சரக்கு அடித்தல்!

மூலம் இங்கே!
அத படிச்சிட்டு படிச்சா தான் ஒரு கிக்கா இருக்கும்!

திறந்திருந்த சரக்கும்
திறக்காத வாட்டர் பாட்டிலும்
டேபிளில் நின்றிருந்தன
பலகாலமாய் விற்காத
சுண்டல் தட்டில்,
கூடவே சிக்கன் துண்டுகளும்
நாறத் துவங்கின
சிகரெட்டோ பீடியோ;
நல்ல கம்பெனி சரக்குக்கு
தெறியாதவர் இங்கெதுக்கு;
எதிரிருந்த டேபிளில்
பாதி தீர்ந்த குவாட்டரும்
சாய்ந்து ஓடிய
வாட்டர் பாட்டிலும்
போதையின் சுவையை
குறிப்பில் காட்டியது.
பூமியில் வாழ்வெதென்பது
துக்கத்தை மறத்தலும்
சுகத்தில் முதத்தலும்.
கழிந்த வாழ்க்கை
எடுக்கப்பட்ட வாந்தி;
பின்வரப்போகும் வாந்தி
கழிய போகும் நாளில் மற்றொன்று.
மனம் நொந்த நாட்களில்
அண்டை வீட்டில்
கடன் வாங்கியாவது
சரக்கடி!

47 வாங்கிகட்டி கொண்டது:

ஜீவன் said...

//மனம் நொந்த நாட்களில்
அண்டை வீட்டில்
கடன் வாங்கியாவது
சரக்கடி!//

;;)))

Rajeswari said...

எங்க ஏரியா இல்லப்பா

ஜோதிபாரதி said...

:):):)

ஸ்ரீதர் said...

கழிந்த வாழ்க்கை
எடுக்கப்பட்ட வாந்தி;
பின்வரப்போகும் வாந்தி
கழிய போகும் நாளில் மற்றொன்று.
மனம் நொந்த நாட்களில்
அண்டை வீட்டில்
கடன் வாங்கியாவது
சரக்கடி!

ஒரு பய இது வரைக்கும் சொல்லாத தத்துவம்யா.கண்ணே கலங்கிடுச்சு.அடங்க மாட்டன்றியே பாஸு.பின்னிட்டீங்க போங்க.

ஜோதிபாரதி said...

சரக்குன்னா மலேசியாவுல வேறு பொருள் சாமியோவ்!
இதற்கு தம்பி விக்கி ஒரு சிறுகதையுடன் விளக்கம் அளிப்பார்!
விக்கியை மாட்டி வுட்டுட்டேனா?!

தமிழ் பிரியன் said...

:))

VIKNESHWARAN said...

:))

Mahesh said...

இந்த வாரம் எதிர்கும்மி வாரமா?

அனுஜன்யா அண்ணாத்த இன்னாமா ஃபீலிங் பண்ணி எள்தி கீறாரு? இன்னாமோ அசால்டா அட்ச்சு வுட்டியெபா. சர்க்கு உள்ள இன்னாமோ மேட்டர் சொல்லிகீற பாரு... ஹி ஹி ஹி நல்லாவே கீதுபா.

சிவாஜி said...

//கழிந்த வாழ்க்கை
எடுக்கப்பட்ட வாந்தி;
பின்வரப்போகும் வாந்தி
கழிய போகும் நாளில் மற்றொன்று.//

அப்ப, சரக்கு அடிச்செல்லாம் வாழ்க்கையை ஜீரணிக்க முடியாதுங்கிறீங்க...
அருமை!!!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஈழத்திலும் "சரக்கடித்தல்" என்பது வேற தானுங்கோ!!!

ஹேமா said...

வால்பையன்,அத்தனை வரிகளும் அசத்தல் தத்துவம்.
அதென்னா "சரக்கு"இதுக்கு அகராதில வேற என்னமோ இருக்கே !

அபுஅஃப்ஸர் said...

//பின்வரப்போகும் வாந்தி
கழிய போகும் நாளில் மற்றொன்று.
மனம் நொந்த நாட்களில்
அண்டை வீட்டில்
கடன் வாங்கியாவது
சரக்கடி!//

ரசித்த வரிகள்

சரக்கைப்பற்றி இவ்வளவு சரக்கு இருக்கா

எம்.எம்.அப்துல்லா said...

கிக்காயிட்டேன் :)

தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...

அங்கே புர்லன்னு பின்னூட்டம் போட்டுவிட்டு வருகிறேன்.. இது தெளிவா புரியிது.

RAMYA said...

என்ன வால்ஸ் கவிதை தெரியாது நினைச்சுகிட்டே ரொம்ப நல்லா எழுதறீங்க.

முழு நேரே கவிதை எழுதுங்க, உங்களுக்கு கவிதை அதுவும் (சரக்கு) நல்லா வருது.

இன்னும் எவ்வளவு கவிதை இப்படி வச்சு இருக்கீங்க, சரி ஒன்னொன்னா எழுதுங்க நாங்க படிக்கறோம்.

அண்ணன் வணங்காமுடி said...

கவிதை மிக அருமை

http://arivalee.blogspot.com/2009/03/blog-post.html

சென்று பாருங்கள் இதன் விளைவுகளை.

ஆ.ஞானசேகரன் said...

வாலு,... சிங்கபூர், மலேசியாவில் சரக்குக்கு வேர பேருங்கோ!.....

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தாங்க முடியல.
பக்கத்துல வரவே முடியல..
கப்புன்னு தூக்குது வாடை..
குடலைப் புரட்டுது வாந்தி..
இது எவன் காசால வந்த வாந்தின்னு
சிபிஐ விசாரணையா வைக்க முடியும்..?
எல்லா வாந்தியும் ஒண்ணுதான்..
மனசு நொந்திருச்சுன்னு ஒரே காரணத்தைத்தான்
அத்தனை வாந்தியும் சொல்லுது.
ஆனாலும் ஒரு வாந்தியும் நின்னபாடில்லை..
மனசு நோவுறதும் நின்னபாடில்லை..
என்ன செய்ய..?
இந்த கவுஜையை படிச்ச சோகத்துக்கு
இருங்க.. வாலு இன்னொரு பெக்கு
அடிச்சிட்டு வருவாரு..
அப்புறம் பின்ன ஒரு வாந்தி..!

பொடியன் said...

வணக்கம் தலைவா...

நான் வெறும் ரெசிபி தான் போட்டேன்... நீங்க அடிச்ச சரக்கு மப்புல அருமையா ஒரு கவிதையே போட்டுடீங்க... இந்த பீலிங் எல்லாம் சாமானிய மக்களுக்கு புரியாது..

அதையும் தாண்டி....

//பாதி தீர்ந்த குவாட்டரும்
சாய்ந்து ஓடிய
வாட்டர் பாட்டிலும்//

என்ன ஒரு எதுகை மோனை.. இப்படி கத்து குடுத்திருந்தா தமிழ்ல ஒரு பெரிய புலவனாகியிருப்பேன்.po

நட்புடன் ஜமால் said...

Rajeswari said...

எங்க ஏரியா இல்லப்பா\\

நானும் கூவிக்கிறேன் ...

muru said...

//பலகாலமாய் விற்காத
சுண்டல் தட்டில்,
கூடவே சிக்கன் துண்டுகளும்
நாறத் துவங்கின//

புதுப் பொழிவுடன் அரசு நடத்தும் பார்-ன்னு போர்டு வைச்சிருந்தாலும், நாறத்தான் செய்யும், பலகாலம் விற்க்காத சுண்டல்.

கிரி said...

:-))))))))))

அருண் கவிதை! நல்லா இருக்கு

MayVee said...

"இவ்வளவு தூரம் வந்துரிக்கிங்க!
எதாவது சொல்லிட்டு போங்க "

a for apple
b for book
c for cat
d for door
e for elephant
f for face........

pothuma....
kavithaiyai unga area patri kalakkirukinga ......

MayVee said...

"நட்புடன் ஜமால் said...
Rajeswari said...

எங்க ஏரியா இல்லப்பா\\

நானும் கூவிக்கிறேன் ..."

nambittom

MayVee said...

"Rajeswari said...
எங்க ஏரியா இல்லப்பா"

en area trichy tiruverumbur nga ...
irunthalum naan comment pannuren la

அனுஜன்யா said...

அதகளம் குரு. 'எதிர்-கவிதை விற்பன்னர்' என்று பட்டம் கொடுக்கப் படுகிறது :)

அனுஜன்யா

Subbu said...

நல்லா இருக்குதுன்னே :)))))))))))))

ராம்.CM said...

சரக்கு அடிச்செல்லாம் வாழ்க்கையை ஜீரணிக்க முடியாதுங்கிறீங்க...
அருமை!!!!
ரிப்பீட்ட்டு!

கணினி தேசம் said...

நாங்கெல்லாம் சரக்க மறந்து இருக்கறது உங்களுக்கு புடிக்கலையா?

//
மனம் நொந்த நாட்களில்
அண்டை வீட்டில்
கடன் வாங்கியாவது
சரக்கடி!//

இப்படியெல்லாம் ஏத்தி வுடுறீங்க, நியாயமா இது?

தங்கமணிகிட்ட அடி வாங்க வச்சிருவீங்க போலிருக்கே.

Raja
ராஜா
said...

காலேஜ் நாட்கள்

http://snehidha.blogspot.com

Anonymous said...

:)

தமிழன்-கறுப்பி... said...

:))

தமிழன்-கறுப்பி... said...

தண்ணி அடிக்கும் போது ரொம்ப பேசுவிங்கன்னு நினைக்கிறேன்..:)

தமிழன்-கறுப்பி... said...

நம்மளும் அப்படித்தான் தண்ணியடிச்சா தனியா சரி உக்காந்து மொக்கைப்போடுவோம் யாராவது மாட்டினா அவ்ளோதான் அவன் போதை இறங்குற வரைக்கும் விடமாட்டம்ல...

தமிழன்-கறுப்பி... said...

எதிர்க்கவிதை சூப்பரு வால்...!

லவ்டேல் மேடி said...

// சரக்கு அடித்தல்! //


அடங்கொக்க மக்கா ......!!! யோவ் வாலு .............. பட்டய காச்சு....... ..!! த்து ... சாரி.....!! பட்டய கெளப்பு .......!!!!// மூலம் இங்கே! //


அடக்கன்றாவியே .... !! யோவ் ..... நல்ல டாக்டரா பாருய்யா ....!!// திறந்திருந்த சரக்கும்
திறக்காத வாட்டர் பாட்டிலும்
டேபிளில் நின்றிருந்தன //நெம்ப நேரம் நின்னா காலு ரெண்டுமு நோவும்......!! சித்தநேரம் ரெண்டையும் கோரச்சொல்லு.......!!!!// பலகாலமாய் விற்காத
சுண்டல் தட்டில்,
கூடவே சிக்கன் துண்டுகளும்
நாறத் துவங்கின //


அடேய் கிங்க்பிஷர் மண்டையா.....!!! சரக்க்கே............ ஊரிப்போயி நாரிதான் வருது ....... !!! இதுல சைடு டிஷ் எப்புடி இருந்தா என்ன....!!// சிகரெட்டோ பீடியோ;
நல்ல கம்பெனி சரக்குக்கு
தெறியாதவர் இங்கெதுக்கு; //


ஏந்தம்பி....... , தெரியாதவிங்க வந்தா ... நீ சொல்லிதரமாட்டியா......?????/// எதிரிருந்த டேபிளில்
பாதி தீர்ந்த குவாட்டரும்
சாய்ந்து ஓடிய
வாட்டர் பாட்டிலும்
போதையின் சுவையை
குறிப்பில் காட்டியது. //


எதுக்கு .......?? எவுனும் பாகுலீனா .... அதையமும் அமுக்கீட்டு வந்து உன் டேபுள்ள வெச்சுக்கிரதுக்கா ...........!!! யாருகிட்ட காட்டுற உன் டகால்டி வேலையெல்லாம்.....!!!!// பூமியில் வாழ்வெதென்பது
துக்கத்தை மறத்தலும்
சுகத்தில் முதத்தலும். //


இத யாரு..... உங்கொப்புக்க்சி சொன்னாரா.......???


அடேய் ஆப்கன் மண்டையா...... ,,, சரக்கடிக்கிரதுக்கு பழைய பழமொழி எத்துக்குடா சொல்லுரிங்க.... !! புதுசா ஏதாவது யோசிங்கடா......!!!!// கழிந்த வாழ்க்கை
எடுக்கப்பட்ட வாந்தி;
பின்வரப்போகும் வாந்தி
கழிய போகும் நாளில் மற்றொன்று. //


ஆகா மொத்தத்துல ..... வாழ்க்கையே நாத்தம் புடுச்சதுன்னு சொல்லுற........!!

பல்லு வெளக்கமா யோசிச்சா ....... இப்படியெல்லாம் கவுஜ வருமோ......????


// மனம் நொந்த நாட்களில்
அண்டை வீட்டில்
கடன் வாங்கியாவது
சரக்கடி! //


அட மவுஸ் மண்டையா....!!! அண்டை வீட்டுல எதுக்கு கடன வாங்குற.....!!! கடனே வாங்காம ஒரு ஐடியா சொல்லுறேன் கேளு....!!!!


உங்க மொதலாளி எந்த விசியம் சொன்னாலும் ..... எக்ஸ்சலன்ட் ..... மார்வலஸ் .... சான்சே இல்ல...... சூப்பர் ...... இப்புடியெல்லாம் சொன்நீனா.... அந்த கருமாண்டி பய ஓசியிலயே சரக்கு வாங்கி குடுத்துருவான் ......!! அப்பறமென்ன அவன் மண்டைய கழுவி கமுத்தீறு .......!!!!! ஏற்கனவே நீ இதத்தான் பண்ணீட்டு இருக்கீன்னு நெனைக்குறேன்..... !! இல்லீனா ட்ரை பண்ணிப்பாரு ........!!!

pappu said...

சரக்கடிக்கிறத இப்படி கவிதயா.....சான்ஸே இல்ல...பிச்சுட்டிங்க!
//மனம் நொந்த நாட்களில்
அண்டை வீட்டில்
கடன் வாங்கியாவது
சரக்கடி!//

இங்க தான் டச் இருக்கு.

அ.மு.செய்யது said...

////மனம் நொந்த நாட்களில்
அண்டை வீட்டில்
கடன் வாங்கியாவது
சரக்கடி!//
//

ஹா ஹா ஹா..

அ.மு.செய்யது said...

எதிர்பதிவுகளா போட்டு தாக்குறீங்க..எங்க போயி முடிய போகுதோ !!!

ச.முத்துவேல் said...

நானும் ரொம்ப நாளா உங்கள கவனிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.(இங்க இல்ல. மத்தவங்களோட பின்னூட்டங்கள்ல). செம வாலுத்தனம்.
ரொம்ப ரசிச்சுருக்கேன். செம க்ரியேடிவ்
ஆன அலும்பல்கள். வாழ்த்துகள்.

தமிழ்நெஞ்சம் said...

என்ன கொடுமை சார் இது.

கவிதை அருமையா வருது.

கண்ணதாசன் பார்த்தாப் பொறாமைப் படப் போறார்.

மணிகண்டன் said...

***
என்ன வால்ஸ் கவிதை தெரியாது நினைச்சுகிட்டே ரொம்ப நல்லா எழுதறீங்க.

முழு நேரே கவிதை எழுதுங்க, உங்களுக்கு கவிதை அதுவும் (சரக்கு) நல்லா வருது.
***

வழிமொழிகிறேன். சரக்கு அடிச்சுட்டு எழுதுங்க.

பிரியமுடன் பிரபு said...

////
மனம் நொந்த நாட்களில்
அண்டை வீட்டில்
கடன் வாங்கியாவது
சரக்கடி!
/////


அய்யா இங்க வந்து பாருங்க
http://priyamudan-prabu.blogspot.com/2009/02/blog-post_23.html

பிரியமுடன் பிரபு said...

///
ஒரு பய இது வரைக்கும் சொல்லாத தத்துவம்யா.கண்ணே கலங்கிடுச்சு.அடங்க மாட்டன்றியே பாஸு.பின்னிட்டீங்க போங்க.
////

ரிபிட்டே

Joe said...

That reminds me of the 1 last 500 ml asahi beer left in the fridge! ;-)

தெறியாதவர்?!?

mazhai said...

சும்மா ரௌண்டு கட்டி அடிங்க ......

வால்பையன் said...

நன்றி ஜீவன்

//Rajeswari said...
எங்க ஏரியா இல்லப்பா//
யார் வேண்டுமானாலும் வரலாம்.

நன்றி ஜோதிபாரதி

நன்றி ஸ்ரீதர்
தண்ணி போட்டா எல்லா த்துவமும் வரும்

நன்றி தமிழ்பிரியன்

நன்றி விக்னேஷ்வரன்

நன்றி மகேஷ்

நன்றி சிவாஜி

நன்றி யோகன்பாரிஸ்
எனா அர்த்தம் அண்ணா!

நன்றி ஹேமா

நன்றி அபுஅஃப்ஸர்

நன்றி அப்துல்லா அண்னே!

நன்றி ஆதிமூல கிருஷ்னன்

நன்றி ரம்யா

நன்றி வணங்காமுடி

நன்றி ஆ.ஞானசேகரன்

நன்றி உண்மைத்தமிழன்

நன்றி பொடியன்

நன்றி நட்புடன் ஜமால்

நன்றி முரு

நன்றி கிரி

நன்றி மாவீ

நன்றி அனுஜன்யா

நன்றி சுப்பு

நன்றி ராம்CM

நன்றி கணிணிதேசம்

நன்றி ராஜா

நன்றி கடையம் ஆனந்த்

நன்றி தமிழன் கறுப்பி

நன்றி லவ்டேல்மேடி

நன்றி பப்பு

நன்றி அ.மு.செய்யது

நன்றி ச.முத்துவேல்

நன்றி தமிழ்நெஞ்சம்

நன்றி மணிகண்டன்

நன்றி பிரியமுடன் பிரபு

நன்றி ஜோ

நன்றி மழை!

!

Blog Widget by LinkWithin