டெல்லி தேர்தல்!

2013 ஆம் ஆண்டி டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி 28 தொகுதிகள் வென்றது. அதை விட நாலு தொகுதிகள் அதிகமாக பெற்று 32 தொகுதிகள் வென்றது பாஜக.

ஆனால் கவர்னர் ஆட்சி அமைக்க அழைக்கையில் எங்களுக்கு பெரும்பான்மை இல்லை நாங்கள் ஆட்சி அமைக்க மாட்டோம்னு என்று ஓடி ஒழிந்தது பாஜக செய்த முதல் தவறு. இப்போ வாங்குன அடிக்கு அச்சாரம் அதுதான்.

28 சீட்டுகள் மற்றும் காங்கிரஸீன் 8 சீட்டு ஆதரவோட தைரியமாக களம் இறங்கிட ஆம் ஆத்மி ஆரம்பத்தில் சில சிறுபிள்ளை தனமான போராட்டங்கள் செய்தது உணமை தான் ஆனால் அதுவே மக்களிடயே அவர்களை கொண்டு சென்றது. டெல்லியில் காவல்துறை மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் விசயமே பலருக்கு அப்பொழுது தான் தெரியும்.

ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று ஜன்லோக்பால். இன்றும் ஆம் ஆத்மி கட்சியின் பிரதான கொள்கை என்றால் அது ஊழல் எதிர்ப்பு. கட்சியில் பெரும்பான்மை இல்லாத போது மசோதாக்களை நிறைவேற்றுவதில் உள்ள சிரமம் தெரியாத புது கட்சி தானே ஆம் ஆத்மி. விளைவு 49 நாட்களில் ராஜினமா செய்தார் முதல்வர்.

ஆனாலும் அந்த நேர்மை மக்களுக்கு பிடிந்திருந்ததே. இன்று 67 சீட்டுகள் பெற்று மாபெரும் கட்சியாக வளர்ந்து நின்றதுற்கு காரணமாவே அரவிந்த் கெஜ்வரிவாலின் தைரியமான முடிவுகள் தான் என்பேன்.

சாத்தியமில்லாத வாக்குறுதிகள் பற்றீ பாஜக பேசுவது மல்லாக்க படுத்துகொண்டு காறி துப்புவதுக்கு சமம். ஒவ்வொரு குடிமகனுக்கும் 15 லட்சம் தர்றேன்னு ஆம் ஆத்மி சொல்லல. காலேஜ் கட்டி தர்றோம். மின் கட்டணத்தை குறைக்கிறோம். பயன்பாட்டுக்கு தண்ணீர் தர்றோம் என்று தான் சொன்னார்கள். இதுவே சாத்தியமில்லாத வாக்குறுதிகளாக பாஜக கருதினால் பாஜக மத்தியில் ஆளக்கூட தகுதி இல்லாத கட்சி என்பேன் நான்.

இளைஞர்களின் எழுச்சியே ஆம் ஆத்மி கட்சி. டெல்லியில் ஏற்பட்ட மாற்றத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கும் ஒரு சமான்யம் நான்!

1 வாங்கிகட்டி கொண்டது:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இளைஞர்களின் எழுச்சியே ஆம் ஆத்மி கட்சி. டெல்லியில் ஏற்பட்ட மாற்றத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கும் ஒரு சமான்யம் நான்!//

அதே!!அதே!!

பிரான்சிலும் ஆழும் கட்சியின் ஆட்சியில் பாரிஸ் மாநகர சபை இருப்பது குறைந்து விட்டது. ஆனால்
நன்றாகத் தான் இயங்குகிறது.

!

Blog Widget by LinkWithin