விருது வாங்கலையோ விருது!




அங்கிள் சஞ்சய் எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்து கெளரவ படுத்தியிருக்கிறார்!
அவருக்கு எனது நன்றி

*****************************

பட்டாம் பூச்சி எனக்கு ரொம்ப பிடித்த இனம். ஆனாலும் சிறுவயதில் அதை பிடித்து பிய்த்து எறிந்து விளையாடியுள்ளதை இங்கே ஒப்புகொள்கிறேன். தப்பு தான் ஆனா அப்போ தெரியாதே!
கொஞ்சம் வளர்ந்த பிறகு இயற்கையின் மேல் அளவில்லா காதல் வந்தது! உயிர்களின் மேல் மதிப்பு வந்தது. அதிலிருந்து நான் உயிர்களை வதம் செய்வதில்லை!

பட்டாம்பூச்சி இனத்திலிருந்து தான் பட்டு சேலை தயாரிக்கப்படுகிறது என்று தெரிந்தவுடன், பல முறை மண்டை வீங்க பூரிகட்டையில் அடிவாங்கியும் பட்டுசேலை எடுத்து தர முடியாது என்று சொல்லிவிட்டேன். (இக்கனாமிக் வீக் பிரச்சனை நம்மளோட இருக்கட்டும்)

ஒரு விசயத்தை யோசிக்கும் போது பட்டுசேலை தயாரிப்பை ஒன்றும் குறை சொல்வதற்கில்லை. எதோ ஒரு வகையில் அவர்கள் இயற்கையை சமன் செய்து விடுகிறார்கள், பட்டுபுழு வளர்க்க ஒருவித செடி வளர்க்க வேண்டுமாம், அதனால் நமக்கு ஆக்சிசன் கிடைக்குமே. அதனால இதை கண்டுக்காம விட்டுவிடுவதே சாலச்சிறந்தது.

***********************************

இந்த விருதை நாம் சிலருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பது வலையுலக விதி!
ஆரம்பத்தில் புதிய பதிவர்களிடம் சுற்றி கொண்டிருந்த பட்டாம் பூச்சி விருது அங்கிள் சஞ்சய் வரை சென்று விட்டது. அவர் எனக்கெல்லாம் மூமூமூத்த்த்த்த்ததததத பதிவர். அவருக்கே கொடுக்கும் போது நான் காலரை தூக்கிவிட்டு வாங்கி கொள்ளலாம்.

நானெல்லாம் ப்ளாக் ஆரம்பித்த புதிதில் சைக்கிள் புதிதாக ஓட்ட வந்த சிறுவன் போல் இருந்தேன். பெடல் பண்ண தெரியாது. பிரேக் பிடிக்க தெரியாது. எப்படி செல்ல வேண்டும். எங்கே செல்ல வேண்டும் எதுவுமே தெரியாது! ஆனால் புதிதாய் எழுத வந்த பதிவர்கள் வரும்போதே மோட்டார்பைக்கில் தான் வருகிறார்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் அனைவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு எங்கேயோ சென்று விடுகிறார்கள்! உங்களுடய குழு மனப்பான்மை பிடித்திருக்கிறது, ஆனால் அதில் ஒரு பேரிழப்பு இருக்கு! அதை ஒரு பதிவாக சொல்கிறேன்!

சரி இதை நான் யாருக்கு கொடுப்பது! ஏற்கனவே இருக்கும் பிரபலங்கள் பல உயரிய விருதுகளை வாங்கி விட்டார்கள். அவர்களிடம் போய் இந்த விருதை கொடுப்பது, சாருவுக்கு மானிட்டர் சரக்கு வாங்கி தருவதற்கு சமம். அதனால் மேலும் புதிவ பதிவர்களுக்கு கொடுத்து அவர்களை உற்சாக படுத்தலாம்.(விதிவிலக்குகளும் உண்டு)

**************************

தமிழ்நெஞ்சம்
கணிணிதுறை சந்தேகங்களை தீர்த்து வைக்கும் இவர். தற்போது குட்டிகதைகள் எழுதி வாழ்வியல் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கிறார்.

பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சிக்கே பட்டாம்பூச்சி விருது கொடுத்த எனக்கு யாராவது ”பெரிய வால்” விருது கொடுப்பிங்களா?

பப்பு
நகைச்சுவையிலும், எடுத்து கொள்ளும் விசயத்திலும் இவருகென்று தனி நடையை பயன்படுத்துகிறார், இவருக்கு வெகு விரைவில் வெகுஜன ஊடகத்தில் வாய்ப்பு கிடைக்கலாம்,
தொடர்ந்து எழுதுங்கள் பப்பு.

கிஷோர்
நகைச்சுவை, சீரியஸ் என கலந்து கட்டி அடிக்கிறார்! நல்ல மொழி நடை நேரில் உட்கார்ந்து பேசுவது போல் இருக்கும்! இப்போது தான் ஆரம்பித்திருக்கிறார்! வேகம் எடுத்தார் நாம் அண்ணாந்து தான் பார்க்கனும்

பிரபா
பிரபலங்களின் மிக சிறந்த கவிதைகளை தொகுத்து வழங்குவது இவரது தனிச்சிறப்பு!
அப்பப்ப மொக்கைகளும் எழுதுவார்! இப்போ எதுக்கோ வெயிட் பண்ண சொல்லியிருக்கிறார், பார்ப்போம்

89 வாங்கிகட்டி கொண்டது:

பரிசல்காரன் said...

//அவர்களிடம் போய் இந்த விருதை கொடுப்பது, சாருவுக்கு மானிட்டர் சரக்கு வாங்கி தருவதற்கு சமம்.//

கலக்கல்! (செவன் அப்-பான்னு கேட்கக் கூடாது!!)

கணினி தேசம் said...

வந்துட்டேன்...!!

கணினி தேசம் said...

பட்டாம்பூச்சிக்கு வாழ்த்துகள்.

பெருந்துறை ரோட்டில் கட்டில் கடையில் பார்ட்டி வச்சு அசத்திடுவோம்.
:)))

Maximum India said...

"கூல்" அவார்ட் கொடுத்திருக்கிறாரே?

நமக்கு ரொம்ப பிடிச்சது "ஹாட்"தானே?

தீர்ப்பை மாத்திச் சொல்லு தல?

வணக்கம்

கணினி தேசம் said...

பட்டாம்பூச்சி பெற்ற..
தமிழ்நெஞ்சம், பட்டாம்பூச்சி, பப்பு, கிஷோர், பிரபா

அனைவருக்கும் வாழ்த்துகள்.

நல்லதந்தி said...

வாழ்க!.வால்! பட்டாம் பூச்சி வென்ற பண்பாளரே வாழ்க!.

Anonymous said...

சின்ன தகவல்! பட்டாம் பூச்சியிலிருந்து பட்டு னூல் எடுக்க முடியாது. பட்டுப்பூச்சியிலிருந்து தான் பட்டு எடுக்க முடியும். பட்டுப்பூச்சியின் ஆயுட்காலம் மிக குறைவு. அது கூட்டுப்புழு பருவத்திலிருக்கும் பொழுது தனது பாதுகாப்புக்காக தன்வாயிலிருந்து பசை போன்ற ஒரு திரவத்தை வெளியேற்றி (நூல் போல்) அதன் மூலம் கூடு கட்டும். அது பூச்சியாக மாறி கூட்டை வெட்டிக்கொண்டு வெளியே வரும் முன்பு அதை கொன்று அந்த கூட்டிலிருந்து எடுக்கப்படுவதுதான் பட்டு நூல்

வால்பையன் said...

//பரிசல்காரன் said...
கலக்கல்! (செவன் அப்-பான்னு கேட்கக் கூடாது!!)//

அடடே முதல் பின்னூட்டமே உங்களுக்கு தான்! அதனால உங்களுக்கு தங்க கழுகு விருது காத்துகிட்டு இருக்கு

வால்பையன் said...

//கணினி தேசம் said...

பட்டாம்பூச்சிக்கு வாழ்த்துகள்.

பெருந்துறை ரோட்டில் கட்டில் கடையில் பார்ட்டி வச்சு அசத்திடுவோம்.
:)))//

வாங்க போயிருவோம்!
எப்போ வர்றிங்க

வால்பையன் said...

// Maximum India said...

"கூல்" அவார்ட் கொடுத்திருக்கிறாரே?

நமக்கு ரொம்ப பிடிச்சது "ஹாட்"தானே?

தீர்ப்பை மாத்திச் சொல்லு தல? //

குளிரில்லாத பொழுது குளிர் வேண்டி
பீரும் வார்க்கப் படும்.

குறளுங்கோ!

வால்பையன் said...

//நல்லதந்தி said...

வாழ்க!.வால்! பட்டாம் பூச்சி வென்ற பண்பாளரே வாழ்க!.//

உங்களுக்கும், ப்ளீச்சிங் பவுடருக்கும் விருது கொடுக்கலாம், ஆனா மக்கள் என்ன கலைஞருக்கே ”கலைஞர்” விருதான்னு கேட்பாங்கன்னு தான் விட்டுட்டேன்!

வால்பையன் said...

//உண்மை said...

சின்ன தகவல்! பட்டாம் பூச்சியிலிருந்து பட்டு னூல் எடுக்க முடியாது. பட்டுப்பூச்சியிலிருந்து தான் பட்டு எடுக்க முடியும். பட்டுப்பூச்சியின் ஆயுட்காலம் மிக குறைவு. அது கூட்டுப்புழு பருவத்திலிருக்கும் பொழுது தனது பாதுகாப்புக்காக தன்வாயிலிருந்து பசை போன்ற ஒரு திரவத்தை வெளியேற்றி (நூல் போல்) அதன் மூலம் கூடு கட்டும். அது பூச்சியாக மாறி கூட்டை வெட்டிக்கொண்டு வெளியே வரும் முன்பு அதை கொன்று அந்த கூட்டிலிருந்து எடுக்கப்படுவதுதான் பட்டு நூல்//

தகவலுக்கு ரொம்ப நன்றி அண்ணே!
எதோ ஒரு வகையில் பட்டு தயாரிக்க பயன்படும் இனமும், பட்டாம் பூச்சி இனமும் ஒன்று தான் என நினைத்தேன்! அதான் அதையும் சேர்த்து எழுதிவிட்டேன்

அப்பாவி முரு said...

//பல முறை மண்டை வீங்க பூரிகட்டையில் அடிவாங்கியும் பட்டுசேலை எடுத்து தர முடியாது என்று சொல்லிவிட்டேன்//

அடி வாங்கும் தைரியம் எத்தனை நாட்களுக்கு தாங்கும் என பார்க்கலாம்!!!

வால்பையன் said...

//அப்பாவி முரு said...

//பல முறை மண்டை வீங்க பூரிகட்டையில் அடிவாங்கியும் பட்டுசேலை எடுத்து தர முடியாது என்று சொல்லிவிட்டேன்//

அடி வாங்கும் தைரியம் எத்தனை நாட்களுக்கு தாங்கும் என பார்க்கலாம்!!!//

ஏழு வருசம் தாக்கு பிடிச்சாச்சு!
மேலும் இனிமே நான் எந்த பட்டாம் பூச்சிய பாதுகாக்குறது! இருக்குற இயற்கை சீர்கேடு அதை அழித்துவிடுமே!

சின்னப் பையன் said...

//உங்களுடய குழு மனப்பான்மை பிடித்திருக்கிறது, ஆனால் அதில் ஒரு பேரிழப்பு இருக்கு! அதை ஒரு பதிவாக சொல்கிறேன்!
//

ஆவலுடன் எதிர்ப்பாக்கும்....

வால்பையன் said...

// ச்சின்னப் பையன் said...

//உங்களுடய குழு மனப்பான்மை பிடித்திருக்கிறது, ஆனால் அதில் ஒரு பேரிழப்பு இருக்கு! அதை ஒரு பதிவாக சொல்கிறேன்!
//

ஆவலுடன் எதிர்ப்பாக்கும்....//

கண்டிப்பாக இஅவர்களுடய ஒரு செயலால் இவர்களுக்கு ஒரு இழப்பு இருக்கு! அது அவுங்களுக்கு தெரியல!
கண்டிப்பா எழுதுறேன்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

தங்களுக்கும்

பெற்ற அனைவருக்கும்.

குடுகுடுப்பை said...

சஞ்சய் இளைஞர் காங்கிரஸுன்னு சொல்லிக்கிறார். நீங்க சொல்றதப்பாத்தா பெருந்தலைவரால்ல இருப்பார் போலருக்கு

வால்பையன் said...

//நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

தங்களுக்கும்

பெற்ற அனைவருக்கும்.//

வருகைக்கு நன்றி ந்ண்பரே!

வால்பையன் said...

//குடுகுடுப்பை said...

சஞ்சய் இளைஞர் காங்கிரஸுன்னு சொல்லிக்கிறார். நீங்க சொல்றதப்பாத்தா பெருந்தலைவரால்ல இருப்பார் போலருக்கு//

ஆமாங்க!
அவரோட தன்னடக்கம் தான் இன்னும் அவர் வெளியே பிரபலமாகாததுக்கு காரணம்!
இல்லைன்னா அவ்ரு இன்னேரம் டெல்லியிலே இருப்பார்

கிரி said...

//அங்கிள் சஞ்சய் எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்து கெளரவ படுத்தியிருக்கிறார்!//

அங்கிளாளாளாளாளா!!! ;-)

கீழை ராஸா said...

//நானெல்லாம் ப்ளாக் ஆரம்பித்த புதிதில் சைக்கிள் புதிதாக ஓட்ட வந்த சிறுவன் போல் இருந்தேன். பெடல் பண்ண தெரியாது. பிரேக் பிடிக்க தெரியாது. எப்படி செல்ல வேண்டும். எங்கே செல்ல வேண்டும் எதுவுமே தெரியாது!//
இப்ப மட்டும் என்னவாம்...?

கீழை ராஸா said...

விருது பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்க்கள்...உங்களுக்கும் தான்

வால்பையன் said...

// கிரி said...

//அங்கிள் சஞ்சய் எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்து கெளரவ படுத்தியிருக்கிறார்!//

அங்கிளாளாளாளாளா!!! ;-)//

பின்ன என்ன தாத்தாவா?
எங்க அங்கிள கிண்டல் பண்ண நான் விடமாட்டேன்.
அதுக்கு தான் நான் இருக்கேன்ல

கீழை ராஸா said...

நமக்கு கிடைத்த விருதை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிப்பதே ஒரு நல்ல ஆரோக்கியமான நிலை தான்..

வால்பையன் said...

//கீழை ராஸா said...

//நானெல்லாம் ப்ளாக் ஆரம்பித்த புதிதில் சைக்கிள் புதிதாக ஓட்ட வந்த சிறுவன் போல் இருந்தேன். பெடல் பண்ண தெரியாது. பிரேக் பிடிக்க தெரியாது. எப்படி செல்ல வேண்டும். எங்கே செல்ல வேண்டும் எதுவுமே தெரியாது!//
இப்ப மட்டும் என்னவாம்...?//

இப்போ ஒன்லி குரங்கு பெடல்!
ஒண்ணும் பண்ணமுடியாது!
எந்த சந்து கிடைச்சாலும் ஓட்டுவோம்!

வால்பையன் said...

//நமக்கு கிடைத்த விருதை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிப்பதே ஒரு நல்ல ஆரோக்கியமான நிலை தான்.. //

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்!

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள்!!

பட்டாம்பூச்சி விருதுக்கு!!

தேவன் மாயம் said...

மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்!!

வால்பையன் said...

//thevanmayam said...

மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்!!//

ரொம்ப நன்றி டாக்டர்!

வினோத் கெளதம் said...

வாழ்த்துக்கள் வால்.

வெற்றி said...

ஆஸ்காருக்கு ஒப்பான அவார்டை அள்ளிச்சென்ற தம்பி வால்பையனுக்கு,

வாழ்த்துக்கள்...

வால்பையன் said...

//vinoth gowtham said...

வாழ்த்துக்கள் வால்.//

நன்றி நண்பரே!

Tech Shankar said...

Thanks to : Thala

வால்பையன் said...

// தேனியார் said...

ஆஸ்காருக்கு ஒப்பான அவார்டை அள்ளிச்சென்ற தம்பி வால்பையனுக்கு,

வாழ்த்துக்கள்...//

ரொம்ப நன்றி தலைவா!
ஆஸ்கார் விருது அமெரிக்கா விருது! அது எதுக்கு நமக்கு!

வால்பையன் said...

//தமிழ்நெஞ்சம் said...

Thanks to : Thala//

உங்களுக்கு அந்த தகுதி இருக்கு தல!

பட்டாம்பூச்சி said...

பட்டாம்பூச்சி விருது பெற்றதுக்கு வாழ்த்துக்கள் தல :)

வால்பையன் said...

பட்டாம் பூச்சி முழுசா படிக்கலையா?

பட்டாம்பூச்சி said...

//கணினி தேசம் said...

பட்டாம்பூச்சிக்கு வாழ்த்துகள்.

பெருந்துறை ரோட்டில் கட்டில் கடையில் பார்ட்டி வச்சு அசத்திடுவோம்.
:)))//

வாங்க போயிருவோம்!
எப்போ வர்றிங்க.

நானும் "உள்ளேன் ஐயா".
நீங்க கேக்கலேன்னாலும் நாங்க சொல்லுவோம்ல....மே 1,2,3 தேதிகளில் ஊருக்கு வரும்போது (ஏதோ உங்கள் அப்பாயின்மெண்டு கிடைத்தால்) வருகிறேன் :).

பட்டாம்பூச்சி said...

நமக்குமா விருது?உங்க கௌஜக்கு நல்லா கலாய்ச்சு/திட்டி பின்னூட்டம் போட வந்த என்னை இப்படி விருது குடுத்து கவுத்துப்புட்டீங்களே....இருந்தாலும் நம்மையும் மதிச்சு ஆட்டத்தில் சேர்த்துகிட்ட உங்களுக்கு நன்றி நன்றி நன்றி.
வாழ்த்து சொன்ன அனைவருக்கும் இன்னொரு நன்றிபா.

பட்டாம்பூச்சி said...

//இவர்களுக்கு ஒரு இழப்பு இருக்கு! அது அவுங்களுக்கு தெரியல!
கண்டிப்பா எழுதுறேன்//

ஏண்ணே இப்படி பீதிய கெளப்பறீங்க?
சீக்கிரமா அது என்ன இழப்புன்னு சொல்லிப்புடுங்கோ ஆமா :)

வால்பையன் said...

//நானும் "உள்ளேன் ஐயா".
நீங்க கேக்கலேன்னாலும் நாங்க சொல்லுவோம்ல....மே 1,2,3 தேதிகளில் ஊருக்கு வரும்போது (ஏதோ உங்கள் அப்பாயின்மெண்டு கிடைத்தால்) வருகிறேன் :). //

சனி ஞாயிறாக இருந்தால் கண்டிப்பாக அப்பாயின்மெண்ட் உண்டு!

பட்டாம்பூச்சி said...

நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீங்க "வால்" தான் :)).......

நசரேயன் said...

வாழ்த்துக்கள் உங்களுக்கும், விருது வாங்கியவர்களுக்கும்

வால்பையன் said...

நன்றி நசரேயன்!

Prabhu said...

தலைவா, விருது கொடுத்த விருதே, தன்னலமற்ற பங்காளனே, தன் விருதை தானம் செய்தவனே....... ச்சே..... இங்க மதுரையில் அஞ்சாநெஞ்சனுக்காக வச்ச கட் அவுட் நிறைய பாத்து அதே பாணியில வருது!

ரொம்ப நன்றி! இப்ப ஒரு கவித... இல்ல கவுஜ, உங்க பாஷையில

ஒரு
பட்டாம்பூச்சியே
பட்டாம்பூச்சி அளிக்கிறதே
அடேடே.... ஆச்சரியக்குறி!

Prabhu said...

ஆனா நீங்க தினமும் என் பதிவ பாக்குற சந்தோஷம் ஒவ்வொரு தடவையும் எழுத வைக்குது!

Mahesh said...

வாழ்த்துகள் வால் !!!

ஆமா... பட்டாம்பூச்சில இருந்து பட்டு சேலை தயாரிக்கறாங்களா?

RAMYA said...

பட்டாம்பூச்சி விருதுக்குக்கு வாழ்த்துகள் வால்ஸ்!!

Kumky said...

இவ்ளோ சீக்கிரமாவா உங்களுக்கு விருது கெடச்சிருக்கு..?
அதிர்ச்சியுடன்....

RAMYA said...

மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் வால்ஸ்!!

Anonymous said...

சே...என்னிய கேவலப்படுத்தனும்னே சதி செஞ்சி இந்தாளுக்கு கொடுத்திருக்காங்கப்பா...

RAMYA said...

விருது பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!!

வால்பையன் said...

//pappu said...

ஆனா நீங்க தினமும் என் பதிவ பாக்குற சந்தோஷம் ஒவ்வொரு தடவையும் எழுத வைக்குது!//

உங்ககிட்ட சரக்கு இருக்கு பப்பு!
சரக்கு இருக்குர இடத்துல வால்பையன் இருப்பான்

வால்பையன் said...

// Mahesh said...

வாழ்த்துகள் வால் !!!

ஆமா... பட்டாம்பூச்சில இருந்து பட்டு சேலை தயாரிக்கறாங்களா?//

இல்லை
ஆனா இந்த பட்டுபுழுவும் பட்டாம் பூச்சி இனம் தான்!

வால்பையன் said...

// RAMYA said...

மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள் வால்ஸ்!!//

நன்றி ரம்யா!

வால்பையன் said...

//கும்க்கி said...

இவ்ளோ சீக்கிரமாவா உங்களுக்கு விருது கெடச்சிருக்கு..?
அதிர்ச்சியுடன்....//

மால் வெட்டினா எல்லாமே கிடைக்கும் தல

வால்பையன் said...

// சின்ன பட்டாம் பூச்சி said...

சே...என்னிய கேவலப்படுத்தனும்னே சதி செஞ்சி இந்தாளுக்கு கொடுத்திருக்காங்கப்பா..//

இப்போ உன்னை என்ன பண்ணிட்டேன்னு கண்ண கசக்குற!
எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்!
பஞ்சாயத்து தலைவர் வரட்டும்

மணிகண்டன் said...

****
நானெல்லாம் ப்ளாக் ஆரம்பித்த புதிதில் சைக்கிள் புதிதாக ஓட்ட வந்த சிறுவன் போல் இருந்தேன். பெடல் பண்ண தெரியாது. பிரேக் பிடிக்க தெரியாது. எப்படி செல்ல வேண்டும். எங்கே செல்ல வேண்டும் எதுவுமே தெரியாது!
****

அப்படின்னா இப்போ ?

Poornima Saravana kumar said...

பட்டாம் பூச்சி விருது வாங்கிய வாலுக்கு வாழ்த்துகள்:))))

Poornima Saravana kumar said...

இந்த விருதை நாம் சிலருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பது வலையுலக விதி!
//

அது தான் உலகுக்கே இப்போ தெரிஞ்ச விசயமா இருக்கே!!!

Poornima Saravana kumar said...

பல முறை மண்டை வீங்க பூரிகட்டையில் அடிவாங்கியும் //

ஆமா உங்க வீட்டுல எத்தனை பூரிக் கட்டை இருக்கு!!!!!

தாரணி பிரியா said...

வாங்கின உங்களுக்கும் உங்க கிட்ட இருந்து வாங்கினவங்களுக்கும் வாழ்த்துக்கள்

புதியவன் said...

வாழ்த்துக்கள் வால் பையன்...

//பட்டுபுழு வளர்க்க ஒருவித செடி வளர்க்க வேண்டுமாம், அதனால் நமக்கு ஆக்சிசன் கிடைக்குமே. அதனால இதை கண்டுக்காம விட்டுவிடுவதே சாலச்சிறந்தது.//

வித்தியாசமான கண்ணோட்டம் நண்பா...

அ.மு.செய்யது said...

வாழ்த்துக்கள் வால் !!!!!!!

உங்களுக்கு வேற யாரும் இதற்கு முன்னர் பட்டாம் பூச்சி கொடுக்கலியா ??

இவ்ளோ லேட்டா ?

Anonymous said...

வால்பையனுக்கு வாழ்த்துக்கள்!

அவரால் விருதுபெற்ற
உ(ள்ள)ங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Venkatesh Kumaravel said...

விருதுகள் வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Prabhu said...

அண்ணன், திரும்பவும் நன்றியோட ஒரு பதிவு நீங்க குடுத்த அவார்ட ஏத்துக்குறதா போட்டிருக்கேன்!

Rajeswari said...

வால் பையனுக்கு வாழ்த்துக்கள்..மேலும் பட்டாம்பூச்சி பெற்ற..
தமிழ்நெஞ்சம், பட்டாம்பூச்சி, பப்பு, கிஷோர், பிரபா

அனைவருக்கும் வாழ்த்துகள்.

Prapa said...

நிரூபிச்சு போட்டீங்க ஆமா ... நீங்க பெரிய மனுசனப்பா ..........
நன்றிங்கோ... வெயிட் பண்ண சொல்லிட்டன் அநேகமா மொக்கையா ஏதாவது வரும் போல தான் இருக்கு .

"வாலுல பட்டாசு கட்டி வெடிப்பமா ....//////????????"

MyFriend said...

பட்டாம்பூச்சி விருது கொடுத்த வாலுக்கும் வாங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள். :-)

kuma36 said...

///உங்களுடய குழு மனப்பான்மை பிடித்திருக்கிறது, ஆனால் அதில் ஒரு பேரிழப்பு இருக்கு! அதை ஒரு பதிவாக சொல்கிறேன்!///

எப்ப எப்ப? கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க சார்!

ஜகதீஸ்வரன் said...

// பட்டாம் பூச்சி எனக்கு ரொம்ப பிடித்த இனம். ஆனாலும் சிறுவயதில் அதை பிடித்து பிய்த்து எறிந்து விளையாடியுள்ளதை இங்கே ஒப்புகொள்கிறேன். தப்பு தான் ஆனா அப்போ தெரியாதே! //

எனக்கும் இந்த அனுபவம் உண்டு.அதற்காக அப்பா அடித்த அடியில் இரண்டு நாள் காது கேட்கவில்லை.

ஜகதீஸ்வரன்

மேவி... said...

valthukkal

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

விருது கொடுத்தவருக்கும், பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

ராம்.CM said...

வாழ்க!...வால்!
பட்டாம் பூச்சி வென்ற பண்பாளரே வாழ்க!.


விருது கொடுத்தவருக்கும், பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

kishore said...

thankyou vaal... sorry for the late reply.. i would like to wish the other award winners... congrats to all

Thamira said...

உங்களுக்குப் போய் ஸாஃப்டான பட்டாம்பூச்சி விருது குடுத்தது யாருய்யா.? அவுரு மண்டையிலேயே ஒரு குட்டு வைங்கப்பா.. நான் உங்களுக்கு கரடுமுரடா ஏதாவது ஒரு 'ரினாஸரஸ் விருது' குடுக்கலாமான்னு யோசிச்சுகினு இருந்தேன்.

sakthi said...

வாழ்த்துக்கள்!!

பட்டாம்பூச்சி விருதுக்கு!!

sakthi said...

ஆதிமூலகிருஷ்ணன் said...

உங்களுக்குப் போய் ஸாஃப்டான பட்டாம்பூச்சி விருது குடுத்தது யாருய்யா.? அவுரு மண்டையிலேயே ஒரு குட்டு வைங்கப்பா.. நான் உங்களுக்கு கரடுமுரடா ஏதாவது ஒரு 'ரினாஸரஸ் விருது' குடுக்கலாமான்னு யோசிச்சுகினு இருந்தேன்.

hahahahaha
yenga pavam chinna payan intha vaal payan

மின்னல்ப்ரியன் said...

\\அவர்களிடம் போய் இந்த விருதை கொடுப்பது, சாருவுக்கு மானிட்டர் சரக்கு வாங்கி தருவதற்கு சமம்.///"



தல இந்த ஒரு வரிக்காகவே உங்களுக்கு உங்களுக்கு சாகித்ய அகாடமி விருது தரலாம்.
மற்றபடி உங்களுக்கு கிடச்ச ஒரு விருத உங்க தம்பிங்க, தங்கச்சின்னு நாலு பேருக்கு கொடுத்த உங்க நல்ல மனச பாக்கும் போது அப்படியே வானத்த போல விஜயகாந்த பாத்த
மாதிரி இருக்கு.. லாலா ...லாலா ....லல ....லாலா ....( இது சும்மா RR ).
வாழ்த்துக்கள் .

Sanjai Gandhi said...

அட அட.. மனுஷன்.. எல்லாத்துலையும் கலக்கறாருய்யா( பதிவை சொன்னேன்).. ;))

சாரு உதாரணம் ஜூப்பரு.. எப்டி தான் இப்டி எல்லாம் வருதோ? :))

//பட்டாம்பூச்சி இனத்திலிருந்து தான் பட்டு சேலை தயாரிக்கப்படுகிறது என்று தெரிந்தவுடன், //

சுமார் 4 ஆண்டுகள் பட்டுப் புழு வளர்த்தோம். பராமரிப்பதில் உள்ள சிக்கல்களால் இப்போது முடிவதில்லை. கொஞ்சம் ஏமாந்தால் ஒரே ஒரு ”பல்லி” எல்லாத்தையும் காலி பண்ணிடும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//சரி இதை நான் யாருக்கு கொடுப்பது! ஏற்கனவே இருக்கும் பிரபலங்கள் பல உயரிய விருதுகளை வாங்கி விட்டார்கள். அவர்களிடம் போய் இந்த விருதை கொடுப்பது, சாருவுக்கு மானிட்டர் சரக்கு வாங்கி தருவதற்கு சமம். அதனால் மேலும் புதிவ பதிவர்களுக்கு கொடுத்து அவர்களை உற்சாக படுத்தலாம்.(விதிவிலக்குகளும் உண்டு)//

அருமை வாலு!

வாலு வாழ்க!
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!
விருந்து எப்ப கிஷோர்?!

குசும்பன் said...

//பட்டாம்பூச்சி இனத்திலிருந்து தான் பட்டு சேலை தயாரிக்கப்படுகிறது என்று தெரிந்தவுடன்//

முதலில் மோர் குடிக்கவும் பின் என்னா விருதுன்னு பார்க்கவும்!

குசும்பன் said...

உங்களுக்கு கரப்பான் பூச்சி விருது வழக்கி இருக்கிறார் ஆசிப் அண்ணாச்சி போய் பார்க்கவும்

☀நான் ஆதவன்☀ said...

//சரக்கு இருக்குர இடத்துல வால்பையன் இருப்பான்//

சிரிப்ப அடக்க முடியல வால்பையன் :))))))

மண்குதிரை said...

உங்க பின் நவீத்துவ கவிதைக்கு (கவுஜ) பின்னூட்டம் போட முயன்றேன். முடியவில்லை.

ரசித்தேன்.

Unknown said...

வாழ்த்துக்கள் வால் பையன்.

வால்பையன் said...

நன்றி மணிகண்டன்

நன்றி பூர்ணிமா சரண்

நன்றி புதியவன்

நன்றி அ.மு.செய்யது
ஆம் நண்பரே இப்போது தான் கொடுத்தார்கள்

நன்றி ஷீ-நிசி

நன்றி வெங்கிராஜா

நன்றி பப்பு

நன்றீ ராஜேஸ்வரி

நன்றி பிரபா

நன்றி மைஃப்ரெண்ட்

நன்றி கலை-இராகலை

நன்றி ஜகதீஸ்வரன்

நன்றி MayVee

நன்றி சந்ரு

நன்றி ராம்

நன்றி கிஷோர்

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்

நன்றி மின்னல் பிரியன்

நன்றி அங்கிள் சஞ்சய்

நன்றி ஜோதிபாரதி

நன்றி குசும்பன்

நன்றி நான் ஆதவன்

நன்றி உமாஷக்தி

!

Blog Widget by LinkWithin