அந்த கொலையை நான் தான் செய்தேன்!

இதை பகிரங்கமாக ஒத்து கொள்வதில் எனக்கு வருத்தம் எதுவுமில்லை!
நான் ஏன் இதை மறைக்கவேண்டும், எத்தனையோ பேர் செய்யமுடியாமல் தவித்து கொண்டிருப்பதை நான் செய்தேன் என்பதில் எனக்கு பெருமையே.

இன்னொன்றையும் இங்கே நான் சொல்லியாக வேண்டும்,
என் நிலையில் யார் இருந்தாலும் இதை தான் செய்திருப்பார்கள்.
இங்கே வாழும் மனிதர்கள் காந்தி போல் வாழ வேண்டும் என்று நினைத்தாலும்,
காந்தி போல் வாழ்வதில்லை. எல்லோர் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.

நானும் மனிதன் தான், எனக்கும் எல்லா உணர்வுகளும் உண்டு,
ஒரு நாள், இரண்டு நாளாக இருந்தால் பரவாயில்லை, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள்.
என்று திருமணம் ஆகி தனி குடித்தனம் வந்தானோ அன்று ஆரம்பித்தது எனக்கு அந்த பிரச்சனை, ஒரு மனிதன் பகலிலெல்லாம் வேலை செய்து இரவு நிம்மதியாக தூங்க வேண்டும் என்று தான் நினைப்பான், அந்த நிம்மதியே கெடுவதென்றால் அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராயிருப்பான், எனக்கும் அதே நிலை தான்.

ஈரோட்டிலே இம்மாதிரியான பொருள்களுக்கு பேர் போன கடை சங்கீதா ஷாப்பிங் சென்டர், நான்காவது தளத்தில் எனக்கான பொருள் இருந்தது, அதை பொருள் என்று சொல்வதை விட ஆயுதம் என்று தான் சொல்லவேண்டும், விளையாட்டு பொருள் போல் தெரிந்தாலும், அது மிக பயங்கரமான ஆயுதம்,

கைபிடியிலேயே அதன் நேர்த்தி தெரிந்தது, கடைக்காரன் இருநூறு ரூபாய் சொன்னான், என்னிலையோ அதற்காக ஆயிரம் ஆனாலும் செலவு செய்வேன். இருந்தாலும் புத்தி போகுமா, அவனிடம் பேரம் செய்தேன், இது நீண்ட நாள் உழைக்கும் என்றான். விட்டால் என்னை சீரியல் கில்லர் ஆக்கி விடுவான் போலிருக்கு.

அன்றிரவு அதற்கான திட்டம் வகுத்தேன், அதற்கு மெல்லிய வெளிச்சம் தேவையா அல்லது தேவையில்லையா என்று எனக்குள் குழப்பம் இருந்தது, காரணம் எனக்கு அது புதிது, படுக்கையில் படுத்து, அந்த ஆயுதத்தை மறைவாக வைத்து கொண்டேன்,
சில நிமிடங்களில் அந்த சத்தத்தை உணர்தேன், இன்னும் கொஞ்சம் அருகில் வந்தால் வசதியாக இருக்கும் போல தோன்றியது, கொஞ்சம் காத்திருந்தேன்,

இது தான் சரியான நேரம், கையில் அந்த ஆயுதத்தை கெட்டியாக பற்றி கொண்டு வீசினேன், சட சட வென்று சத்தம், அத்தனை கொசுக்களும் உயிரற்ற நிலையில் அந்த பேட்டில் ஒட்டி கொண்டது, இதுவரை என் தூக்கத்தை கெடுத்த கொசுக்களை கொன்ற மகிழ்ச்சியில் தூங்கினேன்,அது ஒரு பேட்டரியில் இயங்கும் மின் பேட்தயவுசெய்து மன்னிச்சிடுங்க நண்பர்களே!
சேலத்திலிருந்து ஈரோட்டுக்கு பஸ்ஸில் வரும் போது ஒரு பாட்டு போட்டார்கள். அதை கேட்டவுடன் இந்த மொக்கை தோன்றியது, அது என்ன பாட்டுன்னா

"கடி கடி கடி கடி கொசுக்கடி
கடிக்குதடா என்ன அடிக்கடி

கடி கடி கடி கடி கொசுக்கடி
கடிக்கவந்தா அதை நசுக்கடி"

என்ன படம்ன்னு தெரியாது
ஆனா மாளவிகா சூப்பரா ஆடினா

42 வாங்கிகட்டி கொண்டது:

ஜெகதீசன் said...

:)

வால்பையன் said...

இப்படி மொட்டைய சிரிச்சுட்டு போனா எப்படி?
கொசுக்கடியோட இந்த கடி பெருசா இருக்குன்ல சில பேர் பேசிக்கிறாங்க

வால்பையன்

g said...

ஏம்பா. கொலைகூட பண்ணுவியா நீ.
தலைப்பைப் பார்த்தவுடன் ஆடியே போய்விட்டேன்.
பிறகு தான் தெரிந்தது மின் பேட்.
அந்த கொசு உடம்புல ஓடுறது உன்னோட ரத்தம்.
அதுதெரிந்துமா இப்படி உனக்கு இப்படியரு கொலைவெறி.
உனக்கு மூலை இப்படியெல்லாமா வேலைசெய்யும்?
ஆனா ஒன்றுமட்டும் சொல்லிக்கிறேன்.
இப்படியே பதிவு போட்டுக்கிட்டு போனால், நான் உன்னை ...!

வால்பையன் said...

வாங்க ஜிம்ஷா!!

கொலைவெறி, கொலைவெறின்னு சொல்றாங்களே
அது உண்மையிலேயே என்கிட்டே இருக்குன்னு சொல்ல தான் இந்த பதிவு,
நாங்கெல்லாம் L.K.G. படிக்கும் போதே பெரிய ரவுடியாக்கும்

வால்பையன்

கூடுதுறை said...

ஹலோ வால்பையன் அவர்களே!

இந்த கொலைவெறி பதிவில் நல்ல தமிழில் எழுதிய்ள்ளீர்கள் நன்றி,

ஆனால் தயவுசெய்து ஜிம்ஷாவிற்ககாவது இது போல் 4 அல்லது 5 பதிவுகள் போடவும்

நான் உங்களூக்கு ஆதரவு அளிக்கிறேன்

ஜிம்ஷாவுக்கு நறநறநறநறநறநறநற

Athisha said...

இந்த பதிவுல வன்முறை அதிகமாருக்கே

அடல்சு ஒன்லி பதிவா........

வால்பையன் said...

///கூடுதுறை said...
ஹலோ வால்பையன் அவர்களே!
இந்த கொலைவெறி பதிவில் நல்ல தமிழில் எழுதிய்ள்ளீர்கள் நன்றி,
ஆனால் தயவுசெய்து ஜிம்ஷாவிற்ககாவது இது போல் 4 அல்லது 5 பதிவுகள் போடவும்
நான் உங்களூக்கு ஆதரவு அளிக்கிறேன்
ஜிம்ஷாவுக்கு நறநறநறநறநறநறநற///

வாங்க கூடுதுறை!
உங்களுக்கு ஏன் ஜிம்ஷா மேல எவ்வளவு கொலைவெறி!
ஜிம்ஷா ரொம்ப அமைதியா காப்பி, பேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கார்,
அவரும் எழுத ஆரம்பிச்சா நாமெல்லாம் துண்ட காணோம் துணிய காணோம்னு ஓட வேண்டியது தான்.(அது இதைவிட பயங்கர மொக்கையாக இருக்கும்)

வால்பையன்

வால்பையன் said...

//அதிஷா said...
இந்த பதிவுல வன்முறை அதிகமாருக்கே
அடல்சு ஒன்லி பதிவா........///

அப்படியும் வச்சுக்கலாம்!
பிஞ்சுலேயே பழுத்ததுன்னு சொல்வாங்க்கள்ள,
அது மாதிரி எங்களுக்கெல்லாம் U.K.G. லேயே ஆறு கேர்ள் ப்ரெண்டு

வால்பையன்

Unknown said...

வெயில் காலத்துல இப்படிதான் இருக்கும். போகபோக சரியாகிவிடும்

சின்னப் பையன் said...

கொசு படம் போட்டதற்கு பதிலாக மாளவிகா படம் போட்டிருந்தீங்கன்னா சூப்பரா இருந்திருக்கும்!!!

வால்பையன் said...

//jaisankar jaganathan said...
வெயில் காலத்துல இப்படிதான் இருக்கும். போகபோக சரியாகிவிடும்//

அப்டிங்கிரிங்க்களா
பெரியவங்க சொன்னா சரியா தான் இருக்கும் கேட்டுப்போம்

வால்பையன்

வால்பையன் said...

///ச்சின்னப் பையன் said...
கொசு படம் போட்டதற்கு பதிலாக மாளவிகா படம் போட்டிருந்தீங்கன்னா சூப்பரா இருந்திருக்கும்!!!///

உங்கள ச்சின்னபையன்னு நினைச்சா, நீங்க என்ன விட பெரிய வாலா இருக்கிங்களே

வால்பையன்

அமர பாரதி said...

//U.K.G. லேயே ஆறு கேர்ள் ப்ரெண்டு // ஆறு கொளத்தையெல்லாமா கேர்ள் பிரண்டா வச்சுக்குவாங்க?

வால்பையன் said...

அமர பாரதி said...
//U.K.G. லேயே ஆறு கேர்ள் ப்ரெண்டு // ஆறு கொளத்தையெல்லாமா கேர்ள் பிரண்டா வச்சுக்குவாங்க?

அய்யோ, அய்யோ இன்னும் குழந்தையா இருக்கிங்களே!
U.K.G. படிக்கும் போது நானும் குழந்தை தானே!
குழந்தைக்கு குழந்தை தான் பிரெண்டா இருக்க முடியும்.

ஸ்கூல் துறந்துடாங்க, உங்க பிரெண்ட பாக்க போகலியா

வால்பையன்

அமர பாரதி said...

//ஸ்கூல் துறந்துடாங்க, உங்க பிரெண்ட பாக்க போகலியா // எந்த பிரண்டு வாலு?

வால்பையன் said...

////ஸ்கூல் துறந்துடாங்க, உங்க பிரெண்ட பாக்க போகலியா // எந்த பிரண்டு வாலு? //

உங்க ஜெண்டர் தெரியல!
பொண்ணா இருந்தா பாய் பிரெண்டு
ஆனா இருந்தா கேர்ள் பிரெண்டு

நான் சொன்ன ஸ்கூல் L.K.G, U.K.G
நீங்க +2 ரேஞ்சுக்கு கற்பனை பண்ணிகாதிங்க

வால்பையன்

அமர பாரதி said...

நானும் ஈரோடு தான் நண்பரே. சரியா சொல்லனும்னா சித்தோடு. ஆண், தற்சமயம் யு.எஸ்சில வாசம்

வால்பையன் said...

உங்களுக்கு தஷ்மேஸ் பஞ்சாபி தெரியுமா?
சித்தொட்ல தான் இருக்கு1 அந்த பெட்ரோல் பங்க் பக்கத்துல
நாங்க வாரா வாரம் பிரேண்ட்ஷோட அங்க வருவோம்.
கங்காபுரத்துல பிரெண்டோட வீட்ல கிணறு இருக்கு
அங்க தான் குளிப்போம்

அது ஒரு கனா காலம்

வால்பையன்

அமர பாரதி said...

//உங்களுக்கு தஷ்மேஸ் பஞ்சாபி தெரியுமா?// நல்லா தெரியும் நண்பா. அங்க பாயசம் நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. ஆனா எனக்கு அப்படி ஒண்ணும் விஷேஷமாத் தெரியல. உங்களுக்காவது அது ஒரு கனாக் காலம். ஈரோடு நலமா?

வால்பையன் said...

//அமர பாரதி said...
//உங்களுக்கு தஷ்மேஸ் பஞ்சாபி தெரியுமா?// நல்லா தெரியும் நண்பா. அங்க பாயசம் நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. ஆனா எனக்கு அப்படி ஒண்ணும் விஷேஷமாத் தெரியல. உங்களுக்காவது அது ஒரு கனாக் காலம். ஈரோடு நலமா?//

அந்த பாயசமும் கனாகாலம் தான் நண்பா!
இப்பெல்லாம் எங்கேயும் அந்த மாதிரி பாயசம் கிடையாது.
பஞ்சாபின்னாலே இப்பெல்லாம் சரக்கு போட தான் ஞாபகம் வருது.

ஈரோடு நலம், நீங்க இல்லைக்கிறது தான் ஒரே குறை

வால்பையன்

அமர பாரதி said...

//பஞ்சாபின்னாலே இப்பெல்லாம் சரக்கு போட தான் ஞாபகம் வருது.// சரியா சொன்னிங்க போங்க. இன்னும் ரெண்டு மாசத்துல ஈரோடு வர்ரமில்ல.

வால்பையன் said...

//பஞ்சாபின்னாலே இப்பெல்லாம் சரக்கு போட தான் ஞாபகம் வருது.// சரியா சொன்னிங்க போங்க. இன்னும் ரெண்டு மாசத்துல ஈரோடு வர்ரமில்ல. //

வாங்க, வாங்க அப்படியே ஒரு பதிவர் மீட்டிங் போட்றலாம்,
கடைசியா பஞ்சாபி தான்

வால்பையன்

அமர பாரதி said...

//அப்படியே ஒரு பதிவர் மீட்டிங் போட்றலாம்,// அமோகமாப் போட்டுரலாம். எனக்கு உங்க கான்டேக்ட் டிடேயில் கொடுத்திங்கன்னா வந்தவுடன் தொடர்பு கொள்வேன்.

வால்பையன் said...

///அமர பாரதி said...
//அப்படியே ஒரு பதிவர் மீட்டிங் போட்றலாம்,// அமோகமாப் போட்டுரலாம். எனக்கு உங்க கான்டேக்ட் டிடேயில் கொடுத்திங்கன்னா வந்தவுடன் தொடர்பு கொள்வேன்.///

எனது ப்ரோபைல் சென்று எனகிருக்கும் இன்னொரு பிளாக்கை பாருங்கள்!
என்னுடைய போன் நம்பர் கிடைக்கும்!
மெயில் ஐடி arunero@gmail.com
yahoo messenger-- phsarun@yahoo.com

வால்பையன்

அமர பாரதி said...

O.K. நண்பா ஜுலை கடைசியில் தொடர்பு கொள்கிறேன்.

g said...

/// கூடுதுறை said...
ஹலோ வால்பையன் அவர்களே!

இந்த கொலைவெறி பதிவில் நல்ல தமிழில் எழுதிய்ள்ளீர்கள் நன்றி,

ஆனால் தயவுசெய்து ஜிம்ஷாவிற்ககாவது இது போல் 4 அல்லது 5 பதிவுகள் போடவும்

நான் உங்களூக்கு ஆதரவு அளிக்கிறேன்

ஜிம்ஷாவுக்கு நறநறநறநறநறநறநற///கூடுதுறை அண்ணா. வணக்கம்.
ஏதோ ஒருநாள் தெரிந்தோ தெரியாமலோ தாங்கள் விட்ட கொட்டாவியை பார்த்துவிட்டு, வாடா போடா என திட்டிவிட்டேன். அதற்காக என்மீது இப்படி கொலைவெறியோடு அலைவீர்.
ஜிம்ஷாவுக்காக இதுபோல நாலு ஐந்து பதிவு எடுக்குனா. நானே ஆதரவில்லாமல் நடுத்தெருவில் இருக்கிறேன். எனக்கு சப்போர்ட் பண்றதைவிட்டுவிட்டு என்னைப் பார்த்து நறநறநறநறநறவென கடிக்கிறீர்களே. உங்க பல்லு உடைந்து ரத்தம் ஒழுகுவது தெரிகிறது. அண்ணா. பார்த்து ஜாக்கிரதையாக இருங்கள்.

g said...

/// வால்பையன் said...
///கூடுதுறை said...
ஹலோ வால்பையன் அவர்களே!
இந்த கொலைவெறி பதிவில் நல்ல தமிழில் எழுதிய்ள்ளீர்கள் நன்றி,
ஆனால் தயவுசெய்து ஜிம்ஷாவிற்ககாவது இது போல் 4 அல்லது 5 பதிவுகள் போடவும்
நான் உங்களூக்கு ஆதரவு அளிக்கிறேன்
ஜிம்ஷாவுக்கு நறநறநறநறநறநறநற///

வாங்க கூடுதுறை!
உங்களுக்கு ஏன் ஜிம்ஷா மேல எவ்வளவு கொலைவெறி!
ஜிம்ஷா ரொம்ப அமைதியா காப்பி, பேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கார்,
அவரும் எழுத ஆரம்பிச்சா நாமெல்லாம் துண்ட காணோம் துணிய காணோம்னு ஓட வேண்டியது தான்.(அது இதைவிட பயங்கர மொக்கையாக இருக்கும்)

வால்பையன்///என்னது. நான் எழுத ஆரம்பித்தால் துண்டை காணோம் துணியக் காணோம்னு ஓடுவீங்களா. இதைவிட மொக்கையாக இருக்குமா?
எனக்கு கோபம் வந்துவிட்டது. நான் உடனே ஒரு பதிவு எழுதி மொக்கை மன்னன் வால்பையன்னு பெயர் சூட்டுகிறேன். அதுமட்டுமல்ல. வால்பையனை விட சிறப்பா எழுதுகிறார் ஜிம்ஷா என்ற பெயரையும் வெகுவிரைவில் பெறுகிறேன்.

g said...

/// அதிஷா said...
இந்த பதிவுல வன்முறை அதிகமாருக்கே

அடல்சு ஒன்லி பதிவா........///இப்படியா நாக்க தொங்கபோட்டுகிட்டு அலையறது.

g said...

/// ச்சின்னப் பையன் said...
கொசு படம் போட்டதற்கு பதிலாக மாளவிகா படம் போட்டிருந்தீங்கன்னா சூப்பரா இருந்திருக்கும்!!!///ஏன் ச்சின்னப்பையா... இடுப்பில் தூக்கி வச்சிருக்க உனக்கு மாளவிகா இடுப்பு கேக்குதோ?

Athisha said...

//

என்னது. நான் எழுத ஆரம்பித்தால் துண்டை காணோம் துணியக் காணோம்னு ஓடுவீங்களா. இதைவிட மொக்கையாக இருக்குமா?
எனக்கு கோபம் வந்துவிட்டது. நான் உடனே ஒரு பதிவு எழுதி மொக்கை மன்னன் வால்பையன்னு பெயர் சூட்டுகிறேன். அதுமட்டுமல்ல. வால்பையனை விட சிறப்பா எழுதுகிறார் ஜிம்ஷா என்ற பெயரையும் வெகுவிரைவில் பெறுகிறேன்.

//


ஜிம்ஷா இப்டிதான் ஏத்தி உட்டு ஏத்தி உட்டு உடம்ப ரண களமாக்கிருவாங்க....

ரத்த பூமி..... பாத்து...

தியாகு said...

ஒரு அரை கிறுக்கனின் முழு கிறுக்கல்கள் " என்கின்ற தலைப்பு இதற்கு மிக பொருத்தமாக இருக்கும் .. ................................................ நான் வால்பையனை கிறுக்கன் என்று சொல்வதாக தவறாக யாரும் புரிந்துகொள்ளவேண்டாம். தலைப்பை பற்றியது எனது இந்த கருத்து ....................

தியாகு said...

ஒரு அரை கிறுக்கனின் முழு கிறுக்கல்கள் " என்கின்ற தலைப்பு இதற்கு மிக பொருத்தமாக இருக்கும் .. ................................................ நான் வால்பையனை கிறுக்கன் என்று சொல்வதாக தவறாக யாரும் புரிந்துகொள்ளவேண்டாம். தலைப்பை பற்றியது எனது இந்த கருத்து ....................

வால்பையன் said...

//அமர பாரதி said...
O.K. நண்பா ஜுலை கடைசியில் தொடர்பு கொள்கிறேன்.//

தங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே

வால்பையன்

வால்பையன் said...

//ஜிம்ஷா என்ற பெயரையும் வெகுவிரைவில் பெறுகிறேன்.//

கேட்டுகிட்டிங்க்களா மகா ஜனங்களே,
இது வரைக்கும் நான் தான் உங்களை கொன்னுகிட்டு இருந்தேன்
இப்ப என்ன விட சிறப்ப ஒருத்தர் உங்கள கொல்ல வர்றாராம்


வால்பையன்

வால்பையன் said...

//ஜிம்ஷா said...
ஏன் ச்சின்னப்பையா... இடுப்பில் தூக்கி வச்சிருக்க உனக்கு மாளவிகா இடுப்பு கேக்குதோ?//

அவங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சு
நான் நமீதா இடுப்பை அட்வான்ஸ் புக் பண்ணிக்கிறேன்
சமத்தா உட்காந்துகுவேன்

வால்பையன்

வால்பையன் said...

//அதிஷா said...
ஜிம்ஷா இப்டிதான் ஏத்தி உட்டு ஏத்தி உட்டு உடம்ப ரண களமாக்கிருவாங்க....
ரத்த பூமி..... பாத்து...//

ஆகா கம்பெனி ரகசியமெல்லாம் வெளிய போகுதே

வால்பையன்

வால்பையன் said...

///தியாகு said...
ஒரு அரை கிறுக்கனின் முழு கிறுக்கல்கள் " என்கின்ற தலைப்பு இதற்கு மிக பொருத்தமாக இருக்கும் .. ................................................ நான் வால்பையனை கிறுக்கன் என்று சொல்வதாக தவறாக யாரும் புரிந்துகொள்ளவேண்டாம். தலைப்பை பற்றியது எனது இந்த கருத்து ///

இந்த பின்னூட்டத்துக்கு கூட அரை கிறுக்கனின் பதிவுக்கு முக்கா கிறுக்கனின் பின்னூட்டம்னு தலைப்பு வைக்கலாம்ம்னு நான் நினைக்கிறேன்
நீ என்ன சொல்ற

வால்பையன்

Athisha said...

//ஆகா கம்பெனி ரகசியமெல்லாம் வெளிய போகுதே//

உண்மைய சொல்ல வேண்டிய நேரம் வந்துருச்சுயா.......................

Athisha said...

// வால்பையனை கிறுக்கன் //

தியாகு இதுக்கு கிறுக்கனே சொல்லிருக்கலாம்

தியாகு said...

அதிஷா said...
// வால்பையனை கிறுக்கன் //

தியாகு இதுக்கு கிறுக்கனே சொல்லிருக்கலா


வால்பையன் உண்மையிலே ரொம்ப அறிவாளி , நல்லவரு , வல்லவரு , ஒரே ஒரு பதிவுல எப்படி கிறுக்கன் சொல்லுவேன்

இரு இமை இணையாது விழித்து
மின்மட்டையை மின்னலாய் சுழற்றி
எதிரியை பூண்டறுத்தவனே
கொசு கடியில் இருந்து குடில் காத்த கொற்றவனே
நின் புகழ் பதிவு உலகில் பரவட்டும்

புகழன் said...

\\ ச்சின்னப் பையன் said...
கொசு படம் போட்டதற்கு பதிலாக மாளவிகா படம் போட்டிருந்தீங்கன்னா சூப்பரா இருந்திருக்கும்!!!

\\

ரிப்பீட்டு........... :)

Tech Shankar said...

Mosquito Killer.. Ahaa (:- -:)

!

Blog Widget by LinkWithin