கலாம் மரணமும், வாட்ஸ் அப் வதந்திகளும்..

எவன் பொண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும் என்பது போல உண்மையான தமிழன் இதை அனைவருக்கும் ஷேர் செய்வான்னு ஒரு வார்த்தையைப் போட்டு ஆர்வ கோளாறுகளை தூண்டி விட்டு அவர்களும் ஒரு நம்பர் விடாமல் ஃபார்வேர்டு செய்த வதந்திச் செய்திகள் இவை.

கடந்த நாட்களில் கொமாருகள் தீயா வேலை செஞ்சு கிளப்பிய புரளிகள்.

1. கலாம் இறந்த தினத்தை ஐ.நா மாணவர் தினமாக அறிவித்தது.

2. அமெரிக்க அதிபர் ஒபாமா கலாமுக்கு அஞ்சலி செலுத்த மதுரை வருகிறார்.

3. கலாமுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமெரிக்க கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

4. அணு விஞ்ஞானி அப்துல்கலாம்.

5. இத்தாலி நாட்டு சோனியா இந்திய பிரதமர் ஆகக்கூடாது என கலாம் ஒற்றைகாலில் நின்றார்.

6. காமராஜர் ஆட்சியில் தெருகுழாய் போட்டார்

7. மேகத்தின் வாயிலாக வானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

8. கலாம் ஒரு அய்யர் பெண்ணை காதலித்தார்.

9. கலாம் அண்ணின் பணத்தை பிக் பாக்கெட் அடித்து லாரி பிடித்து வரசெய்த்தது இந்த தேசம்.

10. கல்கி அவதாரம் தான் கலாம்!(செமல smile emoticon )

11. இயற்கை மரணமா, அரசியல் சதியா. 

12. கடவுள் துகள் ஆராய்ச்சி தடைப்பட்ட போது அப்துல் கலாம் அங்கே சிவன் சிலையை நிறுவினார். அந்த ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு கிடைத்தது. 

13. 2007 - ல் அவர் தடுமாறி விழுந்த போட்டோவை கடைசி போட்டோ என ஷேர் செய்தது.

14. கலாமுக்காக இளையராஜா இசையமைத்த பாடல் என்று காமராஜர் படப்பாடலை ஷேர் செய்தது.

15.“இளவயது அப்துல்கலாம்” என பிஹார் பப்ளிக் பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுவனின் போட்டோ.

16. அதைவிட இளைய போட்டோ என்று ஏ.ஆர்.ரஹ்மானின் குழந்தைப் படம் பகிரப்பட்டது.

இன்னும் முடியல, நாளுக்கு நாள் புதுசு புதுசா திரைகதை எழுதிட்டு தான் இருக்கானுங்க.
இந்தியா வல்லரசு ஆகுதோ இல்லையோ, டல்லரசாக பார்த்துக்கொள்ளுவதில் இந்த பொய்யர்கள் குழுக்கு பங்கு அதிகம்!


#தொகுப்பு உதவி:சேலம் எஸ்கா.

1 வாங்கிகட்டி கொண்டது:

பாமரன் said...

பலர் கட்செவி அஞ்சலில் வரும் செய்திகளை முழுவதுமாக வாசிப்பது கூட கிடையாது... மேலோட்டமாக பார்த்தவுடன் ஆராய்ந்தறியாமல் மற்றவர்களிடம் பகிர்ந்து விடுகின்றனர். இது மிகவும் தவறானது என்பதை உணர்த்தியது நும் கருத்துகள்... வாழ்த்துகள்

!

Blog Widget by LinkWithin