரு தனிமனிதனுக்கு மூன்றால் மனிதர் மேல் உள்ள உரிமைகள் என்ன என்பது சொல்லிக்கொடுக்கப்படவில்லை. சக மனிதர்களிடம் நான் நடந்துக்கொள்ள வேண்டிய முறையும் சொல்லிக்கொடுக்கப்படவில்லை.

கொலையாளி இஸ்லாமியன் என்று ஒய்.ஜி.மகேந்திரன் எழுதியதும் அது அப்பட்டமான இஸ்லாமிய எதிர்ப்பு என கதறினோம்(நான் எங்கேயும் கதறல, உங்களை தான் சொல்றேன்). கொலையுண்டது பார்ப்பனர் வீட்டு பெண் என்றதும் அவள் மேல் தப்பு இருக்கும் என்று பல்டி அடித்தோம். நமக்கும், ஒய்,ஜி.மகேந்திரத்தனுக்கும் உள்ள வித்தியாசம். ஒய்.ஜி உடப்பில் பூனூல் இருக்கு. அவ்ளோ தான்.

யூகங்கள் அடிப்படையில் தீர்ப்பை எழுத இந்த இணைய போராளிகளுக்கு தான் எத்தனை அவசரம். தான் சார்ந்த நம்பிக்கையை உண்மை என நிறுவ முயலும் மதவாதிகளுக்கும். நடந்த கொலையை சாதியுடன் முடிச்சிட்டு பெண் பார்பனர் என்பதால் அவள் மேல் குற்றம் சாட்ட முனையும் உங்கள் நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம். பகுத்தறிவு, மதவாதத்தை போல் பல்லிளிக்க காரணம் என்ன?

ராம்குமாரின் வெறிசெயலுக்கு அவன் தாழ்வுமனப்பான்மையும், ஆணாதிக்க சிந்தனையும் தானே காரணம். வினுபிரியாவின் தற்கொலைக்கு காரணம், அவளை நிர்வாணமாக சித்தரித்த இன்னொரு ஆணாதிக்க வெறியனின் செயல் தானே காரணம்.இரு கொலைகளையும் கண்டித்த உங்களில் எத்தனை பேர் பெண்ணின் உரிமைகளை மதித்த யோக்கியன், மனைவியை அடிக்காத ஆண்மகன். மாற்றம் வேண்டும் என்பது சரிதான். ஆனால் மாற்றம் உங்களிடமிருந்து அல்லவா ஆரம்பிக்க வேண்டும்.

உன்னை காதலிச்சா நான் சந்தோசமா இருப்பேன் என்பதா காதல், என் காதலை துறந்தால் தான் நீ சந்தோசமா இருப்பன்னா நான் விலகிறேன்னு என்பது தானே காதல். இந்த புரிதல் இல்லாம எங்கனம் காதல் மனிதம் வசப்படும்?

2 வாங்கிகட்டி கொண்டது:

கிருஷ்ண மூர்த்தி S said...

மாற்றம் நம்மிடமிருந்தே ஆரம்பிக்கிறது என்பதைச் சொல்ல ஆரம்பித்த விதம் மிகவும் சரி! ஆனால் பதிவை முடித்திருக்கிற விதம் கொஞ்சம் குழப்புகிறதே

அருள்மொழிவர்மன் said...

நல்லா இருக்கு!

!

Blog Widget by LinkWithin