கனா கண்டேன்!

தமிழுக்கு இப்படியெல்லாம் சோதனை வரும்னா யார் வந்து காப்பாற்றுவது! என்ன செய்ய அதுவும் என்னால், வெள்ளி இரவு தான் அந்த கனவு வந்தது. எனக்கு இன்சோம்னியா இருப்பதால் என் கனவை என்னால் உணர முடியும், வழி நடத்த முடியும், அப்படியே உள்வாங்கி கொள்ள முடியும்,
ஞாபகம் வைத்து கொள்ளமுடியும். என் கனவில் நான் தான் நாயகன் ஆனாலும் அதையே எட்ட நின்று பார்க்க முடியும்.

இது தான் கனவு

நான் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். அதற்காக பாராட்டுகள், சில கேள்விகள்.
நானே எனது நாவலை ஒரு முறை படித்து பார்க்கிறேன். உண்மையில் அப்படி ஒரு நாவலை நான் படித்ததில்லை. அதாவது கதை கோணத்தை சொல்கிறேன்.

கதை இரண்டு பெண்களை மையப்படித்தி உள்ளது.
ஒரு பெண் பிரபல நடிகை, ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொள்கிறாள்.
திருமணதிற்கு பிறகும் அவளது நடவடிக்கை மாறவில்லை.
கணவன் கண்டிக்கிறான். திருமணதிற்கு முன்னரே சொல்லிவிட்டேன் நான் ஒன்றும் பத்தினி இல்லையென்று, என்னை கண்டிக்கும் உரிமை உனக்கில்லை என்கிறாள்.

கணவன் தனது பணபலத்தால் அவளுக்கு வரும் வாய்ப்புகளை தடுக்கிறான். இவளுக்கு முன்னை விட அதிகம் ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது.
கணவன் விவாகரத்துக்கு போகிறான். உண்மையில் அது அவளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது


மற்றொரு பெண் ஒரு தொழிலதிபரின் மகள், ஒரு நடிகரை திருமணம் செய்து கொள்கிறாள்,
இங்கேயும் அதே பிரச்சனை ஆனால் வேறு மாதிரி போகிறது.
தன் கணவனை பழி வாங்குவதாக நினைத்து கொண்டு தானும் பல ஆண் நண்பர்களை சேர்த்து கொள்கிறாள். ஆனாலும் அவளுக்கு கணவன் செய்யும் தவறை ஏற்று கொள்ளமுடியவில்லை.
அவளும் விவாகரத்து வாங்குகிறாள்.

இது தான் கதை கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கிறேன்(கனவில்).
இது போல் ஒரு கதையை, நாவலை இதற்கு முன் படித்ததில்லை. ஒருவேளை யாரேனும் படித்திருந்தால் சொல்லவும். அப்படி ஒன்று இல்லாவிட்டால் நானே எழுதி விடலாம் என்று உத்தேசம்.

படிப்பதும் படிக்காததும் உங்கள் இஷ்டம் மற்றும் கஷ்டம்.
**********************

இன்றோடு எனது நட்சத்திர வாரம் முடிகிறது. ஆதரவளித்த அனைத்து நட்புகளுக்கும் நன்றி

34 வாங்கிகட்டி கொண்டது:

நட்புடன் ஜமால் said...

கஷ்ட்டமல்ல

இஷ்ட்டமே

நட்புடன் ஜமால் said...

எனக்கு இன்சோம்னியா இருப்பதால் என் கனவை என்னால் உணர முடியும்\\

புதசெவி

நட்புடன் ஜமால் said...

அவசியம் எழுதுங்கள்

படிப்போம் ...

ஆ.ஞானசேகரன் said...

நன்றாக நட்சத்திர வாரம் முடிக்கின்ற நட்சத்திரம் வாழ்த்துகள்! கதையின் போக்கு நன்றாகதான் இருக்கின்றது, நீங்களே எழுதுங்கள்

கணினி தேசம் said...
This comment has been removed by the author.
கணினி தேசம் said...

நல்லா காண்றாங்கய்யா கனவு ...!!

கணினி தேசம் said...
This comment has been removed by the author.
கணினி தேசம் said...

கதை வித்தியாசமாத்தான் இருக்கு.
தாராளமா எழுதுங்க...!

படிக்கறோமோ இல்லையோ, நிச்சயமா வாங்குவோம் :))

கணினி தேசம் said...

நட்சத்திர வாரப் பதிவுகளுக்கு வாழ்த்துகள் !!

thevanmayam said...

நல்லாத்தான் இருக்கு!!
நாவல் எழுதுங்க.

thevanmayam said...

நட்சத்திர பதிவர்
வாழ்த்துக்கள்!!!!

வெல்டன்!!!

thevanmayam said...

நல்ல சந்தர்பத்தை
நன்கு பயன் படுத்தியுள்ளீர்!!!

ஊர் சுற்றி said...

அப்துல் கலாம் சொன்ன அந்த 'கனவு காணுங்கள்' இதுதானோ?! ;)

கலை - இராகலை said...

நட்சத்திர பதிவர்
வாழ்த்துக்கள்!!!!
கதை சூப்பரா இருக்கும் எழுதுங்க வாழ்த்துக்கள்

Arun Kumar said...

தலைவா கதை நன்றாக இருக்கிறது.. டெவலப் செய்து நாவலாக எழுதவும். பாலசந்தர் இதே போல நிறைய படங்கள் எடுத்து இருக்கிறார்.. அவர் பட கதைகளை எல்லாம் உபயோகமாக இருக்கும்..please refer

cheena (சீனா) said...

ஏம்பா வாலு என்ன இது - இப்படி எல்லாம் கனவு காண்றே !

எலக்கியரசிகன் said...

அற்புதமான கதை!
கண்டிப்பா ஒலக எலக்கியத்தில் எடம் புடிக்கும். வா'ல்'த்துக்கள்!

புதியவன் said...

கனவு நல்லா இருக்கு...நாவல் எழுதுங்க படிப்போம்...தமிழ்மணம் நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்...

MayVee said...

super....
fantastic....
awesome....

for first time in world history...
a story like ths is written

இதை தான் அப்துல் கலாம் ஐயா கனவு காணுங்கள் என்று சொன்னாரோ

சரி சீரியஸ் அஹ
பார்த்தால் பிரபல novel சாயல் தெரியுதே .........

சரி .....
எவ்வளவோ படிச்சிடோம்....
இதை படிக்க மாட்டோமா.........
எழுதுங்க TAIL BOY .......

Anonymous said...

தளைவா நல்ல கதை சொள்ளவருதே உனக்கு. நகைச்சுவையாக எப்படி உனக்கு மட்டும் எளுதா முடிகிறது. தூள் கிழ்ப்புகிராய் போ. விலையாட்டும் வேடிக்கையுமாய் எளுதுவதில் நீ கிள்ளாடி!!. நட்சத்திர பதிவு முடிந்தாலும் நீ எங்கல் நட்சத்திரம். நள் வால்த்துக்கள்.

அ.மு.செய்யது said...

ஆஹா..இலக்கிய ஆர்வலர்...

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி...

வாழ்க !!!!!!!!

லவ்டேல் மேடி said...
This comment has been removed by the author.
லவ்டேல் மேடி said...

// கனா கண்டேன்! //


யோவ் ... !!! எப்புடிய்யா உநெக்கேல்லாம்.........????


// தமிழுக்கு இப்படியெல்லாம் சோதனை வரும்னா யார் வந்து காப்பாற்றுவது! //


பக்கி .....!! உன்கிட்ட இருந்து வலை பதிவு மக்கள யாரு காப்பத்துரதுன்னு ஊரே யசிச்சுகிட்டு இருக்குது ......!! ஆனா நீ தமிழ யாரு காப்பத்துரதுன்னு யோசிக்கிறியா....???


// எனக்கு இன்சோம்னியா இருப்பதால் என் கனவை என்னால் உணர முடியும், வழி நடத்த முடியும், அப்படியே உள்வாங்கி கொள்ள முடியும்,
ஞாபகம் வைத்து கொள்ளமுடியும். //


அடேய் ... காப்பர் ஒயர் மண்டையா ......!! உட்டா வாயில இருந்து லிங்கமெல்லாம் கக்கி .. ,, காதுல இருந்து விபூதி .. குங்குமம் குடுப்பியாட இருக்குதே ....!!!


// என் கனவில் நான் தான் நாயகன் ஆனாலும் அதையே எட்ட நின்று பார்க்க முடியும். //

அட கன்றாவியே .... !!! உன்னாலேயே உன் பக்கத்துல நிக்க முடியல பாத்தியா .....!!! பல்ல வெலக்கி தொலைன்னா ... கேக்குறியா .... !!!!!!


// நான் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். //


எத பத்தி .....??? " பல்லு வெளக்காம , குழிக்காம , மேலும் பல .. பல .... !! பல வருடங்கள் எப்படி உயிர் வாழலாம் " அப்படிங்குற நாவல்தான ....!!

இத உங்க , க.. க.. க.. போ ... மொதலாளிக்கு குடு .... !! நெம்ப சிறப்பா இருக்கும் ....!!!


// நானே எனது நாவலை ஒரு முறை படித்து பார்க்கிறேன். //


இந்த புக்க வெளியிட்ட அந்த நாத்தம்புடுச்ச பதிப்பகத்தோட பேரு என்ன கண்ணு ....???


// உண்மையில் அப்படி ஒரு நாவலை நான் படித்ததில்லை. //


அட கம்முனாட்டி .... !! அத நீதானய்யா எழுதுன ......!!!!// ஒரு பெண் பிரபல நடிகை, ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொள்கிறாள். //


யாரு காவியத் தலைவி ஷகிலாவா ...??? தொழிலதிபர் நீயாத்தான் இருக்கணும்...?// திருமணதிற்கு பிறகும் அவளது நடவடிக்கை மாறவில்லை. //


அப்புடி என்ன நடவடிக்கை சாமி .....???// கணவன் கண்டிக்கிறான். //


கண்ண்டுச்சுதான வெக்குரான் ....!!! கடுச்சு வெக்குலீலா.......???


// திருமணதிற்கு முன்னரே சொல்லிவிட்டேன் நான் ஒன்றும் பத்தினி இல்லையென்று, என்னை கண்டிக்கும் உரிமை உனக்கில்லை என்கிறாள். ///


சபாஷ்...!!! சரியான பதில்....!!!!


// கணவன் தனது பணபலத்தால் அவளுக்கு வரும் வாய்ப்புகளை தடுக்கிறான். //


லூசுப்பய ...!! அவனும் போத்திக்கமாட்டான் .....!! அடுத்தவனையும் போத்திக்க உடமாட்டான் ......!!!!// இவளுக்கு முன்னை விட அதிகம் ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது. //


நல்ல சான்சு...!! நடிகைக்கு என்னோட வாழ்த்துக்கள் .....!!!!!


// கணவன் விவாகரத்துக்கு போகிறான். உண்மையில் அது அவளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. //


அட பழம் நழுவி பால்லையே உளுந்துருச்சு போ.....!!!!


// மற்றொரு பெண் ஒரு தொழிலதிபரின் மகள், ஒரு நடிகரை திருமணம் செய்து கொள்கிறாள், //

யோவ் வெங்காயம் ......!! என்னய்யா .... கொலப்புர.......!!!!// இங்கேயும் அதே பிரச்சனை ஆனால் வேறு மாதிரி போகிறது.
தன் கணவனை பழி வாங்குவதாக நினைத்து கொண்டு தானும் பல ஆண் நண்பர்களை சேர்த்து கொள்கிறாள். ஆனாலும் அவளுக்கு கணவன் செய்யும் தவறை ஏற்று கொள்ளமுடியவில்லை.
அவளும் விவாகரத்து வாங்குகிறாள். //


சகிக்கல ...........// இது போல் ஒரு கதையை, நாவலை இதற்கு முன் படித்ததில்லை. //


அடேய் .... 29'' இன்ச் மண்டையா .....!! இந்த மொன்ன கதைய ..... நீ படுச்சாதே இல்லையா .......!!


அடேய் ..... மருவாதையா ஓடியே போயிரு .....!! இல்லீனா நீ பல்லு வெலக்கீட்டைன்னு ஊருக்குள்ள எல்லார்த்துகிட்டயும் சொல்லி , உன்ன அசிங்கப் படுத்தீருவேன் .....!!!!!

தாமிரா said...

ஸ்ட்ரைட்டா ஹீரோ மாதிரி ஸ்ட்ரைட்டா நாவலா.. நடத்துங்க.. (லவ்டேல் மேடி யாரு உங்க பிரெண்டா? இந்த கிழி கிழிக்கிறார்..)

ச்சின்னப் பையன் said...

நட்சத்திர வாரப் பதிவுகளுக்கு வாழ்த்துகள் !!

Anonymous said...

இத நாவலா எழுதுவதவிட படமா எடுத்தா சும்மா பிச்சுகிட்டு போகும்.

RAMYA said...

//
எனக்கு இன்சோம்னியா இருப்பதால் என் கனவை என்னால் உணர முடியும்
\\

நிஜம்மாவா???

RAMYA said...

நட்ச்சத்திர வாரம் வெற்றிகரமாக முடித்ததிற்கு வாழ்த்துக்கள் வால்ஸ்!!!

RAMYA said...
This comment has been removed by the author.
Anonymous said...

இன்று முழுவதும் ஒரு பதிவும் எளுதாமல் நன்ராக எங்கழை ஏமார்ரி விட்டீர்கல். நள்ள பதிவர்கல் தொடற்ந்து எளுத வேணும் இள்ளையா ? நள்ள பதிவுடன் மீண்டும் வறுவீற்கல் ஏன்ரு நம்புகிர்ரேன்.

mony said...

லவ்டேல் மேடி-யா ?

லவ்தேள் மேடி-யா ?

என்னாச்சுப்பா அந்தாளுக்கு?

நல்லா இருக்கு பிரதர் ... நீங்களே எழுதுங்க .

இப்படித்தான் உலகம் முன்னேற விடாம தடுக்கும்

கண்டுக்காதீங்க ...

வாழ்த்துகள் ... ___ மோனி

லவ்டேல் மேடி said...

// mony said... //


வாய்யா மோனி ....!!! எங்கடா எந்த அறிவாளியும் சிக்கலைனு பாத்துகிட்டு இருந்தேன் ..!! ராசா ...... நீயா வந்துட்ட ....!!!
// லவ்டேல் மேடி-யா ?

லவ்தேள் மேடி-யா ? //ஏனுங் தம்பி ...... உங்குளுக்கு தமிழ் வராதா ......?? சரி உம்பட சாய்ஸ்..... எது வேணுமுன்னாலும் வெச்சுக்கோ ........!!!
/// என்னாச்சுப்பா அந்தாளுக்கு? //ரொம்ப நாளா கொடச்சல் .... !! ஏந்தம்பி வந்து வைத்தியம் பாக்குறியா....??????// நல்லா இருக்கு பிரதர் ... நீங்களே எழுதுங்க . //
சொல்லீட்டாருயா ..... கவிச்சக்கரவர்த்தி .....!! யோவ் வாலு .... , அப்பறமென்ன ...!!! அதுதான் பெரியவிங்களே சொல்லியாச்சுல்ல ......!! உம்ப இச்டதிக்கு கிரிக்கி தள்ளு .......!!!!

ஆமா ...!! ஆமா ...!! நீயே எழுது ...!!!! முடியலைனா இந்த பிரதர் வந்து எழுதுவாரு ...!!!!

// இப்படித்தான் உலகம் முன்னேற விடாம தடுக்கும்.. !!
ஆமாங்கோவ் .....!!! ஏனுங்.... வாலு நச்சத்திரம் .....!! இந்த ஒலகமே உன்னைய முன்னேற உடாம தடுக்கும் ....!! தம்பி பாரு சனி கிரகத்துல சாமி மாதிரி வந்துருக்காரு ...... , அவரோடையே போயிரு ...!!! அங்க போனைனா ....... பிரதர் உன்னைய நல்ல முன்னேத்துவாறு ....!! அங்க பல்லும் வெளக்க வேண்டாம் ..... குளிக்கவும் வேண்டாம்...!! இன்னுமும் உம்பட இஸ்ட்டத்திக்கி எதுமுமே செய்ய வேண்டாம் .....!!!!
// கண்டுக்காதீங்க ... //
அடங்கொன்னியா .......!!! ஆமாங்கோவ் .....!! நீங்குளுமும் எங்களைய கண்ண்டுக்காத ....!! நாங்குளுமும் உங்களைய கண்டுக்க மாட்டோம் .....!!!!/// வாழ்த்துகள் ... ___ மோனி //


ஆமாங்கோவ் ....!!! யோவ் வாலு மண்டையா.... !!!! உனக்கு வாழ்த்துக்கள் ....!!! இனிமேலு உனக்கு நெம்ப சிறப்பா இருககும் ......!!!

வால்பையன் said...

நன்றி நட்புடன் ஜமால்

நன்றி ஆ.ஞானசேகரன்

நன்றி கணிணிதேசம்

நன்றி தேவன்குமார்

நன்றி ஊர்சுற்றி

நன்றி கலை

நன்றி அருண்குமார்

நன்றி சீனா

நன்றி எலக்கியரசிகன்

நன்றி புதியவன்

நன்றி MayVee

நன்றி அனானி
என்னைவிட கொஞ்சம் தான் அதிகம் எழுத்துபிழைகள்

வால்பையன் said...

நன்றி அ.மு.செய்யது

நன்றி லவ்டேல் மேடி
//அடேய் ... காப்பர் ஒயர் மண்டையா//

உங்களுக்கு மட்டும் எப்படி புதுசு புதுச பேரு வக்க தோணுது! உங்க கற்பனை வளம் மட்டும் எனக்கிருந்தா எப்பவோ நாவல் எழுதியிருப்பேன்

நன்றி தாமிரா
தன் வினை தன்னை சுடும்.
நான் மற்றவர்களை கலாய்த்தேன்.
அது இப்போ ரிவேர்ஸ் ஆகிருக்கு

நன்றி ச்சின்னபையன்

நன்றி அனானி
பைனான்ஸ் நீங்க பண்றிங்களா

நன்றி ரம்யா

நன்றி மோனி
தவறா எடுத்துக்காதிங்க
அவரு எனது நண்பர் தான்!
நான் தான் காசு கொடுத்து திட்ட சொல்லிருக்கேன்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்

ஆனா நீங்க வாய கொடுத்து மாட்டிகிட்டிங்களே

சும்மா தமாசுக்கு தான்! இதெல்லாம் கண்டுகாதிங்க நண்பரே!

!

Blog Widget by LinkWithin