அணு மின்சாரத்துக்கு ஒரு புத்திசாலியின் ஆதரவு!!

எனது அலுவலகம் இருக்கும் இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும்
டாஸ்மாக் கடையில் எனக்கு குடிக்க பிடிக்காது, அன்பு தொல்லைகளே அதற்கு காரணம். கொஞ்சம் தண்ணி, கொஞ்சம் சிப்ஸ் என்று நம் டேபிளில் இருக்கும் அனைத்தையும் காலி செய்து விடுவார்கள்.

ஒரு சாயங்கால வேளையில் இதமான குளிரில் கொஞ்சம் குடிக்கலாம் என்று தோன்றியது, நண்பர்களை அழைக்க என்னிடம் தொலைபேசி இல்லை. அந்த தொல்லை தொலைந்து விட்டது, வேறு வழியின்றி அந்த கடைக்கு சென்றேன், இம்மாதிரியான கடைகளில் இன்னொரு பிரச்சனை நாம் கேட்பது கிடைக்காது, அவர்கள் கொடுப்பதை நாம் வாங்கி கொள்ளவேண்டும்.

இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், இங்கேயே செல்வோம் என்று கிடைத்ததை வாங்கி உள்ளே சென்றேன், ஆச்சரியமான காட்சியாக உள்ளே ஒருவரும் இல்லை.
சந்தோசமாக அமர்ந்தேன், பார்மேனிடம் ஆர்டர் செய்தால் மேலும் மனஉளைச்சல். பழவகைகள் கிடையாது. ஜில்லென்று தண்ணீர் பாட்டில் கிடையாது. வேறு வழியின்றி தண்ணீர் பாக்கெட்டுகள் இரண்டு ஆர்டர் செய்து உட்கார்த்தேன்.

நான் எப்போதும் மிகவும் ரசித்து, ருசித்து குடிக்கும் பழக்கம் உடையவன். மிகவும் மெதுவாக குடித்து கொண்டிருந்தேன், ஒரு பெக் அடித்து விட்டு அடுத்து என்ன பதிவு போடலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் வேளையில், "தம்பி" என்று ஒரு குரல், சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் என்னருகில் நின்றார். கொஞ்சம் தண்ணி தற்ரிங்களா என்று பவ்யமாக கேட்டார்.

முதியவரின் தோற்றம் அவர் அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர் என்று அப்பட்டமாக காட்டியது, பாதி தண்ணீர் பாக்கெட்டும் காலியாக இருந்ததால் அவரிடம் கொடுத்தேன், பாட்டிலை திறந்த அவர் அதில் பாதியை ஒரு டம்ளரில் ஊற்றினார், அதில் கொஞ்சம் தண்ணீர். பாட்டிலில் இருந்த மீதி சரக்கில் கொஞ்சம் தண்ணீர், டம்ளரில் இருந்ததை மிக சாதரணமாக குடித்து கீழே வைத்தார். அதை பார்க்கும் பொது என்னையறியாமல் எனக்கு முகச்சுளிப்பு ஏற்பட்டது.

ஏன் பெரியவரே தண்ணீர் கொஞ்சம் சேர்த்து தான் குடிக்கலாமே என்றேன். என்னை தீர்க்கமாக பார்த்து கொண்டே பீடியை ஆழமாக உறிஞ்சினார். எனக்கு அப்போதே தெரிந்து விட்டது இங்கே ஒரு சொற்பொழிவு நடக்கப்போகிறது என்று.

"தம்பி உன்னையை மாறி தான் நானும் குடிச்சிக்கிட்டு இருந்தேன்.
ஆனா இந்த தண்ணியை ஊத்தி குடிக்கிறதுக்கு ராவாவே குடிச்சிரலாம்ன்னு தோனுச்சு, ஆனா குடிக்கவே முடியாதுன்னு இந்த தண்ணியை ஊத்திகிட்டேன்"

"என்னங்க கேட்டவுடனே கொடுத்ததுக்கு நக்கலா"

"அட உங்களை சொல்லல தம்பி. இந்த தண்ணியோட தரத்தை சொல்றேன்"

"ஒ, அத சொல்றிங்களா, என்னங்க பண்றது நாற்பது பைசா தண்ணீக்கு ரெண்டு ரூபா வாங்குறாங்க"

"அட காசு போனா பரவாயில்ல தம்பி, இந்த சக்கையை குடிச்சு எங்க சொரணை இருக்க போதுன்னு சொன்னேன்"

"சக்கையா"

"ஆமா, மழை தண்ணீ எவ்வளவு ருசியா இருக்கு, அது தானே ஆத்துல வருது, அதுக்கு நடுவுல மிசின போட்டு இருக்குற சத்தையெல்லாம் கரண்டா உறிஞ்சிட்டு வெறும் சக்கையை தானே அனுப்புறாங்க."

"கரண்ட உறிஞ்சுராங்க்களா."

"ஆமா தம்பி உங்களுக்கு தெரியாது.
இந்த அணுகுண்டு மின்சாரம்ன்னு பேப்பர்ல போடுறாங்கல்ல அது வந்தா தான் இந்த தண்ணிக்கு விடிவு காலம் பொறக்கும்."

"அது உண்மையிலேயே அணுகுண்டு மின்சாரம் தான், அது வந்தா நமக்கு சாவு மணி தான் அடிக்கும்."

"நீங்க படிச்சு என்னத்த கண்டிங்க, டெல்லில இருக்குற பெரியவங்கல்லாம் அது தெரியாமலா அதை செய்ய சொல்றாங்க."

"ஆனா விஞ்ஞானிகளே அது வேண்டாம்னு சொல்றாங்களே."

"அவனுங்க காசு வாங்கிருப்பாங்க தம்பி."

"ஏன், அரசியல்வாதிகள் காசு வாங்கிருக்க மாட்டாங்களா, அமெரிக்காகிட்டருந்து"

"தம்பி, நீங்க ஏட்டிக்கு போட்டியா பேசுறிங்க, உங்க அரை பாக்கெட் தண்ணிக்கு வேணா ஒரு ரூபா கொடுத்துறேன், இப்படியெல்லாம் பேசுனா ஊருக்குள்ள உங்கள பைத்தியம்ன்னு சொல்வாங்க, வரட்டுமா."



என்ன கொடும சார் இது...........

38 வாங்கிகட்டி கொண்டது:

புகழன் said...

\\
"ஆமா தம்பி உங்களுக்கு தெரியாது.
இந்த அணுகுண்டு மின்சாரம்ன்னு பேப்பர்ல போடுறாங்கல்ல அது வந்தா தான் இந்த தண்ணிக்கு விடிவு காலம் பொறக்கும்."
\\

அணுகுண்டு மின்சாரம் நல்ல வார்த்தை

புகழன் said...

தலைப்பைப் படித்ததும்
உங்களோட ஆதரவுன்னு தப்பா புரிஞ்சிக்கிட்டேன்.
வெரி வெரி ஸாரி

புகழன் said...

// ஒரு பெக் அடித்து விட்டு அடுத்து என்ன பதிவு போடலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் வேளையில்,
//

நீங்கள் பதிவெழுதும் ரகசியம் இப்பொழுதுதான் தெரிந்தது.

எப்படியோ பதிவு எழுதியாச்சில்ல.
நல்லாயிருங்க

நாங்கதான் பதிவு எழுத மேட்டர் இல்லாம தவிக்கிறோம்.

மங்களூர் சிவா said...

/
"தம்பி, நீங்க ஏட்டிக்கு போட்டியா பேசுறிங்க, உங்க அரை பாக்கெட் தண்ணிக்கு வேணா ஒரு ரூபா கொடுத்துறேன், இப்படியெல்லாம் பேசுனா ஊருக்குள்ள உங்கள பைத்தியம்ன்னு சொல்வாங்க, வரட்டுமா."
/

இன்னுமா சொல்ல ஆரம்பிக்கலை !?!?

:)))))))))))))))

கூடுதுறை said...

//"தம்பி, நீங்க ஏட்டிக்கு போட்டியா பேசுறிங்க, உங்க அரை பாக்கெட் தண்ணிக்கு வேணா ஒரு ரூபா கொடுத்துறேன், இப்படியெல்லாம் பேசுனா ஊருக்குள்ள உங்கள பைத்தியம்ன்னு சொல்வாங்க, வரட்டுமா."
என்ன கொடும சார் இது.......//

ஆஹா ஆஹா வால்பையன் புகழ் திக்கெட்டும் பரவுகிறது..

ஆனாலும் செம தைரியம்தான் வால்... வீட்டம்மா பதிவெல்லாம் படிக்க வசதி செய்துதரவில்லையா?

தருமி said...

வால்ஸ்,
//மழை தண்ணீ ... அதுக்கு நடுவுல மிசின போட்டு இருக்குற சத்தையெல்லாம் கரண்டா உரிஞ்சிட்டு வெறும் சக்கையை தானே அனுப்புறாங்க."

ஏதோ டாஸ்மாக் கடையில் ஒருத்தர் மட்டும் இதைச் சொன்னதாக நினைக்காதீங்க .. நம்ம நாட்டு உதவி பிரதமாரா இருந்த தேவிலால் இதையே ஒரு முறை சொன்னார்.

தண்ணியில் இருந்து கரண்டு எல்லாத்தையும் எடுத்திட்டா தண்ணில என்ன சத்து இருக்கும்; எப்படி அந்த தண்ணிய வச்சு விவசாயம் பண்றது என்று அந்த விவசாயப் புலி சொன்னார்.

அதெல்லாம் சரி .. அது என்ன //ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர்..//

ம்ம் .. இது ஒண்ணும் சரியில்ல'ப்பா! ஒரு இளைஞரைப் பார்த்து இப்படியா சொல்வது?

rapp said...

ஹா ஹா ஹா, சூப்பரோ சூப்பர், எளிமையாக, ஆழமான ஒரு கருத்தை சொல்லிருக்கீங்க வாழ்த்துக்கள்:):):)

Syam said...

//அது தானே ஆத்துல வருது, அதுக்கு நடுவுல மிசின போட்டு இருக்குற சத்தையெல்லாம் கரண்டா உரிஞ்சிட்டு வெறும் சக்கையை தானே அனுப்புறாங்க//

அந்த பெரியவர விடுங்க..இதே ஸ்டேட்மண்ட கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி துணை பிரதமரா இருந்தவரும் சொன்னார்....

g said...

குடிக்க போனா வாயை மூடிக்கிட்டு குடிக்கணும். இல்லாவிட்டால் இப்படிதேன்.

ginglee said...

MudallA thanniya niruthunga ellam sari aaguidum...AZAD

ginglee said...

நீங்க திருந்தவே போறதில்லை..

Anonymous said...

சூப்பரப்பு

Unknown said...

சூப்பரப்பு

வால்பையன் said...

//புகழன் said...
அணுகுண்டு மின்சாரம் நல்ல வார்த்தை//

புகழன் அது நான் கண்டுபுடிச்ச வார்த்தையில்லை.
அந்த பெரியவர் சொன்னது

வால்பையன்

வால்பையன் said...

//புகழன் said...
தலைப்பைப் படித்ததும்
உங்களோட ஆதரவுன்னு தப்பா புரிஞ்சிக்கிட்டேன்.
வெரி வெரி ஸாரி//

பரவாயில்லை நண்பா!
புரிதலும், குழப்பமும் மனித இயல்பு தானே

வால்பையன்

வால்பையன் said...

//புகழன் said...
நீங்கள் பதிவெழுதும் ரகசியம் இப்பொழுதுதான் தெரிந்தது.
எப்படியோ பதிவு எழுதியாச்சில்ல.
நல்லாயிருங்க
நாங்கதான் பதிவு எழுத மேட்டர் இல்லாம தவிக்கிறோம்.//

நான் யோசிச்சது வேறு விஷயத்தை பற்றி
இது அதுவா வந்து விழுகுது நண்பா, நான் என்ன செய்ய

வால்பையன்

வால்பையன் said...

//மங்களூர் சிவா said...
இன்னுமா சொல்ல ஆரம்பிக்கலை !?!?
:)))))))))))))))//

நீங்க தான் ஆரம்பிச்சு வையுங்களேன்

வால்பையன்

வால்பையன் said...

// கூடுதுறை said...
ஆஹா ஆஹா வால்பையன் புகழ் திக்கெட்டும் பரவுகிறது..
ஆனாலும் செம தைரியம்தான் வால்... வீட்டம்மா பதிவெல்லாம் படிக்க வசதி செய்துதரவில்லையா?//

நன்றி கூடுதுறை,
ஆரம்பங்களில் எழுதிய சில பதிவுகளை படித்துவிட்டு, என்னை நல்ல மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க சொல்லியிருக்காங்க

வால்பையன்

வால்பையன் said...

///தருமி said...
நம்ம நாட்டு உதவி பிரதமாரா இருந்த தேவிலால் இதையே ஒரு முறை சொன்னார்.
தண்ணியில் இருந்து கரண்டு எல்லாத்தையும் எடுத்திட்டா தண்ணில என்ன சத்து இருக்கும்; எப்படி அந்த தண்ணிய வச்சு விவசாயம் பண்றது என்று அந்த விவசாயப் புலி சொன்னார்.
அதெல்லாம் சரி .. அது என்ன //ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர்..//
ம்ம் .. இது ஒண்ணும் சரியில்ல'ப்பா! ஒரு இளைஞரைப் பார்த்து இப்படியா சொல்வது?///

உண்மையிலேயே நம்ம பெருசுங்க்ள நினைக்கும் பொது புல்லரிக்குது சார்.

ஐம்பது வயசு பெரியவர்ன்னு சொன்ன முத்த பதிவர்களுக்கு ஸாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக்
மூத்த பதிவர்களுக்கு எப்படி கோபம் வருது பாருங்க


வால்பையன்

வால்பையன் said...

//rapp said...
ஹா ஹா ஹா, சூப்பரோ சூப்பர், எளிமையாக, ஆழமான ஒரு கருத்தை சொல்லிருக்கீங்க வாழ்த்துக்கள்:):):)///

நன்றி ராப்

வால்பையன்

வால்பையன் said...

//Syam said...
//அது தானே ஆத்துல வருது, அதுக்கு நடுவுல மிசின போட்டு இருக்குற சத்தையெல்லாம் கரண்டா உரிஞ்சிட்டு வெறும் சக்கையை தானே அனுப்புறாங்க//
அந்த பெரியவர விடுங்க..இதே ஸ்டேட்மண்ட கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி துணை பிரதமரா இருந்தவரும் சொன்னார்....//

துணை பிரதமர்
என்ன ஒரு அருமையான நாடு
அதற்கு எப்படி அரசியல்வாதிகள்.
இதற்கு மேலும் யாருக்காவது கடவுள் நம்பிக்கை இருக்குமா

வால்பையன்

வால்பையன் said...

//ஜிம்ஷா said...
குடிக்க போனா வாயை மூடிக்கிட்டு குடிக்கணும். இல்லாவிட்டால் இப்படிதேன்.//

வாய மூடிகிட்டு எப்படிங்க குடிக்கிறது.
காத வேணும்னா போத்திக்கலாம்

வால்பையன்

வால்பையன் said...

ஆசாத்!
நீங்க முதன் முதல ப்ளாக்குக்கு வர்ரிங்க. வரும்போது பெயரில் எப்படி ஒரு அடையாளமா?

மதத்தை பரப்ப நிறைய பேர் இருக்கிறார்கள், நாம் மனிதத்தை பரப்புவோம்

வால்பையன்

புதுகை.அப்துல்லா said...

ஆசாத்!
நீங்க முதன் முதல ப்ளாக்குக்கு வர்ரிங்க. வரும்போது பெயரில் எப்படி ஒரு அடையாளமா?

மதத்தை பரப்ப நிறைய பேர் இருக்கிறார்கள், நாம் மனிதத்தை பரப்புவோம்

வால்பையன்
//

ரிப்பீட்டுடுடுடுடுடுடுடு

வெண்பூ said...

// அதுக்கு நடுவுல மிசின போட்டு இருக்குற சத்தையெல்லாம் கரண்டா உரிஞ்சிட்டு வெறும் சக்கையை தானே அனுப்புறாங்க."

"கரண்ட உறிஞ்சுராங்க்களா."

"ஆமா தம்பி உங்களுக்கு தெரியாது.
இந்த அணுகுண்டு மின்சாரம்ன்னு பேப்பர்ல போடுறாங்கல்ல அது வந்தா தான் இந்த தண்ணிக்கு விடிவு காலம் பொறக்கும்."
//

சத்தமா சொல்லீடாதீங்க. இதையே சொல்லி ஓட்டு கேப்பாங்க...

வால்பையன் said...

//புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
ஆசாத்!
நீங்க முதன் முதல ப்ளாக்குக்கு வர்ரிங்க. வரும்போது பெயரில் எப்படி ஒரு அடையாளமா?
மதத்தை பரப்ப நிறைய பேர் இருக்கிறார்கள், நாம் மனிதத்தை பரப்புவோம்
வால்பையன்
//
ரிப்பீட்டுடுடுடுடுடுடுடு//

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே

வால்பையன்

வால்பையன் said...

வெண்பூ நீங்க சொல்றதும் சரி தான்.
எதை சொன்னாலும் நம்புவது தானே நம்ம மக்களின் குணமும் கூட

வால்பையன்

Anonymous said...

//நண்பர்களை அழைக்க என்னிடம் தொலைபேசி இல்லை. அந்த தொல்லை தொலைந்து விட்டது//

வால் அன்னிக்கி நீங்க என்னைக்கூப்பிட்டது உங்க போன்ல இல்லையா?

பார்க்க http://thandhi.blogspot.com
என்னைத்தெரியுமா?......ஆஆஆ நான் சிரித்து சிரித்துப் பேசிபழகும் ரசிகன் என்னைத்தெரியுமா?

வால்பையன் said...

//பெயர் சொல்லும் பிள்ளை said...
//நண்பர்களை அழைக்க என்னிடம் தொலைபேசி இல்லை. அந்த தொல்லை தொலைந்து விட்டது//
வால் அன்னிக்கி நீங்க என்னைக்கூப்பிட்டது உங்க போன்ல இல்லையா?
பார்க்க http://thandhi.blogspot.com
என்னைத்தெரியுமா?......ஆஆஆ நான் சிரித்து சிரித்துப் பேசிபழகும் ரசிகன் என்னைத்தெரியுமா?//

சென்னை செல்லும் பொழுது ரயிலில் தான் என் அலைபேசி தொலைந்தது,
மீண்டும் அதே என் வாங்கி விட்டேன்.
மன்னிக்கவும் நீங்கள் யாரென்று தெரியவில்லை.
என்னுடைய பழைய எண்ணுக்கே நீங்கள் அழைக்கலாம்.

எண் என்னுடைய மற்றொரு பிளாக்கில் கிடைக்கும்
http://tradeinmetals.blogspot.com/

வால்பையன்

Madurai citizen said...

என்ன ஒரு அருமையான நாடு, பதிவு

தியாகு said...

மச்சி எனக்கு ஒரு உண்மை தெரியனும் , சரக்கு அடிச்சிடு பேசுறத தெலிஞ்சாலே l எல்லாம் மறந்துடுவாங்க ஆனால் நி அடுத்த நாள் பதிவு எழுதுற ? எவ்ளோ அடிச்சாலும் ஒனக்கு ஏறாதோ இல்ல memory power a

வால்பையன் said...

//Madurai citizen said...
என்ன ஒரு அருமையான நாடு, பதிவு//

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே!
மதுரையில் நீங்க எந்த ஏரியா?

வால்பையன்

வால்பையன் said...

///தியாகு said...
மச்சி எனக்கு ஒரு உண்மை தெரியனும் , சரக்கு அடிச்சிடு பேசுறத தெலிஞ்சாலே l எல்லாம் மறந்துடுவாங்க ஆனால் நி அடுத்த நாள் பதிவு எழுதுற ? எவ்ளோ அடிச்சாலும் ஒனக்கு ஏறாதோ இல்ல memory power எ//

எனக்கும் ஒரு அளவு இருக்கிறது, அதை தாண்டும் பொழுது வீட்டுக்கு வண்டி கட்டி தான் அனுப்பனும், சமீப காலமாக அவ்வாறு நான் நடந்து கொள்வதில்லை.
மற்றபடி சராசரி மனிதனை விட ஞாபக மறதி அதிகம் எனக்கு.

வால்பையன்

manikandan said...

"இப்படியெல்லாம் பேசுனா ஊருக்குள்ள உங்கள பைத்தியம்ன்னு சொல்வாங்க"

"இது மாதிரி நிறைய பேரு என்னைய சொல்லி இருக்காங்க. சில சமயம் சரியாவும் சொல்லி இருக்காங்க"

எதிர்ப்புக்கு உண்டான காரணம் ?

அதை விளக்காமல் இப்படி ஒரு பதிவு உங்களது நகைச்சுவை உணர்வை மட்டுமே பறைச்சாட்டுகிறது.

வால்பையன் said...

//அவனும் அவளும் said...
"இப்படியெல்லாம் பேசுனா ஊருக்குள்ள உங்கள பைத்தியம்ன்னு சொல்வாங்க"
"இது மாதிரி நிறைய பேரு என்னைய சொல்லி இருக்காங்க. சில சமயம் சரியாவும் சொல்லி இருக்காங்க"
எதிர்ப்புக்கு உண்டான காரணம் ?
அதை விளக்காமல் இப்படி ஒரு பதிவு உங்களது நகைச்சுவை உணர்வை மட்டுமே பறைச்சாட்டுகிறது.//


என் எதிர்ப்பின் காரணத்தை கேட்டிருக்கிறீர்கள்.
நன்று
அமெரிக்கா எனது ஜென்ம விரோதி அல்ல.
கம்யூனிசமும் எனது கொள்கை அல்ல.

நான் ஒரு இயற்க்கை விரும்பி.
வேளாண்மையில் கூட வேதியியல் இல்லாமல் இயற்கை விவசாயத்தை விரும்புகிறேன்.
அதுவே நமது சந்ததியினருக்கு நாம் விட்டு சொல்லும் பெரிய சொத்தாக இருக்கும்.

எனது பதிவை நகைச்சுவை பதிவாக ஏற்று கொண்டதற்கு நன்றி

வால்பையன்

கோவை விஜய் said...

//நான் ஒரு இயற்க்கை விரும்பி.
வேளாண்மையில் கூட வேதியியல் இல்லாமல் இயற்கை விவசாயத்தை விரும்புகிறேன்.
அதுவே நமது சந்ததியினருக்கு நாம் விட்டு சொல்லும் பெரிய சொத்தாக இருக்கும்//

மிக அருமையாய் சொல்லியுள்ளீர்கள்.
தி.விஜய்
please visit my blog
http://pugaippezhai.blogspot.com

Tech Shankar said...



Finally You WON - semma mokkainnu ninaicchen.. But edho theermaanamaa keeringa.... sabaash.....

bodhai earicchaa?

ராஜ நடராஜன் said...

வால்!சமூகம் சார்ந்த 50 பதிவுகளையும் படித்து விட்டு எங்கே பின்னூட்டமிடுவது என்று தெரியாமல் இங்கே.....

!

Blog Widget by LinkWithin