சுயசொறிதல்!......

ஒரு வாகனம் நிற்கும் போது அதன் வேகமுள் பூஜ்யத்தை காட்டும், இயக்கத்தின் பின் தான் அதன் வேகம் கூடிகொண்டே போகும், அதே போல் தான் மனித வாழ்க்கையும் பூஜ்ஜியத்தில் ஆரம்பித்து ஆர்வமும் அனுபவமும் வேகத்தை கொடுக்கும்!, ஆனாலும் சிலர் இருக்கும் இடத்தை விட்டு நகராமலே இருப்பது பெரும் ஆச்சர்யத்தை தரும் விசயம்! எப்படி தான் தன் சூழல் மற்றும் எதிர்காலம் குறித்த பிரக்ஞ்ஜை இல்லாமல் இருக்கிறார்களோ தெரியவில்லை!.


பிலாலின் நண்பன் ஒருவனுக்கு வேலை வாங்கி தரும்படி பிலால் கேட்டுக்கொண்டான், எனது மெயில் ஐடி கொடுத்து அவனது பயோடேட்டாவை வாங்கி நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன், அவ்வளவு தான் நானும் மறந்துவிட்டேன் அவனும் என்னிடம் கேட்கவில்லை, அவனும் வருவான், போவான். எந்தவித மாற்றமும் இல்லாமல் எப்போதும் போல் குடியும் குடித்தனமுமாக இருந்தான், அது அவனுடய பர்சனல், மேலும் எனக்கு அறிவுரை வழங்குவதோ கேட்பதோ பிடிக்காது என்பதாலும் நான் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை!, ஒரு மாதம் கழித்து கேட்கிறான், அண்ணா வேலை என்னாச்சுன்னு!

தம்பி, இந்த ஒரு மாசத்தில் வேற எதாவது வேலைக்கு ட்ரை பண்ணியா?

இல்லைங்கண்ணா!

வேற யார்கிட்டயாவது வேலைக்கு சொல்லி வச்சியா?

இல்லையே!

என்ன தான் பண்ணிகிட்டு இருந்த!?

நீங்க சொல்விங்கன்னு வெயிட் பண்ணிகிட்டு இருந்தேன்!

உனது சுயதேவைக்காக எப்போதும் அடுத்தவரையே நம்பி கொண்டிருப்பவனுக்கு நான் என்ன வேலை வாங்கி தருவது, கொஞ்சம் கூட முயற்சியே எடுக்காத உனக்கு வேலை வாங்கி கொடுத்தால் அந்த வேலையையும் நான் தான் போய் செய்ய வேண்டியிருக்கும், நான் ஏற்கனவே பிஸியாக இருப்பதால் வேற யாராவது வெட்டிப்பயலிடம் உனக்கு வேலை தேடி கொடுக்கச்சொல்!

என்று சொல்லிவிட்டேன்!............. சரிதானே!

*****************



வார ஆரம்பத்தில் ஒரு நண்பர் அழைத்திருந்தார், எனது வியாபார ரீதியாக நட்பு ஏற்பட்டு பின் நண்பராக மாறியவர், தற்பொழுது வியாபாரத்தை நிறுத்தி கொண்டாலும் நட்பு மட்டும் தொடர்கிறது, என்னை அழைத்தது ஈரோடு வருவதாக சொன்னார்! முதல் வார்த்தை வாங்க தல என்று சொல்லிவிட்டு தான் என்ன விசயம் என்றேன்!, சும்மா தான் நேர்ல சொல்றேன் என்றார்!, அந்நேரத்தில் எனது நண்பரின் தங்கை திருமணமும் இருந்தது, நண்பர்களில் தங்கியிருந்த விடுதிக்கே அழைத்து சென்று விட்டேன்!

நான் நிறுத்திவிட்டதால் அந்த நண்பரை அவர்களுடன் ஒட்டவைத்து விட்டு அவர்களின் ஆட்டத்தை வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருந்தேன்! கூத்தும் கும்மாளமுமாக 10 பேருக்கு நாலு ஃபுல்லு ஓடிவிட்டது, அனைவரும் மட்டையாக நமது நண்பர் மட்டும் தெளிவாக இருக்கிறார்! என்னய்யா பிரச்சனை என்றால், ஊரில் கடன் அதான் சொல்லாமல் கொல்லாமல் வந்து விட்டேன் என்கிறார்!

பிரச்சனையை எதிர்கொள்ளாமல் அதை விட்டு விலகி ஓடுவதால் பிரச்சனை திர்ந்துவிடுமா?, அதன் பின் ஊருக்கு போனாலும் அது அழியாத கரும்புள்ளியாக அது இருக்குமே என்றேன்.(இது அறிவுரையா!?)

என் நிலையில் இருந்து பார்த்தா தான் கஷ்டம் புரியும் என்றார்!

நான் கடந்த வந்த பாதையை சொல்லி அவரது போதையை இறக்க விருப்பமில்லை, சரி படுங்கன்னு சொல்லிட்டு நைட்டே ஆபிஸ் வந்துட்டேன்!, மறுநாள் மீண்டும் அவர் ஒரு ரவுண்டு முடிச்சிட்டு சாப்பாடெல்லாம் சாப்பிட்டு ஊருக்கு பஸ் ஏறினார்!

மறுநாள் மீண்டும் போன் பண்றார், நான் வர்றேன், இன்னும் ஒரு வாரம் அங்கே தங்கிக்கிறேன்னு!

அய்யா, உன் பிரச்சனைக்காக என்னையும் பிரச்சனையில் சிக்க வைக்காதே!, குடும்பத்தை விட்டு நண்பனை தலையில் வைத்து ஆடும் அளவுக்கு எனக்கு இன்னும் முற்றவில்லைன்னு சொல்லிட்டேன்!

சரிதானே!


********************

டிஸ்கி:அரிச்சது, அதான் சொரிஞ்சிகிட்டேன்!

39 வாங்கிகட்டி கொண்டது:

நசரேயன் said...

மொத வெட்டு

Unknown said...

நீங்க சொன்ன ரெண்டு பேருமே "கவனிக்கப்பட" வேண்டியவர்கள்.

Pradeep said...

:)கண்டிப்பாக சரிதான்
http://pmm-ppradeep.blogspot.com/2010/09/blog-post.html

நசரேயன் said...

//என்று சொல்லிவிட்டேன்!.............
சரிதானே!//

சரிதான்

இராகவன் நைஜிரியா said...

இரண்டு பேருக்குமே நீங்க சொன்னது மிகச் சரி. முடியாது என்று சொல்ல வேண்டிய நேரத்தில் முடியாது என்று சொல்ல தெரிய வேண்டும், அதற்கு தைரியமும் வேண்டும்.

நிகழ்காலத்தில்... said...

உங்களிடம் உள்ள மாற்றங்களை வரவேற்கிறேன்.

நிகழ்காலத்தில் சிவா

ரவி said...

+ ootttu

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

சரி!!!

Black Walnut Pearl said...

ரொம்ப நல்லா, சரியா சொன்னீங்க வால்!

கல்வெட்டு said...

.

"சரிதானே"

"சரிதானே"

என்று இப்படிப் பொதுவில் கேட்டால் என்னைப்போன்ற சொம்பு வியாபாரிகளுக்கெல்லாம் "ஆகா ஒரு அடிமை சிக்குனாண்டா" என்றுதான் தோன்றும்.

சொம்புடன் ஆலமர மண்டபத்திற்கு வருகிறேன். அங்கே பிராது கொடுக்கவும்.

கலெக்டர் ஆபிஸில் மனு எழுதித்தர ஆள்கள் உள்ளது போல் , மண்டபத்திலும் ஆட்கள் உண்டு. அவர்களிடம் செல்லாமல் நீங்களாக எழுது வைத்திருக்கவும்.

meet you there ya

sriram said...

அரிப்பு சரியா போச்சா??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்.

பி.கு : எனக்கும் நெறய கடன் தொல்லை இருக்கு, வேலையும் வேணும், உங்க போன் நம்பரும் அட்ரஸும் தர்றீங்களா??

அன்பரசன் said...

சரிதான் தல..

கல்வெட்டு said...

காட்சி 2:

லொகேசன்:

ஆலமரம் மண்டபம்

1.சொம்புடன் கல்வெட்டு

2.சுயமாக எழுதிய பிராதுடன் வால்

3.மற்றும் பல சொம்பிற்கு சொந்தக்காரர்கள் (பஞ்சாயத்து கேஸ் இல்லாமல் காலிச் சொம்புடன் உள்ளவர்கள்)

4. வாதி மற்றும் பிரதிவாதிக்கு பிராது எழுதிக் கொடுக்கும் மண்டபவாசிகள் பலர்.

==================


சொம்பு 1: நண்பரின் வேலை

ஒருவர் உங்களிடம் ஒன்றைச் செய்யச்சொல்லும்போது அதைக் குறித்தான உங்களின் திட்டமிடலும் ,அவரின் எதிர்பார்ப்பும் வேறுவேறாக இருக்கும்.

(i)தகவலாக / தெரிந்தால் சொல்லுங்கள் என்று ஒரு இரகம்.
(ii)"அவனிடம் சொல்லியாச்சுல்ல‌ எப்படியும் முடிச்சிருவான்" என்ற ஒரு இரகம்.

பலருக்கும் இப்படி இரண்டு வகையும் உண்டு. அதாவது உதவி கேட்கும் போது சிலரிடம் தகவலாகவும், குறிப்பிட்ட ஒருவர் அல்லது இருவரிடம் மட்டும் செய்தே ஆக வேண்டும் என்ற அளவில் கோரிக்கை இருக்கும்.

கோரிக்கை வைப்பவன் எப்படி வைத்தாலும், அதை ஏற்பவர் தனது நிலையைச் சொல்லிவிட வேண்டும்.

கிணற்றில் போட்ட கல்லாக இருக்காமல்... " அன்னைக்குச் சொன்னீங்கள்ள அதை பலருக்கு அனுப்பியுள்ளேன் வந்தால் சொல்றேன்" என்று சொல்லிவிட வேண்டும். இது கோரிக்கையை ஏற்றுக் கொண்டவரின் க‌டமை.

என்ன ஆனது என்று ஒருமாதம் வரை கேட்காமல் இருத்தல் தவறு. ஒரு தகவலுக்காக நினையூட்டலாக "என்ன ஆச்சு ?" என்று கோரிக்கையை வைத்தவர் கேட்டு இருக்க வேண்டும். அது அவரின் கடமை.

======

சொம்பு 2: கடன் பிரச்சனை.

நண்பர் வந்தால் என்ன ஏது என்று கேட்காமல் (குத்திக் கொடையாமல்) உபசரித்தது நல்லது. ( என்ன காந்தி செத்துட்டார?..நீங்க சரக்கை விட்டுட்டீங்களா? என்ன கொடுமை வால்? சரி விடுங்க ஈரோடு திருப்பூர் நிலத்தடி நீரே சரக்காக மாறி ரொம்ப வருசமாச்சு )

அதே சமயம் பிரச்சனைக்கு ஏதேனும் தீர்வைச் சொல்லி இருக்க வேண்டும் நீங்கள். தமிழ்ல் பதிவு வைத்துக்கொன்டு சொம்பில்லாமல் இருந்தால் எப்படி???

இப்படி தானுண்டு குடும்பம் உண்டுன்னு இல்லாம நண்பருக்கு ஒரு தீர்ப்பபைச் சொல்லுங்க.

கடன் தொல்லையால் அறிவாளி என்று நம்பிய பலர் தவறான முடிவை எடுத்துள்ளார்கள். உங்களிடம் அவர் முறையிடுவது அவருக்கு உங்களால் இயன்ற அறிவுரையைச் சொல்லி நல்லது நடக்க ஒரு வாய்ப்பு.

(அறிவுரை அவர் விரும்பும் பட்சத்தில் மட்டுமே.)

‍‍‍==

சொம்பு காலி ... ஜூட்


.

jothi said...

//எனக்கும் நெறய கடன் தொல்லை இருக்கு, வேலையும் வேணும், உங்க போன் நம்பரும் அட்ரஸும் தர்றீங்களா??//


சிரிப்புதான் வருது,..

ஹேமா said...

சொரி(றி)யிறதுக்கும் ஒரு பதிவா...கடவுளே வாலு !

marimuthu said...

நான் நிறுத்திவிட்டதால் அந்த நண்பரை அவர்களுடன் ஒட்டவைத்து விட்டு அவர்களின் ஆட்டத்தை வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருந்தேன்! நெசந்தானா வாத்தியாரே! உங்க மன உறுதிக்கு வாழ்த்துக்கள்!

SurveySan said...

நம்பி வந்தவங்களுக்கு முழுசா உதவி பண்ண வேண்டியது உங்க க்டமை. :)

cheena (சீனா) said...

அன்பின் வாலு

ராகவன் கூறியதை அப்படியே வழிமொழிகிறேன். இயலாதெனில் இயலாது எனக் கூறும் தைரியம் வேண்டும். உண்மை - அது இல்லாமல் தயவு தட்சண்யம் பார்த்து - இய்லாமல் போகும் போது கெட்ட பெயர் சம்பாதிக்கும் செயலைத் தவிர்க்க முயல்வோம்.

இரண்டாவது நிகழ்வு ..... நாலு ஃபுல் காலி யாகும் போது வால் விரதம் இருந்தது பாராட்டத் தக்கது.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

துளசி கோபால் said...

NO சொல்வது சுலபமில்லை.

ஆனால் சொல்ல வேண்டிய நேரத்தில் கட்டாயம் சொல்லியே ஆகணும்.

நல்ல வேலை செஞ்சீங்க.

பாராட்டுகள்.

Anonymous said...

இது தான் அருண்....இதை பாடமாகவும் கொள்ளலாம்...

Unknown said...

முதல் ஆளை நினைச்சா கோவம் கோவமா வருது. உலகமே இப்ப ஒரு ரிவர்ஸ்ல ஓடுற கன்வேயர் பெல்ட் மாதிரி. அதுல இருக்குற எடத்துலயே இருக்கணும்னா கூட ஓடிக்கிட்டே இருந்தாத்தான் முடியும். இதுல ஒண்ணுஞ்செய்யாம உக்காந்துட்டா? எங்கயோ கொண்டு போய் விட்டுடும்.

(நானா யோச்சிச்சு எழுதுனதுன்னு நினைக்காதீங்க. ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட்ல இருந்து சுட்டது)

ஜெயந்த் கிருஷ்ணா said...

சரிதான்...

சசிகுமார் said...

//ஒரு வாகனம் நிற்கும் போது அதன் வேகமுள் பூஜ்யத்தை காட்டும், இயக்கத்தின் பின் தான் அதன் வேகம் கூடிகொண்டே போகும்//

அட இது புது தகவலா இருக்கே நன்றி நண்பா

சசிகுமார் said...

//குடும்பத்தை விட்டு நண்பனை தலையில் வைத்து ஆடும் அளவுக்கு எனக்கு இன்னும் முற்றவில்லைன்னு//

சரியா சொன்னீர்கள் நண்பா. நீங்கள் சரி என்று சொல்லியிருந்தால் வேலில போறத எடுத்து எங்கையோ விட்டுகிட்ட மாதிரி இருந்திருக்கும்.

சசிகுமார் said...

//குடும்பத்தை விட்டு நண்பனை தலையில் வைத்து ஆடும் அளவுக்கு எனக்கு இன்னும் முற்றவில்லைன்னு//

சரியா சொன்னீர்கள் நண்பா. நீங்கள் சரி என்று சொல்லியிருந்தால் வேலில போறத எடுத்து எங்கையோ விட்டுகிட்ட மாதிரி இருந்திருக்கும்.

Romeoboy said...

என்னோட புதிய பதிவை படிச்சி பாருங்க என்னோட புலம்பலை.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

1.சரி .

//ஆடும் அளவுக்கு எனக்கு இன்னும் முற்றவில்லைன்னு சொல்லிட்டேன்!
சரிதானே!//
சரியில்லை.

idroos said...

சார் என்னதான் சொல்ல வர்ரீங்க

vinthaimanithan said...

நல்லாத்தாம்யா சொரியிறீங்க!

Unknown said...

எப்படி கரெக்ட்-ஆ எல்லோரும் உங்களையே தேடி வாரங்கன்னுதான் புரியலை... உங்ககிட்ட எதோ ஒரு விஷயம் இருக்கு தல...
அதனாலதான் நானும் ஒரு வாரம் வந்து டேரா போடலாம்னு இருக்கேன்.....பட் நான் அவனில்லை.

JaY Reborn @ Jaes said...

உண்மை அண்ணா...
நிதர்சனம்.
இதை நானும் என் வாழ்வில் அனுபவித்திருக்கிறேன்.

அப்போ..
எனக்கு ஒரு வேலை தயார் செய்ய முடியுமா ???
ஹிஹி.....

Anonymous said...

//நான் ஏற்கனவே பிஸியாக இருப்பதால் வேற யாராவது வெட்டிப்பயலிடம் உனக்கு வேலை தேடி கொடுக்கச்சொல்!
என்று சொல்லிவிட்டேன்!//

உங்கள விட்டா வேற யாரையும் தெரியாதாம்..

மங்குனி அமைச்சர் said...

நான் நிறுத்திவிட்டதால்///

என்ன தல ? ஏன்? என்ன ஆச்சு ?

Ashok D said...

சர்தான்ணா ;)

வால்பையன் said...

கடன் பிரச்சனை நண்பரை அவ்வாறு நிராகரித்தது தவறு என நண்பர்களுன் விவாதம் நடந்தது!

வந்தவர் ஒன்றும் சிறுவன் அல்ல! எனக்கு சமமான வயதுடையவர்! திருமணமாகாதவர், ஏற்கனவே சொந்தமாக தொழில் செய்தவர்! அவருக்கு அப்போதைய தேவை இரண்டு நாள் ரிலாக்ஸாக மட்டுமே இருக்கமுடியும்!

ரெண்டு நாளில் நான் கவனித்த கவனிப்பில் ஊறிப்போய் மறுபடி வர்றேன், வாங்கி ஊத்திவிடுன்னா நான் எங்கேப்போறது!?

எனக்கு இன்னும் முற்றவில்லை என்று ப்ளாக்கில் எழுதியுள்ளேன், நேரில் அமைதியான முறையில் எனது குரும்ப நிலவரம் சொல்லி, என்னால் முடியாது என மறுத்துவிட்டேன்!

இருப்பினும் நான் அவரை வரச்சொல்லி அவரை கவனித்திருந்தால் நாளை என்ன பிரச்சனை என்றாலும் நான் தான் கண்ணுக்கு தெரிவேன்! பிரச்சனையை சமாளிக்கும் திறன் வேலை செய்யாது! எனது நட்பை காட்டா ஒருவரை பலவீனமாக்க எனக்கு விருப்பமில்லை!

Kumky said...

தல.,

விடுங்க.விடுங்க...

நம்ம பாலிஸில்லாம் சொல்லி புரியவைக்க முடியாது.

தனி காட்டு ராஜா said...

//ஒரு வாகனம் நிற்கும் போது அதன் வேகமுள் பூஜ்யத்தை காட்டும், இயக்கத்தின் பின் தான் அதன் வேகம் கூடிகொண்டே போகும், அதே போல் தான் மனித வாழ்க்கையும் பூஜ்ஜியத்தில் ஆரம்பித்து ஆர்வமும் அனுபவமும் வேகத்தை கொடுக்கும்!,//

//நான் நிறுத்திவிட்டதால் அந்த நண்பரை அவர்களுடன் ஒட்டவைத்து விட்டு அவர்களின் ஆட்டத்தை வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருந்தேன்!//

வேகமுள் பூஜ்யத்தை காட்டி விட்டதா தல ...
இயக்கத்தின் பின் தான் அதன் வேகம் கூடிகொண்டே போகும் என்பதற்காக நிறுத்தி வைத்து உள்ளிர்களோ ????

Priya Magesh said...

ரொம்ப சொறிஞ்சிட்டிங்க போல.

RAVI said...

வால்பையன் சொன்னதுல இருந்து ஒன்னு புரிஞ்சுட்டேன்.
நான் அவனில்லை. :-)

!

Blog Widget by LinkWithin