நானாக நானில்லை ...............

வேலை இல்ல
சோறு இல்ல
மனிதம் இல்ல
எந்த புத்திசாலி முயலையும்
வெற்றி கொள்ளும்
இயலாமைகள் இவை....

*********************

பெரும்பாலும்
இழப்பும்
புறக்கணிப்புமே
செயற்கை மரணத்திற்கு
காரணமாய் இருக்கிறது
ஆகினும்
ஒவ்வொருவருக்கும்
ஒரு நியாயம் இருக்கிறது
குறை சொல்லிக்கொண்டிருப்பதை விட
தொலைந்து போதல் நலம்........

******************

எங்கேயோ
யாரோ, யாரையோ
அழைப்பதற்கெல்லாம்
தலை திருப்புகிறேன்
என் வாழ்வை
நான் எப்போது
வாழ்வது?

**************************

நீக்கமற நிறைந்திருக்கும்
ஒலியைப்போல்
என் வெளியை
உய்விக்க ஒளியை
தேடுகிறேன்.
எந்த இரவில்
ஒளிந்துள்ளதென
தெரியவில்லை.

*************************

விழாத தூசிக்காய்
அழும் மறுக்கண்ணை போல்
எனக்காய் அழ யாருண்டு
நேர்காணலின்றி
தேர்வு செய்யப்படுவீர்

************************

இருப்பேதேழு ரூபாய்
என்பது
இரண்டு பத்து ருபாய்களும்
ஒரு ஏழு ருபாயும்
ஏழு ரூபாய்
எப்படி இருக்குமென
யாருமெனக்கு
காட்டவில்லை.

**********************

என் சுதந்திரம்
என்னிடமே இருக்கிறது
என் பயணம்
எனது விடுதலை
நோக்கி தான்..

********************

புதிதென்பதை
பார்த்ததால்
புதிதாய் படைக்க முடியாது
புதிதென்பது
நமக்கு தான் புதிது
அது அதுவாகவே
இருக்கிறது.

********************

பாதி தான்
கடந்திருக்கிறேன்
மீதி போவதற்குள்
பாதை பழகிவிடும்
என்ற நம்பிக்கையில்!

******************

புதிதாய் படைக்க
ஒன்றுமில்லை
இருப்பதையே
ரசிக்க எவருமில்லை.

*****************

செவிக்குணவிற்கு
பஞ்சமில்லை
ஆலோசனைகளாய்
வயிற்க்கு பாட
புது வள்ளுவன் தேவை.

*****************

நான் இரும்பாய்
இருக்கிறேன்
என்னை ஆயுதமாய்
மாற்றிக்கொண்டு
இருக்கிறது சமூகம்

****************

இரண்டாம் மாடியும்
நண்பர்களும்
எப்போதும் சுகம் தரும்
இதையாவது கடந்தாயே
என்ற இரண்டு மாடிகளின்
சாட்சிகளுடன்

*****************

பார்வையின்
பசிக்கு
இமைகள்
இரையாகா!

****************

மீண்டு வருவதற்கு
தூண்டில்கள்
பயன்படாது,
வாழ்க்கை தராசில்
உயர்ந்திருப்பவனை விட
தாழ்ந்திருப்பவனே
கொண்டாடப்படுகிறான்.


****************



1 வாங்கிகட்டி கொண்டது:

முகமூடி said...

interesting scribbles... :)

!

Blog Widget by LinkWithin