பெட்ரோல் பங்க் - எச்சரிக்கை!

கச்சா எண்ணைய் பீப்பாய் விலை வீழ்ந்தாலும், டாலுருக்கு நிகரான ருபாயின் மதிப்பு உயர்ந்தாலும் குறையாமல் நம் வயித்தெரிச்சலை கொட்டி கொண்டிருப்பது பெட்ரோல் விலை.  சிலபேர்லாம் இருக்காங்க, பெட்ரோல் விலை ஏறுனா என்னாங்க நான் எப்பவும் நூறு ருபாய்க்கு தான் போடுவேன்னு. சிலர் விலையேற்றத்தினால் கடுப்பானாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அது காலத்தின் கட்டாயம் என்பார்கள், அது யாருன்னு சொல்லவே வேண்டியதில்லை, ஆளுங்கட்சியினர் தான் அவர்கள்!

பெட்ரோல் விலையை பற்றி பேசிட்டு பெட்ரோல் பங்க் எச்சரிக்கைனு தலைப்பு வச்சிருக்கேனேன்னு பாக்குறீங்களா? விலையேற்றம் நம்மால் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது இந்த முதலாளித்துவ திருநாட்டில், ஆனால் பெட்ரோல் பங்கில் ஏமாறுவதையாவது தடுக்கலாமே எனத்தான் இந்த பதிவு!

நான் படித்து முடித்தவுடன்(ஆமா, அப்படியே மாஸ்டர் டிகிரி முடிச்சிட்டாரு) சென்ற வேலை பெட்ரோல் பங்க் தான், மூணு மாதம் பெட்ரோல் அடித்து கொண்டிருந்தேன், பிறகு பம்ப் கேஷியர், பிஸியான பங்குகளில் ரெண்டு, மூணு பம்ப் இருக்கும், ஒவ்வொன்றிற்கும் பேருந்து நடத்துனர் மாதிரி பை மாட்டி கொண்டு ஒரு கேஷியர் இருப்பார், அந்த பம்பில் ஆகும் வரவு செலவுக்கு அவர் தான் பொறுப்பு. உள்ளே சின்னதாக ஒரு மீட்டர் இருக்கும், ஒரு கேஷியரிடமிருந்து இன்னொருவர் மாறும் பொழுது அதை ரீடிங் எடுத்து அதை வரை ஓடிய ரீடிங்குக்கு அந்த கேஷியர் பணம் கட்ட வேண்டும்.

10-15 வருடங்களுக்கு முன்னர் அனலாக் மீட்டர் டைப் பம்புகள் தான் இருந்தன, அங்கே பெட்ரோலில் ஏமாற்றுவது கடினம், இரண்டு சக்கரவாகனங்களுக்கு  ஆயில் போடுவதில் ஐந்து, ஐந்து மில்லிகளாக தேத்தி அன்றைய செலவுக்கு பார்த்துக்கொள்வார்கள். எப்போதாவது சில அப்பாடக்கர்கள் காரில் இருந்த வாரே சாவி கொடுத்து, இவ்ளோ அடி, அவ்ளோ அடி என்பார்கள். ஏற்கனவே எதாவது பைக்குக்கு அடிச்சிகிட்டு இருந்தா அப்படியே பம்ப் ஆஃப் செய்யாமல் அப்படியே காருக்கு கண்டினியூ ஆகும். ரெண்டு லிட்டராவது கோவிந்தா. கார் வைத்திருக்கும் நண்பர்கள் அப்பாடக்காராக இல்லையென்றால் ஒழுங்காக இறங்கிப்போய் பெட்ரோல் போடுவது நல்லது. ஆனால் இப்போதிருக்கும் டிஜிட்டல் மீட்டரில் இன்னும் கவனம் தேவை!

ரேட்டை பிக்ஸ் செய்து அடிக்க சுலபமான ஒன்றாகத்தான் அது வந்தது, ஆனால் அதில் கூட இப்படி ஏமாற்ற முடியும் என கண்டுபிடிக்க தமிழனால் மட்டுமே முடியும் போல, டிஜிட்டல் பம்பில் இரண்டு மீட்டர் இருக்கும், ஒன்று ரேட்டை ஃபிக்ஸ் செய்வதற்கு அது மேலே இருக்கும், மற்றொன்று எவ்வளவு  அடித்திருக்கிறார்கள் என நாம் அறிவதற்கு, நல்லாத்தானே இருக்கு அதிலென்ன சிக்கல் என்று கேக்குறிங்களா?பெட்ரோல் அடித்து கொண்டிருக்கும் பொழுதே உங்களிடம் ஒருவர் பேச்சு கொடுப்பார், அடுத்த விநாடி பெட்ரோல் அடித்து முடித்து நாஸில் வெளியே எடுக்கப்படும், மீட்டரை பார்த்தால் நீங்கள் எவ்வளவு கேட்டீர்களோ அவ்வளவு காட்டும், ஆரம்பித்தில் நான் கூட சரியாகத்தான் அடித்திருப்பார்கள் என நினைத்து கொண்டிருந்தேன், இன்னொரு பங்கில் கவனிக்கும் பொழுது தான் எவ்வளவு அடித்திருக்கிறார்கள் என கீழே உள்ள மீட்டரிலும் தெரிய வேண்டும் என்பதை அறிந்து கொண்டேன்.

நம்மிடம் பேச்சு கொடுத்து கொண்டிருக்கும் பொழுதே, மற்றொரு நபர் பம்பை ஆஃப் செய்து விடுவார், மீண்டும் ஆன் செய்தால் அதாவது அந்த நாசிலை வைத்து எடுத்தால் பம்ப் ஆன்  - ஆஃப் ஆகிவிடும், அந்த இடத்தில் கையை அழுத்தி வைத்து எடுத்தால் பம்ப் ஆஃப்-ஆன் ஆகிவிடும், அப்பொழுது நமக்கு அடித்தது போய், எவ்வளவு நாம் அடிக்கச்சொல்லி அவர்கள் செட் செய்தார்களோ அது தெரியும். ”டே சோனமுத்தா, போச்சான்னு” மனசுக்குள் நினைச்சிகிட்டு வரவேண்டியது தான்!

சரி, ஏமாறாமல் இருக்க என்ன செய்யலாம்.

1. பெண்கள் இருக்கும் பங்குகளை தேர்தெடுங்கள், அங்கே ஏமாற்றுவதில்லை.

2.பெட்ரோலோடு ஆயில் அடிக்கும் பம்ப் இருக்கும் பங்குகளில் கொஞ்சம் நேர்மையாக இருக்கிறார்கள், ஆயில் தனியாக ஊற்றினால், ”கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா” கதை தான், நீங்கள் ஒரே இடத்தில் இரண்டு முறை ஏமாற்றப்படுவீர்கள்.

3. யார் என்ன பேச்சு கொடுத்தாலும் மீட்டரை விட்டு கண்ணை எடுக்காதீர்கள், மறைத்தால் தள்ளுங்க என உரிமையோடு சொல்லுங்க.

4.விலையை முன்னரே தீர்மானிக்க பொத்தானை அழுத்தினால் வேண்டாம்னு சொல்லுங்க, அப்படியே அடிங்க, அதிகமாகிட்டா நான் காசு தர்றேன்னு சொல்லிடுங்க, இதில் எந்த கொம்பனாலும் ஏமாற்ற முடியாது.

5.எல்லா பங்குகளிலும் சேல்ஸ் ஆபிஸர் நம்பர் இருக்கும், நீங்கள் ஏமாற்றப்பட்டது போல் அறிந்தால் அந்த நம்பரை பார்த்து மொபைலில் டயல் செய்யுங்கள், அலறி அடிச்சிகிட்டு வருவானுங்க.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் டிப்ஸ்

எதுக்கு அவ்ளோ கஷ்டம், பைக்கை வித்துட்டு சைக்கிள் வாங்கிகோங்க, எவன் வந்து நம்மை ஏமாத்துறான்னு பார்த்துடுவோம்!

11 வாங்கிகட்டி கொண்டது:

வெளங்காதவன்™ said...

//
எதுக்கு அவ்ளோ கஷ்டம், பைக்கை வித்துட்டு சைக்கிள் வாங்கிகோங்க, எவன் வந்து நம்மை ஏமாத்துறான்னு பார்த்துடுவோம்!///

செம செம செம...

அகல்விளக்கு said...

உபயோகமான தகவலுக்கு நன்றி தல...

பால.சரவணன் said...

உண்மைலே! இது நல்ல விஷயம். இதை முன்னாடியே சொல்ல கூடாதா நண்பா ! எனக்கு அப்பவே சந்தேகம் வந்துச்சு !

vasu balaji said...

thanx for the tips

Unknown said...

எதுக்கு அவ்ளோ கஷ்டம், பைக்கை வித்துட்டு சைக்கிள் வாங்கிகோங்க, எவன் வந்து நம்மை ஏமாத்துறான்னு பார்த்துடுவோம்!

:) :)

Yaathoramani.blogspot.com said...

அவசியம் அனைவரும் அறிந்து
வைத்திருக்கவேண்டிய தகவலை
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

எல் கே said...

சில இடங்களில் நடக்குது தல...

Maximum India said...

வணக்கம் தல! டிப்சுகளுக்கு நன்றி!

Dino LA said...

மிகச் சரியான அலசல்

Unknown said...

நல்ல பயனுள்ள பதிவு.....

அதியா வீரக்குமார் said...

பயனுள்ள பதிவு நண்பா....

!

Blog Widget by LinkWithin