ஏககாலத்தில் பல இஷங்களில் வாழும் அய்யனார்! பாகம் 1

பதிவர் வட்டத்தில் தமிழ்மணம் மற்றும் தேன்கூட்டில் இருப்பவர்களுக்கு அய்யனாரை பற்றி தெரியாமல் இருக்காது, அவரது எழுத்துக்களை எனது சில நண்பர்களுக்கு அறிமுக படுத்தினேன், ஆனால் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, அது பற்றி நண்பர்களுக்கு விளக்க சில புத்தகங்களில் தேடியபோது கிடைத்தவை,

ஒரே பதிவில் எழுத முடியாது என்பதால் சில பாகங்கள் தொடரும்,

சில இஷங்களையும் அதன் கோட்பாடுகளையும் அறிமுகபடுதுகிறேன் முதலில்.

ரொமாண்டிஷம்

உணர்தல், கற்பனை, அனுபவம்,ஏக்கம் கலந்தது ரொமாண்டிஷம்.

தனிமனிதன் பகுத்தறிவுக்கு உட்படாதவன், தனிச்சையாக இயங்குபவன், இயல்பை மீறி செல்பவன் என்று ரொமாண்டிசத்தில் மனிதனை பற்றி சொல்கிறார்கள்,

ஒரு கலைஞன் அதிதமான தனித்துவம் மிக்க படைப்பாளி, அவனை யாரும் கேள்வி கேட்க முடியாது, அவனது படைப்பு திறன் வழக்கமான சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்டது.

தொடரும்

குறுந்தகவல் நகைசுவைகள்

நண்பர் லோகேஷ் கோவையிலிருந்து அனுப்பிய நகைசுவை குறுந்தகவல்!
சிரிக்கவே யாரையும் புண்படுத்த அல்ல

சில்வர் க்ளாசில் தண்ணி அடிக்கலாம், கண்ணாடி க்ளாசில் தண்ணி அடிக்கலாம் ஆனால் கூலிங் க்ளாசில் தண்ணி அடிக்க முடியுமா?
இப்படிக்கு
"புல் மப்பில் யோசிப்போர் சங்கம்"
(உறுபினர்கள் வரவேற்க படுகிறார்கள்)

2008 கைபேசி உபயோகிப்போர் ராசி பலன்
1.சிக்னல் கிடைக்காமல் லோ லோனு அலையும் aircel ராசிகாரர்களே 10 RS டாப் அப் இருந்தால் ஒரு வெட்டி பந்தா காண்பீர்கள்

2.பேனர் வைத்தே ஊரை ஏமாற்றும் airtel ராசிகாரர்களே இந்த வருடம் இரட்டை வேலிடிடிக்கு ஆசை பட்டு ஒரு அழைப்புக்கு 2 ரூபாய் தண்டமாக செலவு செய்வீர்கள்

3.போன் பேசாமலே பில் கட்டும் BSNL ராசிகாரர்களே, மிஸ்ஸுடு கால் கொடுத்தே பிறரின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாவீர்கள்

4.நாயை காட்டி பொழப்பு நடத்தும் VODAFONE ராசிகாரர்களே, விளம்பரம் பார்த்து நிறைய குறுந்தகவல் அனுப்பியே காசை கரியாக்குவீர்கள்.

கடவுள் நம்பிக்கையும்! நானும், தமிழச்சியும்!

தமிழச்சியின் லேட்டஸ்ட் பதிவு சிந்தியுங்கள்
என் பங்கிற்கு நான் சிந்தித்ததில் கிடைத்தவை



நான் சொன்னேன் என்று கேட்க வேண்டாம், என்று சொல்லி இருக்கிறீர்கள், அதோடு இது சொல்லி ஐம்பது வருடம் ஆயிற்று, அதனால் ஏதேனும் மாற்று கருத்து இருந்தால் சொல்லுங்கள் என்றால் இந்த இடத்தில் ஒரு கருத்து விவாதத்தை ஆரம்பித்து இருக்கலாம்

//சாதாரணமாக ஒரு 100, 105 வருஷத்திலே உலகம் எவ்வளவு மாறியிருக்கிறது.//

<குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான், ஆனால் 2000 வருடங்களுக்கு மேலாக மனிதன் இதே போல் தான் இருக்கிறான், ஏன் இப்பொழுது எந்த மாற்றமும் இல்லை, என்று கேட்கும் மதவாதிகளுக்கு நான் சொல்லும் பதில்>
பரிணாம வளர்ச்சி என்பது உடல் வளர்ச்சியை மட்டுமே கொண்டதல்ல, தேவைக்கு ஏற்ப தகவமைப்பை உருவாக்கி கொள்வது, கடந்த நூறு வருடமாக பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்,

//நெருப்புக் குச்சிகூட வெள்ளைக்காரன் வாரதிருந்தால் நமக்கு வந்திருக்குமா?//

இது சரியல்ல! நெருப்பு குச்சிக்கு சொந்தக்காரன் "வெள்ளைக்காரன்" கிடையாது!
அவனும் மதவாதி தான்! ஆனால் முட நம்பிக்கைகள் குறைவு, அடுத்தவன் கருத்துக்கு மரியாதை குடுக்கிறார்கள், அறிவியல் வளர, மதத்தில் உள்ள தடையை உடைத்தார்கள்,

//இது பெரிய காட்டுமிராண்டி நாடு, நாம் அப்படியே இருக்கிறோம். இதுதான் சொல்ல முடியும்.//

தன்னை விட உருவத்தில் பெரிய யானையை கூட அடக்கி ஆள தெரிந்தவன் மனிதன்,
அனைத்து தகுதிகளும் உள்ளவன் மனிதன், ஆனால் சிறு வயதிலிருந்தே யாருக்காவது அடிமையாக தான் இருக்க வேண்டும் என்று சொல்லி குடுக்கிறார்கள்,

வாழ்க கோசமும் ஒரு வகையான நம்பிக்கை தான், இந்த நம்பிக்கையும் மனிதனின் பகுத்தறிவை மொண்ணை ஆக்கும் என்பது என் தாழ்மையான கருத்து

//காங்கிரசினுடைய கொள்கை காந்தியைக் காப்பாத்ணும், //

காந்தியை மட்டுமல்ல, காந்தி பெயர் தாங்கியுள்ள அனைவரையும்

இறுதியாக என் வாதம் என்னவென்றால்:,

மத நம்பிக்கை ஒரு வகையான உளவியல் ரீதியை சார்ந்தது, மனதளவில் பலகீனமான மனிதன், ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா என்று தேடும் பொழுது, அடுத்தவன் வீடு எரியும் பொழுது குளிர் காயும் சிலரால் ஏற்படுதபட்டதே மதம், இது இந்த நாட்டில் தான் தோன்றியது என்று சொல்ல முடியாது, எல்லா நாட்டிலும் மதங்கள் இருக்கிறது,
கடவுள் மறுப்பாளர்களும் எல்லா நாட்டிலும் இருக்கிறார்கள்,

மற்றொரு வேண்டுகோள்;
பெரியாரின் சிஸ்யை என்று சொல்கிறீர்கள்,
பெரியாரும் , ராஜாஜியும் சிறந்த நண்பர்கள் என்று தெரியாதா உங்களுக்கு,
நாம் மூட நம்பிக்கைக்கு எதிரியாக இருப்போம், பிராமணர்களுக்கு அல்ல

சீட்டு விளையாட்டு - ஓர் ஆய்வு

உடலையும் உள்ளதையும் இளமையாகவும், புத்துணர்ச்சியுடன் வைத்து கொள்ள பல விளையாட்டுகள் உள்ளன!

அறிவுக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளில் அநேகம் பேர் சதுரங்கதையே போற்றுகின்றனர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை,எதிரியின் படை பலத்தை நம் கண்ணால் பார்க்கிறோம், எதிரியின் அடுத்த நடவடிக்கை கூட நமக்கு தெரிகிறது, இதில் எப்படி சுவாரிசயம் இருக்கும்,



சீட்டு விளையாட்டை எடுத்து கொல்லுங்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட எதிரிகள், எதிரியின் படை பலமும் தெரியாது, எத்தனை ஒற்றர்கள்(jokers) என்றும் தெரியாது,

ரம்மி விளையாட்டு மிக அருமையான பொழுதுபோக்கு மட்டுமல்ல, மூளைக்கு சிறந்த வேலையும் கூட,
இதில் அநேகம் பேர், ஒருவரே அதிகம் ஜெயிப்பதற்கு காரணம் அவரின் அதிர்ஷ்டம் என்று நினைக்கிறார்கள், திறமையை கொட்சை படுத்தும் சொல் தான் அதிர்ஷ்டம்,

விளையாட்டு நுணுக்கதிர்க்கு வருவோம்!

சீட்டு விளையாட்டில் சாத்தியக்கூறுகளை மிக கவனமாக கையாளவேண்டும்,

உதாரணத்திற்கு என்னிடம் 6-ம் 8-ம் இருந்தால் ஐந்து வரும்பொழுது எட்டி கழட்டி விடுவதே சிறப்பு ஐந்திற்கும் ஆறுக்கும் இரண்டு சாத்தியங்கள் உண்டு, அவை நான்கு மற்றும் ஏழு, ஆனால் ஆரிற்க்கும் எட்டிர்க்கும், ஏழு ஒன்றே சாத்தியம், அதே போல் மற்ற ஆட்ட காரர்கள் முக்கியமாக நமக்கு முன், பின் இருவர் ஆட்டத்தையும் மிக கவனமாக பார்க்க வேண்டும்,

நமக்கு முன் இருப்பவர் விடும் அட்டைகளை வைத்தே அவரிடம் எந்த மாதிரியான எண்கள் உள்ளன என்று தெரிந்து கொள்ளலாம், நமக்கு பின் இருப்பவர் எதை நம்மிடம் எதிர் பார்க்கிறார் என்று வைத்தே அவரிடம் என்ன உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்,

சீட்டு விளையாட்டு என்பது ஒரு வகையான கணிதம்,
சிறப்பான ஆட்டகாரர் ஒரே பூவில் ஒரே எண்கள் இரண்டு இருந்தால், பின் ஆட்ட காரர் அந்த எண்ணை ஒட்டிய வேறு எண்ணை வெளியேற்றும் வரை கிழே இறக்க மாட்டார்,

ஒற்றனுக்கு(joker) ஒட்டிய எண்ணிலும் அதிகமாக யாரும் ரம்மி சேர்க்க மாட்டார்கள்,
அதை ஒட்டிய அதாவது ஜோக்கருக்கு முன் அல்லது பின் எண்ணை தாராளமாக எதிர்பார்க்கலாம்,

நான்கு சுற்றுக்கள் முடிந்த பின் யாராவது ஒருவருக்கு ஒரு நம்பர் அல்லது இரண்டு மட்டுமே தேவை படும், அம்மாதிரியான நேரங்களில் பெரிய எண்கள் கிழே விழும், ஜோக்கர் கையில் இருந்தால் நம்கையில் தான் வெற்றி,

ஒரு ரம்மி ஒரு ஜோக்கர் இல்லையென்றால் நான் ஆடமாட்டேன், வெறும் இருபது பாயிண்டில் தற்காலிகமாக வெளியேறி விடுவேன்,
(பங்கு வர்த்தகத்தில் stoploss முறை இதிலுருந்து தான் வந்தது போலும்,)

இவ்வாறாக ஆடினால் இந்த ஆட்டம் மட்டுமல்ல, எல்லா ஆட்டமும் நாம் தான் வெற்றி

ஐஸ்! எது பெரிது? இமயமலை - அண்டார்டிகா

சென்ற வார குமுதத்தில் பாமரனுக்கு லீனா மணிமேகலை விட்ட டோசுக்கு பதிலாக மிகப்பெரிய ஐஸ் வைத்திருக்கிறார்,

உங்க வீட்டு ஐஸ் எங்க வீட்டு ஐஸ் இல்லைங்க! அது இமய மலையா! அன்டார்டிகாவா! பட்டிமன்றம் நடக்குது!

இது ஐஸ் என்று நினைத்தால் ஞானி ஸ்டைலில் உங்களுக்கு ஒரு குட்டு.

எட்டு வயதில் லீனா சே குவாரா, பிடல் காஸ்ட்ரோ புத்தகங்கள் படிதிருகிறாராம்.
அதை பார்த்த பின்பு தான் அவருக்கு படிக்கும் ஆர்வமே வந்ததாம்.
இதை விட்ட பெரிய கொடுமை இவருக்கு பெண் குழந்தை பிறந்தால் லீனா பெயர் தான் சுட்ட வேண்டும் என்று நினைத்தாராம்,

பெரியாரின் புத்தகங்களை படிக்க சொன்ன லீனாவிர்க்கு,
நானும் புத்தகங்களை படித்திருக்கிறேன் என்று சொல்கிறாரா?

அல்லது உண்மையிலேயே பாராட்டுகிறார் என்றால் அதற்கு எவ்வளவு பெரிய ஐஸ் தேவையா ?

தடைகளை மீறி!

பல தடைகளை மீறி வருமோ, வராதோ என்ற பல சர்ச்சைகளுக்கு பின் ஒரு வழியாக சில கட்டுப்பாடுகளுடன் உயர் நீதிமன்றத்தின் சம்மதத்தோடு நடந்தது இந்த வருட ஜல்லிக்கட்டு
நண்பர்களுக்கு அதில் இருந்து சில படங்கள்,















உங்கள் புஜங்கள் முருக்கேறினால் தயவு செய்து வீட்டில் எந்த முயற்சியும் எடுக்காதிர்கள்,
களத்தில் தான் காளை, வீட்டில் என்றுமே பசு தான் செயிக்கும்

மொக்கை என் பங்கிற்கு

மனிதர்களின் தன்மை பிரிப்பது, அவர்களுடைய செயல்கள் மற்றும் எண்ணங்கள்.
இவைகளே!,அவர்களின் பழக்க வழக்கமாகிறது,

வலைப்பதிவுகளில் எவ்வளவோ வகையான பதிவுகளை பார்த்திருக்கலாம்,
ஒரு சிலரின் ரசனைகள் மிகவும் ரசிக்கதக்கவாறு இருக்கும், சிலரது வேடிக்கையாக இருக்கும், சிலரது தற்புகழ்ச்சி மட்டுமே இருக்கும்,

நமது மொழி மட்டுமல்லாது அனைத்து ப்ளாக்குகளையும் பார்ப்பது எனது வழக்கும்,
பிளாக் ஹெட்டில் இருக்கும் நெக்ஸ்ட் ப்ளாகை சுட்டினால் வேறு ஏதோ ஒரு பிளாக் வேற மொழியில் வரும்,

சமிபத்தில் பார்த்த பிளாக் இது, மே 2006 லிருந்து வரும் இந்த பிளாக்கில் வேறு ஒன்றும் இல்லை, இவர் என்ன சாப்பிடுகிறாரோ அதை படம் பிடித்து தினமும் போஸ்ட் செய்கிறார் ,

பின்னுட்டம் போடவில்லைஎன்றால் நண்பர்களை திட்டும் இந்த வலையுலகில் எதையும் எதிர்பாராமல், ப்ளாகை ஒரு டிஜிட்டல் டைரியாக உபயோகபடுத்தும் இவர் உண்மையிலே ஒரு நல்ல ப்ளாகர் தான்

ஆன்மிக வியாபாரம்

சில வார பத்திரிக்கைகளில் வரும் சில விளம்பரங்களை பார்க்கும் பொழுது என்னுடைய இறை மறுப்பு கொள்கை மேலும் தீவிரம் அடைகிறது,

விளம்பரம் என்பது எதற்காக?. நம்முடைய வியாபாரம் முன்பை விட மேலும் சிறப்பாக செயல் பட வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் நாம் எடுக்கும் முயற்சியே விளம்பரம் .
சில வாரங்களாக ஒரு விளம்பரம் என் கண்ணை உறுத்துகிறது,
அந்த விளம்பரத்தில் இருந்து சில வரிகளும், என் கண்ணோட்டமும்,

அம்மாபகவான் என்று அந்த பத்திரிக்கை மூலம் விளம்பர படுத்துகிறார்கள்,
அவர் அம்மாவுக்கு பகவானா அல்லது பகவானுக்கு அம்மாவா ?

அவர்களின் சிறப்பு தரிசனம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு!

மற்ற நாட்கள் என்ன பகவானுக்கு விடுமுறை நாளா?
அதென்ன சிறப்பு தரிசனம் பணம் கட்டி சிறப்பு தரிசனம் கோயில்களில் தான் இருந்தது , இப்பொழுது மனிதனை பார்க்கவும் சிறப்பு டிக்கெட்டா?
அதுசரி நமக்கு தானே மனிதர்கள், அவர்கள் காலை கழுவி குடிக்கும் கும்பல்கள் மத்தியில் நாத்திகம் பேசுவது வில்லத்தனம் அல்லவா!

சொறி, சிரங்கு படையிலிருந்து சிறுநீரக கல் மற்றும் புற்று நோய் வரை குணமாகிறதாம் இவர்களிடம் வேண்டி கொண்டால், இதுவரை எய்ட்ஸ் மட்டும் தான் வரவில்லை, வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டால் அதுவும் வந்துவிடும்,

இவர்களுக்கு தமிழ்நாட்டில் 28 நகரங்களில் ப்ரோக்கர்கள் இருக்கிறார்கள், அதுவல்லாது
அயல்நாடிலும் இவர்கள் தொழில் களைகட்டுகிறது, கல்லாவும் கட்டுகிறது.

ஒரு சந்தேகம் இந்து கடவுளின் புரோகர் பூசாரி, கிறிஸ்தவர்களுக்கு பாதரியார், முஸ்லீம்களுக்கு அஜ்ரத், இந்த அம்மாபகவான் புரோக்கர்களுக்கு என்ன பேர் வைப்பது?

கேட்டவுடன் துபாயில் வேலை கிடைக்கிறதாம், தமிழ்நாட்டு மக்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு காத்திருப்பதற்கு பதில் இவர்களிடம் சொன்னால் உடனே வேலை கிடைக்குமே!

இதைவிட பெரிய கொடுமை இந்த விளம்பரங்கள் எல்லாம் சாட்சிகளுடன் வருவது,
உண்மை ஆன்மிகவாதிகள், இதற்கென்று தனியாக புத்தகம் விட்டால் கூட இந்த வார பதிரகை விளம்பர செலவு கூட வராது, பின் ஏன் இந்த பத்திரிகையில் விளம்பரம்
நான் ஏற்கனவே சொன்னது போல் நம்முடைய வியாபாரம் முன்பை விட மேலும் சிறப்பாக செயல் பட வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் நாம் எடுக்கும் முயற்சியே விளம்பரம் .

இவனுகளை எல்லாம் 100 பெரியார் வந்தாலும் திருத்த முடியாது!

'மறுகாலனியவாதம்' என்னும் பிதற்றல் பாகம் 3

பாகம் 1
பாகம் 2
பண்புடன்

நமது பதில்களுக்கு மீண்டும் எதிர் பதில் போட்டு விட்டார் செல்வன்,
தாய்நாட்டின் மீது பற்று கொண்ட ஒருவன் எக்காரணத்தை கொண்டும் இந்த விவாதத்தில் பின்வாங்க மாட்டான்,

// இந்தியாவில் நிலத்தடி நீரில் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்த சதவிகிதம்
அதிகம்.கோக், பெப்சி இந்தியாவில் கிடைக்கும் நிலத்தடி நீரையும் ஆற்று நீரையும்
வைத்துத்தான் தயாரிக்கப்படுபவை.நாம் குடிக்கும் பால்,தண்ணீர்,ஜூஸ்,காபி, டீ
என்று அனைத்து பானங்களிலும் என்ன அளவுக்கு பூச்சி மருந்து கலந்திருக்கிறதோ அதே
சதவிகிதம் தான் கோக்கிலும் இருக்கிறது.பூச்சி மருந்து வேண்டாம் என்றால் நாம்
தண்ணீரே குடிக்க முடியாது. //

என்ன இது கேலிக்கூத்து வெறும் தண்ணீரா கோக்கும் , பெப்சியும் வேறு எதுவும் இதில் கலப்பதில்லையா?
//இந்தியாவில் நிலத்தடி நீரில் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்த சதவிகிதம்
அதிகம்//
அதற்கு காரணம் யார், இயற்கை விவசாயம் பார்த்து கொண்டிருந்த மக்களா!
பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு அடுத்த நாட்டின் இயற்கையை சுரண்டும் அன்னிய முதலீடா?

//இனிமேல் பெட்ரோல் போடாமல் கார்,ஸ்கூட்டர் ஓட்ட முடியுமா என்று
பார்க்கலாமா?:-) //
இன்றும் கிராமங்களில் மாட்டு வண்டி உண்டு பார்த்ததில்லையா நீங்கள், ஏறி வரும் கட்சா எண்ணையின் விலைக்கு யார் காரணம்? 2007 சூலை மாதத்தில் வெறும் 50 டாலர்களாக இருந்த கட்சா எண்ணை இப்பொழுது 100 டாலர்களுக்கு விலை போகும் காரணம் என்ன?
மற்ற நாடுகளின் தேவையை புரிந்து கொண்டு முடிந்த வரை கறக்கும் நீங்கள் சொன்ன பொருளாதார சுதந்திரம் உள்ள அந்த அமெரிக்கா தான், அரபு நாடுகளின் பல எண்ணை கிணறுகளை தன் வசம் வைத்துள்ளது, அதற்காக அந்த நாடு செய்த சூழ்ச்சி ஊரறியும் இந்த நாடறியும்,

// ராக்பெல்லர், ஃபோர்ட், கொய்சுட்டா, ஜாக் வெல்ச், என வாழையடி வாழையாக அந்த நாடு மாபெரும் தொழிலதிபர்களையும் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள், தொழில் வல்லுனர்கள் என்று உருவாக்கி வருவதுதான்.//

மனித குலத்திற்கு தேவையான வளர்ச்சிகளை செய்யும் விஞ்ஞானம் எல்லா நாட்டிலும் உள்ளது, மக்களின் அழிவிற்கு மட்டுமே ஆராய்ச்சி செய்யும் அமெரிக்காவின் பொய், புரட்டு, பித்தலாட்ட வார்த்தைகளை நம்பி அதற்கு வக்காலத்து வாங்குவது தான் வேதனையான ஒன்று.

//"உன் கனவை நோக்கி நீ உழைத்தால் அதை நீ எட்டுவாய்" என்பதுதான்
இந்த நாட்டின் தாரக மந்திரம்.அதை அமெரிக்கன் ட்ரீம் என்று அழைக்கிறார்கள். //

என்ன கொடும சார் இது! அமெரிக்காவுக்கு கனவு இருக்கலாம், இந்தியனுக்கு கனவு இருக்க கூடாதா?

//இந்தியா உயரவேண்டுமானால் இந்த நாட்டிடமிருந்து இந்த சிறப்புக்கள்
அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்.//

கற்று கொள்வதற்க்காக இந்தியாவை அடமானம் வைக்க எந்த இந்தியனும் தயாராக இருக்கமாட்டான்,

//கம்யூனிசம் பேசினால் ரஷ்யா,கிழக்கு ஐரோப்பா, கியூபா, மாதிரி குட்டிசுவராகத்தான் போவோம் //

கம்யூனிசம் பேச எனக்கு அறிவு பத்தாது, அவர்களின் கொள்கை கூட எனக்கு தெரியாது,
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்றால் அது கம்யுனிசமா?

//அன்னிய முதலீடு இல்லையென்றால் இன்று பெட்ரோல் இறக்குமதி செய்யகூட நம்மிடம் காசு இருந்திருக்காது.//

அர்த்தமற்ற வாதம் நாமும் ஏற்றுமதியில் சளைதவர்கலள்ள! இங்கிருந்து அனுப்பும் பொருள்களுக்கு பதிலாக பெட்ரோல் வாங்கி கொள்ளலாம், அன்னிய முதலீட்டு எதற்கு இதில்!

//க்யுபா அமெரிக்காவை எதிர்த்து இருக்கிரது என்றால் எப்படி? நம் ஊர் அரசியல்வாதிகள்
மாங்கொல்லையில் நின்றுகொண்டு 'ஜார்ஜ் புஷ்ஷை எச்சரிக்கிறேன்" என
முழங்குவார்கள்.அந்த மாதிரி உலக அரங்கில் முழங்கும் கோமாளிதான்
காஸ்ட்ரோ.தேர்தல் என்று ஒன்றை வைத்திருந்தால் என்றோ அவர் தூக்கி
வீசப்பட்டிருப்பார்:-)//

அமெரிக்காவின் சதி திட்டங்களும், C.I.A வின் படுகொலைகளும் தெரியாதது போல் பேசுவது, உங்கள் அறிவு முதிர்ச்சிக்கு கிடைத்த சறுக்கு, அவர்கள் வேலையே உள்நாட்டில் குழப்பம் விளைவித்து குளிர் காய்வது தானே!

//பொருளாதார கொள்கை வந்தாலும் வரவில்லை என்றாலும் உலகத்தில் எந்த காலத்திலும்
எந்த நாட்டிலும் மக்கள் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு குடிபெயர்ந்து தான்
கொண்டிருக்கிறார்கள்.//

கிராமத்தில் இருந்து குடி பெயர்வது வளர்ச்சியலா, கிராமத்தை மேம்படுத்துவதே வளர்ச்சி, உங்கள் திட்டம் மக்களை கூண்டோடு இடம் பெயர்த்து விட்டு விளை நிலங்களை பொருளாதார மேம்பாடு என்ற பெயரில் நாசபடுதுவதே!

//செய்யட்டுமே?கஸ்டமர்களுக்கு வேலை செய்யத்தானே தொழிற்சாலைகள்?அது சின்ன கம்பனி, பெரிய கம்பனி, வெளிநாட்டு கம்பனி என எதுவாக இருந்தால் என்ன?நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது?//

ஏன் சொல்ல மாட்டிர்கள்! பிறந்த மண்ணை , வளர்த்த மண்ணை கூறு போட்டு விற்க துணிந்த நீங்கள், கேவலம் பணத்திற்காக மாற்றான் நாட்டிற்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் வேண்டுமானால் பணம் எப்படி வந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கலாம்.
கலாசார, பாரம்பரியும் மிக்க நாடு நம் நாடு, ஏற்கனவே பாதி சிதைதாயிற்று, அடியோடு ஒழிக்க அப்படி என்ன ஆசை உங்களுக்கு?

//அந்த நிலையை நேரு கலத்திலேயே எட்டிவிட்டோம்.அரிசி/கோதுமை இறக்குமதி நேரு
காலத்தில் இருந்தே இருக்கிரது.உணவு இறக்குமதி செய்ய காசில்லாமல் மொரார்ஜி
தேசாய் 'எல்லோரையும் திங்கள்கிழமை உபவாசம் இருக்க' சொல்லியெல்லாம் வேண்டுகோள் விடுத்தார்.சோஷலிச பொருளாதாரத்தின் மகத்துவம் அப்படி. //

பஞ்சம் என்பது இயற்கையுடன் சம்பந்தப்பட்டது, அந்த நேரத்தில் அவர்கள் வரும் முன் காக்க மறந்திருக்கலாம், அதற்காக எல்லா நேரமும் வெளி நாட்டின் கையை நம்பி இருக்க வேண்டுமா? உள்நாட்டில் விவசாய புரட்சி செய்து நம் வளத்தை நாமல்லவா பெருக்க வேண்டும்.

கடைசியாக ஒரு வேண்டுகோள்,
நிறைய படித்திருக்கிறீர்கள், புள்ளி விபரங்களுடன் தகவல் தர தொழில் நுட்ப அறிவு இருக்கிறது, உங்களை போல் உள்ளவர்கள் நமது தாய் நாட்டிற்க்காக அதை செலவு செய்தால் மற்ற நாடுகள் நம்மிடம் கடன் வாங்கும் அளவுக்கு நம்மால் வளர முடியும்,
வெளிநாட்டில் வேலை செய்தாலும் உங்களை போல் உள்ளவர்கள், தாய் நாட்டின் வளர்ச்சிக்காக சிறிது முயற்சி செய்வோமானால், நம் மூதாதையர்க்கு நாம் செய்யும் நன்றியாகும், மேலும் நம் சந்ததியினர்க்கு நாம் செய்யும் கடமையும் கூட!

நன்றி

முதல்வருக்கு என் வாழ்த்துக்கள்

இதை பற்றி படிக்கும் பொழுது முதல்வரை பற்றிய என் விமர்சனத்தையும் படியுங்கள்

பெருகி வரும் மக்கள் தொகையின் அத்யாவிசய தேவைகளில் ஒன்று இருப்பிடம்,
இந்த சமுதாயத்தில் சொந்த வீட்டு இருப்பவருக்கு தனி மரியாதையை என்று அனைவருக்கும் தெரியும்,
இந்திய பொருளாதாரம் வளர்சியுற்றாலும் அத்யாவிசய பொருள்களின் விலையும் கூடவே சேர்ந்து ஏறுவதும் தெரியும்,
இந்நிலையில் கட்டுமான பொருளில் முக்கிய தேவையான சிமென்ட் விலை குறைபிற்கு முக்கிய காரணமாக இருந்த தமிழக முதல்வரை பாராட்டுவதில் தப்பில்லை,

இதனிடையே இது வெறும் கண்துடைப்பு, சிமென்ட் நியாயவிலை கடைகளில் விற்க படவேண்டும் என்று டாக்டர் அய்யா சொல்வது நகைப்பிற்குரியது,
எந்த அறிக்கை வந்தாலும் அதற்கு எதிர் அறிக்கை விடுவதே தொழிலாக கொண்டுள்ளார் இவர்,
தனி தமிழகம் கேட்ட இவர், பின் நாளில் தமிழர்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பார் என்று நினைக்கிறேன், இவர் சொல்வது போல் நியாய விலை கடைகளில் சிமென்ட் குடுக்க ஆரம்பித்தால், பின் செங்கல் மற்றும் மணலையும் நியாயவிலை கடைகளில் கொடுக்க சொல்வார், அறிக்கைகளை விடுவதற்கு முன் அதில்லுள்ள சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து விட்டால் பரவாயில்லை,

விசயத்திற்கு வருவோம் சிமென்ட் நிறுவனமே இறங்கி வந்து விலையை குறைத்திருப்பதால் எவ்வளவு நாட்கள் அதிக லாபத்தில் விற்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது,
என் ஆசையெல்லாம் இதே போல் மற்ற அத்யாவிசய பொருள்களையும் விலையை குறைத்தல் நான் மட்டுமல்ல, மொத்த தமிழகமே சந்தோசபடும்,

வால்பையன்

'மறுகாலனியவாதம்' என்னும் பிதற்றல் பாகம் 2


பண்புடன்

இதற்கு முன் இதை பற்றிய விவாதம்
பாகம் 1


//பொய்களையும், கட்டுகதைகளையும் அவிழ்த்துவிட்டு நாட்டு
மக்களை ஏமாற்றுவதை இவர்கள் என்று நிறுத்துகிறார்களோ அன்று தான்
நாட்டுக்கு விடிவுகாலம் வரும் என்பதுதான் உண்மை.//

உங்கள் முடிவையே என் தலைப்பாக தேர்ந்தேடுகிறேன்.

//அந்த குளிர்பானங்கள் குடிக்க சுவை இல்லாதவை.மூணு ரூபாய்க்கு பிரிட்ஜில்
வைக்காமல் கடையில் கிடைக்கும்.வேறு வழியில்லாததால் அதை தாகத்துக்கு
குடித்துக்
கொண்டிருந்தனர் மக்கள்.//

பூச்சி மருந்துகள் தான் உங்களுக்கு சுவை தருமோ, ஒரு காலத்தில் ஆதரித்த
காங்கிரஸ் தான் இப்போது அதை பூச்சி கொள்ளி என்று எதிர்க்கவும் செய்கிறது.
அனால் இன்றும் நமது கொங்கு நாட்டு குளிர் பானமான "போடரங்" அடித்து கொள்ள
கோவை ,ஈரோடு மாவட்டங்களில் வேறெதுவும் இல்லை,

//லட்சம் ரூபாய் கார் வந்தால்
ஸ்கூட்டருக்கு பதில் அனைவரும் கார் ஓட்டுவார்கள். //

கார் ஓட்டுவார்கள். பெட்ரோல் யார் அடிப்பார்கள், அமெரிக்காவின் காலனி
ஆதிக்கத்தின் மூல காரணமே பெட்ரோல் தான், அதற்கு தான் அந்த புத்தகத்தை
படிக்க சொன்னது.

உங்கள் சிறு தொழில்கள் பற்றிய புள்ளி விபரத்திற்கு நன்றி,

1880 ல் சென்னையில் வெறும் நாற்பது துணி கடைகள் மட்டுமே இருந்தன.
இப்பொழுது 4000 இருக்கிறது. ஏன் அதை எல்லாம் விட்டு விட்டீர்கள்,
ஒரு கொல்லன் பட்டறயோ, தட்சு பட்டறயோ ஒவ்வொரு நான்கு வருடத்திற்கும் ஒரு
புது முதலாளி வெளியேறுவான் என்று என் கணிப்பு சொல்கிறது. அது எல்லா
நாட்டிலும் சீரான பொருளாதார வளர்ச்சி என்று 10 வது படிக்கும்
மாணவனுக்கும் தெரியும், உங்கள் புள்ளி விபரம் நாட்டின் வளர்ச்சியை
சொல்கிறது, ஆனால் இதற்கெல்லாம் காரணம் அன்னிய முதலீட்டு என்று வாதிடுவது
தவறு, அவர்கள் வரவில்லை என்றாலும் அது நடக்கும்,

கியூபா என்ற நாட்டை பற்றி தெரியும், விவசாயத்தில், அதுவும் கரும்பு ஒன்றை
மட்டுமே நம்பி அந்த நாடு இருந்தது, இன்றும் அமெரிக்காவை எதிர்த்து நன்றாக
தான் இருக்கிறது,

நமது நாடு முழுக்க முழுக்க(70%) விவசாயத்தை நம்பியது,
உங்கள் பெருளாதார வளர்ச்சியினால் கிராமத்திலிருந்து மக்கள் நகரத்திற்கு
இடம் பெயர்த்தது தான் மிட்சம், நகரத்தில் சேரிகள் அதிகமாகி
கொண்டிருக்கிறது,
கிராமத்தில் கௌரவமாக வாழ்ந்த ஒருவன் நகரத்தில் பிட்சை எடுக்கும் நிலைக்கு
தள்ள பட்டு இருக்கிறான்.(நல்ல வளர்ச்சி)
உங்கள் கருத்து படி பார்த்தாலும் வெளி நாட்டு முதலீடாளர்களுக்கு சிகப்பு
கம்பளம் (மூன்று வருட மின்சார சலுகை, வரி சலுகை.மேலும்......) விரிக்கும்
இந்த அரசாங்கம், உள் நாட்டு சிறு தொழிலாளர்களுக்கு என்ன செய்கிறது.
உங்கள் கணிப்பின் படி சிறு முதலீட்டார்கள் மட்டுமே இருப்பார்கள், ஆனால்
அவர்களும் உங்கள் பெரிய கம்பெனிகளுக்கு வேலை செய்து கொண்டு
இருப்பார்கள்.
உதாரணத்திற்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹோன்டாய் நிறுவனத்தை சுற்றி உள்ள
சிறு நிறுவனங்களை பாருங்கள்.
நம் நாடு ஒரு கிலோ நெல்லுக்கு வெளி நாட்டில் கை ஏந்தும் நிலையை
எட்டுவோம்,
அப்போது இப்போதை காட்டிலும் உங்கள் தாரளமயமாக்கல் கொள்கை சிறப்பாக
செயல்படும்.

என் கேள்விக்கு என்ன பதில்? பாகம் 2

இன்றைய செய்தித்தாளின் வித்தியாசமான செய்தி
சாருநிவேதிதா அவர்களின் மூன்று புத்தகங்கள், உயிர்மை பதிப்பகம் வாயிலாக வெளியிடப்பட்டது, மத்திய அமைச்சர் கனிமொழி வெளியிட, நடிகை மதுமிதா பெற்று கொண்டார், இயக்குனர் பாலு மகேந்ரா சிறப்புரை ஆற்றினர்,
அப்படி என்னத்தை ஆத்தினார் என்றால்,

சாருநிவேதிதா நல்ல எழுத்தாளர், அவரை பற்றி எல்லோரும் கலககாரர் என்று சொன்னதால் அவரை படித்தேன், நன்றாக இருந்தது, இதோடு நிறுத்தி இருக்கலாம்,
இயக்குனர் பாலாஜி சக்திவேலின் கல்லூரி படம் பார்த்தேன்,
அவரது முந்தய படம் "காதல்" நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, எதிபார்த்தது போல் இதுவும் நன்றாக தான் இருந்தது, ஆனால் ஒரு கலை படமாக எடுக்க வேண்டியதை வியாபார ரீதியாக எடுத்து விட்டார் என்று மனம் வருந்தினார்,
என் கேள்வி எல்லாம் இவர் சாருவை அவமான படுத்த இப்படி பேசினாரா, அல்லது இவருக்கும் அரசியல் வாடை அடித்து விட்டதா?!,
அவர்கள் தான் ஒரு கல்யாணத்திற்கு சென்றாலும், "நான் எதிர்கட்சியை பார்த்து கேட்கிறேன்" என்று மணமக்கள் பயப்படும் படி கத்துவார்கள்,
புத்தக வெளியிட்டு விழாவிற்கு போனவர் புத்தகத்தை பற்றி தானே பேச வேண்டும்,
இவர் ஏன் சினமவை பற்றி பேசினார்

தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.

மா.சிஅவர்களின் பதிவிற்கு டாக்டர் கலைஞர் வலையில் ஜாலிஜம்பர் அளித்த பதில்
//மா.சி நினைப்பது போல் ஒரு உன்னத தலைவர் கனவில் கூட சாத்தியமில்லை.நல்ல தலைவர்கள் என்றால் கோவணத்துணி கூட இல்லாமல் இருக்க வேண்டுமா என்ன?//

எளிமை என்ற வார்த்தையை நீங்கள் கொட்சை படுத்தி விட்டீர்கள், கக்கன் , காமராஜர் போன்ற எளிமையான அரசியல் தலைவர்கள் வாழ்ந்த தமிழகம் இது,
நல்ல தமிழகம் வேண்டும் என்ற கனவு இப்பொழுது ஒவொரு தமிழனுக்கும் வந்து விட்டது,
ஒவொரு மாநாடிற்க்கும் இவர்கள் செய்த செலவை பார்த்தால், உலக பணக்கார நாட்டில் தமிழகம் முதலிடம் வரும் போல தெரிகிறது,
கட்சி அபிமானியாக இருங்கள், ஜால்ரவாக இருக்காதிர்கள்,
இலவச டிவி ஒரு ஏழையின் பசியை போக்காது, ஏழை விவசாயியின் கோரிக்கையை நிறைவேற்றி தமிழகத்தின் தலை மகனை வாழவையுங்கள்,

இரண்டு ரூபாய்க்கு அரிசி கொடுப்பது மட்டும் சாதனை அல்ல,
அதே போல் குறைந்த விலையில் பருப்பு வகைகளையும் கொடுங்கள்,
வெறும் அரிசியை நீங்கள் சாப்பிடுவீர்களா,

வால்பையன்

"மறுகாலனியவாதம்' என்னும் பிதற்றல்" பாகம் 1


பண்புடன் குழுமத்தில் செல்வன் மற்றும் அதியமான் அவர்கள் வாதமும் அதற்கு என் பதிலும்

கேள்வி இங்கே
பண்புடன் குழுமம்

என் பதில்

"மறுகாலனியவாதம்' என்னும் பிதற்றல்"

//நோக்கியா செல் போன் நிறுவ‌ன்ம் சென்னை அருகே உருவான‌வுட‌ன், 1500
ரூபாய்க்கு ந‌ல்ல‌ செல்போன் கிடைக்கிற‌து.//

இதற்கு முன் 10000 ரூபாய்க்கு விற்கும் போதும் அவர்களுக்கு அதே செலவு
தான் ஆனது,
ஆன வரை மண்டையில் மிளகாய் அரைக்கும் திட்டம் அவர்களது,

//1991க்கு முன் இருந்த நிலைமையே ப‌ர‌வாயில்லையா ? ஒப்பிட்டு
பாருங்க‌ள். //

1947 லிருந்து 1991 வரை நாம் பின் தங்கி இருந்தோம் என்பது உங்கள் வாதம்,
அதற்கு முன் எப்படி இருந்தோம்,
பிற நாடுகளில் முதன் முதலில் தரை வழியாக மற்றும் கடல் வழியாக மாபெரும்
வியாபாரம் செய்து வந்தவர்கள் தாம் நாம், சீனாவிற்கு மிளகு போன்ற வாசனை
பொருள்களை கொடுத்து விட்டு "பட்டு" வாங்கி வந்தவர்கள் நாம்,
வெளி நாட்டு முதலிட்டை வேண்டம் என்று சொல்ல வில்லை, அனைத்திற்கும் நாம்
வெளி நாட்டின் கையை எதிர் பார்க்கும் நிலை வந்து விட கூடாதென்று
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சொல்லி வலியுறுத்துவது முட்டாள் தனம்
கிடையாது, வெளி நாட்டு முதளிடேல்லாம் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும்
என்று எவ்வாறு சொல்கிறிர்கள்,

அவர்கள் திட்டம் நம் உற்பத்தியை அடியோடு குறைத்து, அனைத்திற்கும் நாம்
அவர்கள் கையை எதிர்பார்த்திருக்க வேண்டும் என்பது தான், கார்த்திக்
சொன்னது போல் "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" படியுங்கள்
தவறில்லை,
சென்ற வருட சிறந்த புத்தகத்தில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.
(புத்தகத்தை பார்த்து சொல்லாதிர்கள் என்று சொல்விர்கலேயனால் நீங்கள் எதை
பார்த்து சொல்கிறிர்கள் என்று சொல்லி விடவும்)
புத்தகத்தை பற்றிய விரிவான பதிவு என் வலையில் விரைவில்,

கைபேசி விலையும், மகிழுந்து விலையும் வேண்டுமானால் இறங்கி இருக்கலாம்,
ஏழைகளின் அத்யாவிசய தேவைகள் ராக்கெட் போல் விலை உயர்துள்ளதை உங்களால்
மறுக்க முடியுமா,

உள் நாட்டு உற்பத்தி சீராக இருக்கும் போது பண வீக்கத்தின் காரணம் என்ன?
இன்றைய இந்திய பங்கு சந்தையின் வளர்ச்சி, உலக அளவில் ஆச்சர்யத்துடன்
பார்த்து கொண்டிருக்கும் பொழுது அதனுடன் சேர்ந்து விலை வாசியும் உயரும்
காரணம் என்ன,
நன்றி
வால்பையன்

நான் உனக்கு எதிரி அல்ல

தி.க நடத்தும் ஊர்வலத்தை அனுமதிக்க கூடாது என்று ராமகோபாலன் அறிக்கை விடுத்துள்ளார்,

இது எந்த வகையில் அவர்களுக்கு எதிரானது என்று அவர் நினைக்கிறார் என்று தெரியவில்லை, மத மூட நம்பிக்கைகளை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருவது தி க,

என்னை மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள், சிறுபான்மையினரையும் கிண்டல் செய்யுங்கள் என்று அவர்களையும் வம்புக்கு இழுப்பது நகைப்புக்குரியது, தமிழ்நாட்டில், இந்தியாவில் இருந்து கொண்டு இங்கே எது அதிகமாக மக்களுக்கு மூட நம்பிக்கைகளை புகுத்துகிறதோ அதை தான் முதலில் எதிர்க்க வேண்டும்.

//கடவுள் உண்டு என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருக்குமானால் இல்லை என்று சொல்ல மற்றவர்களுக்கும் உரிமை உண்டு என்ற பொறுப்பற்ற வாதத்தை சில அதிகாரிகள் கிளப்பி இருப்பது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.//
உதவிஇட்லிவடை

இது எப்படி வேடிக்கை ஆகும், உங்கள் நம்பிக்கை உங்களுக்கு அவர்கள்(என்) நம்பிக்கை அவர்களுக்கு, ஊர்வலம் நடுத்துவதும் அவர்கள் உரிமை. தமிழ் நாட்டில் அரசு அனுமதி இல்லாமல் ஊர்வலம் நடத்த முடியாது, தமிழக அரசும் அதற்கு துணை போகின்றது என்று நினைத்தால், தமிழக அரசின் முத்திரை-ஐ பாருங்கள் கோயில் கோபுரம் தான் இருக்கும்,

அரசியல் ஸ்டண்ட் நடத்துவது நீங்கள் தான், அவர்கள் வேலையை அவர்கள் செய்கிறார்கள், மூட நம்பிக்கைகள் ஊர்வலம் நடத்துவது தவறென்றால், நீங்கள் பிள்ளையார் ஊர்வலம் நடத்துவதும் தவறு தானே, அதற்கு ஏதாவது ஏழைகளுக்கு உதவி செய்யலாமே,

தி.க. நக்சலைட்டு கும்பல் என்று விமர்சிப்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை,
சமணர்களுக்கு என்ன கொடுமை செய்தீர்கள் என்று வரலாற்றிற்கு தெரியும், உங்கள் நம்பிக்கை மற்றவர்களை எதிரியாக பார்க்கிறது, இறை எதிர்ப்பு கொள்கை மனித நேயத்தை வளர்கிறது,

வால்பையன்

தமிழகத்தின் பெருமை

ராமேஸ்வரத்தில் ஒரு மாநாட்டுக்காக, மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 2000 பேர், அவர்கள் வந்த ரயிலில் டிக்கெட் எடுக்க வில்லை, அதிகாரிகள் கேட்டதற்கு
'டிக்கெட் வாங்குறதா'? சின்ன புள்ள தனமாவுள்ள இருக்கு! என்று அதிகாரிகளை கிண்டல் செய்திருக்கிறார்கள். முன்பதிவு இருக்கைகளையும் ஆக்கிரமித்து கொண்டு, "முன்னாடி ஒடி வந்து சீட் பிடிப்பது தான் முன்பதிவு"? என்ற ரீதியில் மண்டை காய வைத்திருக்கிறார்கள், அதிகாரிகள் எவ்வளவோ மன்றாடியும் அவர்கள் டிக்கெட் எடுக்கவில்லை.

ரயில்வே அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "தமிழ்நாட்டுக்கு தான் இது புதிது, ஆந்த்ரா பார்டர் தாண்டிட்டா, டிக்கெட் வாங்குறது தங்களோட வம்சத்துகே அவமானம் என்று நினைக்கிற ஆட்கள் அங்கே அதிகம். ஓடுற ரயில்ல தீக்குச்சி கூட கொளுத்த கூடாது, ஆனா அவங்க ஸ்டவ் கொளுத்தி சப்பாத்தி சுட்டு சாப்பிடுவார்கள், டேய் வீடு வந்துருச்சு.... இறங்கலாம் என்று நினைகிறபடி அபாயசங்கிளியை பிடித்து இழுத்து இறங்கி செல்வார்கள்,

இந்தவிசயத்தில் தென் மாநிலப் பயணிகளுக்கு கோவில் கட்டி கும்பிடனும். ஆயிரத்தில் ஒருத்தர் டிக்கெட் வாங்காம வந்தாலே அதிசயம். அரசின் விதிகளுக்கு பொதுவாகவே இங்கு மரியாதை இருக்கு என்று பெருமை ஊட்டினார்.

ஆனால் கட்சி மாநாட்டுக்கும், தலைவர் பிறந்த நாளுக்கும், அரசாங்க பஸ்களையும் தனியார் பஸ்களையும் தங்கள் சொந்த வாகனமாக பயன்படுத்துவதை பார்த்து மக்களும் கெட்டு போகாமல் இருந்தால் சரி,

நன்றி ஆனந்த விகடன்,

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நண்பர் கார்த்திக்கின் வலையை பார்த்த போது இந்த வீடியோ கிடைத்தது, வித்தியாசமாகவும் , அழகாகவும் இருந்ததால், உங்களுக்கும் சொல்கிறேன் பாருங்கள்,
கார்த்திக் இதை சொடுக்கவும்

!

Blog Widget by LinkWithin