பெண்!

இந்த பதிவு யாருக்காக!


அந்த பெண் ஏன் 11 மணிக்கு போச்சு.
ஏன் அரைகுறை ஆடையுடன் போச்சு.
ஏன் ஆண் நண்பனுடன் போச்சு.

என மடத்தனமாக பேசித்திரியும் பிற்போக்குவாதிகளுக்கு!
***

அறிவியல்:-

ஒரு பெண், பெண்குழந்தை பெறும் போதே அவளுக்கு பிரச்சனை வந்துவிடுகிறது, இத்தனைக்கும் வலுவாக எதிர்ப்பது அந்த பெண்ணின் மாமியார் எனும் பெண் தான், ஆண் குழந்தை பிறக்காத பொழுது அந்த மனைவியை ஒதுக்கிவைத்து விட்டு ஆணுக்கு வேறு திருமணம் செய்துவைக்கும் வழக்கமெல்லாம் இங்கே உண்டு, அவர்களை பொறுத்தவரை வாரிசு என்றால் ஆண்குழந்தை தான். பெண்குழந்தையை அவர்கள் சுமையாகவே நினைக்கிறார்கள்- ஆனால் உண்மை என்ன?

ஆண் குழந்தை என்றால் எக்ஸ்+ஒய் குரோம்சோம்கள், பெண் குழந்தை என்றால் எக்ஸ்+எக்ஸ் குரோம்சோம்கள் - நாம் கருவாகும் பொழுது முதல் ஏழுவாரங்களுக்கு எந்த பாலினம் என தீர்மானம் ஆகாமல் பெண் உடலில் தான் இருக்கிறோம், அதன்பின் தான் ஒய் குரோம்சோம்கள் வலுபெற்று ஆண் உறுப்பு உருவாகிறது, அதற்கான சாட்சி ஆண் பால் கொடுப்பதில்லை என்றாலும் ஆண் உடம்பில் இருக்கும் முலைகாம்புகள்.

பெண் உடலில் எக்ஸ் குரோம்சோம்கள் மட்டுமே இருக்கின்றன, என்ன குழந்தை பிறக்க வேண்டும் என தீர்மானிப்பது ஆணே, அவனிடமிருந்து செல்லும் குரோம்சோம் என்ன என்பதை அடிப்படையாக வைத்தே குழந்தை உருவாகிறது, ஆணிடம் ஏன் இரண்டு குரோம்சோம்களும் இருக்கின்றன? காரணம் முதல் பத்தியில் சொன்னது தான், ஆண் உருவாகும்பொழுதே பெண்ணாக தான் உருவாகின்றான். ஆணின் பழக்கவழக்கம்(நிகோடின் - ஆல்ஹகால்), உணவு முறை, உடலுறவு கொள்ளும் நேரத்தில் இருக்கும் உடல்நிலை அதைவிட முக்கியம் விந்தணுவில் எந்த குரோம்சோமை தூக்கி செல்லும் அணு அனைத்தையும் முந்திக்கொண்டு வெற்றி பெறுதல் - என்ன குழந்தை பிறந்தது என்பதற்கு முழுக்காரணம் ஆணே தவிர 1% கூட பெண் இல்லை!

உளவியல் :-

ஆதியிலிருந்தே பெண் குழந்தைகள் ஒதுக்கப்பட்டதற்கு முட்டாள்த்தனமான வரதட்சணை முறை தான் காரணம், சில ஆண்டுகளுக்கு முன்வரை தென்தமிழகத்தில் பெண் குழந்தைகள் கள்ளிப்பாலிட்டும், நெல்மணியிட்டும் கொல்லப்பட்டதற்கு அதுவே காரணமாக இருக்கிறது. தற்பொழுது கொடுக்கப்பட்டிருக்கும் விழிப்புணர்ச்சி காரணமாக அவை குறைந்துள்ளது, ஆம் குறைந்துள்ளது. வெளியே தெரியாமல் பல பிற்போக்கு மடசாம்பிராணிகள் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.சிறுவயதிலிருந்தே ஆண் சகல உரிமைகளோடும், பெண் தன் வீட்டிலேயே அடிமையாகவும் தான் வளர்க்கப்படுகிறாள். முன்பெல்லாம் ஒரு பெண் பூப்படைந்து விட்டால் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, மாதவிடாய் காலங்களில் சமயலறை செல்லக்கூடாது, தனியாக ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும் போன்ற மடத்தனங்களால் தன்னளவிலேயே தன்னை தகுதி இல்லாத உயிராக எண்ணத்தொடங்குகிறாள் பெண். இது மாபெரும் உளவியல் தாக்குதல்.

இன்று கல்வி கொடுக்கப்பட்டு, நல்ல வேலை கிடைத்து தானும் சக மனிதர்கள் தான் என இருக்கும் பெண் சமூகத்தை காலங்காலமாக அடக்கியே வாழ்ந்த ஆண் சமூகம் ஏற்க மறுக்கிறது, அதற்கு காரணமும் பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட உளவியல் திணிப்பு தான், அது மதரீதியாக வேறுபடுமே தவிர மனித ரீதியாக பெண் அடிமையாக இருக்க வேண்டும் எனத்தான் சொல்லிக்கொடுக்கப்படுகிறாள்.சமூகம்:-

கமல், பதினாறு வயதினிலே படத்தில் கோமணத்தோடும், ஆளவந்தான் படத்தில் பின்புறத்தை காட்டி கொண்டு அம்மணமாக வந்தால் அட, உலகநாயகன், உலகநாயகன் தாண்டா, இதுகெல்லாம் ஒரு தைரியம் வேணும் என்பார்கள், அதே சினிமாவில் ஒரு பெண் ஜட்டி, பிராவுடன் வந்துவிட்டால் போச்சு, போச்சு மொத்த கலாச்சாரமும் சீரழிச்சு போச்சுன்னு கதறுவார்கள் கலச்சார டவுசர்கள்!

முதல்ல கலாச்சாரம்னா என்னான்னு இவுங்களுக்கு பாடம் எடுக்க வேண்டியிருக்கு.
15 நூற்றாண்டு கலாச்சாரம், இருபதாம் நூற்றாண்டு கலாச்சாரம்னு காலத்திற்கேற்ப நாகரிக வளர்ச்சியில் மாறுவது தான் கலாச்சாரம். உதாரணத்திற்கு வெகு காலத்திற்கு முன் கேழ்வரகு கஞ்சி, களி, புட்டு என சாப்பிட்டோம். பின் அரிசி சோறு, இட்லி, தோசை. இன்று பீட்ஸா, பர்கர், சாட்ன்விட். என் கேள்வி என்னான்னான்னு எவனாவது உன்கிட்ட வந்து நீ இதை தான் தின்னாகும்னு உன் வாயில் திணித்தானா? அவனுக்கு பிடித்ததை அவன் செய்கிறான், அடுத்தவன் என்ன செய்யனும், எப்படி இருக்கனும்னு ஆர்டர் போட நீ யாருடா தக்காளி, உன்னால ஏத்துக்க முடியல, மாற முடியலன்னா அதுக்கு பேரு மரபுவழி, அது உன் தப்பே தவிர சமூகத்தின் குற்றம் அல்ல!

மரபுன்னு சொன்னதும் நியாபகம் வருது, இந்து யானமரபு இந்தியாவின் சொத்து, அதை தான் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என தண்ணி கூட குடிக்காமல் எழுதி கொண்டிருக்கும் ஜெயமோகனை தயவுசெய்து பெண் உரிமை பற்றி எழுதச்சொல்லாதீர்கள்.
மலத்திற்கு நடுவில் மைசூர்பாக்கு வச்ச மாதிரி இருக்கு!

பிறர்மனை நோக்காதேன்னு சம்நிலையா எழுதிட்டு அதே வள்ளுவர் பொண்டாட்டி பேச்சை கேக்காதேன்னு எழுதி வச்சிருக்கார். பத்தினி எரிச்சா வாழமட்டை எரியும், பத்தினி சொன்னா மழை பெய்யும்னு பெண்ணுக்கு தான் ஒழுக்கம் சொல்லி தர்றானுங்களே தவிர ஆண்களாலே உருவாக்கப்பட்டது தான் இந்த சட்டத்திட்டங்களலெல்லாம் என ஒப்புகொள்ள மறுக்கிறார்கள். ரொம்ப நாளா எனக்கொரு ஆசை, இந்த கற்பு மேல் நம்பிக்கையுள்ளவர்களிடம் ஒரு கேள்வி கேட்கனும்னு, என்னைக்காவது உங்க மனைவியையோ, அம்மாமையோ மழை பேயச்சொல்லி பார்த்திருக்கிறீர்களா? இல்லைல அதுனால முன்னாடியும், பின்னாடியும் மூடிகிட்டு இனிமே கலாச்சாரம், பண்பாடு பேச வராதிங்க!
**

இஸ்லாம் பெண்ணியத்தில் புகழ்பெற்ற ஒரு வாசகம் உண்டு.

DON'T TEACH US WHAT TO WEAR
TEACH UR SON NOT TO RAPE.

ஆண் சமூகத்தில் நோயை வச்சிகிட்டு பெண்னை குறை சொல்லும் வரை இம்மாதிரியான பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறையவே குறையாது. குற்றம் செய்பவர்களுக்கு மரணதண்டனையெல்லாம் கொடுக்க வேண்டாம், ஒரு சிறு அறுவை சிகிச்சை மூலம் அவர்களுக்கு ஆண் தன்மையை மட்டும் எடுத்து விடுங்கள் போதும், தான் ஆண் என்ற வெற்று அகம்பாவத்தில் திரியும் எவனும் இனி இன்னொரு பெண்னை வன்புணரும் நோக்கில் பார்க்க மாட்டான்!

********

பெண்களுக்கு:-
இரண்டு பெண்குழந்தைகளுக்கு தகப்பன் என்ற முறையிலும் என்னை சுற்றியே சில புரிதல் இல்லாதவர்கள் இருந்ததாலும் இதை எழுதிவிட்டேன். உண்மையில் உங்களுக்கோ, உங்களை போன்ற பெண்களுக்கோ எதாவது பிரச்சனை நேர்ந்தால் நீங்கள் தான் குரல் கொடுக்க வேண்டும், போராட வேண்டும், நமக்காக பேச எதாவது ஒரு ஆண் வருவான் என எதிர்பார்ப்பீர்களேயானால் நீங்களே இன்னும் உங்கள் அடிமைதளையை வெட்டிக்கொள்ள தயாராக இல்லை என்று அர்த்தம். உங்கள் உரிமையை கேட்டு கேட்டு அலுத்து விட்டீர்கள், இனி எடுத்து கொள்ளுங்கள் அப்போது தான் சமூகம் உங்களை பார்த்து பயப்படும்!

17 வாங்கிகட்டி கொண்டது:

அமுதா கிருஷ்ணா said...

எங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் 200 அடி ரோடில் 2 கி.மீட்டரில் மூன்று டாஸ்மாக்குகள். இருட்டிய பின் அந்த ரோடில் இது வரை தனியே போனதே இல்லை.மதுவிலக்கு வந்தால் தான் நாங்கள் தைரியமாய் எந்த நேரத்திலும் வெளியில் போக முடியும்.தனியா இருக்கும் எந்த ஆணும் பெண்ணிற்கு தீங்கு செய்ய முயலுவதில்லை. குடித்துவிட்டு கூட்டமாய் இருக்கும் ஆண்கள் தான் இப்படி அநியாயம் செய்ய முயல்கிறார்கள். குடிக்காதே என்று சொன்னால் எந்த ஆண் கேட்கிறார்.சும்மா எங்களுக்கு உரிமை இருக்கு என்று கத்தியோ,போராட்டம் நடத்தியோ ஒரு பிரயோஜனமும் இல்லை. இத்தனைக்கும் இங்கே ஒரு பெண் முதலமைச்சர். ஆனால்,கொடி கட்டி பறப்பது மது விற்பனை தான்.

வால்பையன் said...

பல நாட்களாகவே எழுத்தாலர் ஞாநி இதை பற்றி எழுதிக்கொண்டு தான் இருக்கிறார், அரசுக்கு வேணுமே அறிவு!

எவன் எப்படி கெட்டு நாசமா போனா என்ன என்று நினைக்கும் ஜனநாயக அரசின் குடிமக்களல்லவா நாம்!

Anonymous said...

//அந்த பெண் ஏன் 11 மணிக்கு போச்சு//

இன்று ஏன் 11 மணிக்கு போச்சு என்கிற பிற்போக்குவாதிகள், நாளை பெண் வீட்டை விட்டு வெளியே போகிறதினால்தானே இப்படி நடக்கிறது. அதனால் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தால் எந்த தப்பும் நடக்காது என்று சொல்லுவார்கள்.

11 மணிக்கு ஏன் போச்சு என்பதற்கும் , வீட்டை விட்டு வெளியே ஏன் போச்சு என்பதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

அதனால், இதெல்லாம் ஒரு காரணம் என்று சொல்லுகிறவர்கள் உலக மகா பிற்போக்குவாதிகள்.

சுதந்திர இந்தியாவில் எந்த ஒருவரும், எந்த நேரத்திலும், எந்த பொது இடத்திற்கும் போக உரிமை உண்டு.

கரெக்டுதானே? Mr. வால்.

Unknown said...

நம்மொட நல்ல எழுத்துக்களை நடுவுல நாற வெக்காதிங்க..... சூப்பரா இருஇந்தது

Unknown said...

நம்மொட நல்ல எழுத்துக்களை நடுவுல நாற வெக்காதிங்க..... சூப்பரா இருஇந்தது

Thuvarakan said...

டிரைவர் அல்லது கண்டக்டர் கூடவா பார்க்கவில்லை.......கடைசி போலீஸ்க்கு கால் பண்ணக் கூட முடிந்திருக்காத என்ன......? உப்புச் சப்பில்லாத விசயங்களுக்கெல்லாம் மணிக்கணக்கில் மொக்கை போடும் இந்த கேடு கேட்ட சமூகம்...... இதையும் கூட மறந்தே போகும்??????

கல்வெட்டு said...

வால் நல்லா சிறப்பா எழுதியிருக்கீங்க‌

வால்பையன் said...

@ துவாரகன்

இந்த கொடுமையை பண்ணதே டிரைவர் மற்றும் அவனுடய சகாக்கள் தான்.

அது காலேஜ் பஸ், இரவில் எதோ பஸ் வருதுன்னு கையை காட்டியிருக்காங்க, ஏறி டிக்கெட்டெல்லாம் கேட்டிருக்காங்க.

அது ஒரு ஸ்கூல் பஸ்ஸுன்னு கேள்விபட்டேன், அவனையெல்லாம் நம்பி ஸ்கூல் குழந்தைகளை அனுப்பினால் என்னாவது!

வால்பையன் said...

@ கல்வெட்டு

நன்றி தல!

இப்பெல்லாம் கோவம் வந்தா தான் எழுதவே உட்கார்றது!

Anonymous said...

இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

பட்டிகாட்டான் Jey said...

வால் வன்புணர்வு குற்றம், கொலைக்குற்ரத்தைவிட கொடூரக் குற்ரமாக கருதி , அதற்கான தண்டனையும் கடுமையாக்கப்படனும்.

எந்த விதத்திலும் இந்த குற்றம் மன்னிக்கப்பட முடியாத குற்றம். தண்டனையும் மூர்க்கத்தனமாகவே இருக்கவேண்டும்.

பட்டிகாட்டான் Jey said...


இந்த கூட்டத்தில் ஒரு மைனர்குஞ்சும் இருப்பதாக படித்து கவலைதான் மிஞ்சுகிறது :-(((

அகலிக‌ன் said...

போனவாரம் விஞ்ஞானி டாக்டர் அனிதா சுக்லா ங்கற பிரகஸ்பதி " அந்த மாணவி தன்னை 6 பேர் சூழ்ந்தவுடன் அவர்களிடம் சரணடைந்திருந்தால் இந்நேரம் அவரது குடல் தப்பித்திருக்கும் "என்று கூசாமல் சொல்லிருக்கிறார் பெரிய பொருப்பிலிருப்பவர்களும் படித்தவர்களுமேகூட ஆணின் தவறுகளை சுட்டிக்காட்ட ஏனோ தயங்குகிறார்கள்?

willswords m said...

வளம்கொழிக்க மணவாழ்க்கைஓர் வழியாம்என ஆண்களிப்பில்,
வலைப்போட்டு மான்போல் துள்ளும்மீன் ஒன்றைப் பிடித்து,
விலைப்பேசி வெள்ளித்தட்டில் நிச்சயிக்கும்அத் திருமணமோ,
புழுக்கோர்க்கும் புண்நிகழ்வே! சாதியோ முள்தூண்டில்,
துளைத்திடும் மதமோ துணைவியைக் கழுவேற்றிடும் கம்பம்!


மணம்கண்ட கன்னிதன் மானம்போய் சீரை, [சீர் வகையை]
தினம்எண்ணி தேய்வதற்கே சாதி!

ஊடி வளைஉடைய உள்ளம் முயங்கவில்லை!
தேடிக்கல் யாண சிறையுள் புகுந்துமனம்...
வாடிவர தட்சணைத்தீ வாட்டமாண் டிட்டதே!
கூடி மகிழாக் குயில்!

தரதட் சணைகேட்டு தாரத்தை தீய்க்கும்
திருடன் கணவனே அல்ல!

வரதட் சணைசாதி மாமிகள்முன் பாவம்
குரங்குகை பூமாலைப் பெண்.


பணம்பெருள் வெறியற்ற பண்பாள னைத்தேர்ந்து,
குணமுள்ளஅம் மானுடனைக் குவலயமாய் காதல்செய்!
இனத்தீமை* சாதிதாண்டி மணம்புரி; பெண்ணே!- கனி
வனம்போல் வாழ்வாய் தேசஒற்றுமையும் சேர்த்து!* இனத் தீமை - பெண்ணடிமை, வரதட்சணை
சீர்தனம் வன்கொடுமைகள்

Web site names / addresses :
1) Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in
2) Willswords Tamil Twinkles
http://willsindiastamil.blogspot.com
3) Willswords English Twinkles
http://willswordsindiatwinkles.blogspot.in
4) Willswords India Twinkles
http://willswordstamil.blogspot.com
5) Willswords Sparrows Garden

Stay smile said...

கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது :( staySmile :)டாக்டர் எனக்கு ரயில் ஓடுற சவுண்டு கேட்டாலே, தூக்கம்
வந்துடுது..!

அதனாலென்ன, அப்படியே ஒரு தூக்கம் போட்டுடுங்க…!

சரிதான். அப்புறம், இந்த ரயிலை யார் டாக்டர் ஓட்டறது..? :(

சொறியார் said...

@வால்பையன்
மனுஷ்யபுத்திரனை சவுதி சிறுமி கொலை வழக்கில் கண்டனம் சொனனர் என்ற காரணத்துக்காக பி ஜே கும்பல் அவரை ஆபாசமாக வசை பாடியுள்ளது.
நீங்களும் ராஜனும் பி ஜே வை தோலுரித்ததை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.இப்போது அது பற்றி ஒரு பதிவை எழுதுங்கள் பாஸ்

நம்பள்கி said...

அமுதா கிருஷ்ணா அவர்களுக்கு!
[[மூன்று டாஸ்மாக்குகள். இருட்டிய பின் அந்த ரோடில் இது வரை தனியே போனதே இல்லை.மதுவிலக்கு வந்தால் தான் நாங்கள் தைரியமாய் எந்த நேரத்திலும் வெளியில் போக முடியும்.]]

நீங்கள் நினைப்பது தவறு; குற்றம் டாஸ்மாக்கினால் இல்லை; நம்ம பங்காளிகள் தான் குற்ற்வாவிளிகள்.

சென்னை பல்லவன் பஸ்ஸில் சென்ற பெண்களை மாணவிகளை ஒரு தடவை கூட கசக்காமல், குதிரை ஏறாமல் இருந்தததா கேள்விப் பட்டதேயில்லை ( late 70 early 80 களில்);

அமெர்க்காவில் ஏன் பஸ்களில் கூட பெண்களை கச்க்குவதில்லை? பழி டாஸ்மாக் மேலே போடுவதை விட, நம்ம மக்கள் மீது போடுவதே சரி.

டாஸ்மாக்கை எடுத்து பெண்களை காப்ற்ற்லாம்; பஸ் வசதியையும் எடுத்து விடலாமா? அங்கு நாடாகும் பாலியல் வக்கிரங்களுக்கு?

ஏன் மேலை நாடுகளில் ஒரு பெண் அருகில் உக்காந்தாலும்...அவள் முழுவதும் அவுத்துப் போட்டு உக்கந்தாலூம் ஏன் எவனும் அந்த பெண்ணின் துணியை கூட தொடுவதில்லை! இது இங்கு எல்லா வயதினருக்கும் பொருந்தும்.!ஏன் இந்தியர்கள் மாதிரி பெண்களை சீண்ட தைரியசாலிகள் இங்கு இல்லை-காரணம் ஜெயில் களி, sorry beef.

இந்தியரகளை இங்கு வந்து விளையாடசொல்லுங்கள்...ஒவ்வொரு சீண்டலுக்கும் மூன்று வருடம் போட்டு தாக்கிவிடுகார்கள்!

ஆகவே, தவறு நாம் நாட்டு மக்கள் மீது...அவர்கள் இயற்றும் சட்டம் மீது...மக்கள் செய்யம் ஊழல் மீது..டாஸ்மாக் மீது இல்லை.

!

Blog Widget by LinkWithin