நண்பர் ஜிம்ஷாவுக்கு கோபமான பதிவிற்கு என்னுடைய காட்டமான பதில்!!

ஜிம்ஷாவின் அந்த பதிவு

உங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள பல விசயங்கள் எனக்கு தமிழச்சி பின்னூட்டமிட்டது,அதை நானே அடைப்பு குறிக்குள் தான் குடுத்திருப்பேன்,ஆண்கள் ஜொள்ளு விட பெண்கள் தான் காரணம் என்று சொல்லியிருப்பது தான் உங்களை உறுத்துகிறது, உதாரணத்திற்கு தமிழகத்தில் உள்ள சொலவடை "ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது" என்று.

அதை கூட விட்டுத்தள்ளுங்கள், மணமான பெண்கள் தான் அதிகமாக ஜொள்ளு விடுகிறார்கள் என்றால், பெண்களில் ஜொள்ளு விடுவது அநேகம் பேர் மணமான பெண்கள் என்று அர்த்தம் இல்லை, உறவுகளில் வரம்பு மீறி செல்வது மணமான பெண்கள் என்று அர்த்தம், உதாரணத்திற்கு பெரிதாக நான் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை, தமிழக செய்தி தாள்களில் வரும் கள்ள காதல் கொலைகளே போதும்,

முன் பின் தெரியாத பெண்கள், உங்கள் வாய்ஸ் ஸ்வீட்டாக இருக்கு என்று சொன்னால், கில்மா அடைகிறார்கள்(அந்த வார்த்தைக்கு அர்த்தம் சில்பான்ஸ்-மேலும் அர்த்தம் வேண்டுமானால் சின்னி ஜெயந்தை அணுகவும்) இதற்க்கு என்னிடம் நம்பர் கேட்டுள்ளீர்கள், நான் அந்த வேலை பார்ப்பதில்லை, வேறு வேலை பார்க்கிறேன், இருந்தாலும் நட்பின் அடிப்படையில் ஒரு யோசனை, உங்கள் அலைபேசியில் இருந்து கஸ்டமர் கேருக்கு அழையுங்கள், எதாவது பெண் எடுக்கும் வரை வேதாளம் முருங்கை மரம் ஏறட்டும், அவளிடம் சொல்லி பாருங்கள் உங்கள் வாய்ஸ் ஸ்வீட்டாக இருக்கிறது என்று.

//இதுமுற்றிலும் தவறான கருத்து. எந்த ஒரு திருமணமான தமிழ்நாட்டு பெண்ணும் இன்னொரு ஆணுடன் பழகுவதை விரும்பமாட்டாள். (ஒருசில மாதர்களைத்தவிர) கடலைப்போடும் ஆண்களைப் பார்த்தாலே அவளுக்கு வெறுப்புதான் வருமே தவிர, அவள் இமியளவும் கிறங்கிப்போகமாட்டாள் என்பதே சரி.//

இதில் நீங்கள் குறிப்பிட்டது போல தான் சில பெண்களை பற்றி தான் இங்கே பேச்சு, எனது தாயும் ஒரு பெண் தான், எனது மனைவியும் ஒரு பெண் தான், என்ன நீங்கள் அந்த ஒரு சில பெண்களை அடைப்பு குறிக்குள் போட்டு தமிழக பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளீர்கள், எல்லா பெண்களையும் குறை சொன்னால் தமிழச்சி என்னை என்ன செய்வார் என்று உங்களுக்கு தெரியாதா என்ன.

///தமிழ்நாட்டில இரண்டுமே சரியில்லையென்று வேறு சொல்லியிருக்கிறார். ஒரு தமிழ்நாட்டுப்பெண். அதுவும் இங்கேயே பிறந்து பள்ளிப்படிப்பு வரை தமிழ்நாட்டிலேயே படித்து, இப்படி தமிழ்நாட்டு பெண்களை இழிவாகப்பேசுகிறார் என்றால், உண்மையிலேயே அவர் தமிழ்நாடு தானா? அவர் ஒரு பெண்தானா என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது.///

இங்கே நீங்கள் சுட்டி காட்டியிருப்பது தமிழச்சியை என்று நினைக்கிறேன்,எனது அந்த பதிவு ஜொள்ளு விடுவது பற்றி மட்டும் அல்ல, ஆண், பெண்ணுக்குள்ள மன ரீதியான பகிர்தல்கள் எந்தளவுக்கு தமிழகத்தில் உள்ளது என்பது பற்றி,

பண்பாடு, கலாச்சாரம் போன்ற வார்த்தைகள் உங்களை இந்த அளவுக்கு பாதித்திருக்கிறது, சொல்றேன்னு தப்பு நினைக்காதிங்க ஜிம்ஷா நீங்க இன்னும் பிற்போக்கா தான் இருக்கிங்க, தேவதாசி முறை தமிழக பண்பாடு என்று மீண்டும் கொண்டு வரலாமா, ஒருவன் ஒருத்தியுடன் வாழ்வது தனி மனித ஒழுக்கம், அது உலகம் பூராவும் ஒன்றே, இதில் தமிழக கலாச்சாரம், பண்பாடு என்று இதில் சொல்லி கொள்வதற்கு ஒன்றும் இல்லை,

அடிப்படையில் மனிதன் ஒரு பேச தெரிந்த மிருகம் அவ்வளவே.கலாச்சாரம், பண்பாடு எல்லாம் அவனுடைய கலை ஆர்வத்தில் உருவானது,அதாவது நல்ல உடை உடுத்துவதும் ஒரு கலையே, மேலை நாடுகளில் அவர்களின் கலை ஆர்வத்திர்கேர்ப்ப அவர்களது உடைகளும் பண்பாட்டு கலைகளும் இருந்தது,
இன்று பெண்களின் முழு உடலையும் மறைக்கும் சுடிதார் மேலைநாட்டு உடைதான்,ஆரம்பத்தில் நமது நாட்டு பெண்களுக்கு மேலாடை கூட கிடையாது அதுவும் பிற்பாடு வந்ததே, இன்று உலகம் முழுவதும் ஒரே குடிலின் கீழ் வந்த பிறகு உன் கலாச்சாரம் ,என் கலாச்சாரம் என்று சொல்வது, அவரவர் நம்பிக்கையை பொறுத்ததே,

உங்கள் பதிவை கண்டு எனக்கு மகிழ்ச்சியே, எல்லா கருத்துக்களும் விவாததிரிக்கு உடன்படுத்த வேண்டும் என்பது தான் என் ஆசையும், அதனால் தான் பல தவறான நம்பிக்கைகளின் மூலங்கள் தகர்க்கப்படும்

தலைப்பு சும்மா லுலுலாயி

உங்கள் வீட்டு மின்விசிறி தீடிரென்று வேகமாக சுற்றும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நண்பர்கள்
சில பேரை டாக்டர் ஆக்கியிருக்கிறேன்,
சில பேர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்,
நான்கைந்து பேர் இஞ்சினியர்களாகவும் இருக்கிறார்கள்,
நண்பர்களில் ஒருவன் பிரபல நடிகன்.
ஆனால் எல்லோரும் என்னை மறந்து விட்டார்கள்,
நட்பு துரோகிகள்
ஏனென்று யோசித்ததில் தெரிந்தது
எனக்கின்னும் தூக்கம் கலையவில்லை என்று!

******************************************************
என்ன காலகொடுமை சார் இது, கவிதைனாலே கிலோ மீட்டர் தூரம் ஒட்ரவனை இப்படி கவுஜ எழுத வச்சிருசே, எனது பாழாய் போன தூக்கமின்மை வியாதி.
தினமும் எனது படுக்கையில் பத்து இயல்பு நிலை மீறிய பதிவுகள் உதிக்கிறது,
அனைத்தும் பின்நவீன பதிவுகள்(உதாரணம்), வழக்கம் போலவே ஒரு பதிவிற்கும், மறு பதிவிற்கும் இடையில் ஏற்படும் கிளை சிந்தனையில் பதிவின் சுவடுகள் காணாமல் போகின்றன, உங்கள் துர்தரிஷ்டம் ஒன்றிரண்டு இப்படி ஞாபகத்தில் இருப்பது தான்,


தூக்கமினையால் ஏற்படும் பக்கவிளைவு தான் ஞாபகமறதி,
ஆனால் எனக்கு அந்த பக்கவிளைவு கிடையாது, பகலிலே என்னால் சராசரியாக நடந்து கொள்ள முடிகிறது, இரவில் எனது சிந்தனைகளை நான் ஹார்ட்டிஸ்க்கில் ஸ்டோர் செய்வதில்லை அதான் பிரச்சினை,

பத்து குருவிகளை தொடர்ச்சியாக சில நாட்கள் ஞாபகத்தில் வைத்து கொள்ள முடியாது, அது ஒரே கூண்டில் இருந்தாலும் கூட, பல பறவைகளும், சில விலங்குகளும் இந்த வேற்றுமை மனிதர்களுக்கு புலப்படாமல் திரிக்கின்றன, அதற்காக அதனுள் வேற்றுமை இல்லாமல் பழகுகின்றன என்று அர்த்தம் இல்லை, அதனால் தன் குட்டிகளையும், பிறர் குட்டிகளையும் அடையாளம் கண்டு கொள்ள முடியும்,


அவைகளை நம்மால் கண்டுபிடிக்க முடியாததற்கு காரணம், அவைகள் நம்மை விட சில படிகள் கீழே இருப்பது தான், இன்னும் சில நாட்களில் நீங்கள் என் எதிரில் வந்தால் கூட உங்களை எனக்கு அடையாளம் தெரியாது,நான் என்பது என்னிடமிருந்து சக மனிதர்களின் வேற்றுமை தோற்ற ஞாபகங்கள் மறைக்கிறது. அதற்காக எனக்கு ஞாபக சக்தி மறைக்கிறது என்று அர்த்தம் இல்லை, நீங்கள் எப்படி குருவியை விட சில படிகள் மேலே இருக்கிறீர்களோ, அதே போல் உங்களை விட சில படிகள் நான் மேலே போகிறேன்.

முடிவில் என் இருத்தல் இருக்கும், ஆனால் என்னிடமிருந்தது "நான்" தொலைந்து போகும். தேடுதல் ஒரு அனுபவம், ஆனால் தொலைத்தல் துக்கமான அனுபவம்,
என்னிடமிருந்தது "நான்" தொலைந்து போகுதல் எனக்கு சுகமான அனுபமாக இருக்கிறது

சகவலைபதிவர்கள் என்னை போல் யாரேனும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும், தனிமை என்னை வாட்டுகிறது

தலைப்பின் காரணம்:என் வீட்டு மின்விசிறி தீடிரென்று வேகமாக சுற்றியதால் ஏற்பட்ட விளைவு இது, அதனால் அதையே தலைப்பாக வைத்து விட்டேன், உங்கள் வீட்டு மின்விசிறி வேகமாக சுற்றினால் உங்களுக்கும் இதே மாதிரி இருக்குமா?

உண்மை என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்?

வாய்மையே வெல்லும் என்று தான் இந்தியாவில் வளர்க்கபடுகிறோம்.
ஆனால் இது தான் உண்மை என்ற நிலைபாடு இடம், பொருள், ஆட்களுகேர்ப்ப மாறுபடுவது அனைவரும் அறிந்ததே. உலகில் இருமாறி கொள்கையில் உண்மையும் உள்ளது, அது உண்மை இல்லையென்றால் பொய்யாகவே நம்பபடுகிறது.

உண்மை போன்று விவாதத்திற்கு உள்ளாக்கப்படும் விஷயம் மிக குறைவே,
அது வேறு விசயமாக இருந்தாலும் அதன் உண்மை தன்மை கேள்விக்குள்ளாக்க படுகிறது, முடிவில்லாது முடிக்கப்படும் விவாதங்கள் இரு தன்மையிலும் நிலை கொள்கிறது, அது வாதி, பிரதிவாதிகளின் நம்பிக்கை தன்மையில் ஒளிந்து கொள்கிறது, ஆனாலும் அது உண்மையா, பொய்யா என்பது முடிவில் முடியாது.

வாதங்களில் முன்முடிவுகளே உண்மையாக நம்பபடுகிறது, இரண்டு வாதிகளுக்குமே,
சில நேரங்களில் விட்டுகொடுக்க பட்டாலும், வாதியின் நிலைபாடு மாறுவதே உண்மையான உண்மையின் வெற்றி, ஆனாலும் எல்லா வாதத்திலும் இது நடக்கிறதா என்பது கேள்விகுள்ளாக்கபடவேண்டிய வாதம்,

உண்மையில் திட தன்மையுள்ள நிலைப்பாடுகள் மட்டுமே நிருபிக்க பட தகுதியுள்ள உண்மைகளாக உள்ளன, அதை நிருபிப்பது சுலபம். நம்பிக்கையின் அடிப்படையில் உள்ளவை, என்றென்றும் இறுதி தன்மை இல்லாததாகவே இருக்கிறது,


நம்பிக்கையில் தனிமனித நம்பிக்கை மற்றும் தனிமனிதனை பற்றிய நம்பிக்கையும் கேள்விக்குள்ளாக்க படுவது, தோற்றம் பற்றிய நிலைபாடு நமக்குள் ஒரு நம்பிக்கையை தரும், அவரவர் நம்பிக்கையும், கருத்துக்களும், குணங்களை பற்றிய நம்பிக்கை தரும்.
ஆனால் அவையெல்லாம் உண்மை தானா?

இதெல்லாம் எதுக்குன்னா இளயகவி போட்ருக்கிற இந்த பதிவ நம்பாதிங்க நண்பர்களே

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இளயகவி கட்டு போட்ட கதை! மற்றும் சகவலை பதிவர்கள் அய்யனார் மற்றும் குசும்பனுக்கு ஒரு வேண்டுகோள்!!

அகிலுலக ஜொள்ளர் சங்க தலைவர் இளயகவியை தெரியாதவர்கள் வலைப்பதிவில் வெகு சிலரே, அவரை பற்றிய சில ரகசியங்கள் கீழே தரப்பட்டுள்ளன

ஒருமுறை நான் அலைபேசியில் அழைத்திருந்த போது மதியநேரம், சாப்பாட்டு டைம் என்று கூட வைத்துக்கொள்ளலாம்,

போனை எடுத்த உடன் சொல்லு மச்சி என்று மட்டுமே என்னிடம் பேசியது,
மற்றதெல்லாம்

தம்பி அந்த பக்கம் போய் விளையாடு
அப்பா சொன்னா கேக்கணும்
அப்புறம் அப்பாவுக்கு கோவம் வந்துடும்

நானும் போனை காதில் வைத்து கொண்டுகொண்டே இருக்க
பளீர் பளீர் என்று அறையும் சத்தம்.

நான் பயந்தே போய்விட்டேன், சின்ன பையனை போய் இப்படி அடிக்கிறானே என்று,
அப்புறம் தான் தெரிந்தது, கிரிஷ் கையிலிருக்கும் எதயோ ஒன்றை இவன் புடுங்க
அவன் கன்னம் கன்னம்மாக அப்பி விட்டான்,

அலுவலகத்தில் கன்னத்தில் என்னடா காயம், என்று அனைவரும் கேட்டதாக "சிட்டுக்குருவி" தகவல்.

**********************************************************

அதே போல் ஒரு மதிய நேரம்,
நமது தலைவர் நன்றாக சாப்பிட்டு விட்டு உண்ட மயக்கத்தில் தொலைகாட்சி பார்த்து கொண்டிருந்திருக்கிறார், அச்சமயம் பார்த்தா நான் கூப்பிடுவேன். தொடர்ச்சியாக ரிங் போய் கொண்டே இருந்தது, கட் பண்ணலாம் என்று நினைக்கும் போது யாரோ எடுத்து விட்டார்கள்,

"போனையேல்லாம் பாக்கெட்டில் வைக்கமுடியாதா" என்று எதையோ எரியும் சத்தம்,
ஐயோ என்று அலறும் சத்தமும் தொடர்ந்து வந்தது, பிறகு தான் தெரிந்தது அவங்க வூட்டு தங்கமணி அந்த கைபேசியை தூக்கி எரிய அந்த செங்கல் இளயகவி மண்டையில் பட்டு நான்கு நாட்கள் தலையில் கட்டோடு திரிந்ததாக , ஹெல்மெட் போடாமல் சுற்றுவோர் சங்கத்தில் இருந்து தகவல்,

**********************************************************
இதையெல்லாம் விட்ட ஹைலைட் இதுதான்,

"தமிழச்சியை ஜொள்ளு விடுவது தவறா" என்று ஒரு பதிவு போட்டு
அது ஜூ.வீ.யில் வந்து பிளாக்கர்களின் மானத்தை வாங்க, குசியில் இருந்த இளயகவி, இந்த விஷயம் அவங்க வீட்டு தங்கமணிக்கு தெரிந்தது தெரியாமல் வழக்கம் போல் மதியம் வீட்டுக்கு சாப்பிட சென்றிருக்கிறார்,

வாசலிலேயே அவர் தங்கமணி பெரிய விறகுகட்டையோடு நிற்க,
அதிர்ச்சியில் இளயகவி ரிவேர்ஷ் கியரை தேடியிருக்கிறார்
எவ்வளவு தேடியும் அவரது பைக்கில் ரிவேர்ஷ் கியர் கிடைக்காததால்
பைக்கை அப்படியே போட்டு விட்டு பின்னங்கால் பிடரியடிக்க ஓட
பல வண்டிகளில் மோதி கையில் கையில் கட்டுடன் ஒரு வாரம் திரிந்ததாக
கைகாட்டிகள் (அதாங்க spy) மூலம் தகவல்,

*******************************************************************

இதன் பின்னர் அகில உலக ஜொள்ளர் சங்க கூட்டத்தில் தலைவர் இளயகவி பேசுகையில், புதிதாக திருமணமான அய்யனார் மற்றும் குசம்பனுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்,
அவங்க வீட்டு தங்கமணியுடன் வாக்குவாதம் புரியும் முன் கிரிகெட்டுக்கு போட்டு செல்லும் கவசங்களை அணியுமாறு,

மேலும் புதிதாக தங்கமணி வகையறாவில் சேர்ந்திருக்கும் இம்சையரசி மிகவும் சாதுவானவர் என்று சகவலை பதிவர்கள் சர்டிபிகேட் அளித்திருப்பதால்
அவங்க வூட்டு ரங்கமணி எப்போது விண்வெளிக்கு செல்லும் உடை அணிந்து இருக்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளார்
காரணம் கேட்டதிற்கு
"சாது மிரண்டால் காடே தாங்காது" என்று பொன்மொழிகளை உதிர்த்தார்

உலகத்தில் சில மோசமானவைகள்!!

மோசமான எதிரி: நம் வீழ்ச்சியின் மேல் அக்கறை கொள்ளாதவன்

மோசமான நண்பன்:நம் வளர்ச்சியின் மேல் அக்கறை கொள்ளாதவன்

மோசமான உணவு:பசிக்காத போது சாப்பிடுவது

மோசமான மனைவி:மனதை கணவனுக்கு கொடுக்காதவள்

மோசமான கணவன்:மனதை மனைவிக்கு கொடுக்காதவன்

மோசமான நாடு:மக்களின் மேல் அக்கறை கொள்ளாதது

மோசமான மக்கள்:நாட்டின் மேல் அக்கறை கொள்ளாதவர்கள்

மோசமான குணம்:உதவி மனப்பான்மை இல்லாதிருப்பது

மோசமான குணம்2:எப்போதும் உதவியை எதிர்பார்த்து கொண்டிருப்பது

மோசமான பணம்:பசிக்கு உதவாதது

இன்னும் ஏதேனும் மோசமிருந்தால் சொல்லிவிட்டு போங்கள்

வரலாறில் உள்ள கோளாறுகள்

தமிழ் நடிகர்கள் முதன் முதலில் நடிக்க செல்லும் பொழுது அவர்கள் பேசி காட்டும் வசனம்
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பேசிய வசனம் தான், ஆனால் அத்வு ஒரு புனைவு என்று நிரூபிக்கப்பட்டால் வரலாற்றை எப்படி நம்புவது,

பின்நவினத்துவ பார்வையில் வரலாறு என்பது "புனைவால் புனையப்பட்ட ஒரு புனைவு" அவ்வளவே, M.G.சுரேஷ் அதை "யுரேகா என்றொரு நகரம்" என்ற நாவலில் மிக அழகாக சொல்லியிருக்கிறார்,

பண்புடன் குழுமத்தில்
"கட்டபொம்மன் வசனங்கள் எல்லாம் "டுபாக்கூர்'தானா?" என்ற தலைப்பில் வந்திருக்கும் இந்த கட்டுரை கட்டபொம்மனின் வரலாற்றிர்க்கே வேட்டு வைக்கிறது. முழு கட்டுரையும் படிக்க அந்த சுட்டியை சொடுக்கவும்.

வரலாறு அனைத்தும் அதன் நம்பிக்கை தன்மையை இழந்து வந்து கொண்டிருக்கிறது.
இம்சை அரசன் படத்தில் வடிவேலுவின் தலையும், ஒரு வீரனின் உடலும் இணையும் காட்சி அதற்கு ஒரு உதாரணம். தன் இனம் என்று தலையில் தூக்கி வைத்து கொண்டு ஆட நமக்கு ஒரு தலைவன் தேவைபடுகிறான், இதற்கு மற்ற இனங்களும் விதி விலக்கல்ல,


பைபிள் கூட தன் ஆதார நிலையை விட்டு பல நிலைகள் கடந்து வந்து விட்டதாக சில சரித்திர ஆசிரியர்கள் சொல்கிறார்கள், தன் தேவைகேற்ப சில இடைசொருகல்கள் எல்லா வேத நூல்களிலும் இருக்கிறது. மாறி வரும் சமூகத்தின் கேள்விகளுகேர்ப்ப அது நடப்பதாக தகவல்,

வரலாற்றின் மீது சந்தேகிக்க பல நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டாம்
சம காலத்தில் நடந்த ஒன்றை சொல்கிறேன்,
சென்ற ஜெயலலிதா ஆட்சியில், கருணாநிதி கைது செய்யப்பட்டார்,
அது ஜெயா டீ.வீயில் அமைதியாக நடந்தது போல் காட்டப்பட்டது,
அந்த நிகழ்வையே சன் டீ.வீயில் "ஐயோ, அம்மா, கொல்றாங்களே" என்று காட்டப்பட்டது.

எதை நம்பும் இந்த பாலாய் போன சமூகம்,

பழங்கதைகளை பேசிதிரிவதை நிறுத்துவோம்,
செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம்
பயணத்தை தொடருவோம்

தமிழச்சியின் பின்னூட்டத்திற்கு என் பதில்கள் !!!!

என்னுடய இந்த பதிவிற்கு தமிழச்சி இவ்வாறாக பின்னூட்டமிட்டு இருந்தார்

////தமிழ்நாட்டு ஆண்களை ஜொள்ளுக்களாக்கியது தமிழ்நாட்டு பெண்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆண்களுக்கு கடலை போடக் கற்றுக் கொடுத்ததும் பெண்களின் உடல்மொழிகள் தான் என்று நினைக்கிறேன்.

முன்பின் தெரியாத ஓர் ஆண் தொலைப்பேசியில் பேசும்போது உங்கள் வாய்ஸ் ஸ்வீட்டி என்றால் இவளுக்கு கில்மா கொடுத்தது போல் இருக்கிறது.

ஆண் என்ன செய்வான்? ஓகோ கலர்களை செட்டாக்க இப்படியெல்லாம் வழி இருக்கான்னு ஆரம்பிச்சுடறாங்க!

என்ன பிரச்சனைன்னா வாய்ஸ் பத்தி பேசும் போதே தேவையில்லாத வர்ணனை என்று ஓற்றை வார்த்தையை பெண்
உபயோகித்திருந்தால் கடலை போடும் வார்த்தைகள் தோன்றியிருக்குமா?

இன்னொன்ரு சொல்ல வேண்டும் கடலைப்போடும் மேட்டரில் அதிகம் சொக்கிப் போவது திருமணமான பெண்கள் தான். தன் கணவனிடம் கிடைக்காத புகழ்ச்சி மற்ற ஆணிடம் இருந்து வரும் போது கிறங்கிப் போய்விடுகிறாள்.

ஆக பெண்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் தமிழ்நாட்டில் இரண்டுமே சரியில்லை என்பது தான் உண்மை........////

தமிழச்சியின் பின்னூட்டத்திற்கு
பதில் கொஞ்சம் பெரிதாகிவிட்டதாலும், நானும் ஒரு வாரமாக வேறெந்த பதிவும் போடாததாலும், இந்த பதிவையே பதிலாக தருகிறேன்

ஒரு ஆண் மற்றொரு ஆணை புரிந்து கொள்வது போல் ஒரு பெண்ணை புரிந்து கொள்ளமுடியாது, ஆனால் நீங்கள் எங்கேயோ இருந்து கொண்டு தமிழகத்தில் ஆண்,பெண் இருவரையும் புரிந்து வைத்திருப்பது பாராட்டத்தக்கது,
நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மை, இன்றைக்கு நடக்கும் மனமுறிவுக்கு காரணம் கூட சரியான புரிதல் இல்லை, மன ரீதியான நட்பு இல்லை கணவன் மனைவியிடையே..


ஒரு பெண் தன் கணவனிடம் வெளிப்படையாக இருப்பதை விட தன் நண்பனிடம் மிகவும் வெளிப்படையாக இருக்கிறாள், இது கண்கூடாக நான் கண்ட உண்மை, தன் தேவைகளை சொல்லும் போது தன்னை தவறாக நினைத்து விடுவானோ என்ற எண்ணமும், அவ்வாறே தவறாக நடந்து கொண்ட ஆண்களும் பெண்களின் சுதந்திரத்துக்கு பெரும் முட்டுகட்டையாக இருக்கிறது.

ஜோடியாக அமர்ந்திருக்கும் இருவரை நம் சமூகம் வயது வரம்பில்லாமல் வெறித்து பார்க்கிறது, இதனாலேயே அவர்கள் இருட்டை தேடி ஒதுங்க வேண்டியிருக்கிறது, இருட்டு அவர்களுக்கு குற்றஉணர்வை தருகிறது,

செக்ஸ் என்ற வார்த்தை கெட்டவார்த்தையாக இங்கே பார்க்கபடுகிறது,
ஒரு ஆணும் பெண்ணும் பழகினால் அங்கு செக்ஸ்சே பிரதான காரணமாக இருக்கும் என்று சமூகத்தால் நம்பபடுகிறது, இன்றைய இளைய தலைமுறைகள் இந்த சமூகத்தில் வாழ பயபடுகிறார்கள், முன்பை விட மனநோய் மருத்துவமனைகள் கூட்டம் நிரம்பி வழிவதை என்னால் பார்க்கமுடிகிறது,

சரிக்கும் ,தவறுக்கும் இடையே விளிம்பு நிலை மனிதர்கள் போல் இன்றைய தலைமுறை காட்சியளிக்கிறது, தன் விருப்பு வெறுப்பை விட்டு தன் பெற்றோருக்காக தன் வாழ்வை பழி கொடுத்தல் எல்லா பெண்களுக்கும் இங்கே நடக்கிறது,

தமிழகத்தில் ஒவ்வொரு மூன்று மணிக்கும் ஒரு இளைஞனோ, இளைஞியோ காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்கிறார்கள், அந்த வழக்கு அரசு மருத்துவமனையில் வயிற்று வலி கேசாக சில நூறு பரிமாற்றங்களில் திரிக்க படுகிறது, செத்தாலும் பரவாயில்லை தன் மகனோ ,மகளோ காதல் திருமணம் செய்யக்கூடாது என்று பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.


ஒழுக்கம் என்பது தப்பிதமாக இங்கே கற்பிக்கபடுகிறது,
சிகரெட் குடிப்பவனும், தண்ணி அடிப்பவனும் இங்கே மகா கொடியவன்
அவன் எவ்வளவு பெரிய புத்திசாலியாக இருந்தாலும் அவனுடன் பழக பெற்றோர்கள் மறுத்து விடுவார்கள், சிகரெட் குடிக்கும் ஒரு தந்தை தன் மகன் சிகரெட் குடித்ததால் பெல்ட்டால் அடிக்கும் சம்பவங்கள் தமிழகத்தில் பல, அப்போது மகனுக்கு சிகரெட்டின் மீது வெறுப்பு வருமா, தந்தையின் மீது வெறுப்பு வருமா

தமிழகத்தில் ஆரம்பமே சரியில்லை, பின் எப்படி இன்றைய தலைமுறையை குறை சொல்லமுடியும், ஒரு ஆணும் ,பெண்ணும் மனமுவந்து புணர்ந்தால் கூட, அவர்களை பிடித்து விபச்சார வழக்கு போடும் சட்டம் நமக்கு இருக்கிறது,

ஒரு பெண் விபச்சாரியாக ஆவதை விட, ஆக்க படுவதே இங்கே அதிகம்.
அதன் பின் அவள் ஒரு மரக்கட்டையாக தான் இங்கே வாழ்கிறாள்,
இந்த சமூகத்தில் எல்லா உறவினரும் போலி முகத்துடன் தான் வாழ்கிறார்கள்,
மனிதனின் மனதை விட பண பலமே இங்கே முக்கியமாக படுகிறது,

பொருளை தேடி ஆண்களும், அன்பை தேடி பெண்களும்
கடைசியில் இரண்டும் கிடைக்காமல் காலம் போன நாட்களில் முகத்தை மாறி மாறி பார்த்து கொள்ளாமல், சுய உணர்வு உள்ள போதே தன் சந்தோசத்தை விட்டு கொடுக்காமல் ஜொள்ளு விடுவது ஒன்றும் தவறல்ல என்று நினைக்கிறேன்

நண்பன் தியாகுவுடன் நடந்த உரையாடல் அல்லது கடவுள் பற்றிய என் கருத்தாடல்!!


நண்பன் தியாகுவை பற்றிய சிறு அறிமுகம்
தியாகு என்னுடைய யாஹூ அரட்டை நண்பன். சென்னையில் இருக்கிறான்.ஒரு முறை நான் சென்னை சென்றிருந்த போது, வா ஊர் சுற்றலாம் என்று அவனை அழைத்தேன், எனக்கு வேலை இருக்கிறது வேண்டுமானால் என் வாகனத்தை எடுத்து செல் என்று சொன்னான், என்னை நேரில் பார்க்காமலேயே எனக்கு வாக்கு கொடுத்தான்.
அந்த நம்பிக்கையை என் நெருங்கிய நண்பர்களிடம் கூட இன்றும் நான் பார்த்ததில்லை, ஈரோட்டில் அவன் நட்பை சொல்லி பெருமை பட்டு கொள்வேன்.

உரையாடலுக்கு வருவோம், நேற்று(சனிக்கிழமை) மாலை என் கைபேசிக்கு அழைத்தான், சம்ப்ருதாய தொடக்கத்தை விட்டி விசயத்திற்கு வருவோம்

தியாகு:எவ்வாறு கடவுள் இல்லை என்று நீ சொல்கிறாய்?

நான்:இல்லை என்பது இல்லை, அதை நிருபிக்கவேண்டிய கட்டாயம் எனக்கில்லை, இருக்கு என்று சொல்லும் நீ தான் நிரூபிக்கவேண்டும்.

தியாகு: கடவுள் இல்லை என்று நீ சொல்வது ஒரு விளம்பரத்திற்காக! கடவுள் நம்பிக்கையாளர்களை தாக்குவதை நீ பொழுதுபோக்காக வைத்திருக்கிறாய்!

நான்: கோயிலுக்கு செல்பவன் முட்டாள் என்றோ, அயோக்கியன் என்றோ நான் என் பதிவில் எழுதவில்லை.

தியாகு:பின் ஏன் கடவுள் மறுப்பாளனாக இருக்கிறாய், பெரியார் கூட மூடநம்பிக்கைகளை தானே எதிர்த்தார், கடவுளை இல்லையே.

நான்:தவறான புரிதல்,மூடநம்பிக்கைகளின் ஆரம்பமே கடவுள் நம்பிக்கை தான்.
அதை நான் முழுவதுமாக எதிர்க்கிறேன்.

தியாகு:உனக்கு தான் தவறான புரிதல், உனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை நம்புகிறாயா இல்லையா?

நான்:இல்லை

தியாகு:நான் சொல்வது இயற்கையை பற்றி, அதை உன்னால் கட்டுபடுத்த முடியுமா?
இயற்கையை கடவுளாக வணக்குவதை ஏன் எதிர்க்கிறாய்?



நான்:கடவுள் அப்படி உருவாக வில்லை,ஆரம்பத்தில் மனிதர்கள் குழுக்களாக வாழ்ந்த்தார்கள், அவர்களுக்கு ஒரு தலைவன் இருந்தான், அவன் அரசனானான், அவனையே கடவுளாக கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.

தியாகு:இயற்கைக்கு நன்றி சொல்வது தவறு என்கிறாயா?

நான்:இயற்கை என்பது கல்,மண்,மரம், மற்றும் நாமும் சேர்த்து தான், கேட்க்காத ஒன்றுக்கு நன்றி செலுத்துவதை விட, வாழும் காலத்தில் உடன் வாழும் மனிதர்களுக்கு நன்றி சொல்லு.

தியாகு:அப்படியானால் நமக்கு மேல் ஒரு சக்தியாக இயற்கை இருக்கிறது இல்லையா! அதை உன்னால் கட்டுபடுத்த முடியுமா?

நான்:நீ கூட தான் என் நெருங்கிய நண்பன், நான் சொல்வதை நீ கேட்டு நடப்பாயா?
உன்னை என்னால் கட்டுபடுத்த முடியுமா?

தியாகு:இல்லை

நான்:அப்படியானால் நீயும் கடவுளா?

தியாகு:இயேசு,நபிகள்,புத்தர் எல்லாம் பூமியில் பிறக்கவே இல்லை என்கிறாயா?

நான்:பிறந்திருக்கலாம், ஆனால் அவர்களை கடவுள் என்று கொண்டாடுவது திரிக்கப்பட்ட உண்மைகள், தங்களை கடவுளாக அவர்களே வெளிக்காட்டி கொள்ளவில்லை.

தியாகு:அப்படியானால் கடவுளை வணக்குபவன் முட்டாள் என்கிறாய்.

நான்:ஹா,ஹா,ஹா கடவுள் என்று ஒருவன் இருந்தால், அவன் நேரில் வந்து என்னை வணங்கு என்று சொல்லியிருந்தால், பூமியில் இவ்வளவு மதங்கள், ஜாதிகள் உருவாகியிருக்காது,
அரசன் தன்னை உயர்த்திக்கொள்ள, தன் ஆதரவாளர்களை உயர்த்தி காட்ட உருவாக்கியதே ஜாதி, அவனையும் கட்டுபடுத்த தன் போக்குக்கு ஆட்டி வைக்க மதகுருமார்களால் உருவாக்கியதே கடவுள்.

தியாகு:கடவுள் என்பது ஒரு நேர்மறையான சிந்தனை, மனிதன் ஒழுக்கம் தவறாமல் நடக்க அது உதவும் இல்லையா.

நான்:கடவுளை நம்பாதே,உன்னை நம்பு இது நேர்மறையான சிந்தனையா
கடமையை செய், பலனை எதிர்பாராதே
இது நேர்மறையான சிந்தனையா!
உன் சிந்தனையில் மனிதன் ஒழுக்கமாக இருக்க கண்டுபிடிக்க பட்டதே கடவுள் இல்லையா? அப்படியானால் ஒழுக்கமாக இருப்பவனுக்கு கடவுள் தேவையில்லை சரிதானே.

தியாகு:ஒழுக்கம் என்று எதை சொல்கிறாய்!

நான்:அதை சொல்ல முடியாது, அதை தான் நான் செய்து கொண்டிருக்கிறேன், தெரியவேண்டுமென்றால் என்னுடன் ஒருமாதம் வாழ்ந்தது பார்

தமிழச்சியுடன் நடந்த உரையாடல் அல்லது ஊற வைத்த கலாச்சாரத்தை உலர வைத்தல்!!

எனக்கு நீண்ட நாட்களாகவே இந்த சந்தேகம் இருந்தது, தமிழச்சி என்று பதிவு எழுதுபவர் ஒரு பெண்ணா, அல்லது தமிழச்சி என்று ஒருவர் இருக்கிறாரா என்று, நண்பர் இளைய கவியின் தமிழச்சியை ஜொள்ளு விடுவது தவறா என்ற பதிவு வார பத்திரிகையில் வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, மேலும் இளைய கவி இந்த பதிவு தமிழச்சியின் சம்மதத்துடன் தான் எழுதப்பட்டது என்று கூறியிருந்தார், மேலும் சந்தேகமிருந்தால் அவரிடம் கேட்டு கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார், அவரிடம் நான் தமிழச்சியின் மேசன்ஜெர் ஐடி வாங்கி வீடியோ சாட் செய்தேன், அது பற்றியதே இந்த பதிவு.


படத்தில் இருப்பது போலவே தோற்றம், எழுத்தில் இருப்பது போலவே சமூகத்தின் மேல் கோபம், இது அனைத்தும் அப்படியே இருந்தது, தமிழச்சியை போலவே இறை மறுப்பு மற்றும் முற்போக்கு சிந்தனைகளில் நான் அவருடன் உடன்பட்டாலும், சில பதிவுகளில் எனக்கு அவருடன் முரண்பாடு இருந்தது, இந்த சந்தர்ப்பத்தில் அதை தெளிவு படுத்திக்கொள்ள விரும்பினேன்,

எழுத்திலும், பேச்சிலும் நான் கடினப்பட்டு இருந்தாலும் காட்சிகளில் என்னால் வன்முறைகளை காணமுடியவில்லை, என் இருதயத்தை மாவு பிசைவதை போல் உணர்வேன் அப்படங்களை பார்க்கும் போதெல்லாம், நம் கலாச்சாரத்தில் பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட கோழிகுஞ்சுகளில் நானும் ஒருவன்,


செய்தி தாள்களில் ஒரு கற்பழிப்பு செய்தி வந்தால் கூட "பெயர் மாற்றபட்டுள்ளது" என்று அந்த பெண்ணின் இயல்பு வாழ்க்கை பாதிக்க பட கூடாது என்று நினைப்பது நம் சமூகம்,
தமிழச்சியின் சில பதிவுகள் என்னுள் பாதிப்புகளை ஏற்ப்படுத்தியது, நான் பார்க்கும் போது வேறு யாரும் பார்க்கிறார்களா என்ற சங்கடத்தை ஏற்படுத்தியது, எத்தனை பேருக்கு இது போல் இருந்ததோ தெரியவில்லை,

தமிழச்சியின் வெளிப்படையான, புரட்சிகரமான கருத்துக்கள் எந்த அளவுக்கு மற்றவர்கள் நினைப்பது போல் வெறும் விளம்பரத்திலிருந்து தள்ளி நிற்கிறது என்று வெகு அழகாக விளக்கினார், இந்த மாதிரி பதிவுகள் எழுதுவது ஒரு பெண் தான் என்று நம்மால் ஆரம்பத்தில் நம்ப முடியவில்லை, காரணம் பெண் என்பவள் இப்படி தான் இருப்பாள் என்று நமக்குள் இருக்கும் ஒரு கட்டமைப்பு

அந்த கட்டமைப்பை உடைக்க புறப்பட்ட ஆரம்பமே இந்த பதிவுகள்(கவனிக்க ஆரம்பம் மட்டுமே), அவர்கள் அங்கே ஒரு குழுவாக செயல் படுகிறார்கள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குரல் கொடுக்கிறார்கள், முக்கியமாக பெரியாரின் புரட்சிகரமான கருத்து விதைகளை அங்கேயும் நடுகிறார்கள், இதற்காக மத அமைப்புகளிடம் இருந்து கொலை மிரட்டல் கூட வந்துள்ளதாம், அதையும் மீறி தன் கொண்ட கொள்கைகளில் உறுதியாக நிற்ப்பது பாராட்டதக்கது,

அவர் மீது நம்முள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவர் விதைக்கும் புரட்சி விதைகளில் நமது விரல்களும் பங்கெடுத்து கொள்ளட்டும்

ஏமாறுதல் அல்லது ஏமாற்றபடுதல்!!!

சமீபகாலமாக தமிழ்நாட்டில் ஹாட் டாபிக் மல்டி லெவல் மார்கெட்டிங்.
மாபெரும் டுபாக்குரான இந்த தொழிலுக்கு இன்னும் சில பேர் சப்பை கட்டு கட்டுவதை பார்த்தால் பாவமாக இருக்கிறது.

சிறு வயதிலிருந்தே எனக்கு வாய் அதிகம் என்பதால், இவனுக்கு வாய் இல்லைன்னா நாய் தூக்கிட்டு போயிரும் என்று சொல்லுவார்கள். இத்தனை சாதகமாக்கி கொள்ள சில நண்பர்கள் உனக்காக பணம் கட்டுகிறோம். நீ வொர்க் பண்ணு சம்பாரிப்பதில் ஆளுக்கு பாதி என்று சொன்னார்கள், என்ன கான்செப்ட் என்று கேட்டவுடன் சொல்லிவிட்டேன்
இது மல்டி லெவல் மார்கெட்டிங் அல்ல
மல்டி லெவல் சீட்டிங் என்று,

சன் டிவீயில் சிறந்த பத்து படங்களை வரிசை படுத்தும் போது, பத்தாவது இடத்தில் இருக்கும் படத்தை பற்றி சொல்லுவார்கள், "இந்த படத்தை பற்றி தேவையான அளவு அலசி விட்டதால் அடுத்த படத்திற்கு செல்லுவோம்" என்று, இந்த பதிவும் அது போல தான், மல்டி லெவல் மார்கெட்டிங் பற்றி தேவையான அளவு அனைவரும் அலசி விட்டதால், மக்கள் வேறு எத்தனை விதமாக ஏமாறுகிறார்கள் என்று அலசுவோம்,

பத்தாவது இடத்தில் மல்டி லெவல் மார்கெட்டிங்

ஒன்பதாவது இடத்தில் பணத்தை பெருக்குதல் அதாவது ஒன்றுக்கு இரண்டு என்ற முறையில் கள்ள நோட்டு மாற்றுதல், முதலில் நல்ல நோட்டை கொடுத்து வெளியே கொடுத்து பார் யாருக்காவது சந்தேகம் வந்தால் உன் முன்னாடியே நாக்கை புடிங்கிட்டு சாகிறேன்!? என்பான், அவனும் ஏமாந்து பணத்தை கொடுத்து வெள்ளை பேப்பரை வாங்கி வருவான்,இது ஒரு பெரிய நெட்வொர்க்காக செயல் படுவது இவர்களின் சிறப்பு

எட்டாவது இடத்தில் இரும்பை தங்கமாக்குதல் இடம் பெறுகின்றது, ரசவாதம் என்று அழைக்கப்படும் இந்த மோசடி இன்றும் வெளிநாட்டில் கூட சில விஞ்ஞானிகளால் முயற்சி செய்து பார்க்கபடுகிறது. இதற்காக ஒரு கிலோ இரும்பும் வீட்டில் இருக்கும் தங்கத்தையும் கொடுங்கள் என்று வாங்கி கொண்டு பதிலுக்கு அல்வா கொடுத்தல் இவர்களின் சிறப்பு.

ஏழாவது இடத்தில் சாமியாடி குறி சொல்லுதல்,மற்றும் போயோட்டுதல் ஒரு பைசா "முதல்" தேவையில்லை,
இரண்டு கையிலும் வேப்பில்லை கொஞ்சம் சாம்பல் பவுடர் (அதாங்க விபூதி) இருந்தால் போதும், ஆத்தா டைரக்டா வந்து உங்கள் குறைகளை தீர்த்து வைப்பாள், பூஜை செய்யும் போது பணம், நகை மற்றும் கோழி, ஆடு, சில இடங்களில் நிர்வாணமாக பெண், அந்த பெண்ணின் கற்பு பறி போகும் வாய்ப்பு நிறைய உண்டு.

ஆறாவது இடத்திலும் இதே சாமியார்கள், ஆனால் இவர்களுக்கு செலவு உண்டு,
ஆசிரமம் என்ற பெயரில் ஒரு இடத்தை வளைத்து போட்டு பகலிலே பஜனை இரவிலே கும்மாளம் என்று பொழுது போகும், வாயிலிருந்து லிங்கம் எடுத்தல், (லிங்கம்னா "அது" தானே,அது எப்படி வாய்க்குள்ள போச்சு) காற்றில் மோதிரம் வரவழைத்தல் போன்ற சித்து விளையாட்டுகள் பகலிலும், சில சாமியார்கள் பெண்களையும், சில சாமியார்கள் ஆண்களையும்!? பாலியல் தொந்தரவு செய்தல் இரவிலும் நடக்கும்.

ஐந்தாவது இடத்தில் ஜோதிடம் பார்த்து பரிகாரம் சொல்லுதல்,
இதை ஒரு கணிதம் என்று சொல்லும் ஜோதிட சிகாமணிகள் இன்னும் பிட்சை எடுத்து கொண்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை? ராகு பாக்குறான், கேது கேக்குறான்னு சொல்லி, பத்து அந்தணர்களுக்கு உணவளிக்கணும், பசு தானம் செய்யணும்-இப்படி நிறைய, ஆனா நீங்க அலைய வேண்டாம் காசு கொடுத்துருங்க நாங்களே பண்ணிருவோம்ன்னு கடுக்கா கொடுத்தல் இவர்களின் சிறப்பு!

நான்காவது இடத்தில் சூனியம் வைத்தல், பெரிதாக வேலையில்லை ஆனால் ஓம். கிலீம், க்ரீம் என்று சவுண்டு கொடுக்கவேண்டும், அடுத்தவர்களை கெடுத்து நாம் நல்லாயிருக்க வேண்டும் என்று நினைக்கும் சோம்பேறி நாய்களிடமிருந்து பணம் பிடுங்கம் நல்ல பணியை இவர்கள் செய்கிறார்கள்.

மூன்றாவது இடத்தில் சூனியம் எடுத்தல், இவர்களுக்கும் பெரிதாக வேலையில்லை ஆனால் கடப்பாரையை எடுத்து "அங்கே ஓடுது குத்து, இங்கே ஓடுது குத்து" என்று சவுண்டு கொடுக்க வேண்டும், யாரும் வைக்காத, வைக்கவும் முடியாத சூனியத்தை
கட்டம் வரைந்த தகடு அல்லது கோழி தலை போன்று மறைதிருந்து எடுப்பது இவர்களின் சிறப்பு.

இரண்டாவது இடத்தில் இருப்பது அரசியல்வாதிகள், பொய் சொல்லி ஏமாற்றி ஒட்டு கேட்பது இவர்களின் முதல் வேலை, வாக்குறுதி என்ற பெயரில் மக்களை நம்ப வைத்து பதவிக்கு வந்தவுடன் ஊரையே விலைக்கு வாங்குவது இவர்களின் சிறப்பு, எத்தனை முறை ஏமாற்றினாலும் மக்கள் மீண்டும் மீண்டும் இவர்களிடம் ஏமாறுவது இவர்களின் தனிச்சிறப்பு.

முதல் இடத்தில் இருப்பது புதையல் எடுத்து தரும் சாமியார்கள், இவர்கள் முதல் இடத்தில் இருக்க காரணம், மற்றவர்களாவது பொருள்களை மட்டும் அடித்து சென்றனர்,
இவர்கள் பெற்ற குழந்தைகளையே நரபலி கொடுக்க சொல்வது கொடுமை, அதைவிட கொடுமை இவர்களும் அதை செய்வது

நெஞ்சு பொறுக்குதில்லையே கண்ணம்மா
இந்த நிலை கெட்ட மானிடரை நினைத்திடும் பொழுது

புரியாத புரிதலை புரிந்து கொள்ள சில முயற்சிகள் பாகம் 2.

இந்த பிரச்சனை ஓய்ந்தபாடில்லை!

இதன் முந்தய பதிவு

மீண்டும் நண்பர் ஒருவர் ஆன்லைன் வர்த்தகமே அத்யாவிசய பொருள்களின் விலைவுயர்வுக்கு காரணம் என்று எழுதுகிறார். காரணத்தில் பல விசயங்களை தொட்டிருந்தாலும் இறுதியில் முடிக்கும் போது மீண்டும் ஆன்லைன் வர்த்தகமே காரணம் என்று முடிப்பது தான் வருத்தம் அளிக்கிறது, என் முந்தய பதிவிலேயே ஒத்து கொண்டுள்ளேன், ஆன்லைன் வர்த்தகமும் ஒரு காரணம் ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல.

ஆன்லைன் வர்த்தகம் ஆரம்பித்து பத்து வருடம் ஆகிறது. ஆனால் விலைவாசி உயர்வு மேல் நோக்கி செல்லும் ஹீலியம் காற்று போல், அது வேலையை, அது நாணயம் கண்டுபிடித்த நாளிலிருந்து செய்து கொண்டிருக்கிறது.

ஒரு சின்ன உதாரணம், என் பாட்டியின் காலத்தில் ஒரு பவுன் தங்கம் நுப்பது ரூபாய், அப்போது ஆன்லைன் வர்த்தகம் இல்லை. என் அம்மாவின் காலத்தில் பவுன் முன்னூறு ரூபாய் அப்போதும் ஆன்லைன் வர்த்தகம் இல்லை, என் காலத்தில் பவுன் மூவாயிரம் ரூபாய் அந்த கால கட்டத்தில் தான் ஆரம்பிக்க பட்டது என்று நினைக்கிறேன்,

என் பாட்டியின் காலத்திற்கும், என் அம்மாவின் காலத்திற்கும் பத்து மடங்கு உயர்வு இருந்தது, அதே போல் என் அம்மாவின் காலத்திற்கும் , என் காலத்திற்கும் பத்து மடங்கு உயர்வு, ஆனால் என் அம்மாவின் காலத்தை விட என் காலத்தில் தான் உயர்வு அதிகமாக இருப்பது போல் தெரிகிறது இல்லையா, இந்த புரிதல் யார் தவறு

உங்கள் தாத்தாவிடம் கேட்டு பாருங்கள் அவர்கள் காலத்தில் அரிசி மூட்டை என்ன விலை என்று, உங்கள் தந்தையிடம் கேளுங்கள் அவர்கள் காலத்தில் என்ன விலை என்று , அப்பொழுது ஆன்லைன் வர்த்தகம் இருந்ததா!

இன்னொரு விஷயம் இந்தியாவில் புகழ் பெற்று விளங்கும் ஆன்லைன் வர்த்தக நிறுவனம், அத்யாவிசய உணவு பொருள்களை அதிலிருந்து நீக்கி விட்டது,
சந்தேகம் இருப்பின் இந்த வலையில் மார்கெட் வாட்ச் என்று இருக்கும் அதை அழுத்தி பாருங்கள், என்ன பொருள் என்ன விலைக்கு போகிறது என்று தெரியும்,
உருளை கிழங்கும், சர்க்கரையும் மட்டுமே இப்போது அதிலிருக்கும் உணவு பொருள்,

ஆன்லைன் வர்த்தம் மட்டுமே விலைவாசி உயர்வுக்கு காரணம் அல்ல என்று கூறும் போது எனக்கு தெரிந்த காரணத்தையும் இங்கே சொல்லியாக வேண்டும், இல்லையென்றால், இந்த பதிவு நான் ஆன்லைன் வர்த்தகத்திற்கு ஆதரவளிப்பதர்க்காகவே எழுதியது போல் ஆகி விடும்.

உலக உணவு உற்பத்தியில் சீனாவும் ,இந்தியாவும் 55% உணவை எடுத்து கொள்கிறது,
முழுக்க முழுக்க மற்ற பொருள்களை ஏற்றுமதி செய்ய கவனம் செலுத்திய சீனா, உணவை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்தது, (அதை இப்பொழுது தான் தடை செய்திருக்கிறோம்),

ஐரோப்பிய நாடுகளில் வளர்ந்து வரும் மக்கம் தொகை வளர்ச்சிக்கேற்ப உணவு உற்பத்தி இல்லை, அதுவும் இறக்குமதி தான் செய்கிறது, மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் சொல்லவே வேண்டியதில்லை உணவுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருக்கிறது, மேலும் வளர்ந்து வரும் கச்சா எண்ணையின் விலையால்
உலக நாடுகள் அனைத்தும் எதையும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல இரட்டிப்பு செலவு செய்கிறது,

அந்த செலவு உணவு பொருட்கள் மேல் தானே திணிக்கப்படும், உணவு பொருள்களின் விலை உயர்வை கட்டுபடுத்த கட்டாய உற்பத்தி அதிகரிப்பே தீர்வாக இருக்க முடியும்,
ஆன்லைனை தவிர வேறு காரணங்கள் நிறைய இருக்கும் போது அதை மட்டுமே மாற்றி மாற்றி குறை சொல்வது, கொம்பை விட்டு வாலை பிடித்த கதை தான்

புரியாத புரிதலை புரிந்து கொள்ள சில முயற்சிகள்!!


இன்று நாடெங்கும் காட்டுதீ போல் பேசப்படும் பிரச்சனை விலைவாசி உயர்வு!
இதற்கு காரணம் ஆன்லைன் வர்த்தகம் என்று குற்றம் சாட்டபடுகிறது.
இதை புரிந்து கொண்டு தான் சொல்கிறார்களா அல்லது யாரோ விசமி கிளப்பி விட்ட வதந்தியா என்று தெரியவில்லை,

ஆன்லைன் வர்த்தகம் மட்டுமே ஒரு காரணமல்ல என்பதற்காகவே இந்த பதிவு.

ஒரு நாட்டில் புழக்கத்தில் இருக்கும் பணத்திர்கேர்ப்ப தங்கம் கையிருப்பு இருக்க வேண்டும் என்பது நியதி, அதை மாற்றியது முதல் குற்றம், மற்ற மாநிலங்களை சாட்சிக்கு கூப்பிடுவதை விட நம் தமிழகத்தை பற்றியே பேசுவோம்.

நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வருடம் மட்டுமல்லா எப்போதுமே துண்டு விழாத பட்ஜெட் நம் இந்தியாவில் கிடையாது.
முதல் முட்டாள் தனம் இலவச தொலைகாட்சி பெட்டி, அதை அவர்கள் காசு கொடுத்து தான் வாங்க வேண்டும், எங்கிருந்து வரும் காசு,

இரண்டு ரூபாய்க்கு அரிசி உண்மையில் ஏழைகளை சென்றடைகிறதா!?
இட்லி மாவு விற்கும் கடைகளுக்கும், ஓட்டல்களுக்கும் தான் சப்ளை ஆகிறது,
ரேசன் கடைகளில் நேர்மையாக தான் நடந்து கொள்கிறார்கள், எதாவது வாங்க சென்றால்
அவர்கள் கேட்பது
அரிசி வாங்குவீர்களா ?
இல்லை
இருபது கிலோ போட்டு கொள்ளட்டுமா
நாம் தான் வாங்க போவதில்லையே
சரி போட்டு கொள்ளுங்கள் என்கிறோம், அதே போல் ஐந்து பேரிடம் கேட்டால் ஒரு மூட்டை ஆகி விட்டது, அதை தான் விற்கிறார்கள்.

விவசாயகடன் ரத்து, சரி வங்கிகளுக்கு யார் பணம் குடுப்பார்கள்,
இப்படி பேப்பரை பண நோட்டாக அச்சடித்து அதை வேற்று காகிதமாக்கியது யார்?
இந்த கூறு கெட்ட அரசாங்கம் தான்! எனக்கு எந்த அரசியல்வாதிகள் மேலும் நம்பிக்கையில்லை, தன் பாக்கெட்டை நிரப்பவே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

ரேசன் கார்டு வைத்திருப்பவர் அனைவருக்கும் இலவச தொலைகாட்சி பெட்டி என்று ஸ்டாலின் அறிக்கை விடுகிறார், நம் கட்டும் வரிப்பணம் இப்படி நாசமாய் போனால் ஏன் வராது இந்த விலைவாசி உயர்வு.

இவர்கள் இஷ்டத்திற்கு நோட்டு அடிப்பதற்கும், வெளியே ஒருவன் கள்ளநோட்டு அடிப்பதற்கும் என்ன வித்தியாசம்,

ஆன்லைன் வர்த்தகத்தை மட்டும் குறை சொல்வது தவறு, அது எல்லா நாட்டிலும் இருக்கிறது, ஆனால் நம் நாட்டில் இருப்பது போல் இந்த அளவு அசுர விலைவாசி உயர்வு எங்கேயும் இல்லை.


அதே நிலம், அதே விவசாயி, அதே பயிர்கள் ஆனால் பத்து வருடத்திற்கு முன் இருந்ததை விட பத்து மடங்கு விலை உயர்வு, மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரித்து விட்டதால் இந்த உயர்வு என்று அறிக்கை விடுகிறார்கள், விட்டால் பட்டினி கிடக்க சொல்லுவார்கள்,

பிரச்சினையின் வேரை விட்டுவிட்டு கிளையை பிடித்து தொங்குவது தான் இந்த அரசியல்வாதிகளின் வேலை. விலைவாசி உயர்வுக்கு அவர்கள் சொல்லும் காரணம் துளியும் உண்மையில்லை, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலவச தொலைகாட்சி தருகிறார்களாம், இலவசமாய் இந்த பெட்டி கிடைக்கும் அரிசி கிலோ நூறு ரூபாய்க்கு விற்கும்

!

Blog Widget by LinkWithin