சரக்கு இரவல் கொடுப்பதால் வரும் பதினோரு சங்கடங்கள்!

1) நிச்சயமாக திரும்பி வாங்கி தருவார் என்ற மூடநம்பிக்கையுடனோ, திரும்ப வாங்கி தரவே மாட்டார் என்ற நம்பிக்கையுடனோ தான் சரக்கு வாங்கி கொடுக்க நேரும். இரண்டுமே கொடுப்பவருக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல.

2) சரக்கு இரவல் கொடுத்த ஓரிரு நாட்களில் அந்த சரக்கு நமக்கே ஏதாவது விசேசத்துக்காக, அல்லது மப்புக்காக தேட நேர்கிறது.

3) ‘எந்த சரக்கையும் இரண்டே கல்ப்பில் குடித்து விடுவேன், குடுங்க. குடிச்சிட்டு மேக்ஸிமம் ஒரே வாரத்துல குடுத்துடுவேன்’ – இது இரவல் வாங்கும் எல்லாரும் சொல்லும் வாசகம். ஆனால் கவிஞர். வாலியின் டெம்ப்ளேட் வரிகளைப் போல, இரவல் வாங்குபவர்களுக்கு எப்போதுமே மாதங்கள் வாரங்களாக, யுகங்கள் கணங்களாகத்தான் இருக்கின்றன.

4) இரவல் வாங்கி குடித்தவர் பெயர் மிஸ்டர்.எக்ஸ் என்று வைத்துக் கொண்டால், குடித்த ஓரிரு வாரங்களுக்குத்தான் அவர் மிஸ்டர்.எக்ஸ் ஆக இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் ‘என்கிட்ட அந்த நெப்போலியன் சரக்கை வாங்கி குடித்தவர் என்றும், இன்னும் கொஞ்ச நாளில் ‘வாங்கிய இரவல் சரக்கை திருப்பி வாங்கி தராதவர்’ என்றும்தான் அவர் பற்றிய பிம்பம் மனதில் படிகிறது.

5) நாம் இரவல் கொடுத்த சரக்கை நம்மிடம் இரவல் வாங்கியவரிடம், இன்னொருவர் இரவல் கேட்கும்போது ‘நம்மளே இரவல் வாங்கினதாச்சே.. குடுக்கலாமா வேண்டாமா’ என்ற குழப்பத்திற்கு ஆளாக்குகிறோம். அல்லது அவர்கள் இரவல் குடுத்தால் ‘இரவல் வாங்கியதை இரவல் கொடுத்த’ பாவத்திற்கு அவரை ஆளாக்குகிறோம்.

6) வாங்கிய இரவல் சரக்கில் தண்ணீர் கலந்து அடிப்பது, சோடா கலந்து அடிப்பது போன்றவற்றை செய்யும் சுதந்திரம் இல்லாமல் வாங்கியவரை தவிக்க வைக்கிறோம். அல்லது அப்படி அவர் செய்தால் ‘இப்படிப் பட்டவருக்குக் கொடுத்தோமே’ என்ற தவிப்புக்கு நம்மை ஆளாக்கிக் கொள்கிறோம்.





7) உண்மையாகவே அந்த இரவல் சரக்கை வாங்கியவர் வாந்தியெடுத்து விட்டால், அவர் அப்படிச் சொல்லும்போது அதை நம்ப முடியாமல் அவரைப் பற்றி நாம் தவறாகப் புரிந்து கொள்ள நேர்கிறது. உண்மையாகவே வாந்தியெடுக்காமல் அவர் அப்படிச் சொல்வதானால்... (மீண்டும் 6வது பாராவின் கடைசி வரிகளைப் படிக்க....)

8) இரவல் குடுத்து திரும்ப வராத சோகத்தில் நாமிருக்கும்போது, வேறொரு நண்பர் இரவல் கேட்க, சூடு கண்ட பூனையாய் அவருக்கு நாம் இரவல் கொடுக்க மறுக்க, அவர் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ள ஏதுவாகிறது.(நமக்கே சரக்கில்லையாமா)

9) நண்பனுக்குப் பணம் கொடுத்தால் நட்பு, பணம் இரண்டையும் இழக்க நேரும் என்று பெர்னாட்ஷா சொன்னது போல, நண்பனுக்கு் சரக்கு வாங்கி கொடுத்தால் அந்த சரக்கு, அதற்கான பணம், நட்பு மூன்றையுமே நாம் இழக்க நேர்கிறது.

10) இரவல் வாங்கினால் உடனே குடிக்க வேண்டும் என்ற நினைப்பு வருவதில்லை. அதே காசு கொடுத்து வாங்கியிருந்தாலாவது, அதன் மதிப்புணர்ந்து நிச்சயமாக ரசித்து ரசித்து குடிப்போம்... (அல்லது அப்படி நாம் நினைத்துக் கொள்கிறோம்!)

11) நல்ல சரக்கு என்பதால்தான் பகிர்ந்து கொள்கிறோம். அந்த நல்ல சரக்கை இரவலாகக் கொடுப்பதால் அந்த நல்ல சரக்கை தயாரிப்பவருக்கு கிடைக்கும் மரியாதைக்கு நாம் தடையாக இருக்கிறோம்.(ஓசி சரக்கை என்னைக்கு நல்லாயிருக்குனு சொல்லியிருக்கானுங்க)

டிஸ்கி: இந்தப் பதிவில் வரும் எதுவும் யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடுவதல்ல என இதன்மூலம் உறுதியளிக்கிறேன்!

இந்த பதிவு, தான் இதுக்கு மூலக்காரணம்

38 வாங்கிகட்டி கொண்டது:

நட்புடன் ஜமால் said...

11 ஆரம்பமா! இந்த வாரம்.

Thamira said...

:-))

Anonymous said...

நள்ள் அருமையான ஆராய்ச்சி. கழக்கியிருக்கிரீர்கள். சரக்கு உல்ல ஆல் என்பதை நிறுபித்திருக்கிறீர்கள். நீர் வெள்க ! அனத்திழும் .

Anonymous said...

நள்ள் அருமையான ஆராய்ச்சி. கழக்கியிருக்கிரீர்கள். சரக்கு உல்ல ஆல் என்பதை நிறுபித்திருக்கிறீர்கள். நீர் வெள்க ! அனத்திழும் .

Mahesh said...

ஆரம்பிச்சட்டாங்கப்பா.... இன்னும் எத்தன பதினொண்ணு பாக்கி இருக்குப்பா சொக்கா !!!

கார்க்கிபவா said...

ஸப்பா

அப்துல்மாலிக் said...

மப்புலே இருக்கும்போது எத்தனை தடவை இரவல் வங்கினாலும் ஞாபகம் இருக்காது ஹி ஹி, 11 என்னா 1000 எழுதினாலும் இதுதான் நடக்கும்

அப்பாவி முரு said...

பன்னிரண்டாவது சங்கடம்:-

நிச்சயம் இரவல் வாங்கி குடிப்பவன் அளவாக குடிக்காமல், நிறைய குடித்து நம்மிடமே பிரச்சனை பண்ணுவான்.

ரோட்டுல போற மாரியாத்தா,
எம்மேல வந்து ஏறாத்தா!

என்ற கதையாகிவிடும்.

அபி அப்பா said...

வாலு! இப்படி நீ ஒரு ரகசிய பதிவு போட்டதை நான் பரிசல் கிட்ட சொல்லிடவா? சொல்ல வேண்டாம்ன்னா எனக்கூ 3 பெக்? டீல் ஓக்கே?

பரிசல்காரன் said...

மொத எதிர்ப்பதிவுக்குண்டான நெப்போலியன் ஃபுல் பரிசை வந்து பெற்றுச் செல்லவும்!

அ.மு.செய்யது said...

ஒரே கேரா இருக்கு....

இத பத்தி நான் சொல்றத விட லவ்டேல் மேடி ( நவீன 'மண்டை'த்துவ வாதி ) சொன்னா நல்லா இருக்கும்.

அவ‌ர் சொல்ல‌ போற‌த‌ அட்வான்ஸா வ‌ழிமொழிந்து விடுகிறேன்.

Prabhu said...

வாலு, எப்போ எங்க ஊருக்கு வர்றீங்க?
வர்றப்போ சொல்லுங்க? நேரம் உங்களுக்கும் எனக்கும் ஒத்து வந்தா சந்திக்கலாமே! சில நாளா பிசி க்ராஷாயிருந்துச்சு, அதான் பதில் சொல்ல முடியல.

Prabhu said...
This comment has been removed by the author.
அப்பாவி தமிழன் said...

உங்கள் வலை பதிவை இங்கே இணைத்து கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites/

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

இது நல்லாருக்கே! பரிசல் மாதிரி ஆட்கள் மண்டையைப் பிய்த்துக் கொண்டு பதிவு எழுதட்டும்.அதை அப்படியே உல்டாப் பண்ணி நீங்க பதிவு போடுங்க.சும்மா சொல்லக் கூடாது ,ஒரிஜினல விட சுவாரசியமாத்தான் இருக்கு.

விஜய் ஆனந்த் said...

அப்போ சரக்கு இரவல் கொடுப்பீங்களா..மாட்டீங்களா???

கணினி தேசம் said...

Joooparu!

முரளிகண்ணன் said...

வால் அசத்திட்டீங்க

RAMYA said...

ஐயோ நான் என்ன எழுதறதுன்னே தெரியலை கண்ணை கட்டுதே
சரி சரி லவ்டேல் மேடி வந்து எழுதுவார்.

வருவார் வருவார் சொக்கா !!!!!!!!!

தாங்க முடியலை சீக்கிரம் வரச்சொல்லுப்பா !!

cheena (சீனா) said...

நான் படிச்சதுல -இந்த எதிர்ப் பதிவுதான் சூப்பரா இருக்கு - ஆமா - வாலு - இனிமே சரக்கு இரவல் கொடுக்க மாட்டியா - இல்ல கொடுப்பியா - அதக் கரெக்டாச் சொல்லிப்புடு - மாட்டேன்னா நான் வேற ஏற்பாடு பண்ணனும். சரியா

cheena (சீனா) said...

http://cheenakay.blogspot.com/2008/05/blog-post.html

http://valpaiyan.blogspot.com/2008/08/blog-post_15.html

ஏற்கனவே நான் ஒரு பதிவு போட்டு அதற்கு வாலு ஒரு எதிர்ப் பதிவு போட்டு அந்தக் காலத்துலேயே வாலு எதிர்ப்பதிவு போடறதுலே பெரிய ஆளுன்னு நிரூபீச்சுட்டாரு - ஆமா

பொழுது போகாதவங்க 2 சுட்டியவும் சுட்டுங்க - கருத்துச் சொல்லுங்க

ராம்.CM said...

அப்போ சரக்கு இரவல் கொடுப்பீங்களா..

அது சரி(18185106603874041862) said...

//
6) வாங்கிய இரவல் சரக்கில் தண்ணீர் கலந்து அடிப்பது, சோடா கலந்து அடிப்பது போன்றவற்றை செய்யும் சுதந்திரம் இல்லாமல் வாங்கியவரை தவிக்க வைக்கிறோம். அல்லது அப்படி அவர் செய்தால் ‘இப்படிப் பட்டவருக்குக் கொடுத்தோமே’ என்ற தவிப்புக்கு நம்மை ஆளாக்கிக் கொள்கிறோம்.
//

இது டாப்பு மாமே...அப்பாலிக்கா ஞாவகப்படுத்து...ஒனிக்கு ஒரு குவாட்டர் ஃபிரீ!

அது சரி(18185106603874041862) said...

//
muru said...
பன்னிரண்டாவது சங்கடம்:-

நிச்சயம் இரவல் வாங்கி குடிப்பவன் அளவாக குடிக்காமல், நிறைய குடித்து நம்மிடமே பிரச்சனை பண்ணுவான்.

ரோட்டுல போற மாரியாத்தா,
எம்மேல வந்து ஏறாத்தா!

என்ற கதையாகிவிடும்.

March 11, 2009 2:17 PM
//

மாரியாத்தா சாபம் வந்துறப் போகுது முரு அண்ணே :0))

நசரேயன் said...

இனிமேல் சரக்கு இரவல் கொடுக்க மாட்டேன்

Joe said...

They say, friends don't keep count.

So please buy your friends a few drinks every week and don't expect them to buy you drinks in return! ;-)

goma said...

வால்பையன்
வாழ்த்துக்கள்.டாப் 10 பதிவுகளில் உங்களை மூன்றாவது இடத்தில் பார்த்தேன்
வந்து பார்த்தால் அத்தனை சரக்குகளும் சும்மா கிக் ....நிறைய சரக்கு இருப்பதால்தான் மூன்றாவது இடம் என்று புரிந்து கொண்டேன்

goma said...

http://www.tamil10.com/topsites/

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))

Anonymous said...

தள என்ன தள இன்னைக்கு ஒரு பதிவு கூட இடமாள் விட்டுட்ட ! சீக்கிரம் நள்ள பதிவுடன் வா தள!! நகைச்சுவை என்றாள் அது எங்க தள தான்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஐயையோ, இதுக்கு யாராவது 'சரக்கு அடிப்பதால் வரும் 11 சங்கடங்கள்' அப்படின்னு எதிர் பதிவு போடாம இருக்கணுமே.

www.narsim.in said...

ரசித்தேன் வால் தல

www.narsim.in said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
ஐயையோ, இதுக்கு யாராவது 'சரக்கு அடிப்பதால் வரும் 11 சங்கடங்கள்' அப்படின்னு எதிர் பதிவு போடாம இருக்கணுமே.
//

ஹுக்கும் தலைப்ப எடுத்து வேற குடுங்க ஏற்கனவே அடி வெளுக்குறாங்க.. ஹும்..கலக்கட்டும்..ஸார் நடக்கட்டும்

நையாண்டி நைனா said...

அட நானும் இந்த சூறாவளிலே தலையே கொடுத்து ஒரு 11 எழுதி போட்டுட்டேன்.
ஆனா எல்லாரும் சும்மா பின்னி பெடலேடுக்குறாங்க....


/* ஸ்ரீதர் said...
இது நல்லாருக்கே! பரிசல் மாதிரி ஆட்கள் மண்டையைப் பிய்த்துக் கொண்டு பதிவு எழுதட்டும்.அதை அப்படியே உல்டாப் பண்ணி நீங்க பதிவு போடுங்க.சும்மா சொல்லக் கூடாது ,ஒரிஜினல விட சுவாரசியமாத்தான் இருக்கு.
*/

ஹி... ஹி... ஹி....

Unknown said...

// சரக்கு இரவல் கொடுப்பதால் வரும் பதினோரு சங்கடங்கள்! //




அடேய் ஜி- மெயில் மண்டையா......!!!! இத நாங்கதான்டா உன்னைய பாத்து நொந்துபோயி சொல்லனும் ......!!!!!!!




// 1) நிச்சயமாக திரும்பி வாங்கி தருவார் என்ற மூடநம்பிக்கையுடனோ, திரும்ப வாங்கி தரவே மாட்டார் என்ற நம்பிக்கையுடனோ தான் சரக்கு வாங்கி கொடுக்க நேரும். இரண்டுமே கொடுப்பவருக்கு நன்மை பயக்கக் கூடியதல்ல. ///




அதுதான் தெரியுதுல்ல .....!!! அப்பறம் என்ன மசுத்துக்கு வாங்கித்தர.......!!!





// 2) சரக்கு இரவல் கொடுத்த ஓரிரு நாட்களில் அந்த சரக்கு நமக்கே ஏதாவது விசேசத்துக்காக, அல்லது மப்புக்காக தேட நேர்கிறது. //



அடேய் வெந்து வேகாத அர மண்டையா......!! இது கலைஞரோட பொன்னான ஆட்சிடா...!!! தடிக்கி உளுந்தா சரக்கு கட......!! இதுல நீ எங்க போய் தேடுற.....????




// 3) ‘எந்த சரக்கையும் இரண்டே கல்ப்பில் குடித்து விடுவேன், குடுங்க. குடிச்சிட்டு மேக்ஸிமம் ஒரே வாரத்துல குடுத்துடுவேன்’ – இது இரவல் வாங்கும் எல்லாரும் சொல்லும் வாசகம். ஆனால் கவிஞர். வாலியின் டெம்ப்ளேட் வரிகளைப் போல, இரவல் வாங்குபவர்களுக்கு எப்போதுமே மாதங்கள் வாரங்களாக, யுகங்கள் கணங்களாகத்தான் இருக்கின்றன. //



இது எங்கயோ ஒதைக்குதே.......!! ம்ம்ம்ம்ம்ம்ம்.......!! ஏண்டா ராசா .... உங்க க ... க .... க (கார்த்தி) ....போ மொதலாளி எப்பவாச்சி இந்த மாதிரி உன்னைய சுத்தல்ல உட்டுபுட்டாரா.....???? அவன் கடக்குரா கருமாண்டிப்பய..............!!!!





// 4) இரவல் வாங்கி குடித்தவர் பெயர் மிஸ்டர்.எக்ஸ் என்று வைத்துக் கொண்டால், குடித்த ஓரிரு வாரங்களுக்குத்தான் அவர் மிஸ்டர்.எக்ஸ் ஆக இருக்கிறார். அதற்குப் பிறகு அவர் ‘என்கிட்ட அந்த நெப்போலியன் சரக்கை வாங்கி குடித்தவர் என்றும், இன்னும் கொஞ்ச நாளில் ‘வாங்கிய இரவல் சரக்கை திருப்பி வாங்கி தராதவர்’ என்றும்தான் அவர் பற்றிய பிம்பம் மனதில் படிகிறது. //




அதென்னையா மிஸ்டர்.எக்ஸ் .......?? மிஸ்டர். மொதலாளி கார்த்தி 'னே சொல்லு.... ஒன்னும் தப்பில்லையே.......?? உன்னைய என்ன கடுச்ச்சா வெக்கப்போரான் .....??


நீ கடுச்சீனாதான் நெம்ப வெசம்.......!! முடுஞ்சா அவன சாக்கிரதையா இருக்கச்சொல்லு......!!!!!



//5) நாம் இரவல் கொடுத்த சரக்கை நம்மிடம் இரவல் வாங்கியவரிடம், இன்னொருவர் இரவல் கேட்கும்போது ‘நம்மளே இரவல் வாங்கினதாச்சே.. குடுக்கலாமா வேண்டாமா’ என்ற குழப்பத்திற்கு ஆளாக்குகிறோம். அல்லது அவர்கள் இரவல் குடுத்தால் ‘இரவல் வாங்கியதை இரவல் கொடுத்த’ பாவத்திற்கு அவரை ஆளாக்குகிறோம். //



அடேய் விக்ஸ் டப்பா மண்டையா.....!! நீ மொதல்ல , அந்த சரக்க யாருகிட்ட இருந்து புடுங்கீட்டு வந்தைன்னு சொல்லு.......!!!!!!



// 6) வாங்கிய இரவல் சரக்கில் தண்ணீர் கலந்து அடிப்பது, சோடா கலந்து அடிப்பது போன்றவற்றை செய்யும் சுதந்திரம் இல்லாமல் வாங்கியவரை தவிக்க வைக்கிறோம். அல்லது அப்படி அவர் செய்தால் ‘இப்படிப் பட்டவருக்குக் கொடுத்தோமே’ என்ற தவிப்புக்கு நம்மை ஆளாக்கிக் கொள்கிறோம்.//



அடேய்........!! வர்ற சரக்கே தண்ணி கலந்து நெம்ப கன்றாவியாத்தான் வருது.......!!
இதுல மருவுடியும் எங்க போய் தண்ணிய கலந்து அடிக்கிறது.....!!! உடுடா... உடுடா.... ராவா அடுச்சிட்டு போறாரு ......!!!!!!



// 7) உண்மையாகவே அந்த இரவல் சரக்கை வாங்கியவர் வாந்தியெடுத்து விட்டால், அவர் அப்படிச் சொல்லும்போது அதை நம்ப முடியாமல் அவரைப் பற்றி நாம் தவறாகப் புரிந்து கொள்ள நேர்கிறது. உண்மையாகவே வாந்தியெடுக்காமல் அவர் அப்படிச் சொல்வதானால்... (மீண்டும் 6வது பாராவின் கடைசி வரிகளைப் படிக்க....)//



அடேய் தம்பி.... நீ நெம்ப டென்சன் ஆவுற......!! அடிக்கிறது உங்க முதலாளி கார்த்தி 'னு ஆய்போச்சு..... !! உநேக்கே தெரியும் அவனோட கெப்பாசிட்டி...... !! மூடிய மோந்துபாத்தாவே.... நாலு நாளைக்கு புள்ளதாச்சி மாதிரி வந்தி எடுத்துகிட்டு இருப்பான் ..... , இதுல கணக்கு பாக்காத கண்ணு.......!!!!!



// 8) இரவல் குடுத்து திரும்ப வராத சோகத்தில் நாமிருக்கும்போது, வேறொரு நண்பர் இரவல் கேட்க, சூடு கண்ட பூனையாய் அவருக்கு நாம் இரவல் கொடுக்க மறுக்க, அவர் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ள ஏதுவாகிறது.(நமக்கே சரக்கில்லையாமா) //




உங்கதையே..... " பிச்சைஎடுத்தானாம் பெருமாளு ...... அத புடுங்கி தின்னானாம் அனுமாரு...... " ன்னு இருக்குது ...... இதுல இன்னொருத்தன் வேறயா........





// 9) நண்பனுக்குப் பணம் கொடுத்தால் நட்பு, பணம் இரண்டையும் இழக்க நேரும் என்று பெர்னாட்ஷா சொன்னது போல, நண்பனுக்கு் சரக்கு வாங்கி கொடுத்தால் அந்த சரக்கு, அதற்கான பணம், நட்பு மூன்றையுமே நாம் இழக்க நேர்கிறது. //



பெர்னாட்ஷா சொல்லறது இருக்குட்டும் ......!! பைனலா நீ என்ன சொல்ல வர்ற ...?



// 10) இரவல் வாங்கினால் உடனே குடிக்க வேண்டும் என்ற நினைப்பு வருவதில்லை. அதே காசு கொடுத்து வாங்கியிருந்தாலாவது, அதன் மதிப்புணர்ந்து நிச்சயமாக ரசித்து ரசித்து குடிப்போம்... (அல்லது அப்படி நாம் நினைத்துக் கொள்கிறோம்!) //


ஏண்டா ..... !! நீ எப்புடி குடுச்சாளுமும் , ஜில்லாவுலையே பெரிய குடிகாரன் மாதிரி
மொன்ன ரவுசு உடுவ.......!! உணகெதுக்குடா இதெல்லாம் ....????




//11) நல்ல சரக்கு என்பதால்தான் பகிர்ந்து கொள்கிறோம். அந்த நல்ல சரக்கை இரவலாகக் கொடுப்பதால் அந்த நல்ல சரக்கை தயாரிப்பவருக்கு கிடைக்கும் மரியாதைக்கு நாம் தடையாக இருக்கிறோம்.(ஓசி சரக்கை என்னைக்கு நல்லாயிருக்குனு சொல்லியிருக்கானுங்க) ///


ஏண்டா மண்டையா.... நெம்ப யோசிக்கிரையே நீ .........!! ஏன் ... இன்னிக்கு பல்லு வெலக்குலையா ......???

Tech Shankar said...

இதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. அட ஆமாங்க. உண்மைங்கோ.

யாராச்சும் எனக்கு முன்னாடி சிகரட் அடிச்சாலே எனக்குப் பிடிக்காது.

ஆனால் சரக்கடிச்சா?

ஞே ஞேஞே ஞேஞே ஞேஞே ஞேஞே ஞே ன்னு உக்காந்து வேடிக்கை பார்த்துட்டுப் பூடுவேன்.

வால்பையன் said...

நன்றி நட்புடன் ஜமால்

நன்றி தாமிரா

நன்றி அனானி

நன்றி மகேஷ்

நன்றி கார்க்கி

நன்றி அபுஅஃப்ஸர்

நன்றி முரு

நன்றி அபிஅப்பா

நன்றி பரிசல்காரன்

நன்றி அ.மு.செய்யது

நன்றி பப்பு

நன்றி அப்பாவிதமிழன்

நன்றி ஸ்ரீதர்

நன்றி விஜய்ஆனந்த்

நன்றி கணிணிதேசம்

நன்றி முரளிகண்ணன்

நன்றி ரம்யா

நன்றி சீனா அய்யா

நன்றி ராம்CM

நன்றி அதுசரி

நன்றி நசரேயன்

நன்றி Joe

நன்றி goma

நன்றி ராதாகிருஷ்ணன்

நன்றி எந்தமிழ்

நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்

நன்றி நர்சிம்

நன்றி நையாண்டி நைனா

நன்றி லவ்டேல்மேடி

நன்றி தமிழ்நெஞ்சம்

!

Blog Widget by LinkWithin