சரக்குபானை!

கஷ்டப்பட்டு காய்ச்சியவர் இவர்!

*******************************
நாம நோகாம எடுத்து குடிச்சி எடுத்த சாந்தி இல்ல வாந்தி!

***************************

மூடி சுற்றிய பாட்டில்
பிறர் கைகளுக்கு அகப்படாமலும்
எனக்கு புலப்படாமலும்
தொடர் பம்பரமாய் சுத்தியபடி
பார் ஓனரிடம்
பவ்யமாய் விசாரித்தேன்
தள்ளாடி நடந்தவர்கள்
பக்கத்து கடையில்
சரக்கு அடித்ததாகவும்
இந்தகடை சரக்கு போதை
தருவதில்லை என்றும்
கேட்டறிந்து கொண்டேன்
உள்ளூரில் குடிப்பதற்கு
பட்டைகள் பலவாங்கி
ஊரல் போட்டேன்
வியந்தேன் முதன்முதலாய்
காய்ச்சிய சாராயத்தில்
ஊறிய பூச்சிகள்
செத்துவிடக்கூடும்
சரக்குபானையை
எறும்புகள் ஊறுகையில்
ரெண்டு கைகளையும்
மேலே தூக்கி
சப்பென்று அடித்தால்
பானை உடைவது இயல்புதானே
சரக்கின் சுவை மாறினாலும்
நாக்குக்கு தெரியும்
தண்ணி கலந்த நாதாறி யாருன்னு
சரக்கு காய்ச்சும்போது
விளைந்த வியர்வைகள்
கழுத்து முட்டும்வரை
குடிக்க வைக்கிறது!


எதிர்கவுஜைன்னா ஒரு கிக்கு இருக்கனுமுல்ல

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இன்று அமுல்பேபிக்கு பிறந்தநாள்!

ஓ! அது யாருன்னு உங்களுக்கு தெரியாதில்ல!
முதன் முதலில்நான் சந்தித்தபோதே அதை பற்றிய பதிவில் எழுதிவிட்டேன் இவர் தான் பதிவுலக அமுல்பேபியென்று,

எங்கள் முதல் சந்திப்பே மறக்கமுடியாத ஒன்று,
அதை பற்றிய பரிசல்காரனிம் இரண்டு பதிவுகள்

1

2

இது என் பங்குக்கு அந்த சந்திப்பை பற்றி நான் போட்ட மொக்கை.

தலைவர் சாதாரண ஆள் இல்லை!

பதிவுலகில் மிக முக்கியமான மூத்த பதிவர், எழுத வந்தது மே 2007
சிறந்த வாசிப்பாளர்,
சிறந்த இலக்கியவாதி,

எச்சம்பவத்தையும் கவிதையாக வடிக்கும் வல்லமை கொண்டவர்
சிறந்த உதாரணமாக இந்த பதிவை சொல்லலாம்.

உங்களுடன் சேர்ந்து அண்ணாரை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்!






********************************

நேற்று எழுதிய ஆய்வு!? கட்டுரை தமிழ்மணத்தில் வரவில்லை, அதனால் இதில் சென்று படித்து பயனடையுமாறு!? கேட்டு கொள்கிறேன்


********************************

இன்று மதியம் அனுஜன்யாவின் கவிதைக்கு எதிர்கவுஜயும் உண்டு!
ஒரே நாளில் இரண்டு போஸ்ட் போடுவது எனக்கு பிடிக்காது என்றாலும் சனி,ஞாயிறு நான் வெளியூர் செல்வதால் ப்ளீஸ் சகிச்சுகோங்க!

லுங்கி ஆண்களின் பொது உடையா!?



பத்தவச்சது இங்கே,

பத்திகிட்டது இங்கே!(இதை படிச்சிட்டு வாங்க)
இப்போ வெடிக்கிறது நம்ம வலையில


************************

ஒரு பெண் சொல்லவேண்டிய சொல்லவிருந்த மனதுக்குள் ஆறாத ரணமாய் இருந்த என்னுடைய கருத்துகளை அண்ணன், வலை உலக மன்னன் கிழையகவி ஸாரி இளையகவி இங்கே குமுறி இருக்கிறார்.

என்ன செய்தால் இந்த லுங்கி காலாச்சாரம் ஒழியும் என சிந்திக்கையில்

1) லுங்கி உற்பத்தி செய்பவரோ அல்லது விற்பனை செய்வரோ தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் எனவும் மேலும் அவர் லுங்கி அணிந்த ஆண்களுடன் தனது வாழ்நாளை கழிக்க வேண்டும் எனவும் அறிவிக்கலாம்.

2) மனைவி பார்க்கும் நேரமெல்லாம் கணவன் லுங்கி அணிந்திருந்தால் கணவனுக்கு குமட்டில் ஒரு குத்தும், இடுப்பில் ஒரு எத்தும் விட அனுமதி அளிக்கலாம்.


3) முழு நேரமும் லுங்கியுடன் இருக்கும் ஆணை மனைவி விவாகரத்து செய்ய முழு அதிகாரம் உண்டு எனவும் மேற்ப்படி வழக்கு தொடரும் போது விசாரணை ஏதும் இன்றி விவாகரத்து வழங்கலாம் எனவும் , மனைவிக்கு ஆயிரம் நைட்டியை ஜீவனாம்சமாக அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு போடலாம்.

4) லுங்கி அணியும் ஆண்களுக்கு இனிமேல் சிகரெட் கட் செய்யப்படும் எனவும் சரக்கடிக்க தடை எனவும் அறிவிக்கலாம்.

5) லுங்கி அணியும் ஆண்கள் வீட்டிற்க்கு உள்ளே வருவது சட்டவிரோதம் எனவும் அறிவிக்கலாம்.

6) லுங்கி கிழிந்து போணாலும் மீண்டும் மீண்டும் அணியும் ஆண்களின் வீட்டில் உள்ள அனைத்து லுங்கிகளையும் அரசு கையகப்படுத்தும் என அறிவிக்காலாம்.



அப்பா, அண்ணா, தம்பி, மொத்த ஆண்வர்க்கங்களே தயவு செய்து வீட்டில் தூங்கும் போதும் அலன்சோலி பேண்ட், லூயிஸ்ப்ளிப் சர்டும் போட்டு ”டக் இன்” செய்து தூங்கும் நர்சிம்மை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள், வீட்டில் எப்படி இருக்கனும்னு!..... தயவுசெய்து.........

குறுந்தகவல் நகைச்சுவைகள்!

மனைவி: என்ன பார்த்துகிட்டு இருக்கிங்க

கணவன்: ஒண்ணுமில்ல!

மனைவி:ஒண்ணுமில்லாமயா ஒரு மணிநேரமா மேரேஜ் சர்டிபிகேட்ட பார்த்துகிட்டு இருக்கிங்க!

கணவன்:எங்கேயாவது எக்ஸ்பிரி டேட் போட்டுருக்கானு பார்க்கிறேன்.!!

*************************************

மனைவி:டின்னர் வேணுமா?

கணவன்:சாய்ஸ் இருக்கா?

மனைவி:ரெண்டு இருக்கு!

கணவன்:என்னன்ன?

மனைவி:வேணுமா?வேண்டாமா?

***************************************

பெண்:என்னை கல்யாணம் பண்ணிகிட்டா உங்களோட எல்லா துக்கத்துலயும் நான் பங்கெடுத்துகுவேன்!

ஆண்:சந்தோசம், ஆனா எனக்கு ஒரு பிரச்சனையும் இப்ப இல்லையே!

பெண்:என்னை நீங்க இன்னும் கல்யாணம் பண்ணிக்கவே இல்லையே!

*****************************************

மகன்:அம்மா, அப்பா இன்னைக்கு பஸ்ல ஒரு பொண்ணுக்காக எழுது இஅடம் கொடுக்க சொன்னாரு!

அம்மா:நல்ல விசயம் தானே!

மகன்:நான் உட்காந்திருந்தது அப்பாவோட மடியில!

*****************************************

மனைவி:எங்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என்ன? முகமா இல்ல முழு உடம்புமா?

கணவன்:(மேலிருந்து கீழாக பார்த்து விட்டு)உன் நகைச்சுவை உணர்வு தான் பிடிச்சிருக்கு!

*******************************************

குவியல்! (19.06.09)

சென்ற வார ஆனந்தவிகடனில் மூன்று பதிவர்களின் சிறுகதையும், குறுங்கதைகளும் வெளியாயிருந்தது, இனி ஆனந்தவிகடன் என்றாலே நாம் தான் என்றாகிவிட்ட நிலையில் சும்மா சும்மா வாழ்த்து சொல்வது, சொறிந்து கொள்வதை விட கேவலமாக இருக்கும் என்பதால் நிறுத்திவிட்டேன், ஆனால் இந்த வாரம் அண்ணன் ஆதிமூலகிருஷ்ணனின் ”அழுக்கின் அழகு” குறுங்கதையை படித்தவுடன் அவரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் என தோன்றியது.

கதை என்ற பெயரில் எதையாவது கிறுக்கி தள்ளாமல் இது போன்ற கதைகளை எல்லா பதிவர்களும் எழுதி ஆனந்தவிகடனுக்கு அனுப்பலாம், குறுங்கதைகள் மேல் ஒரு மரியாதை கிடைக்கும்,

********************************

சென்ற வாரம் தோழர் அதிஷாவின் சகோதரி திருமணம் கோவையில் இனிதே நடந்தேறியது, வாரநாட்களில் வந்து விட்டதால் நிறைய நண்பர்கள் செல்ல முடியவில்லை என்பதை அறிந்தேன், நானும் அப்படியே!

வரும் வாரம் நண்பர் கார்த்திகைப்பாண்டியனின் சகோதரி திருமணம் மதுரையில் நடக்க இருக்கிறது. சுற்றமும் சூழமும் வந்து வாழ்த்த நண்பரே அனைவருக்கும் பத்திரிக்கை நேரில் சென்றும், தபாலில் அனுப்பியும் அழைத்துள்ளார், இங்கேயும் அதே சூழ்நிலை தான், புதன்கிழமை திருமணம்

இருதம்பதியினருக்கும் நமது வாழ்த்துக்களை இங்கே பதிவு செய்வோம்

*********************************

சென்ற ஜூன் பத்தாம் தேதி எனக்கு ஏகப்பட்ட போன், அனைவரும் பதிவர்கள்,
அதிர்ச்சிக்குள்ளாக்கும் கேள்வியோடு, அந்த கேள்வி ”சரக்கடிக்கிறத விடப்போறிங்களாமே”
என்னாடா இது வம்பாப்போச்சுன்னு கேட்டா, எழுத்தாளார் வாமு.கோமு அவரது ப்ளாக்கில் இப்படி ஒரு திரியை கிள்ளி போடிருக்கிறார். அது வதந்தி நம்பாதிங்கன்னு நண்பர்களுக்கு புரியவைக்கும் முன்னர் ஒரு ஃபுல்லு காலியா போச்சு!

**********************************

நான் வாரத்துக்கு ஒரு பதிவு எழுதுவதே அபூர்வம், அப்படியே வந்தாலும் அது எதாவது வாழ்த்து பதிவாக இருக்கும், ஆனாலும் தினமும் நூறுக்கு மேல் ஹிட்ஸ் வருவது ஆச்சர்யமாக இருக்கும், பிறகு தான் தெரிந்தது சென்னையை சேர்ந்த ஒரு பதிவருக்கு ரீடர் என்றால் என்னவென்றே தெரியாது போல, நான் எதாவது பதிவு போட்டிருக்கிறேனா என்று தினமும் நூறுதடவை எட்டிபார்த்து எனக்கு ஹீட்ஸ் தருகிறார், அவருக்கும், ரீடர் என்றால் என்னவென்று தெரியாமல் இருப்பவர்களுக்கும்,

http://www.google.co.in/reader/


இதை கிளிக் பண்ணுங்க, உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் ஐடியில் லாகின் பண்ணுங்க, add a subscription என்ற இடத்தில் கிளிக் செய்து தேவையான உரலை போட்டு சேமித்து கொள்ளுங்கள், அவர் என்ன பதிவு போட்டாலும் உங்களுக்கு மிஸ் ஆகாது, நெருங்கிய நண்பர் என்றால் அவருக்கு ப்லோயர் ஆகிவிடுங்கள், அதுவும் உங்களுக்கு ரீடரில் அப்டேட் ஆகிவிடும்,
இல்லை தினமும் நூறுதடவை எட்டி பார்த்து ஹிட்ஸ் கொடுப்பேன் என்றால் அதற்கும் ஒரு நன்றி.(இதுவரைக்கும் நூறு நன்றி சொல்லியிருப்பேனா உங்களுக்கு)

*****************************

சென்ற குவியலில் ப்ளாக்கை சேமிக்க தவறுதலாக டெம்ப்ளெட் சேமிக்கும் வழியை கொடுத்து விட்டேன்.

dashboard--> settings--> basic--> blogtools--> export blog

இது தான் சரியான முறை, சேமித்து வைத்து கொள்ளுங்கள்
(என்ப்ளாக் 15MB இருக்கிறது)

*****************************
இருளும் ஒளியும் அல்லது அதுவும் இதுவும்
(கவிதையாமா)


அது இருத்தலின் ரகசியம்
இது தொலைதலின் ஏக்கம்

அது இயல்பின் உண்மை
இது நிறம் மாறும் தன்மை

அது வெற்றிடமாய் நிரம்பிகிறது
இது வெற்றிடத்தை நிரப்புகிறது

அது இயல்பின் உச்சகட்டம்
இது ஏமாற்றத்தின் ஆரம்பம்
நம் வாழ்க்கையை போல

எழுதியது
ஹிஹிஹி நான் தான்
16 oct 2008 வலைச்சரத்தில்

பதிவர்களிடம் கேட்க, சொல்ல விரும்புபவை!

டோண்டு

எஸ்.வி.சேகர் ஆரம்பிக்க போற கட்சிக்கு நீங்க தான் கொள்கை பரப்பு செயலாளராமே!


தருமி

கடவுளே நேர்ல வந்து நான் தான் கடவுள்னு சொன்னாலும் நம்பமாட்டேன்னு சொன்னிங்களாமே!


லக்கிலுக்

ஒரு பதிவ எத்தனை தடவை மீள்பதிவா போடலாம்!


பரிசல்

புயலுக்கு முன் அமைதியா(பதிவு போட்டு பத்து நாளாச்சு)


நர்சிம்

கருத்து சொல்ல ப்ளாக் மட்டும் தானா! இல்ல வெளியூர் பயணம் உண்டா!


ஆதிமூலகிருஷ்ணன்

ரெண்டுமாசமா ஷாப்பிங் போலயா? தங்கமணி பதிவயே காணோமே!


கார்க்கி

பேச்சுலர் வேசம் கலைஞ்சு போச்சு டும் டும் டும்


ரம்யா

செக்குல அக்கவுண்ட் பேயி(a/c payee)ன்னு எழுத கூட பயப்படுவிங்களாமே


தமிழரசி

ஆயிரம் கவிதை எழுதுன அபூர்வ கவிதாயினி பட்டம் தான் குறிக்கோளாமே


பூர்ணிமாசரண்

குழந்தை சாப்பிடலைன்னா கவிதைய படிச்சு காட்டுவேன்னு பயமுறுத்துறிங்களாமே!


சஞ்சய்

அக்னிநட்சத்திரதை எப்படி சமாளித்தீர்கள்!


செல்வேந்திரன்

விஜய் டீவிக்கு பின் பல பட வாய்ப்புகளாமே!


கேபிள்சங்கர்

நீங்க சிரிப்பு போலீஸ் மாதிரி சிரிப்பு வில்லனா நடிக்க போறிங்களாமே!


ப்ளீச்சிங்பவுடர்

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன!


மனசாட்சி கிரி

எந்திரன் படத்துக்கு சிறப்பு இந்தியா வருகையாமே!




மீதி அடுத்த பாகத்தில் வைத்து கொள்ளலாம்!

நீ தான் நண்பன்!




உன்னுடன் சேர்ந்து அடிக்கும்
சரக்கு போதுமெனக்கு!
என்னுடன் நீ
பேச வேண்டியது அவசியமில்லை
எனது பேச்சினைக் கேட்டு
மண்டை காய வேண்டியதில்லை!
உன் சரக்கைப் போல
உனது பேச்சு எனக்கு
போதை தராது
உனக்கும் எனக்குமிடையே என்றும்
கருத்து வேறுபாடுகளில்லை
எனது சரக்கு உனக்கும்
உனது சரக்கு எனக்கும் போதும்
சரக்கு மாற்றி நான் அடித்தாலும்
உனது சரக்கு தான் என்னிடம்
ராஜபோதை தந்து நிற்கும்.
உனக்கும் எனக்குமிடையே
போட்டிகளோ பொறாமைகளோ இல்லை
என்றும்
நீ
உன் சரக்கை ஓசியில் தரும்வரை.






ஒரிஜினல் கவிதைக்கு சொந்தகாரர்(இந்தவாரம் மாட்டியது)

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்களுக்கு எல்லாம் யாராக இருப்பது பெருமையா இருக்குன்னு கேட்டா என்ன சொல்விங்க!
அம்மா, அப்பாக்கு மகனாக, நண்பனுக்கு நண்பனாக, காதலிக்கு காதலனாக எப்படி எத்தனையோ ஆனால் என் மகளுக்கு அப்பனாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைக்கிறேன்னு எத்தனை பேர் சொல்லுவோம்!(கல்யாணம் ஆனதையே வெளியே சொல்ல மாட்டானுங்க)இவர் சொல்லுவார்.
மகளுக்காக தான் ப்ளாக்கையே ஆரம்பித்தார்.

ஒளிப்படங்கள் எடுத்ததில் விற்பன்னர், எனது பாஸுக்கு குரு, நான் கும்மியடிக்க வழி அமைத்து கொடுத்தவர்! கேமரா மற்றும் புகைப்படங்கள் பற்றிய சந்தேகங்களை என்நேரமானாலும் தீர்த்து வைப்பார்(புரபஷர் தாஸ் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல)

பக்கத்து அறையில் நண்பன் இருந்தாலே பார்த்து கொள்வது அரிதாகியுள்ள இந்த நிலையில் இவரை பார்க்க வெளிநாட்டிலிருந்தெல்லாம் நண்பர்கள் வருவார்கள். வெளிநாடோ, உள்நாடோ யார் வந்தாலும், நண்பர்களுடன் வருவார் என்று எப்போதும் அந்த பஞ்சாபி ஹோட்டலில் டேபிள் காத்திருக்கும்.(குசும்பன் சாட்சி).




அண்ணன் கையிலிருப்பது ப்ளாஸ்க் அல்ல! நாற்பத்திஅய்யாயிரம் பெறுமானமுள்ள கேமரா லென்ஸ்!

அண்ணாருக்கு இன்று பிறந்தநாள்(06.06.09)

அவரோட புரோபைல்

அண்ணாரின் ப்ளாக்

இது அவரு பொண்ணு நிலா எழுதும் ப்ளாக்

அண்ணார் வகிக்கும் பதவிகள் பின்வருமாறு!

எலக்கியசங்கம் - தலைவர்(ஈரோடு கிளை)

போட்டோகாரர் சங்கம் -செயலாளர்(ஈரோடு கிளை)

அகில உலக சும்மா இருப்போர் சங்கம்- தலைவர்(ஈரோடு கிளை)

ஓசியில் சரக்கு வாங்கி கொடுப்போர் சங்கம் -தலைவர்(ஈரோடு கிளை மட்டும்)

நமிதா எழுச்சி பேரவை -செயல் செயல் செயலாளர்(ஈரோடு கிளை)

மும்தாஜ் முன்னேற்ற பேரவை -அதே(ஈரோடு கிளை)

ஷ்ரேயா சிறப்பு மன்றம்- அதே தான்(ஈரோடு கிளை)


இன்னும் பல பதவிகள் இருக்குது! பிறந்த நாளைன்னைக்கி அளவா கலாய்ப்போம் என்று விட்டுவைக்கிறேன்!

கதை சொல்லும் கதை!

என் பெயர் வினோத்! அது உங்களுக்குத் தெரியும்னு எனக்கும் தெரியும், பெரிய எழுத்தாளன்னு இல்லாட்டியும் எதோ எழுதுவேன்!. வெறும் டைரியில தான், ஆனா இப்போ ஒரு சிக்கல் முளைச்சு இருக்கு, அந்த சிக்கலை எப்படி தீக்குறதுன்னு தெரியல, இது என் மானப்பிரச்சனையும் கூட. வேண்டாம்னு தான் முதல்ல நினைச்சேன் ஆனா இப்போ இல்லைனா எப்பவுமே முடியாம போககூடிய சூழ்நிலை உருவாகலாம், அதனால் நான் இந்த போட்டியில கலந்துகிறதா முடிவு பண்ணிட்டேன், அதுக்காக ஒரு கதை எழுதி வச்சிருக்கிறேன் சொல்லட்டுமா!

வேண்டாம் உங்களுக்கு தான் படிக்க தெரியுமே நீங்களே படிச்சிகோங்க!

சுரேஷுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை, எதோ விளையாட்டாப் பேசபோய் இப்போ ஒரு மாச சம்பளத்துல வந்து நிக்குது பந்தயம், தோத்தா ஒருமாச சம்பளம் போறது மட்டுமில்லாம கூடவே மானமும் போகும், எப்படியாவது ஜெயிச்சாகனும், பெருசா விதிமுறைகள் கூட இல்ல, எந்த பத்திரிக்கையில வந்தாலும் பரவாயில்லைன்னு சொல்லிட்டான், ஆனா வழக்கமான பாணி கதை எழுதி அது திரும்பி வந்துட்டா மேலும் அவமானம், சுரேஷுக்கு தெரியும் இதுக்காக மூளையை கசக்குவதை விட எதாவது ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பித்தால் கண்டிப்பாக ஒரு வட்டமோ, சதுரமோ கிடைக்கும்.

நீண்ட பெருமூச்சொன்றை விடுத்து பேப்பரில்மளமளவென்று எழுதத்தொடங்கினான்!


சாம்புமாமாவுக்கு ஹைவேசில் வேலை, முப்பது வருட தாம்பத்தியத்தில் ஒரு மாதம் கூட முழுதாக வீடு தங்கியதில்லை, எப்போதும் வேலை வேலை வேலை தான். வீட்டை பொறுத்தவரை அவர் அறிந்தது செண்பகம்மாமி நன்னா வத்தகொழம்பு வைப்பா அம்புட்டு தான்!. விசயத்தை கேள்விபட்ட போது அவருக்கே ஆச்சர்யமா தான் இருந்தது, பின்னே இருக்காதா வீட்டிலே அடைஞ்ச கிடந்த செண்பகம்மாமி ஒரு சிறுகதை எழுத்தாளர்னு தெரியும் போது சாம்புமாவுக்கு ஆச்சர்யமாவும், அதிர்ச்சியாவும். மாமாவுக்கு தெரியாம இத்தனை நாள் மறைச்சதுக்கு ஒரு காரணமும் சொல்லமுடியல மாமியால, வாதம் முத்தி கடைசியில ஒரு வழியாக போட்டியில வந்து நின்னுச்சு, மாமிவோட நினைப்பு கதை எழுதுறதுக்கெல்லாம் தனியா ஒரு திறமை வேணும்னு, மாமா சொல்லிட்டார், “போடி அசடே புதுமைபித்தன் காலத்துலருந்து ஒரு கதை விடாம படிச்சிருக்கேன், இது மாதிரி ஒரு கதைய படிச்சதேயில்லைன்னு சொல்ற மாதிரி ஒரு கதை எழுதுறேன்”னு பேனாவை உதறி நோட்டில் எழுத ஆரம்பித்தார்.

விசுக்கு சந்தோசம் தாள முடியவில்லை, இதுவரை சில சிற்றிதழ்களில் அவனது சிறுகதைகள் வந்துருக்கு, ஒரே ஒரு முறை ஜனரஞ்சக பத்திரிக்கையில் வித்தியாசமான கதைக்காகன்னு பரிசு வாங்கியிருக்கான், ஆனா இது இன்ப அதிர்ச்சி தான், இந்த வருட தீபாவளி மலருக்கு சிறுகதை எழுதி தரணும், ஒருவேளை பிரசுரம் ஆகிட்டா சுளையா பத்தாயிரம் கிடைக்கும், விசுவுக்குன்னு ஒரு தனி பாணி இருக்கு, மற்ற கதைகளை போல காதல்,கத்திரிக்காய் கதையெல்லாம் எழுத மாட்டான், அவனுக்கு தெரியும் அதெல்லாம் ”சரோஜாதேவி” செக்ஸ் கதை மாதிரி தான், முதல் ரெண்டு பத்திய தாண்டிட்டா எல்லாமே ஒண்ணு தான், ஒரு தம்ம உறிஞ்சி இழுத்துட்டு கணிணி முன் அமர்ந்து தட்டச்ச ஆரம்பித்தான்.


என் பெயர் வினோத்! அது உங்களுக்கு தெரியும்னு....

-திரும்பவும் முதல் பாராவுலருந்து படிப்பதும், படிக்காமல் இருப்பதும் உங்கள் பிரியம்


************************************
டிஸ்கி:அண்ணன் பைத்தியகாரன் நடத்தும் சிறுகதை போட்டிக்காக!

தல போல வருமா..!.(மீண்டும் எதிர்வினை)

வலையுலகம் வந்து இரண்டு வருடங்களுக்கு அருகில் ஆனாலும் இதுவரை எனக்கு "பாகச"வில் ஒரு பொறுப்பு கூட கிடைக்கவில்லை, அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் இன்று காலை உணவருந்தாமல் அரைமணி நேரம் உண்ணாவிரதம் மேற்கொண்டேன், மனமிறங்கிய சென்ஷி அண்ணன் அவர்கள், தலயின் சில கவிதைகளை கொடுத்து அதை கவுஜயாக மாற்ற சொன்னார்!
அதை இங்கே கொடுத்திருக்கிறேன், நண்பர்களாக பார்த்து ஏதாவது பதவி போட்டு கொடுங்கள்.

********************************


மூலம்(மூலம்னா மூலக்கவிதை இருக்குமிடம்னு அர்த்தம்)

******************************

உனக்கான
பாதிசரக்கில்
ஏறிவிடும்
போதையானது
என் பங்கு சரக்கை
பார்த்து ஏளனம் செய்கிறது!

000

உன் மூச்சுக் காற்றும்
போதை ஏற்றுகிறது பார்
நீவாங்கி கொடுத்த
சரக்கைவிட நீ அடித்த
சரக்கு காஸ்ட்லியென்று
தெரிந்து கொண்டேன்.

000

வாந்தியெடுக்காமல்
சரக்கடிக்கதெரியாதா
என்று கோபப்படத்தெரிகிறது
உனக்கு,
நம்ப மறுக்கும்கூமுட்டைகளுக்கு
வாந்தியை மட்டுமே
காட்டமுடிகிறது
நான் மப்பில் இருக்கிறேனென்று.

00

வெளிச்சமற்ற நேரங்களில்
சரக்கடிக்காதே
என்றேன்கேட்டாயா
இப்போது பார்
சரக்கு அப்படியே
இருக்கிறது, தண்ணீர்
பாட்டில் தீர்ந்துவிட்டது.

000

சைடிஷாய் நீ
இருக்கும் தைரியத்தில் தான்
மானிட்டர் சரக்கும்
ராவாய் இறங்குது.

**************************

!

Blog Widget by LinkWithin