பிரபஞ்சவியல்......

பிரபஞ்ச அறிவியல் குறித்து தவறான புரிதலோ அல்லது புரிதல் இல்லாமையோ இருக்கலாம், ஆனால் என்ன சொன்னாலும் நாம் சொல்வதெல்லாம் பொய் என்ற ஒற்றை வாதத்தில் மதவாதிகள் நிற்பது ஒரு பொழுதும் அவர்கள் மதத்தை காப்பாற்றாது.

மதவாதிகளின் கேள்வி ஒரு கோள் அல்லது நட்சத்திரம் இவ்வளவு தொலைவில் இருக்கிறது என எப்படி கணக்கிடுறார்கள், அது நம்பும் படியாக இல்லை, அறிவியல் ஆர்வலர்கள் பகிரும் படங்கள் அனைத்தும் கம்பியூட்டரில் கிராபிக்ஸ் செய்யப்பட்டவை, கடவுளை இருப்பை மறைக்க நீங்கள் செய்யும் தில்லாலக்கடி வேலை என்பது

ஒரு எளிமையான கணித ஃபார்முலா, ஒன்பதாவது வரை மட்டுமே படித்த எனக்கு ஞாபகம் இருக்கிறது, என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றால் நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருக்க காரணம் அறியாமை என்று சொல்வதை விட அறிவிலிதனம்னே சொல்லலாம்

AB ஸ்கொயர் + BC ஸ்கொயர் = AC ஸ்கொயர் என்பது தான் அந்த ஃபார்முலா
பூமியின் ஒரு பகுதியில் இருந்து குறிப்பிட்ட கோளை படம் பிடிப்பார்கள், அதன் கோணத்தையும் குறித்து வைத்துக்கொள்வார்கள். அந்த இடம் A என கொள்க, பிறகு தொலைவில் வேறு ஒரு இடத்தில் இருந்து அதே கோளை படம் பிடிப்பார்கள், அதன் கோணத்தையும் குறித்துக்கொள்வார்கள். அதை B என கொள்க, இப்போது அந்த ஃபார்முலா மூலம் C யின் கோணத்தை அறிய முடியும்

இவ்வாறே கோள் அல்லது நட்சத்திரத்தின் தொலைவு அறியப்படுகிறது. கீழே படத்தில் குறிப்பிட்டதில் வெகு சின்ன புள்ளி நமது சூரியன். சூரியனும் ஒரு நட்சத்திரம் தான் என்பதை இவர்களுக்கு புரியவைக்கவே நமக்கு தாவூ தீருது. அடுத்து இருக்கும் சைரஸ் நம்மால் வெறும் கண்ணால் பார்க்கமுடிந்த பிரகாசமான நட்சத்திரம், காரணம் அது சூரியனுக்கு அருகில் இருப்பதால். சூரியனை விட பல நூறு மடங்கு பெரிய நட்சத்திரங்களும் நம்மால் வெறும் கண்ணால் பார்க்க முடிந்ததே, தூரத்தில் இருந்தாலும் அளவின் காரணமாக நம்மால் பார்க்க முடியும்

கீழே கொடுக்கப்பட்ட தூர அட்டவணையில் குறிப்பிடாத ஒன்று நம் சூரியன், நம் சூரியன் நம்மை விட 8 ஒளி நிமிட தூரத்தில் இருக்கிறது, அதாவது சூரியனின் ஒளி நம்மை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகிறது. ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு3 லட்சம் கிலோ மீட்டர், அப்படியென்றால் பூமிக்கும், சூரியனுக்கும் உண்டான தூரத்தை கணக்கிட்டு கொள்ளுங்கள்

SIRIUS 8.6 ஒளி ஆண்டுகள்
POLLUX 34 ஒளி ஆண்டுகள்
ARCTURUS 36.7 ஒளி ஆண்டுகள்
RIGEL 860 ஒளி ஆண்டுகள்
BETELGEUSE 640 ஒளி ஆண்டுகள்
ANTARES 550 ஒளி ஆண்டுகள்


முட்டாள்தனத்தின் இரண்டாம் ஆண்டு விழா....

டிகிரி படித்த இளைஞர்கள், மெடிக்கல் ரெப் போன்ற ஒயிட் காலர் வேலையில் இருப்பவர்களுக்கு பொருளாதாரம் பற்றி பத்து பைசாவுக்கு கூட தெரியவில்லை. பாஜகவின் முட்டாள்தனமான, அரைவேக்காட்டு தனமான பொருளாதார முடிவுகளால் நாட்டின் நிலை பற்றி சொன்னாலும் அவர்கள் காதில் எதுவுமே விழுவதில்லை, பாஜக பற்றி பேசினாலே அது இந்து மதத்துக்கு எதிரான வாதமாகவே பார்க்கிறார்கள்

நாடாளுமன்ற கூட்டுகுழுவே பண மதிப்பிழப்பு தோல்வி என வெள்ளை அறிக்கை கொடுத்தபின்பும் அருண் ஜெட்லி அதை வெற்றி என அறிக்கை விடுகிறார், பக்தாஸ் வழக்கம் போல் முட்டு கொடுத்துகிட்டு இருக்காங்க, அவர்கள் சொல்வதுகருப்பு பணம் ஒழிந்தது..

இதுவரை 99.4% அளவு பழைய நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பி விட்டன, அதிகமாக டெபாசிட் செய்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக அரசு தரப்பு சொல்கிறது, ஆனால் அவற்றை உடைக்க என்னால் கூட முடியும்,

அறிவிப்பு வரும் நாளன்று ஆந்திராவில் பாஜக பிரமுகர் ஒருவர் வீட்டில் 580 கோடி செலவில் ஒரு திருமணம் நடந்தது, சேகர் ரெட்டி மற்றும் முட்டை ஒப்பந்த நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பணமும், தங்க கட்டிகளும் எடுக்கப்பட்டது, பக்தாஸ் விசாரணை நடக்கிறது என முட்டு கொடுப்பார்கள், ஆனால் உண்மையில் அந்த பணம் திருப்பி கொடுக்கப்பட்டது, அதிமுகவின் கொட்டை பாஜகவிற்கு தேவைபட்டதால் அந்த கருப்பு பணம் பெயிண்ட் அடித்து வெள்ளையாக்கப்பட்டது

கள்ள நோட்டு ஒழிந்தது

பழைய கள்ள நோட்டு ஒழிந்ததால் பிரிண்ட் அடிந்தவனுக்கு யாதொரு நட்டமும் இல்லை, சென்ற மாதம் கோவையிலும், சென்ற வாரம் மதுரையிலும் கள்ளநோட்டு அடிக்கும் கும்பல் பிடிப்பட்டது, தமிழ்நாட்டில் இரண்டு இடங்கள் என்றால் இந்தியா முழுவதும் எவ்வளவு கள்ள நோட்டுகள் தற்பொழுது புழக்கத்தில் இருக்கும் என்பதை கணக்கிட்டுக்கொள்ளுங்கள்

வரி வருவாய் உயர்ந்தது..

வரி வருவாய் உயர்வுக்கு காரணம் ஜி.எஸ்.டி
தயாரிப்புக்கு உண்டான கச்சா பொருட்களில் இருந்து நுகர்வோர் கைக்கு வரும் வரை பல கட்டங்களில் வரி வசூலிக்கப்படுவதால் வருவாய் அதிகரித்துள்ளது, அவை அனைத்தும் நுகர்வோர் தலையில் விடிந்தது தான் உண்மை, விலை அதிகரிக்கவில்லை என்பது பக்தாஸ் வாதம், 20 கிராம் பற்பசை 15 கிராம் டியூப்பாக குறைந்தது அவர்களின் ஞானக்கண்ணுக்கு தெரியாது

வேலை வாய்ப்பு உருவானது..

உண்மையில் பணபுழக்கம் இல்லாமல் கோவை மற்றும் திருப்பூரில் மட்டும் பல குறுந்தொழில்கள் முடங்கின, அதனால் ஆயிரக்கணக்கில் வேலை இழந்தனர்,

அரசு தரும் வேலை வாய்ப்பு புள்ளி விபரம் ஒரு மோசம், எம்பாளிஸ் ப்ராஃபிடண்ட் ஃபண்ட்(EPF) என்பது ஒரு நிறுவனத்தில் 20 நபர்கள் வேலை பார்த்தால் அவர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்து அரசு வைப்பு நிதியில் சேர்க்க வேண்டும், மோடி அரசு 10 நபர்கள் வேலை செய்தாலே அவர்களுக்கு EPF பிடித்தம் செய்ய வேண்டும் என அறிக்கை விட்டது, அதனால் சிறு நிறுவனங்கள் வேலையாட்களை கணக்கில் கொண்டு வர வேண்டி இருந்தது, புதிதாக கணக்கில் வந்த அந்த பழைய ஆட்களை அரசு உருவாக்கிய வேலை வாய்ப்பாக மோசடி கணக்கு காட்டியது பாஜக அரசுஎவ்வகையிலும் பலனில்லாத இந்த முட்டாள்தனமான முடிவை முட்டு கொடுப்பதால் மட்டும் நியாயப்படுத்தி விட முடியாது, அறியாமையில் இருக்கும் மக்களை இம்மாதிரி உண்மையை எடுத்து கொள்பவர்களை இந்து மத விரோதி என்ற போர்வையில் மடை மாற்றி கொண்டிருக்கிறது அரசு. உயர்ந்த விலைவாசி, பெட்ரோல் விலை போன்றவற்றை நாட்டு நலனுக்காக என நம்பிக் கொண்டிருக்கிறது பக்தாஸ் கூட்டம்

3000 கோடி பட்டேல் சிலையில் என்ன நாட்டு நலன் கண்டீர்கள் பக்தாஸ்

மானமும், மானியமும்...........

இலவசத்துக்கும், மானியத்துக்கும் படித்த அறிவிஜீவிகளே குழப்பிக் கொள்ளுதல் நகைமுரண்
அரசு பள்ளிகளில் கட்டணம் பெறுவதில்லை, அப்படியே பெற்றாலும் அது மிக சொற்பமாகவே இருக்கும், ஆனாலும் ஆசிரியர்களுக்கும் மாணவ/மாணவியர் படிப்பு உபகரணங்களுக்கும் அரசே பணம் கொடுக்கிறது. அது இலவசமா?

மத்திய, மாநில அரசுகள் கல்வி, சுகாதாரம், மனித வள மேம்பாடு என சில முக்கிய துறைகளுக்கு மக்கள் வரிபணத்தில் இருந்து கணிசமான தொகையை ஒதுக்குகிறது. அதிலிருந்து தான் கல்விக்கும், அரசு மருத்துவமனைக்கும் மேலும் ஃபேன், மிக்ஸி போன்ற பொருட்களும் கொடுக்கப்படுகிறது
ஃபேன், மிக்ஸிக்கு பதில் வேற வழியில் மனிதவள மேம்பாட்டை யோசிக்கலாம் என்பது என் கருத்தாக இருந்தாலும் அதுவும் மக்கள் வரிபணம் தான், எந்த கட்சிகாரனும் சொந்த காசில் அதெல்லாம் கொடுப்பதில்லை, கொடுக்கும் அரசு அதில் தனக்கான விளம்பரத்தை தேடிக்கொள்வதால் தான் சினிமா வரை பேசப்படும் உறுத்தலாகி விட்டது

அரசு பள்ளியில் படித்து, இட ஒதுக்கீட்டில் வேலை பெற்ற ஒருவரின் பிள்ளை இட ஒதுக்கீடு தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என பேசிக்கொண்டு திரியிறான். இட ஒதுக்கீடு சமத்துவதை அழிக்கிறது என்று பார்ப்பனியத்தின் விசதிணிப்பு இது.
இலவச அரிசி மற்றும் இலவச பொருட்களால் ஒரு அரசு பெறும் விளம்பரத்தை விட அதிக அளவில் கொள்ளையடிக்கிறது, நமக்கு கொடுக்கப்பட்டது நம்மிடம் இருந்து வாங்கிய வரி பணம் தான் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமே தவிர, அவற்றால் தான் நாடு நாசமா போச்சுன்னு பேசுறது சிறிதும் புரிதலற்ற மேட்டுகுடிதனம்

பங்குசந்தை இன்றைய ஆலோசனை...

ஒரு ஸ்கிரிப்டில் 48000 ரூபாய் என பார்க்கும் பொழுது ஈடுபவர்களுக்கும்,  ஈடுபடநினைப்பவர்களும்  ஆசையாகவும் பணம் இல்லையே என்ற இயலாமையாகவும் தான் இருக்கும். இயற்கையானதும் கூடத்தான்

பங்கு சந்தை என்றில்லை, எந்த தொழிலாக இருந்தாலும் முதலீடுக்கு என்ற லாபம் தான் கிடைக்கும் என்பது அடிப்படை விதி. நம் திறமையால் தொழிலை வளப்படுத்தி லாபத்தை பெருக்கிக்கொள்கிறோம்.

10000 முதலீடு செய்து எனக்கு தினம் 10000 லாபம் வேண்டும் என்றால் அந்த முதலீடு 10000த்தை இழக்கவும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும், எனக்கு தெரிந்த ஒருத்தர் அப்படி சம்பாரித்தார் என்பீர்களேயானல் அவர் தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் என பாருங்கள். அனைத்தையும் இழத்து பங்கு சந்தையை சூதாட்டம் என்று அனைவரிடமும் குற்றம் சாட்டி கொண்டிருப்பார்

யெஸ் பேங்க் 96 ரூபாய்க்கு எதிர்கால ப்ங்கு வணிகத்தில் 1750 பங்கு லாபம் பார்த்தோம். ஆனால் அது சிலரால் மட்டுமே முடிந்தது. அவர்களிடம் அதற்கேற்ற முதலீடு இருந்தது. நம்மிடம் இல்லை அதை வேடிக்கை மட்டுமே பார்த்தோம்.

அதனால் என்ன? எதிர்கால பங்கு வணிகத்தில் தான் ஈடபட வேண்டும் என ஏன் நினைக்கனும். உங்கள் முதலீடு 10000 மட்டுமே இருந்தால் நடப்பு பங்கு வணிகத்தில் 9600 ரூபாய்க்கு 100 பங்குகள் வாங்கலாமே.

உலக பணகாரர் வாரன் பஃபெட்டிம் கேட்டார்களாம், உங்களுக்கு பெரிய படிப்பு அறிவும் இல்லை, கணிணி அறிவும் இல்லை. ஆனால் உங்களை விட எல்லாம் திறமையும் இருக்கும் மற்றவர்களால் ஏன் உங்களை விட அதிகம் சம்பாரிக்க முடியவில்லை என்று, அதற்கு அவர் சொன்ன பதில்

அவர்களுக்கு பொறுமை இல்லை என்பது தான்

பங்குவணிகத்தில் திட்டமிடுதல் அவசியம், பொறுமை அவசியம், கூடாவே கூடாத விசயம் பேராசை. பேராசை இருந்தால் லட்சமே இருந்தாலும் ஒரே நாளில் இழக்கக்கூடும்

ஒரு நாளைக்கு 10 பரிந்திரைகள் செய்கிறேன் என்றால் பத்திலும் பத்து பத்தாக முதலீடு செய்யுங்கள், ஒரே பரிந்துரையில் முதலீடு செய்து மாற்றம் இல்லையே என கன்னத்தில் கை வைத்தால் அது யார் தவறு, அதை தான் திட்டமிடல் என்றேன்.

இனிவரும் வர்த்தக நாள்களில் உங்களிடம் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். உங்களை சந்தேகங்களை கேளுங்கள். நம்பிக்கை இழக்காதீர்கள். சரியான பாதையில் சென்றால் சரியான இடத்திற்கு தான் செல்வோம்


எதிர்கால பங்குசந்தை...

பலருக்கு பங்கு சந்தை பற்றிய அடிப்படை புரிதல் இருந்தாலும் சிலருக்கு F&O என அழைக்கப்படும் future and options பற்றிய புரிதல் இல்லை. அதை பற்றிய விளக்க பதிவு இது.

நடப்பு பங்கு சந்தை என்பது நீங்கள் ஒரே ஒரு பங்கை கூட வாங்கலாம். அதை cash அல்லது equity என அழைப்பார்கள். ஃபியூச்சர் என்பது எதிர்கால பங்குன்னு சொல்லலாம், ஏன்னா நடப்பு பங்குக்கும் எதிர்கால பங்குக்கும் விலை வித்தியாசம் இருக்கும்

எதிர்கால பங்குக்கு உதாரணமா யெஸ் பேங்கை எடுத்துகிறேன். அதில் என்ன ஒரு சிறப்புன்னா அவை காண்ட்ராக்ட் முறையில் ட்ரேட் ஆகும், மேலும் வேவ்வேறு பங்குகளுக்கு லாட் சைஸ் இருக்கும், யெஸ் பேங்க் லாட் சைஸ் 1750.

நடப்பு பங்கை நீங்க 1750 யெஸ் பேங்க் பங்குகள் வாங்கினால் இன்றைய நான் வாங்க சொன்ன விலையான 196க்கு 343000 பணம் செலுத்த வேண்டும். அதுவே எதிர்கால யெஸ் பேங்க் பங்குகளை வாங்க அதே அளவு பங்குகளுக்கு அதில் 15% ஆன 51450 ரூபாய் செலுத்தினால் போதும்

இதில் என்ன ரிஸ்க் இருக்குனா இன்று என் பரிதுரை படி யெஸ் பேங்கில் லாபம் 14000. அதாவது நீங்கள் முதலீடு செய்த 51450 ரூபாய் லாபம் அவ்வளவு. அதுவே மார்கெட் உல்டா ஆகி கீழே இறங்கினா அதே அளவு நட்டத்தையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்(அதனால் பெரும்பாலோர் எக்ஸ்பெர்ட்கிட்ட ஐடியா வாங்குறாங்க)

யேஸ் பேங்க் என்பது உதாரணம் தான். அனைத்து பங்குகளுக்கும் எதிர்கால மார்கெட் இருக்கு. அதில் எவை நல்ல நிலையில் இருக்கு. அதன் மார்கெட் வேல்யூ, நம் கையிருப்பு பணம் மற்றும் நம்மால் எவ்வளவு இழப்பை தாங்க முடியும் என்பதை பார்த்து முதலீடு செய்ய வேண்டும்.MCX என அழைக்கப்படும் கமாடிடி மார்க்கெட்டும் அப்படி தான், அதில் எதிர்கால சந்தை மட்டுமே உண்டு. அதில் ஒவ்வொரு ஸ்கிரிப்டுக்கும் மார்ஜின் வேறு படும், தங்கத்தில் 15% உங்கள் கையிருப்பு இருக்க வேண்டும், இன்றைய 24 கேரட் தங்கம் 10 கிராம் தங்கம் விலை 31800 என்றால் ஒரு கிலோ விலை 3180000. அதில் 15% 477000 உங்கள் கையிருப்பில் இருக்க வேண்டும்

இது பொது விதி, ட்ரேடிங் நிறுவனங்கள் உங்களுக்கு சலுகை கொடுக்கும், அதே 477000 பணத்துக்கு நீங்க 5 லாட் அதாவது 5 கிலோ வாங்கி கொள்ளலாம் என சலுகை கொடுக்கும், அப்படியானல் ஒரு லாட் அதாவது ஒரு கிலோ வாங்க அந்த தொகையில் ஐந்தில் ஒரு மடங்கான 95400 ரூபாய் இருந்தால் போதும்.

இதே சலுகை எதிர்கால பங்குகளுக்கும் உண்டு. இருந்தாலும் money management படி நம்மிடம் தேவையை விட கொஞ்சம் அதிகமாக வைத்துக்கொள்வது நட்டம் அடைவதை தடுக்கும். கமாடிடியில் நிறைய ஆப்சன் இருக்கு. 100 கிராம் கூட வாங்கலாம், 5 கிலோ சில்வர், ஒரு கிலோ சில்வர் கூட வாங்கலாம். நம்மிடம் இருக்கும் பணம், நம்மால் தாங்க முடியும் இழப்பை பொறுத்து நாம் முதலீடு செய்தால் போதும்எப்போதும் மார்க்கெடில் ஜெயிக்கலாம்

போட்டோவில் இருப்பது இன்று நான் கொடுத்த பரிந்துரையில் சின்ன சாம்பிள்

!

Blog Widget by LinkWithin