மனிதனுக்குள் மிருகம்!

பொது சமூகப்பார்வையில் சில செயல்கள் குற்றங்களாக பார்க்கப்பட்டாலும், நான் எல்லாம் செயல்களுக்குக்கும் எதாவது ஒரு தூண்டுகாரணி இருக்கும் என நம்பி கொண்டிருந்தேன்! அப்படியும் ஆதியிலிருந்து என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விசயம் ”குழந்தை பாலியல் வன்முறை”, சென்னையில் நடந்த "good touch, bad touch" நிகழ்ச்சியில் என்னால் கலந்து கொள்ள முடியாவிட்டாலும், நண்பர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை சொல்லி போக சொல்லியிருந்தேன், மதுரையில் நடந்த பொழுது கொஞ்சமேனும் அதன் பொருட்டு விழிப்புணர்ச்சி ஏற்ப்படுத்த முடிந்ததே என்ற மகிழ்ச்சியும் இருந்தது!

ஆனால்!..........


நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள், அவையெல்லாம் போதாது என நமக்கு சொல்லி கொண்டே தான் இருக்கின்றன!, கோவை சம்பவம் பற்றி தான் பேச வருகிறேன் என்று நினைக்கலாம், இருங்கள் அதற்கு முன் இன்னொரு கொடுர சம்பவத்தை சொல்ல வேண்டியிருக்கிறது!, நண்பர் அனுப்பிய அந்த மெயிலை பார்த்த போது எனக்கு உடம்பெல்லாம் பதறிவிட்டது, மூன்று மாத குழந்தைக்கு தகப்பன் என்று மட்டும் இல்லாமல் ஒரு மனிதனாக கூட என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை, அந்த சம்பவம்!...பெண் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் மிகவும் அதிகரித்து விட்டது,கொடுமையிலும் கொடுமை. கோவையில் கடத்திக் கொல்லப்பட்ட இரு குழந்தைகளில் மாணவியின் உடல் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், அவளும் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்ததுள்ளார் என்பது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிந்திருக்கிறது.
உடல் நடுங்கிப் போகிற இன்னொரு விஷயம். இது நாளிதழ்களில் வராதது. எனக்குத் தெரிந்தவரின் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்று அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்திருக்கிறார்கள். அவருக்கு அருகாமை பெட்டில் உள்ள அம்மா இரண்டு மூன்று நாட்களாக தொடர்ந்து அழுது கொண்டே இருந்திருக்கிறார். இவர் குழந்தைக்கு என்ன ஆயிற்று என்று கேட்க அவர் சொன்னது அதிர்ச்சியின் உச்சம்.
அவரின் பெண் குழந்தை, ஒன்றிரண்டு நாளாக வாந்தி, பேதி என்று அவதிப்பட்டிருக்கிறது. பயந்து போய் மருத்துவமனைக்கு கொண்டு வந்து, பரிசோதனைகள் செய்தபோது,குழந்தையின் உணவுக்குழாய்க்குள் ஆணின் விந்தணு இருந்திருக்கிறது. எவனோ ஒரு கிராதகன் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் வாய்க்குள்.....
******************************************
அந்தக் குழந்தைக்கு மூணு மாசம்! மூணு வயசில்ல.. மூணு மாசம்தான்!
வாய்லயே எவனோ அவன் உறுப்பை திணிச்சு....
அவனும் மனுஷ ஜென்மம், நானும் மனுஷ ஜென்மன்னு நெனைக்கவே கூசுது..


 *****************************

எனக்கு மட்டும் அவன் யாரென்று தெரிந்தால் அடித்தே கொன்னு போட்ருவேன்!, கோவை என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக சில நண்பர்கள் பதிவிட்டிருப்பதாகவும், அது தவறு என சிலர் சொல்லியிருப்பதாகவும் கேள்விப்பட்டேன்!, மனிதநேயம் காக்க அவர்கள் பேசியிருக்கலாம், ஆனால் அது தான் உண்மையில் மனித நேயமா!?

பொருள் சார்ந்த சமூகம் ஒருவனை தவறான வழியில் பொருள் சேர்க்க உந்தியிருக்கலாம், முடிவில் மாட்டிக்கொள்வோமோ என கொலையும் செய்திருக்கலாம், ஆனால் ஏன் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தான், அவன் விசாரணையின் போது ஜாமினில் வந்து மீண்டும் அதே போல் ஒரு சம்பவம் செய்ய மாட்டான் என்பது என்ன நிச்சயம்!

மொத்த குழந்தைகளின் நலன் கருதி அவனை கொன்றதே என்னை பொறுத்தவரை சரியான மனித நேயம்!, அம்மாதிரியான மனிதர்களால் இச்சமூகத்திற்கு ஒரு நன்மையும் இல்லை. நானாக இருந்தாலும் அதை தான் செய்திருப்பேன்!, அவர்களாவது சுட்டு கொன்றார்கள், நானாக இருந்தால் அடித்தே கொன்றிருப்பேன்!

44 வாங்கிகட்டி கொண்டது:

சம்பத் said...

நன்றாக சொன்னீர்கள் பாஸ்..இது போன்ற அட்டகாசங்களுக்கு தகாத உறவை தூண்டும் மஞ்சள் பத்திரிக்கைகளும் காரணமாக இருக்கலாம் என்பது என் கருத்து..

Thekkikattan|தெகா said...

சரின்னே வைச்சிக்குவோம், வால். அதில பாருங்க இப்போ பரபரப்பு குறைஞ்சி சுத்தமா மக்கள் மறக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா, இன்சிடன்ஸ் தொடர்ந்து நடந்திட்டேதான் இருக்கப்போவுது.

ஆனா, இதற்கு நிரந்தரமான விழிப்புணர்வு எப்படி கொண்டு வர முடியும்? அந்த பாதகனை கொஞ்ச காலம் வைச்சு அவனேயே சுட்டிக்காட்டி ஞாபகப் படுத்தி படுத்தி மக்களிடத்தே விசயத்தை கொண்டு போயி சேர்க்கிறது... என்னவோ, எனக்கு லாங்க்டேர்ம் க்கு கொஞ்சம்
உதவலாமோன்னு தோணுது!

அப்படியே இவங்க எழுதினவங்களோட ஆதங்கத்தையும் ஒரு பார்வை பாருங்க...

http://akilawrites.blogspot.com/2010/11/blog-post.html

ப.கந்தசாமி said...

அக்கிரமம்.

smart said...

// கோவை என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக சில நண்பர்கள் பதிவிட்டிருப்பதாகவும், அது தவறு என சிலர் சொல்லியிருப்பதாகவும் கேள்விப்பட்டேன்!, மனிதநேயம் காக்க அவர்கள் பேசியிருக்கலாம், ஆனால் அது தான் உண்மையில் மனித நேயமா!?//
உங்கள் விவாதம் சரிதான் தல ஆனால் என்கவுடருக்கு ஆதரிக்கிறோம் என்று போலீஸ் அராஜகத்தை ஆதரிக்கக் கூடாதல்லவா? இங்கே கோவை சம்பவத்தில் மனித நேயம் என்று பார்த்து என்கவுண்டரை எதிர்க்கவில்லை. ஆனால் சுய நலத்திற்காக என்கவுண்டர் செய்ததாகத் தான் அதை எதிர்ப்பவர்களின் பார்வை.
என்கவுண்டர் மிக அருகில் திட்டமிட்டு எதோ எதிர்பார்த்து கிடைக்காததால் சுடப்பட்ட தாக சந்தேகம் வருகிறது.

சுய நலமில்லாத என்கவுண்டருக்கு நானும் ஆதரவுதான்.

Unknown said...

இந்த மாதிரியான ஆட்களைக் கொல்வதில் தப்பில்லை.

ஆ.ஞானசேகரன் said...

//அவனும் மனுஷ ஜென்மம், நானும் மனுஷ ஜென்மன்னு நெனைக்கவே கூசுது..
//

உண்மைங்க தல..... என்னையே அடித்துகொள்ள வேண்டும் போல இருக்கு....

suneel krishnan said...

அருண்
இந்த சுட்டியில் உள்ள காணொளியை நேரமிருந்தால் பாருங்கள் .
http://www.youtube.com/watch?v=jeOumyTMCI8

Maximum India said...

மிருகம் கூட இது போல தவறுகளை செய்யுமா என்பது சந்தேகமே. இவர்களை மிருகங்கள் என்று கூறி மிருகங்களை அசிங்கப் படுத்தி விடக் கூடாது.

நன்றி!

Unknown said...

மிருகங்கள் கூட இப்படி இருக்கிறதா தெரியலயே! இவனுகளை எல்லாம் மிருகம் என்று கூறுவது , அதுகளை கேவலப்படுத்திற மாதிரி! என்னதான் செய்வது??

Unknown said...

பாஸ்! எனக்கு ஒரு டவுட் என்னோட updates எல்லாம் உங்க dashboardல தெரியுதா? ஏதும் settings மாரிடுச்சான்னு தெரியல Plz let me Know.
(no response from my followers)

எண்ணங்கள் 13189034291840215795 said...

பரிசோதனைகள் செய்தபோது,குழந்தையின் உணவுக்குழாய்க்குள் ஆணின் விந்தணு இருந்திருக்கிறது. எவனோ ஒரு கிராதகன் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் வாய்க்குள்.....//

முடில வால்...

:(((((((((

எண்ணங்கள் 13189034291840215795 said...

சம்பத் said...

நன்றாக சொன்னீர்கள் பாஸ்..இது போன்ற அட்டகாசங்களுக்கு தகாத உறவை தூண்டும் மஞ்சள் பத்திரிக்கைகளும் காரணமாக இருக்கலாம் என்பது என் கருத்து..
//

சரியா சொன்னீங்க..

மஞ்சள் பதிவுகளும் தான்...:((

அவனுங்க வீட்டு பிள்ளைங்க பர்ரி நினைச்சா இப்படி எழுத தோணுமா?...

எவன் வீட்டு பிள்ளையோதானே..?..

:(

எண்ணங்கள் 13189034291840215795 said...

வெளிநாடுகளில் குழந்தைகளுக்கான சட்டம் மிக கடுமையாக உள்ளது...

பாதுகாப்பும்..

GEETHA ACHAL said...

படிக்கும் பொழுதே மிகவும் கஷ்டமாக இருக்கின்றது...இப்படி நடந்து கொள்வது எல்லாம் மனுசனே கிடையாது..மிருகம் கூட இப்படி நடந்து கொள்ளாது.....அதுவும் குட்டி குழந்தையிடம் இருந்து...

மங்குனி அமைச்சர் said...

அய்யோ தல என்ன கொடுமை இது ? படிக்கவே கஷ்டமா இருக்கு ...........

அமுதா கிருஷ்ணா said...

இப்படியும் நடக்குமா??தலைசுத்துது...

உமர் | Umar said...

மிகவும் கொடூரமான விஷயம். மனம் பதைபதைக்கிறது.

ஹரிஸ் Harish said...

இப்படியும் நடக்குமா..படிக்கவே கஷ்டமா இருக்கு..

ரிஷபன்Meena said...

கண்டிப்பா அந்த வீட்டில் இருக்கும் ஒருவனின் வேலையாய் தான் இருக்கும்.
உறவைப் பற்றி நினைக்காமல் அவனை பிடித்து உதைக்கனும். இப்படி ஒரு ஜென்மம் இருந்தால் என்ன செத்தால் என்ன ?

Anonymous said...

அதிர்ச்சியாக இருக்கிறது..உங்கள் கருத்து மிக சரி.

செல்வா said...

முதல் விஷயம் எல்லோரும் கேள்விப்பட்டது தான் .. ஆனா இரண்டாவது விஷயம் கொடுமையிலும் கொடுமை .. படிக்கும் போதே ரொம்ப கஷ்டமா இருக்கு .. அவுங்கலஎல்லாம் என்ன வேணா செய்யலாம் ..!

Anonymous said...

ஆனால் சுய நலத்திற்காக என்கவுண்டர் செய்ததாகத் தான் அதை எதிர்ப்பவர்களின் பார்வை//
அது எது வேணா இருக்கட்டும்...ஆனால் இது உடனே வழங்கப்பட்ட தீர்ப்பு...இதை ஆதரிக்கிறேன்

எல் கே said...

suttu thallanum

Anonymous said...

தகாத உறவை தூண்டும் மஞ்சள் பத்திரிக்கைகளும் காரணமாக இருக்கலாம் என்பது என் கருத்து//
நிச்சயமாக..நக்கீரனுக்கு இதில் முதலிடம் பெரிய பெரிய போஸ்டரில் படம் போட்டு விளக்கம் கொடுப்பது...சின்ன குழந்தைகளையும் எழுத்து கூட்டி படிக்க வைக்கும் கொடுமை...பஸ் ஸ்டாப் ,கடை வீதிகளில் விளம்பர போஸ்டர் படித்தாலே செக்ஸ் புக் படிப்பது போல...இருக்கிறது

சீனு said...

எனக்கென்னவோ இது போன்று நடப்பதற்கு காரணம், சர்வ சாதாரணமாக கிடைக்கும் ஃபோர்னோக்களே என்று. நாமெல்லாம் தும்பை விட்டு வாலை பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

சசிகுமார் said...

நண்பர்களே என்னுடைய இந்த பதிவிற்கு வந்து உங்களின் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
http://vandhemadharam.blogspot.com/2010/11/blog-post_18.html

உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து
சசிகுமார் (வந்தேமாதரம்)

தனி காட்டு ராஜா said...

நம்ப முடியவில்லை ...மிருகங்கள் ஏதும் இப்படி செய்வதாக தெரியவில்லை ...

வேறு ஏதேனும் காரணங்கள் இருகின்றனவா என்று ஆராய்வது நல்லது ...மூன்று மாத குழந்தை பெரும்பாலும் தாயின் அரவணைப்பில் தானே இருக்கும்...இல்லை என்றால் நெருங்கிய உறவினர் அருகில் இருக்க வாய்ப்பு உள்ளது .....?

//எனக்கு மட்டும் அவன் யாரென்று தெரிந்தால் அடித்தே கொன்னு போட்ருவேன்//

உணமையாக இருக்கும் பட்சத்தில் ....நீங்கள் சொல்லுவது கண்டிப்பாக சரி தான் ...

aravind said...

பெண்கள் குழந்தைப் பருவத்திலிருந்து வயதான காலம் வரை இப்படி பல துன்பங்களுக்கு ஆளாக வேண்டி உள்ளது. ஒரு முறை என் தோழி ஒருவரிடம் இது குறித்துப் பேசிக் கொண்டிருந்த போது, இது போன்ற பாலியல் தொல்லைகளை அவர் 5 வயதில் இருந்து இன்று வரை சந்தித்து வருவதாகக் கூறினார். அவருக்கு 5 வயது என்பது 20 வருடங்களுக்கு முன்பு. ஒரு முறை நெடும் பயணமாக மதுரையில் இருந்து பேருந்தில் அவர் வந்த போது எவனோ பின் சீட்டில் இருந்து எழுந்து வந்து இவரை தொந்தரவு செய்து விட்டு சென்றுள்ளான். திடுக்கிட்டு எழுந்த தோழி, நடத்துனரிடம் முறையிட்டதற்கு அவர் கூறிய பதில் 'விடும்மா..இனிமே எடதுவும் நடக்காம நான் பாத்துக்கிறேன்...எல்லாருக்கும் தெரிஞ்சா உனக்குதான் அசிங்கம்'...தைரியமான தோழி அது யார் என்று பார்த்து ஒரு வழி பண்ணி விட்டுதான் வந்திருக்கின்றார். ஆனால் பயணிகள் எல்லாரும் வெறுமனே வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றனர். என்ன கேவலமான சமுதாயம் இது? தப்பு செய்பவர்களை விட, அதை கண்டும் காணாமல் இருப்பவர்களைத் தான் செருப்பால் அடிக்க வேண்டும். இந்த லட்சணத்தில் பெண்கள் லாம் ரொம்ப ஓவரா முன்னேறிட்டாங்க என்று பேசுபவர்களை என்ன செய்வது?

எல்லாம் தெரிந்த, பலதும் படித்த பதிவுலக மேதைகளே, ஒரு பிரச்சனை என்று வரும்போது பெண்கள் என்றால் அது ஒன்றை மட்டுமே பயன்படுத்தி தாக்குவதை எங்கே போய் சொல்லி அழ?

ஆர்வா said...

அந்தபாவி மட்டும் கையில கிடைச்சான்னா.. மறுபேச்சே பேசாம வெட்டி போட்டுடணும்.. பாஸ்டர்ட்

ஆர்வா said...

மன்னிக்கனும்.. கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்.. அந்த வார்த்தையில் தவறு இருந்தால் நீக்கிவிடவும்

Prabu M said...

என்னால‌ முழுசா வாசிக்க‌க் கூட‌ முடிய‌ல‌....கொடூர‌ம்

vinthaimanithan said...

கொடூரம்.

அன்பரசன் said...

//நானாக இருந்தால் அடித்தே கொன்றிருப்பேன்! //

கண்டிப்பா தல.
இவனுங்கள போட்டுத்தள்றதுல தப்பே இல்ல.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அய்யோ....
தல இது மாதிரி விஷயங்களுக்கு ஒரு நிரந்தர நடவடிக்கை அரசு/மக்களிடமிருந்து அவசரமாகத் தேவை!

ungalsudhar said...

//நானாக இருந்தால் அடித்தே கொன்றிருப்பேன்! //

ரொம்ப சரி..! :( இந்த மாதிரி ஆளுங்களுக்காக " மனித உரிமை மீறல்"னு போராடுபவர்களை என்ன செய்வது..???

ungalsudhar said...
This comment has been removed by the author.
சி.பி.செந்தில்குமார் said...

நீங்க இவ்வளவு கோபப்பட்டு நான் பார்த்ததில்லைஅப்போ பிரச்சனையின் வீரியம் தெரியுது.ரொம்ப மோசமான தண்டிக்கப்படவேண்டிய மேட்டர் இது

Unknown said...

என்ன கொடுமை இது. படிக்கறதுக்கே கஷ்டமா இருக்கு.

துமிழ் said...

குழந்தைகளுக்கான பாதுகாப்பான சூழல் அமைப்பது பெற்றோர்களினதும் அரசினதும் கடமையாகும்.இங்கே சூழல் என்பது சுற்றுப் புறம் மற்றும் உளவியல் ரீதியான சூழலைக் குறிக்கும். வெளிநாடுகளிலே குழந்தை இருக்கும் அரை அது உறங்கும் தொட்டில் போன்றவை கூட
குழந்தைக்குப் பாதுகாப்பானதா என்று பார்த்து பார்த்து செய்வார்கள். அப்படியான ஒரு சூழலை அமைத்துக் கொடுக்க முடியாவிட்டால்
அரசாங்கமே குழந்தையை பொறுப்பெடுத்துக் கொள்வதற்கான சட்டங்களும் இருக்கின்றன.

paedophiliaகுழந்தை பாலியல் என்பது ஒரு மன நோய். அந்த நோயினால் குழந்தைகளுடனான உறவின் மீதே அதிகம் நாட்டம் காட்டுபாவர்கள்.
அது நம்மவர்களை விட வெளிநாட்டவர்களுக்கே அதிகம்.ஆனாலும் அங்கே அதற்கான சூழல் இப்போது இறுக்கமாகி கடுமையான
சட்டங்களும் ஏற்படுத்தப் பட்டு விட்டதால் இப்போது அவர்கள் இந்தியா ,இலங்கை போன்ற நாடுகளுக்கு படையெடுக்கிறார்கள்.

குழந்தை பாலியல் தொழில் இந்தியாவிலே எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வெளிநாட்டவர்களுக்கும்
இந்தியக் குழந்தைகள் மேலே அதிக நாட்டம் இருப்பதாகவும் தெரிவிக்கப் படுகிறது.

இந்தக் கொடுமையை நீக்க ஒருவனின் மரணம் போதாது...

அவனைக் கொன்றதை விட விசாரணைகளை தீவிரப் படுத்தி , உறுதிப் படுத்தி விரைவான தீர்ப்பு மூலம் தூக்கிலே போட்டிருந்தால்
நமக்கு இன்னும் பெருமையாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்..

சில வேலை அவனுக்குப் பின்னால் காரணமாக சில பெரிய மனிதர்கள் கூட இருந்திருக்கலாம்? அதுவே அவன் அவசரமாக
போட்டுத் தள்ளப் பட்டதற்கும் காரணமாக இருந்திருக்கலாம் அல்லவா?

இப்படி முக்கியமான ஒருவனை ஒழுங்காக விசாரித்து அவனோடு வேறு யாராவது இது போன்ற பாதகம் செய்யும் நபர்கள்
தொடர்பில் உள்ளார்களா என்பதை அறிய முன்னமே போட்டுத் தள்ளுவது நிறையப் பேர் தப்பித்துக் கொள்ள வழி செய்து கொடுக்கும்
அல்லவா?

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

பரிணாமத்தின் உச்சியில் இருக்கும் மிருகம் மனிதன். எல்லா மிருகத்திடமும், மனித நேயமும், நற்பண்பும், நாகரீகத்தையும் எதிர்ப்பார்ப்பது தவறு. அதனால் மனிதனாக வாழ தகுதியில்லாத மிருகங்களை அழிப்பது நலம்! ஆனால் இன்னொன்றும் யோசிக்கத் தோன்றுகிறது.... இவர்களை 'மிருகங்கள்' என்று அழைப்பது, மிருகங்களை கொச்சைப்படுத்துவது போலாகும் அல்லவா தல ?

RAVI said...

மனித உரிமை நேயமெல்லாம் கஷ்டத்துல இருக்குறவன காப்பாத்துறதுக்கு வந்துச்சு.
இங்க அதெல்லாம் உள்ள வரகூடாது.
உங்க கருத்து மிக அருமை.
இப்பிடி பண்ணாதான் குற்றம் குறையனும்னு யோசிக்கும்.
இல்லாட்டி நாடு இதைவிட சீரழிஞ்சுடும்.

சாமக்கோடங்கி said...

என்ன கொடுமை இது.. பச்சைக் குழந்தை அல்லவா..?? அதன் வாயில்.. ச்சே.. மனம் பதைக்கிறது...

அலைகள் பாலா said...

//அவனைக் கொன்றதை விட விசாரணைகளை தீவிரப் படுத்தி , உறுதிப் படுத்தி விரைவான தீர்ப்பு மூலம் தூக்கிலே போட்டிருந்தால்
நமக்கு இன்னும் பெருமையாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்..
//
repeat

வால்பையன் said...

//அவனைக் கொன்றதை விட விசாரணைகளை தீவிரப் படுத்தி , உறுதிப் படுத்தி விரைவான தீர்ப்பு மூலம் தூக்கிலே போட்டிருந்தால்
நமக்கு இன்னும் பெருமையாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்..
//
repeat//


இந்திய அரசியல் சட்டட்தின் மேல் அவ்வளவு நம்பிக்கையா!

இங்கே ஜனநாயகமா நடக்குது, பணநாயகமய்யா!

!

Blog Widget by LinkWithin